Tuesday, November 17, 2009

பொட்டித் தட்டப் போன கதை -2.

ஆக ஒரு வழியாக நெட் ஒர்க் அமைத்து, Foxpro ப்ரோக்ராம் இன்ஸ்டால் செய்து தற்குறி (அட செல்ஃப் டெவெலப்டுங்க)ப்ரோக்ராம்மர் வந்து, Master Data போட கத்து குடுத்தாரு. அதுக்கு இண்டர்ஃபேஸ் வைக்காம நேரா Foxpro  போய் Append போட்டு போட சொல்லி சொன்னதுதான் தப்பாப் போச்சி.

Data போட்டு முடிச்சதும் மெயின் ப்ரோக்ராம் போக முடியாத படி பண்ணிட்டான். அப்புறம் அவனுக்கு அப்பப்போ ஆப்பு வெச்சி, அவன் சொன்னதுக்கு நேர்மாறா பண்ணி, நம்ம வழிக்கு அவன கொண்டு வந்த கதையெல்லாம் சொன்னா அடி விழும், வேணாம்.

திடீர்னு ஒரு நாள், Aptech ட்ரெயினிங்குன்னு லெட்டர் வந்தது. DOS, Foxpro, Lotus அப்புறம் Word ல ட்ரெயினிங்னாங்க. பூமில கால் படாம நடக்க ஆரம்பிச்சிட்டம்ல. அதுங்க பாவம், சின்ன பசங்கள மேச்சிகிட்டிருந்ததுங்க. ஒரு கும்பலா அங்கிளுங்க ஆண்டிங்க வந்ததும் மெர்ச்சலாயிடுச்சுங்க. ஒரு மாதிரி சமாளிச்சிகிட்டு பி.சி. ஆன் பண்ண சொன்னாங்க. ஆரம்பிச்சது தலவலி.

எல்லாருக்கும் ஆன் ஆயிடுச்சிங்களா. இப்போ நீங்க பண்ணதுக்கு பேரு பூட்டிங்னு ஆரம்பிக்கவும், ஒரு ஆண்டி எச்சூஸ்மி, சம்திங் ராங்னு பீட்டர் விட்டுச்சி. அந்த பையன் பதறி போய், ரொம்ப பவ்யமா வந்து, அவன் பீட்டர்ல என்னாச்சுன்னு கேட்டான். பூட் பண்ணா F:\> இல்லையோ வரணும். இதுல T:\> வருதேன்னிச்சே பார்க்கணும். ஒருமாதிரியா சமாளிச்சிகிட்டு, வி வில் கம் டு தட் லேடர் மேம். நவ் யூ ஹேவ் பூடட் சக்ஸஸ்ஃபுல்லின்னான்.

பக்கத்து அங்கிள்கிட்ட கமெண்டு விட்டாங்க (நானில்ல நானில்ல). அரையும் குறையுமா படிச்சிட்டு வந்துடுறாங்கன்னு. ஆண்டி பேசிடிச்சிங்கற சந்தோசத்துல அந்தாளு எதுக்கு சொல்றாங்கன்னே புரியாம அஞ்சே நிமிசத்தில இன்ஸ்ட்ரக்டர கண்டெம் பண்ணிட்டாரு.

எப்புடியோ அடிச்சி புடிச்சி, அவன் குடுத்த புக்கை வாங்கி படிக்க பார்த்து புது பாஷையா இருக்கேன்னு திணறி சும்மா போய்ட்டு வருவோம். வெயில் காலத்துல குளிர குளிர ஏஸி, மதியம் ஓசில கேக், பிஸ்கட்(ஹெ ஹெ கார்பரேட் ட்ரெயினின்னு பேரு எங்களுக்கு)னு 3 வாரம் ஓட நாலாவது வாரம் டெஸ்டுன்னுட்டாங்க.

ஆண்டிமாரும், அங்கிள்மாருமா பொங்கிட்டாங்க. வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்? எல்லாம் படிச்சாச்சி படிச்சாச்சி. நாங்க என்ன வெளிய போய் வேல தேட போறமா? நீ நல்லா கத்துகுடுத்தன்னு நாங்க சொல்லிக்கறோம். நாங்க நல்லா படிச்சிட்டோம்னு நீ சர்டிஃபிகேட் குடுன்னு டீல் போட்டுட்டாங்க.

நமக்கு குடைச்சல் ஆரம்பிச்சிடுத்து, என்னடா இது/ கம்பீட்டர் இருக்கு புத்தகம் இருக்கு, தெரிஞ்சிக்காம பொழப்பிருக்காது போலயேன்னு. என்னை மாதிரி புத்தி கெட்டு போனவன் ஒருத்தன் கூட சேர்ந்து என்ன பண்ணலாம்னு இருக்க, இன்னொரு டிபார்ட்மெண்ட்ல க்ளாஸ் எடுக்குறாங்க, ஆனா அது க்ளிப்பர்னுடாங்க. அது எதுன்னா என்ன போச்சின்னு லஞ்ச் டைம்ல கர்ம ச்ரத்தையா அட்டண்ட் பண்ணி, அந்தாள கேள்வி கேட்டு, ஒரு வழியா கத்துகிட்டது. அப்புறம் ஸ்டாண்ட் அலோன் விஷயம் மறந்து போச்சேன்னு அதுக்கு சண்ட போட்டு வாங்கியாச்சி எல்லாம் இன்ஸ்டால் பண்ணிட்டேன்.


இந்தக் கூத்தில பூன விளையாட்டு மறந்தே போச்சு. திடீர்னு ஒரு நாள் அதிகாரி கூட ரெண்டு பரிவாரத்தோட வந்து இன்கம்டாக்ஸ் ரெய்ட் வந்தா மாதிரி செக் பண்ணுய்யான்னு கர்ஜ்ஜனை. கருப்பு பைக்காரன்( ஹி ஹி சர்வீஸ் இஞ்ஜினியருக்கு பேரு)எந்திரிலேன்னு எழுப்பி, செக்பண்ணான்.

நாம ஒழுங்கா, ட்ரெயினிங்னு டைரக்டரி ஓபன் பண்ணி அதுக்குள்ளதான் கண்ட குப்பையும் (புக்குல அப்புடிதான் பண்ண சொல்லி இருந்திச்சி). நகத்த கடிச்சிகிட்டு நின்னுகிட்டிருக்க, சீதைன்னு சர்டிஃபிகேட் குடுத்துட்டான். அலப்பறை தீ மிதிக்கிறவன் மாதிரி தைய தையன்னு நின்னுகிட்டிருக்க அவனோட ராமன், சார் இதுலதான் சார் நிறைய கேம்ஸ், வைரஸ்னுட்டான். அப்பதான் தெரியும் சர்வருக்கு உடம்பு சரியில்லைன்னு.

அது ஒன்னும் வேலைக்காவாம, அடுத்த நாள் வேற பி.சி.ய சர்வராக்கிட்டு (இதெல்லாம் சின்சியரா கூடவே நின்னு வேடிக்கை பார்த்தேன்) இன்னைல இருந்து நீதான் சிஸ்டம் அட்மின்னாரு. அய்யோன்னு அலறி, சார் எனக்கு ஒன்னுமே தெரியாது சார்னேன். அதனாலதான் உன்ன டேமேஜரா இருக்க சொல்றேன்.

எல்லாம் தெரிஞ்சவன் அவனே பார்த்துக்குவான். உன்ன மாதிரி மக்குன்னா அய்யோ போச்சேன்னு ஓடி வருவ. இந்த அலப்பறை மாதிரி அரைகுறையாலதான் கஷ்டம்னு சொல்லிட்டு சர்வர் எப்புடி ஆன் பண்ணணும், ஆஃப் பண்ணனும், பேக் அப் எடுக்க பேட்ச் ஃபைல் எப்படி ஓட்டணும்னு சொல்லி குடுக்க சொல்லிட்டாரு.

பாருங்க. மக்கா இருக்கிறதும் ஒரு க்வாலிஃபிகேஷன் கவருமெண்டுல. ஒரு ஆறு மாசம் போக சனி, ஞாயிறு எல்லாம் ஆஃபீஸ், தினசரி ராத்திரி 9, 10ன்னு Foxoro, Clipper, DBase, C ன்னு நமக்கு நாமே ப்ரோக்ராமராயிட்டம். ஒரு நாள் புயல்ல மழை பிச்சிகிட்டு ஊத்த பயம் வந்துடிச்சி. UPS ஆஃப் பண்ணாம வந்துட்டமே, லீக் ஆயி பத்திகிட்டா வம்பாச்சே. முதல் நாள் நாந்தான் பூட்டி சாவி செக்யூரிட்டிக்கு குடுத்ததுன்னு பயந்து போய், நீந்தி வந்து ட்ரெய்ன் சர்வீஸ்மட்டும் இருக்க ஆஃபீஸ் வந்தா, கணுக்கால் அளவு தண்ணி.நான் மட்டும்தான் ஆஃபீஸ்ல.

சரி வந்துட்டம். ட்ரெய்ன் வேற கேன்ஸல். எழுதிட்டிருக்கிற ப்ரோக்ராம்ல ப்ரிண்ட் ப்ரோக்ராம் முடிச்சிடலாம்னு பண்ணிட்டிருக்க, நம்ம அதிகாரி ரவுண்ட்ஸ் வந்தாரு. யாருமே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ போடுறான் இவன்னு குரல் விட்டிருக்காரு. நாம திரும்பாம இருக்க, கிட்ட வந்து பின்னாடி நின்னதும் கவனிக்கல. இது வேற‌ ஒரு க்வாலிஃபிகேஷ‌னா போச்சு ந‌ம‌க்கு.

ரெண்டு வார‌ம் போக‌, Bitech Oracle ட்ரெயினிங் 3 மாச‌ம் போய்ட்டு வாடான்னாரு. அப்புறம் ஒரு சாஃப்ட்வேர் டெஸ்டிங் கோர்ஸ்னு ஓசில‌ அதும் போய், ஒரு ச‌ர்டிஃபிகேட் தேத்தி, அடுத்த‌ வெர்ஷ‌ன் Oracleலன்னு டீம் செட்ப‌ண்ற‌ நேர‌த்துல‌ அய்யாக்கு இட‌மாற்ற‌ம். அவ‌ருக்கு ப‌தில் வ‌ந்த‌வ‌ங்க‌ளுக்கும் இவ‌ருக்கும் ஆக‌வே ஆகாது. ஆனா, இவ‌ங்க‌ளுக்கு செக் வைக்கிற‌ இட‌த்துல‌ அவ‌ரு.

விட்றுவாய்ங்க‌ளா? நம்மாளுங்க பண்ணா சரிவராது. ப்ரொஃப‌ஷ‌ன‌லா ப‌ண்ண‌ணும்னு முடிவெடுத்து கான்ட்ராக்ட்ல‌ ப‌ண்ணாங்க‌. அவ‌ன் வேஷ்டி வேணும்டான்னா ஜீன்ஸ் கொண்டுவ‌ந்து குடுத்து இதுக்குதான் காசு வாங்கின‌து. ஆல்ட‌ரேஷ‌ன் வேணும்னா ப‌ண்ண‌லாம். வேலைய‌ப்பாருன்னு அல‌ம்ப‌ல். இன்னைக்கும் அந்த அறைகுறை தான் ஓடிட்டிருக்கு.  ந‌ம‌க்கு வேணாம்டா சாமின்னு ப‌ழைய‌ ப‌டி, கோப்பு, கோட் புக்குன்னு நாக்கு துறுத்திகிட்டு பேனா புடிச்சிட்டேன்.

ச‌ரி ச‌ரி. த‌மாஷா இருக்கும்னு ப‌டிக்க‌ வ‌ந்துட்டு என்னா எழ‌வுடான்னு ச‌லிக்காதீங்க‌. ந‌ம்ம‌ காமெடி பீசு அதாங்க‌ த‌ங்க‌ம‌ணி இப்போ ஒரு யூச‌ர். வீட்டில வந்தா அந்தம்முணி நெட்வர்க், கனெக்ஷன், மல்டிபிள் இன்ஸ்டன்ஸ்னு எல்லாம் பீலா விடும். ந‌ம்ம‌ புள்ளாண்டான் பிசி வாங்கி, க‌னெக்ஷ‌ன் வாங்கி, ய‌ம்மா எங்க‌ உங்க‌ ப்ரோக்ராம் ஓப‌ன் ப‌ண்ணி காட்டும்மா பார்க்க‌றேன்னு பிட்டு போட்டான்.

என்ன‌மோ இனாகுரேஷ‌ன் செரிம‌னிக்கு த‌ல‌மை தாங்குறா மாதிரி வெயிட் வ‌ரேன்னு, க‌ண்ணாடி மாட்டிகிட்டு ப‌ந்தாவா வ‌ந்து உக்காந்து ஒரு பார்வை பார்த்து, என்ன‌ பார்த்தா எப்புடீ தெரியுது? நான் என்ன‌ லூசான்னிச்சி. ஜூனிய‌ர் ரொம்ப‌ பெருமையா என்ன‌ ஒரு லுக்கு விட்டான். அவுங்க‌ம்மா எக்ஸ்ப‌ர்ட்டாம். அடுத்த‌ நிமிஷ‌ம் போட்டிச்சி குண்டு. இங்க‌ ஆல‌ம‌ர‌ம் ப‌ட‌ம் இல்லையேம்மா க‌ண்ணு. அப்புற‌ம் எப்புடி வ‌ரும்னு.(ஹி ஹி. ப்ரோக்ராம் ஷார்ட்க‌ட்கு இகான்)

என‌க்கு சிரிப்பு தாங்க‌ல‌. அதான‌ன்னு ஒரு நோட்பேட்ல‌ டெக்ஸ்ட் ஃபைல் சேவ் ப‌ண்ணி, ஆல‌ம‌ர‌ம் இகான் போட்டு ப்ரோக்ராம் நேம் போட்டுவிட்டேன். தோ ஆல‌ம‌ர‌ம். இப்போ ஓப‌ன் ப‌ண்ணுன்னு சொன்னேன். க்ளிக் ப‌ண்ணா நோட்பேட் ஓப‌ன் ஆகுது. 2 நிமிஷ‌ம்தான். குழ‌ப்ப‌மா பார்த்த‌ ஃபேஸ்ல‌ 1000 வாட்ஸ் ப‌ல்பு.

அப்ப‌னும் புள்ளையும் சேர்ந்து காமெடியா ப‌ண்றிங்க‌ என்ன‌ வெச்சின்னிச்சி? திரும்ப‌ அவ‌ரு பெருமையா என்ன‌ லுக்க‌, நான் நிஜ‌ம்மாவே இதுக்கு இன்ட்ரா நெட்டுக்கும் இன்ட‌ர்னெட்டுக்கும் வித்யாச‌ம் தெரிஞ்சிடுச்சா. க‌வுத்துப்புட்டாளேன்னு இருக்க‌, ஆஃபீஸ்ல‌ ச‌ர்வ‌ர் ட‌வுன் ப‌ண்ணிட்டிருப்பான்ல‌ அப்புற‌ம் எப்புடி வ‌ருமாம்னு கேட்டு, போங்க‌டா லூசுப் ப‌ச‌ங்க‌ளான்னு  போச்சே பார்க்கணும். ப‌ய‌ புள்ள‌ ஃப்ளாட்டு.

67 comments:

கலகலப்ரியா said...

//பக்கத்து அங்கிள்கிட்ட கமெண்டு விட்டாங்க (நானில்ல நானில்ல).//

நம்பீட்டம்...

//ந‌ம்ம‌ காமெடி பீசு அதாங்க‌ த‌ங்க‌ம‌ணி இப்போ ஒரு யூச‌ர்.//

அவுகள காமெடி பீசாவே ஆக்கிட்டியளா.. இப்புடித்தான் பல பேரு நெனைச்சுக்கிட்டு காமெடி பீஸ் பீசாயிட்டிருக்கானுவ... (கண்ணில் வரும் காட்சி எல்லாம்... ஆமாம் கம்பியூட்டர் பின்னாடி இருந்த சிலந்திக் கூட்டமெல்லாம் நலமா.. கேட்டதா சொல்லுங்க.. அப்பாடா நம்ம வேலை ஓவர்..)

vasu balaji said...

கலகலப்ரியா said...

/நம்பீட்டம்.../

அய்ய நிசமாத்தான்.
/(கண்ணில் வரும் காட்சி எல்லாம்... ஆமாம் கம்பியூட்டர் பின்னாடி இருந்த சிலந்திக் கூட்டமெல்லாம் நலமா.. கேட்டதா சொல்லுங்க.. அப்பாடா நம்ம வேலைஓவர்..)/

தோ. தூசு இல்லன்னா ஆஃபீஸ் ஃபீல் இல்லன்னு பி.சி. சரியில்லைன்னுடும். அதான்.=))

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அப்பாடா நம்ம வேலை ஓவர்../

ஒய். நோ கும்மி?

க.பாலாசி said...

//ஒரு மாதிரி சமாளிச்சிகிட்டு பி.சி. ஆன் பண்ண சொன்னாங்க. ஆரம்பிச்சது தலவலி.//

அய்யோ அத ஆன் பண்றதுதானே கஷ்டம். பலபேருக்கு பி.சி.யில சுவிட்ச் எங்க இருக்குண்ணே தெரியாது.

//பக்கத்து அங்கிள்கிட்ட கமெண்டு விட்டாங்க (நானில்ல நானில்ல)//

ஆமா...ஆமா....நீங்க அங்கில் இல்ல..ஒத்துக்கிறேன்...

//இங்க‌ ஆல‌ம‌ர‌ம் ப‌ட‌ம் இல்லையேம்மா க‌ண்ணு. அப்புற‌ம் எப்புடி வ‌ரும்னு.//

ஒருவழியா வீடலையும் ராவடிய ஆரம்பிச்சிட்டீங்க....நடத்துங்க....

ராஜ நடராஜன் said...

பாலாண்ணா!கொஞ்சம் ஆபிசு வேலையப் பார்க்க விடறீங்களா:)

DOSல ஆரம்பிச்சீங்களா!பெரிய புரோக்ரமர்தான் போங்க!

ராஜ நடராஜன் said...

இதுல முதல் பாகம் வேறய!சிரிச்சிட்டு வாரேன்.

vasu balaji said...

க.பாலாசி said...

/அய்யோ அத ஆன் பண்றதுதானே கஷ்டம். பலபேருக்கு பி.சி.யில சுவிட்ச் எங்க இருக்குண்ணே தெரியாது./

=)) அட அது நிசம்தான்.

/ஆமா...ஆமா....நீங்க அங்கில் இல்ல..ஒத்துக்கிறேன்.../

நீயாவது ஒத்துகிட்டியேம்மா. ட்ட்ட்ட்ட்டச் பண்ணிட்ட

/ஒருவழியா வீடலையும் ராவடிய ஆரம்பிச்சிட்டீங்க....நடத்துங்க..../

அது நானில்ல. நம்ம புள்ளையாண்டான்

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/பாலாண்ணா!கொஞ்சம் ஆபிசு வேலையப் பார்க்க விடறீங்களா:)

DOSல ஆரம்பிச்சீங்களா!பெரிய புரோக்ரமர்தான் போங்க!/

வாங்கண்ணா=)). இது ஆஃபீஸ் வேலதான

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/இதுல முதல் பாகம் வேறய!சிரிச்சிட்டு வாரேன்./

=)). வாங்க வாங்க.

vasu balaji said...

அண்ணன் அர்ரைவ்ட். ஆல் தி மீஜிக் ஸ்டார்ட்=))

இராகவன் நைஜிரியா said...

அய்யா வணக்கம்...

முதல்ல போட்டு கொடுக்கிற வேலை...

// ந‌ம்ம‌ காமெடி பீசு அதாங்க‌ த‌ங்க‌ம‌ணி //

தங்கமணி காமெடி பீசா...

நீங்க இப்படி சொல்ற படிச்சா என்னாவும் தெரியுமா? வம்பை ஏன் அண்ணே விலை கொடுத்து வாங்கறீங்க..

don't trouble the trouble.

இராகவன் நைஜிரியா said...

// ஆக ஒரு வழியாக நெட் ஒர்க் அமைத்து, Foxpro ப்ரோக்ராம் இன்ஸ்டால் செய்து //

வெரி குட்.. வெரி நைஸ் டு ரீட்..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அய்யா வணக்கம்...

முதல்ல போட்டு கொடுக்கிற வேலை...
தங்கமணி காமெடி பீசா...

நீங்க இப்படி சொல்ற படிச்சா என்னாவும் தெரியுமா? வம்பை ஏன் அண்ணே விலை கொடுத்து வாங்கறீங்க..

don't trouble the trouble./

கண்டுக்கிறாதிங்கண்ணே. இந்தப் பதிவுக்கு எப்படி வர்ரதுன்னு தெரியாது அவங்களுக்கு=))

சூர்யா ௧ண்ணன் said...

உங்க கம்ப்யூட்டர் கலாட்டா தாங்கல தலைவா! சூப்பர்!

இராகவன் நைஜிரியா said...

// பூட் பண்ணா F:\> இல்லையோ வரணும். இதுல T:\> வருதேன்னிச்சே பார்க்கணும். //

ஆமாம் இங்க எல்லாம் இப்படித்தான்... கோடு மேலப் போயிடுச்சுன்னு சொல்லவில்லையா?

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/உங்க கம்ப்யூட்டர் கலாட்டா தாங்கல தலைவா! சூப்பர்!/

=)) நன்றி சூர்யா.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஆமாம் இங்க எல்லாம் இப்படித்தான்... கோடு மேலப் போயிடுச்சுன்னு சொல்லவில்லையா?/

இது அநியாயம்=))

புலவன் புலிகேசி said...

/இந்தக் கூத்தில பூன விளையாட்டு மறந்தே போச்சு. //

இங்க மறக்காம சொல்றீங்க..

//கருப்பு பைக்காரன்( ஹி ஹி சர்வீஸ் இஞ்ஜினியருக்கு பேரு)//

என்னமா யோசிக்கிறீங்க..நல்ல நகைச்சுவை...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

/ஆமா...ஆமா....நீங்க அங்கில் இல்ல..ஒத்துக்கிறேன்.../

நீயாவது ஒத்துகிட்டியேம்மா. ட்ட்ட்ட்ட்டச் பண்ணிட்ட //

அண்ணே உள் குத்து புரியாம இருக்கீங்களே... நீங்க அங்கில் இல்லன்னா அதுக்கு மேலேன்னு அர்த்தம்..

அப்ப தாத்தான்னு வருது.. :-)

vasu balaji said...

புலவன் புலிகேசி said...
/இங்க மறக்காம சொல்றீங்க../

ஹி ஹி.

/என்னமா யோசிக்கிறீங்க..நல்ல நகைச்சுவை.../

ஆமாங்க. இவங்கள பார்த்தாலே எனக்கு அலர்ஜி. கொஞ்சமும் யோசிக்காம, ஃபார்மட் பண்ணி ரீ இன்ஸ்டால் பண்ணாதான் முடியும்னு நாசம் பண்ணிட்டு போய்டுவாங்க. அவ்வ்வ்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே உள் குத்து புரியாம இருக்கீங்களே... நீங்க அங்கில் இல்லன்னா அதுக்கு மேலேன்னு அர்த்தம்..

அப்ப தாத்தான்னு வருது.. :-)/

சே சே. அது நல்ல புள்ள. அப்புடியே தான் நினைச்சாலும், சொல்லாத வரைக்கும் நாம பாசிடிவ்வா இருந்துக்கலாம்லண்ணே=))

இராகவன் நைஜிரியா said...

// பக்கத்து அங்கிள்கிட்ட கமெண்டு விட்டாங்க (நானில்ல நானில்ல)//

தங்கமணிதான் இந்த இடுகையைப் படிக்கமாட்டாங்க அப்படின்னு சொல்லிட்டீங்க. அப்ப தைரியமா ஒத்துக்குங்க.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/அண்ணே உள் குத்து புரியாம இருக்கீங்களே... நீங்க அங்கில் இல்லன்னா அதுக்கு மேலேன்னு அர்த்தம்..

அப்ப தாத்தான்னு வருது.. :-)/

சே சே. அது நல்ல புள்ள. அப்புடியே தான் நினைச்சாலும், சொல்லாத வரைக்கும் நாம பாசிடிவ்வா இருந்துக்கலாம்லண்ணே=)) //

சரி அண்ணனே சொல்லிட்ட பின்னாடி... நான் சொல்ல என்ன இருக்கு.

பி பாசிடிவ்..

இராகவன் நைஜிரியா said...

// இந்தக் கூத்தில பூன விளையாட்டு மறந்தே போச்சு. //
அப்புறம் இந்த எலி விளையாட்டு வந்திருக்கும்.. அதனால பூன விளையாட்டு மறந்து போயிருக்கும் அப்படின்னு நினைச்சேன்.

இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா... மீ த 25

இராகவன் நைஜிரியா said...

// ஆண்டி பேசிடிச்சிங்கற சந்தோசத்துல அந்தாளு எதுக்கு சொல்றாங்கன்னே புரியாம அஞ்சே நிமிசத்தில இன்ஸ்ட்ரக்டர கண்டெம் பண்ணிட்டாரு. //

ஆண்டி - ஒன்னும் சொல்றதுக்கில்ல..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/தங்கமணிதான் இந்த இடுகையைப் படிக்கமாட்டாங்க அப்படின்னு சொல்லிட்டீங்க. அப்ப தைரியமா ஒத்துக்குங்க./

அட இருந்தா ஒத்துக்க மாட்டமா. நம்ம விட பெரிய அங்கிள்ங்க இருந்தாங்க. ஆமாம் என்னா இப்படி கலாய்க்கிறீங்க. 1986 ணே. 29 வயசுண்ணே எனக்கு. அங்கிளா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/
பி பாசிடிவ்../

நோஓஓஓஓஓ. நான் ஓ பாஸிடிவ்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஆண்டி - ஒன்னும் சொல்றதுக்கில்ல../

நல்லா பயமுறுத்தி வெச்சிருக்காய்ங்கப்பா

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அப்புறம் இந்த எலி விளையாட்டு வந்திருக்கும்.. அதனால பூன விளையாட்டு மறந்து போயிருக்கும் அப்படின்னு நினைச்சேன்./

ஹி ஹி. windows 3.1 பார்க்கவே 4 வருஷமாச்சி.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/தங்கமணிதான் இந்த இடுகையைப் படிக்கமாட்டாங்க அப்படின்னு சொல்லிட்டீங்க. அப்ப தைரியமா ஒத்துக்குங்க./

அட இருந்தா ஒத்துக்க மாட்டமா. நம்ம விட பெரிய அங்கிள்ங்க இருந்தாங்க. ஆமாம் என்னா இப்படி கலாய்க்கிறீங்க. 1986 ணே. 29 வயசுண்ணே எனக்கு. அங்கிளா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

சரி... சரி... ஒத்துகிட்டேன்...

நீங்க சின்னவர்தான்.. ஐ மீன் வயசுல...

இராகவன் நைஜிரியா said...

எல்லாம் சரி.. எங்கேயுமே.. நீங்க... எந்த வருஷம் அப்படின்னு சொல்லவேயில்லையே.... அப்புறம் எப்புடி எங்களுக்கு வருஷம் 1986 - உங்க வயசு 29 அப்படின்னு தெரியும்..

இராகவன் நைஜிரியா said...

// அப்பதான் தெரியும் சர்வருக்கு உடம்பு சரியில்லைன்னு.. //

அய்யோ பாவம் சர்வர். அதுக்காகத்தான் வேலை செய்ற ஓட்டலிலேயே சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/சரி... சரி... ஒத்துகிட்டேன்...

நீங்க சின்னவர்தான்.. ஐ மீன் வயசுல.../

சைசிலயும் தான்=))

இராகவன் நைஜிரியா said...

// அவ‌ன் வேஷ்டி வேணும்டான்னா ஜீன்ஸ் கொண்டுவ‌ந்து குடுத்து இதுக்குதான் காசு வாங்கின‌து. //

அட்லீஸ்ட் மானத்த மறைக்கின்ற மாதிரி ஜீன்ஸ் கொடுத்தானே அதை நினைச்சு சந்தோஷப் பட்டுகுங்க. வேஷ்டி கேட்டா அங்கவஸ்திரம் கொடுப்பாங்க..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/எல்லாம் சரி.. எங்கேயுமே.. நீங்க... எந்த வருஷம் அப்படின்னு சொல்லவேயில்லையே.... அப்புறம் எப்புடி எங்களுக்கு வருஷம் 1986 - உங்க வயசு 29 அப்படின்னு தெரியும்../

இது அநியாயம்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/சரி... சரி... ஒத்துகிட்டேன்...

நீங்க சின்னவர்தான்.. ஐ மீன் வயசுல.../

சைசிலயும் தான்=)) //

சரி அதையும் ஒத்துகிட்டேன்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அய்யோ பாவம் சர்வர். அதுக்காகத்தான் வேலை செய்ற ஓட்டலிலேயே சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது../

=)).

இராகவன் நைஜிரியா said...

// உன்ன மாதிரி மக்குன்னா அய்யோ போச்சேன்னு ஓடி வருவ.//

நல்லாவே புரிஞ்சு வச்சு இருக்கார் போலிருக்கு..

இராகவன் நைஜிரியா said...

// ந‌ம‌க்கு வேணாம்டா சாமின்னு ப‌ழைய‌ ப‌டி, கோப்பு, கோட் புக்குன்னு நாக்கு துறுத்திகிட்டு பேனா புடிச்சிட்டேன்.//

இதுதான் நிரந்தரம் அப்படின்னா?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/அட்லீஸ்ட் மானத்த மறைக்கின்ற மாதிரி ஜீன்ஸ் கொடுத்தானே அதை நினைச்சு சந்தோஷப் பட்டுகுங்க. வேஷ்டி கேட்டா அங்கவஸ்திரம் கொடுப்பாங்க../

அது சரி. வேஷ்டி எங்க தேவையோ அங்க வேணும்தானே

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நல்லாவே புரிஞ்சு வச்சு இருக்கார் போலிருக்கு../

ஆமாண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/இதுதான் நிரந்தரம் அப்படின்னா?/

எமக்குத் தொழில் எழுத்துன்னு=))

ஈரோடு கதிர் said...

இந்த அறிவொளி இயக்க படிப்பு சொல்லிக்கொடுக்கிறவங்க கஷ்டத்தை நானும் பட்டிருக்கேன்...

காலேஜ் முடிச்சிட்டி ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல Faculty ஆ 1994ல் வேலை பார்த்தேன்...

சில சமயம் ஆண்டி / அங்கிள் பேட்ஜ் (அட உங்கள மாதிரிதேன்..... ஹல்ல்ல்ல்ல்லோ நாங்க யூத்து....) வந்து மாட்டிக்கும்.... இந்த பூட்டிங் சொல்லிக் கொடுத்து.... பூட்டிங்னா என்னானு விளக்கம் கொடுத்து...

இப்போ இருக்கிற Faculty எல்லாம் கொடுத்து வச்சவங்க போங்க....

அகல்விளக்கு said...

யப்பா.. முடியல...
வரலாறு பயங்கர ரகள...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க சார்.. மருந்து கிடைக்குமா?

மணிஜி said...

சரியா கும்மியடிச்சிருக்கீங்க ராகவன்

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/சில சமயம் ஆண்டி / அங்கிள் பேட்ஜ் (அட உங்கள மாதிரிதேன்..... ஹல்ல்ல்ல்ல்லோ நாங்க யூத்து....) வந்து மாட்டிக்கும்.... இந்த பூட்டிங் சொல்லிக் கொடுத்து.... பூட்டிங்னா என்னானு விளக்கம் கொடுத்து.../

ம்கும். சிக்கிரப்படாதே.=))

vasu balaji said...

அகல்விளக்கு said...

/யப்பா.. முடியல...
வரலாறு பயங்கர ரகள...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க சார்.. மருந்து கிடைக்குமா?/

=)) நன்றிங்க. கிடைக்குமே. சிரிப்புதான் மருந்து.

vasu balaji said...

தண்டோரா ...... said...

/சரியா கும்மியடிச்சிருக்கீங்க ராகவன்/

ஆமாண்ணே. என்னா கும்மி. கதிர் இல்லாம போய்ட்டாரு.

vasu balaji said...

நமக்கு நாமே திட்டத்தில் மீ த 50

ப்ரியமுடன் வசந்த் said...

ரசிச்சு படிச்சேன் உன்னுடைய ஒவ்வொரு செயலுமே நகைச்சுவைதான் போல தொடர்ந்து கலக்கவும்....

thiyaa said...

நல்லாய்த்தான் எழுதியுள்ளீர்கள்
தங்கிலீஷ் (இங்கிலீஷ்+தமிழ் ) நடை கதைக்கு கூடுதல் அழகு

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ரசிச்சு படிச்சேன் உன்னுடைய ஒவ்வொரு செயலுமே நகைச்சுவைதான் போல தொடர்ந்து கலக்கவும்..../

ஆஹா. இவன் என்ன காமெடி பீசாக்கிட்டானே=)). நன்றி வசந்த்.

vasu balaji said...

தியாவின் பேனா said...

/நல்லாய்த்தான் எழுதியுள்ளீர்கள்
தங்கிலீஷ் (இங்கிலீஷ்+தமிழ் ) நடை கதைக்கு கூடுதல் அழகு/

நன்றி தியா.

பழமைபேசி said...

வணக்கம்!

vasu balaji said...

பழமைபேசி said...

/வணக்கம்!/

வணக்கம்!

அன்புடன் மலிக்கா said...

//பக்கத்து அங்கிள்கிட்ட கமெண்டு விட்டாங்க (நானில்ல நானில்ல)//

ஆமாம்மா அது நானில்லையப்பா.

வெகு சுவாரஸ்யம்...

S.A. நவாஸுதீன் said...

உங்க ஏரியாவுக்கு வந்தா கலகலப்புக்கு பஞ்சமிருக்காதுன்னு நிரூபிச்சிட்டீங்க சார்

ஊடகன் said...

புதுசு புதுசா யோசிக்க்றாய்ங்கயா...

எப்படி இப்படி எல்லாம்........

Unknown said...

// ப‌ய‌ புள்ள‌ ஃப்ளாட்டு //

நாங்களும் தான்...

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

/ஆமாம்மா அது நானில்லையப்பா.

வெகு சுவாரஸ்யம்.../


ஹி ஹி

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/ உங்க ஏரியாவுக்கு வந்தா கலகலப்புக்கு பஞ்சமிருக்காதுன்னு நிரூபிச்சிட்டீங்க சார்/

நன்றி நவாஸூதீன்

vasu balaji said...

@ஊடகன்@ said...

/புதுசு புதுசா யோசிக்க்றாய்ங்கயா...

எப்படி இப்படி எல்லாம்....../

நன்றி

vasu balaji said...

பேநா மூடி said...

/ நாங்களும் தான்.../

நன்றிங்க

நிஜாம் கான் said...

//பாருங்க. மக்கா இருக்கிறதும் ஒரு க்வாலிஃபிகேஷன் கவருமெண்டுல. ஒரு ஆறு மாசம் போக சனி, ஞாயிறு எல்லாம் ஆஃபீஸ், தினசரி ராத்திரி 9, 10ன்னு Foxoro, Clipper, DBase, C ன்னு நமக்கு நாமே ப்ரோக்ராமராயிட்டம்//

அண்ணே! கவர்+அமௌண்ட் ஆபிஸ்ன்னா கடியாரம் 4 மணியக் காட்னதோட நம்ம கம்பி நீட்டிறனும். நீங்க என்னடான்னா..,சின்சியர் ஒர்க்கரா?????

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்..,
/அண்ணே! கவர்+அமௌண்ட் ஆபிஸ்ன்னா கடியாரம் 4 மணியக் காட்னதோட நம்ம கம்பி நீட்டிறனும். நீங்க என்னடான்னா..,சின்சியர் ஒர்க்கரா?????/

=)). தெரியலையே!

பின்னோக்கி said...

லீவு நாள்ல எல்லாம் ஆபீஸ் போய்..உங்களை மாதிரியும் சில கவர்ன்மெண்ட் அதிகாரிங்க இருக்குறதால தான் நாடு இந்த நிலைமைலயாவது இருக்குன்னு நினைக்கிறேன்.