Thursday, November 5, 2009

பெயர் வினை..

ஒரு முறை திருக்குறள் முனுசாமி அவர்கள் சொன்னார். குழந்தை பிறந்தால் கடனை உடனை வாங்கி ஊரைக்கூட்டி, பஞ்சாங்கம் பார்த்து அல்லது பெரியவர் விருப்பப்படி அழகாக ஒரு பெயரை வைக்கிறீர்கள்.

ஆனால் அந்தப் பெயர் வைத்து நீங்கள் கூப்பிட்டால் அது  உணர்ந்து செயல்படும் வயது அதாவது இரண்டு அல்லது மூன்று வயதில் அந்தப் பெயரை விட்டு, ஏ சனியனே அங்க போகாத, ஏ எருமை சீக்கிரம் சாப்பிடு, ஏ மூதேவி தண்ணி கொண்டுவா என்றுதான் பெரும்பாலும் அழைக்கிறீர்கள்.

இதுக்கெதுக்கு அவ்வளவு செலவு என்று கூறி நல்ல சொற்களை பேசுவது குறித்த வள்ளுவனின் குறளைக் கூறி அதற்குமுன் இப்படி ஒவ்வாத பெயர் கூறி குழந்தைகளை அழைப்பதை நிறுத்தத் தொடங்குவோம் என்றார்.

அட இந்த கெரகம் புடிச்சவன் ஊரச் சுத்தாம விஷயத்துக்கு வரமாட்டானேன்னு சலிக்காதீங்க. முனுசாமி அய்யா சொன்னது கவனம். அதாவது கூப்புடுற ஒரு பேரே சரியா கூப்புடுறதில்லை. இதுல நம்ம வீட்டு வழமுறைன்னு மூணு பேரு காதுல சொல்லி பேரு வைப்பாங்களாம்.

பத்து நாள் குழந்தைக்கு எங்க கவனமிருக்கும் காதுல சொன்ன பேரு. ஆக ஜாதகத்தில் பாலசுப்பிரமணியன் என்கிற ஆண் குழந்தை சுப ஜனனம்னு எழுதிட்டாங்க. அப்புறம் திருப்பதி போனபோது யாரோ வடக்கத்தி சிறுமி பாலாஜின்னு கூப்பிட அதுவே நிலைச்சிப் போச்சி எனக்கு.

எங்கத இப்புடின்னா எங்கப்பாருக்கு வச்ச பேரு விஸ்வநாதனாம். அதேனோ வாசுதேவமூர்த்தின்னு ஒரு பேரு வந்து அதையும் இவரு வி.வி.மூர்த்தின்னு சுருக்கி, கூப்புடுறவங்க வாசுன்னு கூப்பிட்டு ஏக குழப்பம்.

எங்கப்பாரு தங்கமணி அதாங்க எங்கம்மா பேரு நிஜமாவே தங்கமணிதான். அது ஏனோ தங்கம்மாள்னு மருவிப்போச்சு. (அட இருங்க வெண்ணெய் சங்கத் தலைவரே. சொல்லுவம்ல. வெண்ணைக்கும் கணபதி சுப்பிரமணியம் என்கிற ரவிசங்கர்தான் பேரு).

ரேஷன் கார்டுல வி.வி.மூர்த்தி, தங்கம்மாள், பாலாஜின்னு இருக்கும். வேற ஒண்ணில வாசுதேவ மூர்த்தி, தங்கம், பாலசுப்பிரமணின்னு இருக்கும். எதுக்கு என்ன பேரு குடுத்தோம்னே தெரியாம போச்சி.

வேலைக்கு ஆர்டர் வந்து வெரிஃபிகேஷன் போனப்ப வெடிச்சது முதல் குண்டு. S.S.L.C புத்தகத்தை பார்த்துட்டு அந்த எழுத்தர் உதட்ட பிதுக்கி உம்பேரு பாலாஜின்னு இருக்கு, அப்பா பேரு வி.வி.மூர்த்தின்னு இருக்கு. பெற்றோர் கையெழுத்தில தங்கம்மாள்னு இருக்கு. அலுவலக ஆவணப்படி வி.வாசுதேவ மூர்த்தி, மனைவி தங்கமணி, பையன் பாலசுப்பிரமணியன். அதனால நீ அவனில்லைன்னுட்டாரு.

அரண்டு போய் அய்யா இதோ அம்மாவோட பென்ஷன் ஆர்டர். இதில பாருங்க தங்கமணி, மறைந்த திரு வி.வி. மூர்த்தியின் மனைவின்னு இருக்குன்னு நீட்டுனேன். சளைக்காம சொறிஞ்சிகிட்டு சரி, வி.வி. மூர்த்தி பொண்டாட்டி தங்கமணின்னு நான் ஒத்துக்குறேன். உன் சர்டிஃபிகேட்ல தங்கம்மாள், உன் பேரு பாலாஜின்னு இருக்கேன்னு பிட்ட போட்டாரு.

குழம்பிப் போயி, நான் எங்கப்பாரு அலுவலகத்தில கேட்டு பாக்குறங்கன்னு வந்து அம்மாகிட்ட எகுறுனேன். ஜாதகத்த நீட்டுச்சி.அதுல அடுத்த லிங்கு வாசுதேவ மூர்த்திக்கு பாலசுப்பிரமணியன் என்கிற ஆண் குழந்தைன்னு இருந்திச்சி.

எனக்கு அழுறதா சிரிக்கிறதா தெரியல.அப்பாரு அலுவலகத்தில் போய் அவர் நண்பரிடம் விஷயம் சொன்னதும் இருந்த ரிகார்ட் எல்லாம் பார்த்தாரு. நல்ல காலத்துக்கு இறந்ததும் கொடுத்த குடும்ப உறுப்பினர் பட்டியல்ல பாலாஜின்னு பெயர் இருந்தது.

இருடான்னு போய் ஒரு சான்றிதழ் அடிச்சி கொண்டு வந்து கொடுத்தாரு இப்படி:

This is to certify that Sri V. Balaji is also known as Sri V. Balasubramanian. He is s/o  late Sri V. Vasudevamoorthy alias V.V. Moorthy and Mrs V. Thangamani who is also known as Thangammal as per official records. He is not related to me.

அதக் கொண்டு வந்து நீட்டி ஒரு மாதிரியா  பொழைச்சிப் போன்னு வேலையக் குடுத்தாங்க.  அப்பயின்மென்ட் ஆர்டரக் குடுக்குறப்ப அந்த எழுத்தர் சொன்னாரு,இப்புடி வேற எதுக்காவது கேட்டா ஜாதகத்த நீட்டாத. அதில உன் பிறந்த தேதி 29 செப்டம்பர்னு இருக்கு, சர்டிஃபிகேட்ல 10 ஜூன்னு இருக்கு, வில்லங்கமாயிரும்னு. சின்னத்தம்பி கவுண்டமணி மாதிரி ஏன் நைனா? பேருலதான் கொழப்பிட்டீரு. வயசுலயுமான்னு புலம்புனேன்.

இந்தப் பெயர் குழப்பம் அப்பப்ப தலையக்காட்டி படுத்துற பாடு இருக்கே. படுறவனுக்குதாங்க தெரியும். அப்பாக்கு திதி குடுக்குறப்ப வழக்கமா வர புரோகிதர்னாலும் எப்போ தேவையோ அப்போ, அப்பா பேரு சொல்லும்பாரு. அதனால குழப்பமில்ல. அப்புறம் தாத்தா பேரு சொல்லு, கொள்ளுத் தாத்தா பேரு சொல்லுன்னு நடத்துவாங்க.

ஒரு வாட்டி புதுசா ஒருத்தர் வந்தாரு. எல்லாம் ரெடி பண்ணிகிட்டே யாருக்கு ஸ்ராத்தம்னாரு. எங்கப்பாக்குன்னேன்.  ஹோமத்துக்கு எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டே ஊரு கத பேசிட்டு,  பேரு என்னன்னாரு. எம்பேர சொன்னேன் பாலசுப்புரமணியன்னு. சரி ஆரம்பிக்கலாமான்னாரு. சரிங்கன்னேன்.

அப்புறம் ஆரம்பிச்சி மந்திரம் சொல்லச் சொல்லத் திரும்ப சொல்லி, ஒரு வழியா முடியுறப்ப மனசுக்குள்ள ஒரு நமைச்சல். என்னாங்கடா. அப்பாக்கு திவசம், அவரு பேரே கேக்காம பண்ணி முடிச்சிட்டானே இந்தாளுன்னு மெதுவா ஏங்க,எங்கப்பாரு பேரு கேக்கவே இல்லையேன்னேன். அந்தாளு மிரண்டு போய் யோவ் பேரு கேட்டா பாலசுப்புரமணின்னியேன்னாரு.

ஏங்க அது எம்பேருன்னேன். எனக்கெதுக்குடா உம்பேருன்னு எகிறி, சரி, ஹோமம்லாம் பண்ணியாச்சி. இனிமே ஒன்னும் பண்ண முடியாது. போய் குளிச்சிட்டு வான்னு சொல்லி, திரும்ப ஏதோ மந்திரம் சொல்லி விஸ்வநாதன் அப்பா பேருதானேன்னு சத்தியம் பண்ணாத குறையா சொல்லச் சொல்லி ஏதோ சப் ரூல்ல திவசம் பண்ண வெச்சாரு.

எங்கம்மா அழுதுகிட்டு இப்புடி ஒரு தருவிசில்லாம புள்ள இருக்குமா. திவசம் பண்றப்போ தன் பேரு வருதே தனக்கு தானே பண்ரோமேன்னு தெரியாதான்னு எகிற, நீ பார்த்துக்கிட்டிருந்தியே,  எம்புருசன் பேரு ஏன்டா சொல்லலைன்னு கேக்க கூடாதான்னு நான் எகிற அதுக்கப்புறம், திவசம்னா ஒரு பேப்பர்ல பேருங்க ரெடியா எழுதி வெச்சி வந்ததும் நீட்டிடுவேன். எதுக்கு குழப்பம்?

(டிஸ்கி: ஆமாம் ஒருத்தரு டிக்கட் வாங்கிட்டா லேட்னு போடுறமே.  எப்பவோ போயிருக்க வேண்டியது, லேட்டாதான் செத்ததுன்னு நக்கலா சொல்றா மாதிரியில்லை? )

84 comments:

பழமைபேசி said...

செய் வினை மாதிரி, இது பெயர் வினையாங்க பாலான்ணே? எதுக்கும் சாயுங்காலம் மறுக்கா வாறேன்!

பழமைபேசி said...

செய் வினை மாதிரி, இது பெயர் வினையாங்க பாலான்ணே? எதுக்கும் சாயுங்காலம் மறுக்கா வாறேன்!

vasu balaji said...

பழமைபேசி said...

/செய் வினை மாதிரி, இது பெயர் வினையாங்க பாலான்ணே? எதுக்கும் சாயுங்காலம் மறுக்கா வாறேன்!/

வாங்க. உங்க இடுகைல சொன்னா மாதிரி ஒட்டக்கூத்தரு ரெட்டைத் தாப்பாளுக்கு நேர் எதிர் வினை:)) ரெண்டு பின்னூட்டம். இஃகி

சூர்யா ௧ண்ணன் said...

//ஏதோ சப் ரூல்ல திவசம் பண்ண வெச்சாரு.//

ஹ ஹ ஹா!

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

//ஏதோ சப் ரூல்ல திவசம் பண்ண வெச்சாரு.//

ஹ ஹ ஹா!//

வாங்க சூர்யா:))

ஈரோடு கதிர் said...

அண்ணே... அண்ண்ண்ண்ண்ணே..

உங்க பேரு என்ண்ணே...

வசந்து நயினா..

பிரபா அய்யா...

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/அண்ணே... அண்ண்ண்ண்ண்ணே..

உங்க பேரு என்ண்ணே...

வசந்து நயினா..

பிரபா அய்யா.../

சாஆஆஆஆஆஆஆர்ர்ர்ர்ர்=))

ஈரோடு கதிர் said...

//சரி, ஹோமம்லாம் பண்ணியாச்சி// இனிமே ஒன்னும் பண்ண முடியாது. போய் குளிச்சிட்டு வான்னு சொல்லி,//

குளிச்சா... ஹோமம் கேன்சலாயிடுமோ

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/குளிச்சா... ஹோமம் கேன்சலாயிடுமோ/

அட ரெண்டாவது இன்னிங்சுங்க. மொதல்ல இருந்து ஆரம்பிக்கிறாராமா.

பின்னோக்கி said...

அப்பாடி உங்க பெயர் படாத பாடு பட்டிருக்குங்க. திவசம் தான் ஹைலைட் மேட்டர். இவ்வளவு அப்பாவியா இருந்திருக்கீங்களே.

அப்புறம் புரபைல்ல இருந்த பழைய போட்டாதான் சூப்பரு

ஜோதிஜி said...

நகைச்சுவை என்று நல்ல விசயத்தை சொல்லி உள்ளீர்கள். அவசர உலகில் அத்தனையும் முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது தானே. இதில் உள்ள சில விசயங்கள் உண்மையிலேயே நடந்தது. நடந்து கொண்டு இருப்பது.

பின்னோக்கி said...

ஏங்க. டிஸ்கில போற போக்குல ஒரு பதிவு மேட்டர போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களே. ம்ம்..நிறைய மேட்டர் இருக்குது பதிய உங்களுக்கு

vasu balaji said...

பின்னோக்கி said...

/அப்பாடி உங்க பெயர் படாத பாடு பட்டிருக்குங்க. திவசம் தான் ஹைலைட் மேட்டர். இவ்வளவு அப்பாவியா இருந்திருக்கீங்களே.

அப்புறம் புரபைல்ல இருந்த பழைய போட்டாதான் சூப்பரு/

நன்றிங்க. மாத்திடுவோம்.

vasu balaji said...

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

/ அவசர உலகில் அத்தனையும் முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது தானே. இதில் உள்ள சில விசயங்கள் உண்மையிலேயே நடந்தது. நடந்து கொண்டு இருப்பது./

ஆமாங்க ஜோதிஜி. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

vasu balaji said...

பின்னோக்கி said...

/ஏங்க. டிஸ்கில போற போக்குல ஒரு பதிவு மேட்டர போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களே. ம்ம்..நிறைய மேட்டர் இருக்குது பதிய உங்களுக்கு/

=))

Rekha raghavan said...

திருக்குறள் முனுசாமி சொன்னா அது சரியாத்தான் இருக்கும்னு இப்பவாது எல்லோருக்கும் புரிஞ்சிருக்கணுமே! ஏன்னா அவரு எங்க உர்க்காரர் (விழுப்புரம்). அவர் வீடும் எங்க வீடும் ஒரே தெருவிலதானுங்கோ! அருமையான தேவையான பதிவு.

ரேகா ராகவன்

இராகவன் நைஜிரியா said...

வந்ததற்கு முதலில் ப்ரசெண்ட் போட்டுகிட்டு, தமிழிஷிழ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சுஙகண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// அட இந்த கெரகம் புடிச்சவன் ஊரச் சுத்தாம விஷயத்துக்கு வரமாட்டானேன்னு சலிக்காதீங்க. // இதுக்கு முந்தின இரண்டாவது பத்திலதான் பேரை சொல்லிக் கூப்பிடணும் அப்படின்னு சொல்லிட்டு, நீங்களே இங்க கெரகம் புடிச்சவன் அப்படின்னு சொன்னா என்னா அர்த்தம்?

இராகவன் நைஜிரியா said...

// இதுல நம்ம வீட்டு வழமுறைன்னு மூணு பேரு காதுல சொல்லி பேரு வைப்பாங்களாம். //

இதுல வழமுறை வேறயா... பாமரன் இருந்து வானம்பாடிகள் ஆயாச்சு,,, மூனாவது பேர் என்னங்கோ..

இராகவன் நைஜிரியா said...

// அப்புறம் திருப்பதி போனபோது யாரோ வடக்கத்தி சிறுமி பாலாஜின்னு கூப்பிட அதுவே நிலைச்சிப் போச்சி எனக்கு. //

பாலா அப்படின்னு கூப்பிட நினைச்சு, மரியாதையா ஒரு ஜி சேர்த்து பாலாஜி அப்படின்னு கூப்பிட்டு இருப்பாங்க.

நல்ல வேலை தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறக்கலை.. பால சுப்புரமணியனை, சுப்பு, சுப்புடுன்னு கன்னாபின்னாவென்று சுருக்கியிருப்பாங்க.

இராகவன் நைஜிரியா said...

// (அட இருங்க வெண்ணெய் சங்கத் தலைவரே. சொல்லுவம்ல. வெண்ணைக்கும் கணபதி சுப்பிரமணியம் என்கிற ரவிசங்கர்தான் பேரு).//

அப்படி போடு அருவாள... இன்னொரு சுப்புணி வீட்ல இருக்காருன்னு சொல்லுங்க

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

/திருக்குறள் முனுசாமி சொன்னா அது சரியாத்தான் இருக்கும்னு இப்பவாது எல்லோருக்கும் புரிஞ்சிருக்கணுமே! ஏன்னா அவரு எங்க உர்க்காரர் (விழுப்புரம்). அவர் வீடும் எங்க வீடும் ஒரே தெருவிலதானுங்கோ! அருமையான தேவையான பதிவு.

ரேகா ராகவன்/

வாங்க கதாசிரியரே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ வந்ததற்கு முதலில் ப்ரசெண்ட் போட்டுகிட்டு, தமிழிஷிழ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சுஙகண்ணே../

இந்த கலகலப்பத்தான் காணோம் 4 நாளா. வாங்கண்ணே

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/இதுக்கு முந்தின இரண்டாவது பத்திலதான் பேரை சொல்லிக் கூப்பிடணும் அப்படின்னு சொல்லிட்டு, நீங்களே இங்க கெரகம் புடிச்சவன் அப்படின்னு சொன்னா என்னா அர்த்தம்?/

அஹாஆஆ. ஆரம்பிச்சிட்டாங்கைய்யா. ஆரம்பிச்சிட்டங்கைய்யா

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/இதுல வழமுறை வேறயா... பாமரன் இருந்து வானம்பாடிகள் ஆயாச்சு,,, மூனாவது பேர் என்னங்கோ../

அண்ணே மறந்துட்டீங்களா. பாமரன் ரெண்டு புள்ளி என்கிற பாலா ரெண்டு புள்ளி என்கிற வானம்பாடிகள்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நல்ல வேலை தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறக்கலை.. பால சுப்புரமணியனை, சுப்பு, சுப்புடுன்னு கன்னாபின்னாவென்று சுருக்கியிருப்பாங்க./

=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அப்படி போடு அருவாள... இன்னொரு சுப்புணி வீட்ல இருக்காருன்னு சொல்லுங்க/

அவன் வெண்ணெய அப்புணிண்ணே.=))

பிரபாகர் said...

அய்யா,

வாயி வயிறெல்லாம் வலிக்குது சிரிச்சி. நல்லா பேர் போன ஆளுதான் நீங்க....

பிரபாகர்.

vasu balaji said...

பிரபாகர் said...

/அய்யா,

வாயி வயிறெல்லாம் வலிக்குது சிரிச்சி. நல்லா பேர் போன ஆளுதான் நீங்க....

பிரபாகர்./

=)) வாங்க பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

இதென்னா... வாஸ்துவா..

அப்ப ஒர் போட்டோ... இப்ப ஒரு போட்டோ...

யாராச்சும் இதுதான் நல்லாயிருக்குனு சொல்லிப்புட்டாங்களா...

அதயும் நம்பீட்டீங்களோ... இதே வேலையாப்போச்சு...

(பின்னோக்கி... அடிக்காதீங்கா... வலிக்குது)

ஈரோடு கதிர் said...

//வாயி வயிறெல்லாம் வலிக்குது //

வலிக்கும்....வலிக்காதா பின்ன..

நீங்கதான் 23x7 மணிநேரம் யோசிக்கிரீங்களே பிரபா

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/இதென்னா... வாஸ்துவா../

இல்ல பேஸ்த்து=))

/அதயும் நம்பீட்டீங்களோ... இதே வேலையாப்போச்சு.../

அட இது நல்லால்லன்னு நாகரீகமா சொன்னப்புறமும் மாத்தலைன்னா எப்புடீ

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/நீங்கதான் 23x7 மணிநேரம் யோசிக்கிரீங்களே பிரபா/

அட அந்த ஒரு மணி நேரத்துல ஒன்னும் தோணலைன்னு திவாகருக்கு போன் போட்டு எழுதறாரா. ஆஹா. தம்பியுடையான் கதைக்கு அஞ்சான்.

பின்னோக்கி said...

ஆஹா !! ஆஹா !! இப்பத்தான் பார்க்க அம்சமா இருக்கு. இந்த ப்ளாக்கின் அழகை திரும்ப கொண்டுவந்த வானம்பாடி அவர்களுக்கு நன்றி.

என்ன ஒரு சிந்தனைமயமான போட்டா. உங்க போட்டா இந்த உலகத்துல நின்னுடுச்சு. சின்ன புள்ளைங்களுக்கு கூட தெரியுது. அதுனால மாத்தாதீங்க (கதிர்..என்ன உசுப்பேத்துனாலும்) :)

vasu balaji said...

பின்னோக்கி said...
/சின்ன புள்ளைங்களுக்கு கூட தெரியுது. அதுனால மாத்தாதீங்க (கதிர்..என்ன உசுப்பேத்துனாலும்) :)/

உள்குத்து இல்லையே=))

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே.......இனி எப்புடி கூப்புடுறது.......நீங்களே சொல்லிடுங்க...


திவசம் குடுத்த கதை.........
உண்மையில் வயிறு வலிக்கிறது

அன்புடன்
ஆரூரன்

இராகவன் நைஜிரியா said...

// ரேஷன் கார்டுல வி.வி.மூர்த்தி, தங்கம்மாள், பாலாஜின்னு இருக்கும். வேற ஒண்ணில வாசுதேவ மூர்த்தி, தங்கம், பாலசுப்பிரமணின்னு இருக்கும். எதுக்கு என்ன பேரு குடுத்தோம்னே தெரியாம போச்சி. //

அண்ணே இரண்டு ரேஷன் கார்டா அண்ணே.. அப்ப இரண்டு டிவி கிடைச்சுதா அண்ணே.

ஈ ரா said...

ஆனாலும் உங்க பேரு மேட்டரு ரொம்ப அநியாயம்.. பெரியவர்கள் சற்றே கவனக்குறைவாக இருந்தால் எவ்வளவு கஷ்டம் என்று நகைச்சுவையோடு அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..

டிஸ்கி சூப்பர்..

இராகவன் நைஜிரியா said...

// வேலைக்கு ஆர்டர் வந்து வெரிஃபிகேஷன் போனப்ப வெடிச்சது முதல் குண்டு. //

அப்ப ஆரம்பிச்சது இன்னும் நிக்கலையா/

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//அட இந்த கெரகம் புடிச்சவன் ஊரச் சுத்தாம விஷயத்துக்கு வரமாட்டானே//

தன்னடக்கம் ரொம்ப அதிகம் சார் உங்களுக்கு!

//வெண்ணைக்கும் கணபதி சுப்பிரமணியம் என்கிற ரவிசங்கர்தான் பேரு//

வேணா .. முடியல ...சிரிச்சிடுவ...

//ஏங்க,எங்கப்பாரு பேரு கேக்கவே இல்லையேன்னேன்//

இங்கத்தான் திரிலிங் டச்!

//போய் யோவ் பேரு கேட்டா பாலசுப்புரமணின்னியேன்னாரு//

டர்னிங் டச்! முடியல ...!

//ஏங்க அது எம்பேருன்னேன். எனக்கெதுக்குடா உம்பேருன்னு//

குபீர் சிரிப்பு ! தூள்ண்ணே!

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/பாலாண்ணே.......இனி எப்புடி கூப்புடுறது.......நீங்களே சொல்லிடுங்க...


திவசம் குடுத்த கதை.........
உண்மையில் வயிறு வலிக்கிறது

அன்புடன்
ஆரூரன்/

திருக்குறளார் சொன்னா மாதிரி இல்லாம எந்தப்பேர்ல கூப்பிட்டாலும் சரி=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said

/அண்ணே இரண்டு ரேஷன் கார்டா அண்ணே.. அப்ப இரண்டு டிவி கிடைச்சுதா அண்ணே./

இருக்கிற ஒரு கார்டையும் சின்சியரா வெள்ளைக்கார்டா மாத்தி வெச்சிருக்கிற அப்புறாணின்னே நானு.

vasu balaji said...

ஈ ரா said...

/நகைச்சுவையோடு அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..

டிஸ்கி சூப்பர்..
ஹி ஹி. நன்றி. அப்புறமா சொல்லி சொல்லி சிரிச்சாலும் அம்மாக்கு ரொம்ப வருத்தம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அப்ப ஆரம்பிச்சது இன்னும் நிக்கலையா//

கலகலா சொன்னா மாதிரி பழகிடுச்சி.

vasu balaji said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

/டர்னிங் டச்! முடியல ...! /

/
குபீர் சிரிப்பு ! தூள்ண்ணே!/

வாங்க கவிஞரே. எங்க கவிதையும் காணோம். கவிஞரையும் காணோம்.

இராகவன் நைஜிரியா said...

// அதில உன் பிறந்த தேதி 29 செப்டம்பர்னு இருக்கு, சர்டிஃபிகேட்ல 10 ஜூன்னு இருக்கு, வில்லங்கமாயிரும்னு. //

இப்ப எங்க எல்லாருக்கும் உங்க பிறந்த தேதி தெரிஞ்சுடுச்சு..

இந்தியாவில் இருக்கும் போது கொண்டாடிட வேண்டியதுதான்..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said

/இப்ப எங்க எல்லாருக்கும் உங்க பிறந்த தேதி தெரிஞ்சுடுச்சு..

இந்தியாவில் இருக்கும் போது கொண்டாடிட வேண்டியதுதான்..

ஆஹா.=))

MUTHU said...

எனக்கும் இந்த ப்ராப்ளம் இன்னும் உள்ளது

same blood

vasu balaji said...

Tamilmoviecenter said...

/எனக்கும் இந்த ப்ராப்ளம் இன்னும் உள்ளது

same blood/

:))

கலகலப்ரியா said...

அடடா... பேர் சொல்லும் பதிவுங்க இது...!

நசரேயன் said...

//அட இந்த கெரகம் புடிச்சவன் ஊரச் சுத்தாம விஷயத்துக்கு வரமாட்டானேன்னு சலிக்காதீங்க.//
எப்படிண்ணன் இப்படி ?

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அடடா... பேர் சொல்லும் பதிவுங்க இது...!/

பேரு தப்பா சொன்ன இடுகைம்மா=))

ரோஸ்விக் said...

அட இந்த பேரு பிரச்சனை எனக்கும் இருக்குதுயா....அவனுக வச்ச பேரு பத்தாதுன்னு இப்ப நான் ஒரு பெற எனக்கு வச்சிகிட்டேன். :-) கடுப்புல தான்...

vasu balaji said...

நசரேயன் said..

/எப்படிண்ணன் இப்படி ?/

பீலிங்ஸ்ணே பீலிங்சு..அவ்வ்வ்

vasu balaji said...

ரோஸ்விக் said...

/அட இந்த பேரு பிரச்சனை எனக்கும் இருக்குதுயா....அவனுக வச்ச பேரு பத்தாதுன்னு இப்ப நான் ஒரு பெற எனக்கு வச்சிகிட்டேன். :-) கடுப்புல தான்.../

அட. கொள்ளப்பேருக்கு இப்புடித்தானா. அய்ங்

அப்பாவி முரு said...

அய்யோ லேட்டா வந்துட்டீனே...

பாலசுப்ரமணி - பாலாஜி ஆனாரா?

அவ்வ்வ்வ்வ்

பழமைபேசி said...

என்ன ஆனாலும், நீங்க அதே பாலாண்ணன் தான் எனக்கு எப்பவும்! இஃகி!!

நாகா said...

பேரு பெரிய வெனையாத்தான் இருந்திருக்கு..

vasu balaji said...

அப்பாவி முரு said...

/அய்யோ லேட்டா வந்துட்டீனே...

பாலசுப்ரமணி - பாலாஜி ஆனாரா?

அவ்வ்வ்வ்வ்/

வாங்க சாமி. லேட்டான்னு பார்த்ததும் பதறிட்டேன். =))

vasu balaji said...

பழமைபேசி said...

/என்ன ஆனாலும், நீங்க அதே பாலாண்ணன் தான் எனக்கு எப்பவும்! இஃகி!!/

:)). நன்றி பழமை. பாதியாச்சும் தேறிச்சு=))

vasu balaji said...

நாகா said...

/பேரு பெரிய வெனையாத்தான் இருந்திருக்கு../

வாங்க நாகா=))

புலவன் புலிகேசி said...

இப்புடித்தான் ஊருக்குள்ள நெறைய பேரு ஜாதகத்தையும் ஜோசியத்தையும் வச்சிக் குழப்பிக்கிட்டிருக்காங்க.....பேசாம பேருக்கு பதிலா கல்லுரிகளில் உள்ள மாதிரி நம்பர் வச்சா என்ன???

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/இப்புடித்தான் ஊருக்குள்ள நெறைய பேரு ஜாதகத்தையும் ஜோசியத்தையும் வச்சிக் குழப்பிக்கிட்டிருக்காங்க.....பேசாம பேருக்கு பதிலா கல்லுரிகளில் உள்ள மாதிரி நம்பர் வச்சா என்ன???/

கைதிகளுக்கு பேர் வெச்சிறலாமா=))

ப்ரியமுடன் வசந்த் said...

மீ த லாஸ்ட்...

ப்ரியமுடன் வசந்த் said...

மிஸ்டர்.பாலா (or) mr.vaanambadigaL

எது உம்பேர்?

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/மீ த லாஸ்ட்.../
வா ராசா. லீவு. நல்லா தூங்கி எழுந்து வராப்போல இருக்கு.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ மிஸ்டர்.பாலா (or) mr.vaanambadigaL

எது உம்பேர்?/

உனக்கெதுக்கு இது. நீ நைனான்னு தானே கூப்புடுவ

ஊடகன் said...

இந்த மாதிரி மூடநம்பிக்கையை சுட்டிகாட்டியதற்கு ஒரு பரிகாரம் பண்ணிருங்கோ.........

Unknown said...

//அப்பாக்கு திதி குடுக்குறப்ப வழக்கமா வர புரோகிதர்னாலும் எப்போ தேவையோ அப்போ, அப்பா பேரு சொல்லும்பாரு. அதனால குழப்பமில்ல. அப்புறம் தாத்தா பேரு சொல்லு, கொள்ளுத் தாத்தா பேரு சொல்லுன்னு நடத்துவாங்க.//

இன்னிக்கு எத்தன பேரால இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல தெரியும் ......

vasu balaji said...

ஊடகன் said...

/இந்த மாதிரி மூடநம்பிக்கையை சுட்டிகாட்டியதற்கு ஒரு பரிகாரம் பண்ணிருங்கோ......../

ஓ. நீங்க நான் மூட நம்பிக்கைனு சாடுறேன்னு நினைச்சிட்டீங்களா. இது அதில்லைங்க. கவனப் பிசகா இருந்தது என் தப்பு. இவ்வளவு செண்டிமெண்டான விஷயத்தில அக்கறை குறைவா இருந்தது அவுங்க தப்பு.

vasu balaji said...

பேநா மூடி said...

/இன்னிக்கு எத்தன பேரால இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல தெரியும் ....../

ரொம்ப முக்கியமான விஷயம்ங்க இது. முதியோரில்லம் பேருதான் சொல்லணும் போல இனிமே.

கண்ணகி said...

சார், சொந்த செலவுலே சூனியம் வெச்சுக்கறது இதுதான்.
ஹா.ஹ.ஹ.ஹா. முடியலெ

மர தமிழன் said...

வாத்துக்கோழி said...
சார், சொந்த செலவுலே சூனியம் வெச்சுக்கறது இதுதான்.
ஹா.ஹ.ஹ.ஹா. முடியலெ

ஹா.ஹ.ஹ.ஹா. முடியலெ ... எனக்கும் தான், ஆனா நம்மளோட இந்த கவனக்குறைவுதான் இன்னிக்கு இந்தியாவுல பல்லாயிரகணக்கான கோடி ருபாய் பிசினஸ். ஒருவேளை தமிழில் திதி கொடுத்தால் இது தவிர்க்க முடிந்திருக்குமோ (சத்தியமா நான் தி மு க இல்லீங்க )

vasu balaji said...

வாத்துக்கோழி said...

/சார், சொந்த செலவுலே சூனியம் வெச்சுக்கறது இதுதான்.
ஹா.ஹ.ஹ.ஹா. முடியலெ/

ஆஹா. எம்பேரு இப்படி சிரிப்பா சிரிச்சி போச்சே.=))

vasu balaji said...

மர தமிழன் said...

/ஒருவேளை தமிழில் திதி கொடுத்தால் இது தவிர்க்க முடிந்திருக்குமோ (சத்தியமா நான் தி மு க இல்லீங்க )/

அவரு தமிழ்ல தானுங்க கேட்டாரு. =))

Unknown said...

ஆமாங்க.., நாம வெள்ளக்காரன் கிட்ட கதுட ரொம்ப மோசமான விஷயம் இந்த முதியோர் இல்லம் ...

துபாய் ராஜா said...

//This is to certify that Sri V. Balaji is also known as Sri V. Balasubramanian. He is s/o late Sri V. Vasudevamoorthy alias V.V. Moorthy and Mrs V. Thangamani who is also known as Thangammal as per official records. He is not related to me.//

சிரிச்சி முடியலை சார்.. :))))))

வாழ்க்கையில சந்திச்ச தர்மசங்கடமான சூழ்நிலையை எல்லாம் சிரிப்பா சிரிக்க சொல்லிட்டிங்க...

S.A. நவாஸுதீன் said...

//This is to certify that Sri V. Balaji is also known as Sri V. Balasubramanian. He is s/o late Sri V. Vasudevamoorthy alias V.V. Moorthy and Mrs V. Thangamani who is also known as Thangammal as per official records. He is not related to me.//

also known as avvvvvvvvvv.

***********************************

//இப்புடி வேற எதுக்காவது கேட்டா ஜாதகத்த நீட்டாத. அதில உன் பிறந்த தேதி 29 செப்டம்பர்னு இருக்கு, சர்டிஃபிகேட்ல 10 ஜூன்னு இருக்கு, வில்லங்கமாயிரும்னு.//

ஆத்தி, முடியலை

***********************************

//அப்பா பேருதானேன்னு சத்தியம் பண்ணாத குறையா சொல்லச் சொல்லி ஏதோ சப் ரூல்ல திவசம் பண்ண வெச்சாரு.//

ஹா ஹா ஹா.

***********************************

//ஆமாம் ஒருத்தரு டிக்கட் வாங்கிட்டா லேட்னு போடுறமே. எப்பவோ போயிருக்க வேண்டியது, லேட்டாதான் செத்ததுன்னு நக்கலா சொல்றா மாதிரியில்லை?//

அதானே எங்கடா இன்னும் உங்க பன்ச்ச காணோமேன்னு பார்த்தேன். டிஸ்கில போட்டிருக்கிங்களா. சரிதான்

vasu balaji said...

வாங்க நவாஸ்=))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...
/அதானே எங்கடா இன்னும் உங்க பன்ச்ச காணோமேன்னு பார்த்தேன். டிஸ்கில போட்டிருக்கிங்களா. சரிதான்/

பின்ன=))

cheena (சீனா) said...

அன்பின் பாலா

அருமை அருமை - சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாச்சி - ம்ம்ம்ம்

திவசம் கொடுக்கறது இப்பல்ல்லாம் இப்படித்தான் காமெடியா நடக்குது - என்ன செய்யுறது

நல்லாருந்திச்சி இடுகை - நல்வாழ்த்துகள்

vasu balaji said...

cheena (சீனா) said...

/அன்பின் பாலா

அருமை அருமை - சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாச்சி - ம்ம்ம்ம்/

/நல்லாருந்திச்சி இடுகை - நல்வாழ்த்துகள்/

:)).நன்றிங்க.

Santhini said...

it was hilarious !!
nice work.

vasu balaji said...

Santhini said...

/it was hilarious !!
nice work./

Thank you