Friday, November 13, 2009

பூவும் தலையும்!!!






உன் மடி சாய்ந்து
விரல் கோர்த்து
நீ மௌனமாய் இருக்கையில்
ஓராயிரம் அர்த்தம் தெரிகிறது!
ஊடலுடன் மௌனமாயிருக்கையிலோ
ஒன்றுமே புரியாமல் தவிக்கிறேன்!

*
முந்தானை முடிச்சு!
உன்னுடன் நடந்த ஓர் நாள்
சரிந்த முந்தானையை
சட்டெனச் சரி செய்ய‌
என் முகமுரசிப் போனதில்
என் மூச்செடுத்து
உன் வாசம் நிரப்பிப் போனது
உன் முந்தானை..
சீராய்த் துடித்த என் இதயம்
அது முதல் நீயாய்த் துடித்தது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தலை:
 
ஒரு வழியாய் லாக் ஆஃப் செய்து மணி பார்த்தாள் திவ்யா. அதிகாலை இரண்டு ஆகிவிட்டிருந்தது. ஆன் சைட் ப்ரோஜெக்ட் ஹெட்டைத் திட்டிக் கொண்டே ரிசப்ஷனுக்கு ஃபோன் செய்து கார் வந்துவிட்டதா என உறுதி செய்து கொண்டாள். மதியமே மழை பின்னி எடுத்தது கவனம் வர கலவரமாய் போர்டிகோ சேர எப்பொழுதும் வரும் டிரைவர் வரவில்லை. புதிதாய் யாரோ ஒருவன். பார்த்த மாத்திரத்தில் மனதில் நெருடல்.

வேறு வழியில்லை, போயாக வேண்டும். அட்ரஸ் தெரியுமா? அவர் வரலைங்களா என்றபடி ஏறி அமர்ந்தாள். அவருக்கு உடம்பு சரியில்லைங்க. மெயின்ரோடு வந்த பிறகு வழி சொல்லுங்க என்றவாறு காரை ஸ்டார்ட் செய்தான். மழை மிகவும் அதிகமாக இருந்தது. வீதிகளில் அங்கங்கே வெள்ளக் காடு. பயந்தபடியே அமர்ந்திருக்க அவர்கள் அவென்யூவிற்கு செல்லும் பிரதான வீதி வந்தது. அடுத்த‌ லெஃப்டில‌ போங்க‌ என்றாள்.

திடீரென‌ ப‌க் ப‌க் என‌த் திண‌றிய‌ கார் தானே நின்ற‌தா, ட்ரைவ‌ர் நிறுத்திவிட்டானா என்ற‌ ச‌ந்தேக‌த்துடன் இருக்க, அம்மா வண்டி போகாதும்மா. பக்கங்களா? நான் துணைக்கு வந்து விட்டு வருகிறேன். நடந்துதான்  போக வேண்டும் என்றபோது திட்டமிட்டே செய்திருக்கிறான் என்ற பயம் உறுதியானது. ஒன்றும் வேண்டாம், நானே போகிறேன் என்றவள், ஒரு முறை கணவனுக்கு ஃபோன் செய்தாள். எடுத்த பாடில்லை.

இறங்கி கடவுளை வேண்டிய படி கனத்த மழையில் நடக்கத் தொடங்கினாள். சிறிது தூரம் சென்ற பிறகு யாரோ தொடர்ந்து வருவதைப் போல் உணர்ந்து திரும்பிப் பார்க்க, ஒருவன் ரெயின் கோட்டுடன் தொடர்வது தெரிய வேகமாக நடக்கத் தொடங்கினாள். அவனும் வேகமாகத் துரத்தத் தொடங்கினான்.

பயத்தில், மழையிலும் கூட வியர்ப்பதும், பட படப்பாவதும் உணர்ந்து ஓடத் தொடங்கினாள். அவனும் துரத்துவது தண்ணீரில் எழும்பும் கால்தட ஒலியில் தெரிய, வேகத்தை அதிகரித்தாள். கத்தினால் கூட கேட்காத படி மழை அடித்துப் பெய்தது. இன்னும் இரண்டு வீதி கடந்தால் அவர்கள் அவெனியூ. வாழ்க்கையில் முன்னெப்பொழுதும் ஓடாத வேகத்தில் ஓடியவள், வீதி முனைக்கு வர திகைத்துப் போனாள்.

வீதியில் ஒரு விளக்கும் இல்லை. அந்த அதிர்ச்சி தந்த சோர்வில், துரத்தி வந்தவன் நெருங்கியே விட்டான். ஒரே பாய்ச்சலில் மீண்டும் ஓடத் தொடங்கினாள் திவ்யா. ஆறாவது வீடு, வாட்ச்மேன் கதவை வேறு லாக் செய்திருப்பான். மழையில் தூங்குகிறானோ என்னவோ என மனம் தறிகெட்டோட தன் தோள் மீது துரத்தியவன் கை விழுவதை உணர்ந்தாள்.

அடுத்த கணம் மற்றொருகை அவள் வாயைப் பொத்த, திகைத்த சில நொடியில் ஒரே தாவலில் திமிற, மழையில் அவன் பிடி வழுக்க , காப்பாத்துங்க என்று அலறியபடி ஒரே தாவாக தன் வீட்டுக் கதவருகே வந்து விட்டாள். அம்மா என்ற அலறலுடன் துரத்தி வந்தவன் விழவும், வீதியில் விளக்கு எரியவும், வாட்ச்மேன் கதவைத் திறந்து என்னாம்மா என்று ஓடி வரவும் ஒரு சேர நிகழ்ந்தது.

வெளிச்சத்தில் பார்த்த போது துரத்தி வந்தவன் ஒரு குழியில் காலை வைத்துவிட்டான் போலும். கால் நொடித்து விழுந்ததில் பாதம் ட்விஸ்ட் ஆகி ஏறக்குறைய முதுகு பக்கம் திரும்பி இருந்தது. நீங்க போங்கம்மா, நாங்க இவனைப் பார்த்துக்கிறோம் என்ற வாச்மேனுக்கு நன்றி சொல்லி தளர்வாய் நடந்தாள் திவ்யா.

நச் போட்டிக்கு தான் எழுதிய கதையை ஒரு முறை படித்தபின் தன் வலைப்பூவில் வெளியிட்டான் ரகு

(பொறுப்பி: இத விட ஜெனூயினா ட்விஸ்ட்டும் திருப்பமா எப்புடி கத எழுதுறது)

85 comments:

புலவன் புலிகேசி said...

me the first

புலவன் புலிகேசி said...

நல்ல டிவிஸ்ட்டுதான்..நானும் ரொம்ப சீரியஸ்ஸா படிச்சிட்டேன்..

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/me the first/

வாங்க வாங்க.

/ புலவன் புலிகேசி said...

நல்ல டிவிஸ்ட்டுதான்..நானும் ரொம்ப சீரியஸ்ஸா படிச்சிட்டேன்../

ஆமா சீரியஸ் கதை தானே=))

ஊடகன் said...

நல்ல கதை........
பள்ளி பாடபுத்தகதுக்கு துணைப்பாடம் எழுதலாமே.........

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல ட்விஸ்ட் தான் போங்க..

vasu balaji said...

ஊடகன் said...

/நல்ல கதை........
பள்ளி பாடபுத்தகதுக்கு துணைப்பாடம் எழுதலாமே........./

அதுங்கள்ளாம் இது மாதிரி கதையா படிக்கும்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/நல்ல ட்விஸ்ட் தான் போங்க../

பேட் ஃபெல்லோ. அவன் காலொடிஞ்சி கெடக்கான் நல்ல ட்விஸ்டாம்.

சத்ரியன் said...

//சீராய்த் துடித்த என் இதயம்
அது முதல் நீயாய்த் துடித்தது!//

பாலா,

வயசுக்கேத்தா மாதிரி எழுதனும்....!

அருமையான வரிகள்.

கதையில ட்விஸ்ட் வெக்கிறேன்னு.....ச்சேசே...! ஏமாத்திட்டீங்களே!

சங்கர் said...

//ஆமா சீரியஸ் கதை தானே=))//

பாதம் திரும்பி முதுகுபக்கம் வந்தா அவன் சீரியஸ் தான் ஆவான்

vasu balaji said...

சத்ரியன் said...

/ பாலா,

வயசுக்கேத்தா மாதிரி எழுதனும்....!

அருமையான வரிகள்./

தோ! வயசு புள்ள இதயத்துடிப்பு பத்தி ஏன் கவலை படுறான். அதான் வயசுக்கேத்தா மாதிரி எழுதினேன்.=))

/கதையில ட்விஸ்ட் வெக்கிறேன்னு.....ச்சேசே...! ஏமாத்திட்டீங்களே!/

இப்பொ என்னா. அந்தம்மாவோட நகைய பறிச்சிக்க விட்டிருக்கணுமோ=))

vasu balaji said...

சங்கர் said...

/ பாதம் திரும்பி முதுகுபக்கம் வந்தா அவன் சீரியஸ் தான் ஆவான்/

அது அது. முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

ராஜவம்சம் said...

எதையோ எதிர்ப்பார்த்து ஏமாந்துடேனுங்க!

கவிதை கவிதையாக சூப்பர்

vasu balaji said...

ராஜவம்சம் said...

/எதையோ எதிர்ப்பார்த்து ஏமாந்துடேனுங்க!

கவிதை கவிதையாக சூப்பர்/

வாங்க! முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

thiyaa said...

தொடக்கத்தில் வந்த கவிதை சூப்பர்.
கதையும் நல்லாயிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல ட்விஸ்ட் தான் :-))

vasu balaji said...

தியாவின் பேனா said...

/தொடக்கத்தில் வந்த கவிதை சூப்பர்.
கதையும் நல்லாயிருக்கு./


நன்றி தியா.

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/நல்ல ட்விஸ்ட் தான் :-))/

நன்றிங்க

vasu balaji said...

ஆஆஆ. அண்ணன் வந்துட்டாரு=))

பின்னோக்கி said...

வாழ்த்துக்கள் கவிதை பிரசுரமானதுக்கு.

எழுதுவியா ? இனிமேல எழுதுவியா ? நச் போட்டி வெச்சா உனக்கு எங்கடா போச்சு புத்தி ? எதுக்கு நீ கதை எழுதுன ? இப்ப பாரு வானம்பாடி ஐயா ஒவ்வொரு நச் கதை எழுதுனவங்களையும் ரவுண்டு கட்டி அடிக்குறாரு. இது தேவையா ? இனிமே கதை எழுதுனன்னா பார்த்துக்கோ.

வானம்பாடி ஐயா ! பின்னோக்கிய மிரட்டிட்டேன். இனிமே அவன் கதை எழுத மாட்டான். அதுக்கு நான் பொறுப்பு.

vasu balaji said...

பின்னோக்கி said...

/வாழ்த்துக்கள் கவிதை பிரசுரமானதுக்கு./

நன்றி.

/வானம்பாடி ஐயா ! பின்னோக்கிய மிரட்டிட்டேன். இனிமே அவன் கதை எழுத மாட்டான். அதுக்கு நான் பொறுப்பு./

அவ்வளவு டெர்ரராவா இருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்.

அகல்விளக்கு said...

கவிதை நல்லாருக்குங்க சார்....

கதைல டிவிஸ்ட் ரொம்ப இருக்கு, யாராவது உங்கள திருப்பிட போறாங்க... பாத்து எழுதுங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

vasu balaji said...

அகல் விளக்கு said...

/கவிதை நல்லாருக்குங்க சார்....

கதைல டிவிஸ்ட் ரொம்ப இருக்கு, யாராவது உங்கள திருப்பிட போறாங்க... பாத்து எழுதுங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......../

=)). என்னா வில்லத்தனம்.

இராகவன் நைஜிரியா said...

உங்கள் கவிதை விகடனில் வந்ததற்கு வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகின்றேன்.

இது போல தங்களின் கவிதைகள், அச்சில் வர ஆசைகள் பல.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/உங்கள் கவிதை விகடனில் வந்ததற்கு வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகின்றேன்.

இது போல தங்களின் கவிதைகள், அச்சில் வர ஆசைகள் பல./

ஆஹா. ரெட்கார்பெட் போட்டு வாங்கண்ணேன்னு உக்காந்திருந்தா லேட் எண்ட்ரி.

ஆஆஆ. இதுலயும் வயதா=))

நன்றிண்ணே

இராகவன் நைஜிரியா said...

// ஊடலுடன் மௌனமாயிருக்கையிலோ
ஒன்றுமே புரியாமல் தவிக்கிறேன்! //

எக்ஸ்கியூஸ் மீ... எந்த ஆம்பளைக்கு இதெல்லாம் புரிஞ்சு இருக்கு...

பேசினாலே புரியாது... மௌனமாயிருந்தா... ஒன்னுமே புரியாது..

இராகவன் நைஜிரியா said...

ஹையா... மீ த 25

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/எக்ஸ்கியூஸ் மீ... எந்த ஆம்பளைக்கு இதெல்லாம் புரிஞ்சு இருக்கு...

பேசினாலே புரியாது... மௌனமாயிருந்தா... ஒன்னுமே புரியாது../

கரீட்டுண்ணே. ஜொல்லு மவுனம்னா தத்து பித்துன்னு புரிஞ்சாமாதிரி பண்றத நமுட்டு சிரிப்போட ரசிப்பாங்க. கோவம்னா புரியாம சாவுறத கிக்கிகின்னு சிரிப்பாங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஹையா... மீ த 25/

அண்ணன் எண்ட்ரீன்னா 25, 50, 75, 100 எல்லாம் ப்ரீமியம் நம்பர்னு யாரும் போடமாட்டாங்க=))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

ஆஹா. ரெட்கார்பெட் போட்டு வாங்கண்ணேன்னு உக்காந்திருந்தா லேட் எண்ட்ரி.

ஆஆஆ. இதுலயும் வயதா=))

நன்றிண்ணே //

அண்ணே உங்க இடுகைக்கு வந்து 45 நிமிஷம் ஆச்சு. நம்ம அட்மின் மேனேஜர் கூப்பிட்டு பேச ஆரம்ப்பிச்சுட்டார். இந்த பின்னூட்டம் பாதி போடும் போது, ஜி.எம் வந்து பேச ஆரம்பிச்சுட்டார்.

இது அண்ணே லொள்ளு..

இராகவன் நைஜிரியா said...

// முந்தானை முடிச்சு! //

முடிச்சா... அவிழ்க்கவே முடியாத முடுச்சுங்க அது...

மவனே மாட்டினவன் எவனும் வெளியில் வந்ததா சரித்திரம், பூகோளம், அறிவியல், கணக்கு எதுவுமே கிடையாதுங்க.

இராகவன் நைஜிரியா said...

// சீராய்த் துடித்த என் இதயம்
அது முதல் நீயாய்த் துடித்தது! //

இப்படித்தாண்ணே பாதி பேர் ஏமாந்துப் போயிட்டாங்க

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ஹையா... மீ த 25/

அண்ணன் எண்ட்ரீன்னா 25, 50, 75, 100 எல்லாம் ப்ரீமியம் நம்பர்னு யாரும் போடமாட்டாங்க=)) //

ஒரிஜினல் கும்மி பார்ட்டிங்க நிறைய பேர் ஜகா வாங்கிட்டாங்க அண்ணே.. அதனாலத்தான் எனக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்குதுங்க...

இராகவன் நைஜிரியா said...

// அதிகாலை இரண்டு ஆகிவிட்டிருந்தது. //

அண்ணே அது நடு சாமம்.. அதிகாலையில்லை...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/இது அண்ணே லொள்ளு../

=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/மவனே மாட்டினவன் எவனும் வெளியில் வந்ததா சரித்திரம், பூகோளம், அறிவியல், கணக்கு எதுவுமே கிடையாதுங்க./

=)). ஓவர் எந்து. மாட்டப் போறீங்கண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// வீதியில் ஒரு விளக்கும் இல்லை. //

நல்ல நாளிலேயே எரியாது... மழை பெஞ்சா எங்க எரியப் போகுது...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...


/இப்படித்தாண்ணே பாதி பேர் ஏமாந்துப் போயிட்டாங்க/

அப்போ மிச்சம் மீதி=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நல்ல நாளிலேயே எரியாது... மழை பெஞ்சா எங்க எரியப் போகுது.../

எவ்ளோ நாள் பகல்ல எரியும் தெரியுமா?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...
/இது அண்ணே லொள்ளு../

=)) //

அது அடிக்க வந்தது.. வேற...

தவறிப் போய் எண்டர் பட்டனை தட்டிட்டேன்..

இது அண்ணே, இவங்க லொள்ளு.. வந்து உயிரை எடுக்குறாங்க. பின்னூட்டம் போட இயலவில்லை..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/நல்ல நாளிலேயே எரியாது... மழை பெஞ்சா எங்க எரியப் போகுது.../

எவ்ளோ நாள் பகல்ல எரியும் தெரியுமா? //

அத பாத்து நம்ம வயறு எரியும் வேற...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஒரிஜினல் கும்மி பார்ட்டிங்க நிறைய பேர் ஜகா வாங்கிட்டாங்க அண்ணே.. அதனாலத்தான் எனக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்குதுங்க.../

கதிர் கவுண்டர் மாதிரி கொசுத்தொல்லை தாங்கலடா நாராயணான்னு இருக்காரு=))

இராகவன் நைஜிரியா said...

// நச் போட்டிக்கு தான் எழுதிய கதையை ஒரு முறை படித்தபின் தன் வலைப்பூவில் வெளியிட்டான் ரகு //

நச்சுன்னு எழுதியிருக்காரு ரகு..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/இது அண்ணே, இவங்க லொள்ளு.. வந்து உயிரை எடுக்குறாங்க. பின்னூட்டம் போட இயலவில்லை../

=)). இது வேறயா

இராகவன் நைஜிரியா said...

// (பொறுப்பி: இத விட ஜெனூயினா ட்விஸ்ட்டும் திருப்பமா எப்புடி கத எழுதுறது) //

படு ட்விஸ்ட் அண்ணே... சூப்பர் திருப்பம்...

யாருமே இது மாதிரி எழுத இயலாது..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/இது அண்ணே, இவங்க லொள்ளு.. வந்து உயிரை எடுக்குறாங்க. பின்னூட்டம் போட இயலவில்லை../

=)). இது வேறயா //

ஏதுடா ஒரு மனுஷன், அவங்க அண்ணன் பதிவுல போய் கும்மி அடிச்சுகிட்டு இருக்கானே அப்படின்ற டீசன்ஸி கூட இல்ல அண்ணே..

அவங்க வீட்ல நெட் ஒர்க் பண்ணலையாம்.. நம்ம உயிரை எடுக்கிறாங்க..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நச்சுன்னு எழுதியிருக்காரு ரகு../

ஆஆஆஆ. இவ்ளோ நேரம் இது போடலைண்ணே. எல்லாரும் என்னை காச்சிட்டு போய்ட்டாங்களேன்னு நைஸா ரகு மேல போடலாம்னு பார்த்தா பாராட்டு வருது உங்க கிட்டருந்து. எனக்குதான் கட்டம் சரியில்லையோ?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ஒரிஜினல் கும்மி பார்ட்டிங்க நிறைய பேர் ஜகா வாங்கிட்டாங்க அண்ணே.. அதனாலத்தான் எனக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்குதுங்க.../

கதிர் கவுண்டர் மாதிரி கொசுத்தொல்லை தாங்கலடா நாராயணான்னு இருக்காரு=)) //

அவர் பதிவுல கும்மி அடிக்க முடியலை அண்ணே... அவர் கமெண்ட் மாடரேஷன் போட்டு இருக்காரு அதனாலத்தான்..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/நச்சுன்னு எழுதியிருக்காரு ரகு../

ஆஆஆஆ. இவ்ளோ நேரம் இது போடலைண்ணே. எல்லாரும் என்னை காச்சிட்டு போய்ட்டாங்களேன்னு நைஸா ரகு மேல போடலாம்னு பார்த்தா பாராட்டு வருது உங்க கிட்டருந்து. எனக்குதான் கட்டம் சரியில்லைய? //

உங்களுக்கு யாருங்க அண்ணே கட்டம் கட்டினது...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஏதுடா ஒரு மனுஷன், அவங்க அண்ணன் பதிவுல போய் கும்மி அடிச்சுகிட்டு இருக்கானே அப்படின்ற டீசன்ஸி கூட இல்ல அண்ணே..

அவங்க வீட்ல நெட் ஒர்க் பண்ணலையாம்.. நம்ம உயிரை எடுக்கிறாங்க../

=)). உங்களுக்குமா? இங்க தான் கோடி ரூபாய்ல கம்ப்யூட்டர் வாங்கலாமா இல்லையான்னு டிசைட் பண்றவங்க இமெயிலுக்கு மேல எதுவும் தெரியாம இருக்காங்கன்னா=))

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

இராகவன் நைஜிரியா said...

அண்ணே லஞ்ச் டைம். ஸ்கூலுக்கு போய் அரவிந்தை கூட்டிகிட்டு வீட்டுக்கு போகணும்..

அப்பாலிக்கா வரேன்.

க.பாலாசி said...

//ஊடலுடன் மௌனமாயிருக்கையிலோ
ஒன்றுமே புரியாமல் தவிக்கிறேன்!//

//உன் முந்தானை..
சீராய்த் துடித்த என் இதயம்
அது முதல் நீயாய்த் துடித்தது!//

ஒரு குழந்தைகிட்ட சொல்றதா இது....

இளமைவிகடனில்
ஒரு முதுமையின் கவிதை
அடடே ஆச்சர்ய குறி........ம்ம்ம்...

இந்த கதையை வெளியிட்டது நீங்களா? ரகுவா?

யாராயிருந்தாலும் சுவாரசியமான கதை....விருவிருப்புக்கு பஞ்சமில்லை.
அடுத்தவன் காலை உடைக்கிறது உங்களுக்கு ட்விஸ்டா?....

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

அண்ணே லஞ்ச் டைம். ஸ்கூலுக்கு போய் அரவிந்தை கூட்டிகிட்டு வீட்டுக்கு போகணும்..

அப்பாலிக்கா வரேன்.

போய்ட்டு வாங்கண்ணே.

vasu balaji said...

க.பாலாசி said...

/ஒரு குழந்தைகிட்ட சொல்றதா இது....

இளமைவிகடனில்
ஒரு முதுமையின் கவிதை
அடடே ஆச்சர்ய குறி........ம்ம்ம்...

இந்த கதையை வெளியிட்டது நீங்களா? ரகுவா?/

நானு நானு=))

/யாராயிருந்தாலும் சுவாரசியமான கதை....விருவிருப்புக்கு பஞ்சமில்லை.
அடுத்தவன் காலை உடைக்கிறது உங்களுக்கு ட்விஸ்டா?..../

அல்டிமேட் ட்விஸ்ட்னா வேற வழியில்லையே

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஓ.... இதுதான் ட்விஸ்ட் வெச்சு எழுதறதா? எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே????

vasu balaji said...

ஸ்ரீ said...

/ஓ.... இதுதான் ட்விஸ்ட் வெச்சு எழுதறதா? எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே????/

வாங்க ஸ்ரீ!=))

பிரபாகர் said...

நல்ல வேலை லெக் ட்விஸ்ட் ஆகி செம திருப்பமா முடிச்சிட்டீங்க. நச்சுன்ன்னு முடிக்கணும்னு மண்டையில நச்சுன்னு ஒரு விளக்குக் கம்பம் விழுந்ததுன்னு முடிக்காம விட்டுட்டீங்க....

நல்ல வாரல் அய்யா.

பிரபாகர்.

vasu balaji said...

பிரபாகர் said...

/நல்ல வேலை லெக் ட்விஸ்ட் ஆகி செம திருப்பமா முடிச்சிட்டீங்க. நச்சுன்ன்னு முடிக்கணும்னு மண்டையில நச்சுன்னு ஒரு விளக்குக் கம்பம் விழுந்ததுன்னு முடிக்காம விட்டுட்டீங்க..../

அட ஆமாம்ல=))

வெண்ணிற இரவுகள்....! said...

இப்ப தான் இளமை துள்ளுதோ.......வாழ்த்துக்கள் ஐயா

vasu balaji said...

வெண்ணிற இரவுகள்....! said...

/இப்ப தான் இளமை துள்ளுதோ.......வாழ்த்துக்கள் ஐயா/

:)) நன்றி

Prathap Kumar S. said...

ஆஹா.... விரல் நகத்தை கடிச்சு துப்பிட்டிருக்கம்போது கடைசில இப்படி பண்ணிபுட்டீங்களே சார்....

vasu balaji said...

நாஞ்சில் பிரதாப் said...

/ஆஹா.... விரல் நகத்தை கடிச்சு துப்பிட்டிருக்கம்போது கடைசில இப்படி பண்ணிபுட்டீங்களே சார்..../

ஆஹா. ஒரு புள்ளைய காப்பாத்தி விட்டதுக்கு இவ்வளவு எதிர்ப்பா. எல்லாம் கெட்ட பசங்களா இருக்காங்களே=))

தமிழ் அஞ்சல் said...

ம் ..ம் ..கலக்குங்க பாஸ் !

துபாய் ராஜா said...

//உன் மடி சாய்ந்து
விரல் கோர்த்து
நீ மௌனமாய் இருக்கையில்
ஓராயிரம் அர்த்தம் தெரிகிறது!
ஊடலுடன் மௌனமாயிருக்கையிலோ
ஒன்றுமே புரியாமல் தவிக்கிறேன்!

*
முந்தானை முடிச்சு!
உன்னுடன் நடந்த ஓர் நாள்
சரிந்த முந்தானையை
சட்டெனச் சரி செய்ய‌
என் முகமுரசிப் போனதில்
என் மூச்செடுத்து
உன் வாசம் நிரப்பிப் போனது
உன் முந்தானை..
சீராய்த் துடித்த என் இதயம்
அது முதல் நீயாய்த் துடித்தது!//

அருமை.அட்டகாசம்.தூள்.

துபாய் ராஜா said...

//வெளிச்சத்தில் பார்த்த போது துரத்தி வந்தவன் ஒரு குழியில் காலை வைத்துவிட்டான் போலும். கால் நொடித்து விழுந்ததில் பாதம் ட்விஸ்ட் ஆகி ஏறக்குறைய முதுகு பக்கம் திரும்பி இருந்தது. நீங்க போங்கம்மா, நாங்க இவனைப் பார்த்துக்கிறோம் என்ற வாச்மேனுக்கு நன்றி சொல்லி தளர்வாய் நடந்தாள் திவ்யா.//

எதிர்பாராத ட்விஸ்ட்டும்,திருப்பமும் கலக்கலோ கலக்கல்..... :))

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஆஹா .. கவித கவித .... காதல் கொட்டுது.. சூப்பர்.!!! (நைசா உங்க ஆசைய வெளிப்படுத்தி இருக்கீங்க ?! ?! !? :) )

vasu balaji said...

திருப்பூர் மணி Tirupur mani said...

/ம் ..ம் ..கலக்குங்க பாஸ் !/

நன்றிங்க.

vasu balaji said...

துபாய் ராஜா said...

/அருமை.அட்டகாசம்.தூள்./

/எதிர்பாராத ட்விஸ்ட்டும்,திருப்பமும் கலக்கலோ கலக்கல்..... :))/

நன்றி ராஜா

vasu balaji said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

/ஆஹா .. கவித கவித .... காதல் கொட்டுது.. சூப்பர்.!!! (நைசா உங்க ஆசைய வெளிப்படுத்தி இருக்கீங்க ?! ?! !? :) )/

நன்றி கவிஞரே.

ஜோதிஜி said...

உங்கள் இடுகையை அப்டேட் வாயிலாக பார்த்த போது இவர் கவிதை எப்படி இருக்கும்? என்று உள்ளே வந்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

1. உங்கள் வாழ்க்கை முறை, பதவி, வெளிநாட்டு குழந்தைகள் அத்தனையும் மீறி கிட்டத்தட்ட 30 வயது போல் இத்தனை துடிப்பாய் இருக்கீறீர்கள்.

2. முடிந்தவரைக்கும் அத்தனை பேரையும் பாரபட்சம் இல்லாமல் பாராட்டுகிறீர்கள், ஊக்கமளித்து முதல் ஆதரவுக்கரம் நீட்டுகிறீர்கள்.

சில விசயங்களில் இன்னும் 20 வருடங்கள் எப்படி நம்முடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று எனக்குள் வரும் போது முதல் முதலாக உங்கள் நினைவு தான் வருகிறது.

பின்னோக்கி விமர்சனமும் ரசித்தேன்.

இராகவன் நைஜீரியா. அடுத்த ஆச்சரியமூட்டும் ஐயா. நைஜிரியாவைப்பற்றி தொழில் தொடர்புகள் மூலம் உணர்ந்ததால் அவர் எப்படி அங்கு வாழ்ந்து கொண்டு இருப்பார் என்று ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது.

இவரும் வலைதளத்தில் அத்தனை இடங்களிலும் நன்றாக இருந்தால் யோசிக்காமல் கைதூக்கி பாராட்டுரை வழங்கிறார்.

பிடிக்கவில்லை என்றால் நாசூக்காக குறிப்பால் உணர்த்துகிறார்.

தமிழர்கள் தரமானவர்கள் உணர்ந்ததால் இந்த குறிப்பு.

உங்களுக்கெல்லாம் ஊட்டம் தேவையே இல்லை. அப்புறம் எதற்கு பின் ஊட்டம். வளர்க வளமுடன்.

கலகலப்ரியா said...

கவிதை நன்று...! மற்றது... நேத்துச் சொன்னதுதான்..!

vasu balaji said...

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

நன்றிங்க ஜோதிஜி

vasu balaji said...

கலகலப்ரியா said...

/கவிதை நன்று...! மற்றது... நேத்துச் சொன்னதுதான்..!/

நன்றி

நசரேயன் said...

நல்ல ட்விஸ்ட், கவிதைக்கு வாழ்த்துக்கள்

நிஜாம் கான் said...

அண்ணே! இதுக்கு பேர்தான் "டுவிஸ்ட்டு" வச்சியும், "திருப்பங்களுடனும்" கதை எழுதுறதா? கத மழைக்கு ஏற்ற குளுகுளு

vasu balaji said...

நசரேயன் said...

/நல்ல ட்விஸ்ட், கவிதைக்கு வாழ்த்துக்கள்/

நன்றிங்க நசரேயன்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! இதுக்கு பேர்தான் "டுவிஸ்ட்டு" வச்சியும், "திருப்பங்களுடனும்" கதை எழுதுறதா? கத மழைக்கு ஏற்ற குளுகுளு/

அவ்வ்வ். திக் திக் இல்லையா. குளுகுளுவாம்ல

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

ஆரூரன் விசுவநாதன் said...

kavithai varigal...........superb

vasu balaji said...

TamilNenjam said...

/குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்/

வாங்க சார். நன்றி. வாழ்த்துகள் உங்களுக்கும்.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/kavithai varigal...........superb/

நன்றி ஆரூரன்.

S.A. நவாஸுதீன் said...

பூ - நல்ல மணம்

தலை - கடைசி திருப்பத்தில் கழுத்து சுளுக்கிடுச்சு சார் (நல்ல ட்விஸ்ட்)

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/பூ - நல்ல மணம்

தலை - கடைசி திருப்பத்தில் கழுத்து சுளுக்கிடுச்சு சார் (நல்ல ட்விஸ்ட்)/

நன்றி நவாஸூதீன்

ரோஸ்விக் said...

வயசுப்புள்ள வானம்பாடியின் கவிதை சூப்பரப்பு....கலக்குறீக...

vasu balaji said...

ரோஸ்விக் said...

/வயசுப்புள்ள வானம்பாடியின் கவிதை சூப்பரப்பு....கலக்குறீக../

ம்கும்:)). நன்றி