’70களில் டிரான்ஸிஸ்டர் ரேடியோக்கள் சாமானிய மக்களுக்கு சாத்தியமான காலம். வி.ஜி.பி.சகோதரர்கள் தவணை முறையை அறிமுகப் படுத்திய காலம். ஞாயிற்றுக் கிழமை பாப்பா மலருக்கும், ஒலிச்சித்திரத்துக்கும், ஹமீதின் கட்டிவைக்கும் குரலுக்கு டிக்டிக் கடிகார சத்தத்தோடு இதயம் துடிக்க போர்ன்விடா க்விஸ்ஸூக்கு காத்திருந்த காலம், ஹார்லிக்ஸ் சுசித்ராவின் குடும்பத்துக்கும் காத்திருந்த காலம். காலை 7.15 செய்தி முடிந்ததும் 15 நிமிடம் ஒலிக்கும் ரஸிகரஞ்சனிக்கும் இரவு வர்த்தக ஒலிபரப்பில் தேன்கிண்ணத்துக்கும் ஏங்கிய காலம்.
எல்லா ஏக்கமும் யார் வீட்டிலாவது கேட்காதா என்று ஏங்கி மாடிப் படியில், அவர்கள் வீட்டு அண்மையில் என்று காத்திருந்து கேட்டுத் தீர்த்த காலம். முதலில் படிப்பு கெட்டுவிடும் என்ற சாக்கு, பிறகு வாங்க முடியாத நிலமை என்று ஏதோ காரணங்களால் ட்ரான்ஸிஸ்டர் என் வாழ்க்கையில் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது.

பிறகு தொலைக்காட்சி பரவலாகிவிட 82ல் டிவி வந்து புகுந்து கொண்டது. அதற்குப் பிறகு மார்கட்டில் கேஸட் ப்ளேயர், ஸ்டீரியோ ரெகார்டர் என்றெல்லாம் வர, மெதுவாக வாக்மென் தனியிடம் பிடித்தது. தூர்தர்ஷன் உபயத்தால், சினிமாப் பாடல், கர்நாடக இசை என்று ஆரம்பித்து ஹிந்துஸ்தானி இசை, எந்த மொழியானாலும் நாட்டுப் புறப் பாடல்கள், கவ்வாலி, சூஃபி என்று என் இசை வேட்கை திக்கு திசை தெரியாமல் பரந்து விரிந்தது.
ஸ்டீரியோ சக்திக்கு மீறியதாகவும், இருந்த ஒரே சோனி வாக்மேன் விலை அதிகமாகவும் பட்டதால் அவ்வப்போது அடக்கி அடக்கி முடியாமல், பர்மா பஜாரில் காசுக்கேத்த பணியாரம் மாதிரி நம்ம பட்ஜட்டுக்குள் கிடைப்பதாக அறிந்ததும் அடங்க மாட்டேன் என்று மனது படுத்திய பாட்டில் வாக்மேன் வாங்கியே தீருவது என்று முடிவுக்கு வந்தாயிற்று.
ஃபேன் வாங்கவே பி.எச்.டி. ரேஞ்சுக்கு தயாரானவன், பர்மா பஜாரின் பம்மாத்து வேலைகளுக்கு ஏமாறுவேனா என்ன? அடித்துப் பிடித்து ஏதோ ஒரு அரியர்ஸ் தொகை 400ரூ கைக்கு வர அதை வாக்மேனாக மாற்றும் வசந்த நாள் ஒன்றைக் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.

Enter the Dragon, 36th chamber of shaolin எல்லாம் பார்த்த சூட்டில் கராத்தே வகுப்புக்கு போய் மணிக்கட்டில் காப்பு காய்த்த, என்னை விட ஓங்குதாங்கான ஒரு நண்பனையும் சேர்த்துக் கொண்டு பாரீஸ் கார்னருக்கு பயணப் பட்டோம்.
மேல் சட்டையில் ரூ 250, டிக்கட் பாக்கட்டில் ஒரு 50, ஹிப் பாக்கட்டில் ஒரு 50 நண்பனிடம் மீதி 50 என்று பதுக்கி பர்மா பஜார் பரிச்சயமுள்ளவர்களிடம் விசாரித்து அட்டு, அசி என்ற இரண்டு முக்கியமான மந்திர உச்சாடனம் கற்று, வாங்குவதாக முடிவு செய்தாலே ஒழிய பொருளைக் கையில் வாங்கக் கூடாது என்ற கீதோபதேசமும் பெற்று களமிறங்கினோம். நண்பன் தொலைவாகவும் இல்லாமல், ஒன்றாகவும் இல்லாமல் வர வேண்டியது. இக்கட்டு நிலையில் காப்பாற்ற வேண்டும் என்ற முஸ்தீபோடு பீதியும் ஆசையுமாய் நுழைந்தோம்.
கும்பலில் ஒரு குரல், டெக்கு பாக்குறீங்களா சார் (ம்கும். வாக்மேனுக்கே நாக்கு தள்ளுது டெக்கு வேறயா?) என்றதை சட்டை செய்யாமல், ஒரு கண் கடை அலமாரிகளில், ஒரு கண் கடைக்காரரில் என்று நம்ம ரேஞ்சுக்கு நல்லவராக ஒரு கடையில் நிதானித்தோம். வாங்க தம்பி என்ன வேணும், வாக்மேன் பாக்கறீங்களா? (வானம்பாடி! எப்புடீடா நீ எங்க போனாலும் வசதியா கேக்குறாங்க?) என்றார்.
ம்ம். என்னா ப்ராண்ட் இருக்கு? (யப்பா! என்னா பந்தா? 250ரூபாய்க்கு ஏதாவது கிடைக்குமான்னு கேட்டா இவரு ராஜபரம்பரை அந்தஸ்து போய்டும். தூ!). உங்களுக்கு எது வேணும் தம்பி, சோனி,JVC(இப்புடி ஒன்னு இருக்கா), சான்யோ(சோனியோட டூப்ளிகேட்டோ),ப்ளிப்ஸு, நேஷனல்(பானாசோனிக் இல்லையோ) என்றார். (படுபாவி சிக்க வச்சிட்டாண்டா லுக்கில் மனசைப் படிச்ச மனுஷன்) உங்களுக்கு என்னா விலையில பாக்கறீங்க என்றார். விலை பத்தி இல்ல(அடி செருப்பால!) நல்லாருக்கணும்.
நம்ம கடையில பொருளு சுத்தமா இருக்கும் தம்பி, ரிகார்டர், ரேடியோவோட வேணுமா, ரிகார்டர் மட்டும் போதுமா, ப்ளேயர் மட்டும் போதுமா? (அய்யோ! இப்படியெல்லாம் வேற இருக்கும்னு தெரியாம வந்துட்டனே!) என்றவரிடம் சோனி எவ்வளவு? என்றேன்.

ரூ750 ஆகும், ரேடியோ, மைக்கி, ரிகார்டிங்கி, ஷ்டீரியோ, வைடு எல்லாம் இருக்கும். சூப்பர் பீசு, குடுத்துடலாமா? என்றார். டப்பு லேதுன்னு சொல்லிடுவமா? அவ்வளவெல்லாம் வேணாங்க டேப் கேக்கறா மாதிரி போதும், ஸ்டீரியோ வேணும் அவ்வளவுதான் என்று சொல்லித் தயங்க பானாசோனிக் ரூ 350ல் தருவதாக சொன்னார்.
ரைட்டு! காசு போதும். பிடிச்சிருந்தா வாங்கிடலாம். விலை கேட்டு பார்த்துட்டு போவியா என்று அறை விழாது என்று தைரியம் வர பேரம் தொடங்கியது. 250ரூன்னா காட்டுங்க என்றேன். நீங்க பொருள பாருங்க தம்பி (தோடா! கைல வாங்கிட்டா வேணாம் என் கிட்ட காசில்லைன்னா என்ன பண்ணுவன்னு தெரியாது எங்களுக்கு?)என்றவரை இல்லைங்க நீங்க சொல்லுங்க என்று பிடிவாதம் பிடித்து, பிடித்திருந்தால் 300ரூக்கு பைசா குறையாது என்று டீல் போட்டு என் கனவு வாக்மேன் கைக்கு வந்தது.
டீல்னு ஆனப்புறம் பழகிட்டம்ல. தைரியமா அஸி பீசுங்களா (சத்தியமா தினம் வியாபாரம் பண்றவன் கூட அவ்வளவு சரளமா அஸி சொல்லி இருக்கமாட்டான்) என்று கேட்டே விட்டேன். சொன்ன கையோடு பின்புறம் பார்க்க Made as Japan என்றிருந்தது.

அதற்குள் அவர் என்னமோ பானாசோனிக் டீலர் மாதிரி பக்கா அஸிங்க என்றதும் சிக்கிட்டியேடான்னு மனசு நொந்து போனது. ஏங்க Made in போடாம Made asனு இருக்கு. எப்டிங்க அசிங்கறிங்க என்றேன். தம்பி, கம்பேனி பீஸ்னா டாக்ஸ், டூட்டி எல்லாம் வரும்னு இப்புடி போடுவாங்க என்று விட்ட கதையை நம்பத் தயாரில்லை என்றாலும் அடுத்த கட்டமான டெஸ்டிங்கில் இறங்கினேன்.
இத்துப்போன பேட்டரியில், தேய்ந்து போன டேப்பில் ஐம் எ டிஸ்கோ டேன்ஸர் கோரமாக கேட்டது. என்னாங்க இப்புடி என்றால், புது பேட்டரி போடுப்பா இல்லன்னா அடாப்டர் வாங்கிக்கறியா 50ரூ என்று கொசுறு வியாபாரம் தொடங்கி, ஒரு வழியாக அடாப்டருடன் சேர்த்து 350ரூ கொடுத்து வாக்மேனுக்கு சொந்தமாகிக் கொண்டேன்..
நல்லாருக்குமாங்க என்று ஏங்கி ஏங்கி கேட்டு 10 மீட்டர் வந்தும் ஏதோ ஒரு உறுத்தல் எதையோ மறந்தாற்போல. சட்டென்று கவனம் வர, திரும்ப கடைக்கு போய் ஏங்க கண்டிப்பா அட்டு பீஸ் இல்ல தானுங்களே(அப்பாடா அட்டு கூட நமக்கு தெரியும்னு காண்பிச்சிட்டோம்ல) எனக்கேட்க, அடிக்காத குறையாக யோவ் சொல்லிட்டே இருக்கேன் பக்கா பீசுன்னு சும்மா கேட்டுகிட்டு நடைய கட்டு என்றதும் சிட்டாக விட்டாச்சு ஜூட்டு.

வரும் வழியில் நடைபாதை கேசட் கடையில் கண் பட்டதும் பாய்ந்தோடி மீதமிருக்கும் 50ரூபாயில் எம்.எஸ்ஸின் அன்னாமாச்சார்யா கீர்த்தனைகள் (டூப்ளிகேட் 12ரூ, மஸ்த்கலந்தரில் மனதைத் திருடிய நஸ்ரத் ஃபடே அலி ஃகான் ஒரிஜினல் ரூ 35) வாங்கிக் கொண்டு வந்த போது உலகம் என் கையில்.
55 comments:
அப்பாடி...ஒருவழியா...முதல்ல வந்துட்டேன்...படிச்சுட்டு வர்ரேன்....
எனக்கும் இதுபோல சம்பவம் நடந்திருக்கு தலைவா!
நானும் ஒரு வாக்மேனுக்கு ஆசப்பட்டேன். ஆனா இதுவரையில் வாங்கமுடியல. ஆனா...செல்லுல இருக்கு.
இப்ப அந்த வாக்மேன் பத்திரமா உயிரோட இருக்குங்களா?.....
நகைச்சுவைவோட பொளந்துகட்டியிருக்கீங்க....
அண்ணே தொடரா...
கதை பாதியிலேயே தொங்குது...
வாக்மேன் எப்படி சார் லாங் வாக் போனிச்சா, இல்லை ஷார்ட் கட்டா?
// ஸ்டீரியோ சக்திக்கு மீறியதாகவும், //
சக்திக்கு மீறியதாக இருந்தால், சிவனுக்கு சரியாக வருமா?
நஸ்ரத் ஃபடே அலி ஃகான்
இவரது அறிமுகத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
என்னமா ஒரு கலைஞன் உடல்கூட சங்கீதம் படிக்குது...யப்பா...
வாக்மெனும் காசெட்டும் வாங்குனீங்க சரி, அது வேல செஞ்சதா இல்லையான்னு சொல்லவே இல்ல?
ஆஹா, அய்யா என்னோட நினைவலைகளை கிண்டி விட்டுட்டீங்க! நான் இங்கிலீஷ் நாலேட்ஜ் இம்ப்ரூவ் பண்றேன்னு தாம்சன் வாக் மென் வாங்கினேன்! நல்லாருங்கய்யா உங்கள் அனுபவம்...
பிரபாகர்.
//மேல் சட்டையில் ரூ 250, டிக்கட் பாக்கட்டில் ஒரு 50, ஹிப் பாக்கட்டில் ஒரு 50 நண்பனிடம் மீதி 50 என்று பதுக்கி//
என்னா... தில்லாலங்கடி இது
//நம்ம ரேஞ்சுக்கு நல்லவராக //
அதென்ன ரேஞ்சு.... நம்மள மாதிரி முடி இல்லையோ...
இஃகிஃகி
present sir
//அடுத்த கட்டமான டெஸ்டிங்கில் இறங்கினேன்//
அட..... செம்ம்ம்ம்ம்ம டெஸ்ட் போங்க
//வாங்கிக் கொண்டு வந்த போது உலகம் என் கையில்.
//
அட... வாக்மேன் வாங்கலையா.... உலக உருண்டைதான் வாங்கிட்டு வந்தீங்களா!!!!???
க.பாலாசி said...
/அப்பாடி...ஒருவழியா...முதல்ல வந்துட்டேன்...படிச்சுட்டு வர்ரேன்..../
வாங்க பாலாஜி.
/இப்ப அந்த வாக்மேன் பத்திரமா உயிரோட இருக்குங்களா?.....
நகைச்சுவைவோட பொளந்துகட்டியிருக்கீங்க..../
நிஜம்மாவே நல்லா உழைச்சது அது. என் சகலை மகளுக்கு கொடுத்துவிட்டேன்.
கலையரசன் said...
/எனக்கும் இதுபோல சம்பவம் நடந்திருக்கு தலைவா!/
வாங்க கலையரசன். :)
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே தொடரா../
அண்ணே லொள்ளா?
/கதை பாதியிலேயே தொங்குது.../
இல்லையே. உலகமே என் கையில்னு முடிஞ்சதே.
/சக்திக்கு மீறியதாக இருந்தால், சிவனுக்கு சரியாக வருமா?/
இசைக்கு முன்னாடி எதுவும் பெரிசில்லை.
S.A. நவாஸுதீன் said...
/வாக்மேன் எப்படி சார் லாங் வாக் போனிச்சா, இல்லை ஷார்ட் கட்டா?/
நிஜம்மா ரொம்ப நல்ல பீஸ்.
மலரும் நினைவுகள் - அசை போட்டு ஆனந்தித்து எழுதி இருக்கீங்க பாலா
எத எழுதினாலும் சூப்ப்ரா எழுதறீங்க - எப்படி பாலா
நல்வாழ்த்துகள் பாலா
பிரியமுடன்...வசந்த் said...
/நஸ்ரத் ஃபடே அலி ஃகான்
இவரது அறிமுகத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
என்னமா ஒரு கலைஞன் உடல்கூட சங்கீதம் படிக்குது...யப்பா.../
அங்கயே அல்லா ஹூ வித் ராகானு இருக்கும் கேட்டு பாரு. நன்றி வசந்த்
முகிலன் said...
/வாக்மெனும் காசெட்டும் வாங்குனீங்க சரி, அது வேல செஞ்சதா இல்லையான்னு சொல்லவே இல்ல?/
வாங்க முகிலன். அருமையா வேலை செய்தது. இல்லைன்னா அத இல்லையா புலம்பியிருப்பேன்.
அந்த வாக்மேன் பாடுச்சா? இல்லையா?
நானும் வாக்மேன் வாங்க நினைத்தேன்,
அதுக்குள்ள மொபைல் வந்திருச்சு......
பிரபாகர் said...
/ஆஹா, அய்யா என்னோட நினைவலைகளை கிண்டி விட்டுட்டீங்க! நான் இங்கிலீஷ் நாலேட்ஜ் இம்ப்ரூவ் பண்றேன்னு தாம்சன் வாக் மென் வாங்கினேன்! நல்லாருங்கய்யா உங்கள் அனுபவம்.../
அய்யோ அப்பொ என்ன ஏமாத்திட்டானா. எனக்கு நேஷனல் லேங்குவேஜ்ல நாலெட்ஜே வரலையே=))
ஈரோடு கதிர் said...
/
என்னா... தில்லாலங்கடி இது/
கடைக்குள்ள இழுத்து வெச்சி மொத்தம் உருவிடுவாங்க மாட்னா. என்னா அட்டூழியம். அதான்.
/அதென்ன ரேஞ்சு.... நம்மள மாதிரி முடி இல்லையோ...
இஃகிஃகி/
ஹி ஹி. கொஞ்சம் செமி மாதிரி=))
/அட..... செம்ம்ம்ம்ம்ம டெஸ்ட் போங்க/
ம்கும். டேப் சிக்கினா பழைய டேப் அதான்னு சொல்லி விட்ருவாய்ங்க.
/அட... வாக்மேன் வாங்கலையா.... உலக உருண்டைதான் வாங்கிட்டு வந்தீங்களா!!!!???/
அது ரொம்பநாள் ஆசை. அப்புறம் நம்ம தலைய பார்த்து 2 வேணாமேன்னு விட்டுட்டேன்.
T.V.Radhakrishnan said...
/present sir/
Noted sir=))
vote poattachchu..... appppppppuram vanthu padichchukkiren... (ada pechchukku sollurathilleenga.. varuvom..)
cheena (சீனா) said...
/மலரும் நினைவுகள் - அசை போட்டு ஆனந்தித்து எழுதி இருக்கீங்க பாலா
எத எழுதினாலும் சூப்ப்ரா எழுதறீங்க - எப்படி பாலா
நல்வாழ்த்துகள் பாலா/
இந்த ஊக்கம்தான் சார். ரொம்ப நன்றி
கலகலப்ரியா said...
/vote poattachchu..... appppppppuram vanthu padichchukkiren... (ada pechchukku sollurathilleenga.. varuvom..)/
தொடா. யாரு விடுறா. வந்து படிம்மா படிம்மானு மீ த 300 வரைக்கும் போடுவேன்.=))
ஃபத்தே அலிகாந்தான் என்னோட காம்படிட்டர் :)
(டேய்!அப்துல்லா இதெல்லாம் ஓவரு)
Sangkavi said...
/அந்த வாக்மேன் பாடுச்சா? இல்லையா?
நானும் வாக்மேன் வாங்க நினைத்தேன்,
அதுக்குள்ள மொபைல் வந்திருச்சு....../
நல்லா இருந்திச்சிங்க ரொம்ப வருஷம் என்னோட தோழன் அது. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
எம்.எம்.அப்துல்லா said...
/ ஃபத்தே அலிகாந்தான் என்னோட காம்படிட்டர் :)
(டேய்!அப்துல்லா இதெல்லாம் ஓவரு)/
அப்டியா. தயாரா இருங்க அலி மௌலா அலி மௌலா அலி தம் தம், அல்லாஹூ ரெண்டும் பாடியாகணும் நீங்க.
//அலி மௌலா அலி மௌலா அலி தம் தம், அல்லாஹூ ரெண்டும் பாடியாகணும் நீங்க //
அல்லாஹூ கூட கொஞ்சம் அப்பிடி இப்பிடி பாடிருவேன். அலிமெளலா கொஞ்சம் டரியல் நமக்கு.
**********************
////அப்டியா. தயாரா இருங்க //
அய்யய்யோ!!!!இனிமே லைன்ன தாண்டி நானும் வர மாட்டேன்.நீங்களும் வரப்படாது. பேச்சு பேச்சா இருக்கணும் ஒ.கே :)))
படிச்சிட்டேன்...! ஸ்ஸப்பா...! அசின் தெரியும்.... அசின்னா என்ன...? அட் தெரியும்... அட்டுன்னா என்ன...? இன்னும் நிறைய டவுட்... ஆனா நாம டவுட் கிளியர் பண்ணாம படிச்சு பாஸ் ஆவுற ஆளுங்க...! ஸோ.. லாஸ்ட்டா ஒரு கேள்வி... உலகம் இப்பவும் உங்க கைலதான் இருக்குதுங்களா...?
//விலை பத்தி இல்ல(அடி செருப்பால!) நல்லாருக்கணும். //
பாலா,
இதுல வர்ர இடையிடைல தனக்குதானே பேசிக்குற மாதிரியான வசனங்கள் அருமை மக்கா.
எம்.எம்.அப்துல்லா said...
/அல்லாஹூ கூட கொஞ்சம் அப்பிடி இப்பிடி பாடிருவேன். அலிமெளலா கொஞ்சம் டரியல் நமக்கு./
ஆஹா. அல்லா ஹூ பாடினா அலிமௌலா பாட முடியும். விடுறதில்ல பார்க்கும்போது.
/அய்யய்யோ!!!!இனிமே லைன்ன தாண்டி நானும் வர மாட்டேன்.நீங்களும் வரப்படாது. பேச்சு பேச்சா இருக்கணும் ஒ.கே :)))/
வேணாம். பேச்சு என்னோடதா இருக்கட்டும் பாட்டு உங்கோளோடதா இருக்கட்டும்.
கலகலப்ரியா said...
/படிச்சிட்டேன்...! ஸ்ஸப்பா...! அசின் தெரியும்.... அசின்னா என்ன...? /
ஓஹோ. அசின்னா ஒரிஜினல், குவாலிடி பீசு.
/அட் தெரியும்... அட்டுன்னா என்ன...? /
அடாசு
/இன்னும் நிறைய டவுட்... ஆனா நாம டவுட் கிளியர் பண்ணாம படிச்சு பாஸ் ஆவுற ஆளுங்க...! /
இதுக்கு பேரு லொள்ளு எங்க ஊர்ல.
/ஸோ.. லாஸ்ட்டா ஒரு கேள்வி... உலகம் இப்பவும் உங்க கைலதான் இருக்குதுங்களா...?/
இல்லையே. சகலை பொண்ணு கவிதாக்கு ப்ரசண்ட் பண்ணேன். என்ன பண்ணாளோ தெரியல.
சத்ரியன் said...
/பாலா,
இதுல வர்ர இடையிடைல தனக்குதானே பேசிக்குற மாதிரியான வசனங்கள் அருமை மக்கா./
ம்கும். குசும்ப பாரு. அதுல இதான் கிடைச்சதா=))
// அடித்துப் பிடித்து ஏதோ ஒரு அரியர்ஸ் தொகை 400ரூ கைக்கு வர அதை வாக்மேனாக மாற்றும் வசந்த நாள் ஒன்றைக் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.//
அண்ண்ணே! நான் கலலூரி படிக்கும் போது எக்ஸாம் பீஸ் கட்டன்னு 500 ரூவா ஆட்டயப்போட்டுக்கிட்டு போயி பர்மா பஜாரிலே நீங்க வாங்குன அதே வாக்மேன் வாங்குனேன். ஆனா ரேடியோவிற்கு இருக்கும் மவுசு வாக்மேனுக்கு இல்லைண்ணே! காரணம் இதுக்கு கேசட் வேற வாங்கிப்போடனுமே!
இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ண்ணே! நான் கலலூரி படிக்கும் போது எக்ஸாம் பீஸ் கட்டன்னு 500 ரூவா ஆட்டயப்போட்டுக்கிட்டு போயி பர்மா பஜாரிலே நீங்க வாங்குன அதே வாக்மேன் வாங்குனேன். ஆனா ரேடியோவிற்கு இருக்கும் மவுசு வாக்மேனுக்கு இல்லைண்ணே! காரணம் இதுக்கு கேசட் வேற வாங்கிப்போடனுமே!/
இது வேறயா. லொல். நான் 400க்கு இத வாங்கிட்டு அப்புடி இப்புடி 250 கேசட்டுக்கு மேல சேர்த்து வெச்சிருக்கேன்.
உண்மையிலேயே பர்மா பசார் வியாபாரம் எல்லாம் எப்படி இருந்தது என்று இப்போ உள்ளவர்களுக்கு தெரியாது...அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.. நாங்கள் ஷூ, பேக் போன்றவை எல்லாம் ஒரு காலத்தில் அங்கேதான் வாங்குவோம்.. கையில் எடுக்காமலேயே பொருளைப் பார்த்துக்கொண்டு பேரம் பேசுதல் எல்லாம் இப்பொழுது நினைத்தால் சுவாரசியமாக இருக்கிறது.
அப்புறம், அந்த பீசு எவ்வளவு நாள் வேலை செஞ்சதுன்னு சொல்லவே இல்லையே?
நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருக்கிறிங்க
ஈ ரா said...
/உண்மையிலேயே பர்மா பசார் வியாபாரம் எல்லாம் எப்படி இருந்தது என்று இப்போ உள்ளவர்களுக்கு தெரியாது...அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.. நாங்கள் ஷூ, பேக் போன்றவை எல்லாம் ஒரு காலத்தில் அங்கேதான் வாங்குவோம்.. கையில் எடுக்காமலேயே பொருளைப் பார்த்துக்கொண்டு பேரம் பேசுதல் எல்லாம் இப்பொழுது நினைத்தால் சுவாரசியமாக இருக்கிறது.
அப்புறம், அந்த பீசு எவ்வளவு நாள் வேலை செஞ்சதுன்னு சொல்லவே இல்லையே?/
நன்றி ஈ.ரா. நல்லா வேலை செய்தது. என்னிடம் மட்டுமே 10 வருடங்களுக்கு மேல்.
@@நன்றி தியா
ரொம்ப உஷார் பேர்வழிதான் நீங்க....நல்ல நகைச்சுவை...
மிகவும் ரசித்தேன்.......
அன்புடன்
ஆரூரன்
த்ரில்லர் படம் பார்த்த எஃபக்ட். அருமை. வாக்மேன்ல கொஞ்ச நாள் கழிச்சு மோட்டர் ஸ்லோவாகி, பாட்டு எல்லாம் இழுத்து இழுத்து பாடி..அது ஒரு காலம்
புலவன் புலிகேசி said...
/ ரொம்ப உஷார் பேர்வழிதான் நீங்க....நல்ல நகைச்சுவை.../
நன்றி புலிகேசி
/ஆரூரன் விசுவநாதன் said...
மிகவும் ரசித்தேன்.......
அன்புடன்
ஆரூரன்/
நன்றிங்க ஆரூரன்
பின்னோக்கி said...
/த்ரில்லர் படம் பார்த்த எஃபக்ட். அருமை. வாக்மேன்ல கொஞ்ச நாள் கழிச்சு மோட்டர் ஸ்லோவாகி, பாட்டு எல்லாம் இழுத்து இழுத்து பாடி..அது ஒரு காலம்/
ஹி ஹி. மோடார் பெல்ட் வீக் ஆயிடும். அத 8 மாதிரி முறுக்கி விட்டு ஒரு வருஷம் ஓட்டினமே=))
மிக சுவாரஸ்யமாய் ரசித்துப் படிக்க வைத்த நடை.
நல்ல பதிவு சார்.
//இத்துப்போன பேட்டரியில், தேய்ந்து போன டேப்பில் ஐம் எ டிஸ்கோ டேன்ஸர் கோரமாக கேட்டது.//
ருசி.
நர்சிம் said...
/மிக சுவாரஸ்யமாய் ரசித்துப் படிக்க வைத்த நடை.
நல்ல பதிவு சார்./
/ருசி./
வாங்க நர்சிம். நன்றி
சம்பவங்களும் கோர்வைகளும் சூப்பர்..நகைசுவைக்கு பஞ்சமே இல்லை...
கலங்குறீங்க வாத்தியாரான வானம்பாடிகளே..
அன்புடன் மலிக்கா said...
/சம்பவங்களும் கோர்வைகளும் சூப்பர்..நகைசுவைக்கு பஞ்சமே இல்லை...
கலங்குறீங்க வாத்தியாரான வானம்பாடிகளே../
நன்றி மலிக்கா.
Post a Comment