Showing posts with label எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜ. Show all posts
Showing posts with label எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜ. Show all posts

Thursday, June 24, 2010

சாதல்



போதையை முன்னிறுத்தி...

கூலி வாங்கினான்
தண்ணியடித்தான்

அடமானம் வைத்தான்
ஆஸ்தியை விற்றான்

கம்பெனி கொடுத்தவனிடமும்
கடன் வாங்கிக் குடித்தான்

பூசாரிக்கு எடுபிடியாகி
சரக்கு பிரித்து அடித்தான்

ஏறவில்லை என சபித்தான்
திருடனென்று தூற்றினான்

குவார்ட்டர் குவார்டராய் ஊற்றிக் கொண்டான்
குப்புறப் படுத்து உருண்டான்

வேண்டுதலுக்கு சேர்த்த
உண்டியல் உடைத்தும் குடித்தான்

கடைசியாக...

கூரை வீட்டின் முன்
கட்டிய பந்தலின் கீழ்
காலி போத்தல்கள் நடுவே
கட்டையாகக் கிடந்தான்.
***
எதிரெதிர் இங்கே..