வாசு வாய்விட்டு சிரித்து பார்த்தது ரொம்பக் குறைவு. ஆனால் கண்ணில் குறும்பு கொப்பளிக்க வாயோரம் லேசாக சுழித்து வாசு ஏதாவது சொன்னால் சுற்றியிருப்பவர்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோவின் இரட்டைக் குழந்தைகள் வைத்திருக்குமே ட்ரம்பட். அதே மாதிரி ‘V' ஸ்டைலாகப் போட்டு எழுதும் ‘V.V.Moorthy' என்ற கையெழுத்தே வெகு அழகாய் ஒரு ஓவியம் போலிருக்கும்.
ஐந்தடி ஆறங்குல உயரம் இருக்கலாம், மாநிறத்துக்கும் கொஞ்சம் குறைவு, தீர்க்கமான நாசி, துளைக்கும் கண்கள், தூக்கி வாரிய தலைமுடி, கணீரென்ற குரலில் அப்படி ஒரு மென்மையான பேச்சு எப்படி சாத்தியம் என்றே புரிந்ததில்லை இன்றுவரை.
எட்டு முழ குண்டஞ்சி வேஷ்டி, வெள்ளை ஸ்லாக் சட்டை, ஜிப்பா மாதிரி நான்கு லாக்கர்ட் பட்டன் வைத்தது (வெள்ளியில செயின் கோர்த்து ஒரு செட் வாங்கணும்). காலரில் அழுக்குப் படாமல் ஒரு வெள்ளைக் கைக்குட்டை, சட்டைப் பையில் ஒரு கைக்குட்டை, புத்தக வடிவில் ஒரு வெள்ளி பொடி டப்பி, உள் பாக்கட்டில் கொஞ்சம் காசு. மேல் பாக்கட்டில் ராணுவத்தான் ரிப்பன் மாதிரி, சிவப்பு, கருப்பு, நீல ஃபவுண்டன் பேனா. இடது கையில் கால் தடுக்காமல் வேட்டி நுனியைப் பிடித்தபடி, லாடம் அடித்த கான்பூர் தோல் செருப்பு அல்லது ஏரோப்ளேன் டயர் செருப்பு அணிந்து அலுவலகம் கிளம்பினால் அப்படி ஒரு கம்பீரம். அக்கம் பக்கம் பராக்கு பாராமலே சுற்றிலும் உள்வாங்கும் நேர்கொண்ட பார்வை.
எது செய்தாலும் நேர்த்தி, நிதானம், ஒரு முழுமை. அதுதான் வாசு. சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, தமிழ், கொறச்சு மலையாளமும் கூடி ஆயாளு சம்சாரிக்கும். காலையில் குளித்துவிட்டு ஸ்லோக புத்தகம் படிக்கும்போதும், விடுமுறை நாட்களில் பைபிள் அல்லது குர் ஆன் படிக்கும்போதும் ஒரு சின்ன மாறுபாடு கண்டதில்லை. எல்லாமும் ஒரே அலமாரியில் துளி தூசில்லாமல் இருக்கும்.

கோவிலுக்கென்று போனதோ, அல்லது வீட்டிலோ கூட ஸ்வாமிக்கு பூஜையென்று கண்டதில்லை. பண்டிகை நாட்கள் தவிர. காலை மாலை சந்தியாவந்தனம் மட்டும் தவம் போல் செய்வார்.
மூக்குப் பொடி போட்டு உதறிப் பார்த்ததில்லை. கைக்குட்டையில் துடைத்து, மூக்கின் கீழ் வைத்து இடம் வலமாக இரண்டு தீட்டு தீட்டுவார். சட்டையிலோ, வேட்டியிலோ சிந்தினதேயில்லை. மூக்குப் பொடி கைக்குட்டையைத் தானேதான் துவைப்பார். உடுத்தும் துணியில் துளி அழுக்கில்லை, தினம் ஒரு வேட்டி சட்டை எதுக்கு சலவைக்குக் கேடு என்ற தங்கமணியின் தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதலும் வந்ததேயில்லை.
முனை மழுங்கிய ஹாக்ஸா ப்ளேட் காயலான் கடையில் வாங்கி இரண்டாக உடைத்து, தரையில் மணல் தூவித் தீட்டி, சந்தனக்கல்லின் பின்புறம் விளக்கெண்ணெய் விட்டு இன்னும் கூர் பிடித்து செய்யும் கத்திக்கு முன் சாணை பிடிப்பவன் ஒன்றுமில்லாமல் போவான்.
மைதா மாவு வாங்கி மயில்துத்தம் தூவி பசை செய்து, புத்தக பைண்டிங் செய்தால் புத்தகம் உளுத்துப் போனாலும் அட்டையை எதுவும் துளைத்துப் பார்த்ததில்லை. தன் பிள்ளைகளுக்கேயன்றி, மாமா எனக்கு மாமா என்று வரும் குழந்தைகளின் புத்தகங்களுக்கும் பைண்டிங் செய்து கொடுத்து தங்கமணியின் கத்தலை புறந்தள்ளி அவர்களுக்குக் கொடுக்கும் போது ‘அய்! நல்லாருக்கு மாமாவில்’ விகசிக்கும் போது அவ்வளவு அழகாயிருப்பார் வாசு.
ஆஃபீஸில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை தரப்படும் உலர்ந்த மரப்பிசினி, பச்சை, நீலம், சிவப்பு, கருநீலம், கருப்பு பேனா மை மாத்திரைகளை மற்றவர் குப்பையில் போடும்போது இவர் வீட்டுக்கு கொண்டு வருவார். தேங்காய் மூடி தேய்த்து தேய்த்து வழ வழவென்று வைத்திருப்பார். விளிம்பு கூட தேய்த்து சீராக இருக்கும். அதில் பிசினை வென்னீரில் ஊறவைத்து, இங்க் மாத்திரையை பொடித்துக் கலந்து வெயிலில் காயவைத்தால் தோலைப் புண்ணாக்காத சாந்து ரெடி. தேவையான போது ஒரு விரலை நீரில் நனைத்துக் குழைத்து சாந்தாக்கி இட்டுக் கொள்ளமுடியும்.
மாங்கு மாங்கென்று சந்தனம் அரைத்து, வெண்கல உருளியின் அடிப்புறம் தடவிக் காயவைத்து, மூன்று செங்கல் மேல் வைத்து அடியில் ஒரு விளக்கில் புத்தம்புது விளக்கெண்ணெய் விட்டு பஞ்சுத்திரி விளக்கேற்றி அதன் சூட்டிலும் கரியிலும் சந்தனம் கருகியிருக்க, கையை சோப்பு போட்டு கழுவி, கரித்த சந்தனப் பொடியை சுத்தமான காகிதத்தில் உதிர்த்து, சுத்தமான பித்தளைக் கிண்ணத்தில் போட்டு விளக்கெண்ணெயில் குழைத்துச் செய்யும் கண்மையில் கண்கள் குளிர்ந்து போகும்.
பேனாப் பிரியர். கிட்டத்தட்ட நூறு பேனாக்களை இரண்டு சாக்லேட் டப்பாவில் அடுக்கியிருப்பார். ஞாயிறு காலை சாப்பாட்டிற்குப் பின்பு, வென்னீர் வைத்து போன வாரம் கொண்டு போன பேனாக்களைச் சுத்தம் செய்து அடுத்த வாரத்துக்கான பேனாக்களைத் தெரிவு செய்து மை நிரப்பி, சவரம் செய்த ப்ளேடில் நிப்புகளை ஃபைன் ட்யூன் செய்து, பிடித்தமாதிரி எழுதவிட்டு எடுத்து வைத்த பின் சின்னதாய் ஒரு தூக்கம் போடுவார். மாமா பட்டையடிக்குது மாமாக்கும், மாமா கிறுக்குது மாமாக்கும் நிப்பின் பிளப்பில் ப்ளேடை விட்டு என்ன மாயம் செய்வாரோ தெரியாது, சொன்னபடி கேட்கும் பேனாக்கள். எத்தனை நாள் கழித்து எழுதினாலும், வெயில் காலத்திலும் கூட உதறி எழுத அவசியமே இராது.
உருட்டு ரூலரில் எதிர்ப்பக்கம் கோடு போடுதல் மிகக்கடினம். நோட்டுப் புத்தகங்களிலாவது கோடு கோணலாயிருக்கும். இவரிடம் ஆனதேயில்லை. அதிலும் மயிரிழை உருட்டி டபுள்லைன் போடும் அழகே அழகு. அலுவலகத்தில் மேகசின் க்ளப் நடத்தினாலும், புதுப்புத்தகம் தான் படித்த பிறகு என்ற வழக்கம் இருந்ததேயில்லை. வீட்டில் யாரும் தொடவும் கூடாது. கலைமகள், மஞ்சரி மட்டும் தனக்கு ஒரு ஏடு தனியாக வாங்கி முதலில் படிப்பார். தினத்தந்தி யாராவது பிரித்துப் படித்துவிட்டால், இன்னொரு பேப்பர் வாங்கித்தான் முதலில் படிப்பார்.
கந்தசாமி கோவில் அருகில் இருக்கும் நாட்டு மருந்துக் கடைகளில் தேடித் தேடி மருந்து சாமான் வாங்கி வீட்டில் வந்து தானே காய வைத்து, சுத்தம் செய்து உரலில் இடித்து வஸ்த்ரகாயம் (மெல்லிய சல்லாத்துணியில் சலிப்பது) செய்து, நெய்விட்டோ அல்லது வெல்லம் சேர்த்து இடித்தோ செய்யும் ஸ்யவனப்ராசம் சிறு பிள்ளைகளிடையே வெகு பிரசித்தம்.
புத்தகம் முனை மடிப்பது, புத்தகத்தில் கோடிழுப்பது, எச்சில் தொட்டுப் புரட்டுவது, பத்திரிகைகளை ஆளுக்கொரு பக்கம் பிரித்துப் படிப்பது, சாப்பிடும்போது இறைப்பது ஆகியவை பொறுக்கமாட்டார். விழும் ஒற்றை அறையில் நாள் முழுக்க எரியும்.
கர்நாடக சங்கீதத்தில் கொள்ளைப் பிரியம். பிள்ளைகள் படிப்புக் கெட்டுவிடுமென்று ரேடியோ வாங்காமல் இருந்தது மட்டும் ஒரு குறை. மூக்குப் பொடியோ, விதியோ நுரையீரலில் நீர் சேர்ந்து ஃப்ளூரசியாகி ஐந்தடி நடந்தால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கிப் பின் நடந்தபோதும் அந்த கம்பீரம் மட்டும் குறைந்ததே இல்லை.
ஒரு வெள்ளிக் கிழமை இரவில் மூச்சுத் திணறி, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன பிறகு, பயப்படாம போப்பா. தம்பி தனியா இருப்பான் பார்த்துக்கோ என்றவர், அதிக ரத்த அழுத்ததால் நாளம் வெடித்து இறந்த பிறகும், அரை மணியில் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடியே கம்பீரமாகத்தான் வந்திறங்கினார்.
வாசு! என் பாசமான அப்பா!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~