எனக்கு ரொம்ப வருசமா ஒரு வருத்தம். அரசு ஊழியனுக்கும் கரண்டு கம்பத்துக்கும் வித்தியாசமே இல்லாம பாக்குறாங்க. நம்ம சுஜாதா கூட மட்டமாத்தான் பேசிட்டாருன்னு அவரு மேல கோவிச்சிகிட்டு கொஞ்சநாள் அவரை ஓரம் கூட கட்டினதுண்டு. இப்புடியே உள்ளுக்குள்ளயே வெச்சி வெதும்பி வெதும்பி என்னா பண்ண? புரிய வைக்க வேணாமா?
அதும் ஆஃபீஸ் நேரத்துல உக்காந்து வேல பார்த்துகிட்டே மண்டைல கொஞ்ச ஓரம் டெடெகேடட் மெமரி யோசிக்க, கேப் கிடைக்கிற நேரத்துல ரெண்டு ரெண்டு வரியா தட்டி இடுகை போடுற நாம சொல்லாட்டி யாரு சொல்லுறதுன்னு ஒரு பொறுப்புணர்ச்சி இருக்கிறவன் சும்மா இருக்க முடியுமா?
அரசு ஊழியன்னா என்னமோ மத்த பேரு அலுவலகத்துக்கு சோத்து பையக் கொண்டு போறதாகவும் அரசு ஊழியர் சூட்கேஸ் கொண்டு போறதாகவும் தப்பான ஒரு அபிப்பிராயம் கொள்ள பேத்துக்கு இருக்குறது உண்மை. அதுக்கு அடிப்படைக் காரணம் அரசு ஊழியரோட அவங்களுக்கிருக்கிற தொடர்பு உண்டாக்குற மாயை.

ஒரு சர்டிபிகேட் வாங்கப் போனா அங்க இருக்கிற அரசு ஊழியர் காசு குடுத்தாத்தான் பண்றாரு. அதனால கிம்பளம் மிதமிஞ்சிப் போகுதுங்கற தப்பான அபிப்பிராயம் பரவிப்போச்சு.
அடுத்த முறை அரசு அலுவலகத்துல ஏதாவது வேலைன்னு போக நேர்ந்தா ஆபீசு உள்ள கொஞ்சம் பாருங்க. ஒரே ஒரு நாள் அந்த குப்பைக்கும், ஒட்டடைக்கும், மழையில நனைஞ்சி வெயில்ல காஞ்சி மொச நாத்தம் அடிக்கிற வாசனைக்குள்ள உக்காருவீங்களா?
தண்ணி குடிக்கலாம்னு போய் அங்க இருக்கிற கூலர் (அது கூட இருக்காது சில இடத்துல) அதப்பாருங்க. குடிச்சி உசிரோட இருக்க நம்பிக்கையிருக்கா? பன்னிக்காய்ச்சலோ, டெங்கோ, இன்னும் பேர் தெரியாத வியாதியோ அந்தத் தண்ணிய புடிச்சி குடிக்கிறானே அவன் மனுசனா, தேவனா?
மும்முரமா எழுதிட்டிருக்கிறவன் டேபிள்ள மூஸ் மூஸ் எச்சூஸ்மி. அந்தப்பக்கம் போய்க்கிறேன். சாரின்னு மொசக்குட்டி சைஸ்ல ஒரு பெருச்சாளி ஓடும் ஸார். ஹலோ! எங்க ரெண்டு நாளா காணோம்னு விசாரிக்கிற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸாயிருப்போம் சார். அதே டேபிள்ளதான், எலிக்காய்ச்சல் வந்துடுமோன்னு பயப்படாம, மதியம் கொண்டு போற தயிர்சாதம் தின்னுறது.
400 பேர் படம் பார்க்கிற தியேட்டர்ல இத்தனை யூரினல் இருக்கணும், இத்தனை டாய்லட் இருக்கணும். இந்த இடைவெளியில சுத்தம் பண்ணனும்னு ரூல் இருக்கு. அதப் பார்க்க ஆளிருக்கு. ஆனா 1000 பேர் இருக்கிற அரசு அலுவலகத்தில டாய்லட்ட போய் பாருங்க. 5 யூரினல் இருக்கும். 4 கக்கூசு இருக்கும். குழாய் இருக்காது. காலையில ஒரு வாட்டி மதியம் ஒரு வாட்டி கழுவி விடுவான். இவ்வளவு ஏன்? உலகத்துல வேற எங்கியாவது கக்குசுக்கு பூட்டு போட்டு பார்த்திருக்கீங்களா?
அரசு அலுவலகத்தில பார்க்கலாம். அதிகாரி மட்டும் பன்னீர் போவாரு. மத்தவங்க சிறுநீர் போவாங்கன்னு பூட்டி வெச்சிருக்கும் சார். பாதிக்கு மேல பெண்கள் வேலை செய்யிற இடத்திலையும் இதே நிலமைதான். வீடு வாங்குறீங்களே, அல்லது மனை வாங்குறீங்களே, வில்லங்கச் சான்றிதழ் வாங்குறீங்கல்ல?

நோவாம போய் படிவத்த நிரப்பிக் கொடுத்துட்டு,எப்போ தர்றியோ தான்னா வரீங்க. சொரண்டி, ஓரம் கட்டி ஒரு மணி நேரத்துல கிடைக்குமான்னு கேட்டு பேரம் பேசி 2 நாள்ளன்னு சொல்லிட்டான்னு வந்து திட்டுறீங்களே, அனியாயத்துக்கு லஞ்சம் பெருகிப் போச்சுன்னு.
எழுதித் தரேன். யாராவது வில்லங்கச் சான்றிதழ் படிச்சி பார்த்திங்களா ஐயா? மாட்டீங்க. ஆவணத்தைச் சுயமாக பரிசோதித்து நீங்களே உறுதிப் படுத்திகிட்டதா எழுதி இருக்கும் அதில. ஏன்? கேட்டுப் பாருங்க. இப்புடி இருக்கே. நானே பார்த்துக்கறேன்னு.

கொண்டுபோய் ரிகார்ட் ரூம்ல விடுவான். 3 மாசமானாலும் கண்டு பிடிக்க முடியாது உங்களுக்கு. ஒரு குண்டு பல்ப் வெளிச்சத்தில மலை மலையா குவிஞ்சிருக்கிற ரிகார்ட்ல உங்களோடது மட்டும் தேடி எடுக்க முடியாது உங்களால. அவன் உங்கள மாதிரி 100 பேருக்கு தேடணும் சார்.
மூச்சடைக்கும். ஆஸ்மா வந்தவன் மாதிரி விசிலடிக்கும். கை கால்லாம் தடி தடியா அலர்ஜி வரும். டாக்டர் கிட்ட போறதுன்னு முடிவெடுத்தா நீங்க குடுக்கிற காசில அவன் டாக்டர் கிட்ட போக முடியாது. அட மாத்திரை மருந்து சாப்பிட்டு நாளைக்கும் இதே தானேன்னு அந்த வேலையில இருக்கிறவன் தண்ணியடிச்சிட்டு போதையில மயங்குறதுக்கு பேரு தூக்கமுங்க.
சின்ன வயசில இருந்து புத்தகம் சரசுவதின்னு சொல்லி சொல்லி மனசுல பதிஞ்சி போய், அலுவலகத்துக்கு போனா உட்கார்ர சேர்ல ஒயர் பிஞ்சி தொங்கும். சரி பண்ண முடியாது சார். டெண்டர் விடணும். அது வரைக்கும் பழைய ரிஜிஸ்டர் போட்டு அதுமேல உட்கார்ரப்ப, எம்புள்ள படிப்புல கை வெச்சிறாத சரஸ்வதின்னு மனசு கெஞ்சும்.
பஸ் புடிச்சி, ரயில் புடிச்சி, ஆட்டோக்கு அழுது அட்டண்டென்ஸ் போயிடுமேன்னு ஓடி வருவான். ஒரு மேல் அதிகாரி எழுந்து வாய்ல ப்ரஷ் வெச்சிகிட்டு கக்கூசு போயிருக்காருன்னு வீட்டில இருந்து தகவல் வந்ததும் லிஃப்ட நிப்பாட்டி அவரு வராருன்னு போர்டு தொங்க விட்டுடுவான். கண்ணு தெரியாதவங்க, காலில்லாதவங்க எல்லாம் தடவி, தடுமாறி ஆறாவது மாடின்னாலும் ஏறிப்போவாங்க.
சாயந்திரம் 4.30 மணிக்கு கூப்பிட்டு, 20 வருஷத்துக்கு முன்னாடியில இருந்து முட்டைக்கு மசுரு புடுங்க எவ்வளவு செலவுன்னு மந்திரி கேட்டிருக்காரு. 20 நிமிஷத்தில என் டேபிள்ள தகவல் இருக்கணும்னு கேப்பாரு அதிகாரி.மனுசனால முடியுமாய்யான்னு கேக்க முடியாது.

எப்படி சார் 20 நிமிஷத்திலன்னு முனகுவான். உன்னால முடியும்யா. இல்லன்னா உன்ன ஏன் கேக்குறேன்னு சொல்ற அதிகாரின்னா 15 நிமிஷத்தில குடுப்பான். அவனுக்குத் தெரியும். இப்படி எழவெடுப்பானுங்கன்னு. கேக்குறானோ இல்லையோன்னு வித விதமா தகவல் வெச்சிருப்பான் சார்.
தொலைச்சிடுவேன், மந்திரி கேக்குறாருங்கறேன் முடியாதுன்னா சொல்ற? தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடுவேன்னு எகிறுனா, நடுங்கிப் போயி வாடி உனக்கிருக்கு ஆப்புன்னு சாப்புடாம, தண்ணி குடிக்காம, அங்க இங்க நகராம, பார்த்துகிட்டு தான சார் இருக்கிங்க. பண்ணிகிட்டு தானே இருக்கேன். மந்திரத்தில வருமா. மந்திரி கேட்டதாச்சே சார். ஒரு சின்ன தப்பு வந்தா உங்க வேலைக்கே வேட்டாயிடும்னு தானே பண்றேன்னு விடிய விடிய சாவடிக்கவும் தெரியும் அவனுக்கு.
காலையில சீக்கிரம் வந்து புள்ளைங்க தூங்க வீட்டுக்கு போயி, சனி, ஞாயிறு அலுவலகத்தில சாவுற சதவீதம் அதிகம் ஸார். பொண்டாட்டிய ஆஸ்பத்திரில சேர்த்துட்டு ஆபீஸ் சாவி கையில இருக்கும்மா. குடுத்துட்டு வரேன்னு வந்தவன, அதக்கேட்டு இதக்கேட்டு அரை நாள் கழிச்சி அனுப்புவாங்க சார்.
வட்டிக்கு பணம் குடுக்குறது, சைட்ல கட கண்ணி வெச்சிருக்கறது, தவணையில ஜட்டியில இருந்து சகலமும் விக்கிற கும்பல் இருக்கத்தான் செய்யுது. அவனுக்கு தொழிற்சங்கம் துணை நிக்கும். இல்லைன்னா அதிகாரிக்கு கப்பம் கட்டுவான். அவனும் சின்ன சதவீதம்தான். அவன் வேலையும் சேர்த்து சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யுற அரசு ஊழியர் அதிகம்.
இத்தனை கஷ்டமும் போறாதுன்னு அரைவேக்காட்டு அட்மினிஸ்ட்ரேட்டர ஏமாத்தி கூகிள் ரீடர்ல பின்னூட்டம் பார்க்குறதும், உணவு நேரத்துல சாப்பாட்டை விழுங்கியோ விழுங்காமலோ அதுக்கு பதில் போடுறதும், மத்தவங்க இடுகைக்கு ஓட்டு போடுறதும், பின்னூட்டம் போடுறதும், அலுவலக நேரத்துக்குள்ள இடுகை எழுதி வெச்சி, அலுவலக நேரம் முடிய அரை மணி முன்னாடி அனுமதிக்கிறப்ப பப்ளிஷ் பண்றதும் அரசு ஊழியனுக்கு சின்ன ரிலாக்சேஷன்.
சரி சரி, மணி அஞ்சாகப் போகுது. இப்போ இடுகை போட்டாதான், ஆபீஸ் முடிய முன்னாடி படிச்சி பார்த்து பின்னூட்டம் போடுவாங்க. வெள்ளிக்கிழமையாச்சா, இல்லாட்டி கறிக்கடை வாசல்ல எலும்பு துண்டுக்கு காத்து கிடக்கிற நாய் மாதிரி யாராவது பின்னூட்டம் போட்டாங்களா? ஓட்டு விழுந்துச்சான்னு (முக்கியமா மைனஸ் ஓட்டு) திங்கள் வரை பார்த்துகிட்டே இருக்கணும்.

91 comments:
வந்துட்டேன்
அண்ணே... பெரிய எலி மட்டும்தான் கொடுத்தாங்களா....
கம்ப்யூட்டருக்கு சுண்டெலி தரலையா!!???
சும்மா டமாசுக்குண்ணே...
கோவிச்சிக்காதீங்க
//(முக்கியமா மைனஸ் ஓட்டு) //
அதுதான் நண்பர்கள் அமைதியா இருக்காங்களே... அப்புறம் ஏன் ஆப்ப தேடறீங்கண்ணே
முதன் முறையாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன்!நாணயத்தின் அடுத்த பக்கத்தையும் காட்டிய பதிவு!...
அய்யா ரெண்டெலியோட அலுவலகத்துல போராடறீங்க! மவுஸ், புருச்சாளி ரெண்டையும் சொன்னேன்... அரசு ஊழியரின் அன்றாட பணிகள் அருமை.
பிரபாகர்.
/கம்ப்யூட்டருக்கு சுண்டெலி தரலையா!!???
சும்மா டமாசுக்குண்ணே...
கோவிச்சிக்காதீங்க/
மொத வாட்டி குடுப்பாங்க. அப்புறம் சொந்தமா சூனியம்தான்.
கதிர் - ஈரோடு said...
/அதுதான் நண்பர்கள் அமைதியா இருக்காங்களே... அப்புறம் ஏன் ஆப்ப தேடறீங்கண்ணே/
மதிக்கமாட்றாங்குளே. 10 வந்தா ஒன்னு மைனஸ்னா 11 பேரு படிச்சாங்கன்னு இருக்கும். 11 இருந்தா சந்தோசம். இல்லாம 10ன்னா ஒரு வாசகர் போய்ட்டாரேன்னு வருத்தம்தான்.
நேசன்..., said...
/முதன் முறையாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன்!நாணயத்தின் அடுத்த பக்கத்தையும் காட்டிய பதிவு!.../
வாங்க நேசன்.முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
பிரபாகர் said...
/அய்யா ரெண்டெலியோட அலுவலகத்துல போராடறீங்க! மவுஸ், புருச்சாளி ரெண்டையும் சொன்னேன்... அரசு ஊழியரின் அன்றாட பணிகள் அருமை.
பிரபாகர்.../
ஹி ஹி. நன்றி பிரபாகர்.
மன்னிக்கவும்.... இப்படிஎல்லாம் உங்களை பற்றி கூறி ஒரு பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்தினாலும் ..., நீங்களோ உங்கள் துறை சார்ந்தவர்களோ லஞ்சம் வாங்குவதை நியாய படுத்தமுடியாது...
உண்மயை ஒளிக்காமல் சொல்லிட்டிங்க.யாராச்சும் ஆப்பு வச்சுரப்பொறாங்க....
பேநா மூடி said...
/ மன்னிக்கவும்.... இப்படிஎல்லாம் உங்களை பற்றி கூறி ஒரு பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்தினாலும் ..., நீங்களோ உங்கள் துறை சார்ந்தவர்களோ லஞ்சம் வாங்குவதை நியாய படுத்தமுடியாது.../
=)). எங்கேயாவது நியாயப் படுத்தியிருக்கிறேனா? 3வது மாடியில் இருந்து கொண்டு வெள்ள நிவாரணம் வாங்கிய அரசு ஊழியரல்லாதோரை என்ன செய்யப் போகிறீர்கள்?
வாத்துக்கோழி said...
/உண்மயை ஒளிக்காமல் சொல்லிட்டிங்க.யாராச்சும் ஆப்பு வச்சுரப்பொறாங்க..../
ஆப்பு வைக்க ஒன்னுமில்லிங்க. இங்க நேரவே சொல்லுறதுதான்.
மறுக்கா வர்றேனுங்க பாலாண்ணே!
பழமைபேசி said...
/மறுக்கா வர்றேனுங்க பாலாண்ணே!/
வாங்க பழமை.
அரசு அலுவலகங்கள்ல உள்ள வசதிகுறைவு மிக வருந்த தக்க விஷயம் தான் தலைவா....நான் பார்த்திருக்கிறேன்.
ஆனா, இருக்குற கக்கூஸ கழுவுறதுக்கு ஆள் போட்டிருப்பாங்க. அவன் ஒழுங்கா வேல பார்த்தா ஓரளவு நல்லாயிருக்கும். ஆனா அவனும் அறிவிக்கப்படாத வேலை நிறுத்தம் செய்வானே...! அது தானே பிரச்சனை.
அரசு அலுவலகங்கள்ல இருக்கிற நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு அனங்க வேல பாக்குற ஒவ்வொருத்தருகிட்டையும் இருக்கு.... அவங்கள்ல நிறைய பேரு தீர்வை அமுல்படுத்த முனைவதில்லை. ஒரு சிலர் proactive-ஆ செயல்பட நினைச்சாலும் அவங்க மேல் அதிகாரிங்க விடுறதில்ல. ஏன்னா அவங்களே பல நேரம் வேல பாக்க கூச்சப்படுராங்களே! அதுக்கும் காரணம் புரியல.
பல தனியார் நிறுவனங்கள்ல SLA / Deadline / Status Update எல்லாம் முறையா இருக்கணும்னு விதி இருக்கு. ஆனா அங்க எங்க இருக்கு? இதப் பத்தி நிறைய பேசலாம்.
ஆனா, நீங்க அனுபவிக்கிற சில கஷ்டங்களுக்காக ரொம்ப வருத்தப்படுகிறேன். :-)
ரோஸ்விக் said...
/ஆனா, இருக்குற கக்கூஸ கழுவுறதுக்கு ஆள் போட்டிருப்பாங்க. அவன் ஒழுங்கா வேல பார்த்தா ஓரளவு நல்லாயிருக்கும். /
இல்லைங்க. அவர் செய்வார். அவ்வளவுதான் முடியும் அவரால். எழுதப்போனால் பெரிய விவாதம் இது. இடுகையின் நோக்கம் அரசு ஊழியர் அனைவருமே மோசமில்லை என்பது தான்.
/அவங்கள்ல நிறைய பேரு தீர்வை அமுல்படுத்த முனைவதில்லை. ஒரு சிலர் proactive-ஆ செயல்பட நினைச்சாலும் அவங்க மேல் அதிகாரிங்க விடுறதில்ல. ஏன்னா அவங்களே பல நேரம் வேல பாக்க கூச்சப்படுராங்களே! அதுக்கும் காரணம் புரியல./
விதி முறைகள். அவ்வளவுதான்.
ஏண்ணே இப்படி இருக்கிறீங்க.....
அரசாங்க அலுவலக சட்டம் தெரியாம....
வேலை செய்யறவனுக்கு வேலை குடு
ஊர் சுத்தரவனுக்கு சம்பளம் குடுன்னு ஒன்னு இருக்கறது தெரியுமா? தெரியாதா?
பேசாம சம்பளம் வாங்கிட்டு இருக்க வேண்டியதுதாண்ணே...
//சின்ன வயசில இருந்து புத்தகம் சரசுவதின்னு சொல்லி சொல்லி மனசுல பதிஞ்சி போய், அலுவலகத்துக்கு போனா உட்கார்ர சேர்ல ஒயர் பிஞ்சி தொங்கும். சரி பண்ண முடியாது சார். டெண்டர் விடணும்.//
சரிதான் தலைவா! கேள்விபட்டிருக்கேன்.
அரசு அலுவலகத்தில் திடிருன்னு ஒரு பாம்பு நுழைஞ்சா என்ன செய்யணும்?
மொதல்ல மேலதிகாரிக்கு குறிப்பு எழுதனும். (இந்த மாதிரி, இந்த மாதிரி இந்த அலுவலகத்தில இந்த நேரத்தில இந்த வழியா இன்ன கலர் பாம்பு வந்திருக்கு, இதை என்ன செய்யலாம். )
அந்த அதிகாரி மேலும் ஒரு குறிப்பு எழுதுவார் (மூணு பாம்பு பிடாரன் கிட்டயிருந்து கொட்டேஷன் வாங்கி, அதில எது L1 ன்னு பார்த்து முடிவு பண்ணுன்னு )
சில சமயம் டார்ச்சர்தான் இல்லையா தலைவா?
ங்கொக்கா மக்கா... இந்த இடுகைக்கும் மைனஸ் ஓட்டா... கிழிஞ்சது.
அண்ணே! இது எந்த ஊர்ல நடக்குது. ரோட்டுல தான் அந்த இம்சைய குடுத்து நாளைக்கு வரப்போற தலைவருக்கு இன்னிக்கே பாரா போடுவாங்கன்னு பாத்தா, இது புதுசாவுல இருக்கு..,
அண்ணே வெளியில் கொஞ்சம் போக வேண்டியிருக்கு. வந்து கவனிச்சுக்கிறேன்.
சூப்பரா கும்மி அடிக்கலாம்..
எது நேத்து நான் போன் பண்ணி கிண்டல் பண்ணுனப்ப யோசிச்சதா?
//அதப் பார்க்க ஆளிருக்கு. //
அப்போ ஏன் அவரு ஒழுங்கா வேலை பார்க்கலை...
//மூச்சடைக்கும். ஆஸ்மா வந்தவன் மாதிரி விசிலடிக்கும். //
அதுக்குத்தான சம்பளமுன்னு ஒண்ணு மாச மாசம் கொடுக்குறாங்க....
சரி சரி லூஸ்ல வுடு..இன்னும் எட்டு வருசம்தானே அப்புறம் ரிட்டையர்ட் ஆகிடலாம்...
ஆரூரன் விசுவநாதன் said...
/ பேசாம சம்பளம் வாங்கிட்டு இருக்க வேண்டியதுதாண்ணே.../
யாராவது சொல்ல வேணாமா.
சூர்யா ௧ண்ணன் said...
/சில சமயம் டார்ச்சர்தான் இல்லையா தலைவா?/
பல நேரம்.=))
இராகவன் நைஜிரியா said...
/ங்கொக்கா மக்கா... இந்த இடுகைக்கும் மைனஸ் ஓட்டா... கிழிஞ்சது./
அப்பாடா. இப்போதான் நிம்மதியா இருக்கு. எங்க இந்த ரெண்டு பேர இழந்துட்டனோன்னு இருந்தேன்.=))
இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! இது எந்த ஊர்ல நடக்குது. ரோட்டுல தான் அந்த இம்சைய குடுத்து நாளைக்கு வரப்போற தலைவருக்கு இன்னிக்கே பாரா போடுவாங்கன்னு பாத்தா, இது புதுசாவுல இருக்கு..,/
பெரும்பாலும் இப்படித்தான் நிஜாம்
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே வெளியில் கொஞ்சம் போக வேண்டியிருக்கு. வந்து கவனிச்சுக்கிறேன்.
சூப்பரா கும்மி அடிக்கலாம்../
வாங்கண்ணே.
அரசு அலுவலில் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் எழுதியது அனைத்தும் நடப்பவைகளே.மனதில் நின்ற பதிவு.
ரேகா ராகவன்
பிரியமுடன்...வசந்த் said...
/எது நேத்து நான் போன் பண்ணி கிண்டல் பண்ணுனப்ப யோசிச்சதா?/
அதான் சொன்னேன்ல ரொம்ப வருஷமான்னு.
பிரியமுடன்...வசந்த் said...
/அப்போ ஏன் அவரு ஒழுங்கா வேலை பார்க்கலை./
வெறும் கக்குசு கழுவன்னு ஒரு ஆளு இருக்க மாட்டாரு. பல வேலையும் இருக்கும். உக்காந்திருக்கிறதில்லை. அவ்வளவுதான் முடியும்.
பிரியமுடன்...வசந்த் said...
/அதுக்குத்தான சம்பளமுன்னு ஒண்ணு மாச மாசம் கொடுக்குறாங்க..../
பேசலாம் ராசா. பட்டாதேன் தெரியும். சம்பளம் வாங்கி டாக்டர் கிட்ட குடுத்துடலாம்.
பிரியமுடன்...வசந்த் said...
/சரி சரி லூஸ்ல வுடு..இன்னும் எட்டு வருசம்தானே அப்புறம் ரிட்டையர்ட் ஆகிடலாம்.../
எனக்காகவா எழுதினேன்.=))
என் அப்பா நெடுஞ்சாலைத் துறையில் பெரிய பதவியிலிருந்தவர். அவரது அலுவலகத்திற்கு போன போது அங்கிருந்த வசதிகள் நீங்கள் கூறியது போல தான் இருந்தது.
KALYANARAMAN RAGHAVAN said...
/அரசு அலுவலில் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் எழுதியது அனைத்தும் நடப்பவைகளே.மனதில் நின்ற பதிவு./
நன்றிங்க ராகவன்.
பின்னோக்கி said...
/என் அப்பா நெடுஞ்சாலைத் துறையில் பெரிய பதவியிலிருந்தவர். அவரது அலுவலகத்திற்கு போன போது அங்கிருந்த வசதிகள் நீங்கள் கூறியது போல தான் இருந்தது./
இருக்கிறது தானுங்க எழுதினேன்
// அடுத்த முறை அரசு அலுவலகத்துல ஏதாவது வேலைன்னு போக நேர்ந்தா ஆபீசு உள்ள கொஞ்சம் பாருங்க. //
உள்ள விட்டாத்தானே பார்ப்பதற்கு.
// ஒரே ஒரு நாள் அந்த குப்பைக்கும், ஒட்டடைக்கும், மழையில நனைஞ்சி வெயில்ல காஞ்சி மொச நாத்தம் அடிக்கிற வாசனைக்குள்ள உக்காருவீங்களா? //
எல்லா ஆபிசுமா அப்படி இருக்குது...
// தண்ணி குடிக்கலாம்னு போய் அங்க இருக்கிற கூலர் (அது கூட இருக்காது சில இடத்துல) அதப்பாருங்க. //
அங்க போய் எதுகுங்க தண்ணி குடிக்கணும்...
// அதே டேபிள்ளதான், எலிக்காய்ச்சல் வந்துடுமோன்னு பயப்படாம, மதியம் கொண்டு போற தயிர்சாதம் தின்னுறது. //
எலிக்காய்ச்சல் கூட அரசாங்க அலுவலகத்தினுள் நுழைய பயப்படுங்க
// மும்முரமா எழுதிட்டிருக்கிறவன் டேபிள்ள மூஸ் மூஸ் எச்சூஸ்மி. அந்தப்பக்கம் போய்க்கிறேன். சாரின்னு மொசக்குட்டி சைஸ்ல ஒரு பெருச்சாளி ஓடும் ஸார். //
பெருச்சாளி எல்லாம் அரசாங்கத்தின் வளர்ப்பு பிராணிகள் என்று இத்தனை நாள் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
(பெட் அனிமல்ஸ்)
// ஹலோ! எங்க ரெண்டு நாளா காணோம்னு விசாரிக்கிற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸாயிருப்போம் சார்.//
யார் யாரை கேட்பாங்க.
// 400 பேர் படம் பார்க்கிற தியேட்டர்ல இத்தனை யூரினல் இருக்கணும், இத்தனை டாய்லட் இருக்கணும். இந்த இடைவெளியில சுத்தம் பண்ணனும்னு ரூல் இருக்கு.//
ரூல் எல்லா இடத்திலேயும் இருக்கு. யார் அதை செய்கின்றார்கள்.
//மும்முரமா எழுதிட்டிருக்கிறவன் டேபிள்ள மூஸ் மூஸ் எச்சூஸ்மி. அந்தப்பக்கம் போய்க்கிறேன். சாரின்னு மொசக்குட்டி சைஸ்ல ஒரு பெருச்சாளி ஓடும் ஸார். ஹலோ! எங்க ரெண்டு நாளா காணோம்னு விசாரிக்கிற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸாயிருப்போம் சார். அதே டேபிள்ளதான், எலிக்காய்ச்சல் வந்துடுமோன்னு பயப்படாம, மதியம் கொண்டு போற தயிர்சாதம் தின்னுறது.
//
//அதிகாரி மட்டும் பன்னீர் போவாரு. மத்தவங்க சிறுநீர் போவாங்கன்னு பூட்டி வெச்சிருக்கும் சார். //
//20 வருஷத்துக்கு முன்னாடியில இருந்து முட்டைக்கு மசுரு புடுங்க எவ்வளவு செலவுன்னு மந்திரி கேட்டிருக்காரு//
//தவணையில ஜட்டியில இருந்து சகலமும் விக்கிற கும்பல் //
ஐயா தலைவரே, சரி காமெடி..பட்டைய கிளப்புங்க...
இராகவன் நைஜிரியா said..
/உள்ள விட்டாத்தானே பார்ப்பதற்கு./
தடுக்க யாரு இருக்காங்கண்ணே. மீ த 50.
இராகவன் நைஜிரியா said.
/எல்லா ஆபிசுமா அப்படி இருக்குது.../
இந்தியா வரும்போது வாங்கண்ணே. பார்க்கலாம்.
இராகவன் நைஜிரியா said.
/எலிக்காய்ச்சல் கூட அரசாங்க அலுவலகத்தினுள் நுழைய பயப்படுங்க/
அங்க வராதுண்ணே. மனுசனுக்கு வந்துடுமே.=))
இராகவன் நைஜிரியா said...
/பெருச்சாளி எல்லாம் அரசாங்கத்தின் வளர்ப்பு பிராணிகள் என்று இத்தனை நாள் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
(பெட் அனிமல்ஸ்)/
அவ்வ்வ்வ்
இராகவன் நைஜிரியா said..
/
யார் யாரை கேட்பாங்க./
மீ டு த எலிண்ணே.
ஈ ரா said..
/ஐயா தலைவரே, சரி காமெடி..பட்டைய கிளப்புங்க.../
=))
ங்கொக்கா மக்கா... இந்த இடுகைக்கும் மைனஸ் ஓட்டா... கிழிஞ்சது.
ஐயா ராகவன் கலக்குறாரு.
நீங்க கலங்காதீங்க. தமிழன் என்பவனைப்பற்றி தான் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டச்சுல்ல?
ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
/நீங்க கலங்காதீங்க. தமிழன் என்பவனைப்பற்றி தான் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டச்சுல்ல?/
வாங்க ஜோதிஜி. =))
சார் 11ன்னு சொன்னீங்க 16 ஆகிப்போச்சு இப்பவே. மைனஸ் ஓட்டு வாங்காதவன் பதிவரே இல்லைங்குறேன்.
வில்லங்க சர்டிபிகேட் - 5 ஸ்டார் திட்டத்துல இந்த விஷயம் எல்லாம் கம்ப்யூட்டர்ல போட்டுட்டாங்கன்னு கேள்விப்பட்டேனே இல்லையா.
அரசாங்க வேலையிலும் டென்சன் இருக்கு. மந்திரி மீட்டிங்குன்னு எங்க அப்பா அவ்வளவு டார்ச்சர் ஆவாரு. பாவமா இருக்கும்.
எல்லாத்துலயும் பிரச்சினை இருக்குதான். சொன்ன மாதிரி எல்லாத்தையும் இது மாதிரின்னு ஒரு பொதுப்படுத்த முடியாது.
பின்னோக்கி said...
/சார் 11ன்னு சொன்னீங்க 16 ஆகிப்போச்சு இப்பவே. மைனஸ் ஓட்டு வாங்காதவன் பதிவரே இல்லைங்குறேன்./
ஆமாங்க. 5 பேரு புதுசா வந்திருக்காங்க அதுல ஒருத்தரு மைனசு
/வில்லங்க சர்டிபிகேட் - 5 ஸ்டார் திட்டத்துல இந்த விஷயம் எல்லாம் கம்ப்யூட்டர்ல போட்டுட்டாங்கன்னு கேள்விப்பட்டேனே இல்லையா./
பண்ணிக்கிட்டிருக்காங்க.
/எல்லாத்துலயும் பிரச்சினை இருக்குதான். சொன்ன மாதிரி எல்லாத்தையும் இது மாதிரின்னு ஒரு பொதுப்படுத்த முடியாது./
அரசு ஊழியனுக்கு வேலை செய்யும் சூழ்நிலை சரியாக இல்லை என்பது தான் இடுகையின் நோக்கம்.
நன்றி பின்னோக்கி.
உங்க வருத்தம் புரியுது சார்... :((
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said..
/
யார் யாரை கேட்பாங்க./
மீ டு த எலிண்ணே.//
ஐயோ பாவம் நீங்க.
துபாய் ராஜா said...
உங்க வருத்தம் புரியுது சார்... :((
நன்றி ராஜா.
இராகவன் நைஜிரியா said...
/ஐயோ பாவம் நீங்க./
=)). கொத்தாவால் சாவடி மூடினதும் மொத்த எலியும் இடம் பெயர்ந்துடுச்சிண்ணே.
//எல்லாத்துலயும் பிரச்சினை இருக்குதான். சொன்ன மாதிரி எல்லாத்தையும் இது மாதிரின்னு ஒரு பொதுப்படுத்த முடியாது
நான் சொல்ல வந்தது, எல்லா அரசு ஊழியர்களும் வேலை செய்வதில்லைன்னு பொது படுத்த முடியாதுன்னு. உங்களுக்கு ஆதரவு கருத்த, எதிர் கருத்து மாதிரி போட்டுட்டேன்னு நினைக்கிறேன்
அண்ணன் சொல்றாரு, தம்பி கேட்டுகுறேன்!
//இடுகையின் நோக்கம் அரசு ஊழியர் அனைவருமே மோசமில்லை என்பது தான்//
ஏற்றுக்கொள்கிறேன் தல :-) ஆனா அந்த நல்லவர்களின் எண்ணிக்கை உங்க(நம்ம) தலை முடி அளவுதான் இருக்கும் போல :-)) ச்சும்மா தமாசு ....
பாலாண்ணே.. மிகவும் நல்ல பதிவு. நானும் பல முறை இதைப் பற்றி யோசித்துள்ளேன்.
ஆனால் இதையும் மீறி அவர்கள் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் அவர்கள் மீது இரக்கப்பட முடியாமல் போகிறது.
அரசு அலுவலகங்கள் தற்பொழுது எவ்வளவோ மாறி விட்டன. இன்னும் சில கிராமப்புற அலுவலகங்க்ள் மாற வேண்டும். மாறும்.
அழகாக ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறீர்கள்.
நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள்
சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யுற அரசு ஊழியர் அதிகம்.
முதன்முதலாக உங்கள் வலைப்பூ பார்க்கிறேன். அறிமுகப்படுத்தியதற்கு ஞானப்பித்தனுக்கு நன்றி.
எல்லோரும் பொத்தாம் போக்கில் ஒரு சாரார் மீது குற்றஞ்சாட்டுவது வாடிக்கையே.
தனக்கொரு தேவை என்கிற போது அது நடக்கவில்லையென்றால் அடுத்தவ்ர் மீது பழி போட்டு தப்பிப்பது என்பது பொதுவான இந்திய மனப்பாங்குதான்...
அரசு ஊழியர்களை முதலில் சொன்னார்கள்..இப்போது ஐ.டி ஆட்களை.
இருந்தாலும் அரசு ஊழியர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உணர்த்தியது உங்கள் பதிவு....
கக்கூசுக்கு பூட்டுப்போடுவது நிறைய தனியார் கம்பெனிகளில் நடப்பதுதான்...
அருமையாக நினைத்ததை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.....
தோழமையுடன்
மதிபாலா
பின்னோக்கி said...
/உங்களுக்கு ஆதரவு கருத்த, எதிர் கருத்து மாதிரி போட்டுட்டேன்னு நினைக்கிறேன்/
இல்லைங்க எனக்கு புரிஞ்சது. நான் தன்னிலை விளக்கம் மாதிரி சொன்னேன். அவ்வளவுதான். நன்றி.
[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)
இல்லைங்க :(
பழமைபேசி said...
/அண்ணன் சொல்றாரு, தம்பி கேட்டுகுறேன்!/
ஆஹா. பொடி.
ரோஸ்விக் said...
/ஏற்றுக்கொள்கிறேன் தல :-) ஆனா அந்த நல்லவர்களின் எண்ணிக்கை உங்க(நம்ம) தலை முடி அளவுதான் இருக்கும் போல :-)) ச்சும்மா தமாசு ..../
இல்லைங்க. ரொம்ப அதிகம். அதான் சொல்லவந்தேன்.
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
/ஆனால் இதையும் மீறி அவர்கள் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் அவர்கள் மீது இரக்கப்பட முடியாமல் போகிறது./
இது சரிதான் செந்தில். அதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. பின்னொரு இடுகையில் சொல்ல விழைகிறேன்.
மதிபாலா said...
/முதன்முதலாக உங்கள் வலைப்பூ பார்க்கிறேன். அறிமுகப்படுத்தியதற்கு ஞானப்பித்தனுக்கு நன்றி./
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும், ஞானப் பித்தனுக்கும் நன்றி மதிபாலா.
/அரசு ஊழியர்களை முதலில் சொன்னார்கள்..இப்போது ஐ.டி ஆட்களை./
ஆமாங்க. நேற்று ட்ரெயினில் ஒருவர் சொன்னது. நாசமா போறவனுங்க ஒழிஞ்சானுங்கன்னு பார்த்தா திரும்ப மேல வறானுங்க.
/இருந்தாலும் அரசு ஊழியர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உணர்த்தியது உங்கள் பதிவு..../
நன்றிங்க.
//அரசு அலுவலகத்தில பார்க்கலாம். அதிகாரி மட்டும் பன்னீர் போவாரு. மத்தவங்க சிறுநீர் போவாங்கன்னு பூட்டி வெச்சிருக்கும் சார். //
ரொம்ப அனுபவப்பட்டிருப்பிங்களோ. பட் ரியலா யோசிக்கும் போது அரசு அலுவலகங்களின் நிலை தாங்கள் சொல்வதுபோல்தான் இருக்கிறது.
//அட்மினிஸ்ட்ரேட்டர ஏமாத்தி கூகிள் ரீடர்ல பின்னூட்டம் பார்க்குறதும், உணவு நேரத்துல சாப்பாட்டை விழுங்கியோ விழுங்காமலோ அதுக்கு பதில் போடுறதும், மத்தவங்க இடுகைக்கு ஓட்டு போடுறதும், பின்னூட்டம் போடுறதும், அலுவலக நேரத்துக்குள்ள இடுகை எழுதி வெச்சி, அலுவலக நேரம் முடிய அரை மணி முன்னாடி அனுமதிக்கிறப்ப பப்ளிஷ் பண்றதும் அரசு ஊழியனுக்கு சின்ன ரிலாக்சேஷன்.//
கரைட்டா சொன்னீங்க தலைவா....இந்த ஒருவாரமா நான் பட்ட கஷ்டம் இருக்கே......
செம போஸ்ட்....
யாரோ லஞ்சம் வாங்கி கொழுத்துப்போன சில அயோக்கியர்கள் உங்களுக்கு நாலு மைனஸ் வோட்டு போட்டு தங்களோட எதிர்ப்ப தெரிவிச்சிருக்காங்க. அவங்களுக்கும் நன்றி சொல்லிடுங்க....
க.பாலாசி said...
/கரைட்டா சொன்னீங்க தலைவா....இந்த ஒருவாரமா நான் பட்ட கஷ்டம் இருக்கே......
செம போஸ்ட்..../
அதான் உங்க போஸ்ட் காணோமோ.
க.பாலாசி said...
/யாரோ லஞ்சம் வாங்கி கொழுத்துப்போன சில அயோக்கியர்கள் உங்களுக்கு நாலு மைனஸ் வோட்டு போட்டு தங்களோட எதிர்ப்ப தெரிவிச்சிருக்காங்க. அவங்களுக்கும் நன்றி சொல்லிடுங்க..../
இதுக்கு நான் லஞ்சமா குடுக்க முடியும்=))
cheena (சீனா) said...
/அழகாக ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறீர்கள்.
நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள்/
நன்றிங்க ஐயா.
அப்பன் said...
/சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யுற அரசு ஊழியர் அதிகம்./
ஆமாங்க. அது பண்ணாலே போதுங்கிற நிலைமையும் இருக்குதான்.
சீனியர் மாணவர் என்னை ராக்கிங் பண்ணியதால் நானும் சீனியர் ஆகி ஜூனியரை ராகிங் பண்ணுவேன்.-- ஜுனியர் பாமரன்.
பணம், சேலை, வேட்டி எல்லாம் வாங்கிக்கொண்டுதானே ஓட்டு போட்டீர்கள். அதெயெல்லாம் மீட்டெடுக்க உங்கள் வரிப்பணத்தையே ஊழல் செய்வேன்.-- பாமரன், எம்.பி.
நட்ட நடுப்பகலில் வேகாதவேயிலில் நிற்கும் என்னிடம், நீ - ட்ராபிக் சிக்னல் ரூல்ஸை மீறாவிட்டாலும் எல்லா ஆவணங்களும் சரியா இருந்தாலும் எனக்கு 'கப்பம்' கட்டி விட்டுத்தான் போகணும்.நான் என்ன ஏ/சி அறையில் உக்காந்தா வேலை செய்கிறேன்? -- பாமரன்,(ட்ராபிக் கான்ஸ்டபில்)
பாமரன் : ....சிறந்த காரணப்பெயர்!
"ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க வைக்கப்பட மாட்டார்" - இஸ்லாம்.
அநீதியை எதிர்த்து அநீதி இழைத்தவரிடம் நீதி கேட்டு போராடவேண்டும், நெஞ்சில் துணிவிருந்தால்.இல்லையேல்,.... பொத்திக்கிட்டு....
அரசு அலுவலகத்தில பார்க்கலாம். அதிகாரி மட்டும் பன்னீர் போவாரு. மத்தவங்க சிறுநீர் போவாங்கன்னு பூட்டி வெச்சிருக்கும் சார். பாதிக்கு மேல பெண்கள் வேலை செய்யிற இடத்திலையும் இதே நிலமைதான்.//
ஹஹஹஹஹஹ ரசிச்சேன்... இப்பத்தான் தெரியுது ஏன் அரசாங்க ஊழியர்கள் அடிக்கடி ஸ்ட்ரைக் பண்றாய்ங்கன்னு...
நாஞ்சில் பிரதாப் said...
/ஹஹஹஹஹஹ ரசிச்சேன்... இப்பத்தான் தெரியுது ஏன் அரசாங்க ஊழியர்கள் அடிக்கடி ஸ்ட்ரைக் பண்றாய்ங்கன்னு.../
அரசாங்க ஊழியர்கள் அடிக்கடி ஸ்ட்ரைக்கா? எப்போ சார். பண்ண முடியாதுங்க. 90 நாள் நோடீஸ் கொடுக்கணும்.=))
/நட்ட நடுப்பகலில் வேகாதவேயிலில் நிற்கும் என்னிடம், நீ - ட்ராபிக் சிக்னல் ரூல்ஸை மீறாவிட்டாலும் எல்லா ஆவணங்களும் சரியா இருந்தாலும் எனக்கு 'கப்பம்' கட்டி விட்டுத்தான் போகணும்.நான் என்ன ஏ/சி அறையில் உக்காந்தா வேலை செய்கிறேன்? -- பாமரன்,(ட்ராபிக் கான்ஸ்டபில்)/
ஆமாங்க. நியாயமுங்க நீங்க சொல்றது. குடுக்கமாட்டன்யா. என்னன்னாலும் நானும் வெயில்ல நிக்கிறேன்னு நிக்கணுங்கறீங்க.
/"ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க வைக்கப்பட மாட்டார்" - இஸ்லாம். /
ஆமாங்க. சரியாச் சொல்லி இருக்குங்க. ஆனா பாருங்க சும்மா நிக்கிறவன் அவனுக்கென்ன சுமக்க கஷ்டம்னு எகத்தாளம் பேசுவாங்கன்னு தாங்க சொன்னது.
/அநீதியை எதிர்த்து அநீதி இழைத்தவரிடம் நீதி கேட்டு போராடவேண்டும், நெஞ்சில் துணிவிருந்தால்.இல்லையேல்,.... பொத்திக்கிட்டு..../
நீங்க சொன்னது அநீதின்னு படுது. நான் உங்கள எங்க வந்து தேடி போராடுறது சொல்லுங்க. புலம்பதான் முடியும்.
நல்ல இடுகை.. சம்பளம் மற்றும் சலுகை வேண்டுமென வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் இதற்கு ஏன் வேலை நிறுத்தம் செய்வதில்லை.?.
தொழிற்சங்கங்கள் இதை பற்றி எல்லாம் விவாதிப்பது இல்லை. ஏன் அதற்கான பொறுமை அவர்களுக்கு இல்லை.?
///மும்முரமா எழுதிட்டிருக்கிறவன் டேபிள்ள மூஸ் மூஸ் எச்சூஸ்மி. அந்தப்பக்கம் போய்க்கிறேன். சாரின்னு மொசக்குட்டி சைஸ்ல ஒரு பெருச்சாளி ஓடும் ஸார். ஹலோ! எங்க ரெண்டு நாளா காணோம்னு விசாரிக்கிற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸாயிருப்போம் சார். அதே டேபிள்ளதான், எலிக்காய்ச்சல் வந்துடுமோன்னு பயப்படாம, மதியம் கொண்டு போற தயிர்சாதம் தின்னுறது//
இதுக்குத்தான் வடிவேலு கூட ரொம்ப சினேகம் வேணாமுன்னு சொன்னேன்!
அருமையான இடுகை அண்ணே!
இந்த நெத்தியடி முகமது என்னச்சொல்ல வராரு அண்ணே!
Maheswaran Nallasamy said...
/நல்ல இடுகை.. சம்பளம் மற்றும் சலுகை வேண்டுமென வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் இதற்கு ஏன் வேலை நிறுத்தம் செய்வதில்லை.?./
85க்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததாகப் படித்திருக்கிறீர்களா மகேஸ்?
/தொழிற்சங்கங்கள் இதை பற்றி எல்லாம் விவாதிப்பது இல்லை. ஏன் அதற்கான பொறுமை அவர்களுக்கு இல்லை.?/
கக்கூஸ் கட்ட வைக்கிறேன். சந்தா கொடு என்று கேட்க முடியாததுதான் காரணம்.
தமிழ் நாடன் said...
/இதுக்குத்தான் வடிவேலு கூட ரொம்ப சினேகம் வேணாமுன்னு சொன்னேன்!
அருமையான இடுகை அண்ணே!
இந்த நெத்தியடி முகமது என்னச்சொல்ல வராரு அண்ணே!/
நன்றிங்க. அவருக்கே புரியாம ஏதோ சொல்லிட்டு போறாரு.
அரைகாசு உத்தியோகம் ஒன்றும் பெருமைபடும் உத்தியோகம் இல்லைதான். இருந்தாலும், நீங்கள் அந்தக்காலத்தில் மினர்வாவில் படம் பார்த்தபோது எத்தனைப்பேர் பில் பாஸாகாமல் வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு இருந்தார்களோ? இதுபோல வசதி தனியாரிடம் கிடைக்குமா? அரைக்காசு உத்தியோகம் பார்ப்பவர்கள் பற்றி நன்றாக அறிந்துக்கொள்ள என்னுடைய விறகு கதையைப் படிக்கவும். அதற்கான சுட்டி இதோ http://chandars.wordpress.com/2008/12/11/விறகு/
Post a Comment