Wednesday, November 25, 2009

2012 நம்ம ஸ்டைலு!

2012 படம் வந்தாலும் வந்தது இருக்கிற 2 வருஷத்தையும் பயந்தே கழிச்சிடுவாங்க போல ஜனங்க. பதிவுலகத்தில இது ஒரு பெரிய பிரச்சனை. எந்த செய்தியானாலும் யாரோ ஒருத்தர் ஒரு இடுகையை போட்டு இருக்கிறவன டரியலாக்கிடுறாங்க. ஈழப் பிரச்சினையில இருந்து இருபது பன்னெண்டு வரைக்கும் பதிவுலகத்தில உறவு வெச்சிருக்கிறவங்க மாதிரி பொது ஜனம் கவலைப் படுறானா?

இன்னா அனியாயம் பண்றாம்பா இந்த ராஜபக்சே. இவனுங்கள ஒருத்தனும் கேக்க மாட்றானே, மாஸ்டர் ஸ்ட்ராங்கா ஒரு டீ என்றோ 2012 பார்த்துவிட்டு இங்லீஷ் விட்டலாச்சார்யா படம் சோக்கா கீதுபா, இன்னாமா சுத்துறானுங்கடா, ஒரு கட்டிங் ஊர்கா பாகிடி ஒன்னு என்றோ அடுத்த வேலை பார்க்க போய்விடுகிறான்.

இந்திய சோதிட (அடிக்க வருவாய்ங்கப்பா) வானவியல் சாத்திரப்படி (இதுவாவது சரியா?) கலியுகத்தின் 4 லட்சத்து 32 ஆயிரம் வருடத்தில் 5011 வருடங்கள் தான் முடிந்திருக்கிறது. அதனால் 2012 உலகம் அழியாது என்று அடித்து சொல்லலாம் என்றால் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் தத்துவம் மேலோங்கி நிற்கிறது.

உலகம்தான் அழியப் போகிறதே, இனிமே யாருக்கு சம்பாதிக்கணும் என்றோ, ஒபினியன் சொல்லி என்னாகப் போகிறதென்ற விரக்தியிலோ இருந்துடப் போறாங்களா? அவங்க அப்படியே இருந்தாலும் நாம விட்டுடப் போறமா? கம்பேனி நிர்வாகம் பொறுப்பில்லை என்று ஒரு டிஸ்கி போட்டா என்ன வேணா சொல்லி இடுகை தேத்திடலாம்ல.

சு.சுவாமி: இப்போதான் நாசா சயண்டிஸ்ட் கிட்டேருந்து சி.ஐ.ஏக்கு ரிபோர்ட் வந்த்ருக்கு. அவா க்ளீனா சொல்லீட்டா. ஜன்தா கட்சியாலதான் உல்கத்த காப்பாத் முடியும்னு. கூட்ய சீக்ரம் ஒபாமா மெம்பர்ஷிப்கு அப்ளை பண்றேன்னு சொல்லி இருக்கார். சமயம் வரும்போது நான் கோர்ட்ல ட்ரெஸ்பாஸ் கேஸ் போட்டு லோகம் அழியாம காப்பாத்திடுவேன். மிச்ச டீடெய்ல்ஸ் சந்த்ரலேகா சொல்வாள்.

வீரமணி:ஆரியக்கூட்டம் 2012க்கு மேல் எண்ணத் தெரியாமல் கட்டவிழ்த்திருக்கும் புரட்டு இது. பெரியார் பள்ளியில் படித்த எங்களுக்கு மாயன், மாயா எல்லாம் சிலபஸிலேயே இல்லை என்பதையும் எப்பேர்ப்பட்ட இடர் வரினும் ஆளும் கட்சியுடன் ஜால்ரா அடித்த படியே எதிர்கட்சியுடனும் கை குலுக்கவும் தெரிந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தேவர்களின் சதியை முறியடிக்க போராட்டம் பார்க்டவுன் போஸ்டாபீஸ் எதிரில் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர்: அன்பு உடன் பிறப்பே உபயோகமத்த உலுத்தர்கள் உளறுவதைக் கேட்காதே. பொன்னர் சங்கர் வெற்றி விழாவும், உன் அன்பு அண்ணனின் கலைவிழாவும் சேர்ந்து அன்றைய தினம் நேரு விளையாட்டரங்கில் சிறப்பு குத்தாட்டத்தைக் கண்டு களிக்க அலைகடலெனத் திரண்டு வா என அழைக்கத் தோன்றிடினும் துக்கம் தொண்டையை அடைப்பதால் இலவசத் தொலைக்காட்சியில் கண்டு களிப்பாய் என நம்புகிறேன்.

ஜெ:உலகம் முழுதும் 2012ஐ எதிர் நோக்கியிருப்பினும் நடைபெறவிருக்கும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க பெரும்பான்மை இடத்தைப் பெறவிடாமல் கருணாநிதி சதி செய்து பொறுப்பற்ற விதத்தில் நடந்தும் பேசியும் வருவதை கவனத்தில் கொண்டு தனி கொடநாடு அடைந்தே தீருவோம் என்று உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

ராம்தாஸ்: நாங்கள் கேட்கிற உத்தரவாதம் தந்தாலே ஒழிய பா.ம.க. 2012ம் ஆண்டு நாட்காட்டியை வாங்குவதில்லை என்று தொண்டர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

நம்புங்கள் நாராயணன்:இப்போ சொல்றேன் குறித்துக் கொள்ளுங்கள். கடலோரம் இருக்கிற நாடுகள், மலை இருக்கிற நாடுகள், மரம் இருக்கிற நாடுகள், மணல் இருக்கிற நாடுகள், ஏரி குளம் இருக்கிற நாடுகளுக்கு பாதிப்பு இருக்கும். கிரகம் மோதும் போது அதுக்கு நேர் கீழ பூமியில் தலைகீழாக இருக்கும் நாடுகளில் பாதிப்பு அதிகமிருக்கலாம்.

புளியம்பழம் கொட்றா மாதிரி கொட்டிப் போகுமே தவிர, பூகோள அமைப்புப் படி கல்லுதடுக்கி சுண்டுவிரல்ல காயமாவது படும். 30 வயசுல இந்திராகாந்திக்கு இளநரை விழும்னு சொன்னேன். அப்படியே நடந்தது. இட்ஸ் ப்யூர் சயன்ஸ். வேணும்னா 22.12.2012 ல உசிரோட இருந்தா ஒரு ப்ரோக்ராம் வைங்கோ. நான் வரேன். நடந்ததா இல்லையான்னு புள்ளி விவரத்தோட தரேன்.

வல்லாரை வைத்தியர்: எதிர்ப்பு சக்தியில்லாததாலதான் எங்க இருக்கிற கிருமியோ கிரகமோ மனுசன தாக்குது. சாப்பிடுற சாப்பாட்டில கெமிகல், மருந்து மாத்திரைன்னு சாப்பிட்டு யாருக்கும் உடம்புல எதிர்ப்பு சக்தியே இல்லை. நம்ம தோட்டத்துல இயற்கை உரமா யானை, ஒட்டகம், மாட்டுசாணம் எல்லாம் போட்டு உற்பத்தியான வல்லாரை, நல்லாரை, கொல்லாரை மூலிகை கேப்சூல் 48 நாள் சாப்பிட்டா உங்க தலை மேல கிரகம் வந்து விழுந்தாலும் ஃபுட்பால் மாதிரி வந்த இடத்துக்கே திரும்பிடும். மிகக் குறைந்த விலையில் 48 நாள் கேப்சூல் 48 லட்ச ரூபாய். குடும்பமா வாங்கினா நேரில் டீல் முடிக்கலாம்.

ரியல் எஸ்டேட்: அரக்கோணத்துக்கும் மோசூருக்கும் நடுவில் பூமி உண்டான நாளிலிருந்து ஒரே ஒரு மழைத்துளி கூட விழாத இடத்தில் 350 ஏக்கராவில் அமைந்துள்ள 2012 நகரில் அப்ரூவ்டு ப்ளாட் விற்பனைக்கு உள்ளது. அருகிலேயே கருடா விமான தளம், 21/12 முடிந்ததும் ஊருக்கு திருட்டு ரயிலில் திரும்ப வசதியாக திருவாலங்காடு ஸ்டேஷன். ஒருவருக்கு அரை சதுர அடி மட்டுமே விற்கப்படும். விலை 45லட்சம். ரிஜிஸ்ட்ரேஷன் இலவசம். முதலில் பதிவு செய்யும் 30 பேருக்கு முட்டை பரோட்டா இலவசம்.

திருவிதாங்கூர் வைத்தியர்: த்ரேதாயுகத்தில் இப்படி நடந்த பொழுது டுபாக்குர் மகரிஷி ஓலைச்சுவடியில் எழுதி வைத்த வைத்தியக் குறிப்பு எங்கள் பரம்பரை வைத்திய முறையில் கடைப்பிடிக்கப் பட்ட களிம்பு. தடவிக் கொண்டால் கதிர் வீச்சு ஒன்றும் செய்யாது. நான்கே வாரம் தடவி வந்தால் செத்தால் போதும் என்ற நிலமைக்கு ஆளாகிவிடுவதால் கிரகம் குறித்த கவலையே இருக்காது.

டி.ஆர்: எம்மவன் சிம்பு. எனக்கேண்டா வம்பு. ஆனாலும் சொல்றேன் நம்பு. 18ம்தேதி உலகத்த என் கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணு. சரியா 20.12.2012 நள்ளிரவு 12.00 மணிக்கு ஆரம்பிச்சி 21.12.2012 வரைக்கும் உலகத்துல எல்லாரும் என்ன மாதிரி வேஷம் போட்டுகிட்டு ஹே டண்டணக்கா டணுக்குனக்கான்னு தெருவில இறங்கி ஆடிப்பாரு. எந்த கிரகமாவது வருமா கூறு. சொல்றது டியாரு.

வடிவேலு: ஏண்ணே. இந்த பாரின்ல சூட்டிங்னு போனா நேரத்த முன்ன பின்ன வைக்கறாங்களா இல்லையா. அப்புடி 2012 கேலண்டருல 21ம் தேதிய விட்டு அடிச்சிட்டு. 20ம்தேதி எந்த ஊர்ல முதல்ல முடியுதோ அங்கயிருந்து ஆரம்பிச்சி வரிசையா 22ம்தேதின்னு அறிவிச்சிட்டா சரியா போச்சா இல்லையா?

பொதுஜனம்.ங்கொய்யால.21ம் தேதி வெள்ளிக்கிழம வரதால உலகம் அழியப்போவுதுன்னு 20ம் தேதியே கூலி வாங்கிட்டு புல்லா சரக்கு வாங்கி ஸ்டாக் பண்ணா ஒரு வேள ஒன்னியும் நடக்கலன்னா சனி ஞாயிறு மப்பாயிடலாம். டாஸ்மாக் கட தொறக்க மாட்டானுங்கோ.

(டிஸ்கி:விஜயகாந்த் கருத்தைச் சொல்லவில்லை என்று யாரும் கேட்க மாட்டார்கள். அவரு மட்டையாய்டுவாருன்னு தெரியும்ல)


59 comments:

யூர்கன் க்ருகியர் said...

ஸ்ஸ் ஷப்பா......எவ்வளவு நேரந்தான் சிரிக்கிறது ? :)

க.பாலாசி said...

அய்யா முடியல....ஆபிஸ்ல உட்காந்திருக்கறதால சத்தமா கூட சிரிக்க முடியல...வயிறெல்லாம் வலிக்குது....

செம ரவுசு....எல்லாமே சூப்பரப்பு....

அகல்விளக்கு said...

முடியலங்க...

செம ரகள போங்க

அன்னிக்கு நீங்க பின்னூட்டம் போட்டப்பவே நினைச்சேன்.

ஆனா இவ்ளோ ரகள பண்ணுவீங்கன்னு சத்தியமா எதிர்பாக்கல..

:-)

இராகவன் நைஜிரியா said...

அய்யோ தாங்க முடியலடா சாமி...

அண்ணே நீங்க தெய்வம்...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அய்யோ தாங்க முடியலடா சாமி...

அண்ணே நீங்க தெய்வம்.../

வாங்கண்ணே. என்னாடா கட தெறந்து இவ்ளோ நேரமாச்சு. கல்லா கட்டலயேன்னு இருந்தேன்.

vasu balaji said...

அகல்விளக்கு said...

/முடியலங்க...

செம ரகள போங்க

அன்னிக்கு நீங்க பின்னூட்டம் போட்டப்பவே நினைச்சேன்.

ஆனா இவ்ளோ ரகள பண்ணுவீங்கன்னு சத்தியமா எதிர்பாக்கல..

:-)/

நன்றிங்க.

vasu balaji said...

க.பாலாசி said...

/அய்யா முடியல....ஆபிஸ்ல உட்காந்திருக்கறதால சத்தமா கூட சிரிக்க முடியல...வயிறெல்லாம் வலிக்குது....

செம ரவுசு....எல்லாமே சூப்பரப்பு..../

நன்றி பாலாசி.

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

/ஸ்ஸ் ஷப்பா......எவ்வளவு நேரந்தான் சிரிக்கிறது ? :)/

வாங்க யூர்கன். நன்றி

நசரேயன் said...

நான் பொதுஜனம்

vasu balaji said...

நசரேயன் said...

/ நான் பொதுஜனம்/

=)). வாங்க நசரேயன்

ஈரோடு கதிர் said...

பிரபாகர் : அய்யா! தாங்கள் எழுதியிருப்பது மிகவும் நன்றாக இருப்பதாக கருதுகிறேன். ஆனால் நான் எப்படியாவது என் தங்கையை காப்பாற்றி விடுவேன். இப்படித்தான் நான் கல்லூரியில் படிக்க போகும் போது பிடிஎஸ் படிக்க வேண்டுமென்று சொன்னதற்கு பிடிபிஎஸ் கல்லூரியில் சேர்த்து விட்டார்கள்..

கலகலப்பிரியா: அண்ணா! நீங்க பிடிபிஸ் கம்ப்யூட்டர் படிச்சதால் தான் இன்னிக்கு இங்க வந்து கும்மியடிக்கறீங்கனு சந்தோசப்படுங்க, (ஆஹா இன்னிக்கு எங்க அண்ணனுக்கே ஆப்பு வச்சிட்டனா!!) யப்பே...ஞான் எஸ்ஸ்ஸ்ஸ்க்கேப்ப்ப்ப்பு

கதிர்: இவனுங்க இப்படி மரத்த வெட்டுறப்பவே நினைச்சேன் உலகம் 2012ல் அழியும்னு

பாலாசி: அன்பரே! மரம் வெட்டியதால் மட்டுமா இந்த அழிவுநிலை, முன்னொரு நாள் மாடுகளை மழையில் நனையவிட்டு பாவம் புரிந்ததாலும் தானே இது நடக்கப்போகிறது...

இராகவன்: அண்ணே! நீங்கதான் தெய்வமா இருந்து என்னை காப்பாற்றனும்

கதிர் : அட, ஏங்க இராகவன்... இவரா உலகத்தை காக்கப்போகிறார், எங்கள் வெண்ணை சங்கத்த தலைவரச் சொன்னீங்கண்ணாக் கூட பரவாயில்லை

வானம்பாடி : உங்க வெண்ணை 2012 வரைக்கு உருகாம பார்த்துக்குங்க

பழமைபேசி : பணி என்னைப் பாடாய் படுத்துகிறது. 20012ல் வந்து படித்துக்கொள்கிறேன்

வானம்பாடி : அட மாப்பு இன்னிக்கும் எஸ்கேப்பா

கதிர் : அட.. மாப்பு 20012 ஆ...
மாப்புக்கே ஆப்பு வச்சிட்டம்ல

ஆரூரன் : த்தென்னங்... இப்பிடி சொல்லிப்போட்டீங்...

பிரியமுடன் வசந்த் : நைனா... நீ அடங்கமாட்டியாடி... நானெல்லாம் இன்னும் கல்யாணமே பண்ணலையே நைனா..... 2012க்குள் உன்னை நேர்ல பார்த்து கவனிச்சுகுறேன்

நிஜாம் கான் said...

அண்ணே! இதப்படிச்சி நான் வாய்விட்டுச் சிரிச்சித் தொலச்சத பக்கத்துல உள்ளவன் என்னய இவன் நல்லாத்தானய்யா இருந்தான் அப்டிங்கிறமாதிரி ஏளனமா பாக்குற நெலமைக்கு தள்ளிய உங்கள என்ன செய்வது. ஆனாலும் மருத்துவர் அய்யாவோடது தான் டாப் ஸ்டார் கமெண்ட்.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே கதிர் அண்ணே..

தூள் கிளப்பிட்டீங்க..

இதை ஒரு இடுகையாப் போட்டு இருந்தீங்கன்னா, இன்னும் பிரமாதாமா இருந்திருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

ஏமண்டி இது... இ கடையிலு, காத்தாடுது...

எல்லோரும் எக்கட போயிந்தி...

Rekha raghavan said...

இப்படியா ஒரு மனுஷன் எங்களையெல்லாம் சிரிப்புக் கடலில் தள்ளி விட்டுட்டு ஒண்ணுமே செய்யாத அப்பாவி மாதிரி தலையில் கையை வச்சுக்கிட்டு ஒரு போஸ் கொடுத்துக்கிட்டு இருப்பாரு?

ரேகா ராகவன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))))))))))))))

ஈரோடு கதிர் said...

//இராகவன் நைஜிரியா Says:
November 25, 2009 9:20 PM
ஏமண்டி இது... இ கடையிலு, காத்தாடுது...

எல்லோரும் எக்கட போயிந்தி...
//

2012 படம் பார்க்க போயிட்டாங்களோ

ஈரோடு கதிர் said...

//இராகவன் நைஜிரியா said...
அண்ணே கதிர் அண்ணே..
தூள் கிளப்பிட்டீங்க..
இதை ஒரு இடுகையாப் போட்டு இருந்தீங்கன்னா, இன்னும் பிரமாதாமா இருந்திருக்கும்.//

அண்ணே அருமையா ஐடியா கொடுக்கறீங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

ஷ்ஷப்பா...ரொம்ப ஷார்ப்பா தீட்டியிருக்க...கண்டிப்பா எங்களையில்லாட்டியும் அவிங்களா தீட்டிடும்...

கதிரின் பின்னுட்டம் படித்து இன்னும் சிரிப்ப அடக்க முடியலை இவ்வளவு காமெடிய உள்ளார வச்சுட்டு அடக்கமா சமூக இடுகை மட்டும் ஏன்?

காமெடியிலயும் பூந்து விளையாடுங்க தலைவா...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ அண்ணே அருமையா ஐடியா கொடுக்கறீங்க.../

நோஓஓஓஒ. கட என்னுது. ஐடியா எனக்குதான் சொந்தம். தொடர்ரவங்கள தொடர் இடுகைக்கு அழைக்கப் போறேன். ஜஸ்ட் வெயிட் அன் ஸீ.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இத்தனைப் பேர்த்த நீங்க கூர்ந்து கவனிக்கறீங்களா.,,,

மிகுந்த திறமைசாலி நீங்கள்.

நாகா said...

அய்யோ படத்த விட இது பயங்கரமா இருக்கே...:)

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ஷ்ஷப்பா...ரொம்ப ஷார்ப்பா தீட்டியிருக்க...கண்டிப்பா எங்களையில்லாட்டியும் அவிங்களா தீட்டிடும்...//

ஹி ஹி. நேத்து என்ன சொன்ன?

/கதிரின் பின்னுட்டம் படித்து இன்னும் சிரிப்ப அடக்க முடியலை இவ்வளவு காமெடிய உள்ளார வச்சுட்டு அடக்கமா சமூக இடுகை மட்டும் ஏன்?

காமெடியிலயும் பூந்து விளையாடுங்க தலைவா...//

இரு இரு. என்னா நடக்குதுன்னு மட்டும் பாரு.

vasu balaji said...

நாகா said...

/அய்யோ படத்த விட இது பயங்கரமா இருக்கே...:)/

வாங்க நாகா:))

vasu balaji said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

/ இத்தனைப் பேர்த்த நீங்க கூர்ந்து கவனிக்கறீங்களா.,,,

மிகுந்த திறமைசாலி நீங்கள்./

வாங்க டாக்டர். நன்றிங்க.

கலகலப்ரியா said...

பூஜ்யம் பின்னூட்டம் இருக்கிறப்போ கிளிக் பண்ண இடுகை... ஒன்பது பின்னூட்டம் இருக்கிறப்போ வாசிக்க ஆரம்பிச்சது.. பதினெட்டு பின்னூட்டம் ஆச்சு...! எல்லாம் ஆபீஸ் புண்ணியம்...! இப்போ மணி அஞ்சு ஆச்சோ இல்லியோ... படிச்சிட்டோம்...!

டண்டணக்கா... கொய்யாலே...திருவிதாங்கூர்...களிம்பு.. விமானதளம்... ரெஜிஸ்ட்ரேஷன் இலவசம்... மழைத்துளி... சுண்டுவிரல்... அதிமுக... பார்க்டவுன்...டிஸ்கி... சயன்டிஸ்ட்... ஒபாமா... சந்திரலேகா... பாமக... கருணாநிதி... கெமிகல்.. வல்லாரை... மாட்டுச்சாணம்....

ஒரு பின்நவீனத்துவக் கதைய... இப்டியா சொல்லுறது...!

பரவால்ல பரவால்ல... சிரிக்கிற மாதிரிதான் இருக்கு..! நான் சிரிக்கல... எனக்கு வயித்துவலி..! ஜூட்டு...!

இப்போ இருபத்தியாறு பின்நூட்டமாச்சு...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ அண்ணே அருமையா ஐடியா கொடுக்கறீங்க...//

இது நான் சொன்னா மாதிரி. நாளைக்கு ஆல் தி மீஜிக் ஸ்டாட்.=))

vasu balaji said...

ஸ்ரீ said...

/ :-))))))))))))))))))))))))/

வாங்க ஸ்ரீ:))))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஏமண்டி இது... இ கடையிலு, காத்தாடுது...

எல்லோரும் எக்கட போயிந்தி.../

கும்மிக்கு வராம இருந்துட்டு கேள்வி கேட்டா ஆச்சா..அவ்வ்வ்வ்வ்வ்வ்

vasu balaji said...

கலகலப்ரியா said...

/பூஜ்யம் பின்னூட்டம் இருக்கிறப்போ கிளிக் பண்ண இடுகை... ஒன்பது பின்னூட்டம் இருக்கிறப்போ வாசிக்க ஆரம்பிச்சது.. பதினெட்டு பின்னூட்டம் ஆச்சு...! எல்லாம் ஆபீஸ் புண்ணியம்...! இப்போ மணி அஞ்சு ஆச்சோ இல்லியோ... படிச்சிட்டோம்...!/

ஆஹா.

/ஒரு பின்நவீனத்துவக் கதைய... இப்டியா சொல்லுறது...!

பரவால்ல பரவால்ல... சிரிக்கிற மாதிரிதான் இருக்கு..! நான் சிரிக்கல... எனக்கு வயித்துவலி..! ஜூட்டு...! /

இத படிச்சி எனக்கு வந்திடிச்சி.

இத்தனை இடுகை போட்டதில இவ்வளவு பெரிய பின்னூட்டம் முதல் தடவை. யப்பே. நல்லாதான் எழுதறனா?

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...//

கதிரு... இது என் கண்ல மாட்டல.... தப்பிச்சிட்டீங்க... இருங்கடி... எங்க போய்ட போறீங்க...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

// பிரபாகர் : அய்யா! தாங்கள் எழுதியிருப்பது மிகவும் நன்றாக இருப்பதாக கருதுகிறேன். ஆனால் நான் எப்படியாவது என் தங்கையை காப்பாற்றி விடுவேன். இப்படித்தான் நான் கல்லூரியில் படிக்க போகும் போது பிடிஎஸ் படிக்க வேண்டுமென்று சொன்னதற்கு பிடிபிஎஸ் கல்லூரியில் சேர்த்து விட்டார்கள்..//

நன்றி பிரபாகர். இத ஒரு இடுகையா போடலாமே.

பிரபாகர்: சரிங்கைய்யா.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/கலகலப்பிரியா: அண்ணா! நீங்க பிடிபிஸ் கம்ப்யூட்டர் படிச்சதால் தான் இன்னிக்கு இங்க வந்து கும்மியடிக்கறீங்கனு சந்தோசப்படுங்க, (ஆஹா இன்னிக்கு எங்க அண்ணனுக்கே ஆப்பு வச்சிட்டனா!!) யப்பே...ஞான் எஸ்ஸ்ஸ்ஸ்க்கேப்ப்ப்ப்பு/

பதில். அக்கட சூடு=))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/கதிர்: இவனுங்க இப்படி மரத்த வெட்டுறப்பவே நினைச்சேன் உலகம் 2012ல் அழியும்னு/

இது விகடன்ல எப்ப வருது=))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/பாலாசி: அன்பரே! மரம் வெட்டியதால் மட்டுமா இந்த அழிவுநிலை, முன்னொரு நாள் மாடுகளை மழையில் நனையவிட்டு பாவம் புரிந்ததாலும் தானே இது நடக்கப்போகிறது.../

ம்கும். கார சட்னி சாப்பிட்டு கடமுட வயித்துல சாமந்திப்பூ வாங்கிட்டு பொண்டாட்டிய சமாதானம் பண்ணாலும் இப்படி நடக்கும்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/இராகவன்: அண்ணே! நீங்கதான் தெய்வமா இருந்து என்னை காப்பாற்றனும்/

பழமையோட ஊதடா சங்கு படிச்சுட்டு தப்பா புரிஞ்சிண்டீங்களாண்ணே.=))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/பழமைபேசி : பணி என்னைப் பாடாய் படுத்துகிறது. 20012ல் வந்து படித்துக்கொள்கிறேன்/

எப்புடி. அப்புச்சி மாதிரி கனவில வந்தா.

/கதிர் : அட.. மாப்பு 20012 ஆ...
மாப்புக்கே ஆப்பு வச்சிட்டம்ல/

ம்கும். இருங்க 200012ம் பக்கதுல இருந்து ஆப்புக்கு 23 அர்த்தம் சொல்லுவாரு மாப்பு. அப்ப இருக்குடி ஆப்பு

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ஆரூரன் : த்தென்னங்... இப்பிடி சொல்லிப்போட்டீங்.../

அட ஆமாங். அன்புடன் 2012னு போட்ருக்கோணுமுங்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/பிரியமுடன் வசந்த் : நைனா... நீ அடங்கமாட்டியாடி... நானெல்லாம் இன்னும் கல்யாணமே பண்ணலையே நைனா..... 2012க்குள் உன்னை நேர்ல பார்த்து கவனிச்சுகுறேன்/

நீ நடத்துடி. 2012 எப்போ வரும்னு ஆய்டும்.=))

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

/இப்படியா ஒரு மனுஷன் எங்களையெல்லாம் சிரிப்புக் கடலில் தள்ளி விட்டுட்டு ஒண்ணுமே செய்யாத அப்பாவி மாதிரி தலையில் கையை வச்சுக்கிட்டு ஒரு போஸ் கொடுத்துக்கிட்டு இருப்பாரு?

ரேகா ராகவன்./

வாங்க ஸார். நன்றி=)). எங்க கொஞ்ச நாளா காணோம்?

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! இதப்படிச்சி நான் வாய்விட்டுச் சிரிச்சித் தொலச்சத பக்கத்துல உள்ளவன் என்னய இவன் நல்லாத்தானய்யா இருந்தான் அப்டிங்கிறமாதிரி ஏளனமா பாக்குற நெலமைக்கு தள்ளிய உங்கள என்ன செய்வது. ஆனாலும் மருத்துவர் அய்யாவோடது தான் டாப் ஸ்டார் கமெண்ட்.//

வாங்க நிஜாம்.:))நன்றி.

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா Says:
கதிரு... இது என் கண்ல மாட்டல.... தப்பிச்சிட்டீங்க... இருங்கடி... எங்க போய்ட போறீங்க...
//

சரி சரி... வயசாயிடுச்சு... கண்ணாடி போடுங்க... அப்போ தெரியும்

புலவன் புலிகேசி said...

//அன்பு உடன் பிறப்பே உபயோகமத்த உலுத்தர்கள் உளறுவதைக் கேட்காதே. பொன்னர் சங்கர் வெற்றி விழாவும், உன் அன்பு அண்ணனின் கலைவிழாவும் சேர்ந்து அன்றைய தினம் நேரு விளையாட்டரங்கில் சிறப்பு குத்தாட்டத்தைக் கண்டு களிக்க அலைகடலெனத் திரண்டு வா//

சூப்பரு..சரியா சொன்னீங்க இவனுங்க அப்பவும் அதத்தான் செய்வாங்கே...

நல்ல காமெடி ஐயா...

ரோஸ்விக் said...

ஆஹா...! உங்களுக்கும், காத்திருக்கும் ரொம்ப குசும்புயா...:-)
ரெண்டு பேரும் என்னமா நக்கலா எழுதீருக்கீங்க...புல் ஃபார்ம்-ல இருக்கீங்க போல...

நீங்க பிராபலங்களுக்கு நக்கல் டப்பிங் குடுத்தா....கதிர் - பிரபலங்களுக்கு(அப்பாடி எதுவும் தப்பா type அடிச்சிரலையே...அப்புறம் எனக்கு டின் கட்டிடுவாங்க... ) டப்பிங் குடுக்குறாரு...:-))

ரெண்டுமே அருமைய்யா ...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/சரி சரி... வயசாயிடுச்சு... கண்ணாடி போடுங்க... அப்போ தெரியும்/

ஹூம். அவிய்ங்கவிய்ங்க எடுக்கிற முடிவு அவங்களுக்கு பாதகமா இருந்தா நீ என்னடா செய்வ வானம்பாடி. போ போஓஓஓஒ.போய்க்கேஏஏஏயிருபோஓஓ.=))

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/
நல்ல காமெடி ஐயா.../

நன்றி புலிகேசி

vasu balaji said...

ரோஸ்விக் said...

/ரெண்டுமே அருமைய்யா .../

நன்றி ரோஸ்விக்

Unknown said...

கலக்கிடீங்க போங்க...

மணிப்பயல் said...

ஹைய்யா! நான் உங்களுக்கு முன்னமே இதே மாதிரி ஒரு பதிவெழுதிட்டேன்.

cheena (சீனா) said...

ஐய்ம்பது நானா

அது சரி

பல்வேறு துறைகளிலும் பன்முகம் கட்ட்டும் பாலா

நல்வாழ்த்துகள் - நல்லதொரு நகைச்சுவையான இடுகை இட்டதற்கு

இடுகையில் நகைச்சுவை அதிகமா - அல்லது மறுமொழிகளில் அதிகமா
பட்டி மனற இடுகை எப்பொழுது வரும்

நல்வாழ்த்துகள் பாலா

நன்கு ரசித்தேன்

vasu balaji said...

பேநா மூடி said...

/கலக்கிடீங்க போங்க.../

நன்றி.

vasu balaji said...

மணிப்பயல் said...

/ஹைய்யா! நான் உங்களுக்கு முன்னமே இதே மாதிரி ஒரு பதிவெழுதிட்டேன்./

:). பார்த்தேன். நல்லாருக்கு.

vasu balaji said...

cheena (சீனா) said...

/ஐய்ம்பது நானா

அது சரி

பல்வேறு துறைகளிலும் பன்முகம் கட்ட்டும் பாலா

நல்வாழ்த்துகள் - நல்லதொரு நகைச்சுவையான இடுகை இட்டதற்கு

இடுகையில் நகைச்சுவை அதிகமா - அல்லது மறுமொழிகளில் அதிகமா
பட்டி மனற இடுகை எப்பொழுது வரும்

நல்வாழ்த்துகள் பாலா

நன்கு ரசித்தேன்/

வாங்க சார். நன்றி. கதிருக்கும் ராகவனுக்கும், கலகலப்ரியாவுக்கும், (பிரபாகர் காணோம்) நன்றி சொல்லணும். இடுகை மரண மொக்கையாக இருந்தாலும் இவர்களின் கும்மி தூக்கிவிடும்.

Rekha raghavan said...

//வாங்க ஸார். நன்றி=)). எங்க கொஞ்ச நாளா காணோம்?//

அடுத்த மாதம் என் பெரிய மகன் திருமணம். அதுதான் அவ்வப்போது மிஸ்ஸிங். ஆனா ஒட்டு மட்டும் போட்டுடறேனே!

ரேகா ராகவன்.

பழமைபேசி said...

ஆகா... எனக்கும் உங்க அரட்டைல கலந்துக்க ஆசையாத்தான் இருக்கு...ஆனா.........

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

/அடுத்த மாதம் என் பெரிய மகன் திருமணம். அதுதான் அவ்வப்போது மிஸ்ஸிங். ஆனா ஒட்டு மட்டும் போட்டுடறேனே!

ரேகா ராகவன்./

நல்ல செய்தி. ஓட்டு என்ன சார். பின்னூட்டம்தான் ஊக்கம். நன்றி.

vasu balaji said...

பழமைபேசி said...

/ஆகா... எனக்கும் உங்க அரட்டைல கலந்துக்க ஆசையாத்தான் இருக்கு...ஆனா........./

ஆனா? =))

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் Says:
November 26, 2009 8:58 AM

//கலகலப்ரியா Says:
கதிரு... இது என் கண்ல மாட்டல.... தப்பிச்சிட்டீங்க... இருங்கடி... எங்க போய்ட போறீங்க...
//

சரி சரி... வயசாயிடுச்சு... கண்ணாடி போடுங்க... அப்போ தெரியும்//

கண்ணாடி கண்ணில படுற மாதிரி போடுறதில்ல கதிரு...! (வானம்பாடி... இத கதிரு கிட்ட சேர்த்துடுங்க சாரே..)

பின்னோக்கி said...

எனக்கு என்னமோ..இதெல்லாம் அவங்க உண்மையாவே சொல்ற மாதிரி தான் இருக்கு.