(டிஸ்கி: தலைப்பைத் திருடத் தந்த கலகலப்ரியாவுக்கு நன்றி)
கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா என்ற விடை தெரியாத கேள்வி அப்படியே இருக்க, முட்டை இட்ட பிறகு கோழி செத்ததா? கோழி செத்த பிறகு முட்டையிட்டதா என்ற கேள்வியும் சேரும் விதி வாய்த்தது எனக்கு. 1971ம் ஆண்டு தீபாவளி. அப்பொழுது 13 வயது முடிந்திருக்கவில்லை எனக்கு. நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டு ஓராண்டு முடிந்திருந்தது.
அதற்கு முன்பிருந்த வீட்டில் வீட்டுச் சொந்தக் காரரின் மகனும் நானும் நண்பர்கள் என்பதால், அவன் வைத்திருந்த சின்ன சைக்கிளில் ஓட்டப் பழகியிருந்தேன். பெரிய சைக்கிளில் குரங்குப் பெடல் பிரமாதமாக வரும். நான் மிகவும் உயரம் என்பதால் (கலகலா இப்போவே 5'2"னு 2" குறைவா சவுண்ட் விடுறத கண்டுக்காதிங்க) பெடல் சக்கிர அச்சில் கால் வைத்தாலும் சீட்டு தாண்டி கால் போட சர்க்கஸ் செய்தாக வேண்டும். மைதானத்தில் ஓட்டுகையில் ஓரளவு சமாளித்து உட்கார்ந்தாலும், பெடல் முழுதுமாக மிதிக்க கால் எட்டாது.
அந்த தீபாவளிக்கு பட்டாசு அதிகமாக வாங்கவில்லை. வெண்ணைக்காக கொஞ்சம் ஊசி பட்டாசு, மத்தாப்பு அவ்வளவுதான். தொலைக்காட்சி கேள்விப் படாத காலம். குடியிருந்த தெரு நீளம் என்பதால் மற்றவர் வெடிக்கும் பட்டாசுகளை வேடிக்கை பார்க்க முனை வரை போனேன்.
நான்கு வீடு தள்ளி என் பகைவனின் வீடு கடந்து போகையில் அவன் கறி தோசை கேட்டு ரகளை செய்ததால் அடி விழுந்துக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு அடிக்கும், அழாமல் எனக்கு கறிதோசை வேண்டும் என்றே அலறியதில் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. வேகமாகக் கடந்து போய் சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு தெரு முனைக்கு வர, வாடகை சைக்கிள் கடை திறந்திருந்ததைக் கண்டேன். .
மண்டைக்குள் சைத்தான் மணியடிக்க, வெடி ஆரவாரமும் கொஞ்சம் ஓய, முதல் முறையாக மெதுவாக அம்மாவைச் சுரண்டி வாடகை சைக்கிளுக்கு முப்பது பைசா தேத்தியாகி விட்டது. ராக்ஃபெல்லர் ரேஞ்சுக்கு (பீரியட்ங்க. அந்தக்காலத்தில அப்புடி சொல்லிதான் திட்டுவாங்க, பெரிய ராக்ஃபெல்லர் பரம்பரை போடான்னு) தெம்பாகப் போய், ணா! சின்ன சைக்கிள் ஒன் அவர்க்கு வேணும்ணா என்றேன். அது பெண்டுடா, இன்னொண்ணு இப்போதான் வெளிய போச்சு என்று மனதை உடைத்து, பெருசுதான் இருக்கு என்றார்.
நம்ம ராசிக்கு அதுவும் 24" தான் இருந்தது. ஆனாலும் வேண்டாமென்று போய், சின்ன சைக்கிள் வரும் வரை காத்திருந்தால் அம்மா மனசு மாறி வேண்டாம் என்றால் கஷ்டமாகிவிடும். சரி குரங்குப் பெடல்தான் இன்னைக்கு என்று எடுத்துக் கொண்டு அதே வீதியில் கோடிக்கு கோடி மிதப்பில் திரிந்தேன். அப்போது கூட தோழர் கேப் விட்டு விட்டு கறி தோசைக்கு போராடிக் கொண்டிருந்ததில் சிரிப்பு வேறு.
அவனுக்கு பக்கத்து வீட்டில், நாங்கள் கரடி என்று பெயர் வைத்திருந்த எங்கள் பள்ளியில் படிக்கும் பெண்ணின் வீடு. அது அப்பொழுதுதான் ஒரு கூடை பட்டாசு வைத்துக் கொண்டு பக்கி மாதிரி பகலில் புஸ்வாணம் கொளுத்திக் கொண்டிருந்தது. அதுக்குப் போய் ஒரு ஆண்மகன் பயப்படுவானா? ஜம்மென்று குரங்குப் பெடலில் போய் வந்துக் கொண்டிருந்தேன். ரொம்ப நேரமாக குரங்குப் பெடல் அடித்த தைரியத்தில் எப்படியோ ஃப்ரேமில் கால் வைத்து சீட்டில் உட்கார்ந்து ஓட்ட ஆரம்பித்தேன். வேகமாக மிதித்தால் வண்டியோட்டத்தில் பெடல் மேலுக்கு வர கால் எட்டியது.
எனக்கு சனியன் அப்போது பிடித்தானா? இல்லை கையில் கொளுத்தி தூக்கிப் போட அந்தக் கரடி நினத்த போது சிரித்தானா என்பது தெரியவில்லை. கொஞ்சம் தூரத்தில் வரும்போதே பட்டாசு காற்றில் வெடிப்பது கண்டு, இறங்குவதா? இங்கு இறங்க பிரயத்தனம் செய்தால் அவர்கள் வீடு தாண்டுவதற்குள் இறங்க முடியுமா? ஓட்டிக் கொண்டு போனால் வேகமாக போய் விடலாமா என்று யோசிப்பதற்குள் வந்தே விட்டது அவர்கள் வீடு.
சரியாக அந்த நேரம் பார்த்து அந்தப் பரதேசி ஒரு வெடியை வீச, நான் கவனப் பிசகாய் பயத்தில் இறங்கப் போய் உலரப்போட்ட கால்சட்டை போல் சைகிள் ஃப்ரேமில் தொங்க, அதே நேரம் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழியும் மிரண்டு பறக்க, ஒரிரண்டு செகண்டில் கொக்கொக், டொம், அம்மாஆஆஆ என்று முறையே கோழி, பட்டாசு மற்றும் நான் சப்தமிட்டோம்.
அடுத்த நொடியில் சைக்கிளின் முன் சக்கரம் கால்வாயில், அதில் சிக்கிக் கொண்டு நான், என் முகத்துக்கு நேரே கோழி. ஒரு கண்ணில் அதன் வாய் வழியே ரத்தம் வருவதும் மறுகண்ணில் அதன் பின் வழியே முட்டை சுகப்பிரசவமானதும் தெரிந்தது. கவட்டை ஃப்ரேமில் பட்டு மூச்சு நின்று போய் நான். அய்யோ என் கோழி என்று எதிரியின் அம்மா. ஆஹா இன்னைக்கு கறிதோசை டோய் என்று அழுத கண்ணீரைக் கூட துடைக்காமல் என் எதிரி ஒடிவந்து கோழியைத் தூக்கினான்.
அந்தம்மா புருசங்காரன் போய்ச் சேர்ந்தா மாதிரி மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வெடுக்கென கோழியை ஒரு கையில் பறித்தபடி, என் காலரை மறு கையில் பிடித்து சைக்கிளிலிருந்து உதறி விடுவித்து நீதி கேட்ட கண்ணகி மாதிரி, போட்டிருந்த கொண்டை அவிழ, நடந்தது. ஒரு கையில் தொங்கிய கோழியும், கவட்டியில் பட்ட அடியினால் நடக்க முடியாமல் நானும் ஒரே மாதிரி தொங்கிக் கொண்டிருக்க இழுத்துக் கொண்டு போனார் அந்தம்மணி.
என்னமோ கோழிக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறில் நான் போட்டுத் தள்ளியது போல, அம்மாவிடம் உம்புள்ள என் செனக்கோழிய கொன்னுட்டாம்மா என்று மூஞ்சிக்கு நேராக ஆட்டிய கத்தியது அந்தம்மா. பதறி நடுங்கிய அம்மாவிடம் என் காலர் முறையாக கை மாறி என்ன இழவுடா இது என்றபடி முதுகில் ஆட்டம் பாம் வெடித்தது. ஒரு கையில் தேர்ந்த தவில் வித்துவான் போல் லயம் பிசகாமல் முதுகில் சாத்தியபடியே, சரிம்மா நடந்து போச்சு. என்ன பண்ணனும் சொல்லு எனக் கேட்க அந்தம்மா 100ரூ கொடு என்றது.
100 ரூபாயா என அதிர்ந்து பேரம் தொடங்கி, அந்தம்மா கோழியை அம்மா முகத்துக்கு நேராக நீட்டி நீட்டி பேசும் போதெல்லாம் அலறி, என் முதுகில் சாத்தி (ஹெ. எதிரி பார்த்துக் கொண்டிருக்க அழுதுடுவமா?) 30 ரூ தருகிறேன் என்றாள். யம்மா, உயிரோடு கோழி 12 ரூ உரித்த கோழி 15 ரூ என்று (கறிக்கடையில் பார்த்த போர்ட் கண்முன் வந்து போக) அடிக்கு நடுவே அந்தத் தகவலையும் சொல்லிவிட்டேன்!
செனக்கோழி 12ரூபாய்க்கு தராங்களா? 2 நாள்ள முட்டை வெச்சிருந்தா அது குஞ்சாகின்னு கோழிப்பண்ணை கணக்கு சொல்லி, சாவடிச்சிட்டு பேசுறான் பாருன்னு இன்னும் வேகமாக கோழியை ஆட்ட, ஊர்வம்ப இழுத்து விட்டு வாய் வேற உனக்கு கிழியுதோ என்று ஒரே முனைப்பாய் ரெண்டு கையிலும் தபலா வாசித்தார் அம்மா. ஒரு வழியாய் 30ரூ வாங்க அந்தம்மா சம்மதிக்க, சப்தம் கேட்டு சம்முகம் பொண்டாட்டி, அதான் முனீசுவரன் பார்ட்டி மேலே வந்தாங்க.
என்னாடி கோழிய வெச்சிகிட்டு தகராரு பண்ற? மாமி, நீ சொல்லு என்னாச்சின்னாங்க. சலுகை சொல்ல ஆள் வந்ததில் அம்மா அழுதபடி விபரம் சொல்ல அந்தம்மா, ஏண்டி 30ரூ வேணுமா உனக்கு, கோழி விலை வாங்கிக்கன்னிச்சி. அதெல்லாம் முடியாதுக்கா. பேசியாச்சி 30ரூ தரசொல்லுன்னுச்சி அந்தம்மா. சரி, கோழியக் குடு என்று பிடுங்கி மாமி நீ 25ரூ குடு என்று வாங்கிக் கொடுத்து, இந்தாடி இவ்வளவுதான் போன்னாங்க.
அந்தம்மா, என்னாக்கா நீ வேற என்றபடி கோழியைக் கேட்க, கோழியும் குடுத்து 25ரூபாயும் குடுப்பாங்களா? கோழி எனக்கு, நீ ஓடுன்னாங்க. எனக்கு இஃகிகினு வந்திச்சி. . எதிரிக்கு கறி தோசை போய்டுமோன்னு விழி பிதுங்கிப் போச்சி. அந்தம்மா, விளையாடாதக்கா! கோழி போச்சேன்னு வூட்டுக்காரர் கத்துவாரு நீ குடுத்துடுக்கான்னுச்சு. கோழியும் கொடுத்து, 25ரூ தரமுடியாது. கோழி வேணுமானா எடுத்துகிட்டு குழம்பு செலவுக்கு 10ரூ போக மிச்சம் கொடு. இல்லன்னா போன்னு கராறா பேசுனாங்க.
விதியேடான்னு கோழிய வாங்கிகிட்டு 15ரூ திரும்பக் கொடுத்துட்டு கோழியை பிடுங்கிக் கொண்டு போச்சு அந்தம்மா. எனக்கு 15ரூ மிச்சமான ஆறுதல். எதிரிக்கு கறிதோசை கிடைச்சிடும்னு சந்தோஷம். அப்புறம் ஒரு வழியாக பப்பரப்பேன்ன்னு காலை அகட்டி கெந்திக் கெந்திப் போய் சைக்கிளைக் கொடுத்துவிட்டு வந்து, வாங்கிய அடிக்கு நிதானமாக அழுதேன். அன்று முதல் கோழி செத்தப்புறம் முட்டை வந்திருக்குமா? முட்டையிட்டப்புறம் கோழி செத்திருக்குமா என்ற கேள்வியைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.

110 comments:
//சைக்கிளும், நானும் முன்னே ஒரு கோழியும்//
நல்லா இருக்கு சார்.. நக்கல்..
lemme read..
கலகலப்ரியா said...
/நல்லா இருக்கு சார்.. நக்கல்..
lemme read../
தலைப்புதான் காமெடி. கோழிக்கும் எனக்கும் ட்ராஜிடி:))
//சைக்கிளும், நானும் முன்னே ஒரு கோழியும்.//
படித்ததுக்கப்புறம்... "கோழியும்.. நானும்.. பின்னே சைக்கிளும்" என்பதுதான் சரியா வரும்னு தோணுறது.. இல்லைனா.. "எதிரியும்.. கறி தோசையும்.. பின்னே முட்டையும்.." ... இன்னும் நிறைய ஐடியா இருக்கு... ஆனா வேணாம்..
இப்போ சைக்கிள் ஓட்டுறீங்களா சார்..? கால் எட்டுதா...? (எல்லார் முன்னாடியும் பதில் சொல்ல கஷ்டம்னா மெயில் அனுப்புங்க... இல்லைனா எனக்கு தலை வெடிச்சிடும்)
இப்போ புரியுது... தீபாவளி பட்டாசு மேல உங்களுக்கு இருக்கிற வெறுப்பு..
ஹும்.. என்ன பண்றது.. எல்லாம் அந்தக் கரடிப் பொண்ணுக்கு கரடி வித்தை காட்ட நினைச்சதால வந்த முட்டை.. ஐ மீன் கோழி.. ச்சை... ஐ மீன்.. பிரச்சனை.. !
இன்னைக்கு ஆச்சு வரேன் சார்.. ஸ்ஸ்ஸப்பா...!
ச்சே.. சொல்லாம இருக்க முடியல சார்... எதிரிக்கு கெடுதல் பண்றதா நினைச்சு.. ஸ்பாட்ல கோழியக் கொன்ன (எப்டி சார்.. இதுவே எவ்ளோ பெரிய சாதனை.. ஆடு.. மாடு கிடையாது.. கோழி சார் கோழி..) உங்களுக்கு கிடைச்சுது முதுகில கறி... ஆனா எதிரிக்கு கிடைச்சுது கறித்தோசை... இதுதான் சார் வாழ்க்கை...!
/"கோழியும்.. நானும்.. பின்னே சைக்கிளும்" என்பதுதான் சரியா வரும்னு தோணுறது.. இல்லைனா.. "எதிரியும்.. கறி தோசையும்.. பின்னே முட்டையும்.."/
சுட்ட தலைப்பே சூப்பர்.
/இப்போ சைக்கிள் ஓட்டுறீங்களா சார்..? கால் எட்டுதா...? /
அதுக்கப்புறம் 12 வருஷம் கழிச்சி வெண்ணைக்கு ஒரு சைக்கிள் வாங்கிண்டு ஏறி உட்கார்ந்தேன். பெடல் எட்டினாலும், தரையில ஊன்ற முடியல. சரின்னு மொபட் வாங்கிட்டேன். ஹி ஹி. சொல்லிறாதம்மா யாருக்கும்.
/இப்போ புரியுது... தீபாவளி பட்டாசு மேல உங்களுக்கு இருக்கிற வெறுப்பு.. /
இதுவும் ஒரு காரணம்.
/ஹும்.. என்ன பண்றது.. எல்லாம் அந்தக் கரடிப் பொண்ணுக்கு கரடி வித்தை காட்ட நினைச்சதால வந்த முட்டை.. ஐ மீன் கோழி.. ச்சை... ஐ மீன்.. பிரச்சனை.. !/
அய்யோ. அதெல்லாமில்லை. நீ வேறம்மா. கோழியும் முட்டையும் குடுத்த குடைச்சலுக்கு முதுகு வீங்கிப் போச்சு மீன் மீன்னு வேற இழுத்து விடுறியே:))
கலகலப்ரியா said...
/ச்சே.. சொல்லாம இருக்க முடியல சார்... எதிரிக்கு கெடுதல் பண்றதா நினைச்சு.. ஸ்பாட்ல கோழியக் கொன்ன (எப்டி சார்.. இதுவே எவ்ளோ பெரிய சாதனை.. ஆடு.. மாடு கிடையாது.. கோழி சார் கோழி..) உங்களுக்கு கிடைச்சுது முதுகில கறி... ஆனா எதிரிக்கு கிடைச்சுது கறித்தோசை... இதுதான் சார் வாழ்க்கை...!//
ஆத்தாடி. கோழிக்கு சொந்தக்காரிய விட மோசமா கதை எழுதுறியா நீ. அவன் கறிதோசைக்கு அழுறான்னு தெரிஞ்சி கோழிய போட்டுத் தள்ளுவேனா? ஹி ஹி
பாலா சார்.... பிரியா மேடம்தான் மொத போணியா!!???....
இருங்க சார்....... படிச்சிட்டு வாரேன்
//அப்பொழுது 13 வயது முடிந்திருக்கவில்லை //
12 வயசு.... 364 நாள்.... முடிஞ்சிருக்குமா!!!!???
அதுதான் உங்க வயசு எங்களுக்கு தெரியுமே.... ஏன் இந்த பில்டப்பு
// கதிர் - ஈரோடு said...
பாலா சார்.... பிரியா மேடம்தான் மொத போணியா!!???....
இருங்க சார்....... படிச்சிட்டு வாரேன்//
கதிர் சார்.. பாருங்க.. சார்.. மேடம்னா ஒரு கெத்தா இருக்கில்ல... இத விட்டுப்புட்டு... பேரு சொல்லி கூப்டா தேவலாம்னு யாரோ வேலை மெனக்கெட்டு இடுகை எல்லாம் போடுறாங்க சார்... என்ன கொடுமை சார்ர்ர்ர்ர்....
கலகலப்ரியா said...
/கதிர் சார்.. பாருங்க.. சார்.. மேடம்னா ஒரு கெத்தா இருக்கில்ல... இத விட்டுப்புட்டு... பேரு சொல்லி கூப்டா தேவலாம்னு யாரோ வேலை மெனக்கெட்டு இடுகை எல்லாம் போடுறாங்க சார்... என்ன கொடுமை சார்ர்ர்ர்ர்..../
ஹியர் ஹியர். சொன்னா கேக்குறாங்கல்ல மேடம் இந்த கதிர் சார்.
கதிர் - ஈரோடு said...
/12 வயசு.... 364 நாள்.... முடிஞ்சிருக்குமா!!!!???
அதுதான் உங்க வயசு எங்களுக்கு தெரியுமே.... ஏன் இந்த பில்டப்பு/
13 வயசில நாலரை அடின்னு சொல்லிக்காம இருக்கதான் இஃகிகி
/கறிதோசை வேண்டும் என்றே அலறியதில் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை//
அடுத்தவங்க பசி சிர்ப்பு...சிர்ப்ப்ப்பா இருக்கா?
//மண்டைக்குள் சைத்தான் மணியடிக்க//
ஏன்னே சைத்தான் மணியடிச்சா... முடி கொட்டிடுமா?
//இறங்குவதா? இங்கு இறங்க பிரயத்தனம் செய்தால் அவர்கள் வீடு தாண்டுவதற்குள் இறங்க முடியுமா? ஓட்டிக் கொண்டு போனால் வேகமாக போய் விடலாமா என்று யோசிப்பதற்குள்//
அட..... ரூம் போட்டு யோசிக்க வேண்டியதுதானே!!!!???
//ஆஹா இன்னைக்கு கறிதோசை டோய் //
அது புத்திசாலிப்புள்ள.... காரியத்த சாதிச்சுப்புடிச்சில்ல
//சம்முகம் பொண்டாட்டி//
ஆத்தா.... நல்லாருக்கீங்களா..
அட... நாட்டமை கணக்கா... என்ன சாமர்த்தியம்
சரி சைக்கிள் கடைக்கு அழுத செலவு அடுத்த இடுகையோ
//
கதிர் - ஈரோடு said...
/கறிதோசை வேண்டும் என்றே அலறியதில் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை//
....
....
சரி சைக்கிள் கடைக்கு அழுத செலவு அடுத்த இடுகையோ
//
அய்யா, அருமைங்கய்யா...
என் அடுத்த இடுகை ஒரு கோழி மேட்டர் தான் கதிர்.... அய்யாவோட ஆசியோட... அனுபவத்த சொல்லி நம்ம நினைவுகளை கிளறி விட்டுட்டாரு...
கதிர் - ஈரோடு said...
/அடுத்தவங்க பசி சிர்ப்பு...சிர்ப்ப்ப்பா இருக்கா?/
ஆஹா. வந்துட்டாருய்யா. நம்மள வில்லன் ரேஞ்சுக்கு ஆக்கிடுவாய்ங்க போலயே.
/அட..... ரூம் போட்டு யோசிக்க வேண்டியதுதானே!!!!???/
அட அதுக்கு நேரமிருந்தா பண்ணமாட்டமாக்கு.
/ஏன்னே சைத்தான் மணியடிச்சா... முடி கொட்டிடுமா?/
இன்னேரம் தெரிஞ்சிருக்கணுமே. உங்களுக்கும் அடிச்சதா=))
/அது புத்திசாலிப்புள்ள.... காரியத்த சாதிச்சுப்புடிச்சில்ல/
அந்த நாய் அத நினைக்குதா. அப்புறமும் எதிரியாவே திரிஞ்சான்.
/ஆத்தா.... நல்லாருக்கீங்களா..
அட... நாட்டமை கணக்கா... என்ன சாமர்த்தியம்/
ம்கும். அப்புறம் ஏண்டா என் கிட்ட கூட்டிவரலைன்னு அதும் ஒண்ணு போட்டுச்சு. அவ்வ்வ்.
/சரி சைக்கிள் கடைக்கு அழுத செலவு அடுத்த இடுகையோ/
ஏன் இந்தக் கொலவெறி.
பிரபாகர் said...
/அய்யா, அருமைங்கய்யா...
என் அடுத்த இடுகை ஒரு கோழி மேட்டர் தான் கதிர்.... அய்யாவோட ஆசியோட... அனுபவத்த சொல்லி நம்ம நினைவுகளை கிளறி விட்டுட்டாரு.../
நன்றி. ஆஹா செத்த கோழி கூட பண்ணையாரும் போலயே.=))
//மைதானத்தில் ஓட்டுகையில் ஓரளவு சமாளித்து உட்கார்ந்தாலும், பெடல் முழுதுமாக மிதிக்க கால் எட்டாது.//
இப்பவும் அப்பிடித்தானா இல்லை கொஞ்சம் வளர்ந்தாச்சா?
நான் மைதானத்தை சொன்னேன்..
:))
//என்னாடி கோழிய வெச்சிகிட்டு தகராரு பண்ற? மாமி, நீ சொல்லு என்னாச்சின்னாங்க. சலுகை சொல்ல ஆள் வந்ததில் அம்மா அழுதபடி விபரம் சொல்ல அந்தம்மா, ஏண்டி 30ரூ வேணுமா உனக்கு, கோழி விலை வாங்கிக்கன்னிச்சி. அதெல்லாம் முடியாதுக்கா. பேசியாச்சி 30ரூ தரசொல்லுன்னுச்சி அந்தம்மா. சரி, கோழியக் குடு என்று பிடுங்கி மாமி நீ 25ரூ குடு என்று வாங்கிக் கொடுத்து, இந்தாடி இவ்வளவுதான் போன்னாங்க.
அந்தம்மா, என்னாக்கா நீ வேற என்றபடி கோழியைக் கேட்க, கோழியும் குடுத்து 25ரூபாயும் குடுப்பாங்களா? கோழி எனக்கு, நீ ஓடுன்னாங்க. எனக்கு இஃகிகினு வந்திச்சி. . எதிரிக்கு கறி தோசை போய்டுமோன்னு விழி பிதுங்கிப் போச்சி. அந்தம்மா, விளையாடாதக்கா! கோழி போச்சேன்னு வூட்டுக்காரர் கத்துவாரு நீ குடுத்துடுக்கான்னுச்சு. கோழியும் கொடுத்து, 25ரூ தரமுடியாது. கோழி வேணுமானா எடுத்துகிட்டு குழம்பு செலவுக்கு 10ரூ போக மிச்சம் கொடு. இல்லன்னா போன்னு கராறா பேசுனாங்க. //
ஒரு மண்ணும் புரியலை
கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லாயிருந்துருக்கும்...
பிரியமுடன்...வசந்த் said...
/இப்பவும் அப்பிடித்தானா இல்லை கொஞ்சம் வளர்ந்தாச்சா?
நான் மைதானத்தை சொன்னேன்..
:))/
பார்த்தா தெரியலை. மைதானம் வளர்ந்தாச்சு. ஆமா. நீ ராக்கோழியாச்சே. இன்னேரத்துல பின்னூட்டம் எப்புடி. லீவா?
லீவில்ல..பெர்மிசன்..
பிரியமுடன்...வசந்த் said...
/ஒரு மண்ணும் புரியலை
கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லாயிருந்துருக்கும்.../
உண்டி கவிதை எழுதுவ. இது புரியாதா. அந்தம்மா கோழியும் எடுத்துகிட்டு 30ரூ லாபம்னு கணக்கு போட்டுச்சி. சம்முகம் பொண்டாட்டி கோழி எடுத்துக்கோ, குழம்பு செலவுக்கு 10ரூ போதும்னு பஞ்சாயத்து.
ப்ரியாக்கா அந்த போட்டோல இருக்குற நர்ஸக்கா எங்க வேலை செய்றாங்க?
/பிரியமுடன்...வசந்த் said...
லீவில்ல..பெர்மிசன்../
ஓஹோ
பிரியமுடன்...வசந்த் said...
/ப்ரியாக்கா அந்த போட்டோல இருக்குற நர்ஸக்கா எங்க வேலை செய்றாங்க?/
அந்தக் குழந்தைய பார்த்தா நர்ஸா தெரியுதா உனக்கு.
//பிரியமுடன்...வசந்த் said...
ப்ரியாக்கா அந்த போட்டோல இருக்குற நர்ஸக்கா எங்க வேலை செய்றாங்க?//
நீ என் கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு போயி படுத்துக்க போறியே.. அதே ஆச்சுபிட்டல்தாண்டாம்பி...!
கலகலப்ரியா said...
/நீ என் கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு போயி படுத்துக்க போறியே.. அதே ஆச்சுபிட்டல்தாண்டாம்பி...!/
=)). அப்புடி போடு.
//வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...
/ப்ரியாக்கா அந்த போட்டோல இருக்குற நர்ஸக்கா எங்க வேலை செய்றாங்க?/
அந்தக் குழந்தைய பார்த்தா நர்ஸா தெரியுதா உனக்கு.//
சார்ர்ர்ர்ர்ர்... இதுக்கு அவனே பெட்டர்...! வேணாம்.. தூங்கிட்டிருக்கிற குழந்தைய.. அட ச்சே... சந்திரமுகிய எழுப்பி விட்டுடாதீங்க சொல்லிப்புட்டேன்..
// கலகலப்ரியா said...
நீ என் கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு போயி படுத்துக்க போறியே.. அதே ஆச்சுபிட்டல்தாண்டாம்பி...!//
வசந்து.... ஏன்... சொந்த செலவுல சூனியம் வச்சுக்கனும்
//ஒரிரண்டு செகண்டில் கொக்கொக், டொம், அம்மாஆஆஆ என்று முறையே கோழி, பட்டாசு மற்றும் நான் சப்தமிட்டோம். //
செம கலக்கல் சார்...
//நீ என் கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு போயி படுத்துக்க போறியே.. அதே ஆச்சுபிட்டல்தாண்டாம்பி...! //
ஹ ஹ ஹா
//கலகலப்ரியா said...
சந்திரமுகிய எழுப்பி விட்டுடாதீங்க சொல்லிப்புட்டேன்..//
என்ன கொடும.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸார் இது!!!!!!!
பிரியா.... மேடம்.... சௌக்கியமா?
கலகலப்ரியா said...
/சார்ர்ர்ர்ர்ர்... இதுக்கு அவனே பெட்டர்...! வேணாம்.. தூங்கிட்டிருக்கிற குழந்தைய.. அட ச்சே... சந்திரமுகிய எழுப்பி விட்டுடாதீங்க சொல்லிப்புட்டேன்../
சரி. விழிச்சாச்சி. சந்திரமுகி இடுகை வந்து நாளாச்சி. போடும்மா.
//அந்தக் குழந்தைய பார்த்தா நர்ஸா தெரியுதா உனக்கு. //
அப்டியா தெரிது உனக்கு
//கதிர் - ஈரோடு said...
// கலகலப்ரியா said...
நீ என் கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு போயி படுத்துக்க போறியே.. அதே ஆச்சுபிட்டல்தாண்டாம்பி...!//
வசந்து.... ஏன்... சொந்த செலவுல சூனியம் வச்சுக்கனும்//
கதிர் சார்ர்ர்ர்... வாங்க சார்ர்ர்ர்.. உங்களுக்கு சொன்ன பதிலுக்கு பதில் சொல்ல காணோம்... அவனுக்கு ஓசில அட்வைஸா...
அகல் விளக்கு said...
/செம கலக்கல் சார்.../
:) நன்றிங்க.
//கதிர் - ஈரோடு said...
//கலகலப்ரியா said...
சந்திரமுகிய எழுப்பி விட்டுடாதீங்க சொல்லிப்புட்டேன்..//
என்ன கொடும.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸார் இது!!!!!!!
பிரியா.... மேடம்.... சௌக்கியமா?//
பரம சௌக்யம் ஸாஆர்... எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார்ர்ர்ர்ர்ர்....
கதிர் வந்தாச்சா... இனிமே வெளிச்சம்தான்!
// பிரியமுடன்...வசந்த் said...
//அந்தக் குழந்தைய பார்த்தா நர்ஸா தெரியுதா உனக்கு. //
அப்டியா தெரிது உனக்கு//
சார் புது கண்ணாடி வாங்கி இருக்கார்.. அதான் அப்டி தெரியுது.. நீ கண்டுக்காத வசந்து..
கதிர் - ஈரோடு said...
/என்ன கொடும.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸார் இது!!!!!!!
பிரியா.... மேடம்.... சௌக்கியமா?/
விக்கட் நம்பர் ரெண்டு=))
பிரபாகருக்கு ஒரு கும்பிடு...
பிரியமுடன்...வசந்த் said...
/அப்டியா தெரிது உனக்கு/
ஆமாம். ஏன் உனக்கு நர்ஸ் மாதிரி தெரியலாம் எனக்கு குழந்தை மாதிரி தெரியக்கூடாதா.
கலகலப்ரியா said...
/சார் புது கண்ணாடி வாங்கி இருக்கார்.. அதான் அப்டி தெரியுது.. நீ கண்டுக்காத வசந்து../
ஆஆஆ. கட்சி மாறிட்டியே கலகலா. அவனே ரவுசு பார்ட்டியாச்சே.அவ்வ்வ்
//வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...
/அப்டியா தெரிது உனக்கு/
ஆமாம். ஏன் உனக்கு நர்ஸ் மாதிரி தெரியலாம் எனக்கு குழந்தை மாதிரி தெரியக்கூடாதா.//
ஏன்..குழந்தை நர்ஸ்சா இருக்கப்டாதா... நர்ஸ் குழந்தையா இருக்கப்டாதா... இப்டி எல்லாம் கேளுங்கையா... அவ்வ்வ்வ்வ்வ்வ்...
//
ஆஆஆ. கட்சி மாறிட்டியே கலகலா. அவனே ரவுசு பார்ட்டியாச்சே.அவ்வ்வ்//
ஹெஹே அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
வசந்தத்தின் ஆரம்பம், ககலவென ஓடும் சிற்றோடையின் அருகே ஆதவனின் கதிரின் ஒளியில் ஒரு வானம்பாடி மெதுவாய் பண்ணிசைக்க பாமரர்களும் சந்தோசித்திருந்த வேளையில் .... சும்மா வர்ணனை... இதில் உள்ள பெயர்களை சொல்லுங்கள் பார்ப்போம்...?
//ஆஆஆ. கட்சி மாறிட்டியே கலகலா. அவனே ரவுசு பார்ட்டியாச்சே.அவ்வ்வ் //
ஆமா இவரு 2 மூணு கோடி தொண்டர் படை வச்சு கட்சி நடத்துறார் அவங்க கட்சி மாறுறாங்க..
கலகலப்ரியா said...
/ஏன்..குழந்தை நர்ஸ்சா இருக்கப்டாதா... நர்ஸ் குழந்தையா இருக்கப்டாதா... இப்டி எல்லாம் கேளுங்கையா... அவ்வ்வ்வ்வ்வ்வ்.../
இல்லை இல்லை. அழாத..ம்ம்ம்ம்.தோ. காக்கா பாரு, குருவி பாரு.=))
//வசந்தத்தின் ஆரம்பம், ககலவென ஓடும் சிற்றோடையின் அருகே ஆதவனின் கதிரின் ஒளியில் ஒரு வானம்பாடி மெதுவாய் பண்ணிசைக்க பாமரர்களும் சந்தோசித்திருந்த வேளையில் .... சும்மா வர்ணனை... இதில் உள்ள பெயர்களை சொல்லுங்கள் பார்ப்போம்...? //
வாங்க பிரபாண்ணே
நீங்களுமா?
ஹா ஹா ஹா. செம கலக்கலான இடுகை சார். ரொம்ப எஞ்சாய் பண்ணினேன்.
பிரபாகர் said...
அடடா. தன் பேரை விட்டுட்டாரே=))
//காக்கா பாரு, குருவி பாரு.=)) //
காக்கா குருவிக்கெல்லாம் எப்போ பார் திறந்தாய்ங்க...
ஆதவன் னா பிரபாகர் அய்யா! அதுக்குத்தான் கேட்டேன்..
பிரியமுடன்...வசந்த் said...
/ஆமா இவரு 2 மூணு கோடி தொண்டர் படை வச்சு கட்சி நடத்துறார் அவங்க கட்சி மாறுறாங்க../
தோடா. உன்ன தனியா என்னால சமாளிக்க முடியாது. அவளும் உன்பக்கம் சேர்ந்தா என்கதி என்னா?
//பிரபாகர் said...
வசந்தத்தின் ஆரம்பம், ககலவென ஓடும் சிற்றோடையின் அருகே ஆதவனின் கதிரின் ஒளியில் ஒரு வானம்பாடி மெதுவாய் பண்ணிசைக்க பாமரர்களும் சந்தோசித்திருந்த வேளையில் .... சும்மா வர்ணனை... இதில் உள்ள பெயர்களை சொல்லுங்கள் பார்ப்போம்...?//
ஆஹா... கவி.. .கவி.... பிரவாகமாக ஓடும் சிற்றோடையில்...
S.A. நவாஸுதீன் said...
/ஹா ஹா ஹா. செம கலக்கலான இடுகை சார். ரொம்ப எஞ்சாய் பண்ணினேன்./
வாங்க நவாஸ். நன்றிங்க.
//பிரபாகர் said...
ஆதவன் னா பிரபாகர் அய்யா! அதுக்குத்தான் கேட்டேன்..//
ஓஹோ... நீங்க ஆதவன்னா.. கதிர்.. உங்க கை மாதிரின்னு சொல்லுறீங்களா... கதிர் சார்ர்ர்ர்ர்.... எங்க எஸ்கேப்பு... ))
பிரியமுடன்...வசந்த் said...
/காக்கா குருவிக்கெல்லாம் எப்போ பார் திறந்தாய்ங்க.../
தோஹால இருந்தே பார் கேக்குதா?=))
கலகலப்ரியா said...
/ஓஹோ... நீங்க ஆதவன்னா.. கதிர்.. உங்க கை மாதிரின்னு சொல்லுறீங்களா... கதிர் சார்ர்ர்ர்ர்.... எங்க எஸ்கேப்பு... ))/
ஆஹா=)). அப்புடி போடும்மா. 3 விக்கட் டவுன்.
//ஓஹோ... நீங்க ஆதவன்னா.. கதிர்.. உங்க கை மாதிரின்னு சொல்லுறீங்களா..//
ஆமாங்க... கை தான்... என் நம்பிக்கை.
//வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...
/காக்கா குருவிக்கெல்லாம் எப்போ பார் திறந்தாய்ங்க.../
தோஹால இருந்தே பார் கேக்குதா?=))//
பார் என்றால் பூமி...! பையனை ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள்...! புலவர் ஆதவனிடம் இந்த நியாயத்தை எடுத்துரைத்து ஞானம் பெறுவீராக...!
//தோஹால இருந்தே பார் கேக்குதா?=))
//
ஓய்..என்னியப்பத்தி என்னா நினைச்ச?
கொன்னுடுவேன்...
//பார் என்றால் பூமி...! பையனை ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள்...! புலவர் ஆதவனிடம் இந்த நியாயத்தை எடுத்துரைத்து ஞானம் பெறுவீராக...! //
அது சூப்பர்க்கா..
மரமண்டைக்கு போகுது பார் எண்ணம்...
//பிரபாகர் said...
//ஓஹோ... நீங்க ஆதவன்னா.. கதிர்.. உங்க கை மாதிரின்னு சொல்லுறீங்களா..//
ஆமாங்க... கை தான்... என் நம்பிக்கை.//
புலவரே... ஆதவனின் கதிர்தான் ஆதவனுக்கு நம்பிக்கையா... பிரமாதம்... யார் அங்கே... ஒரு தும்பிக்கை யானையை இவருக்குப் பரிசாக அளியுங்கள்...
//பார் என்றால் பூமி...! பையனை ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள்...! புலவர் ஆதவனிடம் இந்த நியாயத்தை எடுத்துரைத்து ஞானம் பெறுவீராக...!
//
பாரை விட இந்த பாரையே கேட்பது கொஞ்சம் அதிகமாய்ப் படுகிறது.
ப்ரியா சொல்வதில் நியாயம் இல்லாமல் இல்லை ...
கடமை அழைக்கிறது.... ஆதவனும்... கதிரும்.. வசந்தமும்... வானம்பாடியும்.. அதன் பின்னே பின்னூட்ட ஞானிகள்.. அனைவரிடமிருந்தும் பிரியா-விடை பெறுகிறேன்...!
நன்றி நன்றி நன்றி..
பிரபாகர் said...
/ஆமாங்க... கை தான்... என் நம்பிக்கை./
அலோ. நீங்க சூனியாவோட கை சின்னம் சொல்லலயே.
பிரியமுடன்...வசந்த் said...
/ஓய்..என்னியப்பத்தி என்னா நினைச்ச?
கொன்னுடுவேன்.../
அது அது. இந்த அறச்சீற்றம் வருதான்னு பார்க்கதான்.
/அது சூப்பர்க்கா..
மரமண்டைக்கு போகுது பார் எண்ணம்.../
அச்சோ. ஓவரா சீன் போடாத ராசா. சொந்தமா சொல்ல தெரியல. அக்கா சொன்னா தம்பி ஜால்ரா அடிக்கிறாரு.
//
வானம்பாடிகள் said...
பிரபாகர் said...
/ஆமாங்க... கை தான்... என் நம்பிக்கை./
அலோ. நீங்க சூனியாவோட கை சின்னம் சொல்லலயே.
//
அந்த கருமத்த சொல்வேனா அய்யா... வாழ்க்கை, நம்பிக்கை... தமிழர்களை கொன்று குவித்து குழி தோண்டி புதைத்த அந்த கையை சொல்லவில்லை அய்யா... சொல்லவும் மாட்டேன்.
கலகலப்ரியா said...
/நன்றி நன்றி நன்றி../
கலக்கப் போவது யாரு பார்த்து கெட்டு போயிட்ட நீயி.=))
என்னா நடக்குது இங்க.
என்னால கலந்துக்க முடியலைன்னு நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்குது. அலுவலகத்தில் உட்கார்ந்து கும்மி அடிக்க முடியல.. திங்கட் கிழமை இப்படி ஒரு கும்மி இடுகை போட்டா..
வந்து கவனிச்சுக்கிறேன்.
ஆத்தாடி.... சோறு தின்னுபோட்டு வர்றதுகுள்ள இம்புட்டு ஆட்டமா!!!???
//கலகலப்ரியா said...
கடமை அழைக்கிறது.... ஆதவனும்... கதிரும்.. வசந்தமும்... வானம்பாடியும்.. அதன் பின்னே பின்னூட்ட ஞானிகள்.. அனைவரிடமிருந்தும் பிரியா-விடை பெறுகிறேன்...! //
அட ஆத்தா... அப்பீட்டா..
வாங்கப்ப நாம் இனி வெளையாடலாம்.. பயமில்லாம
// முட்டை இட்ட பிறகு கோழி செத்ததா? கோழி செத்த பிறகு முட்டையிட்டதா என்ற கேள்வியும் சேரும் விதி வாய்த்தது எனக்கு. //
ஓ இதுதான் விதி வலியது என்று சொல்லுவார்களா/
// 1971ம் ஆண்டு தீபாவளி. அப்பொழுது 13 வயது முடிந்திருக்கவில்லை எனக்கு. //
அண்ணே போன இடுகையில் உங்க வயசு 52 அப்படின்னு சொன்னீங்க.
2009 - 52 = 1957 +13 = 1970.
1971 -ல் 14 வயசு முடியலைன்னு சொல்லுங்க.
இராகவன் நைஜிரியா said...
/என்னா நடக்குது இங்க./
அண்ணே வாங்க
நானும் இப்பத்தான் யோசிக்கிறேன். முட்ட எப்ப வந்திருக்கும்.
தொங்கிகிட்டு இருந்தப்பவே சரியா பார்த்திருந்தா இப்ப இந்த கேள்வி வந்திருக்காதுல்ல.
ஆமா உங்க தம்பி அப்ப என்ன பண்ணினார். (உங்க முதுகுல தவில் வாசிசப்ப..)
க.பாலாசி said...
/நானும் இப்பத்தான் யோசிக்கிறேன். முட்ட எப்ப வந்திருக்கும்.
தொங்கிகிட்டு இருந்தப்பவே சரியா பார்த்திருந்தா இப்ப இந்த கேள்வி வந்திருக்காதுல்ல.
ஆமா உங்க தம்பி அப்ப என்ன பண்ணினார். (உங்க முதுகுல தவில் வாசிசப்ப..)/
என்னாத்த சரியா பார்க்குறது. சிலதெல்லாம் விளங்கிக்கிறணும். =))
அவன் கோழியப் பார்த்து பயந்துட்டு அம்மா கால கட்டிக்கிட்டு இருந்தான்.
கலகலப்ரியா said...
/புலவரே... ஆதவனின் கதிர்தான் ஆதவனுக்கு நம்பிக்கையா... பிரமாதம்... யார் அங்கே... ஒரு தும்பிக்கை யானையை இவருக்குப் பரிசாக அளியுங்கள்.../
=))
கதிர் - ஈரோடு said...
/அட ஆத்தா... அப்பீட்டா..
வாங்கப்ப நாம் இனி வெளையாடலாம்.. பயமில்லாம/
என்னா வில்லத்தனம். இப்ப வருவா. ரிப்பீட்டேய்னு=))
இராகவன் நைஜிரியா said...
/ஓ இதுதான் விதி வலியது என்று சொல்லுவார்களா//
யாருக்குண்ணே. எனக்கா கோழிக்கா?
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே போன இடுகையில் உங்க வயசு 52 அப்படின்னு சொன்னீங்க.
2009 - 52 = 1957 +13 = 1970.
1971 -ல் 14 வயசு முடியலைன்னு சொல்லுங்க./
அவ்வ்வ்வ். 52 வயசுன்னு மறைக்காம சொல்லுறேனே 14 வயச தப்பா 13ன்னு சொன்னா கண்டுக்கிறப்படாது.
ஒரிரண்டு செகண்டில் கொக்கொக், டொம், அம்மாஆஆஆ என்று முறையே கோழி, பட்டாசு மற்றும் நான் சப்தமிட்டோம்,
சரியான காமெடிதான் போங்க!!
ஃபுல் ஃபார்ம்ல நல்ல ஃபுளோல எழுதியிருக்கீங்க சார். ஒரே மூச்சில படிச்சு முடிச்சேன்.
வேலை டைட்டு. :((
அதான் விசிட்டுக்கு லேட்டு....
Meeran said...
/சரியான காமெடிதான் போங்க!!/
வாங்க மீரான். நன்றிங்க.
துபாய் ராஜா said...
/ ஃபுல் ஃபார்ம்ல நல்ல ஃபுளோல எழுதியிருக்கீங்க சார். ஒரே மூச்சில படிச்சு முடிச்சேன்.
வேலை டைட்டு. :((
அதான் விசிட்டுக்கு லேட்டு....//
ஆஹா. அப்படின்னா இப்போ டென்சன் போய் சிரிச்சிருப்பீங்க. நன்றிங்க ராஜா.
மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
என்ன நடந்திருக்குமோ, ஏது நடந்திருக்குமோ என பரபரப்பாக இருந்தது.
கறிதோசை மட்டுமல்ல, அந்த பையனுக்கு முட்டை தோசையும் கிடைச்சிருக்கும் :)
கமலஹாசன் பார்த்திருந்தா "உன்னைப் போல் ஒரு கோழி" னு படமே எடுத்திருப்பார்.
// பதறி நடுங்கிய அம்மாவிடம் என் காலர் முறையாக கை மாறி என்ன இழவுடா இது என்றபடி முதுகில் ஆட்டம் பாம் வெடித்தது. ஒரு கையில் தேர்ந்த தவில் வித்துவான் போல் லயம் பிசகாமல் முதுகில் சாத்தியபடியே, சரிம்மா நடந்து போச்சு. என்ன பண்ணனும் சொல்லு //
:) :) :) :)
வெ.இராதாகிருஷ்ணன் said..
/மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
/
நன்றிங்க.
தேனீ said...
/கமலஹாசன் பார்த்திருந்தா "உன்னைப் போல் ஒரு கோழி" னு படமே எடுத்திருப்பார்.
:)). ஆஹா இது நல்லா இருக்கே. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
//நான்கு வீடு தள்ளி என் பகைவனின் வீடு கடந்து போகையில் அவன் கறி தோசை கேட்டு ரகளை செய்ததால் அடி விழுந்துக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு அடிக்கும், அழாமல் எனக்கு கறிதோசை வேண்டும் என்றே அலறியதில் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை//
சிரிப்பு வந்தது பாமரன் ....நகைச்சுவை உங்களுக்கு நன்றாய் வருகிறது
வெண்ணிற இரவுகள்....! said...
/சிரிப்பு வந்தது பாமரன் ....நகைச்சுவை உங்களுக்கு நன்றாய் வருகிறது/
நன்றிங்க.
//ஒரிரண்டு செகண்டில் கொக்கொக், டொம், அம்மாஆஆஆ என்று முறையே கோழி, பட்டாசு மற்றும் நான் //
ஆ..! சார்..! முக்கியமான பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்..! அந்த கோழி.. வெடிச் சத்தத்ல அதிர்ச்சில செத்திருக்கலாமில்லையா..? கதைல ஒரு டர்னிங் பாயிண்ட்..! இத வச்சே.. ஒரு த்ரில்லர் கத ரெடி பண்ணிடலாம்...! அந்த கோழிக்கு கொடுத்த காசு திரும்ப வட்டியோட வாங்காம விடுறதில்ல சார்...
கலகலப்ரியா said...
/ஆ..! சார்..! முக்கியமான பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்..! அந்த கோழி.. வெடிச் சத்தத்ல அதிர்ச்சில செத்திருக்கலாமில்லையா..? /
ஆமாம். பிரசவம் வேற ஆயிருக்கே.
/இத வச்சே.. ஒரு த்ரில்லர் கத ரெடி பண்ணிடலாம்...! /
ஆஹா. லகலகாக்கு வேலை.
/அந்த கோழிக்கு கொடுத்த காசு திரும்ப வட்டியோட வாங்காம விடுறதில்ல சார்.../
:(. எங்கம்மா. அந்த சம்முகம் பொண்டாட்டி கோழிக்கு காசு குடுக்கிறதில்லை. குழம்பு வைக்கதான் காசுன்னு நாட்டாமை பண்ணிடிச்சே.
என்னமோ கோழிக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறில் நான் போட்டுத் தள்ளியது போல, அம்மாவிடம் உம்புள்ள என் செனக்கோழிய கொன்னுட்டாம்மா என்று மூஞ்சிக்கு நேராக ஆட்டிய கத்தியது அந்தம்மா. //
ஹஹஹஹஹ செம கலக்கல்.
//ராக்பெல்லர் பரம்பரை//
இப்பவும் சொல்றாங்க சார்...
//அதுக்குப் போய் ஒரு ஆண்மகன் பயப்படுவானா?//
ஆண்மகனை சாச்சிபுட்டாங்களே சார்...
செம நக்கல், கலக்கல் டாப்பு
//கோழி எனக்கு, நீ ஓடுன்னாங்க. எனக்கு இஃகிகினு வந்திச்சி. . எதிரிக்கு கறி தோசை போய்டுமோன்னு விழி பிதுங்கிப் போச்சி. //
ஏன்னா வில்லத்தனம்.........நகைச்சுவையான அனுபவம்.....
படிக்க படிக்க சிரிப்பு வந்துட்டே இருந்ததுங்க....சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிடும் போங்க..! ரொம்ப அருமைங்க..!
நாஞ்சில் பிரதாப் said...
/
செம நக்கல், கலக்கல் டாப்பு/
நன்றிங்க பிரதாப்
புலவன் புலிகேசி said...
/ஏன்னா வில்லத்தனம்.........நகைச்சுவையான அனுபவம்...../
ம்கும். அனுபவம் டெர்ரர். இப்போதான் நகைச்சுவை.ஹிஹி
லெமூரியன் said...
/படிக்க படிக்க சிரிப்பு வந்துட்டே இருந்ததுங்க....சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிடும் போங்க..! ரொம்ப அருமைங்க..!/
வாங்க. நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
பதிவுலகம் முழவதும் ஒரே கோழி வாசம்..........
நல்ல அருமையான இடுகை.....
ஊடகன் said...
/பதிவுலகம் முழவதும் ஒரே கோழி வாசம்..........
நல்ல அருமையான இடுகை...../
ஆஹா. கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாங்கைய்ய்ய்ய்யா. நன்றி ஊடகன்.
தலைவா... கலாசுறீங்க...
ஈ ரா said...
/தலைவா... கலாசுறீங்க.../
நன்றி.
யெப்பா...பின்னூட்டம் பூரா படிக்க விடுப்புலதான் வரணும் போல இருக்கு?! அப்ப நான் போய்ட்டு வாறேன் பாலாண்ணே!
/ பழமைபேசி said...
யெப்பா...பின்னூட்டம் பூரா படிக்க விடுப்புலதான் வரணும் போல இருக்கு?! அப்ப நான் போய்ட்டு வாறேன் பாலாண்ணே!/
=)).வாங்க பழமை
அய்யோ. அம்மா. வயிறு வலிக்குது.ஒரிறு வினாடியில் கொக்கொக்,டொம்.அம்மா....மூவரும் சத்தமிட.....
எனக்கு அந்த சம்முவம் பொண்டாட்டிதான் பிடிச்சது. அதிரடின்னா அதான். உங்களுக்கு ரொம்ப சந்தொசமாய் இருந்திருக்குமே
வாத்துக்கோழி said...
/எனக்கு அந்த சம்முவம் பொண்டாட்டிதான் பிடிச்சது. அதிரடின்னா அதான். உங்களுக்கு ரொம்ப சந்தொசமாய் இருந்திருக்குமே/
என்னங்க நீங்க. கோவம்தான் வந்திச்சி. முன்னடியே வந்திருந்த முதுகு பிழைச்சிருக்குமேன்னு. =))
இந்த ஆராய்ச்சிக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுக்கலாம்
பின்னோக்கி said...
/இந்த ஆராய்ச்சிக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுக்கலாம்/
ஆமாம். மன்மோகனுக்கு டாக்டர் பட்டம் குடுக்கறேன்னு ஒரு ஆள பரலோகத்துக்கு அனுப்பிட்டானுங்க. நமக்கு வேணாஞ்சாமி.
Post a Comment