Tuesday, October 6, 2009

சாமியோவ்!

சாமியாடுறதுன்னு ஒன்னு இருக்கே. அதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்களோ தெரியாது. சாமி வந்து குறி சொல்லுறது அது இதுன்னு நம்ம சனங்களுக்கு நிறையவே நம்பிக்கை. சின்ன வயசில காமெடியா ஆரம்பிச்சி அப்புறம் டரியலாகி மிரண்டு திரும்ப காமெடின்னுதான் நம்ம அனுபவம்.

ரொம்ப சின்ன வயசுல அம்மாவோட குக்கிராமத்துக்கு வருசம் ஒருக்கா  போறது. நாம, அரச்சலூர்ல இருந்து பெரியம்மா பசங்க, பெங்களூருல இருந்து மாமா பசங்கன்னு அந்த கிராமத்துல கூடுறது. மின்சாரம் ஜமீந்தார் வீட்டில மட்டும் இருக்கும். பாட்டியூட்டுல அரிக்கேன் விளக்குதான். சாப்பிடுறப்ப மட்டும், கார் பேட்டரில கனெக்ஷன் குடுத்து ஒரு குண்டு பல்பு எரியும். விளக்குக்கே வழியில்லாத ஊரில கழிப்பறைக்கு வழியேது?

ஊருக்கு வெளிய இருக்கிற கருவேலங்காடுதான். ஒரு பாதி ஆம்பிளைங்களுக்கு ஒரு பாதி பெண்டுகளுக்கு, நடுவில அடர்ந்த கருவேலமரங்கள்னு ஒரு அமைப்பா இருக்கும். அதுக்கும் நாலஞ்சு பேரா துணை சேர்த்துகிட்டுதான் போறது. அப்படி ஒரு நாள் பொழுது சாய போய்ட்டு வரும்போது முன்னாடி அக்காமார் கும்பல் ஒண்ணு போச்சு. அங்க போய்ட்டு வரப்ப கோவிலுக்கு பின்னால வழியாதான் போகணும் .

எதுக்கோ என்னமோ தெரியல. திடீர்னு தப்பு சத்தம் கேக்க ஆரம்பிச்சதும், முன்னாடி போய்ட்டிருந்த ஒரு அக்காக்கு சாமி வந்துடிச்சி. மெதுவா குலுங்கி அப்புறம் சுத்தோ சுத்துன்னு சுத்தி அது மிரட்டிட்டிருக்க கும்பல்ல ஒரு அக்கா ஓடிப்போய் எங்கயோ கற்பூரம் தேத்திட்டு வந்து சாமிய மலையேத்திச்சி. வாழ்க்கைல முதல் முறையா இப்புடி பார்க்கிறதால, திரும்ப காட்டுக்குள்ள போடான்னு வயிறு மிரட்டுச்சி.

சுதாரிச்சி மெதுவா எங்கண்ணனுங்கள பார்த்து என்னாடா இதுன்னா , பெரியவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான். ஒரு வழியா சிரிச்சி முடிச்சி சாமி வந்துச்சாம்டான்னான். நான் அப்பாவியா என்னா சாமிடான்னேன். அதுக்கு அவன் சொன்ன பேர அப்புடியே சொல்ல முடியாது.

கால் கழுவாத சாமின்னு சொல்லிக்கலாம். அந்த லீவ் முடிஞ்சி நாங்க கிளம்பறதுக்குள்ள அந்தக்காவ கண்டா கால் கழுவாத சாமீஈஈஈஈஈஈஈன்னு கத்திட்டு ஓடுறது. விட்றுவாங்களா? முனிசீபூட்டுல (ஹெ ஹெ நம்ம மாமாதான்) பிராது குடுத்தாங்க. 

முனிசீப்பு கூப்டாரு. ஏண்டா இப்புடி பண்ணீங்களான்னாரு. அண்ணனுங்க இருக்குறப்போ பொத்திகிட்டு இருக்க வேணாமா? துருத்திக்கிட்டு ஆமாம். அன்னைக்கு போய்ட்டு வரும்போது அந்தக்கா மேல சாமி வந்திச்சா. இவந்தான் சொன்னான் கால் கழுவாத சாமீன்னு. அதெப்புடி மாமா கால் கழுவாதப்ப சாமி வருன்னேன்.

ஹி ஹி. முன்சீப்பு சிரிப்பு அடக்க முடியாம அப்புடியெல்லாம் பேசக்கூடாது. சாமி கண்ணக் குத்திடும் ஓடுன்னுட்டாரு. அப்புறம் முன்னவிட கொஞ்சம் சத்தம் கம்மியா அப்புடி கத்துவோம்.

அப்புறம் வருஷம் உருண்டோட நம்ம கே.ஆர்.விஜயாம்மாவ வருசம் ஃபுல்லா ஒரே மேக்கப்ல விட்டாங்க போல. அவங்க நடிக்காத அம்மனில்லன்னு ஆச்சு. தினத்தந்தில வேற இந்தப் படத்தைக் காணவரும் தாய்மார்கள் மீது அம்மன் வருவதைக் காணத் தவறாதீர்கள்னு விளம்பரம் வரும்.

அதென்னமோ சாமி சயானி தியேட்டர்ல வராது. சரஸ்வதி, லட்சுமி தியேட்டர்ல கண்டிப்பா வரும். ஒன்னு ரெண்டில்ல, கும்பல் கும்பலா வரும். பட்டுனு படத்த நிறுத்தி, மலையேத்திட்டுதான் படம் தொடரும். அப்போ கொஞ்சம் மிரண்டது உண்மை.

அக்காவுக்கு கலியாணம் ஆகி ஆண்டுகள் உருண்டோடிச்சே தவிர குழந்தை உண்டாகல. (நல்லகாலம் அப்போ மான்கறி வைத்தியரெல்லாம் இல்லை. இருந்திருந்தாலும் டப்பு லேது). அம்மா அவ கலியாணத்துக்கு ஜாதகத்தை தூக்கிகிட்டு அலையாததும் சேர்த்து வெச்சி, அலைவாங்க.

தவிர்க்க முடியாம குறி கேக்குறதும் வந்து சேர்ந்துச்சி. இதெல்லாம் சாத்தியமே இல்லன்னு நான் நாத்திகம் பேசுறது அவங்களுக்கு பிடிக்காது. ஆனா நிறுத்தாம போய்ட்டிருப்பாங்க. நாம குடியிருந்த வீட்டு சொந்தக்காரம்மாவ முனீஸ்வரன் புடிச்சிக்குவாரு. அமாவாசை, வெள்ளிக்கிழமைன்னா தப்பாம விசிட் பண்ணுவாரு.

அப்புடி வந்தான் ஒரு ஆளு. வெத்திலையில மை தடவி புள்ள பொறக்குமா இல்லையா சொல்லுறேன்னு. சின்னப்பையன் நீ இங்க நிக்காத ஓடுன்னு விரட்டி, அவனுக்கு தட்சிணையெல்லாம் வெச்சி (ங்கொய்யாலே. கேன்வாஸ்  ஷூ போட்டுட்டுதான் வரணும்னு சொன்ன வாத்திக்கே துட்டில்ல போய்யான்னு தண்ணி காட்டிக்கிட்டிருக்கேன். இவனுக்கு  தட்சிணை) அவன் சொன்னத கேட்டுக்கிட்டிருந்த அம்மா முன்னாடி காரைக்காலம்மையாரெல்லாம் காணாமா போயிருப்பாங்க. அப்புடி ஒரு பக்தி.

அந்தாளு போனதும், சாயுங்காலமா அம்மா போய் ஒரு முழுத்தேங்கா சிரட்டையோட வாங்கிட்டு வந்தாங்க. வாழைப்பழம், வெத்திலை பாக்கு, எல்லாம் வெச்சு அக்காவ உக்கார வெச்சு, தேங்காய்ல கற்பூரம் ஏத்தி சுத்தி, தலைமுடி கொஞ்சம் வெட்டி எல்லாம் சேர்த்து என் பழைய‌ பனியன்ல உள்ளார வெச்சு (வெள்ளத்துணில சுத்தணுமாம்) ஒரு ஓரமா வெச்சாங்க.

விஞ்ஞானிட்ட சொல்ல வேணாமா? காலைல 5 மணிக்கு எழுந்து ஆவின் பால் வாங்க போய்ட்டு வரேன். வீடு ரணகளப் படுது. கருக்கல் வெளிச்சத்துல எல்லாரும் கிணத்த சுத்தி நின்னு பார்த்துட்டிருக்காங்க. யாரோ விழுந்து செத்துட்டாங்களாம். பயம் ஒரு பக்கம். ஆர்வம் ஒரு பக்கம். கும்பலுக்குள்ள நுழைஞ்சி எட்டி பார்க்குறேன். கிலியடிச்சி போச்சு.

பம்மி பம்மி வீட்ட வந்து, யம்மா அந்த மூட்டயை நீ போட்டியா கிணத்துக்குள்ளன்னா, அழமாட்டாக் குறையா ஆமாம்டா.  ஆத்துல குளத்துல போட சொன்னான். இங்க எங்க இதெல்லாம்னா கிணத்துல போடுன்னானேன்னு போட்டேன். இப்புடி ஆகிப்போச்சுடான்னாங்க.

யம்மா, சிரட்ட தேங்கா தண்ணில மிதக்கும்னு தெரியாதான்னு சத்தம் போடாம கத்திட்டிருக்க, அதுக்குள்ள ஒரு ஆளு பக்கெட்டை விட்டு அதை எடுத்துட்டாங்க போல.  'டாஆஆஆய்னு ' ஒரு சவுண்டு. மாடில இருந்த படியே எட்டிப் பார்க்க, வீட்டு சொந்தக்காரம்மா மேல முனீஸ்வரன் விசிட்டு.

டாய் சம்முகம்(அந்தம்மா வீட்டுக்காரரு) யாரோ செய்வினை செஞ்சிருக்காங்கடா. நீ நல்லா இருக்கக் கூடாதுன்னு செஞ்சிட்டாங்கடா. கடா வெட்டி பொங்க வைக்கணும்டா நீயின்னா, ஆகட்டுஞ்சாமி. செஞ்சிடுவோம்னு அந்தாளு கை கட்டி நிக்குது. மத்த பெண்டுக கற்பூரம் காட்டி வாய்ல போட கபுக்குன்னு முழுங்கிட்டு சரிஞ்சிடுச்சி. அப்புறம் அதுக்கு தண்ணிய கொட்டு கொட்டுனு கொட்டி, துணிமாத்தி டீய கைல குடுத்தாங்க.

இதான் இப்புடியேதான். நீங்க இப்புடி சிரிக்கிறத விட நூறு பங்கு அடக்க மாட்டாம வீட்டுக்குள்ள கிடந்து சத்தம் வராம நாங்க நாலு பேரும் சிரிச்சோம். அதென்னாங்க சாமியெல்லாம் பொம்பள மேலயே வரதும், ஒண்ணு கூட டீன்னு கூப்புடாம டாய்னே சவுண்டு விடுறதும்?

அப்புடியே ஒருக்கா இங்க சுட்டிப் பாருங்களேன். 

33 comments:

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு எங்க ஊருலயும் இப்படியெல்லாம் நடக்கும் ...!

அப்பாவி முரு said...

//டீன்னு கூப்புடாம டாய்னே சவுண்டு விடுறதும்?//

ஒரு ஆற்றாமைதான்.

க.பாலாசி said...

எனக்கு தெரிஞ்சி ஆடிவெள்ளின்னு ஒரு படம் பாத்தப்ப தியேட்டருக்குள்ள உள்ள பொம்பளைங்க எல்லாம் சாமியாடினாங்க....அதுக்கப்பறம் அந்த படம் பார்க்க தியேட்டருக்கு போன எல்லாரும் வேப்பிள்ளைய எடுக்கிட்டே போனாங்க....

//ஒண்ணு கூட டீன்னு கூப்புடாம டாய்னே சவுண்டு விடுறதும்? //

எனக்கும் இதே டவுட்....சேம் பிளட்.....

கடைசியா சாமி வந்த வீட்டுகார அம்மாவுக்கு நீங்க பண்ணது தெரியுமா?.......

vasu balaji said...

ஜீவன்
/நல்ல பதிவு எங்க ஊருலயும் இப்படியெல்லாம் நடக்கும் ...!/

இதில்லாத ஊரு எது!

vasu balaji said...

அப்பாவி முரு

/ஒரு ஆற்றாமைதான்./

எப்புடியெல்லாம் ஆப்பு வைக்கிறாங்கல்ல?

vasu balaji said...

க.பாலாஜி
/எனக்கும் இதே டவுட்....சேம் பிளட்...../
அப்பாடா வெண்ணை கட்சில இருந்து ஒரு வோட்டு நம்ம பக்கம்.
/கடைசியா சாமி வந்த வீட்டுகார அம்மாவுக்கு நீங்க பண்ணது தெரியுமா?......./
தெரியாதுன்னு நினைக்கிறேன். தெரிஞ்சாலும் டாய் சம்முகத்துக்கு பயந்து மறைச்சிருக்கணும்.=))

ஈரோடு கதிர் said...

//பழைய‌ பனியன்ல உள்ளார வெச்சு (வெள்ளத்துணில சுத்தணுமாம்) //

ஹலோ... நெசமாலுமே அது வெள்ளைங்லா?


//யாரோ விழுந்து செத்துட்டாங்களாம். //

ஆமாம்ணே,,,,
சரி பழைய பனியன போஸ்ட் மார்டம் பண்ணினாங்களா இல்லையா

ஈரோடு கதிர் said...

வெண்ணை கட்சி சார்பாக 4/4

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/ஹலோ... நெசமாலுமே அது வெள்ளைங்லா?/

வெள்ள மாதிரிதான்.

/ஆமாம்ணே,,,,
சரி பழைய பனியன போஸ்ட் மார்டம் பண்ணினாங்களா இல்லையா/

அட அத பிரிக்கவும் தானே சாமி வந்ததே=))

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/வெண்ணை கட்சி சார்பாக 4/4/

த்தோடா. முதல் ஓட்டு என்னுது சாமியோவ்.

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு
/வெண்ணை கட்சி சார்பாக 4/4/

த்தோடா. முதல் ஓட்டு என்னுது சாமியோவ்.//

சரி, இன்னமும் மாப்புவை வையாதீங்க!

ஈரோடு கதிர் said...

வாங்க மாப்பு... இனி பத்தாளு பலம் நம்முளுக்கு

இருங்கண்ணே இருங்க..

சம்முவம் சம்சாரத்துகிட்ட ஒரு நாளைக்கு நீங்கதான் அந்த பனியன்காரர்ங்கிறத சொல்லிடறோம்

vasu balaji said...

பழமைபேசி
/த்தோடா. முதல் ஓட்டு என்னுது சாமியோவ்.//

சரி, இன்னமும் மாப்புவை வையாதீங்க!//

அய்யோ. யாரு வஞ்சா. இப்புடி பேச்லையின்னா யூத்தில்லங்கறாங்க. அதான் இஃகி

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/வாங்க மாப்பு... இனி பத்தாளு பலம் நம்முளுக்கு

இருங்கண்ணே இருங்க..

சம்முவம் சம்சாரத்துகிட்ட ஒரு நாளைக்கு நீங்கதான் அந்த பனியன்காரர்ங்கிறத சொல்லிடறோம்/

அந்தம்மா நிஜம்மாவே சாமிகிட்ட போய்டிச்சி.

பிரபாகர் said...

6/6 நாந்தான்.... வந்து விமர்சிக்கிறேன்.... கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்கேன்...

பிரபாகர்.

பிரபாகர் said...

சாமியாட்டத்த பத்தி பதிவில எழுதினது இல்லாம இன்னொரு மேட்டர் இருக்கு.... தியேட்டர்ல நடந்தது... அப்புறமா பகிர்ந்துக்கிறேன்...

பிரபாகர்.

vasu balaji said...

பிரபாகர்
/6/6 நாந்தான்.... வந்து விமர்சிக்கிறேன்.... கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்கேன்.../

நன்றி பிரபாகர். போய்ட்டு வாங்க

/சாமியாட்டத்த பத்தி பதிவில எழுதினது இல்லாம இன்னொரு மேட்டர் இருக்கு.... தியேட்டர்ல நடந்தது... அப்புறமா பகிர்ந்துக்கிறேன்.../

காத்திருக்கிறேன். போய்ட்டு வாங்க.

ராஜ நடராஜன் said...

பந்திக்கு லேட்டா வந்தாலும் படையல் ருசியாத்தான் இருக்குது!

Maheswaran Nallasamy said...

hahahaha :)

vasu balaji said...

ராஜ நடராஜன்
/பந்திக்கு லேட்டா வந்தாலும் படையல் ருசியாத்தான் இருக்குது!/

நன்றிங்க நடராஜன்.

ராஜ நடராஜன் said...

//டாய் சம்முகம்(அந்தம்மா வீட்டுக்காரரு) யாரோ செய்வினை செஞ்சிருக்காங்கடா. நீ நல்லா இருக்கக் கூடாதுன்னு செஞ்சிடாங்கடா. கடா வெட்டி பொங்க வைக்கணும்டா நீயின்னா ஆகட்டுஞ்சாமி. செஞ்சிடுவோம்னு அந்தாளு கை கட்டி நிக்குது. மத்த பெண்டுக கற்பூரம் காட்டி வாய்ல போட கபுக்குன்னு முழுங்கிட்டு சரிஞ்சிடுச்சி. அப்புறம் அதுக்கு தண்ணிய கொட்டு கொட்டுனு கொட்டி, துணிமாத்தி டீய கைல குடுத்தாங்க.//

ஊர் ஊருக்கு நாலுபேரு அதெப்படி அச்சு வார்த்த மாதிரி?

சாமி:டாய்!சம்....முகம்....
அப்பாவி: சொல்லுங்க சாமி!

சாமி:எனக்கு கடா வெட்டி பொங்க வைக்கணும்...டா
பூசாரி: ஆகட்டும் சாமி!
அந்தாளு கை கட்டி நிக்குது: செஞ்சுடுவோம் சாமி!

ஒரு பொம்பள கற்பூரம் வாயில போட,இன்னொரு பொம்பள மஞ்சளக் கலக்கி தலையில ஊத்த,ம்...ம்....ம்ம்ம்ம் சாமி சத்தம் போட, பூசாரி, சாமி மலையேறுது மணியடிக்க, ஆசாமி துணி மாத்தி டீ குடிக்க:)))

vasu balaji said...

Maheswaran Nallasamy

/hahahaha :)/

அய்யா வாங்க. எங்க காணோம் ரொம்ப நாளா?

ராஜ நடராஜன் said...

//'டாஆஆஆய்னு ' ஒரு சவுண்டு. மாடில இருந்த படியே எட்டிப் பார்க்க வீட்டு சொந்தக்காரம்மா மேல முனீஸ்வரன் விசிட்டு.//

:)))

vasu balaji said...

ராஜ நடராஜன்
/:)))/

=)))

vasu balaji said...

ராஜ நடராஜன்

நேர்ல பார்க்குறா மாதிரியே சொல்றீங்க நடராஜன்=))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இது ஒரு catharisation தான் . அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் அவங்களை மீறி வெளிப்படுதுன்னுதான் நெனக்கிறேன்.

vasu balaji said...

ஸ்ரீ

/இது ஒரு catharisation தான் . அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் அவங்களை மீறி வெளிப்படுதுன்னுதான் நெனக்கிறேன்./

இருக்கக் கூடும். நன்றி ஸ்ரீ!

ப்ரியமுடன் வசந்த் said...

எப்படி சார் நடந்தது எல்லாம் அப்பிடியே காட்சியா கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறீங்க?’’

ரியலி உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்

உங்க கிட்ட கத்துகிட வேண்டியதும் நிறைய இருக்கு....

Unknown said...

முனீஸ்வரன்னு சொல்லிட்டீங்க.. பின்ன எப்படி சார் ஆம்பள மேல.. ஹி ஹி..

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/எப்படி சார் நடந்தது எல்லாம் அப்பிடியே காட்சியா கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறீங்க?’’

ரியலி உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்

உங்க கிட்ட கத்துகிட வேண்டியதும் நிறைய இருக்கு..../

ரியல்லி? பாராட்டுக்கு நன்றி வசந்த்.

vasu balaji said...

rajesh
/முனீஸ்வரன்னு சொல்லிட்டீங்க.. பின்ன எப்படி சார் ஆம்பள மேல.. ஹி ஹி../

ஆஹா. விவகாரமாக்குறாய்ங்கப்பா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நியாயமான கேள்விங்க பாலாண்ணே :)

உங்களுக்குச் சொந்த ஊரு எதுங்க? இல்ல.. அரச்சலூரெல்லாம் உங்க பதிவுல வருதே.. அதான் கேட்டேன்.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)

/நியாயமான கேள்விங்க பாலாண்ணே :)

/உங்களுக்குச் சொந்த ஊரு எதுங்க? இல்ல.. அரச்சலூரெல்லாம் உங்க பதிவுல வருதே.. அதான் கேட்டேன்./

நேத்து ஆப்பு, இன்னைக்கு சோப்பு இடுகைல அரச்சலூர், சிவகிரி எல்லாம் காரணம் சொல்லி இருக்கேன். அம்மா வழி பாட்டி இதுல வர முன்சீஃப் எல்லாம் நாமக்கல் பக்கத்தில் இருக்கும் பாலப்பட்டி.