வடிவேலு:(கதிரும் ஆரூரனும் ஹை ஃபைவ் அடித்ததை பார்த்து) பச்சப்புள்ளனு சொல்லி பத்து நிமிசமாவல என்னா விளையாட்டு இது?
நான்: இல்லண்ணே. வழக்கமா அவருக்கு பதில் சொல்ல முடியாம இவிய்ங்கதான் பம்முவாங்க. இன்னைக்கு நீங்க குடுத்த குடைச்சல்ல அவரு எஸ்ஸாயிட்டாருன்னு குசி.
வடிவேலு:நான் கேட்டா இப்புடியா? வாத்தியாருன்னு மருவாதி வேணாம். சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு. ஆமாம். இவிய்ங்க யாரு. தம்பி இங்க வாங்கப்பா ரெண்டு பேரும்.(வருகிறார்கள்)
நான்: முதல்ல இவருங்க. பேரு கதிர். பழமைக்கு மாப்புங்க.
வடிவேலு:அதான் குசியா? அப்புடி என்னா பண்ணிட்டாரு.
கதிர்: அட ஏண்ணே கேக்குறீங்க. யாராச்சு தூங்கினியாப்பான்னா என்னாங்க சொல்லுவீங்க?
வடிவேலு: தூங்கினேன். இல்ல சரியா தூங்கலன்னு சொல்றதுதான்
கதிர்: எங்க மாப்பு ஒரு இடுகை போட்டாருங்க. தூங்கறதுக்கு எத்தன பேரு இருக்கோ அத்தனையும் போட்டு. மனுசனுக்கு எதுல வேணா குழப்பம் வரலாம். தூங்குனமா இல்லையான்னு வரலாமாண்ணே. நாம தூங்குறது சரிதானான்னு எழுந்து எழுந்து அவரு வலைப்பூவ பார்த்து தூக்கமே போச்சுங்க. அதுலயும் ஒரு குரங்கு படத்தை போட்டு விட்டாரு. வீட்ல கேக்குறாங்கண்ணே! ஆபீஸ்ல இப்புடிதான் தூங்குவீங்களான்னு .
வடிவேலு: ஆமாந்தம்பி. வலைப்பூன்னா இந்த வாஸ்து பூவுங்கறாங்களே. அதுவா?
கதிர்: இல்லைணே! இது வலைமனை, வலைப்பூ, பதிவு, ப்ளாக்னு...
நான்:(மாப்புங்களே இப்புடித்தான் போல அடுக்க ஆரம்பிச்சிடுவாங்க) இவரும் வலைப்பூ வச்சிருக்காருங்க கசியும் மௌனம்னு.
வடிவேலு: கசிவுதானேன்னு அசால்டா இருந்துடாதிங்க தம்பி. உடனே டிங்கரிங் பாருங்க. இல்லன்னா பெருஞ்செலவு வச்சிரும். போன மாசம்தான் நம்ம காருக்கு அம்பதாயிரமாச்சி.
கதிர்: அட இது அதில்லைங்க. நெறய விசயம் மனசுல வெச்சிருப்பமில்லைங்களா. அழுத்தம் தாளாம இப்புடி திட்டிக்கறது..சை கொட்டிக்கிறதுங்க.
வடிவேலு: அட அட. ஏப்பா. பார்த்தா சின்ன வயசா தெரியுது. அதுக்குள்ளாற அழுத்தம் அது இதுன்னு. காமெடி சேனல் பார்த்து சிரிங்க. அப்பதானே நம்ம பொழப்பு ஓடும். என்னா நாஞ்சொல்லுறது?
நான்: ஆமாங்க. இவரு எழுதுறதெல்லாம் பார்த்தா சில நேரம் அழுவாச்சியா வருங்க. நாடு இப்புடி குட்டிச்சுவரா போச்சே. ஒருத்தனும் மனுசப்பயலா இருக்க மாட்டங்குறானேன்னு வருத்தமாய்டுங்க.
வடிவேலு: அப்புடியா! ரெம்ப சந்தோசமா இருக்குப்பா. அடுத்த தலைமுறைய நெனச்சா பெருமையா இருக்குப்பா தம்பி.
கதிர்: இஃகி இஃகி நன்றிங்கண்ணே.
நான்:(ஆகா. கதிர். நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன்.)அண்ணே இவரும் அந்நியன், லகலகா, கந்தசாமி மாதிரி ரெண்டு ஆளுண்ணே.
கதிர்:(கலவரமாகிறார்)என்னண்ணே அப்புடி சொல்லிட்டீங்க?
நான்: வடிவேலண்ணே! இங்க பாருங்க இதுக்கு பேரு இடுகை. இது இவரு எழுதுறது. இதுகீழ கருத்து சொல்லுறதுன்னு இருக்கு பாருங்க. இவரு இடுகையில எழுதுறப்பதான் இப்புடி பொறுப்பா எழுதுவாரு. பின்னூட்டம் போடுறப்பதான் தெரியும். சத்தியராசு, பாக்கியராசு, சுந்தர்ராசு இப்புடி பல ரூபத்துல இவருக்குள்ள வெச்சிகிட்டு போடுவாருண்ணே.
வடிவேலு: எப்புடி எப்புடி. நீ சொன்னா நான் நம்பிருவனா. நிரூபிச்சிக் காஆஆஆட்ட்ட்டு..
கதிர்: அண்ணே தெய்வம்ணே நீங்க.
நான்:இங்க பாருங்கண்ணே. காத்திருத்தல்னு கவிதைண்ணே. இங்க கசிய விட்டுட்டாரு. நாம கண்ண கசக்கிகிட்டு மத்த பேரு என்ன சொல்றாய்ங்கன்னு அவிய்ங்க வலைப்பூல போய் பார்த்தா காமெடி காமெடியா கமென்டு போடுறாருண்ணே. இங்க பாருங்கண்ணே. அவிய்ங்கன்னு ஒரு வலைப்பூ. ராசான்னு மதுரக்கார தம்பி எழுதுவாருங்க. (கதிர்:வடிவேலு மாதிரியே அவர் பின்னாடி இருந்து உஸ் உஸ்ஸூன்னு சைகை)அந்த தம்பி பாவம் இவர மாதிரியே கவலையோட எழுதுனா, அங்க போய் ஆனாலும் 2 லச்சம் அதிகமில்லையான்னு ரெம்ப ஏக்கமா பின்னூட்டம் போடுறாருங்க .
வடிவேலு: என்னாதிது?ய்ங்?
கதிர்: ச்ச்ச்ச்ச்சும்மாஆஆஆ. டமாசுண்ணே.
வடிவேலு: அப்புடியெல்லாம் பண்ணப்படாது. அந்தப் புள்ளைய பாரு. இவ்வளவு நடக்குதே. எவ்வளவு அப்புராணியா உக்காந்திருக்கு.
நான்: யாரு? இவரு! அப்புராணி! இவரு பேரு ஆரூரன்.
வடிவேல்:நாஞ்சொல்லல! பாரு பாரு. எங்கூருல 18 பட்டி நாட்டாமையே என்னா அலம்பல் பண்ணுவாய்ங்க. இவரு ஆரூரு வெச்சிகிட்டு எவ்வளவு எளிம்ம்ம்ம்மையா இருக்காரு பாரு.
நான்: அட இருங்க. எப்பப்பாரு காக்கா கூட போட்டி.

வடிவேலு: அட என்னா இப்புடி சொல்லிப்புட்டீங்க.
நான்: பின்ன என்னாண்ணே. சிலையப் பார்த்தா படப்பொட்டிய தூக்கிடுவாரு. எங்கயோ பறக்கற காக்கா போஸ் குடுக்கறேனு வந்து கக்கா பண்ணிட்டு போகுது. இவரு வந்து காக்கா கக்கா பண்ணுதுன்னு சிலையெல்லாம் அழுவுதுன்னு சீன் போடுவாரு. வில்லங்கமான ஆசாமிண்ணே.
வடிவேலு: ஒரு மாஆர்க்கமாத்தான் இருப்பாரு போலயே. நீ மேல சொல்லு.
நான்: இதப் படிங்க. (படிக்கிறார்).கொக்குன்னு நெனச்சியாடா ங்கொய்யாலேன்னு ஒரு முனிவரையே எரிச்சதுங்க வாசுகி. இதப் படிச்சிட்டு, அடப் பாவி மனுசா! இதுக்குத்தான் மார்ல துணியில்லாம உக்காந்து எழுதுனியா? இப்புடியெல்லாமா பண்ணுறன்னு வள்ளுவர போடு போடுன்னு போட்டு எழுத்தாணிய அவரு கொண்டையில சொருகி வெச்சிடிச்சிங்க. நீங்க ஒரு விசய் படத்துல வருவீங்களே எலக்ட்ரிக் ட்ரெயினில. கையெல்லாம் கோணிக்கிட்டு, ஒரு பல்லு காணாம, ஒரு கொண்டையில சொருகிக்கிட்டு. அப்புடி ஆக்கிட்டாருங்க.
வடிவேலு: ஏப்பா? யாரையும் விட்டு வைக்க மாட்டிங்களா? இதுல ஃபோட்டோ வேற சாதுவா போட்டு வெச்சிருக்க.
(அண்ணா வணக்கங்ணா என்று எங்கிருந்தோ வசந்த் வந்து குதிக்கிறார்)
வடிவேலு:(அரண்டுபோய்) ஏண்டா பாஆஆலாஜீஈஈஈ. இதாரு?
நான்: அண்ணே. கூப்டதோட நிறுத்திக்குங்க. இவரு பண்றதுக்கெல்லாம் என்ன அறைஞ்சா தாங்க மாட்டேன். அளுதுறுவேன்.
வடிவேலு: நம்ம பிட்ட நம்மளுக்கே போடுறியா. சரி சரி இவரு யாரு சொல்லு.
நான்: லொள்ளுன்னு ஒரு வார்த்தை இருக்கில்லண்ணே. அதாங்க மனுச உருவத்துல வந்திருக்கு இங்க. நீங்களே பாருங்கண்ணே. பிப்பரவரி மாசம் எப்போ வரும்? அம்மா கையால சாம்பார் சாதம் சாப்புடணும்னு ஏங்கிப்போய் அழுதாருண்ணே ஒரு நாளு.அய்யோன்னு இருந்திச்சிண்ணே. அடுத்த நாளே பிரியாணி பண்ணி ஒரு வெட்டு வெட்டிட்டு அதுக்கு விமரிசனம் எழுதுறாருண்ணே சினிமா மாதிரி.
வடிவேலு: அடப்பாவிகளா பாவிகளா! ஒருத்தங்கூடவா யோக்கியமில்ல?
நான்: இருங்கண்ணே. ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்னு ஓவரா ஊத்தி கண்ணாலத்துக்கு பொண்ணு தேடினாருண்ணே. கொஞ்சம் யோசிக்க வேணாமா? இது பெரிய மீடியாவாச்சே. படமெல்லாமே ஊத்திக்குதே. இதில லொள்ளு பண்ணப்படாதுன்னு. ஒரு வேள யாராவது, ஊத்துனதுக்கு இல்லாட்டியும் பாவம்னாவது சம்மதிக்க மாட்டாங்களாண்ணே. ரெண்டே நாள்னே. எக்ஸ்ட்ரா பிட்டிங்குன்னு வில்லங்கமா இடுகை போடுறாருண்ணே. அது அது ஒத்துக்கலாமான்னு யோசிச்சதெலாம் ஸ்டார்டிங்லாம் நல்லாத்தானிருக்கு. ஆனா பினிசிங் சரியில்லையேன்னு போய்க்கிருக்காங்கண்ணே.
வசந்த்: இஃகி இஃகிகி இஃகி இஃகி இஃகி
வடிவேலு: அவன மாதிரியே சிரிக்கிறாரு?
நான்: அவரு சீடனாச்சே வேற எப்புடி? இவரு படத்த போடாம அவரு படத்த இல்ல போட்டு வெச்சிருந்தாரு!
வசந்த்: (இனிமே இங்க இருந்தா ஆபத்து) அப்ப வரட்டா அய்யாச்சாமி!
வடிவேலு: தம்பி தம்பி இங்க வாங்க.
வசந்த்: என்னா அய்யாச்சாமி!
வடிவேலு: நீயும் எளுதறியாம்ல. காட்டிட்டு போறது.
வசந்த்: இதான். படிச்சிக்க அய்யாச்சாமி! வரட்டா!
வடிவேலு: இருய்யா இருய்யா! என்னா பேரு . தலைப்பு என்னா?
வசந்த்: பிரியமுடன் வசந்த்.
வடிவேலு: அது கடுதாசில முடிக்கிறப்ப போடுறது. நான் கேட்டது தலைப்பு!
வசந்த்: (திகைத்துப் போய் நிற்கிறார். சுதாரித்துக் கொண்டு போகையில் என்னை ஒரு பார்வை) அய்யாச்சாமி. இது உன் தப்பில்ல. சேர்க்கை சரியில்ல. நான் அப்புறமா கண்டுக்கறேன்.
நான்: அண்ணே! என்னாமா ஆட்டிகிட்டு போறாரு பாருங்கண்ணே. இதில என்ன சொல்லுறாரு அடங்க மாட்டன்றனாம்.
(பொறுப்பி: வழக்கம் போல கதிர், ஆரூரன், வசந்த், பழமைய உரிமையா கலாய்ச்சது.கோவிச்சிக்க மாட்டாங்க. அப்புடி எதுனா இருந்தா இப்பவே மாப்பு. அட இது அந்த மாப்பில்ல. மன்னிப்பு)

48 comments:
//நான்: இவரும் வலைப்பூ வச்சிருக்காருங்க கசியும் மௌனம்னு.
வடிவேலு: கசிவுதானேன்னு அசால்டா இருந்துடாதிங்க தம்பி. உடனே டிங்கரிங் பாருங்க. இல்லன்னா பெருஞ்செலவு வச்சிரும். போன மாசம்தான் நம்ம காருக்கு அம்பதாயிரமாச்சி.//
அப்படியே அப்பாவித்தனமா வடிவேலு சொல்ற மாதிரியே படிச்சேன் ....
அருமை சார்...
//கதிர்: அட இது அதில்லைங்க. நெறய விசயம் மனசுல வெச்சிருப்பமில்லைங்களா. அழுத்தம் தாளாம இப்புடி திட்டிக்கறது..சை கொட்டிக்கிறதுங்க
வடிவேலு: அட அட. ஏப்பா. பார்த்தா சின்ன வயசா தெரியுது. அதுக்குள்ளாற அழுத்தம் அது இதுன்னு. காமெடி சேனல் பார்த்து சிரிங்க. அப்பதானே நம்ம பொழப்பு ஓடும். என்னா நாஞ்சொல்லுறது?//
அட்டகாசம்.... :))
//நான்: யாரு? இவரு! அப்புராணி! இவரு பேரு ஆரூரன்.
வடிவேல்:நாஞ்சொல்லல! பாரு பாரு. எங்கூருல 18 பட்டி நாட்டாமையே என்னா அலம்பல் பண்ணுவாய்ங்க. இவரு ஆரூரு வெச்சிகிட்டு எவ்வளவு எளிம்ம்ம்ம்மையா இருக்காரு பாரு.//
தூள்....... :))
//வசந்த்: இஃகி இஃகிகி இஃகி இஃகி இஃகி
வடிவேலு: அவன மாதிரியே சிரிக்கிறாரு?
நான்: அவரு சீடனாச்சே வேற எப்புடி? இவரு படத்த போடாம அவரு படத்த இல்ல போட்டு வெச்சிருந்தாரு!//
கலக்கல்..... :))
//கசிவுதானேன்னு அசால்டா இருந்துடாதிங்க தம்பி. உடனே டிங்கரிங் பாருங்க//
ராஜாவையும் என்னையும் ஒரே விஷயம் மிக கவர்ந்தது என எண்ணுகையில் சந்தோஷமாய் இருக்கிறது.
அய்யா, மிக அருமை. வசனத்தை டரியலக்கிய விதம் அருமை.
அடுத்த பார்ட் எப்போங்கைய்யா?
3/3
பிரபாகர்...
//அய்யா, மிக அருமை. வசனத்தை டரியலக்கிய விதம் அருமை.//
வசந்த்தை டரியலக்கிய விதம் அருமை என நினைத்து தான் எழுதினேன், போட்டேன், அனால் வசனத்தை என மாறிவிட்டது. அது கூட சரியாய்த்தான் இருக்கு....
பிரபாகர்...
டரியல் தொடருதா..... சூப்பர்!
ஸ்ஹ்ஹ்ஹ்.. இப்பவே கண்ணக் கட்டுதே
/2 லச்சம் அதிகமில்லையான்னு ரெம்ப ஏக்கமா பின்னூட்டம் போடுறாருங்க .//
அண்ணே ஏக்கமில்லீங்க.... ஒரு ஆச்சரியம்தான்...
அட நம்புங்கப்பா
//கசிவுதானேன்னு அசால்டா இருந்துடாதிங்க தம்பி. //
அடப்பாவி மக்கா..
நேத்து கசியும் மவுனம் பத்தி வளச்சு வளச்சு கேட்டப்போ....
நானாத்தான் ஒளறிட்டனோ..
//இவரு ஆரூரு வெச்சிகிட்டு எவ்வளவு எளிம்ம்ம்ம்மையா இருக்காரு பாரு.//
ஆமாங்க... நம்மாளு எக்கச்சக்கமான எளிம்ம்ம்ம்ம்ம்மைங்க
//வசந்த் வந்து குதிக்கிறார்)//
வசந்து சாதரணமா குதிச்சாரா.... இல்ல அதுல ஏதாவது கிரியேட்டிவ்வா குதிச்சாரா (வசந்து சும்மா தமாசுக்கு செல்லம்)
//அய்யாச்சாமி. இது உன் தப்பில்ல. சேர்க்கை சரியில்ல.//
வசந்த்....இது 100% கரீக்ட்டு
பாலாண்ணா....
மீண்டும் தங்கள் பக்கத்தில்
என்னை அடையாளப் படுத்தியமைக்கு நன்றி...
ரசித்தேன்....
ரசிக்கிறேன்....
ரசிப்பேன்....
நான் இப்பதான் நித்திரையால இருந்து வாறேன்.... பதிவர் கடலில் குடிவேலுவா? கண் இமை இன்னும் பிரியலை...செரியான்னு பாத்து சொல்லுங்க அண்ணே!!
அப்பாடா இதில ஒருங்கிணைப்பாளர் தப்பிச்சாரு... எங்க பக்கத்தில கூட்டு நிக்க வச்சுடுவீங்களோன்னு பயந்துகிட்டேப் படிச்சேன்..
மீ த எஸ்கேப்புடோய்..
// நான்: இல்லண்ணே. வழக்கமா அவருக்கு பதில் சொல்ல முடியாம இவிய்ங்கதான் பம்முவாங்க. இன்னைக்கு நீங்க குடுத்த குடைச்சல்ல அவரு எஸ்ஸாயிட்டாருன்னு குசி. //
ஓ இப்படியெல்லாம் வேற இருக்குதோ... உங்களுக்கு இருக்கு தலைமை ஆசிரியர் உயர் திரு. பழமை பேசி ஐயாகிட்ட இருந்து ஒரு இடுகை... எஸ்ஸா ஆயிட்டாருன்னு சந்தோஷமா படுறீங்க...
//பழமைபேசி Says:
நான் இப்பதான் நித்திரையால இருந்து வாறேன்.... பதிவர் கடலில் குடிவேலுவா?//
அம்மினிய ஊருக்கு அனுப்பிச்சுப்போட்டு
இதென்ன பழக்கம் ராக்கெடையில
// பழமைபேசி
October 10, 2009 4:30 PM
நான் இப்பதான் நித்திரையால இருந்து வாறேன்.... பதிவர் கடலில் குடிவேலுவா? கண் இமை இன்னும் பிரியலை...செரியான்னு பாத்து சொல்லுங்க அண்ணே!! //
ஐயா இப்பத்தான் உங்களை தலைமை ஆசிரியர் அப்படின்னு போட்டேன், இப்படி கலக்குரீங்களே?
// ஆபீஸ்ல இப்புடிதான் தூங்குவீங்களான்னு . //
எந்த ஆபிஸ்லங்க தூங்க விடறாங்க. இப்போவெல்லாம் வலைப்பதிவு படிக்க கூட நேரமில்லாம் அலையறோமுங்க..
// கதிர் - ஈரோடு Says:
October 10, 2009 4:38 PM
//பழமைபேசி Says:
நான் இப்பதான் நித்திரையால இருந்து வாறேன்.... பதிவர் கடலில் குடிவேலுவா?//
அம்மினிய ஊருக்கு அனுப்பிச்சுப்போட்டு
இதென்ன பழக்கம் ராக்கெடையில
//
ஓ, அப்ப, குடியர் கடலில் பதிவுகளா? சித்த சரியாச் சொல்லுங்க மாப்பு!
//இராகவன் நைஜிரியா Says:
October 10, 2009 4:41 PM
// பழமைபேசி
October 10, 2009 4:30 PM
நான் இப்பதான் நித்திரையால இருந்து வாறேன்.... பதிவர் கடலில் குடிவேலுவா? கண் இமை இன்னும் பிரியலை...செரியான்னு பாத்து சொல்லுங்க அண்ணே!! //
ஐயா இப்பத்தான் உங்களை தலைமை ஆசிரியர் அப்படின்னு போட்டேன், இப்படி கலக்குரீங்களே?
//
ஐயா, வணக்கமுங்க.... நெசமாவே நான் இன்னும் அரை நித்திரையிலதான் இருக்கேன்!
// வடிவேலு: ஆமாந்தம்பி. வலைப்பூன்னா இந்த வாஸ்து பூவுங்கறாங்களே. அதுவா? //
நல்லா கேட்டாருங்க ஒரு கேள்வி... இதுதான் வடிவேலு டச்..
// பழமைபேசி
October 10, 2009 4:45 PM
//இராகவன் நைஜிரியா Says:
October 10, 2009 4:41 PM
// பழமைபேசி
October 10, 2009 4:30 PM
நான் இப்பதான் நித்திரையால இருந்து வாறேன்.... பதிவர் கடலில் குடிவேலுவா? கண் இமை இன்னும் பிரியலை...செரியான்னு பாத்து சொல்லுங்க அண்ணே!! //
ஐயா இப்பத்தான் உங்களை தலைமை ஆசிரியர் அப்படின்னு போட்டேன், இப்படி கலக்குரீங்களே?
//
ஐயா, வணக்கமுங்க.... நெசமாவே நான் இன்னும் அரை நித்திரையிலதான் இருக்கேன்! //
அரை நித்திரையிலே இப்படி கலக்குறீங்களே, முழுசா முழுச்சுகிட்டு இருந்தா என்னாவது ஐயா?
//வடிவேலு: கசிவுதானேன்னு அசால்டா இருந்துடாதிங்க தம்பி. உடனே டிங்கரிங் பாருங்க. இல்லன்னா பெருஞ்செலவு வச்சிரும். போன மாசம்தான் நம்ம காருக்கு அம்பதாயிரமாச்சி.//
எங்கள் தானைத்தலைவரின் வலைப்பூவைப் பற்றி இப்படி தாறுமாறாக பேசிய வைகைப்பயல் ச்சி...வைகைப்புயலை வன்மையாக கண்டிக்கிறேன்....
இன்னும் முடியலையா.....(1,2,3,4...............) நடக்கட்டும....
துபாய் ராஜா
/அப்படியே அப்பாவித்தனமா வடிவேலு சொல்ற மாதிரியே படிச்சேன் ....
அருமை சார்.../
/அட்டகாசம்.... :))/
/தூள்....... :))/
/கலக்கல்..... :))/
நன்றி ராஜா
பிரபாகர்
/அய்யா, மிக அருமை. வசனத்தை டரியலக்கிய விதம் அருமை.
அடுத்த பார்ட் எப்போங்கைய்யா?
3/3 /
/வசந்த்தை டரியலக்கிய விதம் அருமை என நினைத்து தான் எழுதினேன், போட்டேன், அனால் வசனத்தை என மாறிவிட்டது. அது கூட சரியாய்த்தான் இருக்கு....
/
:)) நன்றி. நாளைக்கு முடிக்கலாம்னு பார்க்கிறேன்.
தமிழ் நாடன்
/டரியல் தொடருதா..... சூப்பர்!/
கார்த்திகைப் பாண்டியன்
/ஸ்ஹ்ஹ்ஹ்.. இப்பவே கண்ணக் கட்டுதே/
இஃகி. நன்றிங்க.
கதிர் - ஈரோடு
/அட நம்புங்கப்பா/
நம்பீஈஈஈட்டம்ல.
/நானாத்தான் ஒளறிட்டனோ../
பின்ன:))
/ஆமாங்க... நம்மாளு எக்கச்சக்கமான எளிம்ம்ம்ம்ம்ம்மைங்க/
சொன்னாய்ங்க.
/வசந்து சாதரணமா குதிச்சாரா.... இல்ல அதுல ஏதாவது கிரியேட்டிவ்வா குதிச்சாரா (வசந்து சும்மா தமாசுக்கு செல்லம்)/
வரட்டு. கேக்கலாம்.
/வசந்த்....இது 100% கரீக்ட்டு/
நோஓஓஓஒ பேட் வர்ட்ஸ். பாலாண்ணா பாவம். வானம்பாடிகள் பாவம்.
/பாலாண்ணா....
மீண்டும் தங்கள் பக்கத்தில்
என்னை அடையாளப் படுத்தியமைக்கு நன்றி.../
என்னை அடையாளம் கண்டதற்கு நானில்லையா நன்றி சொல்லணும்.
/ரசித்தேன்....
ரசிக்கிறேன்....
ரசிப்பேன்..../
வேற வழி!
பழமைபேசி
/நான் இப்பதான் நித்திரையால இருந்து வாறேன்.... பதிவர் கடலில் குடிவேலுவா? கண் இமை இன்னும் பிரியலை...செரியான்னு பாத்து சொல்லுங்க அண்ணே!!/
/ஓ, அப்ப, குடியர் கடலில் பதிவுகளா? சித்த சரியாச் சொல்லுங்க மாப்பு!/
சொம்புத்தண்ணிய குடிச்சிட்டு படுங்கன்னா கேக்குறாய்ங்களா. அரைத்தூக்கத்துல ஆரூராரு அடிச்ச லூட்டியே தாங்கல. அந்தியூரார் என்ன பண்ணப் போறாரோ?
இராகவன் நைஜிரியா
/அப்பாடா இதில ஒருங்கிணைப்பாளர் தப்பிச்சாரு... எங்க பக்கத்தில கூட்டு நிக்க வச்சுடுவீங்களோன்னு பயந்துகிட்டேப் படிச்சேன்../
அட அட. விட்றுவனா. சண்டே ஸ்பெஷல்.
/ஓ இப்படியெல்லாம் வேற இருக்குதோ... உங்களுக்கு இருக்கு தலைமை ஆசிரியர் உயர் திரு. பழமை பேசி ஐயாகிட்ட இருந்து ஒரு இடுகை... எஸ்ஸா ஆயிட்டாருன்னு சந்தோஷமா படுறீங்க.../
அதெல்லாம் நேத்தே கலக்குங்கன்னு சொல்லிட்டாருல்ல.இஃகி இஃகி
/எந்த ஆபிஸ்லங்க தூங்க விடறாங்க. இப்போவெல்லாம் வலைப்பதிவு படிக்க கூட நேரமில்லாம் அலையறோமுங்க../
அதெல்லாம் வழி இருக்கும். ஆஃபீஸ்ல அதுக்கு பேரு டீப் திங்கிங். இஃகி
/நல்லா கேட்டாருங்க ஒரு கேள்வி... இதுதான் வடிவேலு டச்../
அப்போ என் டச் ஒன்னுமே இல்லையா. அவ்வ்வ்வ்வ்வ்
க.பாலாஜி
/எங்கள் தானைத்தலைவரின் வலைப்பூவைப் பற்றி இப்படி தாறுமாறாக பேசிய வைகைப்பயல் ச்சி...வைகைப்புயலை வன்மையாக கண்டிக்கிறேன்..../
நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.
/இன்னும் முடியலையா.....(1,2,3,4...............) நடக்கட்டும..../
அதெப்புடி உங்கள விட்டுட்டு. =))
இடி இடின்னு சிரிச்சேங்க.
யாரை இடி இடி-ன்னு சொல்லி இவர் சிரிச்சாருன்னு பழமைபேசி உடனே பின்னூட்டம் போடுவரோன்னு பயம்மா இருக்குங்க.
ரேகா ராகவன்
//KALYANARAMAN RAGHAVAN Says:
October 10, 2009 6:46 PM
//
நான் இப்பதான் ஆறு கல் தொலைவு ஓடிட்டு வந்தனுங்க ஐயா! திண்ணையில என்ன நடக்குதுன்னு கெரக்கத்துல ஒன்னுந் தெரியலைங்க!!
KALYANARAMAN RAGHAVAN
/இடி இடின்னு சிரிச்சேங்க./
ஆகா. தப்பாச்சே. இஃகி இஃகினில்லயா சிரிக்கணும்.
/யாரை இடி இடி-ன்னு சொல்லி இவர் சிரிச்சாருன்னு பழமைபேசி உடனே பின்னூட்டம் போடுவரோன்னு பயம்மா இருக்குங்க./
மொத வாட்டிங்கறதால மன்னிச்சி விட்றுவாரு.
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
பழமைபேசி
/நான் இப்பதான் ஆறு கல் தொலைவு ஓடிட்டு வந்தனுங்க ஐயா! திண்ணையில என்ன நடக்குதுன்னு கெரக்கத்துல ஒன்னுந் தெரியலைங்க!!/
தூக்க கலக்கம் தெளியறதுகுள்ள ஓடி வந்த கெரக்கமா? மாப்பா இல்லை மப்பா?
// இருங்கண்ணே. ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்னு ஓவரா ஊத்தி கண்ணாலத்துக்கு பொண்ணு தேடினாருண்ணே.//
ஹேய் கிழ போல்ட்களா 26வயசுலதேன் பொண்ணுதேடுவாய்ங்க அப்பறம் உங்கள மாதிரி ஒல்ட் ஏஜ்லயா தேடுவாய்ங்க? லொள்ளப்பாரு இது மட்டும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி வச்சுருக்கபுள்ளைக்கு தெரிஞ்சுச்சு டங்குவார் அத்துடுவேண்டியேய்....
//பிரியாணி பண்ணி ஒரு வெட்டு வெட்டிட்டு அதுக்கு விமரிசனம் எழுதுறாருண்ணே சினிமா மாதிரி.//
நானாவது பரவாயில்லை..இந்த கண்ணு போன ஒல்ட் மேன் இருக்காரே பாலான்னு ஒருத்தரு அவருக்கு கண்ணு தெரியாமபொச்சுன்றதெயெல்லாம் விளம்பரம் குடுக்குறாருய்யா கேட்டா முருகன்றாரு அரக்கன்றாரு...சீக்கிரம் நல்ல கண்ணாடி வாங்கி போடச்சொல்லுங்கப்பு....
//இது உன் தப்பில்ல. சேர்க்கை சரியில்ல. நான் அப்புறமா கண்டுக்கறேன்.//
உசிரோட இருந்தீங்கன்னா......
//நான்: அண்ணே! என்னாமா ஆட்டிகிட்டு போறாரு பாருங்கண்ணே. இதில என்ன சொல்லுறாரு அடங்க மாட்டன்றனாம்.//
ஹ ஹ ஹா பாலா சார் ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு ஆவாது..
மனசுல உள்ளதெல்லாம் வந்துடுச்சா?வரவச்சுட்டோம்ல...நன்றி என்னை எனக்கு அறிய வைத்ததுக்கு...
என்னிய டரியலாக்குனதுல இம்பூட்டு பேருக்கு சந்தோஷமா..அவ்வ்வ்வ் அதான் ஒரு ஒரு மாசத்துக்கு இடுகையே போடாம நிறுத்தி வைக்கலாமுன்னு இருக்கேன்...கண் திருஷ்டியாச்சும் போகட்டும்...(ஆமா நீ இடுகை இடலைன்னு இங்க யார் அழுதான்னு மனசுக்குள்ள நீங்க சொல்றது கேக்குது)
:))))))))))
//வசந்து சாதரணமா குதிச்சாரா.... இல்ல அதுல ஏதாவது கிரியேட்டிவ்வா குதிச்சாரா //
ஹ ஹ ஹா கதிர் நீங்களுமா? ஒல்டெல்லாம் செட்டு சேந்துட்டீக போல தெர்து...
ம்ம் எப்பிடி குதிச்சேன்னா பாலா சார் தலைல ஏறி நிக்கலாமுன்னு ட்ரைபண்ணுனேன் முடியலை வழுக்கிடுச்சு அதான் கீழ குதுச்சுட்டேன்...
ஹ ஹ ஹா....
பிரியமுடன்...வசந்த்
/ஹேய் கிழ போல்ட்களா 26வயசுலதேன் பொண்ணுதேடுவாய்ங்க அப்பறம் உங்கள மாதிரி ஒல்ட் ஏஜ்லயா தேடுவாய்ங்க? /
என்னாதான் யூத்து பொண்ணு தேடினாலும் கல்யாணம் பேசி முடிக்கிறது கிழ போல்டுங்கதான். நானே பேசுவேன்னு போனா டங்குவாலு காணாம போய்டும்டி.
/இது மட்டும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி வச்சுருக்கபுள்ளைக்கு தெரிஞ்சுச்சு டங்குவார் அத்துடுவேண்டியேய்..../
அடிங்கொய்யாலே. சந்தோசமான விசயத்த சொல்ற அழகப் பாரு. வாழ்த்துகள்.
பிரியமுடன்...வசந்த்
/இந்த கண்ணு போன ஒல்ட் மேன் இருக்காரே பாலான்னு ஒருத்தரு அவருக்கு கண்ணு தெரியாமபொச்சுன்றதெயெல்லாம் விளம்பரம் குடுக்குறாருய்யா கேட்டா முருகன்றாரு அரக்கன்றாரு.../
அந்த நேர்மைய பாராட்ட வேணாமா?
பிரியமுடன்...வசந்த்
/உசிரோட இருந்தீங்கன்னா....../
ஏஏஏஏன். நல்லாத்தானே போய்க்கிருக்கு. ஏன் இந்தக் கொலவெறி. கொலக்கேசு ஆகிப் போகுமா இல்லையா? அப்புடியெல்லாம் மிரட்டப் படாது.
பிரியமுடன்...வசந்த்
/
ஹ ஹ ஹா பாலா சார் ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு ஆவாது..
மனசுல உள்ளதெல்லாம் வந்துடுச்சா?வரவச்சுட்டோம்ல...நன்றி என்னை எனக்கு அறிய வைத்ததுக்கு.../
என்னாத்த வரவச்சது. நீங்க லொள்ளின் மொத்த உருவம்னா. அதான் எல்லாருக்கும் தெரியுமே. கோவிச்சிக்காம நகைச்சுவையா எடுத்துகிட்டதுக்கு நான் தான் நன்றி சொல்லணும் வசந்த்.
/அதான் ஒரு ஒரு மாசத்துக்கு இடுகையே போடாம நிறுத்தி வைக்கலாமுன்னு இருக்கேன்.../
நிஜம் சொல்லுங்க. அம்முனிக்கு வெறும் கவிதையா எழுதி அவங்களுக்கு மட்டும் அனுப்புற ப்ளானா?
/(ஆமா நீ இடுகை இடலைன்னு இங்க யார் அழுதான்னு மனசுக்குள்ள நீங்க சொல்றது கேக்குது)
:))))))))))/
இப்போவே ரொம்ப கேப் விளுதுடியோவ். தினம் போடலைன்னாலும் ரெண்டு நாளைக்கு ஒன்னு போட்டாவணும்.
பிரியமுடன்...வசந்த்
/ம்ம் எப்பிடி குதிச்சேன்னா பாலா சார் தலைல ஏறி நிக்கலாமுன்னு ட்ரைபண்ணுனேன் முடியலை வழுக்கிடுச்சு அதான் கீழ குதுச்சுட்டேன்../
இந்த யூத்துங்களே இப்புடித்தான். சொன்ன பேச்சு யாரு கேக்குறா. கிழ போல்டுங்களுக்கு என்னா தெரியும்னு நெனப்பு. முதல் பார்ட்லயே சொன்னேனா இல்லையா. வால் பாறை வட்டப்பாறையாச்சே. பிடிமானமெங்கன்னு. படிச்சாத்தானே. நம்மகிட்டயேவான்னு பண்ணி கீழ விழுந்துட்டு குதிச்சாராம்ல.:))
கலக்கறீங்க பாலா.....
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது......
அன்புடன்
ஆரூரன்
ஆரூரன் விசுவநாதன்
/கலக்கறீங்க பாலா.....
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது....../
நன்றி ஆரூரன். :))
Post a Comment