தெரியாத்தனமா வெண்ணைப் பயலப் பத்தி எழுதுனாலும் எழுதுனேன். ரசிகர் மன்றமே வெச்சிட்டு மிரட்டுற லெவலுக்கு ஆகிப்போச்சு. பயபுள்ள ரிமோட்ல குடுக்கிற குடைச்சல் நமக்கு புதுசா என்ன? அப்பப்ப என்ன ஒரு விஞ்ஞானியா, கேனையனா, லூசுப்பயலா பல ரூபத்துல மாத்தி விட்டு போய்ட்டே இருப்பான்.
ஒரு ரெண்டு வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தான். அப்புறம் என்னாச்சோ. எண்ணெய் தேய்ச்சி குளுப்பாட்டி விட்டதும் எங்க கத்துகிட்டானோ தெரியலைங்க. நேரா சுவத்துல போய் எருமை மாதிரி முதுகைத் தேய்ப்பான்.
ஒரு ரெண்டு வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தான். அப்புறம் என்னாச்சோ. எண்ணெய் தேய்ச்சி குளுப்பாட்டி விட்டதும் எங்க கத்துகிட்டானோ தெரியலைங்க. நேரா சுவத்துல போய் எருமை மாதிரி முதுகைத் தேய்ப்பான்.
முதல்ல ஈன்னு இளிச்சிகிட்டு தேய்க்க ஆரம்பிச்சி, கொஞ்ச கொஞ்சமா முகம் மாறி அழுதுகிட்டே தேய்ப்பானே தவிர நிறுத்த மாட்டான். முதுகெல்லாம் ரத்தக் களறி ஆயிடும். அங்கங்க தடிச்சிருக்கும். ஏன் இப்புடி பண்றான்னே தெரியாம இருந்திச்சி.
சீயக்காய் வாங்கி, தேத்தாங் கொட்டை, வெந்தயம் எல்லாம் காயவெச்சி, அதுக்குன்னே இருக்கிற மிஷின்ல அரைச்சாலும் இப்படியாகுதேன்னு புரிபடாம, பாத்திரம் தேய்க்கிற அரப்பு பொடிய வச்சி குளுப்பாட்டுனா ஒண்ணுத்தையும் காணோம். இப்புடி ஒரு ஜந்து இருக்கான்னு சிரிப்போம். அப்புறம் எண்ணெய் தேய்க்க எடுத்தாலே, தானே போய் பாத்திரம் தேய்க்கிற அரப்புப் பொடி தூக்கிட்டு போற அளவுக்கு தேறிட்டான்.
அப்புறம் எந்தப் பிரச்சனையும் இல்லை. கொஞ்ச வருசம் போக இட்டிலி சாப்பிட்டா கொஞ்ச நேரத்துல வாந்தி. அப்புடியே சுருண்டுக்குவான். கண்ணு மூக்கெல்லாம் தண்ணியா கொட்டும். ரெண்டு மூணு மணி நேரஞ்செல்ல சரியாயிடுவான். அரிசியை மாத்திப் பார்த்தாலும் அப்பவும் இப்படியே நடந்தது. மாட்டுச்சிடான்னு நாம விஞ்ஞானி ரேஞ்சுக்கு வெண்ணெயெ வெள்ளெலியாக்கிட்டம்ல.

பய புள்ளைக்கி வூட்டு இட்டிலி ஒத்துக்கலம்மா. ஹோட்டல்ல வாங்கி குடுத்து பார்க்கலாம்னு ஒரு நாள் ஹோட்டல்ல வாங்கி குடுத்தா, இட்டிலிய திரும்ப சாம்பாருல குழைச்சி மாவாக்கி அடிச்சிட்டு விண்ணுன்னு போறான். இவரு போற பக்கமெல்லாம் கூட போய்க்கிட்டு நோட் பண்ணிகிட்டே இருந்தம்பாருங்க. ஆராய்ச்சி பண்றவன் கூட அப்புடி பார்த்திருக்கமாட்டான். அடுத்த முறை எதேச்சையா வேற ஹோட்டல்ல வாங்கி குடுத்தா ஒரு இட்டிலிக்கே உவ்வேன்னு சுருண்டு பீதிய கெளப்பிட்டான்.
இப்புடி சுத்து முத்து ஓட்டல் இட்டிலியெல்லாம் டெஸ்ட் பண்ணி இந்த இந்த ஓட்டல் இட்டிலிதான் ஒத்துக்கும்னு லிஸ்ட் போடுற அளவுக்காச்சி. வெண்ணெய் நல்லா எக்ஸ்பீரியன்ஸ் ஆகி, இந்த பாம்ப் புடிக்கிற, போதைப் பொருள் புடிக்கிற நாய் ரேஞ்சுக்கு தயாராய்ட்டான்.

பொட்டலம் பிரிக்கிறப்பவே இது வாந்தி வரும்பான். அதெப்டி கண்டு புடிப்பான் நாம வாங்கினது வேற ஓட்டல்னு, கொல வெறியோட இல்லடா அதே ஓட்டல்ல வாங்கினதுன்னா, இல்ல பொய் சொல்ற பாருன்னு சொல்லி சொல்லி சாப்பிட்டு சுருண்டுக்குவான். அம்மா நம்மளுக்கு டின்னு கட்டும்.
வெண்ண பெரிய மகாராஜா ரேஞ்சுக்கு ஹோட்டல் பேரு சொல்லி இங்க வாங்கிட்டு வா. வெங்காய சட்னி வேணும்னு ப்ரதர் டீஸிங் வேற பண்ணுவான். ஒரு பக்கம் இவன் மட்டும் ஹோட்டல் இட்டிலி அடிக்கிறானேன்னு இருக்கும். இன்னோரு பக்கம் வேணும்னே இப்புடி பண்ணி எனக்கு உதை வாங்கி குடுக்கறானோன்னு சந்தேகம். வரும். இதுக்கு வைக்கிறேண்டி ஆப்புன்னு கறுவிக்கிட்டு, இதே நினைப்பா அலைஞ்சேன். ஒரு நாள் அம்மா இட்டிலிக்கு ஊறப்போட்டு, வெந்தயம் இல்லை வாங்கிட்டு வாடான்னாங்க.
வாங்கிட்டு வரும்போது யூரேகா மாதிரி ஒரு மின்னல். ஆஹா. சீக்காய்லயும் வெந்தயம். இதிலயும் வெந்தயம். சரியான ஆதாரம் வேணுமேன்னு அடுத்த முறை இட்டிலி வாங்க ஹோட்டலுக்கு போனப்ப ஏங்க மாவில வெந்தயம் போடுவீங்களான்னா இல்லைன்னாங்க. வெண்ண! முடிஞ்சதடா உன் இட்டிலி சகாப்தம்னு, மெதுவா அம்மாகிட்ட சொன்னேன்.
யம்மா வெந்தயம் கலக்காம தனியா மாவு எடுத்து வச்சி இட்டிலி குடுத்துப் பாருங்கன்னு. அவனுக்கு கட்டஞ்சரி இல்லையோ எனக்கு சரியா இருந்திச்சோ அம்மா ஒத்துகிட்டாங்க. முதல்ல இவருக்கு தனியா இட்டிலி அவிச்சிருக்க மோப்ப வெண்ணெய் ஆர்வக் கோளாறில அய்! இட்டிலின்னு பொறில மாட்டிச்சி.

சாம்பார் இல்லையான்னு சலிச்சிகிட்டே சட்டினில குழைச்சி அடிச்சிட்டு ஹெ ஹென்னு இவரு போக, அம்மா என்ன பார்த்த பார்வைல சர்.சி.வி.ராமன் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிகிட்டோம்.
இந்த ரகசியத்த இப்படியே மேன்டேன் பண்ணனும்னு முடிவாச்சி. இவரு, என்னடா இட்டிலி இப்போல்லாம் சாம்பார் இல்லாமன்னு யோசிச்சி மெதுவா எங்க வாங்கினதுன்னாரு. அம்மா வீட்டில பண்ணதுதான்னுட்டாங்க. மூஞ்சிய தொங்க போட்டுகிட்டு எனக்கு வாந்தி வருமேன்னாரு. அடிங்கொய்யாலே. இவ்வளவு நாள் ஒன்னும் பண்ணல. அதே இட்டிலிதான் சாப்புடுன்னா ஒன்னும் சொல்லாம சாப்பிட்டு என்னமோ பண்ணுதுன்னு சீன் போட்டான்.
நம்ம விஞ்ஞானி இமேஜூக்கு வந்துடுமோ கேடுன்னு, அடுத்த தபா ஹோட்டல்ல இட்லி சாம்பார் வாங்கி, வீட்டு இட்டிலிய போட்டு சாம்பாரில குழைச்சி குடுத்தா சிரிக்கிற புத்தர் மாதிரி சாப்பிட்டு இளிச்சிகிட்டு போகுது பன்னாட. வாடி செல்லம், இப்போ ஒண்ணும் பண்ணலையான்னா இல்லையேன்னு சொல்லிட்டு போறான். லக்ஷார்ச்சனை, கோடி அர்ச்சனை எல்லாம் கணக்கே இல்ல. அப்புடி விழுந்திச்சி அய்யாக்கு.
நான் பண்ண தப்பெல்லாம் இவருக்கு திட்டு விழ விழ சிரிச்சதுதான். இது நடக்குறப்ப இவருக்கு ஏழு வயசிருக்கும். தமிழ் சினிமா ஹீரோ காத்திருந்து பழி வாங்குறா மாதிரி இவன் டிகிரி முடிச்சி, வைத்தீச்வரன் கோவில்ல வெச்சாங்க ஆப்பு எனக்கு. அங்க ராத்திரி ஹோட்டல்ல சாப்பாடு கிடையாதா. மறந்து போயி இவருக்கும் சேர்த்து இட்டிலி சொல்லிட்டேன்.

வேணும்னே ஆறு இட்டிலி பொளந்து கட்டிட்டு, அப்புறம் உவ்வே உவ்வேன்னு ராவெல்லாம் பழிவாங்கி என்னமோ இவனைக் கொலை பண்ண நான் சதி பண்ணா மாதிரி அம்மாகிட்ட அத்தனை திட்டும் திருப்பி வாங்கி குடுத்துட்டு இவன் சிரிக்கிறான்.
(ஹி ஹி. முக்கியமான விசயம் மறந்துட்டேன். அம்மா என்ன திட்டுறப்ப என் பையன் இடுப்புல இருந்துகிட்டு எகிறி எகிறி சிரிச்சான் பாருங்க. அவனுக்கென்ன வன்மமோ எம்மேல. )
87 comments:
எழுத்து நடை தெளிவா இருக்கு.. நல்ல முன்னேற்றம்..
பதிவு ரொம்ப நல்லா இருக்கு சார்.. இப்டி திருட்டுப் பசங்க நிறைய பேரு இருக்கானு(ளு)வ.. நம்மளுக்கு தெரியாதா அந்தப் புள்ளையோட கஷ்டம்.. அவ்வ்வ்வ்வ்..
ரசிகர் மன்றத் தலைவர் ஒப்புதல் இல்லாம ஏதேதோ எழுதியிருக்கீங்க...
இருங்க படிச்சுட்டு வரேன்...
ஏதும் தப்புத்தண்டா இருந்ததுனா... அப்புறம் அவ்ளோதான், சொல்லிட்டேன்
கலகலப்ரியா
/எழுத்து நடை தெளிவா இருக்கு.. நல்ல முன்னேற்றம்.. /
நிஜம்மாவா. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
/பதிவு ரொம்ப நல்லா இருக்கு சார்.. இப்டி திருட்டுப் பசங்க நிறைய பேரு இருக்கானு(ளு)வ.. நம்மளுக்கு தெரியாதா அந்தப் புள்ளையோட கஷ்டம்.. அவ்வ்வ்வ்வ்../
அய்யோ. ஒரு வரில ஷொட்டு. அடுத்த வரில நச்னு ஒரு குட்டு. அவ்வ்வ்வ்..
கதிர் - ஈரோடு
/ரசிகர் மன்றத் தலைவர் ஒப்புதல் இல்லாம ஏதேதோ எழுதியிருக்கீங்க.../
இப்புடி வேற இருக்கோ!
/ஏதும் தப்புத்தண்டா இருந்ததுனா... அப்புறம் அவ்ளோதான், சொல்லிட்டேன்/
ம்கும். பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவா எப்போ இருந்திருக்காங்க அவ்வ்வ்..
//கலகலப்ரியா...இப்டி திருட்டுப் பசங்க நிறைய பேரு இருக்கானு(ளு)வ..//
எங்கள் தலைவரை திருட்டு பயல்களோடு ஒப்பிட்ட கலகம் பண்ணும் பிரியாவுக்கு ஒரு டஜன் வெந்தய இட்லி பார்சல் பண்ணுங்கப்பா
கதிர் - ஈரோடு
/எங்கள் தலைவரை திருட்டு பயல்களோடு ஒப்பிட்ட கலகம் பண்ணும் பிரியாவுக்கு ஒரு டஜன் வெந்தய இட்லி பார்சல் பண்ணுங்கப்பா/
கட்சி மாறிட்டீங்களா கதிர். அந்தம்மா சொன்னது என்னை:))
பார்த்தீங்களா... நீங்களே அவர சினிமா ஹீரோன்னு சொல்லிட்டீங்க (ஆமாங்க அப்படித்தான் சொன்னீங்க)
அதனால... ஏதையும் மனசில வச்சுக்காம விடறதா மன்றத்துல முடிவு பண்ணிட்டோம்...
(பாலாஜி, ஆரூரன், பிரபாகர் யாரையுமே காணோம், நான் ஒருத்தன் மட்டும் எப்படி களத்தில நிக்கிறது)
//கட்சி மாறிட்டீங்களா கதிர். அந்தம்மா சொன்னது என்னை:))//
அடக்கொடுமையே... தலைவர சொன்ன பதட்டத்தில தலையும் புரியல காலும் புரியல
சரி சரி.. மகராசி... கலகலப்பு செய்யும் பிரியா நல்லாயிருக்கட்டும்
கதிர் - ஈரோடு
/அதனால... ஏதையும் மனசில வச்சுக்காம விடறதா மன்றத்துல முடிவு பண்ணிட்டோம்.../
அப்பாடா பிழைச்சேன்.
(பாலாஜி, ஆரூரன், பிரபாகர் யாரையுமே காணோம், நான் ஒருத்தன் மட்டும் எப்படி களத்தில நிக்கிறது)
ஒண்டிக்கு ஒண்டிதான்
//ஒண்டிக்கு ஒண்டிதான்//
அப்பாஆஆஆஆஆ......... ஒன்னு, ஒன்டுக் குடித்தனம்.......
//நான் ஒருத்தன் மட்டும் எப்படி களத்தில நிக்கிறது)//
அப்ப படுத்துருங்க...
//அப்பாஆஆஆஆஆ......... ஒன்னு, ஒன்டுக் குடித்தனம்.......
அப்ப படுத்துருங்க...//
வாங்க மாப்பு
அய்.... அண்ணனுக்கு ஒரு ஆப்பு... எனக்கும் ஒரு ஆப்பு
பழமைபேசி
/அப்பாஆஆஆஆஆ......... ஒன்னு, ஒன்டுக் குடித்தனம்......./
இதுலயுமா:-ss
/அப்ப படுத்துருங்க.../
அவரென்ன 24ம் புலிகேசியா. ஈரோட்டுச் சிங்கம்ல.ஒத்தையாவே சமாளிப்பாரு.
கதிர் - ஈரோடு
/அய்.... அண்ணனுக்கு ஒரு ஆப்பு... எனக்கும் ஒரு ஆப்பு/
இது இது. =))
//அவரென்ன 24ம் புலிகேசியா. ஈரோட்டுச் சிங்கம்ல.ஒத்தையாவே சமாளிப்பாரு.//
சரி அமைச்சரே... வெள்ளைக் கொடிய காட்டிருவோம்... எதுக்கு சண்ட சச்சரவு... நமக்கு வரலாறு முக்கியம்.. அம்புட்டுட்டுத்தான்
(அதையேண்ணே கேக்கறீங்க 20/23 னு சொல்லிப்போட்டு... மாப்புகிட்ட வாங்கினதுக்கு எனக்குத்தான் தெரியும்.. நீங்க வேற 24னு சொல்லிட்டு)
என்னமோ போங்க... உங்க தம்பி நல்லாயிருந்தாச் சரி
//அம்மா என்ன திட்டுறப்ப என் பையன் இடுப்புல இருந்துகிட்டு எகிறி எகிறி சிரிச்சான் பாருங்க. //
அட உங்க பையன் தான் எங்க மன்றத்துக்கு வழிகாட்டீங்க
கதிர் - ஈரோடு
/சரி அமைச்சரே... வெள்ளைக் கொடிய காட்டிருவோம்... எதுக்கு சண்ட சச்சரவு... நமக்கு வரலாறு முக்கியம்.. அம்புட்டுட்டுத்தான்/
இப்புடி சப்புனு முடிச்சா எப்படி. இடுகை இன்னொருக்கா பாருங்க.
(அதையேண்ணே கேக்கறீங்க 20/23 னு சொல்லிப்போட்டு... மாப்புகிட்ட வாங்கினதுக்கு எனக்குத்தான் தெரியும்.. நீங்க வேற 24னு சொல்லிட்டு)
இஃகி இஃகி
என்னமோ போங்க... உங்க தம்பி நல்லாயிருந்தாச் சரி
போகப் போகத் தெரியும்.
கதிர் - ஈரோடு
/அட உங்க பையன் தான் எங்க மன்றத்துக்கு வழிகாட்டீங்க/
அந்தக் கொடுமை வேற! அவரு கதை தனியா வரும் பின்னாடி.:))
நானும் வந்துட்டேன். இப்டியே ரெண்டுபேரும் பேசினா எப்படி....நம்ம ரசிகர் மன்றத்து நிர்வாகிகளுக்கும் வழிவிடுங்க...நானும் படிச்சிட்டு வர்ரேன்...
புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு. ஆனா ஓட்டி போட்டுட்டம் இல்ல!
அண்ணனா பிறந்ததற்கு இப்படியெல்லாம் வேற ஆப்பா?
ஒரு விஞ்சானி ரேஞ்சுக்குத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க...
இருந்தாலும் ஆண்டவன் உங்களை இப்படி சோதனைப் பண்ணியிருக்கக்கூடாதுங்க..
//சாம்பார் இல்லையான்னு சலிச்சிகிட்டே சட்டினில குழைச்சி அடிச்சிட்டு ஹெ ஹென்னு இவரு போக, அம்மா என்ன பார்த்த பார்வைல சர்.சி.வி.ராமன் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிகிட்டோம்.//
அடப்பாவிகளா....அந்த ஒண்ணும் தெரியா பையன வெச்சி என்னமா காமடி பண்ணியிருக்கீங்க...
//முக்கியமான விசயம் மறந்துட்டேன். அம்மா என்ன திட்டுறப்ப என் பையன் இடுப்புல இருந்துகிட்டு எகிறி எகிறி சிரிச்சான் பாருங்க. அவனுக்கென்ன வன்மமோ எம்மேல//
ரசிகர் மன்றத்த அப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா?....
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சமில்லை... அப்படின்னு வை. கோயில் நீங்க பாடினீங்களா?
// அம்மா என்ன திட்டுறப்ப என் பையன் இடுப்புல இருந்துகிட்டு எகிறி எகிறி சிரிச்சான் பாருங்க. அவனுக்கென்ன வன்மமோ எம்மேல. //
இதுக்குத்தான் குழந்தைகளை அதிகமா மிரட்டக்கூடாது என்பது... பாருங்க இப்ப சப்போர்ட் கிடைச்ச உடனே... உங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு... :-)
க.பாலாஜி Says:
//ஒண்ணும் தெரியா பையன வெச்சி என்னமா காமடி பண்ணியிருக்கீங்க...//
பாலாஜி.....
என்னை மாதிரி ஒன்னும் தெரியாத பையனத்தான் எப்பவுமே கும்முறாங்க
க.பாலாஜி
/நானும் வந்துட்டேன். இப்டியே ரெண்டுபேரும் பேசினா எப்படி....நம்ம ரசிகர் மன்றத்து நிர்வாகிகளுக்கும் வழிவிடுங்க...நானும் படிச்சிட்டு வர்ரேன்.../
வாங்க பாலாஜி
தமிழ் நாடன் Says:
/புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு. ஆனா ஓட்டி போட்டுட்டம் இல்ல!/
வெண்ணை நம்ம தம்பிங்க. முன்னாடி ரெண்டு இடுகை படிச்சீங்களா தெரியல. அவருக்கு வெந்தயம் அலர்ஜி.
இராகவன் நைஜிரியா
/அண்ணனா பிறந்ததற்கு இப்படியெல்லாம் வேற ஆப்பா?
ஒரு விஞ்சானி ரேஞ்சுக்குத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க...
இருந்தாலும் ஆண்டவன் உங்களை இப்படி சோதனைப் பண்ணியிருக்கக்கூடாதுங்க../
சார். நீங்க ஒருத்தர் தான்சார் என் பக்கம். பாருங்க எல்லாரும் எப்புடி பய புள்ள அணில இருக்காங்கன்னு.அவ்வ்வ்வ்
க.பாலாஜி
/அடப்பாவிகளா....அந்த ஒண்ணும் தெரியா பையன வெச்சி என்னமா காமடி பண்ணியிருக்கீங்க.../
அந்தக் காலக்கட்டத்துல இவந்தாங்க ஆறுதல்.
/ரசிகர் மன்றத்த அப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா?..../
அப்புடித்தான் போல.:))
இராகவன் நைஜிரியா
/ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சமில்லை... அப்படின்னு வை. கோயில் நீங்க பாடினீங்களா?/
ஙேனு சமாளிச்சிட்டேன்.
//இராகவன் நைஜிரியா
இருந்தாலும் ஆண்டவன் உங்களை இப்படி சோதனைப் பண்ணியிருக்கக்கூடாதுங்க..//
அண்ணே... இராகவன் அண்ணே.. நம்பீடாதீங்க....
இராகவன் நைஜிரியா
/இதுக்குத்தான் குழந்தைகளை அதிகமா மிரட்டக்கூடாது என்பது... பாருங்க இப்ப சப்போர்ட் கிடைச்ச உடனே... உங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு... :-)/
மிரட்டினா என் பொழப்பு நாறிடும் சார். பாட்டிக்கு அவ்ளோ செல்லம். அந்தத் திமிரு அவருக்கு.
கதிர் - ஈரோடு
/பாலாஜி.....
என்னை மாதிரி ஒன்னும் தெரியாத பையனத்தான் எப்பவுமே கும்முறாங்க/
இது உங்களுக்கே ஓவரா தெரியல கதிர்.
நாடு ஒரு பெரிய விஞ்சானியோட சேவையை தவறவிட்டுத்துன்னு தோனுது. கலக்கலா எழுதியிருக்கீங்க சார்...
பிரபாகர்...
கதிர் - ஈரோடு
/அண்ணே... இராகவன் அண்ணே.. நம்பீடாதீங்க..../
தோ எனக்குன்னு இருக்கிற ஒரே சப்போர்ட் அவருதான். கூட்டணில இழுக்காதிங்க.
//பிரபாகர் Says:
October 5, 2009 5:23 PM
நாடு ஒரு பெரிய விஞ்சானியோட சேவையை தவறவிட்டுத்துன்னு தோனுது.//
அதுக்காக அந்த வெள்ளெலி எம்புட்டு கஷ்டப்பட்டிருக்கும்...
அத நினைச்சுப் பாருங்கப்பா
பிரபாகர்
/நாடு ஒரு பெரிய விஞ்சானியோட சேவையை தவறவிட்டுத்துன்னு தோனுது. கலக்கலா எழுதியிருக்கீங்க சார்.../
ஆஹா. ரெண்டாவது சப்போர்ட். கதிர் கூட சேர்ந்து கூட்டணிய விட்டு போகாதிங்க பிரபாகர்.
//வானம்பாடிகள் Says:
கூட்டணிய விட்டு போகாதிங்க பிரபாகர்.//
அய்யோ...அய்ய்ய்யோ... கூட்டணி ஒடைஞ்சு ரெண்டு நாளாச்சு
கதிர் - ஈரோடு
/அதுக்காக அந்த வெள்ளெலி எம்புட்டு கஷ்டப்பட்டிருக்கும்...
அத நினைச்சுப் பாருங்கப்பா/
ஓ அப்புடி போகுதா ரூட்டு. இங்க விஞ்ஞானிதான் எலிக்கடி படுறது. க்ளைமாக்ஸ்ல தெரியும் யாரு எலி யாரு புலின்னு.
என்னிக்கும் நான் உங்க கூடத்தான். ஆனாலும் விஞ்ஞானியை பாராட்டாம இருக்க முடியல.... சாதரணமாவா ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க.... அதான்....
பிரபாகர்
/என்னிக்கும் நான் உங்க கூடத்தான். ஆனாலும் விஞ்ஞானியை பாராட்டாம இருக்க முடியல.... சாதரணமாவா ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க.... அதான்..../
ரொம்ப நன்றி பிரபாகர். வெண்ணைக்கு ஆளிருக்கும்போது அண்ணைக்கு இருக்காதா என்னா?
//ரொம்ப நன்றி பிரபாகர். வெண்ணைக்கு ஆளிருக்கும்போது அண்ணைக்கு இருக்காதா என்னா//
அவுங்க கிடக்குறாங்க வெண்ணை.... கவலைப்படாதீங்க சார்... நானிருக்கேன்...
//அவுங்க கிடக்குறாங்க வெண்ணை.... //
பாவம் மாப்பு, பொழைச்சிப் போகட்டும்; பிரபாகர், நீங்க சொல்லுங்க! போடா வெண்ணெய், நீ பெரிய வெண்ணெயா? அவங்கிடக்குறான் வெண்ணெய்....
இதுல, வெண்ணெய்ங்றதனோட அம்சம் என்ன?
//கதிர் - ஈரோடு Says:
பாலாஜி.....
என்னை மாதிரி ஒன்னும் தெரியாத பையனத்தான் எப்பவுமே கும்முறாங்க//
நம்மள மாதிரின்னு சொல்லுங்க தலைவா (ரசிகர் மன்றத்து தலைவா...)
//அதுக்காக அந்த வெள்ளெலி எம்புட்டு கஷ்டப்பட்டிருக்கும்...
அத நினைச்சுப் பாருங்கப்பா//
அதானே...யாராவது அந்த பச்சப்புள்ளைய பத்தி நினைச்சு பாத்தாங்களா? ரெண்டு வயசுல சுவத்துல தேச்சுகிட்டாராம், அத குடும்பமே நின்னு வேடிக்கப் பாத்திருக்காங்க...இவங்கள எல்லாம் மிருக வதை...ச்ச்சீ..ச்ச்சீ....குழந்தை வதை தடுப்பு சட்டத்துல கைது பண்ணணும்.
//
இதுல, வெண்ணெய்ங்றதனோட அம்சம் என்ன?
//
கொக்கு தலையில் வெண்ணை என்பதை சார்ந்திருக்குமோ?
ம.... வெண்ணையோட மல்டி யூஸ் ?, தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்!
//பழமைபேசி Says:
பாவம் மாப்பு, பொழைச்சிப் போகட்டும்//
பாத்தீங்களா மாப்புக்கு எப்பவுமே பாசம்தான்
//பிரபாகர் Says:
October 5, 2009 6:09 PM
ம.... வெண்ணையோட மல்டி யூஸ் ?, தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்!
//
இப்ப மகிழுந்துக்கு கல்நெய் போடப் போறேன்... சாயுங்காலம் இடுகையில பார்க்கலாமுங்க!
//வானம்பாடிகள் Says:
பாட்டிக்கு அவ்ளோ செல்லம்.//
ஓ பாட்டியும் எங்க மன்றத்து மெம்பரா
ம்ம்ம்... பாட்டி சொல்லத் தட்டாதீங்கண்ணே
//க.பாலாஜி Says:
ரெண்டு வயசுல சுவத்துல தேச்சுகிட்டாராம்,//
பாலா அண்ண அழுக்கு பண்றதையெல்லாம் நம்மாளுதான் தேச்சு தேச்சு சுத்தம் பண்ணியிருக்காரு..
கொஞ்சம் கூட நன்றியே இல்லையா
வெந்தய விவகாரம் கண்டுபிடிச்ச நீங்க ரொம்ப விவரமான ஆளுங்க... :))
சரி, தும்பை விட்டு வாலை பிடிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்களேன்... தெரியலைன்னா ஒரு பிளாக்காவே போட்டுடலாம்...
அண்ணே... என்னது மாப்பும், பிராபாகரும்வும் உங்க ஊட்டுல பட்டிமன்றம் நடத்துறாங்க?
//அண்ணே... என்னது மாப்பும், பிராபாகரும்வும் உங்க ஊட்டுல பட்டிமன்றம் நடத்துறாங்க?
//
பெரியவங்க முன்னாடி பண்ற காரியம்... அதான்...
//கதிர் - ஈரோடு Says:
பாலா அண்ண அழுக்கு பண்றதையெல்லாம் நம்மாளுதான் தேச்சு தேச்சு சுத்தம் பண்ணியிருக்காரு..
கொஞ்சம் கூட நன்றியே இல்லையா//
ம்ம்ம்ம்....பாருங்களேன்...ஆமா இந்த இடுகைக்கு சொந்தக்காரர் எங்க? ரொம்ப நேரமா ஆளையே காணும். நம்மளோட பின்னோட்டத்துக்கு பதில் சொல்ல முடியாம எங்கயோ போய் பதுங்கிட்டாருன்னு நெனைக்கிறேன். அய்ய்ய்ய்ய்ய்யா................இருக்கீங்களா.........
//பிரபாகர் Says:
பெரியவங்க முன்னாடி பண்ற காரியம்... அதான்...//
அப்போ அண்ணணை சாலமன் பாப்பையானு சொல்றீங்களா...
ஆனா... நீங்க திடீர்னு தாவுனது நல்லாயில்ல ஆமா...
சாட்ல வந்தப்போ என் பக்கம்னு சொல்லிட்டு... அங்க போய் நிக்கிறீங்க..
இது நல்லதுக்கில்ல
பாலாண்ணே......தெங்க போயிட்டீங்க....யல்லாரையும் பேசவுட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டீங்க.....
//ஆனா... நீங்க திடீர்னு தாவுனது நல்லாயில்ல ஆமா...
சாட்ல வந்தப்போ என் பக்கம்னு சொல்லிட்டு... அங்க போய் நிக்கிறீங்க..
இது நல்லதுக்கில்ல
//
என்னிக்குமே பில்டிங்கல வீக்கா இருக்கிற இடத்துலதான் முட்டு கொடுப்பாங்க....
//பிரபாகர் Says:
என்னிக்குமே பில்டிங்கல வீக்கா இருக்கிற இடத்துலதான் முட்டு கொடுப்பாங்க....//
அவரு தலையப்பாத்ததுக்கு அப்பறமும் நீங்க இந்த முடிவுக்கு வந்துருக்கீங்கன்னா உங்களுக்கு ரொம்ம தைரியம்தான்...
//சரி, தும்பை விட்டு வாலை பிடிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்களேன்... தெரியலைன்னா ஒரு பிளாக்காவே போட்டுடலாம்...//
நான் இதுக்குதான் சொன்னேன்... வினாக்களை எல்லாம் மின்னஞ்சல்ல அனுப்புங்கவென்டு... பிரபாகர், வெரசையா அனுப்பி விடுங்கோ என்ன?!
யாருப்பாது அண்ணனை ரொம்ப கலாய்க்கிறது.. அவரே பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டு வெண்ணைக்கு எது ஓவ்வாமை என்று கண்டுபிடிச்சு சொல்லியிருக்காரு..
உங்க வெண்னை இன்று இட்லி சாப்பிடுவதற்கு முழு முதல் காரணம் அண்ணன் என்பதை ஞாபகத்தில் இருக்கட்டும்.
இன்று மன்றம் வைத்து நீங்க இவ்வளவு பேசுவதற்காக அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருகாரு? எல்லார்கிட்டேயும் திட்டு எல்லாம் வாங்கியிருக்காரு...
அண்ணனா இருப்பதன் கஷ்டம் தம்பிகள் உங்களுக்கு எங்க தெரியப் போகுது..
// பிரபாகர்
October 5, 2009 6:34 PM
சரி, தும்பை விட்டு வாலை பிடிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்களேன்... தெரியலைன்னா ஒரு பிளாக்காவே போட்டுடலாம்... //
பிளாக்காகவா... அண்ணே இதுக்கெல்லாம் பிளாக் ஆரம்பிச்சா பிளாக் தாங்கதண்ணே... வேண்டுமென்றால் ஒரு இடுகை போட்டுகோங்க..
// கதிர் - ஈரோடு
October 5, 2009 6:15 PM
//வானம்பாடிகள் Says:
பாட்டிக்கு அவ்ளோ செல்லம்.//
ஓ பாட்டியும் எங்க மன்றத்து மெம்பரா
ம்ம்ம்... பாட்டி சொல்லத் தட்டாதீங்கண்ணே //
இது கூடத் தெரியலவில்லை... நீங்க எல்லாம் எதுக்கு மன்றம் என்று ஒன்று வச்சு இருக்கீங்க. இருப்பது 10 பேர் கூட இல்லை. யார் யார் எல்லாம் மெம்பர் என்றுக்கூடத் தெரியவில்லை. இதுக்கு பேசாம மன்றத்தை கலைச்சுடலாம்..
// பழமைபேசி
நான் இதுக்குதான் சொன்னேன்... வினாக்களை எல்லாம் மின்னஞ்சல்ல அனுப்புங்கவென்டு... பிரபாகர், வெரசையா அனுப்பி விடுங்கோ என்ன?! //
நான் அனுப்பிட்டேன்... அப்ப நீங்க ??
சுவாரசியமான நடை.
பழமைபேசி
/பாவம் மாப்பு, பொழைச்சிப் போகட்டும்; பிரபாகர், நீங்க சொல்லுங்க! போடா வெண்ணெய், நீ பெரிய வெண்ணெயா? அவங்கிடக்குறான் வெண்ணெய்....
இதுல, வெண்ணெய்ங்றதனோட அம்சம் என்ன?/
இங்க இவ்வளவு நடந்திருக்கா? அவ்வ்வ்.. சொன்னீங்களா பிரபாகர்.
க.பாலாஜி
/அதானே...யாராவது அந்த பச்சப்புள்ளைய பத்தி நினைச்சு பாத்தாங்களா? ரெண்டு வயசுல சுவத்துல தேச்சுகிட்டாராம், அத குடும்பமே நின்னு வேடிக்கப் பாத்திருக்காங்க...இவங்கள எல்லாம் மிருக வதை...ச்ச்சீ..ச்ச்சீ....குழந்தை வதை தடுப்பு சட்டத்துல கைது பண்ணணும்./
சிரிச்சிகிட்டே உராசினா சிரிக்காம என்ன பண்ண. யப்பா.
பிரபாகர் Says:
/கொக்கு தலையில் வெண்ணை என்பதை சார்ந்திருக்குமோ?/
/ம.... வெண்ணையோட மல்டி யூஸ் ?, தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்!/
ம்ம்ம். பார்க்க திடமா இருந்தாலும் பொத பொதன்னுஇருக்குமோ. லுக்கு ஸ்ட்ராங்கு. கோரு வீக்குன்னு.
// வானம்பாடிகள்
October 5, 2009 8:13 PM
க.பாலாஜி
/அதானே...யாராவது அந்த பச்சப்புள்ளைய பத்தி நினைச்சு பாத்தாங்களா? ரெண்டு வயசுல சுவத்துல தேச்சுகிட்டாராம், அத குடும்பமே நின்னு வேடிக்கப் பாத்திருக்காங்க...இவங்கள எல்லாம் மிருக வதை...ச்ச்சீ..ச்ச்சீ....குழந்தை வதை தடுப்பு சட்டத்துல கைது பண்ணணும்./
சிரிச்சிகிட்டே உராசினா சிரிக்காம என்ன பண்ண. யப்பா //
அதுக்குத்தான் அண்ணே எழுதும் போதே சிரிசிக்கிட்டே சுவத்திலே போய் உரசுனான் அப்படின்னு எழுதியிருக்கணும்... அப்ப உங்க பேர்ல பழி வந்திருக்காதில்ல..
கதிர் - ஈரோடு
/பாத்தீங்களா மாப்புக்கு எப்பவுமே பாசம்தான்/
இல்லையா பின்ன
/ஓ பாட்டியும் எங்க மன்றத்து மெம்பரா
ம்ம்ம்... பாட்டி சொல்லத் தட்டாதீங்கண்ணே/
அப்புடித்தானே நடந்துட்டிருக்கு
/பாலா அண்ண அழுக்கு பண்றதையெல்லாம் நம்மாளுதான் தேச்சு தேச்சு சுத்தம் பண்ணியிருக்காரு..
கொஞ்சம் கூட நன்றியே இல்லையா/
யப்பா. அரசியல் தலைவரெல்லாம் தோத்துடுவாங்க போல
/அப்போ அண்ணணை சாலமன் பாப்பையானு சொல்றீங்களா...
ஆனா... நீங்க திடீர்னு தாவுனது நல்லாயில்ல ஆமா...
சாட்ல வந்தப்போ என் பக்கம்னு சொல்லிட்டு... அங்க போய் நிக்கிறீங்க..
இது நல்லதுக்கில்ல/
ஆஹா. இது பயங்கர ஆப்பையா.
க.பாலாஜி
/அவரு தலையப்பாத்ததுக்கு அப்பறமும் நீங்க இந்த முடிவுக்கு வந்துருக்கீங்கன்னா உங்களுக்கு ரொம்ம தைரியம்தான்.../
இப்புடியெல்லாம் வரும்னுதானே நானே எழுதி வெச்சிருக்கேன். பன்னு மேல ப்ளம் மாதிரி கொஞ்சம் இருக்குன்னு அப்புடியுமா.அவ்வ்வ்=))
பழமைபேசி
/பிரபாகர்
சரி, தும்பை விட்டு வாலை பிடிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்களேன்... தெரியலைன்னா ஒரு பிளாக்காவே போட்டுடலாம்.../
அது மாட்டை அடக்கணும்னா மூக்கணாங்கயித்த புடிக்காம வாலை புடிச்சி அடக்க பார்த்த சுத்தி சுத்தி முட்ட வரும். அதும் பின்னாடி இழுபடணும். அதானே.
க.பாலாஜி
/ம்ம்ம்ம்....பாருங்களேன்...ஆமா இந்த இடுகைக்கு சொந்தக்காரர் எங்க? ரொம்ப நேரமா ஆளையே காணும். நம்மளோட பின்னோட்டத்துக்கு பதில் சொல்ல முடியாம எங்கயோ போய் பதுங்கிட்டாருன்னு நெனைக்கிறேன். அய்ய்ய்ய்ய்ய்யா................இருக்கீங்களா........./
/பாலாண்ணே......தெங்க போயிட்டீங்க....யல்லாரையும் பேசவுட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டீங்க...../
அட அத ஏன் கேக்குறீங்க. போனஸ் டைமாச்சா. கொஞ்சம் வேலை.
இராகவன் நைஜிரியா
/உங்க வெண்னை இன்று இட்லி சாப்பிடுவதற்கு முழு முதல் காரணம் அண்ணன் என்பதை ஞாபகத்தில் இருக்கட்டும்.
இன்று மன்றம் வைத்து நீங்க இவ்வளவு பேசுவதற்காக அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருகாரு? எல்லார்கிட்டேயும் திட்டு எல்லாம் வாங்கியிருக்காரு...
அண்ணனா இருப்பதன் கஷ்டம் தம்பிகள் உங்களுக்கு எங்க தெரியப் போகுது../
ஆஹா. பாசப் பறவைகள்னு எழுதறதில்லை. வாழ்ந்து காட்டுறாரு அண்ணன். ரொம்ப நன்றி.
/பிளாக்காகவா... அண்ணே இதுக்கெல்லாம் பிளாக் ஆரம்பிச்சா பிளாக் தாங்கதண்ணே... வேண்டுமென்றால் ஒரு இடுகை போட்டுகோங்க../
பழமை ஹெட்மாஸ்டர்னா இவரு சப்ஸ்டிட்யூட்டா.
இராகவன் நைஜிரியா
/இது கூடத் தெரியலவில்லை... நீங்க எல்லாம் எதுக்கு மன்றம் என்று ஒன்று வச்சு இருக்கீங்க. இருப்பது 10 பேர் கூட இல்லை. யார் யார் எல்லாம் மெம்பர் என்றுக்கூடத் தெரியவில்லை. இதுக்கு பேசாம மன்றத்தை கலைச்சுடலாம்../
அதான் அதான்.
நன்றி ஸ்ரீ
துபாய் ராஜா
/வெந்தய விவகாரம் கண்டுபிடிச்ச நீங்க ரொம்ப விவரமான ஆளுங்க... :))/
:)) நன்றி ராஜா
:).. ஐயா.. என்ன நடக்குது இங்கே..? உங்களைப் பந்தாக்கி எல்லாரும் அமெரிக்கன் ஃபுட்பால் ஆடிக்கிட்டிருக்கிற மாதிரி இருக்கே...!
இங்க கொஞ்சம் இடம் ஜாஸ்தியா இருக்கோ.. இல்ல உங்க தலையப் பார்த்து கிரவுண்டுன்னு நினைச்சு களம் இறங்கிட்டாங்களா.. ஹிஹி..
ஆனா பாருங்க பிளேயர்ஸ்தான் ஹெல்மெட் போட்டு ஆளுக்கு ஆள் அடிச்சுப்பாய்ங்க... நீங்க கம்பீரமா இருக்கலாம்.. =)பார்த்து ஆடுங்கப்பா.. அப்பா வரட்டே.. !
கலகலப்ரியா
/உங்க தலையப் பார்த்து கிரவுண்டுன்னு நினைச்சு களம் இறங்கிட்டாங்களா.. ஹிஹி.. /
அது வால் பாறை வட்டப் பாறையாச்சே. பிடிமானமெங்கே. ஹி ஹி.
குறும்புகளை ரசிக்கவும்,அதை அதே ரசனையோட எழுதவும் தெரியணும்.ரசித்துச் சிரித்தேன்.அதைவிடப் பின்னூட்டங்கள்...!
கலக்கல் நடை..பின்னுறீங்க..
ஹேமா
/குறும்புகளை ரசிக்கவும்,அதை அதே ரசனையோட எழுதவும் தெரியணும்.ரசித்துச் சிரித்தேன்.அதைவிடப் பின்னூட்டங்கள்../
நன்றிங்க
அவிய்ங்க ராசா
/கலக்கல் நடை..பின்னுறீங்க../
வாங்க ராஜா. நன்றி.
//வெண்ண பெரிய மகாராஜா ரேஞ்சுக்கு ஹோட்டல் பேரு சொல்லி இங்க வாங்கிட்டு வா.//
ஹ ஹ ஹா
இப்பிடியெல்லாமா பேசுவீக.....
பிரியமுடன்...வசந்த்
/ஹ ஹ ஹா
இப்பிடியெல்லாமா பேசுவீக...../
வாங்க வசந்த். ஆமாம்:)). இன்னும் வரும் அவர் லொள்ளு.
me the 85,
அதான் கிடைச்சது...
:(((
அப்பாவி முரு
/me the 85,
அதான் கிடைச்சது...
:(((/
வாங்க முரு:))
இடுகை டாப்பு என்றால், பின்னுட்டங்கள் அதைவிட டாப்போ டாப்பு
Post a Comment