Thursday, November 19, 2009

குடிசை (ஏ)மாற்று வாரியம்!




இன்றைய செய்தி இது. சேத்துப்பட்டில் ஆக்கிரமிப்பை காலி செய்து  பறக்கும் விரைவுச் சாலை அமைக்க வழி செய்திருக்கிறார்கள். இவர்கள் குடியிருக்க மாற்றாக துரைப்பாக்கத்தில் 1300 வீடுகள் கொடுக்கப் பட்டிருப்பதாக அதிகாரி தெரிவித்தாராம். இந்த இடத்தில் ஒரு டாஸ்மாக் கடையும், பொதுக் கழிப்பிடமும் இருந்திருக்கிறது.

சரி! என்ன நடக்கும்? இவர்கள் எல்லாம் துரைப்பாக்கம் போய்விடுவார்களா? மாட்டார்கள். காரணம் இருப்பிடம் மட்டுமல்ல பிரச்சினை. இவர்கள் பிழைப்பும் இங்குதான் ஒன்றியிருக்கிறது. துரைப்பாக்கத்தில் இருக்கும் வீட்டைப் பெற்றுக் கொண்டு வாடைகைக்கு விடுவார்கள். சிலருக்கு மூன்று அல்லது அதற்கு மேலும் குடிசை மாற்று வாரிய வீடுகள் இருப்பது நிஜம்.

ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டும் மாநகராட்சி, டாஸ்மாக் கடைக்கு லைசன்ஸ் தரப்பட்டமை சுட்டிக் காட்டுவது எதை? கூவம் கரையோரம் குடியிருப்பு நிலமா இருந்திருக்கப் போகிறது? பின்னெப்படி, இவையெல்லாம் சாத்தியம்? இங்கிருந்த வீடுகளுக்கு முதலில் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவார்கள். பின்பு ஏதோ ஒரு வகையில் நிலவரி, ரேஷன் கார்டு, வீட்டு முகவரி என்று அனைத்தும் பெற்று விடுவார்கள். அவற்றைக் கொண்டு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பும் கூடப் பெறுவார்கள்.

இந்த மாதிரி, அரசுக்குத் தேவை எனும் பட்சத்தில் மாத்திரமே நிலமீட்பு நடைபெறும். மற்ற இடங்களில் 40 வருடங்களாக இருக்கிறோம் என்று நீதிமன்றம் செல்லுவதும் நடை பெறுகிறது.

பெரும்பாலும், தூர்ந்து போன ஏரிகள், தாழ்வான பகுதிகளில் இவர்கள் ஆக்கிரமிப்புச் செய்வதும், பெருமழையில் நீர் நிரம்பிடில், கரையை உடைத்து ஊருக்குள் விடுவதும் இவர்கள் செய்யும் அட்டூழியம். சென்ற வருட மழையில் அரும்பாக்கம் MMDA காலனி என்ற மேல்தரக் குடிப்பகுதி பாதிக்கப்படும் வரை, அரசும் இவர்களைக் கண்டுக் கொள்ளவில்லை.

மாநகராட்சியின் மூக்கின் கீழ், சென்னைப் பொது மருத்துவமனையின் பின்புறம் பாலத்திலிருந்து தொடங்கி கடற்கரை சாலை வரையில் உள்ள குடிசை, இரண்டடுக்கு மூன்றடுக்கு கட்டிடங்கள் உள்ளனவே. எப்படி முடிந்தது இவர்களால்?

முளையிலேயே கிள்ளி எறியாமல், மக்கள் பணத்தை வீணடிக்கத் தயாராகும் அரசு இவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பார்ப்பது தான் காரணம்.  




63 comments:

நிஜாம் கான் said...

Me the First aaa?

நிஜாம் கான் said...

அண்ணே! இன்றைய சென்னை மாநகர சூழ்நிலையில் பறக்கும் சாலை அவசியம். ஆனால் அதே நேரம் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் முறையாக‌ செய்யப்பட வேண்டும்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ Me the First aaa?/

ஆமாம்:))

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! இன்றைய சென்னை மாநகர சூழ்நிலையில் பறக்கும் சாலை அவசியம்./

சந்தேகமே இல்லை.

/ஆனால் அதே நேரம் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் முறையாக‌ செய்யப்பட வேண்டும்./

இவர்கள் எப்படி ஆக்கிரமிப்பு செய்தார்கள்? யார் அனுமதித்தது? ஏன் அரசு சட்ட மீறலை அங்கீகரிக்க வேண்டும்? இதே ஒரு தனி நபராக இருந்தால் செய்திருப்பார்களா?

என்னுடையெ கேள்வியே, துரைப்பாக்கத்துக்கு போவதாயிருக்கும் பட்சத்தில் ஏன் வீதியில் சமைத்துக் கொண்டாவது இருக்கிறார்கள்?

சிறிது நாளில் திரும்பவும் அங்கேயே குடிசை முளைக்கும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//முளையிலேயே கிள்ளி எறியாமல், மக்கள் பணத்தை வீணடிக்கத் தயாராகும் அரசு இவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பார்ப்பது தான் காரணம்.//

correct.

துளசி கோபால் said...

இப்பக் கொஞ்ச நேரம் முந்தி சாலையில் போகும்போது மரணச் சடங்கு போஸ்டர் ஒன்னு பார்த்தேன்.
(இதுக்கெல்லாம் கூட ஊர் அழைப்பு வந்துருச்சு!)

அதுலே போட்டுருந்த விலாசம்தான் சூப்பர்.

திடீர் நகர், பெஸண்ட் நகர்.
இது எப்படி இருக்கு?
திடீர்ன்னு ஒரு நகரே உருவாகி இருக்கு!!!!

அஞ்சாறு வீடுகள், கட்சிக்கொடியோடு ஒரு கொடிக்கம்பம். யாரும் கேட்டுக்க முடியாது(-:

பிரபாகர் said...

சரியாக சொன்னீர்கள். இடுகையின் தலைப்புத்தான் எனது பின்னூட்டமும்...

பிரபாகர்.

ரோஸ்விக் said...

//முளையிலேயே கிள்ளி எறியாமல், மக்கள் பணத்தை வீணடிக்கத் தயாராகும் அரசு இவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பார்ப்பது தான் காரணம்//

மிகச் சரி. வேதனையான அரசியலும் அவர்களுக்கு துணைபோகும் சில அதிகாரிகளும் என்று மாறுவார்கள் தலைவா??

பின்னோக்கி said...

ஆமாங்க. முதல்வன் படத்துல வர்றதுமாதிரியே தான் நடக்குது..

vasu balaji said...

ஸ்ரீ said...
/correct./

Thank you Sri

vasu balaji said...

துளசி கோபால் said...

(இதுக்கெல்லாம் கூட ஊர் அழைப்பு வந்துருச்சு!)

ஃப்ளெக்ஸ் பேன்னர் ரொம்ப சீப். பேசின் ப்ரிட்ஜ் கிட்ட குடிசை மாற்று வாரியம் சுவற்றில பார்த்தா எட்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்து போனவங்களுக்கு அஞ்சலின்னு 2 மாடிக்கு பெயிண்டிங்கே இருக்கும்.

/திடீர்ன்னு ஒரு நகரே உருவாகி இருக்கு!!!!/

ஆமாங்க. அதும் இப்படி வந்ததுதான். ரொம்ப வருஷமிருக்கும்.

/அஞ்சாறு வீடுகள், கட்சிக்கொடியோடு ஒரு கொடிக்கம்பம். யாரும் கேட்டுக்க முடியாது(-:/

அதுதான் அவங்க பலமே. கொடியும் கம்பத்து கலரும் மட்டும் மாறும். ஆட்சி மாறும்போது.

vasu balaji said...

பிரபாகர் said...

/சரியாக சொன்னீர்கள். இடுகையின் தலைப்புத்தான் எனது பின்னூட்டமும்.../

நன்றி பிரபாகர்

vasu balaji said...

ரோஸ்விக் said...

/மிகச் சரி. வேதனையான அரசியலும் அவர்களுக்கு துணைபோகும் சில அதிகாரிகளும் என்று மாறுவார்கள் தலைவா??/

அரசியல் வாதிகளால் அரசு இயந்திரம் முடக்கப் படுவதே உண்மை.

vasu balaji said...

பின்னோக்கி said...

/ஆமாங்க. முதல்வன் படத்துல வர்றதுமாதிரியே தான் நடக்குது../

இல்லைங்க. ரொம்ப வருஷமா இப்படி நடக்கறததான் முதல்வன்ல காட்டினாங்க.

ஈ ரா said...

உண்மைதான்... இதற்க்கு தீர்வு காண தொலைநோக்கு பார்வை கொண்ட தைரியமான தலைமை வேண்டும்.. கிடைக்குமா லேசில் ?

vasu balaji said...

ஈ ரா said...

/உண்மைதான்... இதற்க்கு தீர்வு காண தொலைநோக்கு பார்வை கொண்ட தைரியமான தலைமை வேண்டும்.. கிடைக்குமா லேசில் /

அப்படி கிடைச்சிட்டாலும் ஒன்னு அவரு மாறிடுவாரு. இல்லைன்னா ஜனங்க மாத்திடுவாங்க.

ஈரோடு கதிர் said...

//மக்கள் பணத்தை வீணடிக்கத் தயாராகும் அரசு //

மக்கள் பணத்தை யார் வீணடிக்கிறாங்க.... மக்கள் பணம் அவங்களுக்கு முதலீடுங்க....

லெமூரியன்... said...

முறையான நகர கட்டமைப்பை ஏற்ப்படுத்தாமல் விட்டதாலேயே கூவம் குட்டிச் சுவராய்ப் போனது....அப்பொழுதாவது இவர்கள் கொஞ்சம் விழித்து இருக்கலாம்......பல கோடிகளுக்கு பெறுமான இடமென்றால் தான் இங்கே அதிக அக்கறைக் காட்டுவார்கள்....

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/மக்கள் பணத்தை யார் வீணடிக்கிறாங்க.... மக்கள் பணம் அவங்களுக்கு முதலீடுங்க..../

ஓஓஓ. இதத்தான் ஆட்சியில் மக்கள் பங்குங்கறதோ!. அப்பச் செரி.=))

vasu balaji said...

லெமூரியன்... said...

/பல கோடிகளுக்கு பெறுமான இடமென்றால் தான் இங்கே அதிக அக்கறைக் காட்டுவார்கள்..../

இப்பொழுதாவது நெறிப் படுத்தலாமே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அரசியல் வாதிகளால் அரசு இயந்திரம் முடக்கப் படுவதே உண்மை.//

Repeateyy

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பார்வை பாமரன்

கலகலப்ரியா said...

v.good... vanampadi.. jussss go ahead.. =))..

//வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பார்வை பாமரன்//

kmkum...

நசரேயன் said...

என்ன புதுசாவா நடக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

யாருக்காக இது யாருக்காக..

இந்த மாளிகை வசந்தமாளிகை?

அன்பே அன்பே அன்பே...

:))))))))

போங்கய்யா நீங்களும் உங்க "வாரி"யமும்

எம்.எம்.அப்துல்லா said...

உண்மைதான்.

இராகவன் நைஜிரியா said...

உங்க மனசுல என்ன நினைப்பு...

அண்ணே ஓட்டு போடவது அவங்க மட்டும்தான்..

காச வாங்கிட்டாவது ஓட்டு போடுவாங்க..

அரசியல் லாபத்துக்காக, அவங்களை கண்டுகிட மாட்டாங்க..

இராகவன் நைஜிரியா said...

// இன்றைய செய்தி இது. சேத்துப்பட்டில் ஆக்கிரமிப்பை காலி செய்து பறக்கும் விரைவுச் சாலை அமைக்க வழி செய்திருக்கிறார்கள். //

இன்றைய செய்தி நாளைய வரலாறு...

வரலாறு அடிக்கடி செய்தியாகி மாறிவிடுகின்றது அதுதான் அதுல ரொம்ப கஷ்டமான விசயமா இருக்கு..

இராகவன் நைஜிரியா said...

மேலும் ஒரு விஷயம்... இந்த குடிசைகளைத் தவிர பெரிய பெரிய கம்பெனிகள், பில்டர்கள் எத்துனைப் பேர் அடையாறு மற்றும் கூவம் ஓரமாக அதை ஆக்கிரமித்துள்ளனர் என்பதையும் அரசு பார்க்க வேண்டும்.

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/Repeateyy/

டாங்சேஏஏய்=))

vasu balaji said...

வெண்ணிற இரவுகள்....! said...

/நல்ல பார்வை பாமரன்/

நன்றி கார்த்திக்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ v.good... vanampadi.. jussss go ahead.. =)).. /

அம்மா வாத்திச்சி. இந்த சிரிப்புக்கு என்னம்மா அர்த்தம்.=)) ம்கும் வேற போட்ட.

vasu balaji said...

நசரேயன் said...

/என்ன புதுசாவா நடக்கு/

இல்லைண்ணே. அடுத்ததடுத்து இந்த ஹைவே வர இடமா பார்த்து பார்த்து போடுவாய்ங்க. பறக்கும் ரயிலுக்கு வேற பிடுங்கியாவணும். அரசுக்கு எவ்வளவு விரயம்?

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/யாருக்காக இது யாருக்காக..

இந்த மாளிகை வசந்தமாளிகை?

அன்பே அன்பே அன்பே...

:))))))))

போங்கய்யா நீங்களும் உங்க "வாரி"யமும்/

இவனுக்கு நக்கல பாரு.

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

/ உண்மைதான்./

வாங்க அப்துல்லா. நன்றிங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/உங்க மனசுல என்ன நினைப்பு...

அண்ணே ஓட்டு போடவது அவங்க மட்டும்தான்..

காச வாங்கிட்டாவது ஓட்டு போடுவாங்க..

அரசியல் லாபத்துக்காக, அவங்களை கண்டுகிட மாட்டாங்க../

அண்ணே அது வேற கணக்கு. இது கொடுக்கல் வாங்கல்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/இன்றைய செய்தி நாளைய வரலாறு...

வரலாறு அடிக்கடி செய்தியாகி மாறிவிடுகின்றது அதுதான் அதுல ரொம்ப கஷ்டமான விசயமா இருக்கு../

யாருமே இது முன்ன வந்த செய்தின்னே நினைக்க மாட்டங்குறாங்களேண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/மேலும் ஒரு விஷயம்... இந்த குடிசைகளைத் தவிர பெரிய பெரிய கம்பெனிகள், பில்டர்கள் எத்துனைப் பேர் அடையாறு மற்றும் கூவம் ஓரமாக அதை ஆக்கிரமித்துள்ளனர் என்பதையும் அரசு பார்க்க வேண்டும்./

ஆஹா. என் இடுகைக்கு பலனிருக்கு. பாயிண்ட புடிச்சிட்டீங்க.

இராகவன் நைஜிரியா said...

http://surveysan.blogspot.com/2009/11/blog-post_19.html

அண்ணே அப்படியே முடிஞ்சா இந்த இடுகையையும் பார்த்துட்டு வாங்களேன்..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே அந்த பெரிய கம்பெனிகள் என்று நான் சொன்னதில், சென்னையின் பெரிய தனியார் மருத்துவமனை உண்டு .. அது தெரியுமோ உங்களுக்கு

இராகவன் நைஜிரியா said...

// பெரும்பாலும், தூர்ந்து போன ஏரிகள், //

தூர்க்கப் பட்ட ஏரிகள்...

SurveySan said...

இதுதான் கூட்டுக் களவாணிதனமா?

vasu balaji said...

SurveySan said...

/இதுதான் கூட்டுக் களவாணிதனமா?/

=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே அப்படியே முடிஞ்சா இந்த இடுகையையும் பார்த்துட்டு வாங்களேன்../

பார்த்தேண்ணே. அம்பத்தூர் ஏரில MMDA Phase II Flat ku விளம்பரமே வந்தாச்சே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே அந்த பெரிய கம்பெனிகள் என்று நான் சொன்னதில், சென்னையின் பெரிய தனியார் மருத்துவமனை உண்டு .. அது தெரியுமோ உங்களுக்கு/

அது இருக்கு நிறைய.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/தூர்க்கப் பட்ட ஏரிகள்.../

ஆமாங்க.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பல சமூக அவலங்களை உள்வாங்கி எழுதியுள்ளீர்கள்.. நம்மால் முடிந்தது இது போல எழுதுவது தான் :((

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/பல சமூக அவலங்களை உள்வாங்கி எழுதியுள்ளீர்கள்.. நம்மால் முடிந்தது இது போல எழுதுவது தான் :((/

ஆமாங்க செந்தில். நன்றி.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ v.good... vanampadi.. jussss go ahead.. =)).. /

அம்மா வாத்திச்சி. இந்த சிரிப்புக்கு என்னம்மா அர்த்தம்.=)) ம்கும் வேற போட்ட.//

அட... வேற ஒண்ணுமில்ல சார்.. பார்வைன்னதும் உங்க கண்ணாடி கவனம் வந்திடிச்சி சார்...

கலகலப்ரியா said...

அப்புறம்... வாத்து... கொக்குன்னா... நான் பதிலுக்கு ஏதாவது சொல்லிடப் போறேன் சார்... சாக்கிரத..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அப்புறம்... வாத்து... கொக்குன்னா... நான் பதிலுக்கு ஏதாவது சொல்லிடப் போறேன் சார்... சாக்கிரத../

இதென்னா வம்பு. வாத்திச்சின்னு தானெ சொன்னேன்.மிரட்டுரியா?

cheena (சீனா) said...

அன்பின் பாலா

இதெல்லாம் காலாகாலமாக நடைபெறும் சம்பவங்கள் - ஒன்றும் செய்ய இயலாது - அரசுக்கும் தெரியும் - மக்களுக்கும் தெரியும் - ஆக்கிரமிப்பு - அகற்றுதல் - மறு ஆக்கிரமிப்பு எல்லாம்

என்ன செய்வது

நல்வாழ்த்துகள் பாலா

thiyaa said...

எல்லாம் அரசியல் விளையாட்டு உதுக்கு நான் வரலை
பாவம் மக்கள் அற்பசொற்ப சலுகைகளுக்காக ஏமாற்றப் படுகிறார்கள் அதுதான் கவலை
போக்குவரத்து சீரமைக்கப் படுவது நாட்டுக்கு நலன் ஆனால் மக்களில் ஒருவர்கூட பாதிக்கப்படக் கூடாது. அதுதான் என் கருத்து .

ஊடகன் said...

இவ்வளவு திட்டுரோமே, இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா........

இவர்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குரங்கய்யா...........

புலவன் புலிகேசி said...

மாற்று வீடுகள் கொடுக்க அவர்களிடம் கூட லஞ்சம் கேட்கும் அதிகார நாய்கள் இருக்கும் வரை அவர்கள் வீட்டை வாடகைக்குத்தான் விடுவார்கள். அரசியல்வாதிகளுடன் சேர்ந்தவர்கள் இந்த அதிகாரிகள்..

ஆரூரன் விசுவநாதன் said...

nice articles......keep it up......

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

/இதெல்லாம் காலாகாலமாக நடைபெறும் சம்பவங்கள் - ஒன்றும் செய்ய இயலாது - அரசுக்கும் தெரியும் - மக்களுக்கும் தெரியும் - ஆக்கிரமிப்பு - அகற்றுதல் - மறு ஆக்கிரமிப்பு எல்லாம்

என்ன செய்வது/

அதுவும் சரிதான் சார்.

vasu balaji said...

தியாவின் பேனா said...

/எல்லாம் அரசியல் விளையாட்டு உதுக்கு நான் வரலை
பாவம் மக்கள் அற்பசொற்ப சலுகைகளுக்காக ஏமாற்றப் படுகிறார்கள் அதுதான் கவலை
போக்குவரத்து சீரமைக்கப் படுவது நாட்டுக்கு நலன் ஆனால் மக்களில் ஒருவர்கூட பாதிக்கப்படக் கூடாது. அதுதான் என் கருத்து ./

இல்லை தியா. இது ஒரு கூட்டுக் கொள்ளை. எல்லாருக்கும் லாபம் இதில்.

vasu balaji said...

ஊடகன் said...

/ இவ்வளவு திட்டுரோமே, இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா........

இவர்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குரங்கய்யா.........../

திட்டுன்னா என்ன போச்சு. துட்டுதான் சார் முக்கியம்

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/மாற்று வீடுகள் கொடுக்க அவர்களிடம் கூட லஞ்சம் கேட்கும் அதிகார நாய்கள் இருக்கும் வரை அவர்கள் வீட்டை வாடகைக்குத்தான் விடுவார்கள். அரசியல்வாதிகளுடன் சேர்ந்தவர்கள் இந்த அதிகாரிகள்../

அவங்க பங்கு கடைசிங்க

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/nice articles......keep it up....../

Thank you arooran

S.A. நவாஸுதீன் said...

பலபக்கம் எதிர்ப்பு வந்தாலும் இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழ மக்கள் பழகிக்கிட்டாங்க. இது மக்களுக்கும் தெரியும் அரசுக்கும் தெரியும். அதான் பெரிய கொடுமை.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/பலபக்கம் எதிர்ப்பு வந்தாலும் இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழ மக்கள் பழகிக்கிட்டாங்க. இது மக்களுக்கும் தெரியும் அரசுக்கும் தெரியும். அதான் பெரிய கொடுமை./

ஒரு சிலர்தான் இப்படி. பெரும்பாலும் அவர்கள் பிழைப்புக்காகவும், இப்படி மாற்று வீடுகளுக்காகவும்தான் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.