Monday, November 9, 2009

அன்றும் இன்றும்

சின்ன விரல் பிடித்து
சிறுநடை தான் நடந்து
சிக்கு புக்கு காட்டி
சிரித்த படி திரும்பி வர‌

பச்சைப் புல் பார்க்கில்
படுத்துப் புரண்டாடி
சேற்றில் குதித்தாடி
செம்மண் தூசிபட‌

செக்கர் வானில்
சூரியன் மறைந்தொளிய‌
சேர்ந்தே வீடு வந்து
செம்மையாய் குளித்திட்டு

சோர்வாய் நான் சாய‌
சொக்கிய நீ மடி சாய‌
சொல்லாத கதைகளெல்லாம்
சொன்னபடி நான் இருக்க‌

அம்புலி காட்டி
அன்னையவள் சோறூட்ட‌
அயர்ந்து பூப்போல் நீ
தூங்கியது அக்காலம்.

சிணுங்கி அழுதிட்டால்
செல்ஃபோன் தந்திட்டு
விளையாட அழைத்திட்டால்
விடியோ கேம்தான் தந்து

தொல்லை இதுவெனவே
தொலைக்காட்சிதான் காட்டி
விழுங்க அடம் பிடிப்பின்
விளம்பரம் தான் காட்டி

சேற்றை அடைத்தாற்போல்
சோறு பிசைந்தூட்டி
சீக்காய்  கிட‌ந்திடினும்
சீரிய‌ல் க‌ண்ட‌ழுவார்!

அன்பாய் வ‌ள‌ர்த்த‌துவே
அன்பில்லம் சேர்க்கையிலே
க‌ட‌மைக்கு வ‌ள‌ர்த்த‌துவோ
க‌டைசியில் கைதாங்கும்?
______/\______                                                                                                            

57 comments:

கலகலப்ரியா said...

நல்லா கேட்டீங்க சார்...! மெட்டமைத்துப் பாடலாம்...!

மணிஜி said...

என்னாச்சு தலைவரே..ரிட்டையர் ஆக இன்னும் நாள் இருக்குல்ல...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/நல்லா கேட்டீங்க சார்...! மெட்டமைத்துப் பாடலாம்...!/

ஹி ஹி நன்றிம்மா.

vasu balaji said...

தண்டோரா ...... said...

/என்னாச்சு தலைவரே..ரிட்டையர் ஆக இன்னும் நாள் இருக்குல்ல.../

அந்த மட்டுக்கும் புண்ணியம் தலைவரே. யான படுத்தாலும் குதிரை மட்டம்னு ரிடையரானாலும் பென்ஷன் வரும். =))

நிஜாம் கான் said...

என்ன அநியாயம் இது நான் தான் பஸ்ட்டுன்னு நெனச்சி வந்தால் இங்க ஏற்கனவே இரண்டு பேரு.நல்லா கேளுங்க..டிவியும் சீரியலும்,வீடியோ கேமும் செல்போனும் வந்தபிறகு நாம் வாழ்ந்த வாழ்க்கையே தொலஞ்சி போச்சி அண்ணாத்தே! திரும்ப வருமா அந்த தூர்தர்ஷன் மட்டும் உள்ள காலம். வாரம் ஒரு படம் பார்க்கும் காலம்???

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...
/திரும்ப வருமா அந்த தூர்தர்ஷன் மட்டும் உள்ள காலம். வாரம் ஒரு படம் பார்க்கும் காலம்???/

ஆஹா. எம்.ஜி.ஆர். சிவாஜி படத்துக்கு 25 பைசா டிக்கட் போட்டு சிறுவாடு சேர்த்த காலம். படிச்சாதான் சினிமான்னு படிக்க வெச்ச காலம். பாழப்போற ரூபவாஹினில தமிழ்படம் தெரியுமான்னு ஆண்டெனா திருப்பி வருதா வருதான்னு கேட்டு பார்த்த காலம். போச்சேண்ணே. எல்லாம் போச்சே.

க.பாலாசி said...

//செக்கர் வானில்
சூரியன் மறைந்தொளிய‌
சேர்ந்தே வீடு வந்து
செம்மையாய் குளித்திட்டு//

ரசித்தேன்....

//சிணுங்கி அழுதிட்டால்
செல்ஃபோன் தந்திட்டு
விளையாட அழைத்திட்டால்
விடியோ கேம்தான் தந்து

தொல்லை இதுவெனவே
தொலைக்காட்சிதான் காட்டி
விழுங்க அடம் பிடிப்பின்
விளம்பரம் தான் காட்டி

சேற்றை அடைத்தாற்போல்
சோறு பிசைந்தூட்டி
சீக்காய் கிட‌ந்திடினும்
சீரிய‌ல் க‌ண்ட‌ழுவார்!//

இவ்வளவும் நாமளே செஞ்சிட்டு க‌ட‌மைக்கு வ‌ள‌ர்த்த‌துவோ
க‌டைசியில் கைதாங்கும்? னு கேட்டா என்ன அர்த்தம்.

சரி விடுங்க....கவிதையை ரசித்தேன்....ஏக்கமுடன்.

vasu balaji said...

/இவ்வளவும் நாமளே செஞ்சிட்டு க‌ட‌மைக்கு வ‌ள‌ர்த்த‌துவோ
க‌டைசியில் கைதாங்கும்? னு கேட்டா என்ன அர்த்தம். /

நம்மளத்தானே கேட்டுக்குறேன். அதுங்கள என்ன சொன்னென்.

/சரி விடுங்க....கவிதையை ரசித்தேன்....ஏக்கமுடன்./

சரி விட்டேன். டேங்ஸ்

தமிழ் அமுதன் said...

அருமை ...!அருமை ..!

பின்னோக்கி said...

இன்று பகுதியிலுள்ள அனைத்தும் என் பையனுக்காக நான் செய்பவை தான். தெரியவில்லை. இன்னம் 30 வருடம் கழித்து, என் பையன் வேற மாதிரி இக்கவிதையை எழுதுவான்னு நினைக்கிறேன்.

நிஜாம் கான் said...

அண்ணே! ரூபாவாஹினிக்கு ஆண்டெனா திருப்புனேன்னு சொன்னீங்கள்ள? ஏன்னா நானும் ஒரு காலத்துல ரூபாவாஹினிக்கு ஆண்டெனா திருப்பியவன் தான்..,உண்மையிலேயே அது ஒரு வசந்த காலம் ஆனால் வராத காலம்

vasu balaji said...

ஜீவன் said...

/அருமை ...!அருமை ..!/

நன்றிங்க.

vasu balaji said...

பின்னோக்கி said...

/இன்று பகுதியிலுள்ள அனைத்தும் என் பையனுக்காக நான் செய்பவை தான். தெரியவில்லை. இன்னம் 30 வருடம் கழித்து, என் பையன் வேற மாதிரி இக்கவிதையை எழுதுவான்னு நினைக்கிறேன்./

இப்படியே உல்டாவா இருக்கணுங்க. பின்னாடில இருந்து முன்னாடி. :)

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! ரூபாவாஹினிக்கு ஆண்டெனா திருப்புனேன்னு சொன்னீங்கள்ள? ஏன்னா நானும் ஒரு காலத்துல ரூபாவாஹினிக்கு ஆண்டெனா திருப்பியவன் தான்..,உண்மையிலேயே அது ஒரு வசந்த காலம் ஆனால் வராத காலம்/

ஆமாங்க.

மணிஜி said...

என் அப்பன் சொன்னது சரியென்று உணரும்போது..நீ சொல்வது தப்பென்று சொல்லும் வாரிசு வரும்

ஈரோடு கதிர் said...

//சோர்வாய் நான் சாய‌
சொக்கிய நீ மடி சாய‌//

அட...அட... இது சூப்பர்

//சேற்றை அடைத்தாற்போல்
சோறு பிசைந்தூட்டி//

பாவம்ங்க

//க‌ட‌மைக்கு வ‌ள‌ர்த்த‌துவோ
க‌டைசியில் கைதாங்கும்?//

தாங்ங்ங்ங்காது

vasu balaji said...

தண்டோரா ...... said...

/என் அப்பன் சொன்னது சரியென்று உணரும்போது..நீ சொல்வது தப்பென்று சொல்லும் வாரிசு வரும்/

வாவ். அசத்திட்டீங்கண்ணே.

மணிஜி said...

என் அப்பன் சொன்னது சரியென்று உணரும்போது..நான் சொல்வது தப்பென்று சொல்லும் வாரிசு வரும்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Superb! அருமை ..!

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/அட...அட... இது சூப்பர்/

நன்றி கதிர்:)

vasu balaji said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

/Superb! அருமை ..!/

நன்றி கவிஞரே.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)


-கவிஞர் [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன்

வால்பையன் said...

//க‌ட‌மைக்கு வ‌ள‌ர்த்த‌துவோ
க‌டைசியில் கைதாங்கும்?//

நியாயமான கேள்வி!

vasu balaji said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

/-:)/

:)

vasu balaji said...

வால்பையன் said...

/நியாயமான கேள்வி!/

:). வாங்க.

மணிநரேன் said...

இக்காலம்... நினைக்கையிலேயே வருத்தம்தான் அளிக்கின்றது.. :(

ப்ரியமுடன் வசந்த் said...
This comment has been removed by the author.
vasu balaji said...

மணிநரேன் said...

/இக்காலம்... நினைக்கையிலேயே வருத்தம்தான் அளிக்கின்றது.. :(/

ம்ம். வாங்க நரேன்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ஹோய் என்ன நினைச்சுட்டு இருக்க மனசுல...

நீங்கதான் பிற்கால கடமைக்குன்னு எங்களை வளர்ப்பீங்க...

நாங்க அப்படியில்லை..
கடமைக்குன்னு நினைக்கிறதில்லை...

இன்னொருவாட்டி கடமை அது இதுன்னு சொன்ன பிச்சுப்போடுவேன் பிச்சு..

இதுக்கு இம்புட்டு பேர் ஆதரவா நல்லாயிருங்கப்பு.../

ஏ வெண்ணெ. அவுங்கல்லாம் ஒழுங்கா படிச்சிருக்காங்க. என்னா பிரச்சின உனக்கு. பெத்தத கடனேன்னு வளர்க்கிறது அப்புறம் அது கண்டுக்கலன்னு சாவுறது தப்புன்னு சொல்லி இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...
This comment has been removed by the author.
vasu balaji said...

/கடமைக்கு வளர்த்ததுன்னு தான் சொல்லியிருக்கீக.../

ராசா. நிதானமா படி. கடமைக்கு வளர்த்ததுக்கு முன்னாடி என்ன சொன்னேன். அன்பா வளர்த்தது. அப்புறம் எப்படி இது புள்ளைங்கள சொன்னா மாதிரி ஆகும். கவிதையே பெத்தவங்களுக்கு ராசா. அன்பா வளர்த்த புள்ளைங்களே அன்பகத்துல விடுறாங்க. இப்புடி கடனேன்னு வளர்த்தா, என்ன பண்ணுவீங்க கடைசி காலத்துலன்னு எங்களச் சொன்னேன். எங்களச் சொன்னேன்.

geethappriyan said...

ரொம்ப நல்லா இருந்தது ஐயா நல்ல தாள கதியிலும் இருக்கு, ஓட்டுக்கள் போட்டாச்சு

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

/ரொம்ப நல்லா இருந்தது ஐயா நல்ல தாள கதியிலும் இருக்கு, ஓட்டுக்கள் போட்டாச்சு/

வாங்க கார்த்திகேயன். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரசித்தேன்

பிரபாகர் said...

//அன்பாய் வ‌ள‌ர்த்த‌துவே
அன்பில்லம் சேர்க்கையிலே
க‌ட‌மைக்கு வ‌ள‌ர்த்த‌துவோ
க‌டைசியில் கைதாங்கும்?//

முத்தாய்ப்பான வரிகள். நம்மோட தாய்மை கவிதைக்கு எதிர்கவிதை மாதிரி இருக்கு? இன்றைய காலகட்டத்துக்கு எழுதியிருக்கீங்கய்யா!

மிக அருமை.

பிரபாகர்.

அன்புடன் மலிக்கா said...

காலத்திற்கேற்ற கவிதை,

விதைப்பதும் நாமே செய்கிறோம் பின்
அறுவடை செய்வதும் நாமே...

cheena (சீனா) said...

அன்பின் வானம்பாடி

அருமை அருமை கவிதை அருமை - எளிய சொற்கள் - அழகு தமிழ் - நல்ல சிந்தனை - இயல்பான கவிதை - நல்வாழ்த்துகள்

//சோர்வாய் நான் சாய‌
சொக்கிய நீ மடி சாய‌
சொல்லாத கதைகளெல்லாம்
சொன்னபடி நான் இருக்க‌//

ஆகா ஆகா கற்பனை கொடி கட்டிப் பறக்கிறதே

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/ரசித்தேன்/

நன்றிங்க.

vasu balaji said...

பிரபாகர் said..

1. ஓட்டைப் போட்டுவிட்டு பின்னூட்டம் போடாமல் தாமதித்ததை மென்மையுடன் கண்டிக்கிறேன்.

2. கவிதைக்கு கவிதையில் பாராட்டாமல் போனது ஏன் என்பதற்கு தகுந்த விளக்கம் கோரப் படுகிறது=))

/முத்தாய்ப்பான வரிகள். நம்மோட தாய்மை கவிதைக்கு எதிர்கவிதை மாதிரி இருக்கு? இன்றைய காலகட்டத்துக்கு எழுதியிருக்கீங்கய்யா!

மிக அருமை./

இல்லைங்க பிரபாகர். ஆதரவு கவிதைதான். நன்றி.

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

/காலத்திற்கேற்ற கவிதை,

விதைப்பதும் நாமே செய்கிறோம் பின்
அறுவடை செய்வதும் நாமே.../

சரியாச் சொன்னீங்க.நன்றி

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் வானம்பாடி

/அருமை அருமை கவிதை அருமை - எளிய சொற்கள் - அழகு தமிழ் - நல்ல சிந்தனை - இயல்பான கவிதை - நல்வாழ்த்துகள் /

/ஆகா ஆகா கற்பனை கொடி கட்டிப் பறக்கிறதே/

நன்றிங்க.;)

Rekha raghavan said...

நல்ல கவிதை. ரசித்துப் படித்தேன். .
ரேகா ராகவன்

மர தமிழன் said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ???

மற்றபடி யதார்த்ததை கவிந்ததற்கு மிக்க நன்றி!! வாழ்க்கையில நாம் தவறவிடும் தருணங்களை நல்ல கவிதையாக்கி எங்கள் மீதும் தெளியுங்கள்.

S.A. நவாஸுதீன் said...

பெற்றோர்கள் புரிந்துகொள்ளனும் இந்தக்கவிதையை. அருமையா இருக்கு சார்

ஈ ரா said...

அருமை...

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

/நல்ல கவிதை. ரசித்துப் படித்தேன். .
ரேகா ராகவன்/

நன்றிங்க.

vasu balaji said...

மர தமிழன் said...

/ ரூம் போட்டு யோசிப்பீங்களோ???

மற்றபடி யதார்த்ததை கவிந்ததற்கு மிக்க நன்றி!! வாழ்க்கையில நாம் தவறவிடும் தருணங்களை நல்ல கவிதையாக்கி எங்கள் மீதும் தெளியுங்கள்./

நன்றிங்க.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/பெற்றோர்கள் புரிந்துகொள்ளனும் இந்தக்கவிதையை. அருமையா இருக்கு சார்/

நன்றிங்க நவாஸூதீன்

vasu balaji said...

ஈ ரா said...

/அருமை.../

நன்றிங்க ஈ.ரா

ஊடகன் said...

இரண்டே வரியில் சொல்லனும்னா,

அன்று அறுமை....
இன்று வெறுமை.....

புலவன் புலிகேசி said...

அருமயா சொன்னீங்க சார்...இப்போதெல்லாம் குழந்தைகள் பாசத்தை வேலைக்காரியிடமும் பாட்டிகள் இருந்தால் அவர்களிடம் பெறுகின்றனர். சிலருக்கு நீங்கள் சொன்ன வீடியோ தான். தாய்ப்பாசமெல்லாம் காணாமற் போய் கொண்டிருக்கிறது...

vasu balaji said...

ஊடகன் said...

/இரண்டே வரியில் சொல்லனும்னா,

அன்று அறுமை....
இன்று வெறுமை...../

ஆமாங்க. நன்றி

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/அருமயா சொன்னீங்க சார்...இப்போதெல்லாம் குழந்தைகள் பாசத்தை வேலைக்காரியிடமும் பாட்டிகள் இருந்தால் அவர்களிடம் பெறுகின்றனர். சிலருக்கு நீங்கள் சொன்ன வீடியோ தான். தாய்ப்பாசமெல்லாம் காணாமற் போய் கொண்டிருக்கிறது.../

ஆமாங்க. சரியாச் சொன்னீங்க. நன்றி

தமிழ் நாடன் said...

அண்ணே நாளுக்கு நாள் உங்க எழுத்துக்கு மெருகு கூடிகிட்டே போகுது. அருமையான பாடல்! நியாமான கேள்வி!

vasu balaji said...

தமிழ் நாடன் said...

/அண்ணே நாளுக்கு நாள் உங்க எழுத்துக்கு மெருகு கூடிகிட்டே போகுது. அருமையான பாடல்! நியாமான கேள்வி!/

நன்றிங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே......சூப்பர்.....

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/பாலாண்ணே......சூப்பர்...../

நன்றிங்க ஆரூரன்