படிக்கையில் மார்க் நம்பர்,
பரிட்சையில் ரோல் நம்பர்,
பதினெட்டானா வோட்டர் கார்ட் நம்பர்,
வேலை தேட எம்ப்ளாய்மென்ட் நோட்டீஸ் நம்பர்,
வேலை கிடைச்சா எம்ப்ளாயீ நம்பர்,
வண்டி வாங்கினா ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்,
இன்சூரன்ஸ் எடுத்தா பாலிசி நம்பர்,
அட்டண்டன்ஸ் போட ஐடி கார்ட் நம்பர்
சம்பளம் போட அக்கவுண்ட் நம்பர்,
பணமெடுக்க ஏடிஎம் பின் நம்பர்,
டிவி பார்க்க ரிமோட்டில் நம்பர்,
பஸ்,ரயில்,விமானமும் ஏதோ ஒரு நம்பர்,
ரிசர்வேசனுக்கு பிஎன் ஆர் நம்பர்,
உக்கார படுக்க இருக்கை நம்பர்,
உரையாட செல்ஃபோன் நம்பர்,
கட்டுற வரிக்கு பான் நம்பர்,
கட்டாத வரிக்கு பெனால்டி நம்பர்,
கடன் வாங்க கிரெடிட் கார்ட் நம்பர்,
கடுதாசு அனுப்ப வீட்டு நம்பர்,
சூதாடப் போனா அதுக்கும் நம்பர்,
விளையாடப் போனா ஜெயிப்பதும் நம்பர்,
டயபடீஸ், ரத்த அழுத்தமுன்னு அதுவும் நம்பர்,
டாஸ்மாக் போனாலும் தள்ளாடும் நம்பர்,
பதிவப் போட்டா இடுகை நம்பர்,
பாலோ ஆகும் நண்பரும் நம்பர்,
தமிழ் மணம் தரும் மகுடமும் நம்பர்,
தமிழிஷ் ஆக்கும் பிரபலமும் நம்பர்,
தப்புத் தண்டாக்கு இபிகோ நம்பர்,
ராசி பேர்வைக்க நியூமராலஜி நம்பர்,
இதெல்லாம் கடந்தும் இழுத்துகிட்டிருந்தா,
டாக்டர் சொல்லுற கெடுவும் நம்பர்,
இந்தப் பொழப்பு பொழைக்கறதுக்கு,
ங்கொய்யால போட்டு தள்ளிட்டு ,
ஜெயில்ல இருக்கிறவன் குடுத்து வச்சவன்!
ஒரே நம்பர்! அதுவும் அரசாங்கம் கவனம் வெச்சுக்கும்!
(டிஸ்கி: தினம் தினம் காலையில இருந்து மாலை வரை நம்பர், நம்பர், நம்பர்னு சாவுற கணக்கனுக்கு தெரியும் நம்பரு குடுக்குற டார்ச்சர்..ஹெ ஹெ.)
__/\__
79 comments:
இதில முதல் நம்பரா ஓட்டு போட்டவனும் நான் தான், பின்னூட்டம் போட்டவனும் நான்தான்!
/ சூர்யா ௧ண்ணன் said...
இதில முதல் நம்பரா ஓட்டு போட்டவனும் நான் தான், பின்னூட்டம் போட்டவனும் நான்தான்!/
ஆரம்பமே அசத்தல்=)) நன்றி சூர்யா.
4:58 PM | by வானம்பாடிகள்
2/2வும் நம்பர்தான்.
இங்கன கூட நம்பர்தான்...
டேட்டா என்ட்ரி பண்றவன்ட கேளுங்க நம்பர் பத்தி இன்னும் சொல்வான்...
(பதிவு படிக்க வந்தா இங்கயும் நம்பரா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
4
36 வரி எழுதிருக்கீங்க
நம்பர் 1 பதிவு
தப்புத் தண்டாக்கு இபிகோ நம்பர்,
ராசி பேர்வைக்க நியூமராலஜி நம்பர்,
இதெல்லாம் கடந்தும் இழுத்துகிட்டிருந்தா,
டாக்டர் சொல்லுற கெடுவும் நம்பர்,//
நமப்ர் நல்லாயிருக்கு நண்பர்!!
அகல்விளக்கு said...
/ 2/2வும் நம்பர்தான்.
இங்கன கூட நம்பர்தான்...
டேட்டா என்ட்ரி பண்றவன்ட கேளுங்க நம்பர் பத்தி இன்னும் சொல்வான்...
(பதிவு படிக்க வந்தா இங்கயும் நம்பரா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)//
lol:)))
சூரியன் said...
/ 4/
வாங்க ரொம்ப நாளா காணோம்.
ஈரோடு கதிர் said...
/36 வரி எழுதிருக்கீங்க/
ஐ. 3+6=9. ஜெ கு ராசியான நம்பர். எப்புடீ.
// (டிஸ்கி: தினம் தினம் காலையில இருந்து மாலை வரை நம்பர், நம்பர், நம்பர்னு சாவுற கணக்கனுக்கு தெரியும் நம்பரு குடுக்குற டார்ச்சர்..ஹெ ஹெ.)//
அண்ணே இதுதான் டாப்பூ...
தேவன் மாயம் said...
/ நமப்ர் நல்லாயிருக்கு நண்பர்!!/
வாங்க டாக்டர். நன்றிங்க.
//வானம்பாடிகள் said...
ஐ. 3+6=9. ஜெ கு ராசியான நம்பர். //
நீங்க ஜெ கட்சியா?????!!!!
இராகவன் நைஜிரியா said...
/ அண்ணே இதுதான் டாப்பூ.../
பின்ன =)) இனம் இனத்தோட. சுரக்குடுக்கை ஆத்தோட
"எண்"னமா எழுதி இருக்கீங்க, பாஸ்!
"எண்"ணிப் பார்க்கிறேன், உங்க ஆற்றலை,
"எண்"ணங்களை அருமையா சொல்லியிருக்கீங்க!
எண் (சாரி) என் வாழ்த்துகள்!)
(உங்களுக்கு நம்பர் தான பிடிக்காது? அதனால, நம்பர்னு எதுவும் எழுதலை)
"எண்"களின் எழுத்து ஏற்கத் தக்கவையே !
கணக்கர்கள் - எண்ணைக் கண்டால் வெறுப்புறத்தான் செய்வார்கள் - பாலா - ராகவன் - அப்துல்லா மற்றும் வங்கி அதிகாரியான நான்
ம்ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் பாலா
எதிர்காலத்தில் பெயருக்குப் பதில் நம்பர் வந்துவிடுமா?
அசத்தல்
பிளாக் எழுதவந்த ஹீட் கவுண்டர் நம்பர்,
படிக்க வந்தா இந்தமாதிரி பாயிண்டு நம்பரு.
பின்னூட்டம் போட்லாம்னா கப்சா நம்பரு.
எப்படி சார் இப்படில்லாம்...யோசிக்கிறீங்க....
பனியன் வாங்க போனா நம்பர்... ரேஸ் குதிரைல நம்பர்... டெலிபோன்ல நம்பர்... செல்போன்ல நம்பர்... நியூமாராலாஜி நம்பர்... இருங்க மீதி அப்புறம் சொல்றேன்.. :-l
நம்பாம இருக்க முடியலை நம்பரை வச்சு இப்படி ஒரு பதிவு போட முடியும்னு...
நம்பற மாதிரி ஒரு இடுகை. நம்பறேன்... :)
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
/"எண்"னமா எழுதி இருக்கீங்க, பாஸ்!
"எண்"ணிப் பார்க்கிறேன், உங்க ஆற்றலை,
"எண்"ணங்களை அருமையா சொல்லியிருக்கீங்க!
எண் (சாரி) என் வாழ்த்துகள்!)
(உங்களுக்கு நம்பர் தான பிடிக்காது? அதனால, நம்பர்னு எதுவும் எழுதலை)/
=)).நன்றிங்க.
ஈரோடு கதிர் said...
/ நீங்க ஜெ கட்சியா?????!!!!/
என்னா வில்லத்தனம்=))
கேசவன் .கு said...
/"எண்"களின் எழுத்து ஏற்கத் தக்கவையே !/
நன்றிங்க.
cheena (சீனா) said...
/கணக்கர்கள் - எண்ணைக் கண்டால் வெறுப்புறத்தான் செய்வார்கள் - பாலா - ராகவன் - அப்துல்லா மற்றும் வங்கி அதிகாரியான நான்
ம்ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் பாலா/
நீங்களுமா சீனா சார். சந்தோஷம். நன்றிங்க.
ஆரூரன் விசுவநாதன் said...
/ எதிர்காலத்தில் பெயருக்குப் பதில் நம்பர் வந்துவிடுமா?
அசத்தல்/
வாங்க ஆரூரன். =))
நாஞ்சில் பிரதாப் said...
/பிளாக் எழுதவந்த ஹீட் கவுண்டர் நம்பர்,
படிக்க வந்தா இந்தமாதிரி பாயிண்டு நம்பரு.
பின்னூட்டம் போட்லாம்னா கப்சா நம்பரு.
எப்படி சார் இப்படில்லாம்...யோசிக்கிறீங்க..../
ரஜனி மாதிரி கோவமா இருந்தா இடுகைலாம் போடமாட்டேன்=))
கலகலப்ரியா said...
//பனியன் வாங்க போனா நம்பர்... ரேஸ் குதிரைல நம்பர்... டெலிபோன்ல நம்பர்... செல்போன்ல நம்பர்... நியூமாராலாஜி நம்பர்... இருங்க மீதி அப்புறம் சொல்றேன்.. :-l//
=)).அய்யோ அய்யோ.
மணிகண்டன் said...
/ very nice/
Thank you.
ஸ்ரீராம். said...
//நம்பாம இருக்க முடியலை நம்பரை வச்சு இப்படி ஒரு பதிவு போட முடியும்னு...//
நம்புங்கள் நம்பரை=))
பிறந்ததும் படுக்கை நம்பர்,
அதோடு எத்தனாவது புள்ளை?
படிக்கையில் மார்க் நம்பர்,
அத்தோடு எத்தனையாவது படிக்கையில்?
பரிட்சையில் ரோல் நம்பர்,
அத்தோடு எத்தனையாவது தடவை எழுதும்?
பதினெட்டானா வோட்டர் கார்ட் நம்பர்,
அத்தோடு எத்தனை வார்டில்?
வேலை தேட எம்ப்ளாய்மென்ட் நோட்டீஸ் நம்பர்,
அத்தோடு எத்தனையாவது நோட்டீஸ்?
வேலை கிடைச்சா எம்ப்ளாயீ நம்பர்,
அத்தோடு எத்தனை ரூ சம்பளம்?
போதுமா?
குரு said...
/நம்பற மாதிரி ஒரு இடுகை. நம்பறேன்... :)/
முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
இது பெரிய கணக்கப்பிள்ளை இடும் பின்னூட்டம் நம்பர் 35
:))
பிரியமுடன்...வசந்த் said...
//பிறந்ததும் படுக்கை நம்பர்,
அதோடு எத்தனாவது புள்ளை?
...
வேலை கிடைச்சா எம்ப்ளாயீ நம்பர்,
அத்தோடு எத்தனை ரூ சம்பளம்?
போதுமா?//
ம்கும்.உன்ன=))
உங்கள் "எண்"ணத்தில் உதித்த கவிதை அருமை.
எம்.எம்.அப்துல்லா said...
//இது பெரிய கணக்கப்பிள்ளை இடும் பின்னூட்டம் நம்பர் 35
:))//
வாங்க சீஃப்!:))
blogpaandi said...
/ உங்கள் "எண்"ணத்தில் உதித்த கவிதை அருமை./
நன்றிங்க.
அசத்தல்
Awesome :)
எண்களை வைத்து அருமையான வரிகள்..
நம் வாழ்க்கையே எண்களில் அடங்கி இருப்பது உண்மை தான்.
ஒரு வார காலமாக ஊரிற்குச் சென்றிருந்ததால் பதிவுலகப் பக்கம் வரமுடியவில்லை.
தியாவின் பேனா said...
/அசத்தல்/
வாங்க தியா. நன்றி.
கணேஷ் said...
/Awesome :)/
Thank you Ganesh
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
/எண்களை வைத்து அருமையான வரிகள்..
நம் வாழ்க்கையே எண்களில் அடங்கி இருப்பது உண்மை தான்.
ஒரு வார காலமாக ஊரிற்குச் சென்றிருந்ததால் பதிவுலகப் பக்கம் வரமுடியவில்லை./
வாங்க செந்தில். நன்றி. இங்க வந்திருந்தீங்களா?
உங்க வீட்டு நம்பர் கொடுங்க ஆட்டோவுக்கு நம்பர் கொடுக்குகிறேன்
எண் அதை எண்,
என் என்றால் எண்,
எண்ணுக்குள் என்....
என்னுக்குள் எண்.....
நசரேயன் said...
/உங்க வீட்டு நம்பர் கொடுங்க ஆட்டோவுக்கு நம்பர் கொடுக்குகிறேன்//
ஏன்! நல்லாத்தானே போய்க்கிருக்கு=))
வெண்ணிற இரவுகள்....! said...
/எண் அதை எண்,
என் என்றால் எண்,
எண்ணுக்குள் என்....
என்னுக்குள் எண்...../
சரி சரி. சமாதானமா போய்க்கலாம் கார்த்திக்.
சரி. மீ த 50
ஏங்க எண் மேல அவ்வளவு கோவம்...
புலவன் புலிகேசி said...
/ஏங்க எண் மேல அவ்வளவு கோவம்...//
=))
"தப்புத் தண்டாக்கு இபிகோ நம்பர்,
ராசி பேர்வைக்க நியூமராலஜி நம்பர்,
இதெல்லாம் கடந்தும் இழுத்துகிட்டிருந்தா,
டாக்டர் சொல்லுற கெடுவும் நம்பர்,"
..............கணக்குப்பா , எல்லாம் வாழ்க்கை கணக்கு. கூட்டி கழிச்சு பாருங்க, சரியா வரும். ஹி,ஹி,ஹி......
Chitra said...
// ..............கணக்குப்பா , எல்லாம் வாழ்க்கை கணக்கு. கூட்டி கழிச்சு பாருங்க, சரியா வரும். ஹி,ஹி,ஹி......//
அய்யோ அந்த டார்ச்சர் தாங்காம தானே பொங்கினேன். திரும்பவுமா! முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
என்ன கொடுமை சார் இது. நம்பர் மேல் உள்ள வெருப்பா அல்லது கிருக்கா
ராஜவம்சம் said...
/என்ன கொடுமை சார் இது. நம்பர் மேல் உள்ள வெருப்பா அல்லது கிருக்கா/
தெரியலையே!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
1 2 3 4 5 6 7 8 9 0
ஹி ஹி... நம்பர்...
(இது) - நம்ப(ம) "ருக்கு" நாலாயிருக்கா?
:-))
அசத்தல்
பேநா மூடி said...
/ 1 2 3 4 5 6 7 8 9 0
ஹி ஹி... நம்பர்...//
=))
ரோஸ்விக் said...
/(இது) - நம்ப(ம) "ருக்கு" நாலாயிருக்கா?
:-))//
ஆஹா. வில்லங்கமான கேள்வியா இருக்கே.
Patta Patti said...
/ அசத்தல்/
முதல் வரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க.
நல்ல சிந்தனை :-)
இது ”64” ஆம் நம்பர் பின்னூட்டம்!
" உழவன் " " Uzhavan " said...
/நல்ல சிந்தனை :-)/
நன்றிங்க உழவன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
வால்பையன் said...
/ இது ”64” ஆம் நம்பர் பின்னூட்டம்!/
வாங்க வால்:)).
வீட்ல நீங்க எத்தனையாவது ...ர்?
:-)
காலையில எந்திரிச்ச உடனே செய்யற அந்த முதல் காரியத்துக்குள்ள நம்பர உட்டுபுட்டியே தலைவா.
பழமைபேசி said...
/வீட்ல நீங்க எத்தனையாவது ...ர்?
:-)/
கணக்குல நாலு இருப்பில ரெண்டு
Siva said...
/காலையில எந்திரிச்ச உடனே செய்யற அந்த முதல் காரியத்துக்குள்ள நம்பர உட்டுபுட்டியே தலைவா.//
அது செரி:))
romba nalla irrukkunga. athukkaaga jailkku poga soldreengale :)
பின்னோக்கி said...
/ romba nalla irrukkunga. athukkaaga jailkku poga soldreengale :)//
அப்படி சொல்லலீங்களே!:). அவன் பாடு தேவலைன்னு ஆதங்கம்.
(டிஸ்கி: தினம் தினம் காலையில இருந்து மாலை வரை நம்பர், நம்பர், நம்பர்னு சாவுற கணக்கனுக்கு தெரியும் நம்பரு குடுக்குற டார்ச்சர்..ஹெ ஹெ.)
எனக்கும் ஆறுதலா இருக்கு சார்.
//பிரியமுடன்...வசந்த் said...
பிறந்ததும் படுக்கை நம்பர்,
அதோடு எத்தனாவது புள்ளை?//
இதுல மட்டும் ஒரு ஒரு சின்ன அடிசன் வர சான்ஸ் இருக்கு ட்வின்ஸா இருந்தா 12-A 12-B மாதிரி
தொலைபேசி ஆப்பரேட்டர் வேலை பார்க்குற ஆளை நினைத்து பாருங்க.. ம்ஹீம்
ஆனா உங்க பதிவு வித்யாசமா இருக்கு... எப்படி எல்லாம் யோசிக்கறீங்க!!!!
S.A. நவாஸுதீன் said...
/எனக்கும் ஆறுதலா இருக்கு சார்.
அது அது.
/இதுல மட்டும் ஒரு ஒரு சின்ன அடிசன் வர சான்ஸ் இருக்கு ட்வின்ஸா இருந்தா 12-A 12-B மாதிரி/
லொல்
கிரி said...
/தொலைபேசி ஆப்பரேட்டர் வேலை பார்க்குற ஆளை நினைத்து பாருங்க.. ம்ஹீம்/
அதான் இப்போ மிசினே பண்ணுதே.
/ஆனா உங்க பதிவு வித்யாசமா இருக்கு... எப்படி எல்லாம் யோசிக்கறீங்க!!!!//
ஹி ஹி. நன்றி.
நீங்க Accountant ஆ. நல்லாருக்குங்க
ஷாகுல் said...
// நீங்க Accountant ஆ. நல்லாருக்குங்க//
இல்லீங்க. அக்கவுண்ட்ஸ் ஆபீசர். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
சொன்னது கையளவு. :-))
ஆதிமூலகிருஷ்ணன் said...
/சொன்னது கையளவு. :-))/
ஆமாங்க:))
Post a Comment