முந்தைய இடுகைகளுக்கு வந்த பின்னூட்டத்திலிருந்து ஒன்று தெளிவானது. நான் சிறுவயதில் மிகுந்த சேட்டைக்காரப் பிள்ளையாக இருந்திருக்கக் கூடும் என்ற அபிப்பிராயம் தோன்றியிருக்கிறது. உண்மையில் சிறு வயதில் நான் அதிகம் விளையாடியது கூட இல்லை.
எப்பொழுதாவது திடீரென்று ஒரு உந்துதலில் நடந்தவைதான் இவ்வளவும். சில நேரம் வேடிக்கை பார்க்க ஆட்கள் சேர்ந்தால் நான் என்ன பண்ண முடியும்? ஒரு தீபாவளிக்கு, ஃபண்டில் பட்டாசு வந்தது. அப்போதெல்லாம் கோபுரம் மார்க் பட்டாசும், அணில் மார்க் பட்டாசும்தான் வெடிக்கும். மயில்மார்க் புஸ்ஸுன்னு போய்டும். அந்த முறை வந்தது அனைத்தும் மயில்மார்க் பட்டாசும், வைரம் பட்டாசும்.
பாதுகாப்புக்காக, பட்டாசு திரி முனையில் இருக்கும் காகிதத்தை கொஞ்சமாக பிய்த்துவிடுவது என்பது எல்லாச் சிறுவர்களாலும் பயன்பாட்டில் உள்ள விதி. இந்த எழவு பட்டாசில் திரி கையோடு வந்துவிடும். அந்த முறை சேதாரம் அதிகமாகவே திரி போன பட்டாசுகளையெல்லாம் எறியாமல் வைத்திருந்து பார்த்ததில் கணிசமாக சேர்ந்தது.
கமலுக்கு மண்டையில் கொம்பு முளைத்து சிவப்பு விளக்கு எரியுமே, அந்த எஃபெக்ட் இன்றி இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தேன். ஒரு காலிகாட் பல்பொடி டப்பாவில் எல்லாப் பட்டாசையும் உரித்து மருந்தைக் கொட்டினேன். வெடிக்காமல் புஸ்ஸான ஒரு டபுள்ஷாட் கண்ணில் பட்டது என் போறாத காலம்.
அதைக் குடைந்து காலி செய்து, அதற்குள் இந்த மருந்தைக் கொட்டியதில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமாக சேர்ந்தது. திரும்பவும் எல்லாம் கொட்டி, கேப் பட்டாசும் கலந்து திரும்பக் கொட்டினாலும் திரி வைத்தால் எங்கேயோ போனது. எப்படி கொளுத்துவது?
டபுள்ஷாட்டில் திரி வைத்திருந்த ஓட்டை வழியே இருப்பதில் மிக நீளமான திரியைச் சொருகியும் அது எங்கேயோ நின்றது. திறந்திருந்த பக்கம் ஒரு காகிதத்தை ஒட்டி தலைகீழாக வைத்து தட்டினால் நன்றாக திரி மருந்துக்குள் பதிந்துவிடும் என்று யோசித்து, நடைமுறைப் படுத்தியுமாயிற்று. அண்ணா என்ன வெடிண்ணா என்று ஒரு ரசிகர்கூட்டம் வேறு சேர்ந்துவிட்டது.
பந்தாவாக, வீதியில் வைத்து, சுற்றுமுற்றும் பார்த்து, யாரும் வரவில்லை என்ற முன்னெச்சரிக்கையெல்லாம் கவனமாக மேற்கொண்டு கொளுத்தப் போகையில் கேள்விக்கு பொறந்த வாண்டு ஒன்று கேட்டது பாருங்கள் கேள்வி அண்ணா இது வெடிக்குமா, புஸ்வாணமா என்று! எனக்கே தெரியாதே நான் என்ன சொல்லுறது? கம்னு பாரு என்றபடி கொளுத்திவிட்டேன்.
வெளியிலிருந்த திரி எரிந்து காணாமல் போனது. அதன் பின் அமைதி. மெதுவே அனைவரும் அருகில் பம்மி பம்மி போக க்முக் என்ற என்ற சத்தத்துடன் யம்மா என்ற ஒரு அலறலும் சேர்ந்தது. சுற்றியிருந்த அனைவரும், திருப்பதி சாலையில் அலுமினிய பெயின்ட் அடித்துக் கொண்டு காந்திசிலை மாதிரி இருப்பாரே ஒரு ஆள் அப்படி ஆகிப் போனோம்.

ஏதோ ஒரு கொஞ்சம் வெடிமருந்து பற்றிக்கொள்ள கீழே ஒட்டியிருந்தது வெறும் காகிதம் என்பதால், மீதி மருந்து பற்றிக் கொள்ளுமுன் இது மேலெழும்பி மருந்தைச் சிதறடித்து ஒரு வாண்டுவின் நெற்றியில் அடித்து விட்டது.என்னமோ நான் அல்கொய்தா மாதிரி அவன் அம்மா வந்து திட்டி, ஒரு நோபலை நோவடித்து விட்டார்கள்.
பள்ளியிறுதி வகுப்பு முடிந்து பி.யூ.சி சேர்ந்ததும், முதல் நாள், இரண்டாம் வகுப்பு பிஸிக்ஸ் செயல்முறை வகுப்பு என்று அட்டவணை பார்த்ததும் பர பரவென்றாகியது. தவளைக்கும் எலிக்கும் காலைக் கட்டிய கதையாக, மைலாப்பூர் கான்வென்ட் பீட்டரும் நானும் ஒரு குழுவானோம். சாக்பீஸ் டப்பியில் சுருட்டி போட்டிருந்த துண்டுச்சீட்டை எடுக்க,குவியத்தூரம் கண்டுபிடிக்கும் சோதனை வந்தது. அதோடு எனக்கு வேதைனையும் வந்தது.
பீட்டர் போய் டேபிளில் நின்றுகொண்டு, கோ அன் கெட் த லென்ஸஸ்னு ஆர்டர் போட்டான். ஒரு வழியா விசாரித்துப் போய் லேப் அஸிஸ்டன்டிடம் பதிவில் கையொப்பமிட்டு ஒரு குழியாடி, ஒரு குவியாடி வாங்கிக் கொண்டு வந்தேன். பீட்டர், க்க்க்கேய். நவ் யூ ஸ்டேன் அன் வாச் அப்படின்னான். ஹோல்டரில் அவன் ஒரு ஆடியை பொருத்த நான் மற்ற ஆடியைப் பொறுத்த முயற்சிக்கையில், நோ யூ டோன் டச்னான்.
பெரிய இவன் மாதிரி கருப்பு ஸ்க்ரீன் நகர்த்துறதும், விளக்கை நகர்த்துறதும். என்னடா பண்ற சொல்லுடான்னா ஒண்ணும் சொல்லமாட்டங்குறான். ரெண்டு மூனு வாட்டி கேட்டா வெய் மேனுங்கறான். நான் என்ன கேனையா? வெடுக்குன்னு மாட்டி இருந்த ஆடியை புடுங்கிட்டேன். மொதப்பந்துல போல்டானா பேட் வச்சிருக்கிறவன் நான் ஆட்டத்துக்கு வரலைம்பானே, அப்புடி.
நானே பண்ணிக்கிறேன் போஓஓடான்னு அடுத்த டேபிள் தாவ, நோட்டுப் புத்தகத்தைத் தூக்கினேன். எழவு, அது மேல வச்சிருந்த மத்த ஆடியை மறந்துட்டன். அது தரையில விழுந்து சிதறிடிச்சி. யாருடா முதல் நாள் போணி வான்னு வந்தூட்டான் லேப் அஸிஸ்டன்ட்.
பலியாடு மாதிரி போனேன். பேருக்கு நேரா சிவப்பு இங்க்ல சுழிச்சி, நாளைக்கு 50ரூ ஆஃபீஸ்ல கட்டிட்டு ரசீது கொண்டு வந்து குடுன்னு ஒரு பில்லைக் கொடுத்து விட்டான். அதோடு ஒரு சர்.சி.வி.ராமனும் காணாமல் போய்விட்டார்.
காலம் உருண்டோடி, வேலைன்னு போய் சம்சார சாகரத்தில் முழுகி தத்தளித்த போதும் நம் பங்களிப்பில்லாமல் விஞ்ஞானம் எப்படியெல்லாமோ வளர்கிறதே என்ற வருத்தம் அவ்வப்போது தோன்றும். 1998ல் தொகுப்பு வீடு வாங்கி, முழுதாய் எல்லாம் முடியுமுன், வாடகை மிச்சமானால் வீட்டுக் கடனுக்கு சரியாகும் என்ற நிர்பந்தத்தில் குடி வந்தபோதுதான், விஞ்ஞானம் அப்படி ஒன்றும் வளர்ந்துவிடவில்லை என்ற உண்மை புரிந்தது.
மின்சாரக் கனெக்ஷன் முழுமையாகக் கொடுக்கப் படாமல், மோட்டாருக்கு சர்வீஸ் கனெக்ஷனிலிருந்து வரும் ஒயரை ஃப்யூஸ் கேரியரில் சொருகினால் ஓடுமாறு கொடுத்திருந்தார்கள். வாச்மேன் ஊருக்குப் போகிறேன் என்று ஒற்றைக் குடித்தனமான எனக்கு எங்கு சொருக வேண்டும் எனச் சொல்லிவிட்டு போய்விட்டான். நானும் அடுத்த நாள் சொருகப் போக தடித்த செப்புக் கம்பி உடைந்துவிட்டது.
நாம யாரு! டெஸ்டரைக் கொண்டுவந்து ஃப்யூஸ் கேரியரைக் கழற்றிவிட்டு (உசாருல்ல) டெஸ்டர் வைத்துப் பார்த்ததில் எரியவில்லை. அப்பாடா மின்கசிவில்லை என உறுதி செய்து கொண்டு (கனெக்ஷன் குடுத்தப்புறம்தானே மின்சாரம் வரும்), தேர்ந்த எலக்ட்ரீசியன் மாதிரி, ஒயரைக் கடித்து கொஞ்சம் மேலிருக்கும் ப்ளாஸ்டிக் கவரை நீக்க முயன்றேன். அந்தக் கொஞ்சூண்டு கம்பி நாக்கில் பட்டதை உணர்ந்த அடுத்த நொடி இரும்புக்கை மாயாவியாகிப் போனேன்.
அது ஒன்றுமில்லை. அப்படியே கட்டை போல் விழுந்ததில் பின்புறச் சுவற்றில் மண்டை அடி வாங்கி, கீழே விழுந்த போது இன்னோரு அடி வாங்கி, முழு பிரக்ஞையுடன் கத்துகிறேன், சத்தம் வரவில்லை, வாயெல்லாம் உலர்ந்து, நீர்ச்சத்து போனவன் போல் ஆகி, எழுந்திருக்க முயல வலதுகை இரும்பு போல் கனத்தது.
அப்புறம் ஒருவாறு நானே எழுந்து திரும்ப ப்ளையர் வைத்து நறுக்கி கனெக்ஷன் கொடுத்தேன். ஆனால் பாருங்கள், 75ம் வருடமும் மின்சாரம் ஷாக் அடித்தது. 98ம் வருடமும் ஷாக் அடித்தது.

இந்த இருவத்தி மூணு வருஷத்தில ஒரு புண்ணாக்கு விஞ்ஞானிக்கும் ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடிக்கத் தெரியல. மனுசனுக்கு எது முக்கியமோ அதை விட்டு செவ்வாய் கிரகத்தில தண்ணியிருக்கான்னு கண்டு பிடிக்கிறாங்களாம்.
இப்புடி உருப்படாத கூட்டத்துல ஒன்னா இருக்கிறத விட பதிவராகி, தினம் நாலு மைனஸ் ஓட்டு தமிழ்மணத்துல வாங்குறது பெரிய விஷயமா இல்லையா?
(ஹி ஹி. இரண்டாவது ஓட்டு சென்னையிலிருந்து. எடுத்துக் கொண்ட நேரம் 3 நிமிடத்துக்கு குறைவு. இதனால் தெரிவது என்னவெனில் நேராக வலைமனைக்கு வந்து மைனஸ் போட்டு வெளியேறத் தேவை மூன்று நிமிடங்களுக்கு குறைவு. )
(ஹி ஹி. இவரு நம்ம கோயமுத்தூர் அபிமானி. கனெக்சன் ஸ்லோ போல 3 நிமிசம் தாண்டிடிச்சி. நம்ம கோட்டா ஓவர். நாலு மைனஸ்.)

92 comments:
//தினம் நாலு மைனஸ் ஓட்டு தமிழ்மணத்துல வாங்குறது //
அடுத்து ஒரு இடுகை போடுங்க, மைனஸ் ஓட்டு மட்டும் போடுங்கனு சொல்லி
துபாய்ல இருந்து வந்து .. படிக்காமையே மைனஸ் குத்துறதுக்கு..
நாங்களெல்லாம் கஷ்டப்பட்டு(!!!) படிக்கிறோம்... நாங்களும் தான் ஒரு நாளைக்கு இஷ்டம் போல மைனஸ் குத்திக்கிறோம்..
அந்த துபாய்காரருக்கு இருக்கிற உரிமை எங்களுக்கு இல்லையா!!!???
பார்த்து செய்ங்ங்ங்ங்ங்கண்ணே
ஈரோடு கதிர் said...
/அடுத்து ஒரு இடுகை போடுங்க, மைனஸ் ஓட்டு மட்டும் போடுங்கனு சொல்லி
துபாய்ல இருந்து வந்து .. படிக்காமையே மைனஸ் குத்துறதுக்கு..
நாங்களெல்லாம் கஷ்டப்பட்டு(!!!) படிக்கிறோம்... நாங்களும் தான் ஒரு நாளைக்கு இஷ்டம் போல மைனஸ் குத்திக்கிறோம்..
அந்த துபாய்காரருக்கு இருக்கிற உரிமை எங்களுக்கு இல்லையா!!!???
பார்த்து செய்ங்ங்ங்ங்ங்கண்ணே/
ணா. நான் என்ன செய்றது. இடுகை போட்டப்புறம் உங்க ராச்சியம்தான். பூந்து விளையாடுங்க.=)). பேசாம பாமரன்பக்கங்கள் (Minus only)னு ஒரு பதிவப் போட்டு அங்கயும் இதே இடுகை போட்டா சந்தோசமா குத்தீட்டு போவாங்கள்ள.
//திருப்பதி சாலையில் அலுமினிய பெயின்ட் அடித்துக் கொண்டு காந்திசிலை மாதிரி இருப்பாரே ஒரு ஆள் அப்படி ஆகிப் போனோம்.//
உங்கள நம்பி வேடிக்க பாக்க வந்தாங்கல்ல...இதுவும் வேணும் இன்னமும் வேணும்...
//அதோடு ஒரு சர்.சி.வி.ராமனும் காணாமல் போய்விட்டார்.//
ஓ...இந்த ஆச வேறயா..
//75ம் வருடமும் மின்சாரம் ஷாக் அடித்தது. 98ம் வருடமும் ஷாக் அடித்தது//
அதோட உட்டுச்சே...சந்தோஷப்படுவீங்களா அதவிட்டுட்டு...
//தமிழ்மணத்துல வாங்குறது பெரிய விஷயமா இல்லையா?//
அதுகூட பெரிய விஷயமா தெரியல...ஆனா மைனஸ் ஓட்டு எங்கிருந்து வருதுன்னு நீங்க கண்ணுமுழிச்சி பாக்குறீங்களே அதான் பெரிய விசயமா தெரியுது...
புதுசு புதுசா சொல்லுறிங்கள்
தொடருங்கள் இன்னும் வரட்டும் ஆவலாக இருக்கிறேன்.
பந்தாவாக, வீதியில் வைத்து, சுற்றுமுற்றும் பார்த்து, யாரும் வரவில்லை என்ற முன்னெச்சரிக்கையெல்லாம் கவனமாக மேற்கொண்டு கொளுத்தப் போகையில் கேள்விக்கு பொறந்த வாண்டு ஒன்று கேட்டது பாருங்கள் கேள்வி அண்ணா இது வெடிக்குமா, புஸ்வாணமா என்று! எனக்கே தெரியாதே நான் என்ன சொல்லுறது? கம்னு பாரு என்றபடி கொளுத்திவிட்டேன்.
..................பட்டாசு வெடிச்சுதோ என்னவோ? இந்த வெடி சிரிப்புக்கு காரணமா ஆயிட்டு.
நல்லா இருக்கு, சார். அப்படியே நம்ம ப்ளாக் பக்கமும் வந்துட்டு போங்க, சார்.
//இந்த இருவத்தி மூணு வருஷத்தில ஒரு புண்ணாக்கு விஞ்ஞானிக்கும் ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடிக்கத் தெரியல//
அட ஆமாங்க....அப்ப கண்டுபுடிச்சுட்டா துணி தொவச்சு தொங்கப்போட பிரச்சினையே வராதுல்ல
//75ம் வருடமும் மின்சாரம் ஷாக் அடித்தது. 98ம் வருடமும் ஷாக் அடித்தது.//
7+5=12, 1+2=3... 9+8=17, 1+7=8.. 3.. 8.. மூணு.. எட்டு.. ஆங் ஷாக் அடிக்கும்.. இந்த வருஷம் தொட்டு பாருங்க அடிக்காது
சூடு கண்ட பூனை கரண்ட் வயரை நாடாதும்பாங்க..
//இந்த இருவத்தி மூணு வருஷத்தில ஒரு புண்ணாக்கு விஞ்ஞானிக்கும் ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடிக்கத் தெரியல. மனுசனுக்கு எது முக்கியமோ அதை விட்டு செவ்வாய் கிரகத்தில தண்ணியிருக்கான்னு கண்டு பிடிக்கிறாங்களாம்//
:)))))))))))))
/// இந்த இருவத்தி மூணு வருஷத்தில ஒரு புண்ணாக்கு விஞ்ஞானிக்கும் ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடிக்கத் தெரியல ///
சார் நீங்க போயிருக்கலாம் விஞ்ஞானியா ?
இடுகையின் நோக்கம் வெற்றியடைந்துவிட்டது...முதல் மைனஸ் ஓட்டு...4/5.... எங்க உங்க சயன்ஸூ மைண்ட வச்சி கண்டுபிடிங்க பார்ப்போம்...
கடைசி பாரா நச்
//கமலுக்கு மண்டையில் கொம்பு முளைத்து சிவப்பு விளக்கு எரியுமே,//
அண்ணே கமலுக்கு வேணா எரியும்...
நமக்கெல்லாம்.... க்க்க்கும் ஏண்ணே பேராசை
//அண்ணா என்ன வெடிண்ணா என்று ஒரு ரசிகர்கூட்டம் வேறு சேர்ந்துவிட்டது.//
அட.. என்னை மாதிரி... பிரவு,, பாலாசி மாதிரி
//மருந்தைச் சிதறடித்து ஒரு வாண்டுவின் நெற்றியில் அடித்து விட்டது//
அல்ல்ல்லோவ் இது கொல முயற்சி... நோபல்லாம்ல நோபல்
அறைஞ்சு நோ’பல்’னு பண்ணாம விட்டாங்களே
//வந்தூட்டான் லேப் அஸிஸ்டன்ட்.//
’ர்’ கிப் ரெஸ்பெக்ட்.. டேக் ரெஸ்பெக்ட்
அண்ணே! தமிழ்மண ஓட்டு உங்களுக்கு இன்னிக்கு இல்லை. எதிர் ஓட்டும் போட்டுப் பார்த்திட்டேன். நோ சான்ஸ்.
//இந்த இருவத்தி மூணு வருஷத்தில ஒரு புண்ணாக்கு விஞ்ஞானிக்கும் ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடிக்கத் தெரியல//
இஃகிஃகி இது சூப்பரப்பு...
இப்போ ஷாக் அடிக்காத கரண்டுதான் வருதாம் ஒரு வாட்டி கைய வச்சு டெஸ்டிடுங்களேன்
அண்ணே! அப்துல் கலாம் கூட இந்த மாதிரி நெறைய சோதனைகளை சின்னப்புள்ளையா இருக்கும் போது செஞ்சிப்பாத்திருக்காராம். அவரு விஞ்ஞானி ஆயிட்டார். நீங்க மெஞ்ஞானி ஆயிட்டீங்க.எப்புடி???
அண்ணே! விழுந்திருச்சி விழுந்திருச்சி,தமிழ்மண ஓட்டு தான் வேற என்ன. இப்படியே தமிழ்மணம் இம்சை குடுத்துக்கிட்டு இருந்தால் அந்த 3 பேரில் நானும் சேர்ந்து 4 பேர் ஆயிடுவேன் சொல்லிப்புட்டேன் ஆமா
க.பாலாசி said...
/ உங்கள நம்பி வேடிக்க பாக்க வந்தாங்கல்ல...இதுவும் வேணும் இன்னமும் வேணும்.../
அட எனக்கும்தானே ஆச்சு.
/ ஓ...இந்த ஆச வேறயா../
ஏப்பா ஆசைகூட பட கூடாதா?
/ அதோட உட்டுச்சே... சந்தோஷப்படுவீங்களா அதவிட்டுட்டு...//
அதானே.
/ அதுகூட பெரிய விஷயமா தெரியல...ஆனா மைனஸ் ஓட்டு எங்கிருந்து வருதுன்னு நீங்க கண்ணுமுழிச்சி பாக்குறீங்களே அதான் பெரிய விசயமா தெரியுது...//
ம்கும். உனக்கென்னா. நேர்ந்துகிட்டா மாதிரி எனக்கு, கதிருக்கு கலகலாக்குன்னு தினம் போடுற புண்ணியவான தெரிஞ்சிக்கணும்னு ஆசை இருக்காதா.
//"ஞானும், சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும் - 2!"//
வெரிகுட்.. பார்ட் டூ வந்தாச்சா..
// உண்மையில் சிறு வயதில் நான் அதிகம் விளையாடியது கூட இல்லை. //
ஏங்க நாங்க சேட்டை பண்ணுவீங்க அப்படின்னுதானே நினைக்கிறோம். விளையாடுவதற்கும் சேட்டைக்கும் என்னா சம்பந்தம்..
// எப்பொழுதாவது திடீரென்று ஒரு உந்துதலில் நடந்தவைதான் இவ்வளவும். //
எப்பொழுதவது நடக்கறதே இப்படின்னா... எப்பவுமே நடக்கின்றதா இருந்தா என்னா ஆயிருக்கும்..
// சில நேரம் வேடிக்கை பார்க்க ஆட்கள் சேர்ந்தால் நான் என்ன பண்ண முடியும்? //
அது அவங்க விதி.. யாரால மாத்த முடியும் சொல்லுங்கப் பார்க்கலாம்
// அப்போதெல்லாம் கோபுரம் மார்க் பட்டாசும், அணில் மார்க் பட்டாசும்தான் வெடிக்கும். மயில்மார்க் புஸ்ஸுன்னு போய்டும். //
அந்த காலத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதுங்க.. எங்க காலத்தில் குருவி வெடி உண்டு, கிருஷ்ணர் வெடி உண்டுங்க..
// பாதுகாப்புக்காக, பட்டாசு திரி முனையில் இருக்கும் காகிதத்தை கொஞ்சமாக பிய்த்துவிடுவது என்பது எல்லாச் சிறுவர்களாலும் பயன்பாட்டில் உள்ள விதி. //
ஒ.. இதைத்தான் விதி வலியது அப்படின்னு சொல்வாங்களா?
மீ த 25
//அந்தக் கொஞ்சூண்டு கம்பி நாக்கில் பட்டதை உணர்ந்த அடுத்த நொடி இரும்புக்கை மாயாவியாகிப் போனேன்//
நல்லா இருக்குங்க...
// அந்த முறை சேதாரம் அதிகமாகவே திரி போன பட்டாசுகளையெல்லாம் எறியாமல் வைத்திருந்து பார்த்ததில் கணிசமாக சேர்ந்தது.//
நல்ல லாபம் போலிருக்கு
/// இந்த இருவத்தி மூணு வருஷத்தில ஒரு புண்ணாக்கு விஞ்ஞானிக்கும் ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடிக்கத் தெரியல ///
Aarkadu Veerachamy has done this already
//75ம் வருடமும் மின்சாரம் ஷாக் அடித்தது. 98ம் வருடமும் ஷாக் அடித்தது.//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஏன் இப்டி 75ம் வருடமும் சாப்பாடு வாய்லதான் சாப்ட்டீக 98ம் வருடமும் சாப்பாடு வாய்லதான சாப்ட்டீக
நேர்ல சிக்கினீங்க கொன்றுவேன்...
தியாவின் பேனா said...
//புதுசு புதுசா சொல்லுறிங்கள்
தொடருங்கள் இன்னும் வரட்டும் ஆவலாக இருக்கிறேன்.//
=))ஊக்கத்துக்கு நன்றி தியா.
சுவாரசியமான உங்க எழுத்து நடை கால இயந்திரம்போல "அந்த" காலத்துக்கு உங்களோடவே பயணிக்க வைக்கிறது!
Chitra said...
/ நல்லா இருக்கு, சார். அப்படியே நம்ம ப்ளாக் பக்கமும் வந்துட்டு போங்க, சார்./
நன்றிங்க. கண்டிப்பா.
// ஒரு காலிகாட் பல்பொடி டப்பாவில் எல்லாப் பட்டாசையும் உரித்து மருந்தைக் கொட்டினேன். //
ராக்கெட் ஐடியா மாதிரி இதுவும் நல்லாயிருக்கே
// அண்ணா என்ன வெடிண்ணா என்று ஒரு ரசிகர்கூட்டம் வேறு சேர்ந்துவிட்டது.//
அதானே உங்களை சும்மாவே இருக்க விடமாட்டாங்க போலிருக்கு
// என்னமோ நான் அல்கொய்தா மாதிரி அவன் அம்மா வந்து திட்டி, ஒரு நோபலை நோவடித்து விட்டார்கள். //
அதுசரி.. உங்களை கவுக்க எத்தனைப் பேர் திட்டம் தீட்டியிருக்காங்க.
ஜெரி ஈசானந்தா. said...
// அட ஆமாங்க....அப்ப கண்டுபுடிச்சுட்டா துணி தொவச்சு தொங்கப்போட பிரச்சினையே வராதுல்ல//
அட நம்மூரு கரண்ட்கம்பிய நம்புனா அவ்வளவுதான். வீராசாமி எப்போ ஷாக் குடுப்பாரு தெரியாது.
// இந்த இருவத்தி மூணு வருஷத்தில ஒரு புண்ணாக்கு விஞ்ஞானிக்கும் ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடிக்கத் தெரியல. //
அதான் அதை கண்டுபிடிக்க தெரிஞ்ச விஞ்சானி ரயில்வேயிக்கு வேலைக்குப் போயிட்டாரே..
PPattian : புபட்டியன் said...
/ 7+5=12, 1+2=3... 9+8=17, 1+7=8.. 3.. 8.. மூணு.. எட்டு.. ஆங் ஷாக் அடிக்கும்.. இந்த வருஷம் தொட்டு பாருங்க அடிக்காது
சூடு கண்ட பூனை கரண்ட் வயரை நாடாதும்பாங்க..//
இது வேறயா. நாம 5ரூபாய்க்கு 5 ஸ்க்ரூ ட்ரைவர நம்பி டிவி ட்யூப் பின்னாடி சர்க்யூட் போர்ட்ல விட்டு அது வேற கூத்து. கரண்டுக்கும் நமக்கும் ரொம்ப சினேகம்.
க.பாலாசி said...
/இடுகையின் நோக்கம் வெற்றியடைந்துவிட்டது...முதல் மைனஸ் ஓட்டு...4/5.... எங்க உங்க சயன்ஸூ மைண்ட வச்சி கண்டுபிடிங்க பார்ப்போம்.../
இது கொழும்பு ஓட்டு ராசா.=))
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
// :)))))))))))))//
:))
நசரேயன் said...
/கடைசி பாரா நச்//
அது! :))
ஈரோடு கதிர் said...
/ அண்ணே கமலுக்கு வேணா எரியும்...
நமக்கெல்லாம்.... க்க்க்கும் ஏண்ணே பேராசை//
அட மொளைக்க வேண்டியது மொளைக்கல, கொம்பாவதுன்னு ஏக்கமுங்க.
ஈரோடு கதிர் said...
/ அட.. என்னை மாதிரி... பிரவு,, பாலாசி மாதிரி//
யா யா,ஊஊ சீ. ஐ லைக் திஸ் பிரவு.
/அல்ல்ல்லோவ் இது கொல முயற்சி... நோபல்லாம்ல நோபல்/
அந்த நோபல் கண்டு பிடிச்சா விஞ்ஞானி. அத பயன்படுத்தினா கொலை முயற்சியா=))
/’ர்’ கிப் ரெஸ்பெக்ட்.. டேக் ரெஸ்பெக்ட்/
நோஓஓஓஒ. ஹி மார்க் ஐ.ஆர். (இர்ரெஸ்பான்சிபில்). சோ நோ இன்ஸ்ட்ருமெண்ட் ஃபார் தட் இயர். சேம் சேம். நோ ‘ர்’ ஒன்லி ‘ன்’
கேசவன் .கு said...
/ சார் நீங்க போயிருக்கலாம் விஞ்ஞானியா ?//
ஆமாங்க. பதிவராவலாம்னு அதை விட்டுட்டேன்=))
இப்படிக்கு நிஜாம்.., said...
//அண்ணே! தமிழ்மண ஓட்டு உங்களுக்கு இன்னிக்கு இல்லை. எதிர் ஓட்டும் போட்டுப் பார்த்திட்டேன். நோ சான்ஸ்.//
நமக்கு மைனஸ் போடுறதுக்கும் ஒரு முகராசி வேணும் போல=))
ஈரோடு கதிர் said...
// இஃகிஃகி இது சூப்பரப்பு...
இப்போ ஷாக் அடிக்காத கரண்டுதான் வருதாம் ஒரு வாட்டி கைய வச்சு டெஸ்டிடுங்களேன்//
ஏனுங். போன இடுகையில ரயில் மேல போற கம்பி, இப்போ இதுவா. உங்களுக்கு வேண்டியது கண்ணு அவ்வளவுதானே. =))
இப்படிக்கு நிஜாம்.., said...
//அண்ணே! அப்துல் கலாம் கூட இந்த மாதிரி நெறைய சோதனைகளை சின்னப்புள்ளையா இருக்கும் போது செஞ்சிப்பாத்திருக்காராம். அவரு விஞ்ஞானி ஆயிட்டார். நீங்க மெஞ்ஞானி ஆயிட்டீங்க.எப்புடி???//
மெஞ்ஞானியா! ஐ. அப்ப ராஜ் டிவில கூப்புடுவாங்களா?
இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! விழுந்திருச்சி விழுந்திருச்சி,தமிழ்மண ஓட்டு தான் வேற என்ன. இப்படியே தமிழ்மணம் இம்சை குடுத்துக்கிட்டு இருந்தால் அந்த 3 பேரில் நானும் சேர்ந்து 4 பேர் ஆயிடுவேன் சொல்லிப்புட்டேன் ஆமா//
ம்கும். இப்பவே 4தான்.
இராகவன் நைஜிரியா said...
/ வெரிகுட்.. பார்ட் டூ வந்தாச்சா../
உங்களுக்கு நெட் கனெக்ஷன் வரணும்னுதான் நேத்து போடலைண்ணே=))
இராகவன் நைஜிரியா said...
/ ஏங்க நாங்க சேட்டை பண்ணுவீங்க அப்படின்னுதானே நினைக்கிறோம். விளையாடுவதற்கும் சேட்டைக்கும் என்னா சம்பந்தம்..//
இது நல்லாருக்கே. விளையாடவே போகாத புள்ள சேட்ட வேற பண்ணுமோ.
இராகவன் நைஜிரியா said...
/ எப்பொழுதவது நடக்கறதே இப்படின்னா... எப்பவுமே நடக்கின்றதா இருந்தா என்னா ஆயிருக்கும்../
இன்னைக்கு சந்தரயானுக்கு நான் பொறுப்பா இருந்திருப்பேன்.
இராகவன் நைஜிரியா said...
/ அது அவங்க விதி.. யாரால மாத்த முடியும் சொல்லுங்கப் பார்க்கலாம்//
சரியாச் சொன்னீங்கண்ணே.
இராகவன் நைஜிரியா said...
/ அந்த காலத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதுங்க.. எங்க காலத்தில் குருவி வெடி உண்டு, கிருஷ்ணர் வெடி உண்டுங்க..//
நான் ப்ரேண்ட் சொன்னேன். குருவி, க்ருஷ்ணர்லயும் லயன், கோபுரம், அணில் வெடிக்கும். மயில், டைமண்ட் வெடிக்காது.
[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...
/ -:)//
என்னைக்காவது ரெண்டு வார்த்த பேச வைக்கிறேன் விஜய்:))
இராகவன் நைஜிரியா said...
/ ஒ.. இதைத்தான் விதி வலியது அப்படின்னு சொல்வாங்களா?//
இது மெலியது. அதான் பிச்சா கையோட வந்துடுச்சி.
ஸ்ரீராம். said...
/ நல்லா இருக்குங்க.../
சே. இல்லை. செப்புக்கம்பியா. ஒரு மாதிரி கசப்பு. வ்வ்வே
பிரியமுடன்...வசந்த் said...
/ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஏன் இப்டி 75ம் வருடமும் சாப்பாடு வாய்லதான் சாப்ட்டீக 98ம் வருடமும் சாப்பாடு வாய்லதான சாப்ட்டீக//
இதயே சொல்லி எஸ்கேப்பாவ முடியாது எலக்ட்ரிக்கு. சாப்புடறதுல முன்னேற்றம்னு அலட்டிக்கறமா? இல்லைதானே. விஞ்ஞானம் முன்னேறிடிச்சின்னா இது என்னா பர்த்டே பாய்.
நேர்ல சிக்கினீங்க கொன்றுவேன்...
பிரியமுடன்...வசந்த் said...
/ நேர்ல சிக்கினீங்க கொன்றுவேன்...//
ஹெ ஹெ. கரண்டே நம்மள ஒன்னும் பண்ணல. நீ பில்லக்காப் பையன் ஒன்னும் பண்ணமுடியாதுடி
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
/சுவாரசியமான உங்க எழுத்து நடை கால இயந்திரம்போல "அந்த" காலத்துக்கு உங்களோடவே பயணிக்க வைக்கிறது!//
நன்றி சரவணக்குமார்.
இராகவன் நைஜிரியா said...
/ ராக்கெட் ஐடியா மாதிரி இதுவும் நல்லாயிருக்கே//
அது வெண்ணெய்கிட்ட சுட்டது.
இராகவன் நைஜிரியா said...
/ அதானே உங்களை சும்மாவே இருக்க விடமாட்டாங்க போலிருக்கு/
உசுப்பேத்தன்னே இருக்காங்கண்ணே.
இராகவன் நைஜிரியா said...
/ அதுசரி.. உங்களை கவுக்க எத்தனைப் பேர் திட்டம் தீட்டியிருக்காங்க.//
ஆமாண்ணே. அவ்வ்வ்வ்வ்வ்
/அதான் அதை கண்டுபிடிக்க தெரிஞ்ச விஞ்சானி ரயில்வேயிக்கு வேலைக்குப் போயிட்டாரே../
அது அவங்களுக்கெங்க தெரியுது.
Nalla Padivu
P N A Prasanna said...
/Nalla Padivu//
வாங்க பிரசன்னா. முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
நகைச்சுவையில் பின்னுறீங்க
அக்பர் said...
/ நகைச்சுவையில் பின்னுறீங்க//
வாங்க அக்பர். நன்றி வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
//டபுள்ஷாட்டில் திரி வைத்திருந்த ஓட்டை வழியே இருப்பதில் மிக நீளமான திரியைச் சொருகியும் அது எங்கேயோ நின்றது. திறந்திருந்த பக்கம் ஒரு காகிதத்தை ஒட்டி தலைகீழாக வைத்து தட்டினால் நன்றாக திரி மருந்துக்குள் பதிந்துவிடும் என்று யோசித்து, நடைமுறைப் படுத்தியுமாயிற்று.//
அப்ப வெடிகுண்டு தயாரிச்சிருக்கீங்க...
உங்களுக்கும் மின்சாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு...
ஓட்டு போட்டாச்சு சாமி... படிக்க இன்னைக்கு முடியாது....
கலகலப்ரியா said...
/ஓட்டு போட்டாச்சு சாமி... படிக்க இன்னைக்கு முடியாது..../
எனக்கே அல்வாவா வாத்தி!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
.//நான் சிறுவயதில் மிகுந்த சேட்டைக்காரப் பிள்ளையாக இருந்திருக்கக் கூடும் என்ற அபிப்பிராயம் தோன்றியிருக்கிறது. உண்மையில் சிறு வயதில் நான் அதிகம் விளையாடியது கூட இல்லை.//
அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப பூந்து விளையாடறீங்களே...பத்தாதா?
உங்களுக்குள் இருந்த ஒருவனை தேடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
//பேசாம பாமரன்பக்கங்கள் (Minus only)னு ஒரு பதிவப் போட்டு அங்கயும் இதே இடுகை போட்டா சந்தோசமா குத்தீட்டு போவாங்கள்ள.//
:)
விருது பெற்றமைக்கும்,போனஸ் விருது"நகைச்சுவை மன்னர்" பட்டத்திற்கும் வாழ்த்துக்கள்.
"ஞானும், சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும்...."நிறைஞ்ச காமடின்னு மாத்துங்க ஸார்.
அலுவலகத்தில் சத்தம் போட்டு சிரிக்காம படிக்க முடியல பாஸ்.
ஓ! ஷாக் அடிக்காத கரண்ட் இல்லையினுதான் ஆளுங்கட்சி உங்களுக்கு சாதகமா கரண்ட் இல்லாத நாட்கள நமக்கு கொடுத்தாங்களா....?? :-)
சுவாரஸ்யம்.
ஆனாலும் பார்ட் 1 ல் இருந்த ஏதோ இதுல மிஸ்.
Super sir....Kalakuringa
பதிவு:))) ரசித்து எழுதியுள்ளீர்கள்.
// இந்த இருவத்தி மூணு வருஷத்தில ஒரு புண்ணாக்கு விஞ்ஞானிக்கும் ஷாக் அடிக்காத மின்சாரம் கண்டுபிடிக்கத் தெரியல. மனுசனுக்கு எது முக்கியமோ அதை விட்டு செவ்வாய் கிரகத்தில தண்ணியிருக்கான்னு கண்டு பிடிக்கிறாங்களாம்.//
இந்த விஞ்ஞானிகளே இப்டி தான் தேவையானதை மட்டும் கண்டுபிடிக்க மாட்டங்க..,
புலவன் புலிகேசி said...
/நண்பரே உங்களுக்கு என் வலைப்பூவில் விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று கொள்ளவும்./
நன்றி புலிகேசி.
ஆரூரன் விசுவநாதன் said...
/ அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப பூந்து விளையாடறீங்களே...பத்தாதா?//
இஃகி இஃகி.
உங்களுக்குள் இருந்த ஒருவனை தேடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்//
நன்றி ஆரூரன்.
பூங்குன்றன்.வே said...
//பேசாம பாமரன்பக்கங்கள் (Minus only)னு ஒரு பதிவப் போட்டு அங்கயும் இதே இடுகை போட்டா சந்தோசமா குத்தீட்டு போவாங்கள்ள.//
:)
விருது பெற்றமைக்கும்,போனஸ் விருது"நகைச்சுவை மன்னர்" பட்டத்திற்கும் வாழ்த்துக்கள்.
"ஞானும், சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும்...."நிறைஞ்ச காமடின்னு மாத்துங்க ஸார்.
அலுவலகத்தில் சத்தம் போட்டு சிரிக்காம படிக்க முடியல பாஸ்.//
நன்றி பூங்குன்றன்
ரோஸ்விக் said...
//ஓ! ஷாக் அடிக்காத கரண்ட் இல்லையினுதான் ஆளுங்கட்சி உங்களுக்கு சாதகமா கரண்ட் இல்லாத நாட்கள நமக்கு கொடுத்தாங்களா....?? :-)//
கரண்ட் இல்லீன்னா நாம ஏன் அங்க போறம்=))
நாடோடி இலக்கியன் said...
//சுவாரஸ்யம்.
ஆனாலும் பார்ட் 1 ல் இருந்த ஏதோ இதுல மிஸ்.//
அது சின்ன வயசு குசும்பு. இது கழுதை வயசாகியும் மாறலீன்னு சலிப்பா இருக்குமோ:))
Pradeep said...
/ Super sir....Kalakuringa/
நன்றி ப்ரதீப்
மாதேவி said...
/பதிவு:))) ரசித்து எழுதியுள்ளீர்கள்./
நீங்க ரசிச்சீங்களா?=)).முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.
பேநா மூடி said...
// இந்த விஞ்ஞானிகளே இப்டி தான் தேவையானதை மட்டும் கண்டுபிடிக்க மாட்டங்க..,//
நீங்களாவது எனக்கு சப்போர்ட் வந்தீங்களே. நன்றி:))
//அவன் அம்மா வந்து திட்டி, ஒரு நோபலை நோவடித்து விட்டார்கள். //
ஹா ஹா ஹா. கலக்குறீங்க சார்
///இப்புடி உருப்படாத கூட்டத்துல ஒன்னா இருக்கிறத விட பதிவராகி, தினம் நாலு மைனஸ் ஓட்டு தமிழ்மணத்துல வாங்குறது பெரிய விஷயமா இல்லையா?///
மைனஸ் ஓட்டு விழுந்தாலே நீங்க ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டீங்கன்னு அர்த்தம் சார்.
ஹையோ பட்டாசு தயாரிப்பதில் நீங்க ரொம்ப கில்லாடி போல இருக்கே!
இது குறும்பு இல்லேன்னு நினைக்கிறீங்களா !:) செம குறும்பு போங்க :)
அடுத்து என்னவென்றால் கரண்டோட விளையாடி இருக்கீங்க. படிக்கவே பயமா இருந்தது.
ஆனாலும் கடைசியில் நச்சுன்னு சமுதாய அக்கறையோட ஒரு ஐடியா. சரிதான் .
//
தினம் நாலு மைனஸ் ஓட்டு தமிழ்மணத்துல வாங்குறது
//
இதெல்லாம் எப்பூடி எனக்கு தெரியாதே :)
//
திருப்பதி சாலையில் அலுமினிய பெயின்ட் அடித்துக் கொண்டு காந்திசிலை மாதிரி இருப்பாரே ஒரு ஆள் அப்படி ஆகிப் போனோம்.
//
நம்பி வந்தவங்களுக்கு எப்படியா பெயிண்ட் அடிக்கறது :)
நகைச்சுவை இழையோடிய இடுகை நல்லா இருந்தது வானம்பாடி:)
//
அவன் அம்மா வந்து திட்டி, ஒரு நோபலை நோவடித்து விட்டார்கள்.
//
ஹா ஹா இது சூப்பர்!!
S.A. நவாஸுதீன் said...
/ ஹா ஹா ஹா. கலக்குறீங்க சார்//
நன்றி நவாஸ்
/மைனஸ் ஓட்டு விழுந்தாலே நீங்க ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டீங்கன்னு அர்த்தம் சார்./
=)).ஆமாம் இன்னைக்கு ரொம்ப ஃபேமஸ் 5
RAMYA said...
// ஹையோ பட்டாசு தயாரிப்பதில் நீங்க ரொம்ப கில்லாடி போல இருக்கே!
இது குறும்பு இல்லேன்னு நினைக்கிறீங்களா !:) செம குறும்பு போங்க :)
அடுத்து என்னவென்றால் கரண்டோட விளையாடி இருக்கீங்க. படிக்கவே பயமா இருந்தது.//
தோடா.
//ஆனாலும் கடைசியில் நச்சுன்னு சமுதாய அக்கறையோட ஒரு ஐடியா. சரிதான் .//
ம்கும். என்ன வெச்சி காமெடி கீமடி பண்ணலையே.
RAMYA said...
/ இதெல்லாம் எப்பூடி எனக்கு தெரியாதே :)//
நாங்கமட்டும் படிச்சிட்டா வந்தோம். தேடி வந்து குத்துறாய்ங்க=))
// நம்பி வந்தவங்களுக்கு எப்படியா பெயிண்ட் அடிக்கறது :)//
போனோம்னு என்னையும் சேர்த்து தானே சொன்னேன்.
// நகைச்சுவை இழையோடிய இடுகை நல்லா இருந்தது வானம்பாடி:)//
முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க ரம்யா.
Post a Comment