Sunday, September 26, 2010

மத்தாப் பூ...


சாதனை:  

69 வயசு சா சா சூன் தென் கொரியாவைச் சேர்ந்த அம்மணி. இந்த வயசுல கார் ஓட்டணும்னு ஆசை வந்துடுச்சாம். 2005ல முதல் டெஸ்ட் எழுதுனாங்களாம். மூணு வருஷமா விடாம முயற்சி பண்ணி 959 தடவை எழுதி 960-வது தடவை பாஸ் பண்ணிட்டாங்களாம். லீவ் நாள் தவிர மத்த நாள் எல்லாம் எழுதியிருப்பாங்களோ? அத விட பரிட்சை எழுதின கையோட அடுத்த பரிட்சைக்கும் அப்ளை பண்ணிட்டு வீட்டுக்கு போவாய்ங்க போல. கொரியால ட்ரைவிங் லைசன்ஸ் எடுக்க பணம் கிடையாதா? எப்புடியோ! இதையும் ஒரு சாதனைன்னு ஒரு கார் கம்பேனிக்காரன் விளம்பரதுக்கு புடிச்சிட்டானாம். லைசன்ஸ் எடுக்க விட்ட காச விளம்பரத்துல புடிச்சிருவாய்ங்க.  

ஜம்பலக்கிடி பம்பா:  

இங்கிலாந்தில் க்ளஸ்டர்ஷேரில் இருக்கும் கே ரஸலுக்கு மைக்ரேன் இருந்துச்சாம். ஒரு நாள் ரொம்பத் தலைவலின்னு படுத்து எழுந்தாங்களாம். குரல் தெளிவில்லாம இருந்திச்சாம். கொஞ்ச நேரத்துல அது தெளிஞ்சதும் ஃப்ரென்ச் மொழியில பேசறாங்கன்னு தெரிஞ்சதாம். அந்தம்மணிக்கு முன்னாடி ஆங்கிலம் மட்டுமே தெரியுமாம்.  

வட போச்சே: 

திரும்பவும் உலகின் கோடீஸ்வரர்களில் முதல் இடத்தைப் பிடிச்சிட்டாராம் பில் கேட்ஸ். 2லட்சத்து 70ஆயிரம் கோடி ரூபாயாம். கொடுமை என்னன்னா அது அவரோட ரெண்டு பசங்களுக்கும் கொடுக்கறது நல்லதில்லைன்னு நினைக்கிறாராம். அது அவங்கள கெடுத்துடுமாம். சல்லிக் காசு பேறாது போல. ப்ச். பாவம். அந்த பசங்களுக்கு தமிழ் தெரிஞ்சாலாவது ‘வட போச்சே’ன்னு இடுகை போட்டு ஆத்திக்கலாம்.   

இந்த படை போதுமா:  

ரோம்ல ஒரு லிபியன் கலாச்சார மையத்துல அதிபர் கதாஃபி பேசுனாராம். அதுக்காக 500 பெண்கள் தலா ரூ 5000 கொடுத்து கூட்டிட்டு வந்தாங்களாம். பாரம்பரிய உடை உடுத்தி கூட்டிட்டு வந்தாங்களாம். கடாஃபி நெகிழ்ந்து போய் லிபியா நாட்டு பசங்கள கலியாணம் பண்றதுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னாராம். மாட்ரிமோனியல் ஏஜன்ஸி சைட்ல ஓட்டுறாரோ? எங்கள பாத்து கதாஃபியே காப்பி அடிக்கறாண்டான்னு நம்ம அரசியல் வாதிங்க மார் தட்டிக்கலாம்.  

கொடுமை:  

அமெரிக்காவில ஒரு அம்மணி தொல்லையில்லாம சீரியல் பார்க்கறதுக்காக தன்னோட 2 வயசு பொண்ணுக்கு போதை சிகரட் புடிக்க கத்து கொடுத்திருந்திச்சாம். அதுக்கு ஊக்கம் வேற குடுத்து அத செல்ஃபோன்ல படம் வேற புடிச்சி வச்சிருக்கு. அத யாருக்கோ தப்பா அனுப்பி, அவிய்ங்க போலீசுல சொல்லி அம்மணி இப்ப ஜெயில்ல. நம்மூர்ல அந்த பிரச்சனையே இல்லை. சீரியலே போதையாத்தானே கெடக்கு.   

மின்சாரக் கண்ணா:  

ஏழு வயதில் அம்மா இறந்த துக்கம் தாளாமல் இந்த சேட்டன் ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி வயரைப் பிடித்து தற்கொலை செய்ய முயன்றாராம். ஒன்னும் ஆகலையாம். இந்த வீடியோவில் பாருங்கள். சேட்டன் லைட் என்ன, மிக்ஸி என்ன  என்னன்னு உடம்புல மின்சாரம் பாய்ச்சிகிட்டு ஓட விடுறாரு. பக்கு பக்குன்னு பார்த்துட்டிருந்தா பய புள்ள ஆம்லட் போடுறான். இதுல அலங்காரம் வேற.    



 (டிஸ்கி: சிறுவர் சிறுமியர் எதிரில் பார்க்கவோ காண்பிக்கவோ வேண்டாம்)
(நன்றி: தினத்தந்தி, யூ ட்யூப்)
~~~~~~~~~~~~~~

46 comments:

Unknown said...

மின்சார மனிதன் ஆச்சர்யமூட்டுகிறான்...

மற்றபடி சீரியல் அம்மணி சிறையில் என்ன பார்ப்பாள்...

Unknown said...

மத்தாப்பு வைச்சுட்டீங்களா!

பழமைபேசி said...

மத்தாப்புல பொறி ஒன்னும் இல்லீங்களே... வெளிச்சம் மட்டுமே இருக்கு....

(இப்படித்தான் உசுப்புறது.... உங்களுக்குத் தெரியாததுங்களா அண்ணே?)

பழமைபேசி said...

// Sethu said...
மத்தாப்பு வைச்சுட்டீங்களா!
//

எப்படிண்ணே, எங்கூர்ல இருக்குற இவருக்கு முன்கூட்டியே சொல்லிடுவீங்களோ, இடுகை வருதுன்னு??

vasu balaji said...

@பழமைபேசி
இது பூ மத்தாப் பூ..

Unknown said...

சேட்டன் பக்கத்திலே ஒருத்தரும் நெருங்க முடியாது. வெந்துருவாங்க.

Unknown said...

பழமை! போட்டுக் கொடுக்காதீங்க இப்பிடி.

Subankan said...

அட!

என்னது நானு யாரா? said...

இப்படியும் மனிதர்களா அண்ணாச்சி! ரொம்ப ஆச்சரியமா இல்லை இருக்கு!

பகிர்ந்தமைக்கு நன்றிங்க அண்ணாச்சி! எத்தனை விந்தை மனிதர்கள்!

பழமைபேசி said...

இஃகி, பூவுக்கும் மத்தாப் பூவுக்கும் என்னங்ணே வேறுபாடு??

Menaga Sathia said...

மத்தாப்பூ கலக்கல் சார்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி

Unknown said...

I certainly would put a disclaimer on this video.

Too scary.

PLEASE don't show it to your kids. By chance if they tried, that is the end of it.

Please don't show it to your kids.

vasu balaji said...

@Sethu

நன்றி சேது. போட்டுட்டேன்:)

Unknown said...

என்ன சார் இது. சேட்டன் மனுஷனா? எப்பிடி சார் பக்கத்தில அவங்க wife நிப்பாங்க. மனுஷன் மிரட்டியே மனைவி கிட்ட எல்லா காரியத்தையும் சாதிச்சிகினாரா. அப்பா சாமி தாங்கமுடியலப்பா.

Unknown said...

சார்! இது சேட்டனோட மத்தாப்பு, பூ மத்தாப்பு இல்ல.

அபி அப்பா said...

அப்படின்னா மனைவி பக்கத்திலே நின்னா "அது சம்சாரம் இது மின்சாரம்"ன்னு அறிமுகப்படுத்துவாரோ!!!

'பரிவை' சே.குமார் said...

வியப்பில் ஆழ்த்துகிறார் மின்சார மனிதர்.
மத்தாப்பூவில் மற்றவையும் மத்தாப்பாய்...!

அது சரி(18185106603874041862) said...

//
சேட்டன் லைட் என்ன, மிக்ஸி என்ன என்னன்னு உடம்புல மின்சாரம் பாய்ச்சிகிட்டு ஓட விடுறாரு
//

ஈ மலியாள தேசத்துல கெரண்டு ப்ராப்ளாம் ஈ ஆளால தான் வரிதின்னு ஞான் இன்டைக்கு அறிஞ்சின்டு சாரே. ஈ ஆளை ஞான் ஆற்காடு வீராசாமிக்கு விக்கும். வல்லிய உருப்படி. அறிஞ்சோ?

காமராஜ் said...

ஃபாரின் சாக்லெட்,மொளகா பச்சி,வேர்க்கடலை இப்படி ரகரகமான நொருக்குத்தீனி.சுடச்சுட கூடவே பாலாண்ணாவோடு பக்குவமும் ரசனையும்.

ஸ்ரீராம். said...

அசத்தல் வீடியோ....

எல் கே said...

அசத்தல் வீடியோ

settaikkaran said...

பெயருக்கேத்தா மாதிரியே வண்ண வண்ணப் பொறிகள் சிந்தும் மத்தாப்பு தான்! :-)

நட்புடன் ஜமால் said...

சோதனையான சாதனை தான்

2 வயது குழந்தைக்கு போதையா - தாங்குமா - என்ன தாய் அவர் :(

பவள சங்கரி said...

மைக்ரேன் தலைவலி கேஸ் எப்படி ஃப்ரென்ச் மொழி பேசறாங்க.....இதைத்தான் ESP power ன்னு சொல்லறாங்களோ? வீடியோ......டென்சன்........நன்றி சார்.

சூர்யா ௧ண்ணன் said...

மத்தாப்பு அருமை தலைவா!
அடிக்கடி பத்த வைங்க..

க.பாலாசி said...

இப்ப அந்த போதை சிறுமி என்ன ஆனால்.. பாவம்...

அந்தாளு மனுஷனா... உள்ளாற எலும்புக்கு பதிலா இரும்பும், நரம்புக்கு பதிலா ஒயரும் இருக்குமோ!!!!

ஈரோடு கதிர் said...

|| நம்ம அரசியல் வாதிங்க மார் தட்டிக்கலாம்||

நம்ம நெஞ்ச தட்டாம இருக்கனுமே

பொரட்டாசி மாசத்துல கோழி முட்ட போடாதுன்னு ஊட்ல ஏமாத்துறாங்க,
அங்கே என்னடான்ன சேட்டன் ஃபுல்பாய்ல் அதுவும் பச்ச மெளகா!!!

நல்லாயிருங்கடே

ராஜ நடராஜன் said...

இது என்ன நச் க்கு போட்டியா?

vasu balaji said...

@கே.ஆர்.பி
.செந்தில்


நன்றி செந்தில்

vasu balaji said...

@Subankan

நன்றி சுபாங்கன்

vasu balaji said...

@என்னது
நானு யாரா?


நன்றிங்க.

vasu balaji said...

@பழமைபேசி

‘மத்தாப்’ தான் இஃகி இஃகி. நம்மகிட்டயேவா:)))

vasu balaji said...

@Mrs.Menagasathia

நன்றிங்கம்மா

vasu balaji said...

@T.V.ராதா
கிருஷ்ணன்


நன்றி சார்.

vasu balaji said...

@Sethu

ம்கும். அவங்க எர்த்தாக்கி உட்ருவாங்க:))

vasu balaji said...

@அபி
அப்பா


=)) சூப்பர் அபி அப்பா:))

vasu balaji said...

@சே.குமா
ர்


நன்றி சே.குமார்.

vasu balaji said...

@அது சரி(18185106603874041862)

/ஈ மலியாள தேசத்துல கெரண்டு ப்ராப்ளாம் ஈ ஆளால தான் வரிதின்னு ஞான் இன்டைக்கு அறிஞ்சின்டு சாரே.//

அது சரிதன்னே:))

//ஈ ஆளை ஞான் ஆற்காடு வீராசாமிக்கு விக்கும். வல்லிய உருப்படி. அறிஞ்சோ?//

இது சரியல்லா மோனே. மும்பே ஆற்காடு கரண்டு இல்லாத்தே கரண்டில அடிபட்ட காக்கையப் போலாயி. பின்ன ஈ ஆள வாங்கியால் கரண்டுக்கு எவிட போவும். :))

பின்னோக்கி said...

மத்தாப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

கடைசி காணொளி.. அதிசயம்

vasu balaji said...

@காமராஜ்
நன்றி காமராஜ்

vasu balaji said...

@ஸ்ரீராம்.

நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

@@நன்றி சேட்டை
@@நன்றிங்க ஜமால்
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி சூர்யா. சரி:)
@@நன்றி பாலாசி
@@நன்றி கதிர்

vasu balaji said...

@ராஜ
நடராஜன்


நச்சா நறுக்கா:)). இது சும்மா டமாசு

vasu balaji said...

@@நன்றி பின்னோக்கி

கிரி said...

வீடியோ ல இருக்கிறவருக்கு தினமும் சாப்பாட்டுக்கு பதிலா கொஞ்சம் வோல்ட் மின்சாரம் தான் கொடுக்கணும் போல இருக்கே! பீதியை கிளப்புறார்.