Thursday, September 16, 2010

நறுக்னு நாலு வார்த்த V 5.3


மீண்டும் முதல்வராவார் கருணாநிதி: ஸ்டாலின்

என்னைக்கும் நீங்க ஆக முடியாதுன்னு சொல்றாருண்ணேன்னு ஒரு அல்லக்கை போட்டு குடுக்கபோவுது அண்ணங்கிட்ட..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அண்ணா பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்: மு.க.அழகிரி

அண்ணன் வலி அண்ணனுக்குத்தான் தெரியும்..என்ன நாஞ்சொல்றது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குருவுக்கு பதிலாக என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்: ராமதாஸ்

ஏங்க? மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்குவீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருணாநிதி சொன்னதுபோல் அவருக்கு பிறகு அதிமுகவும் மதிமுகவும்தான் இருக்கும்: வைகோ

ரைட்டு! பின்னாடி மதிமுகன்னு சொன்னது மகன்கள் திமுகன்னு சொல்லி இணைஞ்சிடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சத்துணவில் வாரத்திற்கு 5 முட்டைகள்:கலைஞர்

தலைவரே! பசங்க வில்லங்கம் புடிச்சவனுங்கோ. பரிட்சையில -------- முட்டை போடும்னு கேள்வி குடுத்தா உங்க பேர எழுதிடுவானுங்கோ. டீச்சருங்க பாடு திண்டாட்டமா போயிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்:தமிழக அரசு

அனைவருக்கும் முடிகயிறு, தாயத்து வழங்கும் திட்டம் வருதுங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தீர்ப்பைப் பற்றிக் கவலையில்லை. ராமர் கோவில் கட்டியே தீருவோம்: ராமகோபாலன்.

ஒரு பிள்ளையாரை எடுத்து வாய்ல அடைக்கணும் இந்தாளுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காங்கிரசார் மைக் பிடித்து மக்களுடன் நேரடியாகப் பேச வேண்டும்: கார்த்திக் சிதம்பரம்.

காலர்ல மாட்டிக்கிட்டு பேசினா கேக்காதுங்ளாக்கும். வேட்டிய உருவமாட்டாங்கன்னு கேரண்டியிருக்கா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஷ்மீரின் நிறம் என்ன ப.சி.க்கு மோடி கேள்வி.

கண்டிப்பா காவியில்லைன்னு பதில் சொல்லப் போறாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஷ்மீர் இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்: ராகுல் 

குளிர்காலத்துல நீரோட்டம் உறைஞ்சிடுமே பரவால்லையா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்:டி.ஆர்.பாலு.

அண்ணோவ். பதினஞ்சு நாள்ள திரும்ப வருவோம்னு உங்க கூட டூர் வந்து யக்கா சொல்லிட்டு வந்திச்சே. அவங்க உணர்வுகள மறந்தாச்சாங்ணா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஷ்மீரிலிருந்து குமரி வரை பாரத் தீர்த் ரயில்

எல்லா ஊரு சரக்கும் கெடைக்குங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரதமாரக இருந்தால் என்ன செய்வீர்கள்? ராகுலிடம் கேள்வி.

மம்மீ! பாருங் மம்மி! இதுக்கு முன்னாடி இருந்தவங்கள்ளாம் என்னமோ செஞ்சிட்டா மாதிரி என்னைய மட்டும் டீஸ் பண்றாங்க. அவ்வ்வ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜபக்ஸே நடத்திய நரவேட்டை: வைகோ.

இப்புடி பேசியே கொஞ்சம் தேத்தப்பார்ப்போம் வோட்டை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சாதனைகளுக்காக ஆடுவதில்லை: ஷேவாக்
 
ஊத்திக்கிறதுமில்லாம இது வேற ரோதனை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

51 comments:

dheva said...

//ராஜபக்ஸே நடத்திய நரவேட்டை: வைகோ.

இப்புடி பேசியே கொஞ்சம் தேத்தப்பார்ப்போம் வோட்டை!//


பட்டாசு கிளப்புதுண்ணா..
//காஷ்மீரிலிருந்து குமரி வரை பாரத் தீர்த் ரயில்

எல்லா ஊரு சரக்கும் கெடைக்குங்களா?//


சர வெடி..... எல்லாமே நச்!

க.பாலாசி said...

முதல்ல துண்டப்போடுவோம்...

முகிலன் said...

வழக்கம்போல கலக்கல். ஆனாலும் கொஞ்சம் காரம் குறைஞ்ச மாதிரி இருக்கு.

க.பாலாசி said...

//மீண்டும் முதல்வராவார் கருணாநிதி: ஸ்டாலின்//

வேற ஜெயலலிதா ஆகும்னா சொல்லமுடியும்...

//என்னைக்கும் நீங்க ஆக முடியாதுன்னு சொல்றாருண்ணேன்னு ஒரு அல்லக்கை //

இதெல்லாமா பப்ளிக்கா சொல்லுவாங்க...

க.பாலாசி said...

//பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்: மு.க.அழகிரி//

பேரச்சொல்லி மட்டுமா ஏமாத்துறாய்ங்க....!!!!!!!!??

க.பாலாசி said...

//குருவுக்கு பதிலாக என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்: ராமதாஸ்//

ஏன்ன்ன்ன்... அப்பவாச்சும் குருணை..ச்ச்ச்சீ கருணை ஓட்டு கிடைக்குதான்னு பார்க்கவா..??

LK said...

sara vedigal. baala saar special

க.பாலாசி said...

//தலைவரே! பசங்க வில்லங்கம் புடிச்சவனுங்கோ.//

ம்ம்ம்க்கும்... ஏற்கனவே கலைஞர் ‘முட்டை’போடுறார்... கலைஞர் ‘முட்டை’போடுறார்னுதான் பேசிக்கிறானுங்க..

Mrs.Menagasathia said...

superrr!!

க.பாலாசி said...

//விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்:தமிழக அரசு

அனைவருக்கும் முடிகயிறு, தாயத்து வழங்கும் திட்டம் வருதுங்களா?//

சின்ன திருத்தம் அனைவருக்கும் ‘இலவசமாக’ முடிகயிறு, தாயத்து வழங்கும் திட்டம்

க.பாலாசி said...

//ஒரு பிள்ளையாரை எடுத்து வாய்ல அடைக்கணும் இந்தாளுக்கு.//

வாய்ல அடிக்கணும்ன்னு சொன்னா பொருத்தமாயிருக்கும்...

க.பாலாசி said...

//மைக் பிடித்து மக்களுடன் நேரடியாகப் பேச வேண்டும்://

அப்டியே மைக்க புடிச்சி பேசிட்டாலும்..........

ஜெரி ஈசானந்தன். said...

விழுந்தும்,விழாமலும் சிரித்தேன்..

காமராஜ் said...

ராகுல், மம்மி கிட்ட கம்ப்ளெய்ண்ட் பன்ற நறுக் தான் நம்பர் ஒன்.

ஜெரி ஈசானந்தன். said...

அந்த "பிள்ளையார்"மேட்டருக்கு...நான் சிரிச்ச சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு பெருசு பொட்டுன்னு போயிருச்சு.

சேட்டைக்காரன் said...

ஐயா, தீபாவளிக்கு இன்னும் நிறைய நாளிருக்கு. இப்பவே தௌசண்ட்வாலாவைக் கொளுத்திப் போட்டீங்களே! :-)

பழமைபேசி said...

அண்ணா, நீங்களும் காசு வாங்கிட்டீங்களோ?? சுரத்துக் குறைஞ்சா மாதிரி கீது?!

ரிஷபன் said...

ஒரு பிள்ளையாரை எடுத்து வாய்ல அடைக்கணும் இந்தாளுக்கு

ஹா ஹா ஹா

VISA said...

வழக்கம் போல நச்

கலகலப்ரியா said...

||கருணாநிதி சொன்னதுபோல் அவருக்கு பிறகு அதிமுகவும் மதிமுகவும்தான் இருக்கும்: வைகோ

ரைட்டு! பின்னாடி மதிமுகன்னு சொன்னது மகன்கள் திமுகன்னு சொல்லி இணைஞ்சிடலாம்.||

இல்ல இல்ல மக்கள்ன்னே வச்சுக்கலாம்... ஆணாதிக்கவாதியாவே இருக்கீங்களே சார்...

திருஞானசம்பத்.மா. said...

//.. அனைவருக்கும் முடிகயிறு, தாயத்து வழங்கும் திட்டம் வருதுங்களா? ..//
அதெல்லாம் கிடையாது, நேரடியா தூக்கு கயிறு தான்..

//.. ராமர் கோவில் கட்டியே தீருவோம்: ..//
எவ்ளோ சொன்னாலும் அடங்காம போர்வைய போத்திட்டு கிளம்பிட்டாங்களே..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சத்துணவில் வாரத்திற்கு 5 முட்டைகள்:கலைஞர்

தலைவரே! பசங்க வில்லங்கம் புடிச்சவனுங்கோ. பரிட்சையில -------- முட்டை போடும்னு கேள்வி குடுத்தா உங்க பேர எழுதிடுவானுங்கோ. டீச்சருங்க பாடு திண்டாட்டமா போயிடும்.//


:))))

ராஜ நடராஜன் said...

//காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்:டி.ஆர்.பாலு.//

சொன்னது சோனியா:)

பாலுவும் கூவியிருக்கலாம்!

நான் இந்தியன் இல்லைன்னு சொல்லி பெருமை பட்டுக்கொள்ளும் இரு மாகாணங்கள் 1.காஷ்மீர்.2.கோவா.

கோவாக்காரன் மப்பும் மந்தாரமா இருக்கிறதால மத்திய அரசுக்கு தலைவலி இல்லை.காஷ்மீர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலத்துலருந்து நீர் ஊற்றி வளர்த்த பயிர்.

காஷ்மீர் கலவரம்ன்னு சொன்னதும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது புல்லரிக்க வைக்குது.நமக்கெல்லாம் தேவையில்லாத கவலை இது.நாம் அடுத்த இலவச விளம்பரத்திற்கு காத்திருப்போம்.

Chitra said...

பிரதமாரக இருந்தால் என்ன செய்வீர்கள்? ராகுலிடம் கேள்வி.

மம்மீ! பாருங் மம்மி! இதுக்கு முன்னாடி இருந்தவங்கள்ளாம் என்னமோ செஞ்சிட்டா மாதிரி என்னைய மட்டும் டீஸ் பண்றாங்க. அவ்வ்வ்.


........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சான்சே இல்லை! பெஸ்ட்!

ஆரூரன் விசுவநாதன் said...

//பழமைபேசி said...

அண்ணா, நீங்களும் காசு வாங்கிட்டீங்களோ?? சுரத்துக் குறைஞ்சா மாதிரி கீது?! //

ஆசானே என்னாதிது????????

நசரேயன் said...

//கொஞ்சம் காரம் குறைஞ்ச மாதிரி இருக்கு//

ஆமாண்ணே

என்னது நானு யாரா? said...

//அண்ணா பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்: மு.க.அழகிரி

அண்ணன் வலி அண்ணனுக்குத்தான் தெரியும்..என்ன நாஞ்சொல்றது?//

சிலேடையில கலக்குறீங்க தலைவரே! ஹா... ஹா... சிரிப்பு பயங்கரமா மூட்டறீங்க...

ம்ம்ம். நன்னா இருக்கு!

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்கு சார் இந்த வெர்சனும் :)

அகல்விளக்கு said...

பட்டாசு மாதிரி படபடன்னு இருக்குங்க.... :-)

பழமைபேசி said...

@@ராஜ நடராஜன்

தாரவரத்துக்காரரு வலையில இருக்காரா?? முதல்ல மாதர, பாக்கவே முடியுறது இல்ல??

அப்பொறம் இன்னோன்னுங்க... நாங்களும் கடை நடத்துறம் தெரியும்ல?!

பின்னோக்கி said...

லோக்கல் பாலிடிக்ஸ்ச பின்னிட்டீங்க... மதிமுகவின் விரிவாக்கமும் ராகுலின் பிரதமர் கேள்வியும் சிரிப்பு தாங்க முடியலைங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//வழக்கம்போல கலக்கல். ஆனாலும் கொஞ்சம் காரம் குறைஞ்ச மாதிரி இருக்கு//

ரிப்பீட்டேய்ய்..

அண்ணா, ஸ்டாலின், ராகுல், கார்த்திக் எல்லாம் டாப்.

தெய்வசுகந்தி said...

கலக்கல்!!!!!!!!

dr suneel krishnan said...

பாலா சார் ,வாய்பே இல்ல :)
//இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்: ராகுல்

குளிர்காலத்துல நீரோட்டம் உறைஞ்சிடுமே பரவால்லையா//

ஆஹா :))))))))
//பிரதமாரக இருந்தால் என்ன செய்வீர்கள்? ராகுலிடம் கேள்வி.

மம்மீ! பாருங் மம்மி! இதுக்கு முன்னாடி இருந்தவங்கள்ளாம் என்னமோ செஞ்சிட்டா மாதிரி என்னைய மட்டும் டீஸ் பண்றாங்க. அவ்வ்வ்.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~//
இது கலக்கல் , சரியான வாறு :0

ஜோதிஜி said...

மகன் திமுக

நான் இதுவரைக்கும் யோசித்துப் பார்க்காத ஒன்று.

ராஜநடராஜன் பின்னோட்டத்தைப் பார்த்து உங்கள் பலம் புரிந்தது.

எப்போதும் சிரிக்க சிந்திக்க வைப்பீர்கள்.

இந்த முறை மனம் வெறுமையாய் நாட்டைப்பற்றி யோசிக்க வேண்டியதாய் மாற்றி விட்டீர்கள்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நானும் ஆஜர் சார்.

ஸ்ரீராம். said...

காஷ்மீர் பற்றிய கமெண்ட்ஸ்... ரொம்ப ரசித்தேன்...

ஈரோடு கதிர் said...

நறுக் சுருக்குன்னு இருக்கு

||அண்ணா, நீங்களும் காசு வாங்கிட்டீங்களோ?? ||

நீங்களுமான்னு கேக்கும் போதே மாப்பு மேலேயும் டவுட்டு வருதுங்கோ

ஈரோடு கதிர் said...

||Your comment has been saved and will be visible after blog owner approval.||

கலி முத்திப்போச்சு

D.R.Ashok said...

சேவாக்கை தவிர்த்து அத்தனையும் நச்... அரசியல் நய்யாண்டி :)

vasan said...

பால‌ன் சார்,
கேர‌க்ட‌ர், ந‌றுக்குன்னு நாலு வார்த்தை, இர‌ண்டிலும் உங்க‌ளை அடிச்சுக்க‌.. ஆளே கிடையாது.., ஆளே கிடையாது. (பாலையா ஸ்டைல‌ ப‌டிக்க‌னும்)

Anonymous said...

பதிவு அருமை.

அப்படியே நம்ம பக்கமும் வாங்களேன்..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

குருவுக்கு பதிலாக என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்: ராமதாஸ்

ஏங்க? மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்குவீங்களா?//

ஒளிய மரம் ஏதும் மிச்சமிருக்கா என்ன பாலா சார்..

பாரதசாரி said...

ஷார்ப்பான நறுக்ஸ்...கலக்கல் சார்

அன்னு said...

//பிரதமாரக இருந்தால் என்ன செய்வீர்கள்? ராகுலிடம் கேள்வி.

மம்மீ! பாருங் மம்மி! இதுக்கு முன்னாடி இருந்தவங்கள்ளாம் என்னமோ செஞ்சிட்டா மாதிரி என்னைய மட்டும் டீஸ் பண்றாங்க. அவ்வ்வ்.//

உண்மையான ஆதங்கம். காமெடியான பதிவுன்னாலும் சீர்யஸான விஷயம் இது. ஹ்ம்ம்...நம்ம தேசத்துல இருக்கற கேலிக்கூத்துக்களை இப்படி சகிச்சுக்கவும் பழக்கி விட்டார்கள். வாழ்க ஜனநாயகம்!!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கடைசி நறுக் நானு!

வானம்பாடிகள் said...

@@நன்றி தேவா
@@நன்றி பாலாசி
@@நன்றி முகிலன். :)
@@நன்றி LK
@@நன்றிங்க மேனகா
@@நன்றி ஜெரி
@@நன்றி காமராஜ்
@@நன்றி சேட்டை
@@நன்றி பழமை:))
@@நன்றி ரிஷபன்

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||கருணாநிதி சொன்னதுபோல் அவருக்கு பிறகு அதிமுகவும் மதிமுகவும்தான் இருக்கும்: வைகோ

ரைட்டு! பின்னாடி மதிமுகன்னு சொன்னது மகன்கள் திமுகன்னு சொல்லி இணைஞ்சிடலாம்.||

இல்ல இல்ல மக்கள்ன்னே வச்சுக்கலாம்... ஆணாதிக்கவாதியாவே இருக்கீங்களே சார்...//

போச்சுடா:)) இதுலயுமா.

வானம்பாடிகள் said...

@@நன்றி சம்பத்
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றி ராஜநடராஜன்
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி ஆரூரன்
@@நன்றி நசரேயன். அமெரிக்காகாரங்களுக்கு காரம் அதிகம் வேணாம்:)
@@நன்றிங்க என்னது நானு யாரா
@@நன்றி பின்னோக்கி
@@நன்றி இராமசாமிகண்ணன்
@@நன்றி ராஜா
@@நன்றி செந்தில்
@@நன்றிங்க தெய்வசுகந்தி
@@நன்றி சுனீல்
@@நன்றிங்க ஜோதிஜி
@@நன்றிங்க நித்திலம்

வானம்பாடிகள் said...

@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங் கதிர்ணோவ்
@@நன்றி அசோக்
@@நன்றிங்க வாசன்
@@நன்றிங்க இந்திரா
@@நன்றிங்க தேனம்மை
@@நன்றிங்க பாரதசாரி
@@நன்றிங்க அன்னு]
@@நன்றி ஷங்கர்.

கிரி said...

//தலைவரே! பசங்க வில்லங்கம் புடிச்சவனுங்கோ. பரிட்சையில -------- முட்டை போடும்னு கேள்வி குடுத்தா உங்க பேர எழுதிடுவானுங்கோ. டீச்சருங்க பாடு திண்டாட்டமா போயிடும்.//

ஹா ஹா ஹா

சார் கலக்கல் எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது :-)