Monday, September 13, 2010

தங்கமணி ராக்ஸ்..

சினிமாவில் ஒரு விரலசைப்பில் வில்லனை 7 மாடி உயரத்துக்கு உயர்த்தி எட்டு குட்டிக்கரணம் அடிக்க வைப்பார்களே, அதெல்லாம் தங்கமணியின் டேலண்டுக்கு முன் ஜுஜுபி. இணையத்தில் ROFL என்று உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு போடுவதை, நொடியில் நிஜமாக்குவதில் தங்கமணியை அடித்துக் கொள்ள முடியாது.

கொஞ்சமும் சிரிக்காமல், வெள்ளந்தியான முகபாவனையுடன் அஸால்டாக வீசும் குண்டுக்கு தரையில் படுத்து உருண்டு சிரிக்காமல் இருக்க எந்த கொம்பனாலேயும் முடியாது. அது போதாதென்று இதில் சிரிக்கவென்ன இருக்கு என்று நொடித்துக் கொண்டு போகையில் புரையேறி மூச்சடைத்துப் போய்விடும்.

தங்கமணியின் மாற்றமுடியாத ஒரு மேனரிசம் ஃபோன் செய்ததும் ‘ஹலோ! பாலாஜி சார் வீட்ல இருந்து பேசுறேன்’ என்பது. வாடிக்கையாக மினரல் வாட்டர் சப்ளையர், மருந்துக்கடை இவர்களுக்கு போன் செய்யும்போது பரவாயில்லை. கரண்ட் போனதும் எலக்ட்ரிசிடி போர்டுக்கு மல்லுக்கட்டி லைன் கிடைத்த கடுப்பில் தங்கமணி ஒரு முறை, எரிச்சலில் இருந்த இ.பி.ஆளிடம், வழக்கமான பாணியில் ‘நான் பாலாஜி சார் வீட்ல இருந்து பேசுறேன்’ என ஆரம்பித்திருக்கிறார்.

அந்த ஆள் ‘ஏங்க! எங்கருந்துன்னா பேசுங்க! என்ன வேணும் சொல்லுங்க எனப் பாய்ந்திருக்கிறார். வீதியில் அனைவர் வீட்டிலும் மின்சாரம் இருப்பதைச் சொல்லி, எங்கள் வீட்டில் மட்டும் இல்லை என்பதைச் சொல்லவும், அவர் போதாத காலம் பேரு அட்ரஸ் சொல்லுங்க என்று கேட்டுவிட்டார். இப்படி கேப்பிங்கன்னுதான் முதலிலேயே பேர் சொன்னேன். என்னமோ எங்கிருந்துன்னா பேசுங்கன்னு எரிஞ்சி விழுந்தீங்களே என்று ஒரு பாட்டம் லெக்சர் எடுத்திருக்கிறார். எங்கே நேரமானால் இன்னம் என்னமெல்லாம் வருமோ என்ற பயத்திலோ என்னமோ 15ம் நிமிடம் சர்வீஸ் வேன் வீட்டு வாசலில் வந்து நின்றது. 

ஒரு முறை, தங்கமணி ஹொகேனக்கல்லில் குளிக்கப் போய், சறுக்கி விழுந்து வலது கையில் ஃப்ராக்ச்சர் ஆக, அங்கிருந்து வந்து டாக்டரிடம் செல்வதற்குள் இரண்டு நாட்களாகிவிட்டது. டாக்டரிடம் நான் நடந்ததைச் சொல்லி, அவர் சர்ஜரி செய்ய வேண்டும் என்று அட்மிட் ஆகச் சொன்னதும், வார்டுக்கு அழைத்துச் சென்று ரூமில் விட்டுவிட்டு ஒரு நண்பனிடம், வீட்டுக்குப் போகச் சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென அறையிலிருந்து இடி விழுந்தாற்போல் சிரிப்பும், கேவலுமாய் வினோதமான சப்தத்துடன், என்னங்க? என்னாச்சுங்க என்ற தங்கமணியின் குரலும் கேட்டது. திகைத்துப் போய் அறைக்கு ஓட நர்ஸ் பாதி சுற்றிய பேண்டேஜ் ரோல் தரையில் உருண்டொட வயிற்றைப் பிடித்துக் கொண்டு மடங்கி சிரித்துக் கொண்டிருந்தார்.

நர்ஸால் விஷயம் சொல்வதற்கு இப்போதைக்கு முடியாது எனத் தெரிந்தபடியால், தங்ஸிடமே என்ன கேட்டார்கள்? நீ என்ன சொன்னாய் என்றேன். ரொம்ப சாதாரணமாக, ஒன்னுமில்லைங்க, ‘எப்படிம்மா விழுந்தீங்கன்னு கேட்டாங்க! நான் தொப்புன்னு விழுந்தேன்’னு சொன்னதும் இப்படி சிரிக்கிறாங்க’ என்று சொன்னதும் நர்ஸ் அடுத்த ரவுண்ட் சிரிப்புக்குப் போக, நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன்.

நேற்று அதிகாலையில் கேரக்டர் இடுகை போட்டுவிட்டு தூங்கப்போனேன். ஒன்பதரை மணியளவில் கண்விழித்து, பல் தேய்த்து, காஃபி சாப்பிட ஆரம்பிக்க, தங்கமணி ட்ரேட்மார்க் எக்ஸ்ட்ரா வெள்ளந்தி முகத்துடன், ரெண்டு ஃபோன் கால் வந்தது. யாருன்னு தெரியலை. பேர் சொல்லமாட்டேன்னுட்டாரு என்றதும், என்னது? என்றேன். முதல் கால் வந்ததும், யார் பேசுறீங்கன்னு கேட்டேன், பேர் சொல்ல மாட்டேன்னாரு. என்னடா இதுன்னு வெச்சிட்டேன்.

திரும்ப கால் வர எடுத்து யார் சார் பேசறதுன்னா திரும்பவும் பேர் சொல்ல மாட்டேன் அப்படின்னாரு. இப்படி சொன்னா எப்படி சார்னா, நான் ப்ளாக்ல இருக்கேன்னு சொல்லுங்கோன்னார். தூங்கறார்னு சொல்லி வச்சிட்டேன். போன் பண்ணிட்டு பேரு சொல்ல மாட்டேன்னா எப்படி? ரிஸீவ்ட் கால்ல பாருங்க என்று இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு சமையலறைக்குப் போய்விட்டார். 

அந்த நம்பரை அழுத்தி, கால் போய்க்கொண்டிருக்க குழப்பத்தோடு இருக்கையில், நண்பர் எடுத்து ‘சார்! நாந்தான் சார் ஃபோன் பண்ணேன். இந்த மாதிரி இடுகையெல்லாம் கார்த்தால போடாதங்கோ சார். படிக்கறப்பவே கலக்கமாப் போச்சு, என்று ஃபீலிங்க்ஸோடு பேச ஆரம்பித்தார். எனக்கு ஒரு புறம் சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தாலும், இவ்வளவு ஆதுரத்துடன் பேசும்போது எப்படிச் சிரிப்பது என்று அடக்கிக் கொண்டேன்.

பேசி முடித்ததும் தங்கமணியிடம், ஆமாம் பேரு என்ன சொன்னாரு என்றேன். அட! பேரு சொல்ல மாட்டேன்னாருன்னு திரும்ப திரும்ப சொல்றேன், பேரு என்ன சொன்னாருன்னு கேட்டா என்ன பண்ண என்று எகிறினார். பேர் சொல்ல மாட்டேன்னாரா, பெயர் சொல்ல விருப்பமில்லைன்னாரா என்றேன். சற்றும் அசராமல் எதானா என்ன? ரெண்டும் ஒன்னுதானே என்று குழம்புக்கு தாளிக்க ஆரம்பித்தார். அடக்கி வைத்த சிரிப்பெல்லாம் அடித்துக் கொண்டுவர ஒரு பாட்டம் சிரித்துத் தீர்த்துவிட்டு, அது அவர் ப்ளாகில் எழுதும் பெயர் என்று விளக்கி, நான் வானம்பாடிகள் என்ற பெயரில் எழுதுவதைச் சொன்னபோது பார்த்த பார்வையிருக்கிறதே! 
~~~~~~~~~~~~~~~~~~~~

55 comments:

LK said...

veetuku veedu vaasap padi saar

என்னது நானு யாரா? said...

தங்கமணியால ரொம்ப காமெடி தான் போல! அதுதான் உங்க எழுத்தில அது நல்லா பிரதிபலிக்குது!

அப்புறம் அவரு எப்பவுமே அப்படி தானா? எனக்கு ஃபோன் செய்தபின்னாடியும், உங்க பேரு என்ன என்று கேட்டதற்கு "பெயர் சொல்ல விருப்பமில்லை"ன்னு சொன்னாரு!

அது பரவாயில்லை! எனக்கு அவரை யாரென்று தெரியும். அதனால் பேச்சை தொடர முடிந்தது.

உங்க வீட்டம்மாவிடம் அவரு அப்படி சொன்னது, அவங்களுக்கு குழப்பத்தை தானே ஏற்படுத்தி இருக்கும்.

எப்படியோ சிரிப்பதற்கு ஒரு விஷயம் கிடைச்சதில்ல!

நல்ல காமெடி தான்!

சத்ரியன் said...

//அந்த பார்வை...//

அடடா...!

(அந்த பார்வைக்கு தானே மக்கா உங்க ஆயுளையே அடகு வெச்சிட்டீங்க...!)

Subankan said...

கலக்கல் காமெடி சார் :)

திருஞானசம்பத்.மா. said...

//.. என்னது நானு யாரா? said... //

இந்த பதிவர் போன் பண்ணும்போது தெரியாம கூட உங்க தங்கமணி எடுத்துட கூடாதுன்னு வேண்டிக்கறேன்.. :-))

சேட்டைக்காரன் said...

வீட்டுலேயே நகைச்சுவைக்கு இன்ஸ்பிரேஷன் வச்சிருக்கீங்க ஐயா! கலக்கல்! :-))

என்னது நானு யாரா? said...

@@திருஞானசம்பத்.மா. said...
//.. என்னது நானு யாரா? said... //

இந்த பதிவர் போன் பண்ணும்போது தெரியாம கூட உங்க தங்கமணி எடுத்துட கூடாதுன்னு வேண்டிக்கறேன்.. :-))

அது வலைபக்கத்திற்காக வைத்த புனை பெயர்.

ஆனால் ஃபோனில் பேசும் போது என்னை முழுமையாக அறிமுகம் செய்து கொண்டு தான் பேசுவேன். அதனால் யாருக்கும் கலக்கம் வராது!

ரிஷபன் said...

எப்படிம்மா விழுந்தீங்கன்னு கேட்டாங்க! நான் தொப்புன்னு விழுந்தேன்’

துளிக்கூட மிகை இல்லாத கேரக்டர் வார்ப்பில் நானும் ஒவ்வொரு தடவையும் தொப்புனு விழறேன்..

அஹமது இர்ஷாத் said...

எனக்கு சிரிப்புத் தாங்கல சார்.

அடுத்து' பெயர் சொல்ல விருப்பம்னு' யாரும் போன் போட்றபோறாங்க பார்த்து..

ஆரூரன் விசுவநாதன் said...

அநியாயத்துக்கு இப்புடியா கேலி பண்றது. எம்புட்டு தகிரியம், இருங்க..இருங்க போட்டுக்குடுக்கறேன்..

ஆணாதிக்க கைக்கூலியே,

பெண்களை கேலிப் பொருளாக்கி பதிவுகளை இட்டு வரும் ஆணாதிக்க சக்தியை முறியடித்து, விலா எலும்பு உலுக்க வினவும் கூட்டம் தயராக இருக்கிறது என்ற எச்சரிக்கை விடுக்கின்றேன்.

இது மேலும் தொடர்ந்தால் வீட்டுக்கு சைக்கிள் ரிக்‌ஷா வரும், கைவண்டி வரும், நடவண்டி வரும் ..பொரட்சி வரும், ம்ம்ம்...அப்புறம்.....

வந்து....வந்து...எல்லாம் வரும்.....

இப்படிக்கு
த.மு.க(தங்கமணிகள் முன்னேற்ற கழகம்)

ஹி....ஹி.....

மணிஜீ...... said...

ஒரு பதிவரின் குடும்பத்தாருக்கு என்னை தண்டோரா என்றுதான் தெரியும். ஒரு நாள் சாலையில் என்னை அவரின் மாமியார் தண்டோரா..தண்டோரா என்று அழைக்க..கூத்துதான்..கலக்கல் இடுகை சார்

நாய்க்குட்டி மனசு said...

உங்க டென்ஷன் ரிலீவர் பக்கத்திலேயே இருக்கையில்
உங்களுக்கு இல்லை மனக் கவலை.
தொடர்ந்து வாசித்து அவங்க டென்ஷன் ஏத்திக்காம .

Chitra said...

எப்படிம்மா விழுந்தீங்கன்னு கேட்டாங்க! நான் தொப்புன்னு விழுந்தேன்’


...... She is so cute and innocent! You are indeed blessed to have her. :-)

Sethu said...

சூப்பர் சார். Just for the sake of தங்கமணி அம்மா , பெயர் சொல்ல விருப்பமில்லை (யார் sir இவர்னு தெரியலை) கொஞ்சம் அதிகமா யோசிப்பாரு.
என்ன சார் உங்க வீட்டு மக்கள் எல்லோரும் காமெடி பண்ணும்னு சொல்லலை. உங்க வீட்டு சுவர் கூட காமெடி பண்ணுமா?

அருமையான உலகத்தில் இருங்கீங்க.

ஈரோடு கதிர் said...

இருங்க ”என்னது நான் யாரா”வ அடுத்த வாட்டி போன் பண்ணச் சொல்றேன்..

____

கீழே விழும் போது தொபுக்குடீர்னு விழுகாம டண்டணா டான்னா விழுக முடியும்

ங்கொய்யாலே.. நர்ஸ் கூட சேர்ந்து இவரும் சிரிக்கிறாராம்ல

____

ஊரெல்லாம் வானம்பாடிய கிழிச்சு தொங்கவுடுறாங்க.. இதுல தங்கமணிக்கே இப்பத்தான் பேர் தெரிஞ்சுதோ

இனிமே போ பேசும் போது வானம்பாடிகள் சார் வீட்ல இருந்துன்னு பேசுவாங்க
______

ஈரோடு கதிர் said...

||த.மு.க(தங்கமணிகள் முன்னேற்ற கழகம்)||

ஆனாலும்....
இந்த வெளம்பரம் ஓவருங்க

இராமசாமி கண்ணண் said...

ஒரு மணி நேரமா சிரிச்சுகிட்டே இருக்கேன் சார்..

Sethu said...

சார், கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்னு சொல்லுவாங்க. உங்க வீட்டுல எல்லோரும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ வைப்பது ஒரு சந்தோசமான வாழ்கை. வாழ்த்துக்கள் சார்.

க.பாலாசி said...

நீங்கதான் இப்டின்னு பார்த்தா அம்மாவும் இப்டித்தானா?.... யப்பா உங்கள்ட மாட்டிக்கிட்ட அந்த நர்ஸ்ஸோட நிலமதான் எனக்கும்.. முடியல....

கதிர் சார் சொல்றதுபோல அடுத்தது “என்னது நானு யாரா?“ வ விட்டுதான் போன் செய்ய சொல்லணும்....

க.பாலாசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
ஆணாதிக்க கைக்கூலியே,//

அநியாயத்துக்கு எங்க தலைவரு தங்கமணிகிட்ட பயந்துதான் கெடக்காரு போல...

கலகலப்ரியா said...

||என்னது நானு யாரா? said...
@@திருஞானசம்பத்.மா. said...
//.. என்னது நானு யாரா? said... //

இந்த பதிவர் போன் பண்ணும்போது தெரியாம கூட உங்க தங்கமணி எடுத்துட கூடாதுன்னு வேண்டிக்கறேன்.. :-))

அது வலைபக்கத்திற்காக வைத்த புனை பெயர்.

ஆனால் ஃபோனில் பேசும் போது என்னை முழுமையாக அறிமுகம் செய்து கொண்டு தான் பேசுவேன். அதனால் யாருக்கும் கலக்கம் வராது!||

:)))))) நீங்க வேற... என்னது நான் யாரா-ன்னு கேட்டு வச்சா அம்புட்டுதேன்... கிழிஞ்சிடும்...

கலகலப்ரியா said...

சார்... செம... ஆனா இன்னும் சுவாரஸ்யமா சொல்லி இருக்கலாமின்னு தோணுது..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

'வெள்ளந்தி' ங்கற வார்த்தைக்கு அர்த்தமே உங்க தங்கமணிதான் போல இருக்கு சார்.தங்கமணி மேடம்க்கு வாழ்த்துக்கள்........இப்படியே என்றென்றும் இருப்பதற்கு......

பத்மா said...

இதுக்காகவே "நீங்கதான் பேசுறீங்க" ன்னு ஒரு வலைபூ ஆரம்பிக்கலாம் போலிருக்கே

சூப்பர் தங்கமணி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒரு விடுமுறை நாளில் அதிகாலையில் என்னை அழவைத்ததற்கு பரிகாரமாக, இப்போது வயிறு வலிக்க சிரிக்க வைத்து விட்டீர்கள், நன்றி சார்!

Madhavan said...

அதெல்லாம் சரி.. 'பதிவு' எப்ப போடுவீங்க..?

காமராஜ் said...

அருமை அண்ணா.

K.B.JANARTHANAN said...

நல்லாருக்கு சார். செம காமெடியான இந்த மாதிரி ஆட்கள் தான் இப்போதைய தேவை!

அரசூரான் said...

ரூம் போட்டு யோசிப்பாய்ங்க... நீங்க குடும்பத்தோட மருந்துவமனைல ரூம் போட்டு சிரிச்சிரிக்கீங்க. அய்யோ அய்யோ.

சிவராம்குமார் said...

சூப்பர் சார்!

Mahi_Granny said...

உங்க நகைச்சுவை உணர்வு அவங்ககிட்ட இருந்து தான் வந்திருக்குமோ .both rock

விந்தைமனிதன் said...

காலையிலேருந்து இருந்த மன அழுத்தம் பறந்துபோச்சேய்

velji said...

ஆஹா!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல்ங்க..

சிரித்துக் கொண்டே இருக்கிறேன்..

'என்னங்க தனியா சிரிச்சிட்டிருக்கீங்க?" ..

என் தங்கமணிகிட்ட இருந்து சத்தம் வருது..


மீ த எஸ்கேப்பு..

;)

நட்புடன் ஜமால் said...

அதிகாலையில் படித்து புன்னகைத்து கொண்டிருக்கிறேன்
( குழந்தை தூங்கிங்ஸ் )

சுகமான இடுக்கை

பட்டாபட்டி.. said...

ஹா..ஹா...

கலக்கல் வானம்பாடிகள் சார்...

ஆமா சார்.. நான் பட்டாபட்டி விட்டிலிருந்துதான் பேசறேன்..ஹி..ஹி

முகிலன் said...

ROFL =))))))))))))))))

Muthuramalingam said...

Thoppunu vizhunthu vizhunthu sirisen.

:)

அன்புடன் மலிக்கா said...

நல்ல நகைச்சுவை உங்கள் எழுத்தில்.

உங்க வீட்டம்மாவிடம் நான் போன் பேசும்போது இனி பெயர்சொல்லிவிட்டே பேசுவேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

தொப்புன்னு விழுந்தது அழகு. அப்புறம் போன் பண்ணும் போது முதலில் பெயர், அல்லது விபரம் சொல்வது நல்லபழக்கம்ங்க.!

சிங்கக்குட்டி said...

மனைவியின் நகைச்சுவை கணவனின் உடல்நலம், என்று எங்கோ எப்போதோ படித்தது நினைவில் வருகிறது.

கலக்குங்க :-).

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

முடியலைங்க அப்புறம் வர்றேன்

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

இப்படி சொல்லலாமா?
“ வானம்பாடிகள் வீட்டு வாசல் திண்ணை கூடகன ஜோராய்
கதை சொல்லும்!”

அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

தாராபுரத்தான் said...

நம்ம தங்கமணி நமக்கு கொடுக்க வேண்டியவங்க வீட்டுக்கு வந்தா அவரு வெளியே போயிருக்காரு அப்படீன்னு அதட்டி அனுப்பி வடுவாங்க,நாம கொடுக்க வேண்டியவங்க வந்தா காப்பி கொடுத்து உக்கார வைத்து நம்மை பிடித்து கொடுக்காம விடமாட்டாங்க.....தங்கககககமணிகள்.வணக்கம் சார்.

RVS said...

நல்ல வேளை "என்னது நானு யாரா?" ஃபோன் பண்ணாம போனாரு.... அப்புறம் உங்க நிலைமை.... ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சே.குமார் said...

//தொப்புன்னு விழுந்தேன்’//

innum sirikka vaikirathu.
aama ammavukitta intha idukaiya kattiyacha????????????????

என்னது நானு யாரா? said...

நம்ப பேரு வைச்சி எல்லோரும் லந்து பண்ணிட்டு இருக்கீங்களா?

இருங்க உங்களை பத்தி எங்க தாத்தாகிட்ட போட்டு கொடுக்கிறேன். அப்புறம் பாருங்க உங்க எல்லோருடைய் வீட்டுக்கும் ஆட்டோ வர போகுது!

எங்க தாத்தா யாருன்னா கேக்கறீங்க? அவரு தான் மஞ்ச துண்டை எப்பவும் தோள்ல போட்டுகிட்டு திரிவாரே அவரு தான்!

கபர்தார் - இது ரஜினி டயலாக். உக்கும்...! அப்படின்னா ஜாக்கிரதையா இருங்கன்னு அர்த்தம்.

என்னது நானு யாரா? said...

நண்பர்களே! எளிய வாழ்வு, இயற்கை மருத்துவம், இயற்வை வாழ்வியல், நோய் வரமால் இருக்கிறது எப்படின்னு பலருக்கும் பயன்படுகிற மாதிரி இப்பத்தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன்

பாமரன் ஐயா! நீங்களும், உங்க சேனை படைகளோட அணி திரண்டு நம்ப கடைக்கு வரணும்.

கடையில இருக்கிற சரக்கெல்லாம் எப்படி இருக்குன்னு சொல்லணும். வருவீக இல்ல?

ம.தி.சுதா said...

வந்தேன் ஐயா.... நல்லாயிருக்கிறது... வாழ்த்துக்கள்..

வானம்பாடிகள் said...

@@நன்றி LK
@@நன்றிங்க என்னது நானு யாரா
@@நன்றி சத்ரியன்
@@நன்றி சுபாங்கன்
@@நன்றி திரு
@@நன்றி சேட்டை
@@ஆஹா. நன்றி ரிஷபன்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றி ஆரூரன்
@@நன்றி மணிஜீ

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க நாய்க்குட்டி மனசு
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி சேது
@@நன்றி கதிர்:)) ஆனாலும் லொள்ளு
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றி பாலாசி

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
//
:)))))) நீங்க வேற... என்னது நான் யாரா-ன்னு கேட்டு வச்சா அம்புட்டுதேன்... கிழிஞ்சிடும்...//

அதான:))))))

/சார்... செம... ஆனா இன்னும் சுவாரஸ்யமா சொல்லி இருக்கலாமின்னு தோணுது../

ம்ம். ஆமாம்:))

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி பத்மா
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி மாதவன்
@@நன்றி காமராஜ்
@@நன்றி ஜனார்தனன்
@@மாதவன்
@@நன்றி அரசூரான்
@@நன்றி சிவராம்குமார்
@@நன்றி மஹி_க்ரான்னி
@@நன்றி விந்தை மனிதன்

வானம்பாடிகள் said...

@@நன்றி வேல்ஜி
@@நன்றி செந்தில்
@@நன்றி ஜமால்
@@நன்றி பட்டா
@@நன்றி முகிலன்
@@நன்றி முத்துராமலிங்கம்
@@நன்றிங்க மலிக்கா
@@நன்றிங்க ஆதி:))
@@நன்றிங்க சிங்கக்குட்டி
@@நன்றி வேலு

வானம்பாடிகள் said...

@@நன்றி ஆர் ஆர் ஆர்
@@நன்றி அண்ணா
@@நன்றி ஆர்.வி.எஸ்
@@நன்றி சே.குமார்
@@நன்றி ம.தி.சுதா.