கருப்பா கருப்பான்னு
கக்கத்துலயே சுமந்து
காடு கரடு மேயவிட்டு
காலோய விளையாடி
காணமுன்னு பதறித் தேடி
கட்டி கூட போடாம
கனவு மாதிரித்தான் வாழ்க்கை
கருப்பசாமி கோவிலில
கதம்ப மாலை போட்டு
கால் மாலை மேயக்குள்ள
கத்தி மினிமினுக்க
கருப்பனாய்ப் போனவன்
கறியாய் மாறிப் போனான்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்தவராம் அவர். பெற்றோரின் சொத்துக்கள் எல்லாம் விற்று பணமாக்கி வசதியான ஆளாய் இருந்தாராம். உறவுகள் எல்லாம் கிராமத்தில். கலியாணம் காது குத்துக்கு தன் தகுதிக்கேற்ப கால் சவரன் அரை சவரன் என்று பந்தாவாக மொய் எழுதுவாராம்.
காலம் பறக்க மகளுக்கு திருமணம் என்று கிராமத்துக்கு வந்தவர் இறுக்கமான முகத்துடன், பத்திரிகை வைத்துவிட்டு, உங்க வீட்டு விசேஷத்துக்கு நான் இத்தனை சவரன் போட்டிருக்கேன். இந்தாங்க லிஸ்டுன்னு அவங்கவங்களுக்கு அவர் எழுதின மொய் விவரங்களைக் கொடுத்து, தங்கம் விலை அதிகம்னு இருக்காதீங்க. நான் போட்டத திருப்பி போட்டு பொண்ணு கலியாணத்தை நடத்தி வைக்கணும்னு கராரா சொல்லிட்டு போயிட்டாராம்.
ஊர் கூடி பேசி, கலியாணத்தன்னைக்கு ஊர்ல இருந்து ஒரே ஆள் வந்து, ஊர் மொத்தத்துக்கும் அவர் போட்ட நகை கணக்கை கூட்டி, அதற்குச் சமமான எடையில் கொண்டு வந்த நகை பில்லோடு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் கூட போய் விட்டாராம்.
நல்ல மனுஷன். நீங்கல்லாம் வருவீங்கன்னு சாப்பாடு செஞ்ச காசு வீணாப் போச்சு. மருவாதியா அதையும் கொடுத்துட்டு போன்னு சொல்லாம விட்டாரே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லண்டனில் ஒரு கர்ப்பிணிக்கு உடம்பு சுகமில்லை என்று, ஆம்புலன்ஸில் அழைத்து வர வழியிலியே குறைப் பிரசவமாம். 600 கிராம் எடையில் உள்ள குழந்தை, இங்குபேட்டர் வசதியில்லாமல் பிழைப்பது கடினம் என்பதாலும், மருத்துவ மனை செல்ல அரை மணி நேரத்துக்கும் மேல் என்பதாலும், தொப்புள் கொடியோடு, வண்டியில் இருந்த ப்ளாஸ்டிக் கவருக்குள் குழந்தையை வைத்து, இங்குபேட்டர் போல் பாதுகாத்து கொண்டு வந்திருக்கிறார் தாதி. அவரின் சமயோசிதத்தால் தாயும் குழந்தையும் சுகமாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எவ்வளவு பெருசா தேடி தேடி வீடு மாறினாலும், ரெண்டு நாளிலேயே முட்டி இடிபட்டு இன்னும் இன்னும்னு ஏங்கறதா இருக்கு. ங்கொய்யால மண்டைக்குள்ள இடமிருந்தா போரும்னு 330 சதுர அடியில என்னல்லாம் பண்ணி வச்சிருக்கு பயபுள்ள
38 comments:
Good Morning Sir. Suriya Udayam.
2nd is real fun. நல்லா கணக்கு வச்சிரிருக்கிறார் மாப்பு. கடைசியில் எல்லோரும் வச்சாங்க ஆப்பு.
பாலாண்ணன் எப்ப இடுகை இடுவாருன்னு சுவாமிநாதன் காத்திட்டு இருப்பார் போல?!
//
Sethu said...
Good Morning Sir. Suriya Udayam
//
...க்கும்... நாய்கூட நெம்ப நல்லாத் தூங்குற நேரம் இது... காலையில மூணு மணி....
"...க்கும்... நாய்கூட நெம்ப நல்லாத் தூங்குற நேரம் இது... காலையில மூணு மணி....
"
Yes. நமக்கு வேண்டிய சுதந்திரமே நல்ல தூக்கம் தான். ஐயாக்கு கம்ப்யூட்டர் மேல ஒரு அலாதிப் ப்ரியம் போல. அதை கட்டிகினே தூங்குவார் போல.
சூரிய உதயம் ஆவதற்குள் ஆயிரேதெட்டு வேலையை முடிச்சிடலாம்னு சூரியனோடு போட்டி போடறார் போல.
கவிதை அருமை.
கலந்துகட்டி அடிச்சிருக்கிங்க. கலக்கல்.
அந்த நகை மேட்டர் ரொம்ப சூப்பர்ண்ணா.
//மண்டைக்குள்ள இடமிருந்தா போரும்னு 330 சதுர அடியில என்னல்லாம் பண்ணி வச்சிருக்கு பயபுள்ள//
:-))) சூப்பர்
வீடியோ அருமை...ஆச்சரியம்....
உண்மையிலேயே மொய் எழுதுற பழக்கம் அப்படித்தான் வந்திருக்குமோ? அந்த நேரத்துல சிரமப்படற கலியாணப் பெண்னோட அப்பனுக்கு உதவி செஞ்சா மாதிரியும் இருக்கும்.......நம்ம கஷ்ட காலத்துல நமக்கு உதவி திரும்பி வந்தா மாதிரியும் இருக்கும்........நம்ம முன்னோர்கள் ஆரம்பித்த ஒவ்வொரு வழக்கத்தின் பின்னனியிலும் பல நன்மைகள் இருக்கிறது எனப்து மறுக்க முடியாத உண்மை......
வீடியோ சூப்பர் சார்!
//கருப்பனாய்ப் போனவன்
கறியாய் மாறிப் போனான்.//
எல்லாமே சூப்பர் சார்
வசூல் மன்னன் மேட்டர், கிச்சு...கிச்சு.
அன்பின் பாலா
கறியாய்ப் போன கருப்பன் - கத்திக்கு முன்பும் பின்பும் - நிலைமை நன்கு விவரிக்கப்பட்டு உள்ளது
மொய் எழுதுவதில் இவ்வளவு கறாரா ..... ம்ம்ம்ம்
லண்டன் தாதியின் சம யோசித புத்தி வாழ்க
கடைசிலெ வீடு சூப்பர்
நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா
அருமை :)
அண்ணே
இந்த பின்னூட்ட மோய்-ய கண்டுபிடிச்சவர் அவர்தானோ
"க"ருப்பு
"க"வித
"க"லக்கல்ண்ணே!
"க"ண்ணக் கட்டுது,
"க"ருத்து இருக்குது..
வீடுண்ணா இப்டி இருக்கனும்..ஹூம்...
கலக்கல் பதிவு சார்..அதிலும் அந்த வீடியோ பகிர்வு சூப்பர்..
That home in HongKong is amazing!! wow!
very interesting... thanks for sharing sir...
that hk guy is too good.... am too lazy to even make mah bed.. alas.. apparently.. dis idea wudn't work for me... :(((
நல்ல கவிதை ஆனால் ஏதாவது வேண்டுதலோ க வரிசையில் கவிதை எழுத.
நகை கதை நல்லாயிருக்குங்க
வீடு ஏதோ மேஜிக் ஷோ பார்த்த மாதிரி இருக்கு!!!
உண்மையிலியே ஆட்டைக் காப்பானேன். பிறகு பலி கொடுப்பானேன். ஐரனிதான்.பாவம் கருப்பன்.
நல்ல யோசனைத்தான் செய்திருக்காரு மொய் எழுதினவர். முதல் போட்டு வட்டியோடு தங்கம் எடுத்திட்டாரே. மானமுள்ள ஊர்க்காரங்களையும் மெச்சணும். நல்லா இருந்தது அந்த யூ டியூப் வீடு. நன்றி பாலா.
கலக்கல்.
கவிதை, மொய் மேட்டர் சூப்பர்... நம்ம மேல காண்டா எத்தனப்பேரு இருக்காங்களோ தெரியல...
600 கிராமா? ரொம்ப கஷ்டங்க...இருந்தாலும் அந்த அந்த தாய பாராட்டணும்..
கடைசி வீடியோ பாக்க நல்லாதானிருக்கு...
நல்ல கதை
அவரின் சமயோசிதத்தால் தாயும் குழந்தையும் சுகமாம்.
அவருக்கு நமது பாராட்டுகளும்
அருமையான வீடு. சதுர அடி விக்கிற விலைக்கு இந்த மாதிரி வீடுதான் சென்னைக்கு ஏத்தது.
@@சேது
@@பழமை
காலையில 3 மணிக்கு (இங்க) கும்மியா:))
@@நன்றி அக்பர்
@@நன்றி கிரி
@@நன்றி ஆரூரன்
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி பாலாஜி சரவணன்
@@நன்றி அன்பரசன்
@@நன்றி சைவ கொத்து பரோட்டா
@@நன்றிங்க சீனா
@@நன்றி சுபாங்கன்
@@நன்றிங்ணோ. அப்புடித்தான் தெரியுது:))
@@நன்றி நிஜாம்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றிங்க சித்ரா
கலகலப்ரியா said...
//very interesting... thanks for sharing sir... //
yw yw
//that hk guy is too good.... am too lazy to even make mah bed.. //
Nambeettam=))
//alas.. apparently.. dis idea wudn't work for me... :(((//
mkum. i know. it wont suit your creative skills:)). i mean aesthetic feel
@@நன்றிங்க சக்தி
@@நன்றி வல்லிசிம்ஹன்
@@நன்றிங்க டி.வி.ஆர்.சார்
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க உழவன்
@@நன்றிங்க ரிஷபன்
@@நன்றி பின்னோக்கி
கலக்கல் கவிதை & கண்ணைக் கவர்ந்த கட்டிடப்படம்
மனதை கணக்கா வைத்த கவிதை.
எனக்குத் தெரிந்த பட்டுக் கோட்டை நண்பரொருவர் திருமணப் பத்திரிகையில் இதே மாதிரி எல்லா நண்பர்கள் வீடுகளுக்கும் நான் இரண்டு முறைக்கும் மேலாக மொய் எழுதி உள்ளேன் என்பது குறிப்பிடத் தக்கது என்று அச்சிட்டிருந்ததை என் நண்பர் காட்டியுள்ளார்...!
நன்றாக எழுதுகிறீர்கள். எனது வாழ்த்துக்கள்...
வாழ்க்கைக்கு புது விளக்கம் கொடுக்குது ஐயா, உங்க கவிதை
மொழி எழுதின மேட்டரு சூப்பரு!
அந்த வீடு டக்கரு! ஐயா நல்லா தேடி கண்டுபிடிச்சி கொடுத்திருக்கீங்க!
அப்புறம் நீங்க கொடுத்த ஐடியா படியே தமிழ்மண ஓட்டு பட்டையை கீழே கொண்டு வந்து வைச்சபின்னாடி நல்லா வேலை செய்யுது.
உங்களுக்கு ஐன்ஸ்டின் மூலை போங்க!
நான் இயற்கை மருத்துவ சிறப்புகளை பற்றி, எழுதி கொண்டிருக்கேனுங்க ஐயா! நீங்க கண்டிப்பா நம்ப வலைபக்கம் வரணும்னு கேட்டுகொள்கிறேன்.
http://uravukaaran.blogspot.com
கவிதை நல்லாயிருக்கு.
மற்ற பகிர்வுகளும் அருமை
Post a Comment