Wednesday, September 22, 2010

பட்ட காலிலே....


ஒரு கைப்புள்ள சிங்கு கிட்ட சிக்கி சின்னாபின்னமானா உங்களுக்கெல்லாம் அவ்ளோ சிரிப்பா போச்சில்ல. ஒரு பின்னூட்டம் கூட த்சோ த்சோன்னு வரலை. பதான்கோட் போய்ச் சேர்ந்தாச்சு. தொல்லை விட்டதுன்னு நினைச்சா அதான் இல்லை. காலையில 6 மணிக்கே பத்து மணி மாதிரி வெயில் சுள்ளுன்னு அடிச்சிட்டிருந்தது. சூட்கேஸ் உள்ள பட்சணங்கள், வடாம், அப்பளம் இத்தியாதி, ஒரு ப்ளாஸ்டிக் பெரிய கூடை நிறைய ஆவக்காய், மாகாளிக்கிழங்கு வகையறாக்கள் சுமக்க முடியாம சுமந்து வர, டிக்கட் செக்கர் டிக்கட்னு கேட்டா நியாயம். அப்படிக் கேட்டாலுமே ஸ்டாஃப்னு சொல்லிட்டு போறது ஒரு கெத்து. ஆர்மிக்காரன் மெஷின்கன்னை நெஞ்சுக்கு நேர நீட்டி டிக்கட்னா எப்படி இருக்கும்?

ஸ்ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்டாஃப் ஸ்டாஃப்னு சொன்னா இன்னும் கடுமையா டிக்கட்னு ஒரு இஞ்ச் இன்னும் கிட்ட வருது துப்பாக்கி குழல். நின்ன நிலையில சூட்கேச கீழ விடலாம், கூடையை விட்டா ஊறுகா பாட்டில் போயிடுமே. அந்த சத்தத்துல அவன் ஏதோ குண்டுன்னு என்னை சுட்டுத் தொலைச்சான்னா என்ன பண்ண? பார்த்த ஜேம்ஸ்பாண்ட் படமெல்லாம் கவனம் வர, அவன் மூஞ்சிய பார்த்தபடியே வெயிட் வெயிட்னு கீழ பொம்மை மாதிரி வெச்சி, துழாவி டிக்கட்டையும் பாசையும் நீட்டினா, பயமுறுத்தினதுக்காவது வாங்கிப் பார்ப்போம்னு ஒரு மரியாதை வேணாம். என்னமோ நான் அவர் கிட்ட யாசகம் கேட்ட மாதிரி அது டிக்கட்தானான்னு கூட பாராம ‘சலோ சலோ’ன்னு வேற விரட்டினா மனுசனுக்கு கோவம் வருமா வராதா?

ஹே! நாம அடக்கிக்காத கோவமா? நீ சிங்கா இருக்கலாம். நான் சிங்கம்டான்னு சிரிச்சிக்கிட்டே தாங்க்ஸ்னு அத்தனை கோவத்தையும் கைக்கு க்ராஃபிக்ஸ் எஃபக்ட்ல மாத்தி, சூட்கேசையும் கூடையையும் எடுத்த வேகத்துல மிரண்டு போய், துப்பாக்கியை தொடையோட ஒட்டிப் பிடிச்சி, சுதந்திர தின விழால நிக்கிறா மாதிரி நின்னான்ல. கலவர பூமியாச்சே, கைப்புள்ளயை கவனமா கூட்டிப்போவோம்னு ஒரு பொறுப்பு வேணாம். கூடவந்தவனைக் காணோமேன்னு கூட பாராம 200 மீட்டர் போய் வேடிக்கை பார்க்கிறதாவது.

ங்கதான், பக்கத்துலதான், இதோ வந்தாச்சுன்னு சொல்லிச் சொல்லியே அரை மணி நடந்து ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தாச்சு. கடமை முக்கியம் இல்லையா? இந்தக் கலவரபூமிக்கு ஒரு குறிக்கோளோட இல்லையா வந்திருக்கோம்னு காஃபி கூட அப்புறம்னு காது மாட்டலை வாங்கி, பய புள்ளை காதுல, பால்பாயிண்ட் பேனாவால செண்டர் பார்த்து மார்க் பண்ணியாச்சு. சூட்கேசைத் திறந்து, யாஷிகா காமரா எடுத்து, அக்காவுக்கு ட்ரெயினிங் கொடுத்து ஃபோட்டோ எடுக்க தயார் பண்ணியாச்சு. மருமானை மடியில் இழுத்து வச்சி போக்கு காட்டி, ரெண்டுகாதும் குத்தி முடிச்சப்ப பய புள்ள சிணுங்க கூட இல்லை. தொழில் சுத்தம் அப்படி.

ஆனா நீட்டிட்டிருக்கிற கம்பியை மடக்க, கையோடு கொண்டு போயிருந்த முள்ளிடுக்கியை வச்சி அதை மடக்குறப்போ கத்து கத்துனு கத்துது பயபுள்ள. அப்போ தெரியல அது சாபம் விட்டிருக்கிறது. கண்ணாடி முன்னாடி போய் காட்டி, கொஞ்சி அழுகையை நிறுத்தி, காஃபி சாப்பிட்ட பிறகு, கடமையைச் செவ்வனே முடிச்ச திருப்தியில், முந்தின நாள் தொலைச்ச தூக்கம், சுழட்டிப் போட்டது. விழித்தபோது மணி பத்து தாண்டியிருந்தது. வெளியில் வெய்யிலோ உச்சி வெயில் மாதிரி பிளந்து கட்டியது. சமைத்துக் கொண்டிருந்த அக்காவிடம், டாய்லட் எங்கேன்னு விசாரிச்சா, கடல் மாதிரி இருந்த மாடியில் ஒரு மூலையில் இருப்பதாகச் சொன்னாள்.

பயபுள்ள சாபம் அங்க இருக்கிறது தெரியவில்லை எனக்கு. விவரணையா சொல்ல முடியாது. காலை 6 மணிக்கே பத்து மணி மாதிரி வெயில் அப்படின்னா, பத்து மணிக்கு மேல் பொளக்கிற வெயில்ல தண்ணீர் எப்படி இருந்திருக்கும். அந்த பிரக்ஞையே இல்லாததால பொரிஞ்சி போச்சு. வடிவேலு மாதிரி வேஷ்டி உரசாம கெந்தி கெந்தி நடந்து வீட்டுக்குள்ள போன அடுத்த நொடி, எங்கிருந்தோ ‘ஹே! லக்ஸ்மீ! கிதர் ஹை தும்’ அப்படின்னு ஒரு அலறல். பதறி அடிச்சி, வெளியே வந்த அக்காளிடம் என்னைக் காட்டிக் கத்துகிறாள். திரும்பி என்னைப் பார்த்து என்னடா பண்ணினாய் என்று கேட்கிறாள் அக்கா. பர்னரில் உட்கார்ந்த டாமுக்கு பின்பக்கம் சிவப்பாக காட்டுவானே அப்படி இருக்குமா என்ற சந்தேகத்துடன் இருந்த எனக்கு இந்த சஸ்பென்ஸ் வேறா? கத்தின கிழவிக்கு எழுவது வயதிருக்கும். கையப் புடிச்சி இழுத்தியான்னு கூட கேட்க முடியாதே, பின்னெதற்கு என்ன பண்ணினாய் என்ற கேள்வி?

எரிச்சலுடன், எழவு டாய்லட் போய்ட்டு வந்தேன். எதுக்கு கத்துறாள் கிழவி என்றேன். அப்புறம்தான் அக்காவுக்கு புரிந்து, மாஃப்கரோ மழை பெய்து, விளக்கம் சொன்னாள். கழிப்பறைக்குப் போய்விட்டு, கை, கால், முகமெல்லாம் சோப் போட்டு கழுவாமல் வீட்டுக்குள்ளே போய்விட்டேனாம். தீட்டு பட்டுடுச்சாம். மாட்டைக் கழுவுறா மாதிரி மனுசனையும் கழுவு, வீட்டையும் கழுவி விடு என்று மல்லுக்கு நிற்கிறாள் கிழவி. ஒரு வழியாய் குளித்து முடித்து, வீடு கழுவி, பயந்து பயந்து உட்கார்ந்து பார்த்தேன். அவ்வளவாக டேமேஜ் இல்லை.

மாலையில் குழந்தையை (என்னைச் சொன்னேன்) பார்க்குக்கு கூட்டிக் கொண்டு போய் விளையாட விட்டு, வரும்போது மார்க்கட் போய் சுற்றிவிட்டு வருவதாக முடிவானது. மருமானுக்கு ரெட்டை ஜடை மடித்து ரிப்பன் போட்டு கட்டி பொட்டும் வைத்தால், பெண் குழந்தை மாதிரியே இருந்தான். கொலைக்குத்தம் பண்ணவன் மாதிரி, பாய்ந்து அவன் சாந்துப் பொட்டை அழித்தாள் அக்கா. பார்க்குக்கு போய் மார்க்கட்டில் போகிற கடையிலெல்லாம், குழந்தையைக் காட்டி கடைக்காரன் ஏதோ சொல்வதும், என்னைக் காட்டி அக்கா ஏதோ சொல்வதும், தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடத்துக்கு அவன் பஞ்சாபியில் கத்துவதும், மன்னிப்பு கேட்கிற தோரணையில் இவள் ஏதோ சொல்வதும், பின்னாடி இருந்த எரிச்சலை இன்னும் அதிகமாக்கியது.

மூன்றாவது கடையில் பொறுக்க முடியாமல் கேட்டேவிட்டேன். சர்தார்ஜிக்கு ஆம்பிளைப் பையனுக்கு ரெட்டை ஜடை போட்டது பரவாயில்லையாம். காது குத்தினது மஹா கேவலமாம். குத்தின என்னைக் கொலைகாரன் ரேஞ்சுக்கு வைது தீர்த்திருக்கிறான்.  நம்ம ஊர் சாஸ்திரம் அது, ரெண்டு நாளில் கழத்தி விடுவோம் என்று மன்னிப்பு கேட்காத குறையாக விளக்கமளித்ததாவது பரவாயில்லை. இந்த ஊரில் யார் காது குத்தியது என்ற கேள்விக்குதான் என்னைக் கைகாட்டியிருக்கிறாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை விடுமுறையாதலால், சற்று தூரத்தில் உள்ள ரவி நதிக்கரையில் இருக்கும் பார்க்குக்கு போவதாய் ஏற்பாடு. அங்கே போய், நதியில் குளித்து, கலர் கலராய் கூழாங்கல் பொறுக்கி எடுத்து, கொண்டு போன சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் நீரில் அளைந்து ஒரு வழியாய் வெயில் தாழ பூந்தோட்டத்தைப் பார்க்கப் போனோம். அப்படி இப்படியென்று 30 ஃபோட்டோ எடுத்தாகிவிட்டது. ஒரு பூச்செடி அருகில், பூங்கொத்து நடுவில், இன்னொரு பூங்கொத்தாக குழந்தையின் முகத்தை, யாஆஆஆஷிகா காமெராவில் பாலுமகேந்திரா ரேஞ்சுக்கு எய்ம் பண்ணிக் கொண்டிருந்தேன்.

அழகாய்ச் சிரிக்கிறான் குழந்தை. இதோ க்ளிக்க வேண்டியதுதான். ஒரு கால் மடித்து ஆஞ்சனேயர் போசில் அமர்ந்திருந்தேன். விசுக்கென்று கையிலிருந்த கேமரா மாயமானது. அமர்ந்திருந்த நான், ஹாங்கரில் மாட்டிய சொக்காய் போல் அந்தரத்தில் மிதக்கிறேன். இடி முழக்கக் குரலில் ஒரு பஞ்சாபி ஆர்மிக்காரன், ஒரு கையில் கேமராவும் ஒரு கையில் என்னையும் பிடித்து தூக்கி என்னமோ கத்துகிறான். அக்கா, திரும்ப மாஃப்கரோஜி நடுவில் என்னமோ சொல்கிறாள். அவன் காட்டும் திசையில் அப்போதுதான் பார்க்கிறேன். போட்டோ எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதை பஞ்சாபியில் எழுதி, கேமரா படம் போட்டு க்ராஸ் பண்ணியிருப்பதை.

அத்திம்பேரும் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ் என்பதால், பாவி மனுஷா சொல்லுய்யா என்றால், அந்தாள் என் வேலை போய்விடும் போய்யா என்று நூறு மீட்டர் பின்னாடி போகிறார். மாஃப்கரோவுக்கு மசியாத மாபாவி, காலரோடு கொத்தாய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறான் என்னை. கால் பாவாமல்,கட்டை விரலால் தெய்ய தெய்யவென்று ஐந்து நிமிடம் நடப்பது கூட பெரிசில்லை. சுற்றிலும் வேடிக்கை பார்ப்பவர்களின் பார்வை தாங்க முடியவில்லை. கேம்ப் ஆஃபிஸில் கொண்டு போய் குப்பையாய்ப் போட்டான் என்னை.

அந்த அதிகாரியிடம், கேமராவைக் கொடுத்து என்னமோ சொன்னான். ’காண்ட்யூ ரீட் த நோட்டீஸ் போர்ட் மேன்? வயர் ஆர் யூ ஃபரம்’ என்று வந்து விழுந்த வார்த்தைகளைக் கேட்டதும், இறுக்கியணைச்சு ஒரு உம்மா தரணும் போலிருந்தது. சட்டையில், மதுசூதனன் நாயர் என்ற பெயர் பார்த்ததும் பொழைச்சேண்டா சாமி என்றிருந்தது. ‘சேட்டா! நங்களு கண்டிட்டில்லா சேட்டா. இன்னு குஞ்சிண்ட பர்த்டேயாணு. அம்மைக்கு காணான் வேண்டி கொறச்சு ஃபோட்டோ எடுத்தது. இவனும் ரயில்வேயில் ஒரு சூப்பிரண்டண்டாணு. மாப்பு சேட்டா. காமரா கொடுத்தேய்க்கு’ என்று சரளமாக அடித்துவிட, தொலைந்து போ என்று கேமராவைக் கொடுத்தான். ’காண்ட்யூ அண்டர்ஸ்ஸ்ஸ்டாண்ட் வீ ஆர் நியர் பாக்கிஸ்தான் பார்டர் அண்ட் இட் ஈஸ் ட்ரபுள்டு டைம்? காண்ட்யூ ரீட் இங்லீஷ்? சேச்சியினு பின்ன குட்டியிட பர்த் டேன்னாணு விடுன்னது. பொக்கோ’ என்று விரட்டினான்.

மனுசனுக்கு கட்டம் சரியில்லைன்னா அவமானம் நேரலாம். அதிலும் ஒரு தீவிரவாதியாக இந்த மூஞ்சையும் நினைச்சது கூட பிழையில்லை. ஆனால் நானூறு ரூபாய்க்கு பர்மா பஜாரில் வாங்கின யாஷிக்கா எய்ம் அண்ட் ஷூட் கேமராவில், அதுவும் பகல் பன்னிரண்டு மணிக்கே கொஞ்சம் இருட்டாகத் தெரியும் ப்ளாஸ்டிக் லென்ஸ் பவரில் ஒரு ஆர்மி போஸ்டை படம் எடுத்த உளவுக்காரன் என்பது எவ்வளவு பெரிய அவமானம்? ஒரு வழியாக கேமரைவையும் என்னையும் மீட்டெடுத்து குழந்தையுடன் சற்று தூரம் சென்ற பிறகு, ‘பலே! விட்டுட்டானா? கேமராவையும் புடுங்கலையா? ஆச்சரியமான்னா இருக்கு’ என்று வந்து சேர்ந்து கொண்ட அத்திம்பேர் மட்டும் அத்திம்பேராக இல்லாவிட்டால்.......  

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

58 comments:

DrPKandaswamyPhD said...

காதெல்லாம்கூட குத்துவீங்களா நீங்க? என் பேரனுக்கு (13 வயசு) காது குத்தோணும். சௌகரியப்படுமுங்களா? ஊட்டுக்கு எப்ப ஆட்டோ அனுப்போணும்னு சீக்கிரமா சொல்லீடுங்க. ஆட்டோவுக்கு நெறய வேல இருக்குதுங்க.

sriram said...

பாலாண்ணா..
அங்கேருந்து கொஞ்ச தொலைவில இருக்கும் டல்ஹவுஸி போனீங்களா?? அருமையான இடம்.

அப்புறம், கேரக்டர் - அத்திம்பேர் எழுதுங்க பாலாண்ணா, சூப்பரா இருக்கும்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

இராமசாமி கண்ணண் said...

இதுக்கு நான் ஹா ஹா நு பின்னூட்டம் போட முடியாத மாதிரி பண்ணிட்டீங்களே சார்.. சரியான அனுபவம்லாம் உங்களுக்கு கிடைச்சிருக்கு சார்.

Chitra said...

மனுசனுக்கு கட்டம் சரியில்லைன்னா அவமானம் நேரலாம். அதிலும் ஒரு தீவிரவாதியாக இந்த மூஞ்சையும் நினைச்சது கூட பிழையில்லை. ஆனால் நானூறு ரூபாய்க்கு பர்மா பஜாரில் வாங்கின யாஷிக்கா எய்ம் அண்ட் ஷூட் கேமராவில், அதுவும் பகல் பன்னிரண்டு மணிக்கே கொஞ்சம் இருட்டாகத் தெரியும் ப்ளாஸ்டிக் லென்ஸ் பவரில் ஒரு ஆர்மி போஸ்டை படம் எடுத்த உளவுக்காரன் என்பது எவ்வளவு பெரிய அவமானம்? ஒரு வழியாக கேமரைவையும் என்னையும் மீட்டெடுத்து குழந்தையுடன் சற்று தூரம் சென்ற பிறகு, ‘பலே! விட்டுட்டானா? கேமராவையும் புடுங்கலையா? ஆச்சரியமான்னா இருக்கு’ என்று வந்து சேர்ந்து கொண்ட அத்திம்பேர் மட்டும் அத்திம்பேராக இல்லாவிட்டால்.......


........த்சோ.....த்சோ...... த்சோ.....த்சோ....... (த்சோ.... சொல்லிட்டேன்..... இப்போ சிரிக்கலாமா? ப்ளீஸ்...... நன்றி...... ) ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...........

LK said...

//பலே! விட்டுட்டானா? கேமராவையும் புடுங்கலையா? ஆச்சரியமான்னா இருக்கு’ என்று வந்து சேர்ந்து கொண்ட அத்திம்பேர் மட்டும் அத்திம்பேராக இல்லாவிட்டால்....... //

அதுதான் அத்திம்பேர்

LK said...

/காதெல்லாம்கூட குத்துவீங்களா நீங்க?///

இப்படி தெரிஞ்சிருந்தா என் பொண்ணுக்கு காது குத்தின சமயம் உங்களையே கூப்டு இருப்பேனே

Sethu said...

ஏன் சார் அத்திம்பேருக்கு ஆப்பு வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டிங்களா. பாவம் சார். நல்ல மனுசரா இன்னும் பின்னூட்டம் விடாம இருக்காரு.

"காதெல்லாம்கூட குத்துவீங்களா நீங்க? "
என்ன சார் நீங்க. இத்தனை நேரம் என்ன பண்றார்.

ஸ்ரீராம். said...

மனசு விட்டு சிரிக்க முடியுது. சம்பவம் நடக்கும்போது கூட இருந்திருந்தால் த்சோ த்சோ சொல்லியிருக்கலாம்.!! இப்போ இப்படி ரசிக்கறா மாதிரி எழுதி விட்டு சிரிக்கக் கூடாதுன்னா எப்படி?!!

அகல்விளக்கு said...

//மனுசனுக்கு கட்டம் சரியில்லைன்னா அவமானம் நேரலாம். அதிலும் ஒரு தீவிரவாதியாக இந்த மூஞ்சையும் நினைச்சது கூட பிழையில்லை. ஆனால் நானூறு ரூபாய்க்கு பர்மா பஜாரில் வாங்கின யாஷிக்கா எய்ம் அண்ட் ஷூட் கேமராவில், அதுவும் பகல் பன்னிரண்டு மணிக்கே கொஞ்சம் இருட்டாகத் தெரியும் ப்ளாஸ்டிக் லென்ஸ் பவரில் ஒரு ஆர்மி போஸ்டை படம் எடுத்த உளவுக்காரன் என்பது எவ்வளவு பெரிய அவமானம்?///

முடியலலைங்கண்ணா...

அப்போ கூட இருந்திருந்தா அனுதாபப் பட்டிருக்கலாம்...

இப்ப சிரிக்காம இருக்க முடியல...

:-)

முகிலன் said...

பாவம் சார் நீங்க. தாய்மாமன்ங்கிற உறவுக்காக எவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டிருக்கீங்க..

உங்களை நினைச்சா பாவமா இருக்கு.

இந்த இடுகையப் படிச்சிட்டு இன்னும் அழுதுக்கிட்டு இருக்கேன் இதுவரைக்கும் ரெண்டு துண்டு, ஒரு போர்வை பதினேழு கர்ச்சீஃப் ஈரமாயிடுச்சி..

ஈரோடு கதிர் said...

ஆமா... என்னவோ பட்ட காலிலேனு சொல்லியிருக்கீங்க

கால்ல எதும் அடிபட்ட மாதிரியே தெரியலையே!!!

இஃகிஃகி

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அத்திம்பேருக்கு தர பில்டப்ப நெனெச்சா..!!

:)

*இயற்கை ராஜி* said...

உங்க அத்திம்பேர பிளாக் ஆரம்பிக்க சொல்லுங்க சார்.. அப்போ தெரியும்.. அவங்கள நீங்க படுத்தின பாடு......
:-))

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

சார் ஒரு சந்தேகம்....உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்? எல்லா மொழியையும் பொளந்து கட்டுவீங்க போல இருக்கு.......அருமை சார்.மெய்மறந்து சிரிக்க வைச்சுட்டீங்க....துன்பம் வரும் போது சிரிக்கோணும்னு வள்ளுவரே சொல்லியிருக்காருங்களே.....அதேன்....

கே.ஆர்.பி.செந்தில் said...

நிறைய இடங்களில் சிரிக்க வைத்துவிடீர்கள் ஐயா ...

சே.குமார் said...

//நிறைய இடங்களில் சிரிக்க வைத்துவிடீர்கள் ஐயா //

repeat senthil...

ha... ha... ha...

பிரபாகர் said...

நீங்க பல்பு வாங்கி பட்ட கஷ்டத்தையெல்லாம் இப்படி வெள்ளந்தியா சொல்லி எங்கள குமுற குமுற சிரிக்கவெக்கிறீங்களே.. நீர் நீடூடி வாழ்க...

ஆபிஸில் ஒவ்வொரு பத்தியா படிச்சிட்டு வெளியே போய் சிரிச்சிட்டு வந்து ஒரு வழியா இப்போதான் படிச்சி முடிச்சேன். உங்க சேட்டை தாங்கல சாமி... கலக்கல்...

பிரபாகர்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

:(((((
இது உங்க அனுபவத்துக்கு,

:))))))))))
இது உங்க பதிவுக்கு!

எப்புடீ?

Sethu said...

ஆஹா! புரிஞ்சிடுச்சு இப்ப. .... அடுத்த எபிசோடு 'கேரக்டர் அத்திம்பேர்'.
இப்பயே தயார் பண்றார். அத்திம்பேர் ஜாக்கிரதை.

அரசூரான் said...

காதை பிடிச்சி தூக்கினோன...ஆஆஆ-ன்னு யா-ஆஆஆ-சிகாவா கால்ல போட்டுகிட்டீங்களோன்னு நினச்ச்சேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்..... கிரேசி மோகன் டிராமா-ல ஒரு சீன் மாதிரி இருக்குது.

சூப்பர்........

Mahi_Granny said...

எப்போவோ பட்ட கஷ்டத்துக்கு இப்போ எல்லோரும் த்சோ , த்சோ சொல்லவில்லை என்று வருத்தமாக்கும். நீங்களும் சேர்ந்து சிரிச்சிட்டு போகாம. . இவ்வளவு பேர் ரசனையாய் வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே.

அன்னு said...

//பலே! விட்டுட்டானா? கேமராவையும் புடுங்கலையா? ஆச்சரியமான்னா இருக்கு’ என்று வந்து சேர்ந்து கொண்ட அத்திம்பேர் மட்டும் அத்திம்பேராக இல்லாவிட்டால்....... //

ஆஹா....வலைப்பூ தொடங்கியதும் இந்த போஸ்ட்டெல்லாம் போடறதும் கடசில இந்த பிடி பிடிக்கத்தானா....ஜமாய்ங்க சார். நான் சொல்ல மாட்டேன் யார்ட்டயும்!!

கலகலப்ரியா said...

||அப்புறம், கேரக்டர் - அத்திம்பேர் எழுதுங்க பாலாண்ணா, சூப்பரா இருக்கும்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்||

நானும் இதுதான் சொல்லிக் கொண்டிருந்தேன்...

எழுதுங்க சார்..

வானம்பாடிகள் said...

@DrPKandaswamyPhD

:)). ஆஹா. என்னுங் சார் ஆட்டோன்னெல்லாம் பயமுறுத்துறீங்க.

வானம்பாடிகள் said...

@sriram

ம்ம். வருவார் வருவார்.

வானம்பாடிகள் said...

@T.V.ராதாகிருஷ்ணன்
:))

வானம்பாடிகள் said...

@இராமசாமி கண்ணண்

:)). அதுக்கென்ன போடுங்க சார்.

வானம்பாடிகள் said...

@Chitra
நன்றிங்க சித்ரா:))

வானம்பாடிகள் said...

@LK

=)).ஆமாம். நன்றி எல்.கே.

வானம்பாடிகள் said...

@ஸ்ரீராம்.

நன்றி ஸ்ரீராம்.

வானம்பாடிகள் said...

@Sethu

அவரு வைக்காதா ஆப்பா.:))வெயிட்டீஸ்

வானம்பாடிகள் said...

@அகல்விளக்கு

நன்றி ராசா:))

வானம்பாடிகள் said...

@முகிலன்

=)). காஞ்சதா இல்லையா?

வானம்பாடிகள் said...

@ஈரோடு கதிர்

கதிர்:))..அவ்வ்வ்.

வானம்பாடிகள் said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நினைச்சா?:))

வானம்பாடிகள் said...

@*இயற்கை ராஜி*

சொ.கா.சூக்கு நான் தயாரில்லீங்கோ:))

வானம்பாடிகள் said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

எல்லாம் அரைகுறைங்க.நன்றிங்க.

வானம்பாடிகள் said...

@கே.ஆர்.பி.செந்தில்

நன்றி செந்தில்

வானம்பாடிகள் said...

@சே.குமா
ர்

நன்றி குமார்

வானம்பாடிகள் said...

@பிரபாகர்

நன்றி பிரபா

வானம்பாடிகள் said...

@பெயர்
சொல்ல விருப்பமில்லை


நன்றிங்க பெ.சொ.வி:))

வானம்பாடிகள் said...

@அரசூரான்

:))நன்றிங்க அரசூரான்

வானம்பாடிகள் said...

@ஆரூரன்
விசுவநாதன்


நன்றி ஆரூரன்

வானம்பாடிகள் said...

@Mahi_Granny

நன்றிங்க மஹி_கிரான்னி

வானம்பாடிகள் said...

@அன்னு

ஆஹா. இது எனக்கே தெரியாம போச்சே

வானம்பாடிகள் said...

@கலகலப்ரியா

இரு எழுதிட்டு உன்ன போட்டு குடுக்கறேன். அந்த மனுஷன்கிட்ட.:))

Sethu said...

அத்திம்பேர்,

நீங்க போட்ட மக்கி கி ரொட்டியை கடிக்க முடியாம 30 வருஷமா உங்க மச்சான் கருவிகிட்டு இருக்கார். கொஞ்சம் வெண்ணையை தடவி கொடுத்திருக்கலாம். பாருங்க. சீக்கிரம் ஒரு கூடை அல்போன்சா மாம்பழத்தை கொடுத்து கொஞ்சம் மடக்கப் பாருங்க. உங்கள என்ன செய்வாரோ தெரியலையே.

வானம்பாடிகள் said...

@Sethu

40.grrrrrrrr:))))

Sethu said...

"40.grrrrrrrr:))))"

அப்ப. ரொம்ப வருசப் பகை. அத்திம்பேர் எப்பிடி உங்கள காப்பாத்திக்கப் போறீங்க.

நேசமித்ரன் said...

அசை போடும் நினைவுகள்
இமை பனிக்க சிரிப்பைத்தந்தது சார்

தியாவின் பேனா said...

சூப்பர் தல

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

யார் பேச்சையாவது கேட்டுக்கிட்டு அத்திம்பேரை பற்றி blog ல் எழுதிடாதீம்!
எழுதினீர்னா..அக்காவும், அந்த மருமானும் படுத்தற பாட்டில, அந்த சர்தாஜியே தேவலைன்னு ஆயிடப் போறது! உம்ம கணக்குப்படி பார்த்தா,
மருமானுக்கும் 24 வயசாகப் போறது..ஜாக்கிரதை..அவ்வள்வு தான் சொல்வேன்...

அன்பு மிரட்டலுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

யார் பேச்சையாவது கேட்டுக்கிட்டு அத்திம்பேரை பற்றி blog ல் எழுதிடாதீம்!
எழுதினீர்னா..அக்காவும், அந்த மருமானும் படுத்தற பாட்டில, அந்த சர்தாஜியே தேவலைன்னு ஆயிடப் போறது! உம்ம கணக்குப்படி பார்த்தா,
மருமானுக்கும் 24 வயசாகப் போறது..ஜாக்கிரதை..அவ்வள்வு தான் சொல்வேன்...

அன்பு மிரட்டலுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

வானம்பாடிகள் said...

@@நன்றி நேசமித்திரன்
@@நன்றி தியா
@@நன்றி ஆர் ஆர் ஆர்:))

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

எதுக்கு ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொல்றேன்னா..மனசுல நல்லா பதியட்டும்தாங்ணா..

(delete பணண தெரியலை..எப்படி நம்ம சமாளிப்பு?)

பத்மா said...

hahaha .good one
enjoyed