Wednesday, April 7, 2010

பச்சை நிறமே! பச்சை நிறமே!

முதன் முதலாக பெரம்பூர் மேம்பாலத்தை கட்டி முடித்திருப்பதன் மூலம் சாதனை நிகழ்த்திய சென்னை மாநகராட்சி இன்னொரு வறவேற்கத்தக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இன்றைய தேதியில் சென்னை மற்றும் வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் மிக அத்தியாவசியமான நடவடிக்கை இது. விரைவில் இதர நகராட்சிகளும் பின்பற்றவேண்டிய முன் உதாரணமாக இது அமைய வேண்டும். மாநகராட்சிக் கமிஷனர் நடத்திக்காட்டுவார் என்ற நம்பிக்கையிருக்கிறது.

ஆம்! சென்னையில் இனிமேல் மரங்களை வெட்டுவது தடை செய்யப் பட்டிருக்கிறது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வெட்டவேண்டுமாயின், முன் அனுமதி பெறவேண்டும். அப்போதும் கூட 25 மரக் கன்றுகளை நட்டாக வேண்டும். ஆண்டுக்கு 10000 மரங்களை நட ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்த முழு செய்தி இங்கே:



வரவேற்கப் படவேண்டிய இத்திட்டத்தில் மக்களாக பங்கேற்க ஊக்குவிப்பதும், குறைந்தபட்சம் இந்த விஷயத்திலாவது ரெகம்மண்டேஷன், லஞ்சத்துக்கு வழி வகுக்காமலும் பார்த்துக் கொண்டாக வேண்டும். எத்தனை காசிருந்தாலும், நல்ல காற்றும் தண்ணீரும் வாங்கி மாளாது. ஆயின் மாநகராட்சி மட்டுமே இதில் பங்கு கொள்வது சாத்தியமில்லை. மக்களும், அதனுடன் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் பங்குபற்றியாக வேண்டிய ஓர் நடவடிக்கையாகும் இது.

  • இனிமேல் வரைபடத்துக்கு ஒப்புதலுக்கு வரும்போது சுற்றுப்புறம் விட வேண்டிய அடிப்படை காலி மனைகளில் குறிப்பிட்ட அளவு வெறும் மண் இருக்குமாறு அமைந்திடல் வேண்டும்.
  • மழைநீர் சேகரிப்புக்கு வழி செய்திருப்பதுடன் இந்த மண்ணில் வீடுகளின் அமைப்புக்கேற்ப மரங்கள் நட்டிருக்க வேண்டும்.
  • பெரிய தொகுப்பு வீடுகள், அடுக்குமாடி வீடுகள் அமைக்கப் படும்போது அதிக அளவில் மரங்களுக்கு வழி செய்திருக்க வேண்டும்.
  • குடியிருப்பு சங்கங்களைப் பதியும் போது குறைந்த பட்ச மரங்கள் அதன் பராமரிப்பு குறித்த விதிகள் வகுக்கப் பட்டிருக்க வேண்டும்.
  • தனி வீடுகளில் மரவளர்ப்பும், பராமரிப்பும் கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.
  • மாநகராட்சியில் இது குறித்த ஆலோசனை மற்றும் உதவிக்கு ஒரு தனி அலுவலகம் செயல் படுதல் வேண்டும்.
  • இலவச டிவி கொடுப்பதை விட இப்படி மரம் வளர்ப்பவர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரியில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி கொடுப்பது கட்டாயம் பலனளிக்கும்.
  • இப்போது இருக்கும் கட்டிடங்கள், பொது அமைப்புகள், கலியாண மண்டபங்களில், கான்கிரீட்டால் மூடப்பட்ட பகுதிகளை ஓரங்களில் நீக்கி, மரக்கன்று நடுவதும், மழைநீர் சேகரிக்கவும், கார்ப்பரேஷனே மேற் கொள்ளவேண்டும். இதற்கான நோட்டீஸ் கொடுத்தபின் இதற்கான செலவை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தத் தவறினால் மேல் முறையீடின்றி ஜப்தி செய்ய ஏதுவாக சட்டம் கொண்டு வரப்பட்டேயாக வேண்டும்.
  • அழகுக்காக கல்பனை, கல்வாழை, கத்தாழை போல் நிலத்தடி நீர் உறிஞ்சும் மரங்களை தடை செய்ய வேண்டும். அல்லது அதற்குச் சரியான விகிதத்தில் தூங்குமூஞ்சி, வேம்பு, அசோக மரங்கள் நடப்பட வேண்டும்.
  • மாநகராட்சி வார்டுகளில் வார்டு வாரியாக சிறப்பாக செயல் படுத்தும் கவுன்சிலர்களுக்கு அரசின் பாராட்டும் அந்த வார்டுக்கு சான்றிதழ் வழங்குதல், தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வார்டுகளுக்கு மாநகராட்சியின் சிறப்பு உதவி போன்றவை செயல்படுத்தப் படவேண்டும்.
  • இதற்கான நடவடிக்கையோ நாட்டமோ இல்லாத கவுன்சிலர்கள் கட்சி வேறுபாடின்றி பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
  • சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியில் குறைந்தபட்ச பிடித்தம் செய்யப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த தொகுதியில் மரவளர்ப்புக்கு இந்த நிதி செலவிடப்படுதல் வேண்டும்.
  • சாலையோரங்களில் மரம் வளர்த்துப் பாதுகாக்க முன்வரும் பெரிய நிறுவனங்களுக்கு நடைபாதை விளம்பரம் அழகாக அமைத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.

எந்த எதிர்ப்புக்கும் ஈடு கொடுத்து கமிஷனர் அவர்களும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. செய்தாக வேண்டும்.

63 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மீ த 1st.. ஹா..ஹா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இருங்க இப்ப, பதிவ படிச்சுட்டு வாரேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதை மட்டும், கண்டிப்பா பின்பற்றினால்,
அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்த சான்ஸ் இருக்குனு நினைக்கிறேன் சார்..

நல்லடே நடக்கும் என நம்புவோம்.

Unknown said...

நல்லது நடந்தா செரிங்..

பத்மா said...

ரொம்ப நல்ல விஷயம் .செடி மரம் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய செய்தி .இன்னும் பத்து வருடத்தில் பசுமை சென்னை தான்

பழமைபேசி said...

நல்ல சிந்தனை, பாராட்டுகள்!

ஈரோடு கதிர் said...

//25 மரக் கன்றுகளை நட்டாக வேண்டும். ஆண்டுக்கு 10000 மரங்களை நட ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.//

ராயல் சல்யூட்..

இது தொடர்ந்து நடக்க வேண்டுமே!!!

Paleo God said...

கண்ணைமூடிக்கொண்டு ஆதரவு.:)

கிரி said...

சார் கேட்கவே சந்தோசமா இருக்கு! இதை அவர்கள் பின்பற்றினால் அதை விட சந்தோசம் :-)

Chitra said...

எத்தனை காசிருந்தாலும், நல்ல காற்றும் தண்ணீரும் வாங்கி மாளாது. ஆயின் மாநகராட்சி மட்டுமே இதில் பங்கு கொள்வது சாத்தியமில்லை. மக்களும், அதனுடன் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் பங்குபற்றியாக வேண்டிய ஓர் நடவடிக்கையாகும் இது.

........ஒவ்வொரு ஆலோசனையும் அருமை. நடைமுறைப்படுத்த யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்க வேண்டுமோ? :-(

இராகவன் நைஜிரியா said...

நாம் அனைவரும் இதைக் கடைபிடிக்க வேண்டுமண்ணே... கடைபிடித்தால் நாடு வாழும் அண்ணே... வருங்கால சமுதாயத்திற்கு நல்லது.

க ரா said...

ரொம்ப நல்ல விடயம்.

எறும்பு said...

//முதன் முதலாக பெரம்பூர் மேம்பாலத்தை கட்டி முடித்திருப்பதன் மூலம் சாதனை நிகழ்த்திய சென்னை மாநகராட்சி//

இந்த பாலம் கட்டினதாலதான் நீங்க அது வழியா பதிவர் சந்திப்புக்கு வந்தீங்க. அதாவது சென்னைல இருந்துகிட்டே நீங்க பதிவர் சந்திப்புக்கு வரணும்னா பாலம் கட்ட வேண்டி இருக்கு
:)

எறும்பு said...

இவங்க பாலம் கட்ட எத்தனை மரம் வெட்டி இருக்காங்க, அதுக்கெல்லாம் மரம் நட்டியாச்சா ?


எந்த எதிர்ப்புக்கும் ஈடு கொடுத்து கமிஷனர் அவர்களும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது

அதே..வாழ்த்துக்கள்...
:)

ஸ்ரீராம். said...

நல்ல விஷயம். உருப்படியான சட்டம். வளையாமல் இருக்க வேண்டும். ஆலோசனைகள் அருமை.கொஞ்ச நாளுக்கு முன்னால் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மக்களே சரியாய் ஃபாலோ செய்யாமல் வீண் செய்தார்களே அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டும்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அவசியமான பதிவு! அருமையான யோசனை!

Unknown said...

சிங்காரச் சென்னை என்பது சுயமுரணாக இல்லாமல் இருக்க வாழ்த்துகள்

ஜெட்லி... said...

நல்ல செய்தி.....
பார்ப்போம்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல விசயத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். திட்டமிட்ட படி நடந்தால் நன்றாக இருக்கும். பார்ப்போம்...

துபாய் ராஜா said...

திட்டம் அமலுக்கு வந்து நன்மைகள் பல பெறுவோம் என நம்புவோம்.

க.பாலாசி said...

//தனி வீடுகளில் மரவளர்ப்பும், பராமரிப்பும் கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும். //

இதையும் அவசியம் செஞ்சாகனும்.. அப்பத்தான் மக்களுக்கும் மரங்களோட அருமைபெருமை தெரியும்.

இவ்ளோ சட்டதிட்டங்களும் நம்ம அரசியல் நிலையில் சாத்தியமா என்றுதான் யோசிக்கத்தோன்றுகிறது. சாத்தியப்பட்டால் என்னோட புள்ளகுட்டிகளும் இனிமையா வாழும்....

கலகலப்ரியா said...

//அப்போதும் கூட 25 மரக் கன்றுகளை நட்டாக வேண்டும். ஆண்டுக்கு 10000 மரங்களை நட ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.//

அப்டியே நடுற மரங்களுக்கு தண்ணீர் கொஞ்சம் ப்ளீஸ்...

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம்... வ‌ர‌வேற்க்க‌த‌க்க‌து...

நேசமித்ரன் said...

ரொம்ப சந்தோஷம் கேட்கவே நல்லா நடக்கணுமே

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல விஷயம்

யூர்கன் க்ருகியர் said...

மிக நல்ல விஷயம் .. சந்தோசம் sir..

பனித்துளி சங்கர் said...

மிகவும் பசுமையான விசயம்தான் . பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவேன் .

நிஜாம் கான் said...

அண்ணே! நல்ல திட்டம்... அப்டியே இந்த திட்டம் எத்தனை நாளைக்கு அமுலில் இருக்கும்னு கேட்டு சொல்லுங்க‌

நிஜாம் கான் said...

அப்பறம் இன்னொன்னு அண்ணே!..,இப்ப பிளாஸ்டிக் குப்பைகளை வீடு வீடாகச் சென்று மாநகராட்சியே கிலோ 2 ரூவான்னு வாங்கிக்கொள்வதாக வந்திருக்கும் புதிய திட்டம் குறித்து இதிலே எழுதாம விட்டுட்டீங்கண்ணே! இந்த திட்டம் கொஞ்சம் பரவாயில்லண்ணே!

"உழவன்" "Uzhavan" said...

சரியா ஆலோசனைகள் சொல்லிருக்கீங்க.. மரங்களை வெட்டும் போது, ஐயோ அதன் எலும்புகளை உடைக்கிறோமே என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல பதிவு, உருப்படியான திட்டம்.பின்பற்றினால் நல்லது நடக்கும்.

Radhakrishnan said...

பசுமை எங்கும் நிறைந்து இருக்கட்டும், நல்லதொரு பதிவு, பகிர்வு.

ஸ்ரீராம். said...

யூத்ஃபுல் விகடனின் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் உங்கள் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.

vasu balaji said...

நன்றிங்க பட்டாபட்டி.

vasu balaji said...

ஆமாங்க திருஞானசம்பத்

vasu balaji said...

ஆமாங்க பத்மா. நடந்தா நல்லது

vasu balaji said...

பழமைபேசி said...

நல்ல சிந்தனை, பாராட்டுகள்!//

நன்றிங்க பழமை

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

ராயல் சல்யூட்..

இது தொடர்ந்து நடக்க வேண்டுமே!!!//

ராயல் சல்யூட்டா. அது டாஸ்மாக் சரக்கில்லை?:)). ஆமாங்க. முதல்ல ஆரம்பிக்கணுமே.

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கண்ணைமூடிக்கொண்டு ஆதரவு.:)//

ஆதரவுக்கு நன்றி

vasu balaji said...

கிரி said...

சார் கேட்கவே சந்தோசமா இருக்கு! இதை அவர்கள் பின்பற்றினால் அதை விட சந்தோசம் :-)//

ஆமாங்க கிரி. நம்புறோம். பார்க்கலாம்.

vasu balaji said...

Chitra said...

எத்தனை காசிருந்தாலும், நல்ல காற்றும் தண்ணீரும் வாங்கி மாளாது. ஆயின் மாநகராட்சி மட்டுமே இதில் பங்கு கொள்வது சாத்தியமில்லை. மக்களும், அதனுடன் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் பங்குபற்றியாக வேண்டிய ஓர் நடவடிக்கையாகும் இது.

........ஒவ்வொரு ஆலோசனையும் அருமை. நடைமுறைப்படுத்த யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்க வேண்டுமோ? :-(//

இல்லைங்க! இதுல லஞ்சம் வராதுன்னு நம்பலாம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

நாம் அனைவரும் இதைக் கடைபிடிக்க வேண்டுமண்ணே... கடைபிடித்தால் நாடு வாழும் அண்ணே... வருங்கால சமுதாயத்திற்கு நல்லது.//

ஆமாம்ணே!

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...

ரொம்ப நல்ல விடயம்.//

ஆமாங்க சார். நன்றி.

vasu balaji said...

எறும்பு said...

//முதன் முதலாக பெரம்பூர் மேம்பாலத்தை கட்டி முடித்திருப்பதன் மூலம் சாதனை நிகழ்த்திய சென்னை மாநகராட்சி//

இந்த பாலம் கட்டினதாலதான் நீங்க அது வழியா பதிவர் சந்திப்புக்கு வந்தீங்க. அதாவது சென்னைல இருந்துகிட்டே நீங்க பதிவர் சந்திப்புக்கு வரணும்னா பாலம் கட்ட வேண்டி இருக்கு
:)//

ஆமாமா:))

vasu balaji said...

எறும்பு said...

இவங்க பாலம் கட்ட எத்தனை மரம் வெட்டி இருக்காங்க, அதுக்கெல்லாம் மரம் நட்டியாச்சா ?


எந்த எதிர்ப்புக்கும் ஈடு கொடுத்து கமிஷனர் அவர்களும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது

அதே..வாழ்த்துக்கள்...
:)//

யெஸ். அதேதான். நன்றி

vasu balaji said...

ஸ்ரீராம். said...

நல்ல விஷயம். உருப்படியான சட்டம். வளையாமல் இருக்க வேண்டும். ஆலோசனைகள் அருமை.கொஞ்ச நாளுக்கு முன்னால் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மக்களே சரியாய் ஃபாலோ செய்யாமல் வீண் செய்தார்களே அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டும்.//

கடுமையாக கண்காணித்தாக வேண்டும். நன்றின்க

vasu balaji said...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அவசியமான பதிவு! அருமையான யோசனை!//

நன்றிங்க சரவணக்குமார்.

vasu balaji said...

முகிலன் said...

சிங்காரச் சென்னை என்பது சுயமுரணாக இல்லாமல் இருக்க வாழ்த்துகள்//

=)). நன்றி முகிலன்

vasu balaji said...

ஜெட்லி said...

நல்ல செய்தி.....
பார்ப்போம்.../

ஆமாம் ஜெட்லி. நன்றி

vasu balaji said...

ச.செந்தில்வேலன் said...

நல்ல விசயத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். திட்டமிட்ட படி நடந்தால் நன்றாக இருக்கும். பார்ப்போம்...//

ஆமாங்க செந்தில். இப்பவும் செய்யலைன்னா அப்புறம் செய்ய ஆளிருக்கமாட்டாங்க.

vasu balaji said...

க.பாலாசி said...

//தனி வீடுகளில் மரவளர்ப்பும், பராமரிப்பும் கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும். //

இதையும் அவசியம் செஞ்சாகனும்.. அப்பத்தான் மக்களுக்கும் மரங்களோட அருமைபெருமை தெரியும்.

இவ்ளோ சட்டதிட்டங்களும் நம்ம அரசியல் நிலையில் சாத்தியமா என்றுதான் யோசிக்கத்தோன்றுகிறது. சாத்தியப்பட்டால் என்னோட புள்ளகுட்டிகளும் இனிமையா வாழும்....//

நடக்கட்டும் பாலாசி:) நம்புவமே

vasu balaji said...

துபாய் ராஜா said...

திட்டம் அமலுக்கு வந்து நன்மைகள் பல பெறுவோம் என நம்புவோம்./

நன்றின்க ராஜா.

vasu balaji said...

கலகலப்ரியா said...

//அப்போதும் கூட 25 மரக் கன்றுகளை நட்டாக வேண்டும். ஆண்டுக்கு 10000 மரங்களை நட ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.//

அப்டியே நடுற மரங்களுக்கு தண்ணீர் கொஞ்சம் ப்ளீஸ்...//

ஆமாம்மா. அது முக்கியமாச்சே:(

vasu balaji said...

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம்... வ‌ர‌வேற்க்க‌த‌க்க‌து...//

ஆம் நாடோடி. கட்டாயம்:)

vasu balaji said...

நேசமித்ரன் said...

ரொம்ப சந்தோஷம் கேட்கவே நல்லா நடக்கணுமே

:)//

ஆமாங்க நேசமித்திரன். அந்த பயம் இருக்கத்தான் செய்யுது

vasu balaji said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல விஷயம்//

நன்றிங்க டி.வி.ஆர்

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

மிக நல்ல விஷயம் .. சந்தோசம் sir..

ஆமாம் யூர்கன்

vasu balaji said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் பசுமையான விசயம்தான் . பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவேன் .//

நன்றி சங்கர்:) வாங்க.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! நல்ல திட்டம்... அப்டியே இந்த திட்டம் எத்தனை நாளைக்கு அமுலில் இருக்கும்னு கேட்டு சொல்லுங்க‌//

ஆரம்பிக்கட்டும் அண்ணே.

vasu balaji said...

"உழவன்" "Uzhavan" said...

சரியா ஆலோசனைகள் சொல்லிருக்கீங்க.. மரங்களை வெட்டும் போது, ஐயோ அதன் எலும்புகளை உடைக்கிறோமே என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.//

சரியாச் சொன்னீங்க உழவன்.

vasu balaji said...

அமைதிச்சாரல் said...

நல்ல பதிவு, உருப்படியான திட்டம்.பின்பற்றினால் நல்லது நடக்கும்.//

நன்றிங்க

vasu balaji said...

V.Radhakrishnan said...

பசுமை எங்கும் நிறைந்து இருக்கட்டும், நல்லதொரு பதிவு, பகிர்வு.//

நன்றிங்க வெ.இரா.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

யூத்ஃபுல் விகடனின் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் உங்கள் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.//
தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்.