Tuesday, April 20, 2010

கேடு வரும் பின்னே..மதி கெட்டு வரும் முன்னே...

மதிப்பிற்குரிய (?) டோண்டு அவர்களுக்கு,

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் என்னும் உங்கள் விஷத்தைப் படிக்க நேர்ந்தது என் துர்பாக்கியம். முதன்முறையாக உங்களுக்கு பின்னூட்டமும் மைனஸ் ஓட்டும் போட்டேன். என் எதிர்ப்பைத் தெரிவித்தாகிவிட்டது என்று மட்டு மட்டாக நான்கு மணி நேரம் இருந்து பார்த்தேன். முடியவில்லை.

சோவுடன் கை கோர்த்து எங்கே பிராமணன் என்று அப்புறம் தேடலாம். அதைப் பார்த்தும், இப்படி ஒரு வக்கிரமான இடுகை எழுதி என்ன கண்டீர்கள்?  ஒரு பசுமாடு வயலில் மேய்வதை தடுக்கக் கூடாது என்று சொல்லும் அதே மனுஸ்ம்ருதி எப்போது அதைத் தடுப்பது பாவம் இல்லையென்றும் சொல்லியிருக்கிறது.

/அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்./

இது உங்கள் பிரமாணம். நம்பியிருப்பீர்கள் இதில் ஒவ்வொரு வார்த்தையையும் என நம்புகிறேன். அப்படியானால் குறித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்வினைக்கு இப்போதே கவலைப் படுங்கள்.

/புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்./

இப்போது நீங்கள் சொல்லும் ஆதரவாளர்கள் ப்ரஸ்மீட் வைப்பதே இல்லையா சார்? ஒரு தனிப்பட்ட மனுஷிக்கு மருத்துவ உதவி தேவை எனில் ப்ரஸ்மீட் வைக்கக் கூடாது என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? கார்கிலில் சண்டை துவக்கிய முஷாரஃப் ப்ரஸ்மீட் வைக்கக் கூடாது என்றா இங்கு வரவிட்டீர்கள்?

சீக்கியர்கள் ப்ரஸ்மீட் வைப்பதில்லையா? இந்திராவைக் கொலைசெய்தது தவறில்லை என வாதிடும் சீக்கிய மதத்தினருக்கு இந்தியாவில் வைத்தியம் கிடையாது என்றா சொல்லுவீர்கள்?

/தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்/

உங்கள் வயதுக்கு இப்படி ஒரு எள்ளல் அழகா? வார்த்தைகளுக்கு சக்தி உண்டு . அபலையான ஒரு வயதான மூதாட்டியை நீங்கள் செய்த இந்த எள்ளலுக்கு எங்கு போய் முட்டிக் கொண்டாலும் பரிகாரம் கிடையாது.

/அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்./

ஒரு மொள்ளமாறி முடிச்சவிக்கி கேடிக்கும், கோவிலில் கூத்தடித்த நாய்க்கும் இந்த அரசு தான் செலவு செய்கிறது மிஸ்டர் டோண்டு. பிள்ளையார் ஊர்வலம் என இல்லாத ஒரு சம்பிரதாயத்துக்கு எத்தனை கோடி செலவாகிறது. சொல்லுங்களேன் உங்கள் ராமகோபாலனுக்கு.

/ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்./

அனுமதியோடு வந்தவரை மறுக்க முடியும். அனுமதிகாலம் முடிந்த பிறகு அனுப்புவதா கடினம்? இல்லை அடைக்கலம் கேட்டால் மறுக்க என்ன காரணம் வைத்திருக்கிறீகள். அதைச் செய்ய யார் தடுக்க முடியும்? ஊகத்தால் ஒரு அவமானத்துக்கு சப்பை கட்டு கட்டப் பார்க்காதீர்கள்.

/எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்./

இப்போதைய அரசியல் தலைவர் யாருமே வேண்டாமா? யாருக்குதான் சம்பந்தமில்லை. தெரியாமல் கேட்கிறேன், உங்களுக்கு யார் சார் இந்த அதிகாரம் கொடுத்தது?

/நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள்./

இவ்வளவு வக்கிரம் பிடித்தவரா நீங்கள்? ஒரு படிப்பறிவில்லாத, நாகரீகம் அறியாத மனிதன் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு உயிரினம் கூட சத்தியமாக இப்படி நினைக்காது.

/இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்./

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் சார். நினைவாலயம் வைக்க குறைந்த பட்ச தகுதி எதுசார்? நினைவாலயம் இருக்கிறவர்கள் எல்லாம் அதற்குட்பட்டவர்கள் என்று சொல்லுவீர்களா? எந்த விதத்தில் அந்த மனிதன் நினைவாலயத்துக்கு தகுதியில்லாமல் போனார்? இத்தனை வெறுப்புக்கு காரணம் என்ன சார்?

/ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்./

இது உங்கள் ஊகமா சார். விசா கொடுக்குமுன்னர் இந்த ஞானம் இல்லையா? உங்கள் எழவு நியாயம் நியாயமாகவே இருக்கட்டுமே. அலைக்கழிக்காமல் இருந்திருக்கலாமில்லையா? ரொம்ப சாமர்த்தியமாக இது பற்றி வாயே திறக்கவில்லையே நீங்கள்?

/மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது./

பாருங்கள் சார். உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நீங்கள் சொல்லவில்லை என்றால் , முதல்வர் இது குறித்து தனக்கோ தன் அரசுக்கோ தெரியாது என்று சொன்னதை நம்பித் தொலைத்திருப்போம். அதென்ன சார் அசம்பாவிதம். எனக்குத் தெரிந்து இதில் நடந்த பெரிய அசம்பாவிதம் இப்படி ஒரு அரைவேக்காட்டு விஷம் கக்கினதுதான். இல்லை இது சம்பாவிதமோ? ஓரளவு துணிச்சலான, உண்மைக்கு போராடும், ஒரு மனிதன் என்று நினைத்திருந்த ஒருவருக்குள் எவ்வளவு வக்கிரம் இருக்கிறது என வெளிக்காட்டியது இச்சம்பவம்.

/சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்./

உண்ணாவிரத நாடகம் நடந்தபிறகு நீங்கள் இப்படி கொண்டாடியோ கண்டித்தோ எழுதினது கவனமில்லை சார். நாடகமில்லாத அரசியல் இருக்கா சார்?

கொஞ்சம் யோசித்தால், அந்தம்மணியை திருப்பி அனுப்பியதற்கு காரணம் நீங்கள் சொன்னபடியே பார்த்தாலும் அவர்கள் இல்லை. நாம்தான் இல்லையா சார். இதற்கு அவர்களைத் திருப்பி அனுப்பியதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டுமா இல்லை வெட்கப்பட வேண்டுமா?

ஒரே ஒரு சுனாமி, ஒரு பூகம்பம், யாரையும் கேட்டு வராது சார். திருப்பி அனுப்ப முடியாது. மேல கூரை, நிம்மதியா படுக்க மெத்தை, எங்கே பிராமணன் பார்க்க டி.வி. எதுவும் இருக்காது. பிதுங்க பிதுங்க காசு வெச்சிருந்தாலும் பொட்டலம் விழுமான்னு ஏங்கி நிக்கணும். எங்கே பிராமணன்னு தேடிக் கொண்டுவந்து எவனும் போட மாட்டான்.

பூணல், திருமண், பட்டை, அரணாக்கயறு, தொப்பி, சிலுவை எதுவும் நிக்காது. கதியத்துப் போன ஒரு கூட்டம். யாராவது மனசிறங்க மாட்டாங்களா, ஒரு துண்டு ரொட்டி கிடைக்காதா? ஒரு வாய் தண்ணி கிடைக்காதான்னு அலையணும். பெத்த பிள்ளைக்கு கிடைச்சாலும் புடுங்கித் தின்ன சொல்லும் கொலை செய்தாவது.

மனுசனா இருக்கப் பார்க்கலாமே சார். இடுகை போட எவ்வளவோ விஷயம் இருக்கு. இந்தப் பிழைப்பு ஏன்? சத்தியமாக உங்கள் வாரிசுகள் படித்தால் உங்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை கொஞ்சமாவது காணாமல் போயிருக்கும். இந்தக் காலத்துப் பிள்ளைகள் கொஞ்சம் மனிதம் கற்றிருக்கிறார்கள் சார். நாம் அதை நாசம் செய்யாமலாவது இருப்போமே. இந்த அற்ப சிந்தனை நம்மோடு போகட்டுமே!

வருத்தத்துடன்

வானம்பாடிகள். 

64 comments:

கலகலப்ரியா said...

ம்ம்...

கலகலப்ரியா said...

||/தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்/

உங்கள் வயதுக்கு இப்படி ஒரு எள்ளல் அழகா? வார்த்தைகளுக்கு சக்தி உண்டு . அபலையான ஒரு வயதான மூதாட்டியை நீங்கள் செய்த இந்த எள்ளலுக்கு எங்கு போய் முட்டிக் கொண்டாலும் பரிகாரம் கிடையாது.||

மனுநீதிச்சோழன் வாழ்ந்த தடங்களில் எரிமலை குமுறிக் கொண்டிருக்கலாம்... இந்த வார்த்தை சொன்னதற்காக திரு டோண்டு அவர்கள் குமுறியழும் காலம் வராதிருக்கட்டும்...

Ashok D said...

//பூணல், திருமண், பட்டை, அரணாக்கயறு, தொப்பி, சிலுவை எதுவும் நிக்காது. கதியத்துப் போன ஒரு கூட்டம். யாராவது மனசிரங்க மாட்டாங்களா, ஒரு துண்டு ரொட்டி கிடைக்காதா? ஒரு வாய் தண்ணி கிடைக்காதான்னு அலையணும். பெத்த பிள்ளைக்கு கிடைச்சாலும் புடுங்கித் தின்ன சொல்லும் கொலை செய்தாவது//

சாட்டையடி

Excellent... இதுக்கு மேல சொல்லறதுக்கு எதுவும் இல்ல சார்.

கலகலப்ரியா said...

||/அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்./

ஒரு மொள்ளமாறி முடிச்சவிக்கி கேடிக்கும், கோவிலில் கூத்தடித்த நாய்க்கும் இந்த அரசு தான் செலவு செய்கிறது மிஸ்டர் டோண்டு. பிள்ளையார் ஊர்வலம் என இல்லாத ஒரு சம்பிரதாயத்துக்கு எத்தனை கோடி செலவாகிறது. சொல்லுங்களேன் உங்கள் ராமகோபாலனுக்கு.||

ஐய்யய்யோ... ஏற்கனவே இரசாயனத்திற்கும்... எறிகணைக்கும்...வேவு பார்ப்பதற்கும் போட்ட பிச்சையே ஏழேழு ஜென்மங்களுக்கும் கடனாக இருக்கிறதே... அதில் புதையுண்டு... எரியுண்டு... கைலாசமோ.. வைகுண்டமோ அடைந்தவர்கள்தான் இக்கடனையும் அடைக்க வேண்டும்..

கலகலப்ரியா said...

||ஒரே ஒரு சுனாமி, ஒரு பூகம்பம், யாரையும் கேட்டு வராது சார். திருப்பி அனுப்ப முடியாது. மேல கூரை, நிம்மதியா படுக்க மெத்தை, எங்கே பிராமணன் பார்க்க டி.வி. எதுவும் இருக்காது. பிதுங்க பிதுங்க காசு வெச்சிருந்தாலும் பொட்டலம் விழுமான்னு ஏங்கி நிக்கணும். எங்கே பிராமணன்னு தேடிக் கொண்டுவந்து எவனும் போட மாட்டான்.||

ம்ம்... இந்தப் பிரக்ஞை இருந்தா போறும்.........~~~

சூர்யா ௧ண்ணன் said...

//ஒரு மொள்ளமாறி முடிச்சவிக்கி கேடிக்கும், கோவிலில் கூத்தடித்த நாய்க்கும் இந்த அரசு தான் செலவு செய்கிறது மிஸ்டர் டோண்டு.//

நச்!

இதெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதாயிருக்கு அவருக்கு..

ராஜ நடராஜன் said...

நான் திரும்பவும் வாரேன்!

நான் சொல்லியும் கேட்காம இப்ப பாருங்க கதிர் உங்க கோழிய திருடி உங்ககிட்டேயே விலை பேசுறாரு.

Radhakrishnan said...

அவரது பதிவை படித்ததும் இப்படியும் சிந்திக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் எனும் கோபம் மனதுள் எழுந்தது. எழுதிய பின்னர் எனது பின்னூட்டம் இப்படிப்பட்ட மனிதருக்கு விழலுக்கு இறைக்கும் நீர் என விட்டு விட்டேன்.

உங்கள் கேள்விகள், அர்த்தமுள்ள விசயங்கள் எதுவும் அவருக்கு உரைக்காது ஐயா. ஆனால் பலரது மனக்குமுறலை உங்கள் இடுகை நிச்சயம் காட்டும்.

பல மனிதர்கள் தவறாகவே சிந்திக்கப் பழகிப் போனார்கள். அதுமட்டுமின்றி தவறாகவே வாழவும் செய்கிறார்கள். அவரைப் போன்றோர் திருந்துவது என்பது கனவில் கூட நடப்பது இல்லை. அவர் எழுதியதில் என்ன தவறு இருக்கிறது என கேட்பவர் இருக்கும் உலகம் தானே இது! வேடிக்கை மனிதர்கள்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//நினைவாலயம் இருக்கிறவர்கள் எல்லாம் அதற்குட்பட்டவர்கள் என்று சொல்லுவீர்களா? //

வீரப்பனை சாமியாக்கி விட்டார்கள்.

Unknown said...

சரியான கருத்துக்கள் சார்

கலகலப்ரியா said...

\\V.Radhakrishnan said...
அவரது பதிவை படித்ததும் இப்படியும் சிந்திக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் எனும் கோபம் மனதுள் எழுந்தது. எழுதிய பின்னர் எனது பின்னூட்டம் இப்படிப்பட்ட மனிதருக்கு விழலுக்கு இறைக்கும் நீர் என விட்டு விட்டேன். \\

எனக்கும் கிட்டத்தட்ட இதே நிலமைதான்... நான் 60 - 70% புலிகள் ஆதரவாளினி வேற... அவங்க ப்ளாக் பக்கம் போனதுக்கே விசா கேப்பாய்ங்களோன்னு ஒரு பக்கம்... நெகடிவ் வோட் போடக் கூடத் தகுதியற்ற மனிதர்கள்(?)..

Paleo God said...

வேதனை.

:(

காமராஜ் said...

தஞ்சமென வந்தவரைக்கேலி
பேச ஒன்னுக்குமத்தவன்,ஊர்மடத்தில் பொழுதுபோகாமல் புறம்பேசிக்கழிப்பவன் கூட நினைக்கமாட்டான்.ச்செய்.

க ரா said...

அவரது அந்த பதிவுக்கு சீ என்ற ஒற்றை சொல் போதும் பதிலாக.

பிரபாகர் said...

வந்த கொதிப்புல அந்த ஆளை எப்போதோ தெரியாம தொடர்ந்ததுக்கு வருத்தப்பட்டு டொண்ட் டு ரீட் தட் ஃபெலோஸ் இடுகைன்னு வந்துட்டேன்! மனுஷனே இல்லை!

பிரபாகர்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்தக் காலத்துப் பிள்ளைகள் கொஞ்சம் மனிதம் கற்றிருக்கிறார்கள் சார். நாம் அதை நாசம் செய்யாமலாவது இருபோமே. இந்த அற்ப சிந்தனை நம்மோடு போகட்டுமே!
//

ரொம்ப நன்றி சார் உங்கள் புரிதலுக்கு..

உங்களுக்கு, எனது மரியாதை கலந்த வணக்கங்கள்..
அன்புடன் பட்டாபட்டி..

ரோஸ்விக் said...

ஆகா இங்கயும் கடிதமா?? நம்ம பக்கமும் வாங்க அண்ணே! :-)

http://thisaikaati.blogspot.com/2010/04/dondu.html

Unknown said...

ஆபீஸ்ல இருந்து சரியாப் படிக்கவும் முடியல பின்னூட்டவும் முடியல. வந்து வச்சிக்கிறேன் கச்சேரிய..

settaikkaran said...

டோண்டுவின் பதிவைப் படித்ததும் எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று தான்: "இந்த ஆளு தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்- அவரது குருநாதரைப் போல". உங்களது விபரமான இடுகையைப் படித்து அது சரிதான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு அவர் பதில் அளிப்பாரா? பார்க்கலாம்.

செ.சரவணக்குமார் said...

சாட்டையடி பாலா சார்.

Thamira said...

:-((

செ.சரவணக்குமார் said...

டோண்டுவின் விஷமத்தனமான பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் (பட்டாபட்டி, ஈரோடு கதிர், ரோஸ்விக்) வந்துகொண்டிருக்கும் பதிவர்களின் எதிர்வினைகள் மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் கூட சாட்டையைச் சுழற்ற வேண்டும் சார்.

மணிஜி said...

உடன்படுகிறேன்

மணிஜி said...

டோண்டு சார்..pLs dontdoit sir

ராஜ நடராஜன் said...

////ஒரே ஒரு சுனாமி, ஒரு பூகம்பம், யாரையும் கேட்டு வராது சார். திருப்பி அனுப்ப முடியாது. மேல கூரை, நிம்மதியா படுக்க மெத்தை, எங்கே பிராமணன் பார்க்க டி.வி. எதுவும் இருக்காது. பிதுங்க பிதுங்க காசு வெச்சிருந்தாலும் பொட்டலம் விழுமான்னு ஏங்கி நிக்கணும். எங்கே பிராமணன்னு தேடிக் கொண்டுவந்து எவனும் போட மாட்டான்.

பூணல், திருமண், பட்டை, அரணாக்கயறு, தொப்பி, சிலுவை எதுவும் நிக்காது. கதியத்துப் போன ஒரு கூட்டம். யாராவது மனசிறங்க மாட்டாங்களா, ஒரு துண்டு ரொட்டி கிடைக்காதா? ஒரு வாய் தண்ணி கிடைக்காதான்னு அலையணும். //

சுனாமி,பூகம்பம் எல்லாம் இயற்கையாய் வரும் பேராபத்துக்கள்.மனிதன் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட வளைகுடா முதல் யுத்தம்,ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு,இலங்கை மனித படுகொலையின் இறுதி கட்டம்,லெபனான்,பாலஸ்தீனிய,இஸ்ரேல் முக்கோணம்,செச்சினியாவுடன் ரஷ்யா என போர்களே நீருக்கும்,உணவுக்கும் அலைய வைத்திருக்கிறது.அவரவருக்கு துயரங்கள் நிகழ்ந்தால் ஒழிய அதன் வலி சிலருக்கு தெரியாது.மற்றவர்களின் வலிகளில் பங்கு கொள்கின்றவனே மானுடம் என்ற மகத்தான நிலைக்கு தகுதியுள்ளவனாகிறான்.மகத்தான மனிதனாக வேண்டாம்.மனிதனாக கூட வாழ நினைக்காத வக்கிரம் பிடித்தவர்களை என்ன சொல்வது?

First time in my life I am coming across a sadist mentality paranormal phenomena through blogging.

ஈரோடு கதிர் said...

//பூணல், திருமண், பட்டை, அரணாக்கயறு, தொப்பி, சிலுவை எதுவும் நிக்காது. கதியத்துப் போன ஒரு கூட்டம். யாராவது மனசிறங்க மாட்டாங்களா, ஒரு துண்டு ரொட்டி கிடைக்காதா? ஒரு வாய் தண்ணி கிடைக்காதான்னு அலையணும். பெத்த பிள்ளைக்கு கிடைச்சாலும் புடுங்கித் தின்ன சொல்லும் கொலை செய்தாவது.//

இது புரியாமத்தானே நெறையப் பேர் ஆடுறாங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அடக்கொடுமையே.. இப்படியும் யோசிக்கத் தோனுமா

கொடுமை!!

குறும்பன் said...

சீ! இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைத்தேன். இருக்கறாங்கன்னு தெரிந்து கொண்டேன்.

வேற எதுவும் சொல்ல தொன்றவில்லை.

sekar said...

அண்ணே,

//உங்கள் வயதுக்கு இப்படி ஒரு எள்ளல் அழகா? வார்த்தைகளுக்கு சக்தி உண்டு . அபலையான ஒரு வயதான மூதாட்டியை நீங்கள் செய்த இந்த எள்ளலுக்கு எங்கு போய் முட்டிக் கொண்டாலும் பரிகாரம் கிடையாது.||///

manithan endra vaarthaikku sambandame illatha attu piece dondu....

ஒரு வயசான அம்மாவை உள்ளே விடாட்டியும் விமான நிலையத்திலேயே கொஞ்சம் ஓய்வாவது எடுக்க செய்திருக்கலாம். போபோர்ஸ் ஊழலோ IPL ஊழலோ, மூணாவது நாலாவதுன்னு ஊர்லே உள்ளவனுக்கு பிறந்ததுக்கு எல்லாம் மந்திரி பதவி வங்கி கொடுத்து, ரயில் வராத தண்டவாளத்திலே படுத்து தமிழுக்காக போராடிஇருந்தாலாவது பரவாயில்லை... சும்மா மனிதபிமனத்தை நம்பி வந்தா.... நடக்கிற கதையா ..... எதோ புப்ளிசிட்டி பண்ணுவாங்கன்னு சொன்னாங்களே ... எப்படி ????? பீச்லே cooler வைத்து கால்மாட்டிலே பொண்டாட்டி தலை மாட்லே வைப்பாடின்னு காலையிலே சாப்பிட்டு வந்து உண்ணாவிரதமிருந்து மதியான சாப்பாட்டுக்குல்லே இலங்கையில் போரை நிறுத்தியது மாதிரியா ???? ரோசெவிக் அவர்களே, அந்த டம்மி பீசுக்கெல்லாம் மண்டைக்குலே என்ன இருக்குன்னு தெரியலே .... தமிழரிடம் இருந்த மிக பெரிய நல்ல குணமான "பிறர் துயர் கண்டு " ஐயோன்னு சொல்ற உணர்ச்சியும் போயிருச்சுன்னு நெனைக்கும பொது, வயசுக்கான மரியாதி கூட அந்த பீசுக்கு(பதிவர் பீசு மற்றும் மொதலை அமைச்சர் பீசு ) தர கூடாதுன்னு தோணுது....
எல்லாத்துக்கும் மேல ... காலை பேப்பர் பார்த்து தான் தெரியும் .... இல்லை நைட் 12 மணிக்கு தெரியும் என்று சொல்வதை பார்த்தால்... எல்லாரையும் க்கெனப்பயளுகன்னு நேனைகிரனுங்க போல ******** (சுத்தமான கெட்ட வார்த்தைகள் )


dondu #*@(*^$)(@&$)@&)$)

- Madurai Sekar

அது சரி(18185106603874041862) said...

//
/தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்

//

ஒரு வயதான பெண்ணை, எந்த அரசியலிலும் இது வரை சம்பந்தப்படாதவரை நோக்கி எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று தெரியவில்லை.

அது சரி(18185106603874041862) said...

//
ஒரே ஒரு சுனாமி, ஒரு பூகம்பம், யாரையும் கேட்டு வராது சார். திருப்பி அனுப்ப முடியாது. மேல கூரை, நிம்மதியா படுக்க மெத்தை, எங்கே பிராமணன் பார்க்க டி.வி. எதுவும் இருக்காது. பிதுங்க பிதுங்க காசு வெச்சிருந்தாலும் பொட்டலம் விழுமான்னு ஏங்கி நிக்கணும். எங்கே பிராமணன்னு தேடிக் கொண்டுவந்து எவனும் போட மாட்டான்.
//

சுனாமி, பூகம்பம், போர் என்று எதுவுமே வராவிட்டாலும் வயது முதிர்ந்த காலம் என்று ஒன்று உண்டு. அன்றைக்கு ஆயிரம் கோடி இருந்தாலும் ஒரே ஒரு இட்லி சாப்பிடவே பெரும் வேதனை அடைபவர்கள் உண்டு..

வாழ்க்கை மிகவும் குரூரமானது. இதில் பிறரது துயரம் பார்த்து அழுவாச்சி பேட்டிகள், நல்லவேளையாக அடையாளமே இல்லாது எரித்து விட்டார்கள் என்று எழுதுபவர்கள், ஒரு மனிதனாக நின்று யோசித்துப் பார்க்க வேண்டும். இனிமேலாவது செய்வார்களா என்று பார்க்கலாம்...(எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட!)

smart said...

டோண்டு அவர்களின் கருத்து ஒரு தவறான கருத்துத் தான் அதை மறுக்கவில்லை. அதற்காக உங்கள் பழைய கணக்குகளையும் சேர்த்து திட்டிவிட்டீர்கள். அந்த அம்மா வர வேண்டும் என்று சொல்லி எழுதியவர்களுக்கு வந்த ப்ளஸ் ஓட்டுக்களைவிட இவருக்கு வந்துள்ள மைனஸ் ஓட்டுக்கள் பலமடங்கு அதிகம். உங்கள் பசிக்கு சிக்கியவரானாலும் அவர் கூறியக்கருத்தால் தான் சிக்கினார் என்று எண்ணிவிட்டுப்போகவேண்டியதுதான்.

smart said...

நானும் திட்டி எழுதியுள்ளேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

தேவையே இல்லாமல் அவருக்கு உங்களைப் போன்றோர் ஏன் பப்ளிசிடி கொடுக்கறீர்கள்?

வயதும், அனுபவமும் இருந்தால் சிலருக்கு புத்தி பிழறும் என மருத்துவர்கள் கூறுவார்கள்..அதுதான் நடந்திருக்கிறது

Veliyoorkaran said...

Beautiful..! :)

கோவி.கண்ணன் said...

வானம்பாடி ஐயா.... இடுகைக்கு

மிக்க நன்றி !

vasu balaji said...

மன்னிக்கணும் சத்திரியன். அவதூரான பின்னூட்டமென்பதால் நீக்குகிறேன். டோண்டுசார் இந்தப் பின்னூட்டத்திற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

vasu balaji said...

மணிஜீ. கொஞ்சம் அசந்துட்டேன். சம்பந்தபட்ட பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். நீங்களும் வெட்டி ஒட்டியதால் அதையும் நீக்க வேண்டியுள்ளது. மீண்டும் ஒரு முறை டோண்டு சாரிடம் மன்னிக்க வேண்டுகிறேன்.

VISA said...

:(((

Unknown said...

மிஸ்டர் வானம்பாடிகள்!
இன்று தன்னை செருப்பால் பத்துபேர் அடித்தால், நேற்று ஐந்து பேர் தான் அடித்தார்கள், இன்று பத்துபேர் என்று பெருமை கொள்ளும் ******-kku நீங்கள் எதிர்பதிவு இட்டுள்ளீர்கள். உங்கள் கவனம் பெரும் அளவிற்கு அதற்கு தகுதி இல்லை. வரிக்கு வரி அந்த அஃறிணையை 'சார்' என விளித்து ஏன் அதன் படிநிலையை உயர்த்துகிறீர்கள்? எதிரியுடன் கள்ள உறவை பேணும் நம்மவரால் நாம் நொந்துள்ள நிலையில் எதிரியின் கூடாரத்தில் 'கட்டியக்காரன்' ஜோலி பார்க்கும், 'மனிதன்' போன்று தோற்றமளிக்கும் ஜந்துவிடம் கவனம் செலுத்துவது நேர விரயம். -நன்றி
[பின்னூட்டத்தில் மன்னிபெல்லாம் கேட்கிறீர்கள்! எனது பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டு அதற்கும் ஒரு மன்னிப்பை டோண்டுவிடம் கேட்காதீர்கள்! அவ்வாறு கேட்பதாயிருந்தால் தயவு செய்து எனது பின்னூட்டத்தை வெளியிட்டு விடாதீர்க!!]

க.பாலாசி said...

//கலகலப்ரியா said...
நெகடிவ் வோட் போடக் கூடத் தகுதியற்ற மனிதர்கள்(?)..//

எனக்கும் அதே நிலைதான்.. இருப்பினும் அங்கே எனது பின்னூட்டங்கள் வெளியிடப்படவில்லை. மைனஸ் ஓட்டு போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

மங்குனி அமைச்சர் said...

தெளிவா அருமையா சொல்லிடிங்க , எங்க ஸ்டைல்ல பட்டாப்பட்டி போட்ருகாறகு வாங்க வந்து கும்முங்க

Unknown said...

//மனுசனா இருக்கப் பார்க்கலாமே சார்.//


இது ஒன்னு போதும் சார்.... வேதனை...எதுவும் சொல்வதற்கில்லை....

சிநேகிதன் அக்பர் said...

இந்த எதிர்ப்பு தேவைதான். நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

அருள் said...

எச்சரிக்கை:

"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டிருந்தாங்க.

அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.

அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்

ILLUMINATI said...

இந்த மாதிரி வக்கிரம் புடிச்ச ஜென்மங்கள் இருக்குறதால தான் நாம இன்னும் நமக்குள்ளேயே அடிச்சிகிட்டு இருக்கோம்.....ஒற்றுமையாவது,மண்ணாவது?

இப்ப என்ன சொல்ல வர்றார் இவரு?கலவரம் வந்துரும்னா?அடப் போங்க பாஸ்.அதுக்கு ரோசம்னு ஒண்ணு இருக்கணும்.இப்போ போட்ற கழக அரிசி ல அத எல்லாம் நீக்கிட்டு தான் தர்றாங்க.

துபாய் ராஜா said...

அவர் பதிவை படித்தநாள் முதல் இப்படியும் எண்ணம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்களே என்ற வெறுப்பு மனதில்.. தமிழனாக இருந்து பார்க்க வேண்டாம்... ஆறறிவு படைத்த மனிதனாக இருந்து உணர்ந்தாலே போதும். எல்லோர் உணர்வையும் உங்கள் பதிவில் வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

மகேந்திரன் எட்டப்பராசன் said...

பதிவர் டோண்டு மட்டுமல்ல இது மாதிரியான மனநிலையில் தானும் தன் குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்று எனக்கென்ன வந்தது என்று வாழும் சுயநலமிகள் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது.டோண்டுவைக் கண்டிக்கிற நாம் கருணாநிதியை ,ராமதாசை ,சுப்ரமணிய சாமியை திருமாவளவனை,ஜெயலலிதாவை இன்னபிற பார்ப்பன சொம்புதூக்கிகளை என்ன செய்யப்போகிறோம்.இன்று நடந்தது யாரோ ஒரு பார்வதியம்மாவுக்கல்ல .இந்தக்கொடுமைகளுக்குதான் பாரதிதாசன் சொன்னார் பண்ணப்பழகடா பச்சைப் படுகொலை என்று.

"உழவன்" "Uzhavan" said...

வருத்தத்துடன்
உழவன்

Unknown said...

//கலகலப்ரியா said...
நெகடிவ் வோட் போடக் கூடத் தகுதியற்ற மனிதர்கள்(?)..//

//எனக்கும் அதே நிலைதான்.. இருப்பினும் அங்கே எனது பின்னூட்டங்கள் வெளியிடப்படவில்லை. மைனஸ் ஓட்டு போட்டுவிட்டு வந்துவிட்டேன்.//

இதே மாதிரிதான் நானும்.

சத்ரியன் said...

எதுக்கண்ணே பெரிய வார்த்தையெல்லாம்.

smart said...

//"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டிருந்தாங்க.

அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.

அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்//

அருள் சார் உங்க கவலையெல்லாம் பார்ப்பனர் மேல தான் போல. தமிழருக்காக கவலைப் படுகிறவர்கள் யாருமில்லையா ????

Unknown said...

நீண்ட நாளைக்குப் பின் சந்திக்கிறேன் பாலா...

///தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்///

வேலுப்பிள்ளை செத்த போதும் பலர் அவரும் பார்வதியம்மாவும் பிரபாகரனை ஈழப்போராட்டத்துக்காகவே பெற்றெடுத்து வளர்த்ததாக புசத்தியவர்களுக்கும் இதைச் சொல்லிக்கொள்கிறேன். பிரபாகரன் தேர்ந்தெடுத்த வழி, பிரபாகரன் என்கிற தனிமனிதனுடையது. வேலுப்பிள்ளைக்கோ, பார்வதியம்மாவுக்கோ அந்த முடிவில் துளியும் சம்பந்தமில்லை. பசப்பாமல் சொல்வதானால், வெகுஜனப் பத்திரிகைகள் காட்டும் பயங்கரப் பாசப்பிணைப்பு பிரபாகரன் தன்னுடைய வழியைத் தேடிக்கொண்ட ஆரம்பகாலங்களிலிருந்து மிகவும் சமீபம் வரை (வேலுப்பிள்ளையும் பார்வதியம்மாவும் இந்தியாவிலிருந்து வன்னிக்குத் திரும்பும்வரை) இருக்கவில்லை. இப்படியாகத்தான் பிரபாகரன் - வேலுப்பிள்ளை & பார்வதியம்மா தம்பதி உறவு இருந்தது என்பதுதான் உண்மை. (ஊடகச் சித்தரிப்புகளைக் குப்பையில் போடலாம்) கடைசியாகப் பிரபாகரன் தலைமையிலான் புலிகள் இயக்கம் இராணுவரீதியாக முடக்கப்பட்டபோது வயதானகாலத்தில் வேறெந்தப் பிடியும் இல்லாத ஒரே காரணத்தால் அவர்களுக்கு ஒத்துப்போகாத மகனோடு காலம் தள்ளிய ஒரே பாவத்துக்காக பார்வதியம்மாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றால் அதைவிடக் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் எதுவுமே இல்லை. நான் இந்த வார்த்தையை உபயோகிப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் உபயோகித்தே ஆகவேண்டும்... இதுக்கு மேலும் இந்தப் பொல்லாத உலகத்தில் தூக்கிப்போட்டு விளையாடும் கைப்பொம்மையாக அந்த அம்மாள் இருக்காமல் இன்றைக்கோ நாளைக்கோ கண்ணை மூடட்டும். (மன்னியுங்கள்)...

Unknown said...

பின்னூட்டங்களைத் தொடரும் நோக்கில்

vasu balaji said...

@@நன்றி ப்ரியா
@@நன்றி அசோக்
@@நன்றி சூர்யா
@@நன்றிங்கண்ணா. ஆமாம் கதிருக்கு கோழின்னா ரொம்ப புடிக்கும்:))
@@நன்றிங்க வெ.இரா.
@@ஆமாம் ஸ்ரீ நன்றி.
@@நன்றி ஆண்டாள் மகன்
@@நன்றி ஷங்கர்
@@நன்றி காமராஜ்
@@நன்றி இராமசாமிகண்ணன்
@@நன்றி பட்டாபட்டி
@@நன்றி ரோஸ்விக். பார்த்தேன்
@@நன்றி முகிலன்
@@நன்றி சேட்டைக்காரன்
@@நன்றி சரவணக்குமார்
@@நன்றி ஆதி..அவ்வ்வ்:(( புரியுது
@@நன்றி மணிஜி
@@நன்றி பிரவு
@@நன்றி கதிர்
@@நன்றி செந்தில்
@@நன்றி குறும்பன்
@@நன்றி சேகர்
@@நன்றி அதுசரி
@@நன்றி ஸ்மார்ட்
@@நன்றி டி.வி.ஆர். தப்புதான்.:))
@@நன்றி வெளியூர்க்காரன்
@@நன்றி கோவி
@@நன்றி விசா
@@நன்றி கவி
@@நன்றி பாலாசி
@@நன்றி மங்குனி
@@நன்றி ஹனிஃப்
@@நன்றி அக்பர்
@@நன்றி அருள்
@@நன்றி iluminati
@@நன்றி கண்ணா
@@நன்றிங்க மகேந்திரன்
@@நன்றிங்க உழவன்
@@நன்றி ராஜா
@@நன்றி தாமோதர் சந்துரு
@@நன்றி கிருத்திகன். கன நாளாச்சு கண்டு. :) வாங்கோ தொடர்ந்து

Bibiliobibuli said...

//....வேறெந்தப் பிடியும் இல்லாத ஒரே காரணத்தால் அவர்களுக்கு ஒத்துப்போகாத மகனோடு காலம் தள்ளிய ஒரே பாவத்துக்காக .....//

கிருத்திகன், இதையெல்லாம் யார் உங்களிடம் வந்து சொன்னார்கள். உண்மையை பக்கத்திலிருந்து பார்த்த ஆள் மாதிரி கதைக்கிறியள். காலக்கொடுமையடா சாமி. வேறென்ன சொல்ல.

Unknown said...

///உண்மையை பக்கத்திலிருந்து பார்த்த ஆள் மாதிரி கதைக்கிறியள்///

அதே போல் அவர்களிடையே பாசமழை பொழிந்தது என்று யார் சொன்னார்கள் ரதி? அவர்கள் பிரபாகரனைப் போராளியாக ஆக்கத் திட்டமிட்டே பெற்றார்கள் என்று யார் சொன்னார்கள் ரதி? தேவையற்ற புசத்தல்களால் இன்றைக்கு அந்த வயதான அம்மாள் பந்தாடப்படுவது என்ன கொடுமை ரதி?

கலகலப்ரியா said...

//Rathi said...

//....வேறெந்தப் பிடியும் இல்லாத ஒரே காரணத்தால் அவர்களுக்கு ஒத்துப்போகாத மகனோடு காலம் தள்ளிய ஒரே பாவத்துக்காக .....//

கிருத்திகன், இதையெல்லாம் யார் உங்களிடம் வந்து சொன்னார்கள். உண்மையை பக்கத்திலிருந்து பார்த்த ஆள் மாதிரி கதைக்கிறியள். காலக்கொடுமையடா சாமி. வேறென்ன சொல்ல.
April 23, 2010 5:18 AM
Kiruthikan Kumarasamy said...

///உண்மையை பக்கத்திலிருந்து பார்த்த ஆள் மாதிரி கதைக்கிறியள்///

அதே போல் அவர்களிடையே பாசமழை பொழிந்தது என்று யார் சொன்னார்கள் ரதி? அவர்கள் பிரபாகரனைப் போராளியாக ஆக்கத் திட்டமிட்டே பெற்றார்கள் என்று யார் சொன்னார்கள் ரதி? தேவையற்ற புசத்தல்களால் இன்றைக்கு அந்த வயதான அம்மாள் பந்தாடப்படுவது என்ன கொடுமை ரதி?//

ரதி.. கிட்ட கிட்ட உங்க நிலமைதான் எனக்கும்..!

கிருத்திகன்.. பாசமழை பொழிந்தார்களோ இல்லையோ.. அவர்கள் பிரபாகரனின் அன்னை என்பதை மறக்க வேண்டாம்.. யாரும் மேடை வைத்து விழா நடத்திப் பிள்ளையைக் கொஞ்சுவதில்லை.. எந்த ஒரு தாயும் அவரின் குழந்தை துப்பாக்கி ஏந்துவதை விரும்புவதில்லை என்ற உண்மை ஒரு பக்கம்.. அந்த அம்மா பந்தாடப்படுவதற்கு பிரபாகரன் காரணமாக இருக்கலாஆஆஆஆம்.. அவர்கள் அலைக்கழிந்தது கொடுமையிலும் கொடுமைதான்!!! ஆனால் "உன்னாலதான் இப்டி ஆச்சு" அப்படியென்று அந்த அம்மா நினைத்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது... மாறாக "நீ இல்லாததால் இப்படி ஆயிற்று என்று தோன்றி இருக்கலாம்".. நிற்க.. இயக்கத்தில் உள்ளவர்கள் அல்லது இருந்தவர்களை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்ததென்று நான் கேள்விப்பட்டதில்லை.. மாறாக இயக்கத்தில் உள்ளவர்கள் "அவர்களின் குடும்பங்களுடன்" தொடர்பில் இருக்கக் கூடாது என்பது அவர்களின் இயக்க விதிமுறையாக இருந்தது.. சமீப காலத்தில் மாற்றம் ஏற்பட்டதா என்றால் எனக்குத் தெரியாது.. (இதில் இயக்கத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் அடக்கம் இல்லை).. மேலும் அறிந்தவர்கள், பள்ளிச் சகாக்கள் உட்பட இயக்கத்தில் இணைந்தவர்கள் வீட்டில் வருத்தம் இருந்ததே தவிர வெறுப்பு இருந்ததாக அறிந்ததில்லை..!!!!!!!!! (சமீப காலத்தில் நடந்த உவப்பில்லாத சம்பவங்களை இங்கு தவிர்த்திருக்கிறேன்)

இப்பொழுது இச் சம்பவத்திற்காக பிரபாகரன் செயற்பாட்டில் தனக்கு உடன்பாடில்லையென்று காரணம் சொல்லி (அப்படியே இருப்பினும்) அவர்கள் நியாயம் கோர மாட்டார்கள் என்றே தோன்றுகிறது..!

Bibiliobibuli said...

கிருத்திகன் சொன்னது,

///அதே போல் அவர்களிடையே பாசமழை பொழிந்தது என்று யார் சொன்னார்கள் ரதி///

கலகலப்ரியா சொன்னது,

//...அவர்கள் பிரபாகரனின் அன்னை என்பதை மறக்க வேண்டாம்.. யாரும் மேடை வைத்து விழா நடத்திப் பிள்ளையைக் கொஞ்சுவதில்லை..///

நன்றி கலகலப்ரியா. நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டதற்கு.

கிருத்திகன் நீங்கள் குறிப்பிடும் "தேவையற்ற புசத்தல்கள்" என்னவென்று எனக்கு தெரியாது. அது உங்களுக்கே வெளிச்சம். மூன்று தலைமுறையாய் ஓர் குடும்பம் ஈழத்திற்காய் கொடுமைப்பட்டத்தை, உயிர்கொடுத்ததை மதிக்கத்தெரியாத புசத்தல்களுக்கெல்லாம் என்ன சொன்னாலும் புரியாது. தவிர, பிரபாகரனின் பெற்றோர் அவர் மீது அன்பை பொழிந்தார்களா, இல்லையா என்று விவாதிப்பது என்பது தேவையற்றது என்பதே நான் சொல்லவந்தது. பிள்ளைப்பாசத்திற்கும் இன்று இந்தியா அவரை அவமதித்து அனுப்பியதிற்கும் தொடர்பு உண்டென்று "சின்னப்புள்ளத்தனமா" நீங்கள் எழுதினது கொடுமையா இருக்கு, கிருத்திகன்.

கலகலப்ரியா said...

//Rathi said...//

உடன்படுகிறேன்..

சாமக்கோடங்கி said...

//தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்//

இவரும் ஒரு தாய்க்குப் பிறந்தவர் தானே..? இவருக்கும் அந்த அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்...? தேசியப் பிரச்சினை என்றால் அதைப் பற்றி மட்டும் பேசட்டுமே..

இவரது அம்மாவைப் பற்றி, பெயர் தெரியாத ஒருத்தர் இது மாறி ஒரு வரி எழுதினால் இவர் சும்மா விடுவாரா..?

வயது முதிர்ந்த மூதாட்டி என்று கூட பாராமல் நக்கலாக இவர் எழுதிய இந்த வரி அவரது வக்கிரத்தையே காட்டுகிறது...

ஒரு தாயைப் பற்றி இவ்வளவு பெரிய வெளிப்படையான கருத்தை தெரிவிக்க இவருக்கு என்ன உரிமை....?

வெண்காட்டான் said...

kiruthigan: neengal solla vaarathai niyayapadutha ella arikkaikalaiyum kuppail podalam..
aanal oruthar sonnar chinnapulla thanama irukku endu.. sonnengal paarungo..
itha neenga mahindavuku solli irunthal avar appavaiyum ammavaiyum vittu iruppar..

Bibiliobibuli said...

வெண்காட்டான்,

உங்கடை கண்டுபிடிப்பை நீங்களே மகிந்தவுக்கு சொல்லியிருக்கலாம் தானே. இன்னும் ஒன்றும் காலம் தாழ்ந்து போகவில்லை.

வெண்காட்டான் said...
This comment has been removed by the author.