Saturday, April 17, 2010

டமிலன் என்றொரு இனமுண்டு

மீண்டும் ஒரு முறை (இரு?) டமிலன் என (ப்+எ)ருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். (சொரணையத்துப் போனப்புறம் ‘ப்’ ஒரு கேடா). வந்தாரை வால வைக்கும் டமிலகம் இனி டமிலனென்று சொல்லடா தலை குனிந்து நில்லடாவென மார்பிலல்ல மண்டையில் அடித்துக் கொள்ளலாம். செந்டமில் மாநாட்டில் ‘குடுத்த காசுக்கு மேலயே கூவுறாண்டா கொய்யா’ என்ற சொற்றொடருக்கு தகுந்த மதிப்பளித்து அரசின் தலையாய கொள்கையாக அறிவித்தலும் வேண்டும்.

என்னமோ கள்ளத்தோணி, கள்ள ரயில், லாரியில் வந்தாற்போல் மத்திய அரசு கொடுத்த விசா இருந்தும், உடல் நலமற்ற ஒரு மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதன் மூலம், டமிலனின் செஞ்சோற்றுக்கடன் செம்மையாகவே காட்டப்பட்டிருக்கிறது. இதற்கொரு விழாவும் எடுக்கலாம். 

சற்றும் எதிர்பாரமல் திடீரென நடந்த ஒரு விடயமாயிருக்க முடியாது. குறைந்த பட்சம், இங்கு வந்தால் விசா இருந்தாலும் அனுமதிக்க முடியாத சூழ்நிலை என்று விளக்கியிருந்தாலாவது அலைச்சலாவாது அந்த மூதாட்டிக்கு இல்லாமல்  இருந்திருக்கும். 

மருத்துவத் தேவைக்கு என்று வந்தவரை திருப்பி அனுப்பி டமிலரின் பண்பாட்டை நன்றாகவே  காப்பாற்றிவிட்டோம். மனதிருந்தால் மார்க்கமில்லாமலா போயிருக்கும்?

ஒரு வேளை முதல்வர் அறியாமல், அல்லது அவரை மீறிய செயெலெனில் இந்த ஒரு மனிதாபிமான செயலுக்காவது அனைவரையும் ஒன்று திரட்டி தமிழீன்ற தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தலாம். செந்தமிழுக்குமே கூட.

அடுத்ததாக டமிலரின் பண்பாடான பதிவிரதை சர்டிஃபிகேட். கூடிய விரைவில் அரசு பதிவிரதை சர்டிஃபிகேட் கட்டாயமாக்கலாம். பகுத்தறிவு, சுயமரியாதை மண்ணாங்கட்டி எல்லாம் ஒன்றுமே கிடையாது. பதிவிரதைக்கான கையேடு வழங்கும் விழா வெகு விரைவில் நடைபெறக் கூடும். இனி டமில் பெண்கள், காலையில் கணவனின் பாதத்தைக் கும்பிட்டு, பாத பூஜை செய்து, எச்சில் தட்டில் சாப்பிட்டு, டாஸ்மார்க் சரக்கு கலந்து கொடுத்து பதிவிரதை சர்டிஃபிகேட் வைத்திருக்க வேண்டும். (பதி டிக்கட் வாங்கின கேசுக்குன்னு யார்பா நக்கலடிக்கிறது?)

டமில் நாட்டில் பெண்களுக்கு எவ்வளவு உயரிய மரியாதை வழங்கப் பட்டிருக்கிறது, ஈனம் மான காவலரால். குறைந்த பட்சம் நண்பர் நண்பர் என்று தேவைப்படும்போது சொல்லிக் கொண்டதற்காவது இறந்தவரைத் தரக்குறைவாகப் பேசாமல் இருந்திருக்கலாம். 

ஆனால், ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர்’

வயது முதிர்ந்த ஒருவர், ஒரு இனத்தின் காவலன் எனக் கூறப்படும் ஒருவர், ஒரு முதல்வர், தேவையேயில்லாமல் ஒரு பெண்ணை இப்படிப் பேசுவது டமிலனின் சிறப்பில்லாமல் வேறென்ன? டமில்நாட்டில்தான்  இது நடக்கும்.

விரைவில் என் தலைவன் சொல்லட்டும்டி நீ பதிவிரதைன்னு என்று டாஸ்மாக் ஏற்றிக் கொண்டு உதைத்தால் போலீசுக்கு கூட போகமுடியாது என்னும் நிலை வரலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

48 comments:

Santhappanசாந்தப்பன் said...

வெட்க கேடான நிகழ்வு...

கலகலப்ரியா said...

ம்ம்..

settaikkaran said...

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு இவையெல்லாம் காற்றோடு காற்றாய்ப் பறந்துபோய் விட்டன. வெட்கம்!

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

இன்னும் உறைக்கரமாதிரி சொல்லுங்க .
அருமை .

மணிஜி said...

அவரு என்னப் பண்ணுவாரு? தமிழனை நினைப்பாரா? இல்லை இந்திய இறையாண்மைக்கு கட்டுப்படுவாரா? முன்பு அமைதிப்படை கமெண்ட் அடிச்சா மாதிரியெல்லாம் இப்ப முடியாதுல்ல..பொட்டி கழட்டுவாங்க...

VELU.G said...

நடத்துங்க நடத்துங்க

க ரா said...

:(

க.பாலாசி said...

//வயது முதிர்ந்த ஒருவர், ஒரு இனத்தின் காவலன் எனக் கூறப்படும் ஒருவர், ஒரு முதல்வர், தேவையேயில்லாமல் ஒரு பெண்ணை இப்படிப் பேசுவது டமிலனின் சிறப்பில்லாமல் வேறென்ன?//

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...

நீர் ஆதாரம் எங்கேயிருக்கிறது என்று ஒரு சட்டமன்ற பெண் உறுப்பினர் சபையில் கேட்க........நாடாவை அவிழ்த்துப்பாருங்கள் தெரியும் என்று சொன்னவர்தான் நம் முதல்வர். இரட்டை அர்த்த வசனங்களுக்கு பெயர்பெற்றவர்.

க.பாலாசி said...

போக்கத்தப்பயலுங்க... நெனச்சாலே பத்திகிட்டுதான் வருது....

பழமைபேசி said...

வருத்தமான நிகழ்வு!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்ம்... ஒன்னும் சொல்றதுக்கில்ல :((

புலவன் புலிகேசி said...

சே...இவரெல்லாம் முதல்வர்..நாமெல்லாம் தமிழர்..வெட்கக்கேடு...மனிதனாக இருக்கக் கூட லாயக்கில்லை.

ராஜ நடராஜன் said...

பிரபாகரன் தாயார் சென்னை வந்தது பற்றி இயக்குநர் ராம் தளத்தில் நேற்று இரவு காண நேர்ந்தது.

ஒருவர் பயணம் செய்ய இயலுமா இயலாதா என்ற வரையறையை விமான டிக்கட் வாங்கும் விமான தளத்திலேயே பாஸ்போர்ட்,விசா தகுதிகள் போன்றவை பரிசீலிக்கப் பட்டு தீர்மானிக்கப்படுகின்றன.வந்திறங்கும் இடத்தில் தடை தீர்மானித்தவர் யார்?

பிரபாகரனின் தாயார் வயதான காலத்தில் தமிழகம் வருவதற்கு அனுமதி அளிக்க மறுத்ததில் இன்னொரு வரலாற்று குற்றத்தையும் தமிழகம் நேற்று சுமந்து கொண்டது.

சூர்யா ௧ண்ணன் said...

மானக்கேடு..

Unknown said...

ஒன்னும் சொல்லத்தோணலை சார். அந்த நியூஸ் வந்த தினத்தந்தில பஜ்ஜி சாப்டுட்டு ஓசி டி.வியில ஐ.பி.எல் பாத்துட்டு காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டுட்டுப் போவோம் சார்..

ரோஸ்விக் said...

உரியவர்களுக்கு செருப்புகள் ... :-(

என்று வரும் "அந்த" நாள். என் வீட்டில் கோழி இரண்டு அடித்து சாப்பிடுவதற்கு என்ற வளர்க்கப்படுகிறது.

Unknown said...

ரண்டு மூணு வருசமாகவே அவரு,
வாய்ல வந்தது வார்த்தை, பொ.. ல வந்தது .....னு தானே பேசிட்டு திரியறாரு..

மொதலமைச்சர் பாருங்க அதனால அசிங்கமா திட்ட முடியல..

அகல்விளக்கு said...

செருப்பிலடித்தாலும் புத்தி வராது ...

சத்ரியன் said...

//டமிலன் , (ப்+எ)ருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். (சொரணையத்துப் போனப்புறம் ‘ப்’ ஒரு கேடா).//

பாலா,

அடிச்ச அடியில செருப்பு அறுந்து தொங்குது.

Jackiesekar said...

என்னமோ கள்ளத்தோணி, கள்ள ரயில், லாரியில் வந்தாற்போல் மத்திய அரசு கொடுத்த விசா இருந்தும், உடல் நலமற்ற ஒரு மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதன் மூலம், டமிலனின் செஞ்சோற்றுக்கடன் செம்மையாகவே காட்டப்பட்டிருக்கிறது. இதற்கொரு விழாவும் எடுக்கலாம். --//


ஒரு வேலை பாராட்டுவிழாவுக்கு வந்து இருக்காங்கன்னு சொல்லி இருந்தா கண்டிப்பா விட்டு இருப்பாங்க..

சத்ரியன் said...

//மத்திய அரசு கொடுத்த விசா இருந்தும், உடல் நலமற்ற ஒரு மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதன் மூலம், டமிலனின் செஞ்சோற்றுக்கடன் செம்மையாகவே காட்டப்பட்டிருக்கிறது.//

அண்ணா, (என்னைய மன்னிச்சிக்குங்க.)

கர்ணன் ‘செஞ்சோத்துக்கு’ கடன் பட்டவன். சரி,

கருணா, “செஞ்சூ....க்கு’ கடன் பட்டிருக்கானோ என்னவோ?

சத்ரியன் said...

//சே...இவரெல்லாம் முதல்வர்..//

புலிகேசி அண்ணா,

அதென்ன முதல்வர்? மானங்கெட்டவனுக்கு “ர்” ஒரு கேடு!

தாராபுரத்தான் said...

செருப்பில் அடித்தாலும் புத்தி வராது..ங்க. தயவு செய்து ஒட்டை போட்டுவிட்டு படியுங்க..

சிநேகிதன் அக்பர் said...

மனதை காயப்படுத்தும் நிகழ்வு.

ஈரோடு கதிர் said...

டமிளனா றொம்ப பெறுமையா இறுக்கு


தாராபுரத்தண்ணே யார அடிக்கிறது...

இராகவன் நைஜிரியா said...

வெட்கம், அவமானம்... கொடுமை... தமிழ் தலைவர்கள்.... அசிங்கத்தின் உச்ச கட்டம்.

அது சரி(18185106603874041862) said...

ஈனத் தலைவனுக்கு வயதான காலத்தில் பதவி வெறி பிடித்து ஆட்டுகிறது. என்ன பேசுகிறோம் என்றே தெரியாது செல்லும் இடமெல்லாம் அசிங்கப்படுத்தி வைக்கிறது. கேட்டால் இது தான் பகுத்தறிவு என்று பழைய பஞ்சாங்கத்தை திறப்பார்களாக இருக்கும்.!

காமராஜ் said...

வெட்கம்,உலகத்தமிழ் மநாடு கூடட்டும்.ஆனால் எதற்காக?

balavasakan said...

என்ன பண்ணுறது சார் கடவுள் டமிலனை அப்புடி படைச்சுப்போட்டான்..!!

Chitra said...

sir, neenga tamila eluthitteenga..... ilanaa enkku prinjurukkum. ippo neenga enn solrango.... therla.
tamil valga!

ஸ்ரீராம். said...

தமிழ், ஆங்கிலம், மராட்டி எல்லாம் விடுங்க..மனிதாபிமானச் செயல் அல்ல இது.

சங்கர் said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

prince said...

சிந்தனைக்குரிய விஷயம் தான் .....(அடுத்த தேர்தலில் நம்ம பதிவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒட்டு போட்டு முதல்வராக்கி கப்பலேறிய மானத்தை திரும்ப வர வச்சுடலாம் கவலைபடாதீங்க)

பெசொவி said...

தமிழன் என்றொரு இனமுண்டு...தனியே அதற்கொரு குணமுண்டு.....நம் முதல்வர் பச்சை(யாய்ப் பேசும்) தமிழர்.

vinthaimanithan said...

//ஒன்னும் சொல்லத்தோணலை சார். அந்த நியூஸ் வந்த தினத்தந்தில பஜ்ஜி சாப்டுட்டு ஓசி டி.வியில ஐ.பி.எல் பாத்துட்டு காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டுட்டுப் போவோம் சார்..//
மன்னராட்சியில் ”கோன் எவ்வழி.. குடிகள் அவ்வழி”
மக்களாட்சியில் “ குடிகள் எவ்வழி... கொற்றம் அவ்வழி”
6 கோடி மக்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது கருணாநிதியை குறைசொல்லும் தகுதி? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப்போகட்டும்

அஹோரி said...

ஒருவனுக்கு ஒருத்தி என்று இல்லாமல் , மூணு பொண்டாட்டி கட்டின ஒருத்தன் "பதிவிரதை" பற்றி பேச என்ன தகுதி உள்ளது. மர கழண்டு போச்சுன்னு நினைக்கிறேன்.

அஹோரி said...

ஒருவனுக்கு ஒருத்தி என்று இல்லாமல் , மூணு பொண்டாட்டி கட்டின ஒருத்தன் "பதிவிரதை" பற்றி பேச என்ன தகுதி உள்ளது. மர கழண்டு போச்சுன்னு நினைக்கிறேன்.

துபாய் ராஜா said...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்...

priyamudanprabu said...

ம்ம்

என்ன சொல்ல்றதுனே தெரியல

Unknown said...

///சத்ரியன் said...
//டமிலன் , (ப்+எ)ருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். (சொரணையத்துப் போனப்புறம் ‘ப்’ ஒரு கேடா).//

பாலா,

அடிச்ச அடியில செருப்பு அறுந்து தொங்குது.///


repeatttttttttttt....hmmmm....

உண்மைத்தமிழன் said...

கலைஞர் என்று மருவாதையாக அழைத்துத் தொலைகிறோம் அல்லவா.. அதுக்கான தண்டனைதான் இது..?

R.Gopi said...

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - அன்று

கடமை, கண்ணியம், தட்டுப்பாடு - இன்று...

நல்ல விஷயங்கள் நம்ம “தல” ஆட்சியில் வழக்கொழிந்து போய் நெடு நாட்களாகிறதே அய்யா....

தீபன் said...

மனிதத்தை அழித்துவிட்டு தன்னை மானுடன் என்று சொல்லித்திரிகின்றது ஒரு விலங்கு... மூத்த தமிழ் குரங்கு...

ஜோதிஜி said...

நண்பர் சொன்ன வாசகம்.

உலகம் மெச்ச வாழ்ந்தவர்கள் இறந்தவுடன் ஐயோ இவர் இறந்து விட்டார் என்று கண நேரம் உள் அதிர்வு உருவாகும்.

ஆனால்...................

Menaga Sathia said...

//கலைஞர் என்று மருவாதையாக அழைத்துத் தொலைகிறோம் அல்லவா.. அதுக்கான தண்டனைதான் இது..?// ஹா ஹா சூப்பர் நெத்தியடி....

புலவன் புலிகேசி said...

//ஜோதிஜி said...

நண்பர் சொன்ன வாசகம்.

உலகம் மெச்ச வாழ்ந்தவர்கள் இறந்தவுடன் ஐயோ இவர் இறந்து விட்டார் என்று கண நேரம் உள் அதிர்வு உருவாகும்.

ஆனால்...................
//

அய்யய்யோ கேடு கெட்டவன் செத்துப் போய்ட்டானே எங்க கலவரம் நடக்குமோ, எத்தனைப் பேரை கொல்லுவானுங்களோன்னு ஒரு கவலைதான் இருக்கும்..வேற ஒரு மசு....ம் இருக்காது..

வரதராஜலு .பூ said...

இந்த ஆளை இத்தினி நாள் நாம நம்புனோம் பாருங்க அதான் நாம செஞ்ச பெரிய தப்புங்க. இன்னும் ஒரு வருஷம் நாயிங்க ஆட்டம் போடட்டும். இறையாண்மையை இப்படியே காப்பத்தட்டும். அப்புறம் இருக்கு இவனுங்களுக்கு.

பதவி வெறி பிடிச்ச நாயிங்க

Radhakrishnan said...

வருத்தமான நிகழ்வு. இந்த ஒரு விசயம் எனக்குத் தெரியாமலே போயிருந்திருக்கும், நான் அதிகம் நாளிதழ்கள் வாசிப்பது இல்லை.