Tuesday, April 20, 2010

பாலே நடனக்காரன்..

தொடர்ந்தாற்போல் கதிர் இரண்டு மூன்று ஒளகப் படங்களைப் பார்த்து இடுகை போட்டதோடன்றி தொலைபேசியிலும், சிலாகிப்பதைக் கேட்டு ஒருமாதிரியான குற்றவுணர்வு இருந்துக் கொண்டேயிருந்தது. என்னையறியாமலே என் கை முகத்துக்கு நேராகப் போவதும், ஒரு விரல் நெற்றியைச் சுட்டிக் காட்டும் நேரம் மனதுக்குள் ஒளகப்படம் பார்காத நீயெல்லாம் பதிவரா என்ற மனசாட்சியின் டார்ச்சர் வேறு. 

கூகிளாரை வேண்டியதில் பக்கம் பக்கமாக சுட்டிகள் வந்தாலும், என்னையுமறியாமல் பார்க்கத் தோன்றியது ஒரு ரஷ்யமொழித் திரைப்படம்.

Балерина

‘பாலே நடனக்காரன்’ என்ற ரஷ்ய மொழித் திரைப்படத்தைக் காணும் பேறு எதிர்பாராமல் கிட்டியது. அமோரோவ்ஸ்கியின் மிகச் சிறந்தபடம் என கூகிளார் சர்டிஃபிகேட்டும். கொடுத்திருந்தார். சப்டைட்டில் இல்லாத குறையேயின்றி அருமையான நடிப்பினால் கட்டிப் போட்டு விடுகின்றனர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டம் அது. உக்ரைனின் ல்விவ் என்ற ஊரில் ரஷ்யாவின் மிகச்சிறந்த பாலே நடனக் கலைஞர் சான்ட்ரோவ்ஸ்கி. அவரின் பாலே பள்ளியில் பயில உலகெங்குமிருந்தும் மாணவர்கள் ஏங்குவார்கள். அவர் மகள் கடென்கா. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? அவளும் மிகச் சிறந்த பாலே நடனக்காரி.  சாண்ட்ரோவ்ஸ்கி திடீரென பள்ளிப் பொறுப்பிலிருந்து விடுபட்டு, முடங்கிப் போகிறார். மகளின் முன்னேற்றமும் புகழுமே அவருக்கிருக்கும் ஒரே ஆறுதல். 

இன்னோரு ஊரான வின்னிட்சாவில் சற்றேறக் குறைய இதே அளவு பிரசித்தமான பள்ளியின் நடன ஆசிரியை கந்திச்சா. அவள் மகன் ரெமோஸ்கியும் சிறந்த பாலே நடனக்காரன். 

ல்விவ்வில் நடக்கும் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஆட ரெமோஸ்கி குழுவுடன் செல்கிறான். நிகழ்ச்சியில் வெகு சிறப்பாக ஆடியமைக்காக அவனுக்கு பரிசும் பாராட்டும் கிடைக்கிறது. குழுவினருடன் குஷியாக கிளம்பும் ரெமோஸ்கி கடென்காவைச் சந்திக்கிறான். முதல் பார்வையிலேயே மனதைக் கொள்ளையிட்ட கடென்கா ரெமோஸ்கியின் நடனம் குறித்து நக்கலடிக்கிறாள்.

அவள் தோழிகளும், ரெமோஸ்கியின் குழுவினரும் அவரவர் குழுவை சிலாகித்துப் பேச இறுதியில் ரெமோஸ்கியும் கடென்காவும் போட்டியாக நடனமாடி எவர் பள்ளி சிறந்தது என்று தீர்மானிக்க முடிவாகிறது.

கடென்கா அவமானப் படுத்தினாலும், அவளின் துடுக்கும், அழகும் ரெமோஸ்கியை நிலைகுலைய வைக்கிறது. விரைவிலேயே கடென்காவும் தான் ரெமோஸ்கியை காதலிப்பதை உணருகிறாள். 

சாண்ட்ரோவ்ஸ்கியின் அழைப்பினை ஏற்று டின்னருக்குச் செல்லும் ரெமோஸ்கி உணவுக்குப் பிறகு பேசிக் கொண்டிருக்கையில் கந்திச்சாவை பற்றி அறிகிறார். ரெமோஸ்கியின் பர்சிலிருக்கும் புகைப்படத்திலிருந்து சண்டைக்காலத்தில் காணாமல் போன தன் தங்கை என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.

கடென்காவின் சகோதரியின் கணவனுக்கு கடென்காவின் மீது காதல். அவனுக்கு கடென்கா ரெமோஸ்கியை காதலிப்பது தெரியவந்ததும் கொதித்துப் போகிறான். அவளை எப்படியும் அடைந்தே தீருவதென திட்டம் தீட்டுகிறான்.

கடென்கா ரெமோஸ்கி காதல் வெற்றி பெற்றதா, அவர்களிடையேயான நடனப் போட்டி, அவள் அக்காள் கணவரின் சதி என்னவானது என்றெல்லாம் முழுக்கதை சொல்லி ஒரு சிறந்த படத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல.

ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக, இயற்கைச் சூழலில் மனித மனப் போராட்டம், காதல், சதியென்று கதையை நகர்த்திச் செல்லும் விதம் சொல்லத் தரமன்று. பொதுவாக ஒளகத் திரைப்படம் என்றாலே சீரியஸ் என்ற முத்திரையைத் தகர்த்தெரிந்து, ரெமோஸ்கியின் குழுவில் இருக்கும் கந்தர், மண்டோவாஸ்கி, சரல்யேவோ ஆகியோரின் முக்கோணக் காதல், அவர்கள் அடிக்கும் லூட்டி வயிறுகுலுங்கச் சிரிக்கவைக்கும். 

அருமையான நடனக் காட்சிகளும், மனதை மயக்கும் இசையும் டைரக்டர் அமரோவ்ஸ்கியின் கைவண்ணத்திலேயே என்பது நம்மை இன்னும் வியப்புக்குள்ளாக்குவது நிச்சயம். 

அனைவரும் பார்க்கவேண்டிய படம். பார்க்க விழைவோருக்கான சுட்டி இதோ.

(டிஸ்கி:இல்ல தெரியாம கேக்கறேன், முதல் ரெண்டு பாரா படிச்சதுமே இது கரகாட்டக்காரன் மாதிரி இருக்கேன்னு தெரியாம இவ்வளவு தூரம் படிச்சிட்டு சுட்டிய வேற அமுக்குறீங்களே. உள்ளூர்ப்படம் பாருங்க மொதல்ல. அப்புறம் ஒளகப்படம் பார்க்கலாம். ச்ச்ச்செரியா. ஆட்டோ அனுப்பற வேலையெல்லாம் வேணாம். )

58 comments:

க.பாலாசி said...

அட தள்ளாதிங்கப்பா... முத துண்டு நானு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களுக்கு ஒரு நாளுக்கு எத்தனை மணிநேரம் பாலா...:))

Unknown said...

ரெண்டாவது நானு...

அது சரி.... இப்டி போட்டி போட்டு படிக்க வரோம்ல.... இந்த டிஸ்கி திட்டு தேவதாம்லே.....ஆட்டோ இல்ல...ஆம்புலன்ஸ் அனுப்பறேன் .. எனக்கு முன பாலாசி ஆட்டோ அனுப்பன சத்தம் கேட்டது சார்...

Unknown said...

அவ்வ்வ்வ்... கமென்ட் போடும் முன்னே ஒரு கமென்ட்... மீ தி தேர்ட்...

Unknown said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

ங்கொய்யாலே

இதுக்குனே... இன்னும் பத்துப் படம் பார்த்து எழுதித்தள்ரேன்

ஈரோடு கதிர் said...

//உள்ளூர்ப்படம் பாருங்க மொதல்ல//

எனக்கு கார்த்தி உள்ளூர் பட டிவிடி தர மாட்டேங்குறாரே...

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
அட தள்ளாதிங்கப்பா... முத துண்டு நானு...//

துண்டு போட்டா போதாது..

கமெண்ட் போடனும்டி... கமெண்ட்

க.பாலாசி said...

//ஒளகப்படம்//

ஓ... இது ஒலகப்படமா... ரொம்ப நேரமா அவ்கப்படம்னா என்னடான்னு முழிச்சிட்டேன்....

ஈரோடு கதிர் said...

//கரகாட்டக்காரன் மாதிரி இருக்கேன்னு//

கெண்டநிம, நெந்சில்.... ரெண்டு பேரு அடிக்கிற வாயப்பய சோக்கு எங்க ராசா...

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
துண்டு போட்டா போதாது..
கமெண்ட் போடனும்டி... கமெண்ட்//

மேலயே நின்னுகிட்டிருந்தா இப்டித்தான்...கொஞ்சம் கீழ எறங்கி பாருங்க....

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
ரொம்ப நேரமா அவ்கப்படம்னா என்னடான்னு முழிச்சிட்டேன்....//

எல்லாத்துக்கும்தான் முழிக்கிறே..

இதுல என்ன சாமி புதுசா!!!!

நேசமித்ரன். said...

ஆஹா .. நினைச்சேன் ஆனா கேரக்டர் பேருங்க

ம்ம் செம செம ...

மணிஜி said...

கதிர் ஆணி எதுவும் புடுங்கலையா?

ஈரோடு கதிர் said...

//மணிஜீ...... said...
கதிர் ஆணி எதுவும் புடுங்கலையா?//

ஒன்னும் புடுங்கலை மணிஜீ..

நீங்க + போட்ட டோண்டுக்கு இப்பத்தான் மைனஸ் போட்டுட்டு வந்தேன்

ஈரோடு கதிர் said...

//கதிர் இரண்டு மூன்று ஒளகப் படங்களைப் பார்த்து//

நான் பாத்தது 10 படத்துக்கு மேல இருக்கும்....

பாவம் மக்கள்னு எழுதாம விட்டுட்டேன்

ராஜ நடராஜன் said...

என்னது கரகாட்டக்காரனா?

பேசாம கரகாட்டக்காரின்னே தலைப்பு வச்சிருக்கலாம்:)

Unknown said...

நீங்களுமா..??

க.பாலாசி said...

//அனைவரும் பார்க்கவேண்டிய படம்//

ம்ம்ம்....

//உள்ளூர்ப்படம் பாருங்க மொதல்ல. அப்புறம் ஒளகப்படம் பார்க்கலாம்//

‘மிகவும்’ நெகிழவைத்த வரிகள்....

அமுதா கிருஷ்ணா said...

நற நற...நிஜம்னு படிக்க ஆரம்பிச்சா..ஆட்டோ தான் சரி..

பா.ராஜாராம் said...

:-))

அதகளம்..

பின்னூட்டங்களையும் சேர்த்து...

கலகலப்ரியா said...

தினம் மோர் சாதம் சாப்ட்டே இவ்ளோ கொழுப்பு ஆகாது சாரே..

வேலை மெனக்கெட்டு படம் புடிச்சு போட்டதுக்கு ஒரு குட்டு.. அதுதான் சார் ஓட்டு...

ஆமா... ஒலகப் படம்னு நக்கலா கரகாட்டன் படம சொல்லுறியளே... ஏன் இந்தியாவ ஒலக வரைபடத்தில இருந்து தூக்கிட்டாய்ங்களா... இல்லைன்னா அது இந்த ஒலகத்திலயே இல்லையா... பார்த்து சார்... நாட்டுப் பற்றாளர்கள் கொடி புடிக்க போறாய்ங்க...

(ராமராஜன் பாலே ஆடினா எப்பூடி இருக்கும்னு நெனச்சுப் பார்க்கறேன்.. ஊஹூம்.. முடியல..)

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
(ராமராஜன் பாலே ஆடினா எப்பூடி இருக்கும்னு நெனச்சுப் பார்க்கறேன்.. ஊஹூம்.. முடியல..)//

யெம்ம்ம்மாடி...
ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு..


அதே சென்ஸ்ல...
பாலே ஆடுறவன் கரகாட்டம் ஆடினா எப்புடி இருக்கும்...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......

ரோகிணிசிவா said...

O MY GOD, இனிமே டிஸ்கி படிக்காம பதிவு படிக்கறது இல்ல , பதிவுலக நண்பர் ஒருவர் கொடுத்தாரேன்னு,படிச்சுட்டு அட நல்ல மனுசன் லிங்க் குடுத்து இருக்கார்னு சூட்டிய பார்த்தா ராம்ஸ் கனகா , என்னடா ,இணையதளம் பிரச்சினைன்னு நினைச்சு ,அன்பர் கிட்ட என்ன கரகாட்டக்காரன் இருக்குனு கேட்டா அது தான் ம்மா னார்,என்னல முடியல ஆம்புலன்ஸ் பிடிச்சு நானே ஆசுபத்திரிக்கு போய்டேன் !!!! please rohini, keep away from thirai vimarsanams!!!!

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.......

எம்.எம்.அப்துல்லா said...

/ ஈரோடு கதிர் said...
ங்கொய்யாலே

இதுக்குனே... இன்னும் பத்துப் படம் பார்த்து எழுதித்தள்ரேன்

//

ங்கொய்யால இதுக்காகவே பிளாக் படிக்கிறதை நிறுத்துறேன் :))

ஈரோடு கதிர் said...

//எம்.எம்.அப்துல்லா said...
ங்கொய்யால இதுக்காகவே பிளாக் படிக்கிறதை நிறுத்துறேன் :))//

அப்துல்லா அண்ணனுக்கு ஒரு பத்து பட விமர்சனம் மெயில்ல பார்சல்ல்ல்ல்ல்ல்

Paleo God said...

சார், வேணாம், வலிக்கிது, அவ்வ்வ்வ்வ்..

:)

கலகலப்ரியா said...

////கலகலப்ரியா said...
(ராமராஜன் பாலே ஆடினா எப்பூடி இருக்கும்னு நெனச்சுப் பார்க்கறேன்.. ஊஹூம்.. முடியல..)//

யெம்ம்ம்மாடி...
ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு..


அதே சென்ஸ்ல...
பாலே ஆடுறவன் கரகாட்டம் ஆடினா எப்புடி இருக்கும்...//

ம்க்கும்.. ஒத்துக்கறேம்பா... இவரு ஒலகப்படம் பார்க்கறாரு... விஷூவலா திங்க் பண்ண வேற செய்றாரு... (ஆனாலும் ராமராஜன் சென்ஸ்ல ஆடனும்னு எதிர்பார்க்கறது கொஞ்சம் டூ மச்தான்..)

Unknown said...

ரொம்ப கவனமாத்தே படிச்சேன். என்னடா நம்மாளு வார்த்தைக்கு வார்த்தை ஒளக படம் ஒளகப் படமுன்னு
சொல்லுறாரேன்னு கொஞ்சம் சந்தேகப்பட்டேன். இருந்தாலும்
கடைசியில சுட்டியையும் சுட்டிட்டமுல்லோ.
ஆளை உடுங்க சாமிகளா

சத்ரியன் said...

//புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?//

பகவானே,

உமக்கு பதில் தெரியலேன்னா, எம்மை எதுக்கு ஓய் குழப்பறேள்?

சத்ரியன் said...

பகவானே,

ஒலகப் படம் பாக்கனும்னாலும் ,ஒலக
பாஷை ஒன்னுமே புரியாதே என்ன பண்ணலாம்னு யோசிச்சி, தேடி , ஒரு வழியா ‘கரகாட்டக்காரன்’ படத்த கண்டுக்கினு, பாத்து தொலஞ்சதும் இல்லாம,

‘ஒலக சினிமா விமர்சனம்’ வேற.

சத்ரியன் said...

//ஆட்டோ அனுப்பற வேலையெல்லாம் வேணாம்//

பகவானே,

வாசல்ல வந்து ’வெய்ட்’ பண்ணுங்க. டாக்ஸி வந்துக்கிட்டிருக்கு.

நசரேயன் said...

அண்ணே காத்து வெளி நாட்டு பக்கம் எல்லாம் அடிக்குது என்ன விசேஷம்?

சிநேகிதன் அக்பர் said...

என்னா ஒரு சிந்தனை. கலக்குங்க சார்.

settaikkaran said...

மெய்யாலுமே ஒரு ரஷியன் படம் போலிருக்குதே, இதை வச்சு ஊருக்குள்ளே ஒரு ஓட்டு ஓட்டலாமுன்னு வந்து பார்த்தா, இப்படிச் சாய்ச்சுப்புட்டீங்களே! :-))))

vasu balaji said...

@@பாலாசி. இந்த லொல்லுதானே வேணாம்:))

vasu balaji said...

// T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களுக்கு ஒரு நாளுக்கு எத்தனை மணிநேரம் பாலா...:))//

:( 24தான் சார்:))

vasu balaji said...

Hanif Rifay said...

ரெண்டாவது நானு...

அது சரி.... இப்டி போட்டி போட்டு படிக்க வரோம்ல.... இந்த டிஸ்கி திட்டு தேவதாம்லே.....ஆட்டோ இல்ல...ஆம்புலன்ஸ் அனுப்பறேன் .. எனக்கு முன பாலாசி ஆட்டோ அனுப்பன சத்தம் கேட்டது சார்...//

பாலாசிக்கே திருப்பி அனுப்பிட்டனே:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

ங்கொய்யாலே

இதுக்குனே... இன்னும் பத்துப் படம் பார்த்து எழுதித்தள்ரேன்//

வேணாம். பேசித் தீத்துக்கலாம். எனக்கு அவ்ளோ படக் கதை எல்லாம் தெரியாது.

/எனக்கு கார்த்தி உள்ளூர் பட டிவிடி தர மாட்டேங்குறாரே.../

அடப்பாவி கார்த்தி. டிவிடியும் கொடுத்து அப்பாவி மாதிரி பின்னூட்டம் வேற போடுறியா?

/துண்டு போட்டா போதாது..

கமெண்ட் போடனும்டி... கமெண்ட்/

அண்ணே ஓட்டுண்ணே:))

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

என்னது கரகாட்டக்காரனா?

பேசாம கரகாட்டக்காரின்னே தலைப்பு வச்சிருக்கலாம்:)//

ஆமாம்ல:)

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//கரகாட்டக்காரன் மாதிரி இருக்கேன்னு//

கெண்டநிம, நெந்சில்.... ரெண்டு பேரு அடிக்கிற வாயப்பய சோக்கு எங்க ராசா...//

தாருங்க இவங்க. ஓ கந்தர், மண்டோவ்ஸ்கியா:))

vasu balaji said...

NESAMITHRAN said...

ஆஹா .. நினைச்சேன் ஆனா கேரக்டர் பேருங்க

ம்ம் செம செம ...//

ஆமா சார். உக்ரேனியன் நேம்ஸ் பார்த்து கிட்ட கிட்ட இருக்கறதா செலெக்ட் பண்ணி...ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. ரொம்ப சிரமப்பட்டுட்டேன்:))

vasu balaji said...

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

நீங்களுமா..??//

ஹி ஹி. சேர்க்க சரியில்ல தம்பி:))

vasu balaji said...

க.பாலாசி said...

//அனைவரும் பார்க்கவேண்டிய படம்//

ம்ம்ம்....

//உள்ளூர்ப்படம் பாருங்க மொதல்ல. அப்புறம் ஒளகப்படம் பார்க்கலாம்//

‘மிகவும்’ நெகிழவைத்த வரிகள்....//

அடிங்கொய்யால:))

vasu balaji said...

அமுதா கிருஷ்ணா said...

நற நற...நிஜம்னு படிக்க ஆரம்பிச்சா..ஆட்டோ தான் சரி../

ஆஹா! மொதக்கா வர்ரீங்க. இப்புடியா மெறட்றது.:))

vasu balaji said...

பா.ராஜாராம் said...

:-))

அதகளம்..

பின்னூட்டங்களையும் சேர்த்து...//

அம்புட்டும் பாசக்கார புள்ளைங்க:)). நம்ம பதிவுக்கு பாதி உசுரு இவங்க கொடுக்கறதுதான் இல்லையா பா.ரா.

vasu balaji said...

கலகலப்ரியா said...

தினம் மோர் சாதம் சாப்ட்டே இவ்ளோ கொழுப்பு ஆகாது சாரே..//

=)).ஷ்ஷ்ஷ் கம்பேனி சீக்ரட்

வேலை மெனக்கெட்டு படம் புடிச்சு போட்டதுக்கு ஒரு குட்டு.. அதுதான் சார் ஓட்டு...//

நன்னி நன்னி மோளே!

ஆமா... ஒலகப் படம்னு நக்கலா கரகாட்டன் படம சொல்லுறியளே... ஏன் இந்தியாவ ஒலக வரைபடத்தில இருந்து தூக்கிட்டாய்ங்களா... இல்லைன்னா அது இந்த ஒலகத்திலயே இல்லையா... பார்த்து சார்... நாட்டுப் பற்றாளர்கள் கொடி புடிக்க போறாய்ங்க...//

புடிச்சாலும் புடிப்பாய்ங்க. அவிய்ங்க கொடி. அவிய்ங்க புடிக்கிறாக:))

(ராமராஜன் பாலே ஆடினா எப்பூடி இருக்கும்னு நெனச்சுப் பார்க்கறேன்.. ஊஹூம்.. முடியல..)

vasu balaji said...

@@நன்றி சித்ரா

vasu balaji said...

ரோகிணிசிவா said...

O MY GOD, இனிமே டிஸ்கி படிக்காம பதிவு படிக்கறது இல்ல , பதிவுலக நண்பர் ஒருவர் கொடுத்தாரேன்னு,படிச்சுட்டு அட நல்ல மனுசன் லிங்க் குடுத்து இருக்கார்னு சூட்டிய பார்த்தா ராம்ஸ் கனகா , என்னடா ,இணையதளம் பிரச்சினைன்னு நினைச்சு ,அன்பர் கிட்ட என்ன கரகாட்டக்காரன் இருக்குனு கேட்டா அது தான் ம்மா னார்,என்னல முடியல ஆம்புலன்ஸ் பிடிச்சு நானே ஆசுபத்திரிக்கு போய்டேன் !!!! please rohini, keep away from thirai vimarsanams!!!!//

ஏனுங் . அன்பரப் பத்தி தெரிஞ்சுமா நம்புவீங்க. :)). முதல் வருகைக்கும் கலக்கல் பின்னூட்டத்திர்க்கும் நன்றி.

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

/ ஈரோடு கதிர் said...
ங்கொய்யாலே

இதுக்குனே... இன்னும் பத்துப் படம் பார்த்து எழுதித்தள்ரேன்

//

ங்கொய்யால இதுக்காகவே பிளாக் படிக்கிறதை நிறுத்துறேன் :))/

நோ.நோ. பேட்வர்ட்ஸ். நாங்க பாவம். :))

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சார், வேணாம், வலிக்கிது, அவ்வ்வ்வ்வ்..

:)//

அவ்ளோ தாடி வளர்த்துட்டு செல்ஃப் ஷேவ் பண்ணா வலிக்காத பின்ன:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

////கலகலப்ரியா said...
(ராமராஜன் பாலே ஆடினா எப்பூடி இருக்கும்னு நெனச்சுப் பார்க்கறேன்.. ஊஹூம்.. முடியல..)//

யெம்ம்ம்மாடி...
ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு..//

ஒளகப்படம் பார்த்த தெனாவட்டு:))


அதே சென்ஸ்ல...
பாலே ஆடுறவன் கரகாட்டம் ஆடினா எப்புடி இருக்கும்...//

ம்க்கும்.. ஒத்துக்கறேம்பா... இவரு ஒலகப்படம் பார்க்கறாரு... விஷூவலா திங்க் பண்ண வேற செய்றாரு... (ஆனாலும் ராமராஜன் சென்ஸ்ல ஆடனும்னு எதிர்பார்க்கறது கொஞ்சம் டூ மச்தான்..)//

ஃபோர்மச்

vasu balaji said...

@@வாங்க தாமோதர்:)). டமாசு..ஹி ஹி

"உழவன்" "Uzhavan" said...

:-)))

Unknown said...

அடுத்த ஹாட் ....

பார்வேர்ட் மெயில் - நித்யானந்தா வந்து பாருங்கள் சார்...

துபாய் ராஜா said...

ஹா...ஹா..ஹா.. பாதி படிக்கும் போதே பொறி தட்டுச்சு. டிஸ்கி படிச்சு டவுட் கிளியராயிடுச்சு.. :))