டிஸ்கி: (ரண்டு நாளா ஒரே அழுவாச்சி. வீக் எண்ட்ல எதுக்கு மூட கெடுக்கணும்னு இந்த மொக்கை. ஒவ்வொருத்தரு வலைப்பூவிலயும் என்னா தத்துவம்டா சாமீ!)
பழமைபேசி:/எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!/
என்னதான் இரவிரவா வலைமேஞ்சாலும் நித்திரைக்கு போறப்ப ஜிமெயில்ல ஏதாச்சும் பின்னூட்டமிருக்கானு பார்த்து அவுத்துவுட்டுதான் தூங்கணும்.
மணிஜீ: /நானும் கொஞ்சம் பேசுகிறேன்..../
தாடிக்குள்ள வாயசையறது தெரியமாட்டங்குதாங்ணா.
பின்னோக்கி: /பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்/
பின்னாடி பார்த்துக்கிட்டே போய் ஒரு வாட்டி மேன்ஹோல்ல விழுந்தப்புறம் திரும்ப அந்த தப்பு நடக்குமா? எப்புடீஈஈஈ
ஸ்நேக் பிரபா: /பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே!.... பிரபாகர்./
ங்கொய்யால. வரும்போதே க்ரூப் சேர்க்கறதுங்கற தீர்மானத்தோடதான் வந்தீரோ?
பலாபட்டறை ஷங்கர்: /பலா என்றால் இனிப்பு. பட்டறை என்றால் பட்டறைதான் - விளக்கம் = ஷங்கர் (நாந்தான்). /
விளக்கத்துக்கே விளக்கம் அடைப்புக்குள்ளயாம்யாம்யா
கதிர் ஈரோடு: /நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்/
ஓஹோ. கட்டைன்னும் சொல்லலாம் மரம்னும் சொல்லலாம். நகரத்துல இருக்கிறப்ப காதல் கவுஜ கிராமத்து பக்கம் போனா மரம் வளர்க்கற இடுகை. என்னா வில்லத்தனம்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீ
பாலாசி: /சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை./
தபார்ரா. உள்ளூரு ஓணான் இல்லாம அசலூரு ஆந்தையெல்லாம் அலறுதாம் பாலாசி வாரான் கட் அண்ட் பேஸ்ட் போடன்னு ரவுசப்பாரு.
நசரேயன்: /தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு/
ம்கும். துண்டு போடத் தெரியலைன்னாலும் இடுகை போடுறதுல என்னா உசாரு! தப்பெழுதுவியான்னு முட்டிய தட்டுவாங்கன்னு தடிய எடுக்க கூடாதாம்.
ஜெட்லி & கோ: /நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து, படித்து, கேட்டு ரசித்தவற்றை இங்கே பகிர்வோமாக./
பாக்குறவரு ஜெட்லி, படிக்கிறவரு சாரு சங்கர், கேட்டு சொல்றவர் சித்துவா?
சேட்டைக்காரன்: /ஏன்? பெயர்,வயசு,ஊரு எல்லாம் சொன்னாத்தான் படிப்பீங்களாக்கும்?/
இப்புடி போட்டா மட்டும் சொல்லுன்னு கேட்றுவமாக்கும்.
துபாய் ராஜா: /இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு./
ஃபாலோயர் விட்ஜட்ட காணோமாம். இப்புடி போட்டா சரியா போச்சா?
செந்தில்வேலன்: /இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று../
ஊறுகா போடணும்னா கனி உதவாதே! ஒதைக்கிற மாட்ட ஊசி போட்டுதானே கறந்தாவணும்.
சூர்யா கண்ணன்: /இப்பொழுது "கம்ப்யூட்டர்" விற்றுக் கொண்டிருக்கிறேன், அவ்வப்பொழுது கீரையும் கூட..,/
கம்ப்யூட்டர் புரியாத மண்டையில கீரையாவது வளத்துக்கன்னா பாஸ்?
கார்த்திகைப் பாண்டியன்: /மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே.../
இதத்தான் பொட்ட்டு வாஆஆங்கறதுன்னு பார்த்திபன் அண்ணா சொல்லிக் குடுத்துட்டாருல்ல. சிக்கமாட்டம்டியேய்.
நைஜீரியா ராகவன்: /நானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்../
கார்னாலும் சரி பதிவுன்னாலும் சரி வாரம் ஒரு வாட்டி ஸ்டார்ட் பண்ணி ஒரு ரவுண்ட் வரணும்னே.
கலகலப்ரியா: /பாரதியின் பரம விசிறி, "ரௌத்ரம்" மட்டும் பழகிக் கொண்டிருக்கும் பயங்கரவாதி!/
ஹி ஹி! இதப்போய் நீ கரப்பான் பூச்சிகிட்ட சொல்லி மிரட்ட, அது பதிலுக்கு மீசைய ஆட்டி உன்னைய வெறுப்பேத்தி டுர்ர்ருன்னு பறந்து வந்து உன் மூக்குமேல உக்காந்துச்சின்னு வைய்யீ..ஹய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ ஹைய்ய்யோ
வானம்பாடிகள்: /தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்/
உன் ‘அவசரத்துக்கு’ நடுவில இந்த மொக்க உன்ன எப்புடி பாதிச்சிது சொல்றா வானம்பாடி.
~~~~~~~~~~~~~~~~
98 comments:
அடக்கடவுளே, இதக்கூட விடமாட்டீங்களா?
நடத்துங்க நடத்துங்க....
பிரபாகர்...
aha vada Poochey..........
//
வானம்பாடிகள்: /தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்/
உன் ‘அவசரத்துக்கு’ நடுவில இந்த மொக்க உன்ன எப்புடி பாதிச்சிது சொல்றா வானம்பாடி.//
அதானே! பார்த்தேன் .. எங்கடா உங்கள காணோம்னு..
இது சூப்பர் தலைவா!
என்னதான் சொல்லுங்க, அந்தக்காலத்து ஆளுங்க குறும்பே(குசும்பே?)அலாதி தான்! :-))
ரைட்டு....!!!
ஆஹா... ஆரம்பிச்சுட்டாரய்யா.. ஆரம்பிச்சுட்டாரு...
நடக்கட்டும்..
அண்ணே ஒரு அழுவாச்சியா வருது அண்ணே...
என்னையும் ஒரு வலைப்பதிவர் ரேஞ்சுக்கு திங்க் பண்ணி போட்டு இருக்கீங்களே...
ரொம்ப நன்றிங்க அண்ணே...
// சேட்டைக்காரன் said...
என்னதான் சொல்லுங்க, அந்தக்காலத்து ஆளுங்க குறும்பே(குசும்பே?)அலாதி தான்! :-))
ரைட்டு....!!! //
ஹலோ.. யாருங்க அந்த காலத்து ஆளுங்க... எங்க தானைத் தலைவன் வானம்பாடிகள் ... இன்றும் யூத்துதாங்க... இன்றைய மனிதன்..
அடப்ப்ப்ப்ப்ப்ப்பவி மனுசா!!!
யோவ்... தீவிரவாதிங்களே... ட்ரெய்ன எல்லாம் கடத்திட்டுப் போறீங்களே....
இந்த மனுசன் அங்கதான உக்காந்திருக்காரு... முதல்ல இவர கடத்திட்டுப் போங்களேன் ’தில்’ இருந்தா
// (ரண்டு நாளா ஒரே அழுவாச்சி. வீக் எண்ட்ல எதுக்கு மூட கெடுக்கணும்னு இந்த மொக்கை. ஒவ்வொருத்தரு வலைப்பூவிலயும் என்னா தத்துவம்டா சாமீ!) //
நன்றி...
// ஈரோடு கதிர் said...
அடப்ப்ப்ப்ப்ப்ப்பவி மனுசா!!!
யோவ்... தீவிரவாதிங்களே... ட்ரெய்ன எல்லாம் கடத்திட்டுப் போறீங்களே....
இந்த மனுசன் அங்கதான உக்காந்திருக்காரு... முதல்ல இவர கடத்திட்டுப் போங்களேன் ’தில்’ இருந்தா //
பாவம் தீவிரவாதிங்க...
// மணிஜீ: /நானும் கொஞ்சம் பேசுகிறேன்..../
தாடிக்குள்ள வாயசையறது தெரியமாட்டங்குதாங்ணா.//
அவ்வளவு பெரிய தாடி வளர்த்துட்டாரா என்ன...
ஆஹா. கும்மி ஸ்டார்ட்ஸ். அண்ணன் ரொம்ப நாளைக்கப்புறம் ஃபார்ம்ல:))
// பின்னோக்கி: /பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்/
பின்னாடி பார்த்துக்கிட்டே போய் ஒரு வாட்டி மேன்ஹோல்ல விழுந்தப்புறம் திரும்ப அந்த தப்பு நடக்குமா? எப்புடீஈஈஈ//
எப்படி அண்ணே... இவ்வளவு சீரியசா திங்க் பண்றீங்க... இதுக்காக எதாவது ஸ்பெஷல் லேகியம் சாப்பிடுவீங்களோ..
சூப்பர் Bala
இது கூட நல்லாதான் இருக்கு
/எப்படி அண்ணே... இவ்வளவு சீரியசா திங்க் பண்றீங்க... இதுக்காக எதாவது ஸ்பெஷல் லேகியம் சாப்பிடுவீங்களோ..//
இது அப்ப காமெயிடியில்லையா:(( அவ்வ்வ்வ். கவுத்துப்புட்டீங்களே அண்ணே.
ஐயா, ஐயோ, ஐயையையோ
அய்யோ.. முடியலீங்க..
இனி டாக் லைல் போடவே ஓசிக்கனும் போல இருக்கே.. :))
//அஹமது இர்ஷாத் said...
aha vada Poochey..........//
இதுக்கு எனக்கு அர்த்தம் புரியலீங்க.
//பழமைபேசி:/எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!/
என்னதான் இரவிரவா வலைமேஞ்சாலும் நித்திரைக்கு போறப்ப ஜிமெயில்ல ஏதாச்சும் பின்னூட்டமிருக்கானு பார்த்து அவுத்துவுட்டுதான் தூங்கணும்.
//
இது.. இது தான் டாப்பு.. :))
இப்படிக் கூடவா..?
நெனச்சேன்... இன்னைக்கு கும்மாங்குத்து உண்டுன்னு...
//ஹி ஹி! இதப்போய் நீ கரப்பான் பூச்சிகிட்ட சொல்லி மிரட்ட, அது பதிலுக்கு மீசைய ஆட்டி உன்னைய வெறுப்பேத்தி டுர்ர்ருன்னு பறந்து வந்து உன் மூக்குமேல உக்காந்துச்சின்னு வைய்யீ..ஹய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ ஹைய்ய்யோ//
அப்பறமென்ன கரப்பான்பூச்சியை பழக்கும் பயங்கரவாதின்னு போட்டுக்கவேண்டியதுதான்.
இப்டில்லாம் நடந்திருக்கும்னு நெனைக்குறேன். அதுனாலத்தான் அந்த தத்துவத்த கண்டுபிடிச்சி போட்டிருக்காங்க...
//பலாபட்டறை ஷங்கர்: /பலா என்றால் இனிப்பு. பட்டறை என்றால் பட்டறைதான் - விளக்கம் = ஷங்கர் (நாந்தான்). /
விளக்கத்துக்கே விளக்கம் அடைப்புக்குள்ளயாம்யாம்யா//
நல்லவேள பலா என்றால் பலா அப்டின்னு சொல்லாம விட்டாரேன்னு நான் சந்தோஷப்பட்டுகிட்டிருக்கேன்....
//ஸ்நேக் பிரபா://
ஆகா... இதுக்குத்தான் பாம்பு புடிச்ச கதையெல்லாம் வெளியில சொல்லப்படாதுன்னு சொல்றது....
நாங்கதான் ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராசா வச்சிருக்கோம்ல...
//ங்கொய்யால. வரும்போதே க்ரூப் சேர்க்கறதுங்கற தீர்மானத்தோடதான் வந்தீரோ?//
பாருங்க நான் சொன்னேன்ல... இப்ப என்ன சொல்றீங்க பிரபாகர் அண்ணே....
//கதிர் ஈரோடு: ஓஹோ. கட்டைன்னும் சொல்லலாம் மரம்னும் சொல்லலாம். நகரத்துல இருக்கிறப்ப காதல் கவுஜ கிராமத்து பக்கம் போனா மரம் வளர்க்கற இடுகை. என்னா வில்லத்தனம்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீ//
ம்ம்ம்க்கும்... நீங்களே விசாரிச்சு சொல்லுங்க.... நல்லா வச்சாருங்க பேர... கசியும் மவ்வ்வ்வ்வுனம்னு.......
//பாலாசி: தபார்ரா. உள்ளூரு ஓணான் இல்லாம அசலூரு ஆந்தையெல்லாம் அலறுதாம் பாலாசி வாரான் கட் அண்ட் பேஸ்ட் போடன்னு ரவுசப்பாரு.//
நாம பண்ற நல்ல விசயங்கள் செலபேரு கண்ணுக்கு அப்டி தெரியுதுபோல.... என்ன பண்றது... நல்லதுக்கே காலமில்லைங்க....
//சேட்டைக்காரன்:
இப்புடி போட்டா மட்டும் சொல்லுன்னு கேட்றுவமாக்கும்.//
இல்ல படிச்சிடுவோம்மா.....என்ன சின்னப்புள்ளத்தனமாயிருக்கு....
//செந்தில்வேலன்://
இவருக்குமா....அவருபாட்டுக்கு தான் உண்டு தான் வேலையுண்டுன்னு இருக்காரு....... நடத்துங்க...
//பழமைபேசி:
என்னதான் இரவிரவா வலைமேஞ்சாலும் நித்திரைக்கு போறப்ப ஜிமெயில்ல ஏதாச்சும் பின்னூட்டமிருக்கானு பார்த்து அவுத்துவுட்டுதான் தூங்கணும்.//
ஓ.... வேற வழி.....
//சூர்யா கண்ணன்: /இப்பொழுது "கம்ப்யூட்டர்" விற்றுக் கொண்டிருக்கிறேன், அவ்வப்பொழுது கீரையும் கூட..,/
கம்ப்யூட்டர் புரியாத மண்டையில கீரையாவது வளத்துக்கன்னா பாஸ்?//
கீரையாவதா!!!!!!?? யோசிக்கவேண்டியதாயிருக்கே... ‘நம்ம’ செட்டுங்களா இவரு....
எங்க முகிலன் ??? மிஸ்ஸாயிட்டாரே.......
புதுமையாக உள்ளது ஐயா..
//பாரதியின் பரம விசிறி, "ரௌத்ரம்" மட்டும் பழகிக் கொண்டிருக்கும் பயங்கரவாதி!/
ஹி ஹி! இதப்போய் நீ கரப்பான் பூச்சிகிட்ட சொல்லி மிரட்ட, அது பதிலுக்கு மீசைய ஆட்டி உன்னைய வெறுப்பேத்தி டுர்ர்ருன்னு பறந்து வந்து உன் மூக்குமேல உக்காந்துச்சின்னு வைய்யீ..ஹய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ ஹைய்ய்யோ
//
கலகல .... ஹா ஹா ஹா .....
ரசித்தேன் .
//ங்கொய்யால. வரும்போதே க்ரூப் சேர்க்கறதுங்கற தீர்மானத்தோடதான் வந்தீரோ?//
நல்லா கேட்டீங்க. மானம் ராசம் உள்ளவரா இருந்தா நாக்கப்புடுங்கிக்கிட்டு.... ஐய்யய்யோ அதுக்கு மேல மறந்து போச்செ!
// /தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்/
உன் ‘அவசரத்துக்கு’ நடுவில இந்த மொக்க உன்ன எப்புடி பாதிச்சிது சொல்றா வானம்பாடி.//
ம்ம்ம்! அப்புறம்?
நம்மல யாரும் ஒன்னும் சோல்றப்பிடாதுன்னு எவ்வளவு உஸாரு , மனுசன்...!
வர வர உங்க ரவுசு தாங்க முடியலைங்க.. :-))
// க.பாலாசி said...
எங்க முகிலன் ??? மிஸ்ஸாயிட்டாரே.......
//
அய்யா பாலாசீ... நான் தத்துவம் பித்துவம் எதுவும் எழுதாம நல்லவனா இருக்கேன். என்னைய வம்புல மாட்டி விடாம இருக்க முடியாதா?
முடியல...
ம்ம்ம கடைசியில் அசத்தல்.ஃ... போங்க ஆனாலும் இந்த மொக்கை நல்லாவே இருக்கு....
THE LAST ONE ROCKING!
கலக்கலய்யா. கலக்கல்.
// பிரபாகர் said...
அடக்கடவுளே, இதக்கூட விடமாட்டீங்களா? //
அண்ணன் எதை விட்டு வச்சுருக்கார்... இதை விட்டு வைப்பதற்கு... அண்ணன் ஆல்வேஸ் கிரேட்
// அஹமது இர்ஷாத் said...
aha vada Poochey.......... //
நோ கிரையிங்... நாங்க எல்லாம் வருத்தப் படறமா பாருங்க...
அடுத்த இடுகையில பிடிச்சுக்கலாம்..
// சூர்யா ௧ண்ணன் said...
அதானே! பார்த்தேன் .. எங்கடா உங்கள காணோம்னு..
இது சூப்பர் தலைவா! //
அண்ணே உங்களை சுத்தி எவ்வளவு அப்பாவியா இருக்காங்க பாருங்க அண்ணே... நாம சொல்வதற்கு முன் அண்ணன் முந்திகிட்டாருப்பா...
// வானம்பாடிகள் said...
ஆஹா. கும்மி ஸ்டார்ட்ஸ். அண்ணன் ரொம்ப நாளைக்கப்புறம் ஃபார்ம்ல:))//
ஆமாம் அண்ணே...
ரொம்ப நாளாச்சு அண்ணே உங்க வலைப்பூவில் கும்மி அடிச்சு...
கும்மி அடிப்பதன் சுகம்... வேறு எதிலும் கிடையாதுங்க..
அருமை
அற்புதம்
பிரமாதம்.
கலக்கல்
ஆஹா...
மீ த 50
##// ச.செந்தில்வேலன் said...
அய்யோ.. முடியலீங்க..
இனி டாக் லைல் போடவே ஓசிக்கனும் போல இருக்கே.. :))##
நாம யோசிக்காம போட்டத அவர் யோசிச்சதால வந்த வினைதாங்க இது
##//அஹமது இர்ஷாத் said...
aha vada Poochey..........//
இதுக்கு எனக்கு அர்த்தம் புரியலீங்க. ##
காக்கா வந்து வடைய தூக்கிட்டு போயிடுச்சுன்னு சொல்றார்... அவ்...அவ்... இது கூட புரியலையா...
சார்.. வீக் எண்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆகிட்டு வரீங்க..
உங்களுக்கு சீக்கிரம், நாங்கள் டாக்டர் பட்டம் கொடுக்கப்போகிறோம்..ஹா..ஹா
// க.பாலாசி said...
எங்க முகிலன் ??? மிஸ்ஸாயிட்டாரே..... //
முகிலன் என்பவர் மிஸ்டர் இல்லையா... மிஸ்ஸா?
ஒவ்வொருவரின் பெயருடனும் அவர்களின் பதிவுக்கான சுட்டிகளையும் கொடுத்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்து இருக்கும்
// சத்ரியன் said...
//ங்கொய்யால. வரும்போதே க்ரூப் சேர்க்கறதுங்கற தீர்மானத்தோடதான் வந்தீரோ?//
நல்லா கேட்டீங்க. மானம் ராசம் உள்ளவரா இருந்தா நாக்கப்புடுங்கிக்கிட்டு.... ஐய்யய்யோ அதுக்கு மேல மறந்து போச்செ!//
இதுதான் உசுப்பேத்திவிடுவது என்பதா??
அளவில்லா சந்தேகத்துடன்
// திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
வர வர உங்க ரவுசு தாங்க முடியலைங்க.. :-)) //
தாங்க முடியாத அளவுக்கு, அவ்வளவு வெயிட்டாவாஆஆஆஆ இருக்கு
// ஸ்ரீராம். said...
இப்படிக் கூடவா..? //
இப்படியும் முடியும்..
anne ithe mathiri nanum onnu try pannen(unga pathiva padikarathuku munnadi)
padichu paarunga
http://lksthoughts.blogspot.com/2010/04/ii_16.html
LK said...
anne ithe mathiri nanum onnu try pannen(unga pathiva padikarathuku munnadi)
padichu paarunga
http://lksthoughts.blogspot.com/2010/04/ii_16.html//
balasee kudutharu. parthutenga. nalla irukku=))
//தப்பெழுதுவியான்னு முட்டிய தட்டுவாங்கன்னு தடிய எடுக்க கூடாதாம். //
:)))).அதென்னெமோ புல்லோ புளோ வோ சொல்றாங்களே அதுல இரண்டாம் தடவை படிக்கிறதுக்குள்ள விரல் அனுப்பு சொல்லிடுது.
//கார்னாலும் சரி பதிவுன்னாலும் சரி வாரம் ஒரு வாட்டி ஸ்டார்ட் பண்ணி ஒரு ரவுண்ட் வரணும்னே.//
ஒரு வீட்டுக்குப் போனா ஒரு தடவதான் முய் வெப்பாங்க.நைஜீரியாக்காரர் உட்கார்ந்த இடத்த விட்டு எழுந்திரிக்கறதேயில்லை:)
//ஒரு வீட்டுக்குப் போனா ஒரு தடவதான் முய் வெப்பாங்க.நைஜீரியாக்காரர் உட்கார்ந்த இடத்த விட்டு எழுந்திரிக்கறதேயில்லை:)//
நான் சொல்றது பொய்ன்னா நீங்களே பின்னூட்டத்த பார்த்துக்குங்க.
இப்படி வேற அர்த்தம் இருக்கா.....
நீங்க நடத்துங்க ஐயா...
பாவம் சார் எல்லாரும் .....
ஆஹா...
சூப்பர்
நடத்துங்க....
:)
ஆமா எப்படி சார் யோசிக்குறீங்க
சான்ஸே இல்ல
எதை வச்சு வேணும்னாலும் நகை
ச்சுவை ம்ம்ம்
அருமை
## ராஜ நடராஜன் said...
//ஒரு வீட்டுக்குப் போனா ஒரு தடவதான் முய் வெப்பாங்க.நைஜீரியாக்காரர் உட்கார்ந்த இடத்த விட்டு எழுந்திரிக்கறதேயில்லை:)//##
அய்ய இது மொய் இல்ல... அண்ணன் வீட்ல விருந்து சாப்பிடுவது மாதிரி... தல வாழை எல போட்டு, ஓவ்வொரு அயிட்டமா பார்த்து ருசுச்சி சாப்பிடுவது மாதிரி...
அண்ணே பாலா அண்ணே சொல்வது சரிதானே..
ஆஹா.. :-))
இராகவன் நைஜிரியா said...
## ராஜ நடராஜன் said...
//ஒரு வீட்டுக்குப் போனா ஒரு தடவதான் முய் வெப்பாங்க.நைஜீரியாக்காரர் உட்கார்ந்த இடத்த விட்டு எழுந்திரிக்கறதேயில்லை:)//##
அய்ய இது மொய் இல்ல... அண்ணன் வீட்ல விருந்து சாப்பிடுவது மாதிரி... தல வாழை எல போட்டு, ஓவ்வொரு அயிட்டமா பார்த்து ருசுச்சி சாப்பிடுவது மாதிரி...
அண்ணே பாலா அண்ணே சொல்வது சரிதானே..//
சந்தேகமே இல்லைண்ணே:))
கலாக்கிறவங்களையே கலாய்சிட்டீங்க..
உங்களை யார் உஸார் பண்ண போறாங்கண்ணு தெரியல....
கலாகய்கிறவங்களையே கலாய்சிட்டீங்க..
உங்களை யார் உஸார் பண்ண
போறாங்கண்ணு தெரியல....எதுக்கும்
சாக்கிரதையா இருங்க..!
என்னா நக்கலு :))))
காலம் கெட்டுப்போச்சு. பெருசுங்களெல்லாம் யூத் ஆயிருச்சு :))
இப்படிக்கு,
getting யூத்.
எம்.எம்.அப்துல்லா said...
என்னா நக்கலு :))))
காலம் கெட்டுப்போச்சு. பெருசுங்களெல்லாம் யூத் ஆயிருச்சு :))
இப்படிக்கு,
getting யூத்.//
அப்ப யூத் சங்கம்/ஃபோரம்/அசோசியேஷன்/யூனியன்/க்ளப் ஆரம்பிச்சிருவமா:)).
நம்மைலை வுட்டுட்டீங்களே அண்ணா.
அண்ணே பதிவர் தத்துவமெல்லாம் அட்டகாசமண்ணே. மிகவும் ரசித்தேன்.
என்னையப்போல ஆளூகளெள்ளாம் பதிவுகளைப் படித்து ரசித்து பின்னூட்டம்
மட்டுந்தாண்னே போட்டுட்டிருக்கிறோம். அண்ணா தப்பா நினக்காதீங்க,
எங்களுக்குப் பிடிச்சிருந்தா பின்னூட்டம் மட்டும் இல்லாம இப்ப ஓட்டும் போட்டுட்டு இருக்கிறோம். உங்களுக்கெல்லாம் மனதில் உள்ளதை
வார்த்தைகளில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் வித்தை கைவரப் பெற்றுள்ளீர்கள்.
நெகிழ்ச்சியுடன்
தாமோதர் சந்துரு
எதாவது செஞ்சிகிட்டேயிருக்கீங்க பாஸ்...
வலைப்பூ தத்துவத்துக்கே இதனை கும்மினா....ஒவ்வொருத்தர் தலைய தாங்கிட்டு போஸ் கொடுக்கற வலைப்பூ புகைப்படம் மாதிரி உள்ள படங்களை பத்தி இடுகை போட்டா எப்பிடி இருக்கும் கும்மி?
ஹா..ஹா..
:-))
வானம்பாடிகள்: /தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்/
உன் ‘அவசரத்துக்கு’ நடுவில இந்த மொக்க உன்ன எப்புடி பாதிச்சிது சொல்றா வானம்பாடி.
...... நீரே பதிவுலக ஜாம்பாவான்.........!!!!!!!!!!
சான்சே இல்லை... கலக்கல்ஸ்.
நடக்கட்டும் நடக்கட்டும்... :-)
இது இந்த யூத்தின் வழக்கமான கூத்து தானே! :-)))
ஆஹா...நைஜீரியா ராகவன் "ஃபுல்" ஃபார்முக்கு வந்துட்டார் போல....தனித் தனியா இவருக்கு நீங்க பதில் சொல்லவே இந்த வாரம் முழுக்கப் போயிடும் போலேருக்கே...
கலக்கல் தத்துவம்ஸ் & நைஜிரியா ராகவன் அவர்களின் பின்னூட்டங்கள்..:)
கரப்பான்பூச்சிக்கும் ரௌத்ரத்துக்கும் கனக்ஷன் கொடுக்கற நம்ம ஆளுங்கள வச்சுக்கிட்டு பாரதி இப்பூடி எல்லாம் சொன்னது எவ்வ்வ்வ்வளவு தவறு..
இதுக்கு நிதானமா பின்னூட்டனும்... டைம் லேது...
ஆனாலும் கடைசில... என்ன மொக்கைத்தனமா ஒரு கேள்வி.. இந்த தத்துவம்ஸ் எல்லாம் பாதிச்சுதானே இடுகை போட்டிருக்கீங்க... இந்தப் பாதிப்புக்கு நாம மாக்கட்டு போடுவோம்ல...
@@நன்றி பிரபா
@@ஹி ஹி. நன்றி இர்ஷாத்
@@தல டாங்சூ..அவ்வ்வ்வ்வ்
@@நன்றி சேட்டை
@@நன்றி டி.வி.ஆர். ஸார்
@@நன்றி சங்கர்.
இராகவன் நைஜிரியா said...
அண்ணே ஒரு அழுவாச்சியா வருது அண்ணே...
என்னையும் ஒரு வலைப்பதிவர் ரேஞ்சுக்கு திங்க் பண்ணி போட்டு இருக்கீங்களே...
ரொம்ப நன்றிங்க அண்ணே...//
நீங்க பதிவருக்கெல்லாம் பதிவராச்சேண்ணே.
ஈரோடு கதிர் said...
அடப்ப்ப்ப்ப்ப்ப்பவி மனுசா!!!
யோவ்... தீவிரவாதிங்களே... ட்ரெய்ன எல்லாம் கடத்திட்டுப் போறீங்களே....
இந்த மனுசன் அங்கதான உக்காந்திருக்காரு... முதல்ல இவர கடத்திட்டுப் போங்களேன் ’தில்’ இருந்தா//
அது அது. கூட கதிரும் வரணும் சொல்லிட்டேன்.
@@நன்றிங்க வேலு
@@நன்றிங்க செந்தில். அது இர்ஷாத் முதல் பின்னூட்டம் போச்சேன்னு சொல்றாரு:))
@@நன்றி ஸ்ரீராம். இப்படியும்:)
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க நண்டு@
@@ஹி ஹி. நன்றி சத்திரியன்
@@நன்றிங்க குணசீலன்
@@நன்றி ஹனீஃப்
@@நன்றி திரு
@@நன்றி பழமை
@@நன்றி றமேஸ்
@@நன்றி யூர்கன்
@@நன்றிங்க இராமசாமிகண்ணன்
@@ஆஹா. வாங்க பட்டாபட்டி. இருக்கிற டாக்டர் நாறிபோராரு. நமக்கு வேணாம்பா.:))
@@நன்றிங்க வினையூக்கி:))
@@நன்றி ஜெட்லி
ராஜ நடராஜன் said...
//தப்பெழுதுவியான்னு முட்டிய தட்டுவாங்கன்னு தடிய எடுக்க கூடாதாம். //
:)))).அதென்னெமோ புல்லோ புளோ வோ சொல்றாங்களே அதுல இரண்டாம் தடவை படிக்கிறதுக்குள்ள விரல் அனுப்பு சொல்லிடுது.//
:)).நன்றி நன்றி
@@நன்றிங்க காதல் கவி
@@நன்றிங்க நேசமித்திரன்.
@@நன்றிங்க இராஜி
@@நன்றிங்க தமிழ் வெங்கட்
@@நன்றிங்க தாராபுரத்தண்ணே. பார்த்தேன் சிக்கலையே. அவ்வ்வ்
@@நன்றிங்க சந்துரு
@@நன்றி மணிஜீ. ச்ச்ச்சும்மா
@@நன்றி பத்மா
@@நன்றி மாதேவி
@@நன்றி ஆதி
@@நன்றி சித்ரா
@@நன்றி ரோஸ்விக்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி மணி நரேன்
கலகலப்ரியா said...
கரப்பான்பூச்சிக்கும் ரௌத்ரத்துக்கும் கனக்ஷன் கொடுக்கற நம்ம ஆளுங்கள வச்சுக்கிட்டு பாரதி இப்பூடி எல்லாம் சொன்னது எவ்வ்வ்வ்வளவு தவறு..
இதுக்கு நிதானமா பின்னூட்டனும்... டைம் லேது...
ஆனாலும் கடைசில... என்ன மொக்கைத்தனமா ஒரு கேள்வி.. இந்த தத்துவம்ஸ் எல்லாம் பாதிச்சுதானே இடுகை போட்டிருக்கீங்க... இந்தப் பாதிப்புக்கு நாம மாக்கட்டு போடுவோம்ல...//
ஹெ ஹெ. ரௌத்திரம்னா மீசை துடிக்க வேணாமா அதான். எதுனாலும் பேசி தீத்துக்கலாம். இந்த வெயில்ல மாக்கட்டு அரிக்கும். அவ்வ்வ்.
தத்துவங்களும்! அதற்கான கலாய்ப்புக்களும் தாறுமாறு!
-
DREAMER
நான் வெளியூருக்கு போகும்போதுதான் கலாய்க்கறீங்க சார்..:)))
-
அந்த பேர வெச்சிட்டு நான் பட்ட பாடுதான் அந்த விளக்கம்.:)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))
Post a Comment