Friday, August 13, 2010

இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா?

பொறுப்பி:

1.இந்த இடுகையிலிருக்கும் தகவல்கள் மேம்போக்காக எழுதப்பட்டவை அல்ல. என் முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழிந்துள்ளதன் அடிப்படையில் எழுதியது.

2.ஒரு புறம் இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச் சரிவர புரியவைக்க இயலுமா என்ற பயமிருந்த போதிலும் வேறெந்த வழியிலும் இந்த உண்மை தெரியவரப் போவதில்லை என்பதே எழுதியாக வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

3. எடுத்தோம் எழுதினோம் என்று எழுதியதில்லை இது. திரு காமராஜ் இடுகையில் அனேகமாக மூன்று மாதங்களுக்கு முன் இட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி இது.

4.தகவலில் சந்தேகமிருப்பின் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் எந்த அரசு அலுவலகத்திலும் இதில் சொல்லப்படும் தகவலை உறுதி செய்துக் கொள்ள இயலும்.
______

சாதிவாரிக் கணப்பெடுப்புக்கு கோரிக்கை வைத்திருக்கும் நேரமிது. அதன் பின்னான அரசியல் குறித்த விடயம் நமக்கு அக்கறையில்லை. இப்போதிருக்கும் சட்டத்தின் படி இட ஒதுக்கீடு என்பது முற்று முழுதாக அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒன்று. 

இதனைப் பெற எத்தனைப் போராட்டங்கள்? எத்தனை உயிர்த் தியாகங்கள்? அப்படிப் போராடிப் பெற்ற ஒரு சலுகை எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்தக் குறிக்கோளை அடைந்திருக்கிறதா? இல்லையெனில் காரணம் யார்?

இது குறித்தான அலசலுக்கு முன் இரண்டு நாட்களுக்கு முன்பான செய்தி இது. ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்.

New Delhi, Aug 11 (IANS) A total of 54,637 posts for Scheduled Caste, Scheduled Tribe and Other Backward Classes are vacant in central government ministries and departments.

Minister of State in the Prime Minister's Office Prithviraj Chavan told parliament Wednesday that the number of vacancies in the three categories were 26,565, 25,649 and 21,143 respectively.

Of these, 12,045, 2,799 and 3,876 posts had been filled, Chavan said in the Lok Sabha in reply to a question from P.L. Punia.

The minister said a special recruitment drive was launched Nov 19, 2008 to fill up the backlog of reserved vacancies

படித்தவுடன் மனதில் எழும் கேள்வி, இத்தனை காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணமென்ன? அரசா என்பது.

ஸ்பெஷல் ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் எனும் சொல் இது அரசின் தவறல்ல. வழக்கம்போல் நடைபெற்ற தேர்வுகளில் நிரப்பப்படாமல் சேர்ந்து போன இடங்கள் என்பதாலேயே, மீண்டும் இவர்களுக்கு மட்டுமே ஒரு சிறப்புத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதைச் சுட்டுகிறது.

அப்படியெனில், நாட்டில் வேலையின்மை என்பதே இல்லையா? அரசுத் துறையை புறந்தள்ளி தனியார்த் துறையில் சலுகைகளும் சம்பளமும் அதிகமாகவா இருக்கிறது? பின்னெப்படி இத்தனை காலியிடங்கள் சேர்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழும்புகிறதா இல்லையா?

மாநில வாரியாகப் பார்த்தோமானால், கேரளாவில் ஒரு இடம் கூட இப்படி காலியிருக்காது. தமிழகத்தில் மிக அதிகமாயிருக்கும் என்பது என் கணிப்பு. இதற்கு முன்பே ஒரு இடுகையில் கூறியிருந்தபடி ரயில்வே ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் நடத்தும் இத்தகைய ஸ்பெஷல் ட்ரைவ்களில் பங்கேற்போர் பெரும்பாலும் பீகார் மாநிலத்திலிருந்தும் இதர வட மானிலங்களிலிருந்து வந்தவர்களுமே. அப்படியும் பங்கேற்போர் சதவீதம் வெகு குறைவே.

இது பனிப்பாறையின் ஒரு விளிம்பே. ஆரம்பக்கட்ட வேலை வாய்ப்பில் நிரப்பப் படாத காலியிடங்களின் எண்ணிக்கை மட்டுமென்றே கொள்ளவேண்டி யிருக்கிறது.

இதையும் தாண்டி இச் சலுகையின் பின்னான முக்கியத்தை உணராமல் அரசு இயந்திரத்தை முடக்கிப் போடுபவர்கள் யார்? தன்னலம் என்று கூட சொல்லமாட்டேன் தன்சுகம் கருதி, தன்னையொத்தவன் வயிற்றில் மண்ணள்ளிப் போடுவது யார்? இட ஒதுக்கீட்டின் பயன் அனுபவிப்பவர்களே என்பது அதிர்ச்சியளிக்கக் கூடும்.

அரசுப் பணியானது வர்ணாஸ்ரமத்தைப் போன்றே நான்கு. க்ரூப் ‘A’, ‘B', 'c', மற்றும் ‘D' எனப்படும் கடை நிலை ஊழியர்கள். இதில் க்ரூப் 'A' என்பது ஐ.ஏ.எஸ் போன்ற நேரடி வேலை வாய்ப்பு. அதிலும் பின் தங்கல் இருக்கிறதென்றாலும் அது குறித்த விவாதமில்லை இது. B,C, மற்றும் D குறித்தான நிலைப்பாடு இது. 

க்ருப் ‘D' மற்றும் க்ருப் ‘c' பிரிவுகளில் பணி உயர்வுக்கு வாய்ப்பாக பல்வேறு நிலைகளில் பதவிகள் இருக்கும். ஒவ்வொரு பதவியிலும் மொத்த எண்ணிக்கையில் 15 சதம் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் 7.5 சதவீதம் மலைச் சாதியினருக்குமான ஒதுக்கீடாகும்.

பதவி உயர்வு பெரும்பாலும் மூப்பு மற்றும் தகுதி என்ற அடிப்படையிலும், பல பதவிகளுக்கு தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்தத் தேர்விலும் பொதுஜன பாதுகாப்பு தவிர இதரப் பதவிகளுக்கு குறைந்த மதிப்பெண்கள் போதுமானது. 

ஆனால் உண்மையில் நடப்பதென்ன? மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும் வரை இவர்களுக்குப் பிரச்சனையில்லை. தேர்வு என்ற கட்டம் வரும்போது பெரும்பாலோர் பங்கேற்க முன்வருவதில்லை. காரணம் பொறுப்பை ஏற்கத் தயக்கமும், எதற்கு தேவையற்ற ரிஸ்க் என்ற மனோபாவமும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

சரி இதனால் என்ன பாதிப்பு? அது அவர்கள் உரிமையல்லவா என்று கேட்கலாம். நிச்சயமாக அவர்கள் உரிமைதான். ஆனால் அவர்கள் உரிமைக்கு பலிகடா ஆவது யார் தெரியுமா? அவர்களேதான். காரணம், அவர்கள் தேர்வுக்கு தயாரில்லை எனும் பட்சத்தில் அவர்களுக்கு மேலான பதவிகளுக்கான காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.

அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் பாதிப்பாகும். இதற்குக் காரணமென்ன? சலுகையளிக்கிறோம் என்ற பெயரில் அரசும் ஒரு வகையில் காரணம்.

ஒரு பதவியில் குறித்த காலம் பணியாற்றி அனுபவம் பெறு முன்னரே அதற்கும் உயரிய பதவியில் காலியிடமிருக்கிறது என்ற காரணத்துக்காக, மடமடவென பதவி உயர்வளித்து ஒரு நிர்வாகப் பொறுப்புக்கு உரித்தாna பதவியில் அவர்களை அமர்த்துகையில் அப்பணி குறித்தான அனுபவ அறிவோ, தகவலறிவுக்கோ வழியின்மை அவர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக்குகிறது. 

இப்படித் தேங்கிப் போன பதவி உயர்வுகளுக்கான காலியிடங்களை நிரப்பவே முடியாது என்ற நிலையில், அடிப்படைப் பதவியிலும் சேர ஆட்களே இல்லாமல் பதவிகள் தேங்கியும் கிடக்கிறதென்றால் தவறு எங்கே?

பெரும்பாலான நிர்வாகப் பதவிகள், காலியிடங்களாகவே இருக்கும் பட்சத்தில் அரசு நிர்வாகம் எப்படி சீராக நடக்கும். அரசுக்கு இதனால் நஷ்டமா என்ன? துண்டு போட்டு வைத்திருக்கிறது, குந்த ஆட்கள் இல்லையெனச் சொல்லிவிட்டு சும்மாயிருக்கும். 

இஞ்சினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரி, பட்டப்படிப்புகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது அல்லவா. அவற்றிலும் காலியிடங்கள் இருந்தாலும் அது மிகக் குறைவே. அப்படிப் படித்து தேறி வருபவர்கள் அரசுத் தேர்வு எழுத மறுப்பது ஏன்? இரயில்வே போன்ற தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஏன் இஞ்சினியர்கள் பங்கெடுப்பதில்லை. 

எஞ்சினியரிங் படித்துவிட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு தேர்வாகி அட்டெஸ்டேஷன் என்று வருபவர்களிடம் ஏன் இப்படி என்றால் வரும் பதில் என்ன தெரியுமா? ஏதோ ஒரு வேலை வேணும்சார். இதுன்னா ரிஸ்க் இல்லையாம். ஒரு பட்டப் படிப்பு படித்து இந்த வேலைக்கு காத்திருப்பவன் வாயில் மண்ணள்ளிப் போடுவதில்லையா இது? 

இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?

இப்போது சொல்லுங்கள். இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா இல்லையா?
~~~~~

212 comments:

1 – 200 of 212   Newer›   Newest»
ஷங்கர் said...

southern railwayil
varum kalathil பூரா பீகாரிகளே ..

கல்வெட்டு said...

ஜாதி கணக்கெடுப்பு

‌1. ஜாதி என்ற ஒன்று சமூகத்தில் இருந்தால் அது பதிவு செய்யப்பட வேண்டும்.

2. ஜாதி கணக்கெடுப்பு வேண்டால் என்றால், சமூகத்தில் ஜாதி என்ற ஒன்று அழிந்ததாக இருக்க வேண்டும்.

3. இருக்கும் ஒன்றை கணக்கெடுப்பது அவசியம். அதை எப்படி எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது அடுத்த கேள்வி.

4. சாதி என்பது ஒரு நோய் என்று கொண்டால் அந்த நோய் உள்ளவர்கள் யார் எத்தனை பேர் என்று அறியப்படவேண்டும்.

http://dharumi.blogspot.com/2010/05/392.html?showComment=1273694345835#comment-6116402700169595325


*****

சாதீ அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் நோக்கம் யாருக்கும் தெரிவது இல்லை. பெத்த அறிவாளிகளுக்கும். :-((((

பெரியார் காலத்தில் இருந்த பார்ப்பனீயக் கொடுமைகள் இன்றுவரை அப்படியே உள்ளது.அதன் உக்கிரம் தேவர் /பிள்ளை Vs தலித் என்று தெரிந்தாலும் இன்னும் அய்யர் / அய்யங்கார் Vs மற்றவர்கள் என்ற நுண்ணிய பார்ப்பனீய அடிப்படை அப்படியே உள்ளது.

வர்ணாசிரமத்தால் சமூகத்தில் அடக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டவர்களை, எப்படி அதே சமூகத்தால் மதிக்கச் செய்து சமுதாயச் சமநிலைக்கு கொண்டு வருவது? என்று உண்டான சிந்தனையில் தோன்றிய பல திட்டங்களில் ஒன்றுதான் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு.

அதுபோல் சமுதாய சம நிலைக்காக தோன்றிய மற்ற திட்டங்கள் தேர்தல் இட ஒதுக்கீடு
ஆலய நுழைவு
முலை வரி அகற்றல்
....என்று பல திட்டங்கள் உண்டு.

இவை எல்லாவற்றின் அடிப்படை நோக்கம், "வர்ணாசிரமத்தால் சமூகத்தில் அடக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டவர்களை எப்படி அதே சமூகத்தால் மதிக்கச் செய்து சமுதாயச் சமநிலைக்கு கொண்டு வருவது"

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மட்டுமே
வர்ணாசிரமத்தால் சமூகத்தில் அடக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டவர்களை, மீண்டும் அதே சமூகத்தால் மதிக்கச் செய்து சமுதாயச் சமநிலைக்கு கொண்டுவரும் என்று சொல்லமுடியாது. அதன் பொருட்டே மற்ற சட்டங்களும்.


சாதீ அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் நோக்கம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுப்பதால் வர்ணாசிரமத்தால் கேவலப்படுத்தப்பட்டவர்கள் நல்ல பதவி மற்றும் பொருளாதர நிலையை அடையும்போது மற்ற ஆதிக்க சமுதாயம் இவர்களையும் மதிக்கும் , அப்படி நடக்கும் பட்சத்தில் படிப்படியாக வர்ணாசிரமம் அழிந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்டதே கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு.

***

ஆனால் இந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டினால் வர்ணாசிரமத்தால் கேவலப்படுத்தப்பட்டவர்களின் பொருளாதர நிலை உயர்ந்தாலும் அவர்களின் சமூக அந்தஸ்தது மாறவில்லை.


இன்னும் தாழ்த்தப்பட்ட ஒருவர் பஞ்சாயத்து தலைவரானால் அவரிடம் வேலை செய்ய ஆதிக்க சக்தி தயாராக இல்லை.

இன்னும் வாயில் பீ ஊற்றத்தான் செய்கிறார்கள்.

இன்னும் கோவிலில் கருவறையில் நுழைய சண்டை போட வேண்டியுள்ளது.


****

எனவே "பொருளாதரத்தை உயர்த்துவதால் ( இந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு) வர்ணாசிரமத்தால் கேவலப்படுத்தப்பட்டவர்களின் சமுதாய அந்தஸ்து மற்றவர்களுக்குச் சமமானதாக மாறும்" என்ற நம்பிக்கையில் தோன்றிய இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டங்கள் உண்மையில் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

:-((((

எப்படி நடார் கிறித்துவரான பிறகு கிறித்துவ நாடார் ஆக மாறினாரோ அதே போல பொருளாதர வசதியற்ற தாழ்த்தப்பட்டவர்கள் இப்போது வசதியான தாழ்த்தப்பட்டவர்களாக உள்ளார்கள். சமுதாய தாழ்தப்பட்ட நிலை அப்படியேதான் உள்ளது.


***


மனிதன் அனைவரும் ஒன்று எண்ணி பெருவாரியாக கலப்பு மணங்களும் மக்களின் மனத்தடைகளும் உண்மையில் நீங்காதவரை எல்லா இடஒதுக்கீடுகளும் அதன் உண்மையான நோக்கத்தை (சம சமூக அந்தஸ்து) உண்டாக்கப்போவது இல்லை.

ஒதுக்கீடுகள் எல்லாம் சாதி ரீதியான சலுகையாகவே மக்களால் அறியப்படுகிறது. பயன் அனுபவிப்பர்களுக்கே அந்த சலுகையின் உண்மையான நோக்கம் தெரிவது இல்லை. பயனடந்தவர்களே நாளடைவில் நவீன பார்ப்பனியளாரகா மாறி தங்களுக்கு கீழ் அடுத்த ஒரு தாழ்த்தப்பட்ட அடுக்கை தோற்றுவித்து இவர்கள் நவீன / புதிய எஜமானர்களா மாறிவிடுகிறார்கள்.

சாதி/மதப் பார்வையில் இந்தியா உருப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

.

இராமசாமி கண்ணண் said...

இடஒதுக்கீடு என்பது பொருளாதார நிலையை பொருத்து அமைய வேண்டும் என்பது என் கருத்து சார்.

நாய்க்குட்டி மனசு said...

சார், ஆபத்தான இடத்தை தொட்டிருக்கிறீர்கள்.
என்னைப் பொறுத்தவரை sche caste ஐ விட sche tribes மேல் அதிக பரிதாபம் உண்டு. இன்னும் மி..... கத் தாழ்ந்த இடத்தில் இருக்கும் அவர்களை மீட்கப் போகும் பீட்பர் யார்?

--

புருனோ Bruno said...

//இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள்.//

புரியவில்லை
விளக்க முடியுமா

தமிழகத்தில் அரசு மருத்துவ பணிகளில் சுமார் 14000 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்

இவர்களில் DNB முடித்தவர்கள் 500 பேர் கூட இருக்க மாட்டார்கள்

DNB என்று நீங்கள் குறிப்பிடுவது எதை ????

// காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?//

யார் மறுக்கிறார்கள்

யாரும் மறுக்கவில்லை

இன்று காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மருத்துவர்களுக்கு அரசு வேலை தந்தால் அவர்கள் சேர தயாராகவே உள்ளனர்

நசரேயன் said...

// துண்டு போட்டு வைத்திருக்கிறது//

அங்கயுமா?

Sethu said...

Sir,

I support reservation. If so many posts are vacant, I feel there are still so many people are left out. If we see the pathetic lifes of tribals in their land, for their upliftment sure the Govt, especially railaways can help them.

People think only educated people should get job. But if we see in real life, there are hundreds of jobs being carried out by the people which are essential for human life, but may not be regarded as as high as a doctor or engineer.

நசரேயன் said...

அண்ணே கழுதை மேய்த்தாலும் அரசாங்க கழுதை மேய்க்கணும் அந்த காலம், கழுத மேய்ச்சாலும் மீட்டர் ஓடுற கழுதையை மேய்க்கணும் இந்த காலம்

புருனோ Bruno said...

//இஞ்சினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரி, பட்டப்படிப்புகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது அல்லவா. அவற்றிலும் காலியிடங்கள் இருந்தாலும் அது மிகக் குறைவே.//

ஏன்

// அப்படிப் படித்து தேறி வருபவர்கள் அரசுத் தேர்வு எழுத மறுப்பது ஏன்?//

பொறியியல் பற்றி நான் கருத்து கூற முடியாது

ஆனால் மருத்துவர்கள் அரசு தேர்வு எழுத மறுப்பது இல்லை

ஒவ்வொரு முறையும் (காலியிடங்கள் 500 என்றாலும் கூட) தேர்வு எழுதுபவர்கள் சுமார் 6000 பேர்

சந்தேகம் என்றால் TNPSCல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் நீங்களே சரி பார்த்து கொள்ளலாம்

// இரயில்வே போன்ற தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஏன் இஞ்சினியர்கள் பங்கெடுப்பதில்லை//

இது குறித்து யாராவது பொறியாளர் பதில் கூறினால் நலம்

புருனோ Bruno said...

//பெரும்பாலான நிர்வாகப் பதவிகள், காலியிடங்களாகவே இருக்கும் பட்சத்தில் அரசு நிர்வாகம் எப்படி சீராக நடக்கும். அரசுக்கு இதனால் நஷ்டமா என்ன? துண்டு போட்டு வைத்திருக்கிறது, குந்த ஆட்கள் இல்லையெனச் சொல்லிவிட்டு சும்மாயிருக்கும். //

கேள்வி : இது போல் OBC / SC / ST காலியிடங்கள் மத்திய அரசு பணியிலேயே அதிகம் காலியிருப்பது ஏன்

கேள்வி : ஏன் தமிழக அரசில் மட்டும் அனைத்து பணியிடங்களுக்கும் வேலை செய்ய ஆள் கிடைக்கிறார்கள்

பதில் : இது போல் OBC / SC / ST காலிடங்களை பின்வாசல் வழியாக FCக்கு ஒதுக்கும் நயவஞ்சக வேலை மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்கனவே உள்ளவர்கள் (தற்சமயம் நிர்வாக பணியில் பெரும்பாண்மையாக இருக்கும் FC) மூலம் நடந்து வருகிறது

புருனோ Bruno said...

//மாநில வாரியாகப் பார்த்தோமானால், கேரளாவில் ஒரு இடம் கூட இப்படி காலியிருக்காது. தமிழகத்தில் மிக அதிகமாயிருக்கும் என்பது என் கணிப்பு. //

இது குறித்து கணிப்பாக இல்லாமல் சரியான தகவல் தர முடியுமா

தமிழகத்தில் இவ்வளவு வட இந்தியர்கள் வேலை பார்க்கும் போது :) :) :) எப்படி சார் இடம் காலியாக உள்ளது !!!!

புருனோ Bruno said...

//தன்னலம் என்று கூட சொல்லமாட்டேன் தன்சுகம் கருதி, தன்னையொத்தவன் வயிற்றில் மண்ணள்ளிப் போடுவது யார்? இட ஒதுக்கீட்டின் பயன் அனுபவிப்பவர்களே என்பது அதிர்ச்சியளிக்கக் கூடும்.//

இல்லை
இதை நான் மறுக்கிறேன்

பதில் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

நசரேயன் said...

//ஒரு பட்டப் படிப்பு படித்து இந்த வேலைக்கு காத்திருப்பவன் வாயில் மண்ணள்ளிப் போடுவதில்லையா இது? //

அது எப்படி?
இந்த தேர்வுக்கு இன்ன படிச்ச ஆளுங்க தான் வரணும்முன்னு அரசாங்கம் சொல்லணும்,
அதை சொல்லாம விட்டா IAS பாஸ் ஆனவங்க ௬ட வருவாங்க

புருனோ Bruno said...

//இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச்//

பலன் அடைபவர்களின் மேல் உங்களுக்கு ஏன் சார் கோபம்

நசரேயன் said...

//இத்தனை காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக்
காரணமென்ன? //

ஆட்சி முடியுற சமயத்திலே இடத்தை எல்லாம் நிரப்பிட்டா, தேர்தல்ல ஓட்டு கேட்க வசதியா இருக்கும்னு நினைச்சி இருப்பாங்க

புருனோ Bruno said...

//இஞ்சினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரி, பட்டப்படிப்புகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது அல்லவா. அவற்றிலும் காலியிடங்கள் இருந்தாலும் அது மிகக் குறைவே. அப்படிப் படித்து தேறி வருபவர்கள் அரசுத் தேர்வு எழுத மறுப்பது ஏன்?//

//எஞ்சினியரிங் படித்துவிட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு தேர்வாகி அட்டெஸ்டேஷன் என்று வருபவர்களிடம் ஏன் இப்படி என்றால் வரும் பதில் என்ன தெரியுமா? //

புரியவில்லை

முதலில் அரசு தேர்வு எழுத மறுக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்

அதன் பிறகு வருகிறார்கள் என்று கூறுகிறீர்கள்

என்ன சொல்ல வருகிறீர்கள்

ஏதோ குழம்பி போய் உள்ளீர்கள் என்று மட்டும் புரிகிறது

//இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச்//

இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுபவர்களின் மீதான் உங்கள் பெருங்கோபம் தான் குழப்பத்திற்கு காரணமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

அநியாயங்களில் எதைச் சொல்ல..எதை விட..;((

Sethu said...

The need of a departmental exam to promote an individual, I see it as a tool to discriminate, also a process of elimination. If questions are asked mostly in English and Hindi, and not in regional languages, it is tough.

Also the promotion leads to transfer of job to a new location, then it is hard for the family, and may have to deal with people like 'Character Murthy'. By the time people have adjusted to one set of character murthy's.

One more thing is not all educated individuals have administrative skills. But can be trained in due course. Some are promoted with this intention.

Also in a country like ours, we are so much divided in terms of region, language, caste, etc. This plays a very destructive politics in every field. I have also suffered in a private company with people having regional feelings.

People who can think beyond this narrowness, can alone try to resolve this to an extend.

கலகலப்ரியா said...

||இட ஒதுக்கீடு||

எனக்கு இது புரியாது என்று திட்டவட்டமாகத் தெரிந்தமையால்... பதிவைப் படிக்கவில்லை.. ஹிஹி.. எஸ்கேப்பு...

நம்ம பாஸ் சொல்லுவாங்க... நம்மளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கனும்னு இல்லை... :D

Sethu said...

Sir!

What is the meaning of 'விழலுக்கிறைத்த நீரா?' ? Sorry for my ignorance. Do you mean it is waste?

பனங்காட்டு நரி said...

@கல்வெட்டு

///// ஜாதி என்ற ஒன்று சமூகத்தில் இருந்தால் அது பதிவு செய்யப்பட வேண்டும்./////
இது நீங்கள் மக்களுக்காக சொல்வது ..ஆனால் இந்த கணக்கெடுப்பு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது .,இனி எந்த தொகுதியில் எந்த சமுக மக்கள் அதிகம் வாழ்கிறார்களோ அதை வைத்து தான் அரசியல் நடக்கும் ...,
////ஜாதி கணக்கெடுப்பு வேண்டால் என்றால், சமூகத்தில் ஜாதி என்ற ஒன்று அழிந்ததாக இருக்க வேண்டும்.////
அதை அழிபதர்க்கு இந்த முயற்சி எடுக்கலாமே
//// இருக்கும் ஒன்றை கணக்கெடுப்பது அவசியம். அதை எப்படி எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது அடுத்த கேள்வி.////
பயன்படுத்துதல் என்பது வோட்டு அரசியலுக்கே தவிர வேறொன்றுமில்லை
////சாதி என்பது ஒரு நோய் என்று கொண்டால் அந்த நோய் உள்ளவர்கள் யார் எத்தனை பேர் என்று அறியப்படவேண்டும்./////
அந்த நோயை குணபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நினைத்தீர்கள் என்றல் உங்களுக்கும் என்னக்கும் ஏமாற்றமே மிஞ்சும்

மற்ற கருத்துக்களுக்கு முழுமையாக உடன்படுகிறேன் .....என்னை பொறுத்தவரை இது இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது ..,

வானம்பாடிகள் said...

ஷங்கர் said...

///southern railwayil
varum kalathil பூரா பீகாரிகளே ..//

நடக்கலாம்.

ஆரூரன் விசுவநாதன் said...

விரிவான, ஆக்கப் பூர்வ, அவசிய பதிவு.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

வானம்பாடிகள் said...

கல்வெட்டு சார், மிக அழகான வலியுடனான அலசல். ஆனால் நான் குறிப்பிட்டுள்ள விடயம் அந்த ஒதுக்கீட்டையும் பயனில்லாமல் அடிக்கும் அவலம் குறித்து. இதற்கு முழுதும் காரணமானவர்கள் பயன் பெறுபவர்களே. டாக்டர் புருனோவின் கேள்விகளுக்கு பதில் கூறும்போது புரியுமென நினைக்கிறேன். மிக்க நன்றி சார் கருத்துக்கு.

வானம்பாடிகள் said...

வானம்பாடிகள் said...
இராமசாமி கண்ணண் said...

//இடஒதுக்கீடு என்பது பொருளாதார நிலையை பொருத்து அமைய வேண்டும் என்பது என் கருத்து சார்.//

இதுவும் இடுகையின் கருத்துக்கு மாறானதே. என்னுடைய தேவை நிறைவேறிய பிறகு நான் மேலேயும் போகாமல் அடுத்தவனை மேலேற விடாமல் அடிப்பதற்கு சாதி அடிப்படை என்ன பொருளாதார அடிப்படை என்ன? அப்போதும் இடம் காலியாகத்தான் இருக்கும்

வானம்பாடிகள் said...

நாய்க்குட்டி மனசு said...

//சார், ஆபத்தான இடத்தை தொட்டிருக்கிறீர்கள்.
என்னைப் பொறுத்தவரை sche caste ஐ விட sche tribes மேல் அதிக பரிதாபம் உண்டு. இன்னும் மி..... கத் தாழ்ந்த இடத்தில் இருக்கும் அவர்களை மீட்கப் போகும் பீட்பர் யார்? //

ஆமாங்க. அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அதிகபட்ச காலியிடங்கள் இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை.

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...

//புரியவில்லை
விளக்க முடியுமா

தமிழகத்தில் அரசு மருத்துவ பணிகளில் சுமார் 14000 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்

இவர்களில் DNB முடித்தவர்கள் 500 பேர் கூட இருக்க மாட்டார்கள்

DNB என்று நீங்கள் குறிப்பிடுவது எதை ????//

DNB Trainee Doctors.

// காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?//

யார் மறுக்கிறார்கள்

யாரும் மறுக்கவில்லை

இன்று காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மருத்துவர்களுக்கு அரசு வேலை தந்தால் அவர்கள் சேர தயாராகவே உள்ளனர்//

UPSCக்கும் காத்திருப்போர் பட்டியலுக்கும் சம்பந்தம் எனக்குப் புரியவில்லை. நோட்டிஃபிகேஷன் வருகையில் யாரும் ரெஸ்பாண்ட் செய்ததாகத் தெரியவில்லை. பணியிடங்களை நிரப்ப முடியாததால்தான், காண்டிராக்ட் டாக்டர்கள், கன்ஸல்டண்ட் டாக்டர்கள், ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் என்று பல வேறு திட்டங்களில் மருத்துவத் தேவை சரிக்கட்டப் படுகிறது. ரூ 40000+ சம்பளத்துக்கு வருடா வருடம் காண்ட்ராக்டில் புதுப்பித்துக் கொண்டு பணிசெய்யத் தயாராயிருக்கும் டாக்டர் ரூ 50000+ மற்றும் இதர சலுகைகளுடனான பணிகளுக்கு ஏன் விண்ணப்பிக்க மறுக்கிறார்?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சார்,

எனக்குத் தெரிந்து டாஸ்மாக் ஒன்றில்தான் சமத்துவம் மிளிர்கிறது.

ரேஷன் கடைகளையும் மூடிவிட்டு அனவருக்கும் குடிக்கக் கற்றுக் கொடுக்கும் அரசு வரும்போது எல்லாம் சரியாகும். :)

//பதில் : இது போல் OBC / SC / ST காலிடங்களை பின்வாசல் வழியாக FCக்கு ஒதுக்கும் நயவஞ்சக வேலை மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்கனவே உள்ளவர்கள் (தற்சமயம் நிர்வாக பணியில் பெரும்பாண்மையாக இருக்கும் FC) மூலம் நடந்து வருகிறது//

ஏன் அரசு இவர்களையெல்லாம் டிஸ்மிஸ் செய்யவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. :)

வானம்பாடிகள் said...

Sethu said...
Sir,

I support reservation. If so many posts are vacant, I feel there are still so many people are left out. If we see the pathetic lifes of tribals in their land, for their upliftment sure the Govt, especially railaways can help them.

People think only educated people should get job. But if we see in real life, there are hundreds of jobs being carried out by the people which are essential for human life, but may not be regarded as as high as a doctor or engineer.//

Please try to understand. This post is not against reservation. its about non utilisation of the reservation system. people are just not willing to be recruited. What can Railways do? they can conduct the exam. but if people dont appy and even if apply dont appear for the exam what will happen. the vacancies will remain for ever. thats all.

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

//அண்ணே கழுதை மேய்த்தாலும் அரசாங்க கழுதை மேய்க்கணும் அந்த காலம், கழுத மேய்ச்சாலும் மீட்டர் ஓடுற கழுதையை மேய்க்கணும் இந்த காலம்//

அந்த கதை இங்க வேணாம். சும்மா இல்லை. அள்ளிக் கொடுக்குறான். ஒரு கிளார்க்குக்கு எல்லா வசதியும் சேர்த்து கணக்கு பார்த்தா சம்பளம் கிட்ட கிட்ட 30ஆயிரம் வரும். இதை விடவா தனியார் துறையில் கொட்டி கொடுப்பாய்ங்க. வேலை வசதிக்கு செய்யலாம். நினைச்சா மட்டமடிக்கலாம். எவ்வளவு வசதி. பின்ன ஏன் வரமாட்றாங்க?

வானம்பாடிகள் said...

கேள்வி :

// இது போல் OBC / SC / ST காலியிடங்கள் மத்திய அரசு பணியிலேயே அதிகம் காலியிருப்பது ஏன்//

ஒன்று போதுமான அபேட்சகர்கள் வரவில்லை என புள்ளி விவரம் கூறுகிறது. என்னால் பகிர முடியாது. தகவலறியும் சட்டத்தில் கேட்டால் கிடைக்கும்.
அடுத்தது நேர்மையான, எந்த செல்வாக்கும் நுழைய முடியாத தேர்ச்சி முறை. அது கலாசியானாலும் சரி, கண் டாக்டர் ஆனாலும் சரி, கம்ப்யூட்டர் என்ன சொல்கிறதோ அதுதான்.

வானம்பாடிகள் said...

கேள்வி :

//ஏன் தமிழக அரசில் மட்டும் அனைத்து பணியிடங்களுக்கும் வேலை செய்ய ஆள் கிடைக்கிறார்கள்//

எனக்குத் தெரியாது சார். நான் சொன்ன படி தேர்ச்சி முறையாக இருக்கலாம். அல்லது மத்திய அரசு பணியென்றால் இந்தியா முழுதும் ட்ரான்ஸ்ஃபர் வரலாம் என்ற தயக்கமாக இருக்கலாம்.

வானம்பாடிகள் said...

புருனோ

/ஒவ்வொரு முறையும் (காலியிடங்கள் 500 என்றாலும் கூட) தேர்வு எழுதுபவர்கள் சுமார் 6000 பேர்

சந்தேகம் என்றால் TNPSCல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் நீங்களே சரி பார்த்து கொள்ளலாம்//

செய்தி மத்திய அரசினுடையது. நான் சொன்னதும் யுபிஎஸ்ஸியில் ஏன் விண்ணப்பிக்க மறுக்கிறார்கள் என்பது.

தமிழக அரசில், எந்த வேலையிலும் இட ஒதுக்கீட்டின் படியான காலியிடங்கள் இல்லவே இல்லை என்றா சொல்கிறீர்கள்?

கல்வெட்டு said...

.

வானம்பாடிகள் ,
உங்களின் பதிவின் மைய இழையாக நான் நினைப்பது

1. அரசுப்பணிகளில் ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் தேர்வாகியவர்கள், தேர்வு எழுதினால் பதிவ் உயர்வு என்று வரும் நிலையில் தேர்வை எழுதாமல் அந்த நிலையிலேயே இருப்பதால் .... சங்கிலித் தொடராக முன்னும் பின்னும் மற்றவர்கள் அதே இட ஒதுக்கீட்டில் பயன் பெறவில்லை.


2. இரண்டாவது , புரபசனல் என்ற புண்ணாக்கு (மன்னிக்கவும் இந்தியாவைல் புரபசனல் என்ற நிலை இல்லை என் பார்வையில்) எஞ்சினியரிங் படித்துவிட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு தேர்வாகி புவியியல் வரலாறு என்ற பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு ஆப்பு வைப்பது.

இந்த இரண்டையிம் நீங்கள் இட ஒதுக்கீடு என்ற கண்ணாடியின் மூலம் பார்க்கிறீர்கள்.

உண்மையில் இட ஒதுக்கீடுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது ஒரு சமூகவியாதி. :-((((

எதற்குப் படிக்கிறோம் ?
ஏன் படிக்கிறோம்?
இதை வைத்துதான் பணம் சம்பாரிக்கப் போகிறோமா?
......

என்ற புரிதல் யாருக்கும் இல்லை.


**


ஒரு 12 ஆவது மாணவன் அப்பா அம்மா அத்திம்பேர் அறிவுரையில் ஏதோ ஒரு குப்பையைப் படிக்கிறான்.

காசு உள்ளவன் எது வேண்டுமானாலும் படிக்கிறான்.

காசும் வாய்ப்பும் வழியும் இல்லாதவன் கலைகல்லூரி என்று சொல்லும் ஒன்றில் எதையோ படிக்கிறான்.


கல்லூரிகளும் எதைக் கற்றுக் கொடுக்கிறது என்று தெரியவில்லை. வெளியே வந்தவுடன் மறுபடியும் வேலை தேடுவது எப்படி என்று அப்பா அம்மா அத்திம்பேர் நண்பர் என்று அலைகிறான். :-(((

இது சமுதாய/ கல்வி முறையில் உள்ள குற்றம். நிறையப் பேசலாம் ஆனால் இட ஒதுக்கீடு என்ற பார்வையில் மட்டும் இதை அணுகுவது என்னளவில் சரியானது அல்ல.

‍=====

அடுத்து பதவி உயர்வு....

நான் எந்தவழியில் வேலைக்குச் சேர்ந்து இருந்தாலும்... பதவி உயர்வு வேண்டாம் (எனக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்) என்று நான் நினைத்தால் அது மதிக்கப்பட வேண்டும்.

அப்படி நான் எடுத்த முடிவு எனக்கு முன் / பின் உள்ள இடங்களை நிரப்ப தடையாக உள்ளது என்றால் அது அலுவலக நடைமுறைக் குறைபாடு.

***

எந்தக் காலத்திலும் விருப்பமில்லாதவர்களை வற்புறுத்தி அல்லது சூழ்நிலையால் பதவி/பொறுப்புக் கொடுத்தால் அதௌ பதவி/பொறுப்புக்கும் அவர்களும் நல்லதல்ல.

உதாரணம்: பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள். இவர இந்த ஜாப்பிற்கு விண்ணப்பம் போடவேயில்லை. பல அரசியல் காரணங்களுக்காக உட்காரவைக்கப்பட்டு உள்ளார். என்ன பயன்?

எனவே, நிறுவனம் மற்றும் வேலைக்கு விரும்பி காத்து இருக்கும் நபர்களின் நலங்களைக் கருத்தில் கொண்டு நடைமுறைகளை மாற்றவேண்டும்.

===


இட ஒதுக்கீடு பற்றி நான் வலியச் சொன்னதன் நோக்கம், பலருக்கும் அதன் நோக்கம் தெரியவில்லை என்ற ஆதங்கத்தில்.. :-((( உங்களின் பதிவின் நோக்கத்தை திசை திருப்புமாயின் எடுத்துவிடலாம்.


.

புருனோ Bruno said...

//இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். //

இது முழுவதும் தவறான தகவல். பெரம்பூர் தொடர்வண்டி மருத்துவமனை மட்டுமே அரசு மருத்துவமனை அல்ல

தமிழகத்தில் சுமார் 2200 அரசு மருத்துவ நிலையங்கள் உள்ளன

அங்கு எதிலுமே DNB Trainee Doctors கிடையாது என்று ஆதாரப்பூர்வமாக நிருபிக்க தயார்

DNB முடித்தவர்கள் சிலர் பணிபுரியலாம்

ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி
தமிழகத்தில் அரசு மருத்துவ பணிகளில் சுமார் 14000 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்

இவர்களில் DNB முடித்தவர்கள் 500 பேர் கூட இருக்க மாட்டார்கள்

DNB Trainee Doctors யாருமே கிடையாது.

எனவே நீங்கள் கூறிய //இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள்// என்பது பெரம்பூர் தொடர்வண்டி மருத்துவமனையை தவிர வேறு எந்த மருத்துவமனைக்கும் பொருந்தாது என்றே நினைக்கிறேன்

வானம்பாடிகள் said...

கேள்வி : ஏன் தமிழக அரசில் மட்டும் அனைத்து பணியிடங்களுக்கும் வேலை செய்ய ஆள் கிடைக்கிறார்கள்

பதில் : இது போல் OBC / SC / ST காலிடங்களை பின்வாசல் வழியாக FCக்கு ஒதுக்கும் நயவஞ்சக வேலை மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்கனவே உள்ளவர்கள் (தற்சமயம் நிர்வாக பணியில் பெரும்பாண்மையாக இருக்கும் FC) மூலம் நடந்து வருகிறது//

ஒரு டாக்டரிடமிருந்து இத்தகைய பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. எந்த மந்திரியுமே கூட ஒரு பொதுத் தேர்வில் எந்த ஜாதிக்காரனுக்கும் வேலை வாங்கித் தரமுடியாது.

இடுகையை சரியாகப் படியுங்கள் டாக்டர். அல்லது இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை ஒரு முறை பாருங்கள். ஒரு ஒதுக்கப்பட்ட இடம் நிரப்பப்படாமல் இருந்தால், இருக்கும் அத்தனை தாழ்த்தப்பட்ட/மலை சாதியினரும் வேறு ஏதோ வேலையில் இருக்கிறார்கள் என்றாலும் அல்லது யாருமே தகுதியானவர்கள் இல்லை என்றே தெரிந்தாலும், அந்த பணியிடம் வேறு யாரையும் இட்டு நிரப்ப முடியாது. 100 வருடமானாலும் அந்த காலியிடம் அப்படியேதான் இருக்கும்.

பின் வாசல்?:)). omg. தேர்வுகள் ஆன்லைனில் அல்லது திருத்தப் படுவது கம்ப்யூட்டர் மூலம். கார்பன் காபி விடைத்தாள். இரண்டும் தனியாகத் திருத்தப்பட்டு ஒப்பு நோக்கப்பட்டு சரியாக இருந்தால்தான் தேர்ச்சி. அதனால் தானோ வர மறுக்கிறார்கள் என்பது என் சந்தேகம்.

வானம்பாடிகள் said...

புருனோ

/இது குறித்து யாராவது பொறியாளர் பதில் கூறினால் நலம்/

சிம்பிள் சார். அலைய வேண்டும். உழைப்பு அதிகம். தொழிலாளர்களிடம் வேலை வாங்குவது கடினம்.

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//மாநில வாரியாகப் பார்த்தோமானால், கேரளாவில் ஒரு இடம் கூட இப்படி காலியிருக்காது. தமிழகத்தில் மிக அதிகமாயிருக்கும் என்பது என் கணிப்பு. //

இது குறித்து கணிப்பாக இல்லாமல் சரியான தகவல் தர முடியுமா

தமிழகத்தில் இவ்வளவு வட இந்தியர்கள் வேலை பார்க்கும் போது :) :) :) எப்படி சார் இடம் காலியாக உள்ளது !!!!//

டிஸ்கியில் போட்டபடி தகவல் வேண்டுமெனில் தகவலறியும் சட்டத்தில் கேளுங்கள். கணிப்பில் சொல்லுவதில்லை அது. வட இந்தியன் வேலை பார்க்கும்போது என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்களேன். எப்படி? ஏன் தமிழ்நாட்டில் ஆட்களே இல்லையா? பின்னெப்படி அவர்கள் வருகிறார்கள். ஸ்பெஷல் ட்ரைவில் கூட தமிழ்நாட்டிலிருந்து ஆட்கள் வரவில்லை. பத்திரிகையில் பார்த்திருப்பீர்களே. தமிழில் பரீட்சை எழுதலாம் என்று வந்த பின்னும் அறைக்கு 3 அல்லது 4 பேர்தான்.

புருனோ Bruno said...

//ஒன்று போதுமான அபேட்சகர்கள் வரவில்லை என புள்ளி விவரம் கூறுகிறது. என்னால் பகிர முடியாது. தகவலறியும் சட்டத்தில் கேட்டால் கிடைக்கும்.
அடுத்தது நேர்மையான, எந்த செல்வாக்கும் நுழைய முடியாத தேர்ச்சி முறை. அது கலாசியானாலும் சரி, கண் டாக்டர் ஆனாலும் சரி, கம்ப்யூட்டர் என்ன சொல்கிறதோ அதுதான். //

எனக்கு உங்கள் தேர்ச்சி முறை பற்றி தெரியாது

ஆனால் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மற்றும் ஐ.ஐ.டி களில் என்ன நடக்கிறது என்று தெளிவாகவே தெரியும்

அங்கு நடப்பது மேல்சாதி நிர்வாகிகளின் மோசடியே என்பது பலரால் பலமுறை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது

மாதிரிக்கு இந்த இடுகைகளின் மறுமொழிகளை படிக்கவும்

1. தகவல் அறியும் சட்டத்தினால் அம்பலமான ஐ.ஐ.டி தேர்வு மோசடி

2. இட ஒதுக்கீட்டில் மோசடி

அங்கும் கம்ப்யூட்டர் வைத்து தான் தேர்வு முறை என்பதை நினைவு படுத்தவும் :) :) :)

ஐ.ஐ.டியில் போதுமான OBC / SC / ST மாணவர்கள் இல்லை என்று கூறியது மேல் சாதி நிர்வாகிகளின் மோசடி என்று தகவல் அறியும் உரிமை சட்டம் வந்தபின் தெளிவாகியது போல் உங்கள் துறையில் யாராவது மனு போட்டால் பல ஆடு வேசம் போட்ட ஓநாய்களின் சுயரூபம் வெளிவரலாம்

கல்வெட்டு சார்.. ரெடியா

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//தன்னலம் என்று கூட சொல்லமாட்டேன் தன்சுகம் கருதி, தன்னையொத்தவன் வயிற்றில் மண்ணள்ளிப் போடுவது யார்? இட ஒதுக்கீட்டின் பயன் அனுபவிப்பவர்களே என்பது அதிர்ச்சியளிக்கக் கூடும்.//

இல்லை
இதை நான் மறுக்கிறேன்

பதில் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.//

மன்னிக்க வேண்டும் டாக்டர். நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை எனும்போது விளக்கத்துக்கு வழியேயில்லை.அடுத்த பதிலில் விளக்குகிறேன்.

புருனோ Bruno said...

//Please try to understand. This post is not against reservation. its about non utilisation of the reservation system. people are just not willing to be recruited. What can Railways do? they can conduct the exam. but if people dont appy and even if apply dont appear for the exam what will happen. the vacancies will remain for ever. thats all. //

நீங்கள் என்ன கூறுகிறீர்கள்

காலியிடங்களை விட குறைவான அளவு பேர் தான் விண்ணப்பிக்கிறார்கள் என்றா கூறுகிறீர்கள்

இது எந்த பணிக்கு ??

இந்த விண்ணப்பங்கள் குறித்த notifications எங்கு வெளியிடப்படுகின்றன ??

இனி வரும் காலங்களில் அந்த notificationகளை உங்கள் வலைபதிவில் வெளியிடலாமே ??

அல்லது எனக்கு அனுப்பினால் நால் வெளியிட தயார்

செந்தழல் ரவி இதற்கென்றே ஒரு தளம் வைத்துள்ளார் http://tedujobs.blogspot.com/

அங்கு அனுப்பலாம்

புருனோ Bruno said...

//எனக்குத் தெரியாது சார். நான் சொன்ன படி தேர்ச்சி முறையாக இருக்கலாம். அல்லது மத்திய அரசு பணியென்றால் இந்தியா முழுதும் ட்ரான்ஸ்ஃபர் வரலாம் என்ற தயக்கமாக இருக்கலாம். //

ஐ.ஐ.டில் என்ன காரணம் என்று விளக்கியுள்ளேன் சார். சந்தேமென்றால் கேட்கவும்

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச்//

பலன் அடைபவர்களின் மேல் உங்களுக்கு ஏன் சார் கோபம்//

ஒருவர் இன்று பணியில் சேர்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் ஐந்து அல்லது 10 வருடங்களில் மூன்றிலிருந்து ஐந்து பதவி உயர்வு பெறமுடியும். அதற்கு மேல் பரிட்சை இருக்கும். அதனால் எழுதத் தயாரில்லை. அல்லது இது போதும் என்ற நினைப்பு. இப்போது என்னவாகிறது. அவருக்கு மேலிருக்கும் பதவிக்கு ஆட்கள் இல்லாமல் காலியாகவே இருக்கும்.

ஒரு அலுவலகத்தில் எல்லாரும் க்ளார்க்காகவே இருக்கத்தான் சம்மதம். மேனேஜராகப் போனால் நான் முடிவெடுக்க வேண்டும் அது ரிஸ்க் அதனால் வேண்டாம் என்றால், அத்தனை க்ளார்க்குகள் பார்த்த வேலைக்கு ஆர்டர் அல்லது வழிகாட்டல் சொல்வது யார்? எனவே மேல்மட்ட பதவிகளுக்கான காலியிடங்கள் விரயமாகிறதா இல்லையா?
.............தொடரும்

புருனோ Bruno said...

//செய்தி மத்திய அரசினுடையது. நான் சொன்னதும் யுபிஎஸ்ஸியில் ஏன் விண்ணப்பிக்க மறுக்கிறார்கள் என்பது.

தமிழக அரசில், எந்த வேலையிலும் இட ஒதுக்கீட்டின் படியான காலியிடங்கள் இல்லவே இல்லை என்றா சொல்கிறீர்கள்? //

தமிழகத்தில் பல காலியிடங்கள் உள்ளன

அதற்கு காரணம் 1990களுக்கு பின்னர் recruitment தடை செய்யப்பட்டது

இது போல் FC எல்லாம் full, OBC/SC/ST மட்டும் vacant என்ற மோசடி நடப்பது மத்திய அரசில் தான்

புருனோ Bruno said...

//ஒரு டாக்டரிடமிருந்து இத்தகைய பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. எந்த மந்திரியுமே கூட ஒரு பொதுத் தேர்வில் எந்த ஜாதிக்காரனுக்கும் வேலை வாங்கித் தரமுடியாது. //

ஐ.ஐ.டியில் நடந்தது ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுவிடது

பனங்காட்டு நரி said...

/////omg. தேர்வுகள் ஆன்லைனில் அல்லது திருத்தப் படுவது கம்ப்யூட்டர் மூலம். கார்பன் காபி விடைத்தாள். இரண்டும் தனியாகத் திருத்தப்பட்டு ஒப்பு நோக்கப்பட்டு சரியாக இருந்தால்தான் தேர்ச்சி. அதனால் தானோ வர மறுக்கிறார்கள் என்பது என் சந்தேகம்./////

சார் ,
Assistant loco pilot பரிட்சைக்கு 136 vacancy க்கு எத்தனை பேர் எழுதினாங்க தெரியுமா சார் ....,இரண்டாம் கட்ட தேர்வுக்கே (PSYCHOLOGY டெஸ்ட்) 1136 செலக்ட் ஆகியிருந்தார்கள் ...அப்படி என்றல் Preliminary எத்தனை பேர் எழுதி இருப்பாங்க எல்லோருக்கும் வரணும் ஆசை தான் சார் ....,

புருனோ Bruno said...

//அத்தனை தாழ்த்தப்பட்ட/மலை சாதியினரும் வேறு ஏதோ வேலையில் இருக்கிறார்கள் என்றாலும் அல்லது யாருமே தகுதியானவர்கள் இல்லை என்றே தெரிந்தாலும், அந்த பணியிடம் வேறு யாரையும் இட்டு நிரப்ப முடியாது. 100 வருடமானாலும் அந்த காலியிடம் அப்படியேதான் இருக்கும். //

அப்படியா ???? !!! :) :) :) அப்படித்தான் நடக்கிறதா

புருனோ Bruno said...

//பின் வாசல்?:)). omg. தேர்வுகள் ஆன்லைனில் அல்லது திருத்தப் படுவது கம்ப்யூட்டர் மூலம். கார்பன் காபி விடைத்தாள். இரண்டும் தனியாகத் திருத்தப்பட்டு ஒப்பு நோக்கப்பட்டு சரியாக இருந்தால்தான் தேர்ச்சி. அதனால் தானோ வர மறுக்கிறார்கள் என்பது என் சந்தேகம். //

ஐயா

மதிப்பெண் போடுவது கணினி தான்

ஆனால் விதிகளை ஒருவாக்குவது மனிதர்கள் அல்லவா

ஐ.ஐ.டி கதையை ஒரு முறை படியுங்கள் சார்

வானம்பாடிகள் said...

தொடர்ச்சி..
ஐந்து முதல் பத்து வருடத்தில் அதிகபட்ச பதவி உயர்வு பெற்று மீதி 30 வருடம் அதே பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதற்கு அடுத்த பதவியில் இருப்பவருக்கு பதவி உயர்வு வாய்ப்பைத் தடுக்கிறாரா இல்லையா?

இப்போது காலியிடங்களுக்கே ஆட்கள் இல்லாத போது இடைப்பட்ட பணிகளுக்கு தயாரில்லை என பதவி உயர்வையும் புறக்கணிப்பதால் அந்தப் பதவிகள் காலியாகவே விரயமாகிறதா இல்லையா.

வாய்ப்பு இருக்கையில் பயன் படுத்திக் கொண்டு மேலே மேலே போவதனால் ஒரு சங்கிலித் தொடர்ச்சியாக அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட இடங்கள் பயனளிக்கும். கடைசியாக அடிமட்ட நிலையில் மட்டும் இப்போது போல் காலியிடங்கள் இருக்கும்.

வாய்ப்பைப் பயன்படுத்த மறுத்து இப்படி விரயமாக்குகிறார்களே என்ற என் கோபத்தில் தவறிருக்கிறதா சொல்லுங்கள்.

புருனோ Bruno said...

//ஒருவர் இன்று பணியில் சேர்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் ஐந்து அல்லது 10 வருடங்களில் மூன்றிலிருந்து ஐந்து பதவி உயர்வு பெறமுடியும். அதற்கு மேல் பரிட்சை இருக்கும். அதனால் எழுதத் தயாரில்லை. அல்லது இது போதும் என்ற நினைப்பு. இப்போது என்னவாகிறது. அவருக்கு மேலிருக்கும் பதவிக்கு ஆட்கள் இல்லாமல் காலியாகவே இருக்கும்.

ஒரு அலுவலகத்தில் எல்லாரும் க்ளார்க்காகவே இருக்கத்தான் சம்மதம். மேனேஜராகப் போனால் நான் முடிவெடுக்க வேண்டும் அது ரிஸ்க் அதனால் வேண்டாம் என்றால், அத்தனை க்ளார்க்குகள் பார்த்த வேலைக்கு ஆர்டர் அல்லது வழிகாட்டல் சொல்வது யார்? எனவே மேல்மட்ட பதவிகளுக்கான காலியிடங்கள் விரயமாகிறதா இல்லையா?//

எனக்கு சில சந்தேகங்கள்

1. Promotion only என்று பதவிகள் உள்ளனவா

2. அது போன்ற பதவிகளுக்கு FCகள் சென்று விடுகிறார்கள், OBC / SC / ST மட்டும் செல்வதில்லை (அல்லது குறைவாக செல்கிறார்கள்) என்பது உங்கள் குற்றச்சாட்டா

--

அல்லது விண்ணப்பிக்க வேண்டிய entry level பதவிகளில் கூட OBC / SC / ST விண்ணப்பங்கள் போதிய அளவில் வரவில்லை என்கிறீர்களா

--

இரண்டும் வேறு வேறு பிரச்சனை

--

தனித்தனியாக அலசுவோம்

புருனோ Bruno said...

//வாய்ப்பைப் பயன்படுத்த மறுத்து இப்படி விரயமாக்குகிறார்களே என்ற என் கோபத்தில் தவறிருக்கிறதா சொல்லுங்கள்.//

இந்த கோபத்தில் தவறில்லை

ஆனால் மாநில அரசு பணியில் junior assistant --> assistant --> superindent --> JAO --> AO என்று செல்லும் OBC / SC / ST மத்திய அரசு பணியில் அப்படி செல்ல முடியாதற்கு என்ன காரணம் :) :)

--

தமிழக அரசின் மருத்துவ நுழைவுத்தேர்வில் அனைத்து BC / MBC / SC / ST இடங்களும் நிரம்பும் போது மத்திய அரசின் தேர்வில் நிரம்பாதா அதே காரணம் தானா

புருனோ Bruno said...

சில விஷயங்களை தெளிவுபடுத்துங்கள்

காலியிடங்கள் entry level postகளில் உள்ளனவா அல்லது promotion level postகளில் மட்டும் உள்ளனவா

காமராஜ் said...

அன்பின் பாலாண்ணா.

வாதத்திற்கென்று வரும்போது பயம் தேவையில்லை.நீங்கள் சொல்லவரும்கருத்தை இருதய சுத்தியோடு சொன்னால் யாரும் ஏற்பார்கள்.

உங்களின் புள்ளி விபரங்களோடு முற்றிலும் உடன்பாடு இருக்கிறது. நிர்வாக ரீதியான இந்த அனுகுமுறையும்,தரவுகளும்,கருத்தும் தெளிவாகவே இருக்கிறது.

எனினும்..
கருப்புவெள்ளையில் வராத உணர்வு பூர்வமான தரவுகள் கோடி இருக்கும். ஒரு தேர்ந்த எழுத்துக்காரராக( அஞ்சும் ஆறும் நானும் உங்களை நினைத்து பெருமிதப்படவைத்த எழுத்து) அதை நீங்கள் ஏற்பீர்கள்.

மராட்டிய மன்னனின் படையில் இனைக்கப்பட்ட முதல் போர்வீரன் தொடங்கி,கற்பூரி தாகூரின் இட ஒதுக்கீடு,அம்பேத்கரின் வாழ்நாள் போராட்டம் என்கிற பாதையில் இன்று உள்ளொதுக்கீடு என்கிற கோரிக்கை வரை பயணித்திருக்கிறது இந்த புணரமைத்தல் வேலை.

பின்னாடி திரும்பிப்பார்த்தால் கொஞ்சம் பூரிப்பாக இருக்கிறது. முன்னே பார்த்தால் மலைப்பாயிருக்கிறது ஜாதியெனும் விஷச்செடியின் காலதேச வர்த்தமானம்.

சேது சார்.புருனோ ,KALVETTU,மிகத்தெளிவாகச்சொல்லுகிறார்கள் .

ஒருதகவல்.

நெல்லைப்பக்கம் பனி ஓய்வுபெற்ற ஒரு மாவட்ட ஆட்சியரை மாடுமேய்க்கிற சின்னப்பையன் கேட்டானாம் ' ஏப்பா ....எப்ப வந்தே' என்று.தரையிறங்கும் அவமானம்.அவர் யார் மீது பிசிஆர் கேஸ் புக் பண்ணுவார்.எங்காவதுபொரு மெற்றோ பாலிட்டன் நகரத்து அடுக்குமாடியில் போய் ஒளிந்துகொள்வதைத்தவிர அவரால் வேறு என்ன செய்ய முடியும்.

பாலாண்ணா.
சரியான விவாதங்களை அனுமதியுங்கள்.குதர்க்கமான எந்த பின்னூட்டத்தையும் மட்டறுங்கள்.

வானம்பாடிகள் said...

நசரேயன் said...
//இத்தனை காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக்
காரணமென்ன? //

ஆட்சி முடியுற சமயத்திலே இடத்தை எல்லாம் நிரப்பிட்டா, தேர்தல்ல ஓட்டு கேட்க வசதியா இருக்கும்னு நினைச்சி இருப்பாங்க//

ஆஆஆஆஆஆ. இப்போ கொலை விழும்:))

வானம்பாடிகள் said...

புருனோ said..

புரியவில்லை

முதலில் அரசு தேர்வு எழுத மறுக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்

அதன் பிறகு வருகிறார்கள் என்று கூறுகிறீர்கள்

என்ன சொல்ல வருகிறீர்கள்

ஏதோ குழம்பி போய் உள்ளீர்கள் என்று மட்டும் புரிகிறது//

ஏன் டாக்டர் இப்படி. அரசுத் தேர்வு எழுத மறுக்கிறார்கள் என்பதில் என்ன பிரச்சனை.

எஞ்சினியரிங் படித்து விட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு வருகிறார்களே என்றேன். ஒரு வேளை பேங்கும் அரசு அலுவலகம் என்று நினைத்தீர்களானால் சாரி. அது பொதுத்துறை.

குழம்பினது நானா? அவ்வ்வ்:((

வானம்பாடிகள் said...

//இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச்//

இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுபவர்களின் மீதான் உங்கள் பெருங்கோபம் தான் குழப்பத்திற்கு காரணமா//

முதல்ல உங்களுக்கு என் மேல் என்ன கோபம் சொல்லுங்கள். தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.

/காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.
அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்./

இதற்குப் பிறகும் பலன் பெறுபவர்கள் மேல் எனக்குக் கோபமோ குழப்பமோ வரக் காரணம் என்னவாக இருக்க முடியும்?

வானம்பாடிகள் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அநியாயங்களில் எதைச் சொல்ல..எதை விட..;((//

விடுறதில்லை சார். மொத்த அனியாயமும் சொல்லிப்பார்க்கலாம். இந்த வாரம் ஃபுல்லாவானாலும் சரி:))

வானம்பாடிகள் said...

Sethu said...

//The need of a departmental exam to promote an individual, I see it as a tool to discriminate, also a process of elimination. If questions are asked mostly in English and Hindi, and not in regional languages, it is tough. //

Exactly sir. but having joined a service, having availed a benefit with the same conditions, wasting the benefit is wrong unless its beyond one's control. Thats the point.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||இட ஒதுக்கீடு||

எனக்கு இது புரியாது என்று திட்டவட்டமாகத் தெரிந்தமையால்... பதிவைப் படிக்கவில்லை.. ஹிஹி.. எஸ்கேப்பு...

நம்ம பாஸ் சொல்லுவாங்க... நம்மளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கனும்னு இல்லை... :D//

ங்கொய்யால. இக்னோரன்ஸ் அபௌட் அ ரூல் ஈஸ் நாட் அன் எக்ஸ்க்யூஸ்னு சட்டம் சொல்லுது. :))

வானம்பாடிகள் said...

Sethu said...
Sir!

What is the meaning of 'விழலுக்கிறைத்த நீரா?' ? Sorry for my ignorance. Do you mean it is waste?//

ஆமாம் சேது.

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...
விரிவான, ஆக்கப் பூர்வ, அவசிய பதிவு.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்//

நன்றி ஆரூரன்.

வானம்பாடிகள் said...

1. Promotion only என்று பதவிகள் உள்ளனவா

2. அது போன்ற பதவிகளுக்கு FCகள் சென்று விடுகிறார்கள், OBC / SC / ST மட்டும் செல்வதில்லை (அல்லது குறைவாக செல்கிறார்கள்) என்பது உங்கள் குற்றச்சாட்டா

--

அல்லது விண்ணப்பிக்க வேண்டிய entry level பதவிகளில் கூட OBC / SC / ST விண்ணப்பங்கள் போதிய அளவில் வரவில்லை என்கிறீர்களா

--

இரண்டும் வேறு வேறு பிரச்சனை

--

தனித்தனியாக அலசுவோம்//

இரண்டுமே. இரண்டும் வேறு வேறு அல்ல. தொடர்புடையது. எண்ட்ரி லெவலுக்கு மேற்பட்டு மூன்று முதல் ஐந்து நிலை வரை புரமோஷன் மட்டுமே.

புரோமஷன் முறை பற்றி எழுதினால் யாருக்கு ஆர்வமிருக்கப் போகிறது என நினைத்தேன். தனியாக ஒரு இடுகையில் விளக்குவதே சரி.

முகிலன் said...

Your feelings about the reservation system being misused in Railways Department is understandable. But, the title and the finishing punch is going to give the readers a perception thar you are against reservation. While saying so, I support reservation.

The problems that you have mentioned here can be easily resolved by the government by issuing some orders.
1. If a person is not ready to write exams and get promoted, the person who wishes to go up the ladder(in the same reservation category though) should be allowed to jump a level (may be the years of experience needed to appear for the exam increased by a few years). Now the person who rejected the promotion offer will have no right to oppose his junior to become his senior)

2. People who have professional degrees must be prohibited from applying for non-professional government or public sector jobs. If there are not enough applications then they may be considered.

3. Doctors willing to do contract job as opposed to a permanent job - the reason may be that they can't practice on their own if they work in a permanent position. This may be eliminated by having Railways go for Campus placement to Medical colleges.

Sethu said...

Sir,

Initially I thought this post was questioning the reservation system.

When an individual takes up a postion, and if he doesn't want any future career prospects by passing an exam and waits for the same thru his years of experience is his personal choice.

But I don't understand how he can stop his junior from appearing an exam and get promoted.

In this case, will you blame the evaluation system or the individual.

Any how, forget it. Its night time for you. Have a nice sleep Sir. Need to rejuvante you for tomorrow's busy city life.

முகிலன் said...

Same for Engineers not appearing for Technical jobs. Railways may go for Campus recruitment to different Engineering Colleges

வானம்பாடிகள் said...

ஐ.ஐ.டியில் போதுமான OBC / SC / ST மாணவர்கள் இல்லை என்று கூறியது மேல் சாதி நிர்வாகிகளின் மோசடி என்று தகவல் அறியும் உரிமை சட்டம் வந்தபின் தெளிவாகியது போல் உங்கள் துறையில் யாராவது மனு போட்டால் பல ஆடு வேசம் போட்ட ஓநாய்களின் சுயரூபம் வெளிவரலாம்

கல்வெட்டு சார்.. ரெடியா//

சாரி. எங்கள் துறையில் இதற்கான கட்டமைப்பு வலுவானது. ஒரு சின்ன தவறுக்கும் வாய்ப்பில்லை. கிளார்க்கிலிருந்து அதிகாரி வரை ஒதுக்கீட்டுக்கு உட்பட்ட மலைச்சாதி/தாழ்த்தப்பட்ட வகுப்பினரே. எந்த மறைமுக நேரடி மிரட்டலுக்கும் அஞ்ச வேண்டிய அவசியமின்றி துறைத்தலைவரையும் தாண்டி தலைமையிடம் முறையீடு செய்யும் அதிகாரம் கொண்டவர்கள். மேலும் தவறிருப்பின் அவர்களே பொறுப்பாதலால் ஒரு சின்ன தவறு கூட செய்ய முடியாது.

வானம்பாடிகள் said...

நீங்கள் என்ன கூறுகிறீர்கள்

காலியிடங்களை விட குறைவான அளவு பேர் தான் விண்ணப்பிக்கிறார்கள் என்றா கூறுகிறீர்கள்

இது எந்த பணிக்கு ??

இந்த விண்ணப்பங்கள் குறித்த notifications எங்கு வெளியிடப்படுகின்றன ??

இனி வரும் காலங்களில் அந்த notificationகளை உங்கள் வலைபதிவில் வெளியிடலாமே ??

அல்லது எனக்கு அனுப்பினால் நால் வெளியிட தயார்

செந்தழல் ரவி இதற்கென்றே ஒரு தளம் வைத்துள்ளார் http://tedujobs.blogspot.com/

அங்கு அனுப்பலாம்//

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன், ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட் ஆகியவை நடத்தும் எந்தப் பரீட்சையும். அதன் தளங்களில் பரீட்சைக்கான் தேதி இருக்கும்.தேங்கிய பணியிடங்களுக்கான தேர்வில் எந்த செண்டரில் போய் பார்த்தாலும் ஈ ஆடும். அப்படியே வருபவனும் பீகார்க்காரர்கள்தான். ஏன் என்பதுதான் கேள்வி.

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//எனக்குத் தெரியாது சார். நான் சொன்ன படி தேர்ச்சி முறையாக இருக்கலாம். அல்லது மத்திய அரசு பணியென்றால் இந்தியா முழுதும் ட்ரான்ஸ்ஃபர் வரலாம் என்ற தயக்கமாக இருக்கலாம். //

ஐ.ஐ.டில் என்ன காரணம் என்று விளக்கியுள்ளேன் சார். சந்தேமென்றால் கேட்கவும்//

படித்துவிட்டு கேட்கிறேனே.

கல்வெட்டு said...

.

//வானம்பாடிகள் said...

அல்லது விண்ணப்பிக்க வேண்டிய entry level பதவிகளில் கூட OBC / SC / ST விண்ணப்பங்கள் போதிய அளவில் வரவில்லை என்கிறீர்களா//

தகவலுக்கு .. அய் அய் டி எனப்படும் அமெரிக்க வேலையாள் உற்பத்தி நிலையத்தில் (இந்தியாவிர்கு பிரயோசனமான எந்தவிதக் கண்டுபிடிப்புகளும் இதுவரை இங்கிருந்து வரவில்லை என்பதால்) இப்படித்தான் OBC / SC / ST
க்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று அதை பொதுப்பிரிவினர் பயன்படுத்திய தில்லுமுல்லுகள் தேர்வு செய்யும் முறைகள் பொதுப்பார்வைக்கு வேண்டும் என்றவுடன் தெரியவந்தது...

இது பற்றிய சுட்டிகள் இல்லை. உறுதியாக எது எப்போது நடந்தது என்று சொல்லமுடியவில்லை. (டாக்டர் புருனோ உதவலாம்)‌

நீங்கள் சொல்வதும் இரயில்வேயின் தேர்வு முறைகள் (மதிப்பெண் ஏன் இவரை எடுத்தோம் ? போன்ற வை) பொதுப்பார்வைக்கு வந்தால் ஒருவேளை உண்மை தெரிய வரலாம்.

தயவுசெய்து இட ஒதுக்கீட்டை இப்படி இரயில்வேயின் பணி உயர்வு, தேர்வு போன்ற பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டும் பார்த்து அது ஒன்று செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்.

சமூகத்தில் எதிர்பார்த்த அந்தஸ்து / மரியாதை சார்ந்த மாற்றம் இல்லை என்றாலும் இது போன்ற முயற்சிகளால்தான் குறைந்தபட்ச மாறுதல்கள் (பொருளாதரம்) நடந்திருக்கிறது. இன்னும் போக வேன்டிய தூரம் அதிகம்.

வானம்பாடிகள் said...

இது போல் FC எல்லாம் full, OBC/SC/ST மட்டும் vacant என்ற மோசடி நடப்பது மத்திய அரசில் தான்//

மிகப்பெரிய தொழிற்சங்கள் உள்ளவை மத்திய அரசு அலுவலகங்கள். வேகன்ஸி வைத்துக் கொண்டு மோசடி செய்ய விட மாட்டார்கள். தீர்ப்பாயம் இருக்கவே இருக்கிறது. அவர்களுக்கான கோட்டாவை வேறு யாரையாவது வைத்து நிரப்ப முடியுமானால் மோசடி எனலாம். தகுதியான ஆட்கள் இருந்தும் நிரப்பாமல் வைக்க முடியும் என நினைக்கிறீர்களா டாக்டர்.

வானம்பாடிகள் said...

பனங்காட்டு நரி said...
/////omg. தேர்வுகள் ஆன்லைனில் அல்லது திருத்தப் படுவது கம்ப்யூட்டர் மூலம். கார்பன் காபி விடைத்தாள். இரண்டும் தனியாகத் திருத்தப்பட்டு ஒப்பு நோக்கப்பட்டு சரியாக இருந்தால்தான் தேர்ச்சி. அதனால் தானோ வர மறுக்கிறார்கள் என்பது என் சந்தேகம்./////

சார் ,
Assistant loco pilot பரிட்சைக்கு 136 vacancy க்கு எத்தனை பேர் எழுதினாங்க தெரியுமா சார் ....,இரண்டாம் கட்ட தேர்வுக்கே (PSYCHOLOGY டெஸ்ட்) 1136 செலக்ட் ஆகியிருந்தார்கள் ...அப்படி என்றல் Preliminary எத்தனை பேர் எழுதி இருப்பாங்க எல்லோருக்கும் வரணும் ஆசை தான் சார் ....,//

அப்புறம் என்னவாகிறது. 136ல் FC/OBC நிரம்பியிருக்கும். எஸ்ஸி/எஸ்டி கோட்டாவில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அல்லது தேர்ச்சி அடைவது குறைவு.

வானம்பாடிகள் said...

ஆனால் மாநில அரசு பணியில் junior assistant --> assistant --> superindent --> JAO --> AO என்று செல்லும் OBC / SC / ST மத்திய அரசு பணியில் அப்படி செல்ல முடியாதற்கு என்ன காரணம் :) :) //

அஸிஸ்டண்டோடு நின்றுவிடுவது. சூபரிண்டண்ட் தேர்ச்சி அடிப்படையிலானது என்பதால் தேர்வெழுதுவதில்லை. அதற்கே அப்படி எனும்போது மேற்படி பதவிகளுக்கும் வாய்ப்பில்லை. சூப்பிரண்டண்டிலேயே நின்றுவிட்டால் கீழிருக்கும் அஸிஸ்டண்ட், ஜூனியர் அஸிஸ்டண்ட் எல்லாம் தேங்கிப் போகிறார்கள். இதைத்தான் குறிப்பிட்டேன்.

தமிழக அரசில் முடிகிறதே. ரயில்வேயில் ஏன் முடியவில்லை என்றால், நிர்வாக அமைப்புதான். அதற்கான சட்டங்களும்தான்.

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
சில விஷயங்களை தெளிவுபடுத்துங்கள்

காலியிடங்கள் entry level postகளில் உள்ளனவா அல்லது promotion level postகளில் மட்டும் உள்ளனவா//

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். செய்தியில் வந்தது எண்ட்ரி லெவல் போஸ்டுகளுக்கு மட்டும். நான் சொல்வது ப்ரொமோஷனல் போஸ்டுகளையும் கூட.

வானம்பாடிகள் said...

தமிழக அரசின் மருத்துவ நுழைவுத்தேர்வில் அனைத்து BC / MBC / SC / ST இடங்களும் நிரம்பும் போது மத்திய அரசின் தேர்வில் நிரம்பாதா அதே காரணம் தானா//

I am helpless doctor. I have seen correspondences stating that due to insufficient number of candidates and selected candidates not willing to join the posts a number of Assistant Medical Officers posts could not be filled up. This goes for all the posts. not only the reserved community posts. For other posts, definitely lesser number of applicants appear for the exam and most of them fail to pass the preliminary exams.

கார்த்திகைப் பாண்டியன் said...

மிக முக்கியமான விஷயம்.. தொடருங்கள்.. தெரிந்து கொள்கிறேன்..

வானம்பாடிகள் said...

காமராஜ் சார் தனிப்பட்ட தாக்குதல் தவிர்த்த எந்த பின்னூட்டமும் அனுமதிப்பேன். மத்திய அரசைப் பொறுத்தவரை 40 பாயிண்ட் ரோஸ்டர், பாயிண்ட் டு பாயிண்ட் ரோஸ்டர் என்று பல ஆவணங்களைக் கடந்து பின்னரே எந்தப் பணியும் நிரப்பப்படும். துறை தாண்டி எஸ்ஸி/எஸ்டி கமிஷன், டிபார்ட்மெண்ட் ஆஃப் பெர்சோனல் ஆகியவற்றுக்கு விபரங்கள் அனுப்பப்பட வேண்டும். தொழிற்சங்கங்களிலே கூட எஸ்ஸி/எஸ்டி நலனுக்காக தனிப்பிரிவும் போக அவர்களுக்கான அங்கீககரிக்கப்பட்ட அசோசியேஷன்களும் இருப்பதால் மோசடிக்கு வாய்ப்பே இல்லை.

வானம்பாடிகள் said...

ஒருதகவல்.

நெல்லைப்பக்கம் பனி ஓய்வுபெற்ற ஒரு மாவட்ட ஆட்சியரை மாடுமேய்க்கிற சின்னப்பையன் கேட்டானாம் ' ஏப்பா ....எப்ப வந்தே' என்று.தரையிறங்கும் அவமானம்.அவர் யார் மீது பிசிஆர் கேஸ் புக் பண்ணுவார்.எங்காவதுபொரு மெற்றோ பாலிட்டன் நகரத்து அடுக்குமாடியில் போய் ஒளிந்துகொள்வதைத்தவிர அவரால் வேறு என்ன செய்ய முடியும். //

வாஸ்தவம்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அய்யா எனக்கு ஒரு சந்தேகம் . இவளவு இடங்களை நிரப்பாமல் . இருப்பதானால் இவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கிறது . ஒருவேளை அந்த இடங்களில் பணிக்கும் அமர்த்தும் அனைவரின் உதியதையும் கொடுப்பதாக சொல்லி இவர்களே !???

Sethu said...

"I am helpless doctor. I have seen correspondences stating that due to insufficient number of candidates and selected candidates not willing to join the posts a number of Assistant Medical Officers posts could not be filled up. This goes for all the posts. not only the reserved community posts. For other posts, definitely lesser number of applicants appear for the exam and most of them fail to pass the preliminary exams. "

Sir!,
In overseas, they identify the dedicated people in service, train them to appear in exams to qualify for the next position. This is done regularly to get certification in the specialized field.

This can be tried.

Also I read an individual training poor Bihar students to appear in IIT entrance exams.

railways can start one similar to this for their own staff to get prmoted.

Does this sound good, Sir?

rajasundararajan said...

அய்யா,

நீங்கள் என்ன font-இல் உங்கள் பதிவுகளை எழுதுகிறீர்கள்? என் கணினி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பச்சைநிற ஆச்சரியக் (!) குறிகளையே காட்டுகிறது. குருட்டுத் தடவலாகப் பின்னூட்டப் பெட்டி திறந்து இதை இடுகிறேன். (குருட்டுச் சொடுக்கல் வழி, பின்னூட்டங்களும் தெளியக் கிட்டுகின்றன). என்ன செய்தால் உங்கள் இடுகை தெளியக் கிட்டும்? அருள்கூரவேண்டும்!

வானம்பாடிகள் said...

rajasundararajan said...
அய்யா,

நீங்கள் என்ன font-இல் உங்கள் பதிவுகளை எழுதுகிறீர்கள்? என் கணினி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பச்சைநிற ஆச்சரியக் (!) குறிகளையே காட்டுகிறது. குருட்டுத் தடவலாகப் பின்னூட்டப் பெட்டி திறந்து இதை இடுகிறேன். (குருட்டுச் சொடுக்கல் வழி, பின்னூட்டங்களும் தெளியக் கிட்டுகின்றன). என்ன செய்தால் உங்கள் இடுகை தெளியக் கிட்டும்? அருள்கூரவேண்டும்!//

லதா எழுத்துரு. NHMபயன்பாட்டில் இருப்பது. ரீடரில் படிக்க முடியுமே சார். கூடிய விரைவில் டெம்ப்ளேட் மாற்ற முயற்சிக்கிறேன்.

வானம்பாடிகள் said...

கல்வெட்டு சார் முதலில் ஒன்றைப் புரிய வைக்கவேண்டும். இந்த இடுகை இடஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல. இட ஒதுக்கீட்டின் வாய்ப்பைப் பெற மறுக்கும் தடுக்கும் அதன் பயனாளர்கள் குறித்தே. இரயில்வே மட்டுமன்றி இதரத் துறையிலிருப்பவர்களுடனும் தகவல் ஓரளவுக்கு அறிந்த பின்னரே எழுதினேன். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று எங்கேயும் நான் சொல்லவேயில்லையே. இப்போதெல்லாம் ப்ரோமோஷனல் பரீட்சையானாலும் எடுத்த மதிப்பெண்கள், தகவலறியும் சட்டத்தின் கீழ் விடைத்தாள் காப்பி எல்லாம் கொடுக்க வேண்டியிருப்பதால் ஊழலுக்கு நோ சான்ஸ்.

செந்தழல் ரவி said...

//ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன், ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட் ஆகியவை நடத்தும் எந்தப் பரீட்சையும். அதன் தளங்களில் பரீட்சைக்கான் தேதி இருக்கும்.தேங்கிய பணியிடங்களுக்கான தேர்வில் எந்த செண்டரில் போய் பார்த்தாலும் ஈ ஆடும். அப்படியே வருபவனும் பீகார்க்காரர்கள்தான். ஏன் என்பதுதான் கேள்வி///

எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இங்கிலீஷ் பேப்பரை விடுத்து, தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்தால் போதும்.

செந்தழல் ரவி said...

///காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.
அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்///

அந்த மேல் லேயரில் உள்ள காலியிடத்தை நேரடியாக தேர்வு வைத்து எடுத்து நிரப்ப முடியாதா ?

இது நிர்வாக குறைபாடுதானே சார் ? இதுக்கும் இட ஒதுக்கீடுக்கும் என்ன சம்பந்தம் ?

செந்தழல் ரவி said...

///காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.
அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்///

அந்த மேல் லேயரில் உள்ள காலியிடத்தை நேரடியாக தேர்வு வைத்து எடுத்து நிரப்ப முடியாதா ?

இது நிர்வாக குறைபாடுதானே சார் ? இதுக்கும் இட ஒதுக்கீடுக்கும் என்ன சம்பந்தம் ?

redwithanger said...

Bala sir - the situation with regard to UPSC is very different when compared to govt. jobs within tamilnadu (i think bruno is talking about govt jobs in tn). The UPSC can post you anywhere within the country and transfer you anywhere as well. Also, if some one joins there immediately after his undergraduation, it takes a very long time of service for him before he can do his MD as post graduation. There are much better options available - like becoming a govt. doctor in their own state (tamilnadu in this case) or go for post graduation. After the housesurgeoncy, most of them want to do their post graduation immediately and finish the studies part (the entrance exam is very tough, so it is always better to do them immediately when they are fresh from studies rather than to do that after 5 years of service). Thats the reason why UPSC positions are not favored by many.

குடுகுடுப்பை said...

பயனடந்தவர்களே நாளடைவில் நவீன பார்ப்பனியளாரகா மாறி தங்களுக்கு கீழ் அடுத்த ஒரு தாழ்த்தப்பட்ட அடுக்கை தோற்றுவித்து இவர்கள் நவீன / புதிய எஜமானர்களா மாறிவிடுகிறார்கள்.//

இதுதான் உண்மை, இட ஒதுக்கீட்டில இந்தக்காலத்தில் பயனடைபவர்கள் வர்னாஸ்ரமம் போன்று முன்னமே பயனடைந்தவர்களே அதிகம். புருனோ ஆதாரம் கேட்பார், என்னிடம் இல்லை இது காமன் சென்ஸ் பதிலே, எல்லாவற்றிற்கும் ஆதாரம் தரும் இதற்கும் ஆதாரம் தரலாம்.இட ஒதுக்கீடு உரியவனை சென்று அடைவதில்லை என்பதே கசப்பான உண்மை.

குடுகுடுப்பை said...

நான் முதல் முறை பயனாளிகளுக்கே இட ஒதுக்கீடு கொடுக்கச்சொல்வதில் ஒரு பெரிய சுயநலம் இருக்கிறது, எனது மகள் அமெரிக்க குடியிரிமை பெற்றதால் என்னால் இட இதுக்கீட்டில் சீட்டு வாங்க முடியாது என்ற சுயநலத்தால் பொதுநலம் பேசுகிறேன்.

Srinath said...

ஜாதி சார்ந்த சலுகைகளால் யாருக்கும் பலன் இல்லை ...உண்மை தான் ஒப்புகொள்கிறேன்... ஆனால் நம் நாட்டைபோல் ஜாதி சமந்தப்பட்ட பிரச்சைனைகளை கொண்ட நாடுகளில் அனைவரும் ஒன்றே என்ற சட்டம் கொண்டுவரப்பட்டு எந்த சலுகைகள் இல்லாமல் இருப்பதுண்டு.. அனால் அங்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்தபட்டவர்கலாகவே பிறந்து மடிகின்றனர்... (எடுத்துகாட்டாக : அமெரிக்க வாழ் கறுப்பின மக்கள் , அகதியாக வரும் மெக்சிகோ நாட்டு மக்கள்)

இவர்கள் பிழைபிற்காக யாரும் வேலை செய்யாத வேலைகளை செய்கின்றனர் ஆனால் கடைசியில் அகதிகளாகவே இருந்துவிடுகிறார்கள்.

என் தீர்வு: எந்த ஒரு முதுகெல்லும்பு இல்லாத அரசாங்கத்திற்கும் ஜாதி சார்ந்த சலுகைகள் கொடுபதற்கோ அல்லது அனைவரும் ஒன்று என்று சொல்வதற்கோ அருகதை கிடையாது. அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றே, ஆகவே இதனை ஓர் காரணமாக கொண்டு நம் முன்னோர்கள் செய்த தவறை செரி செய்யும் பெயரில் இன்னும் நம்மை கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள்.

தன் ஜாதியை சார்ந்த ஒவொவ்வோருவனும் அதன் பலன்களை அனுபவிக்கும் போது , தன் மக்களுக்கு நல்லது செய்ய முன்வந்தால் இந்நேரம் இந்த கட்டுரைக்கான தேவை இருந்திருக்காது நானும் இதை எழுத தேவை இருந்திருக்காது.

மனிதனின் கைகள் ஏதேனும் எடுபதற்கோ, பரிபதற்கோ தவிர கொடுபதற்கு அல்ல. இந்நிலை மாறும் வரை எந்த சட்டமும் எதுவும் செய்ய இயலாது...

Srinath said...
This comment has been removed by the author.
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இட ஒதுக்கீடு விழலிற்கு இரைத்த நீரா?

இல்லை. இட ஒதுக்கீடு சமூகத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்குத் தேவையான ஒன்று.

இட ஒதுக்கீடு சரியான வகையில் செல்லாததற்கு யார் காரணம்?

அரசாங்கத்தின் திட்டங்களும், பதவி உயர்வு வழிமுறைகளுமே காரணம்.

ஒரு இடம் நிரம்பவில்லை என்றால் என்ன செய்வது?

இடம் நிரம்பவில்லை என்றால் தகுதியுள்ளவர்களுக்குத் தர வேண்டும்.

அரசாங்க வேலையில் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லாதவர்களை என்ன செய்வது?

பொறுப்பை ஏற்கும் அளவிற்கு பயிற்சி வகுப்புகள் அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அப்படி அவர்கள் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்றால் மற்ற தரப்பினரை அமர்த்தலாம் என்ற விதிமுறை வர வேண்டும்.

நன்றிங்க பாலாண்ணே. உங்கள் கருத்தை எழுதியமைக்கு.

கே.ஆர்.பி.செந்தில் said...

நம் தேசத்தில் ஒரு முறையான எதுவுமே கிடையாது ... நம்மை ஆள்பவர்களின் தரம் அப்படி ..

விந்தைமனிதன் said...

//கேள்வி : இது போல் OBC / SC / ST காலியிடங்கள் மத்திய அரசு பணியிலேயே அதிகம் காலியிருப்பது ஏன்

கேள்வி : ஏன் தமிழக அரசில் மட்டும் அனைத்து பணியிடங்களுக்கும் வேலை செய்ய ஆள் கிடைக்கிறார்கள்

பதில் : இது போல் OBC / SC / ST காலிடங்களை பின்வாசல் வழியாக FCக்கு ஒதுக்கும் நயவஞ்சக வேலை மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்கனவே உள்ளவர்கள் (தற்சமயம் நிர்வாக பணியில் பெரும்பாண்மையாக இருக்கும் FC) மூலம் நடந்து வருகிறது //

well shot Dr.புருனோ! ஐ.ஐ.டிக்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இடஒதுக்கீடு தொடர்பான கொடூர முறைகேடுகள் இன்னும் வெளிவரவில்லை

விந்தைமனிதன் said...

//பலன் அடைபவர்களின் மேல் உங்களுக்கு ஏன் சார் கோபம்//
அதுனாலதான் புருனோ சார் கோவமே!

விந்தைமனிதன் said...

//இது போல் FC எல்லாம் full, OBC/SC/ST மட்டும் vacant என்ற மோசடி நடப்பது மத்திய அரசில் தான்//

நிச்சயம் மறுக்க முடியாத ஒன்று... புருனோவும் கல்வெட்டும் கூறிய கருத்துக்களைத் தவிர்த்து வேறென்ன புதிதாகச் சொல்வது? நிர்வாகக் குறைபாடுகளை, இட ஒதுக்கீட்டு முறையோடு குழப்பிக் கோள்வது தவறான பார்வை. வர்ணக் கண்ணாடிகளைக் கழட்டிவிட்டுப்ப்பார்ப்பது நலம்

வானம்பாடிகள் said...

விந்தைமனிதன் said...
//இது போல் FC எல்லாம் full, OBC/SC/ST மட்டும் vacant என்ற மோசடி நடப்பது மத்திய அரசில் தான்//

நிச்சயம் மறுக்க முடியாத ஒன்று... புருனோவும் கல்வெட்டும் கூறிய கருத்துக்களைத் தவிர்த்து வேறென்ன புதிதாகச் சொல்வது? நிர்வாகக் குறைபாடுகளை, இட ஒதுக்கீட்டு முறையோடு குழப்பிக் கோள்வது தவறான பார்வை. வர்ணக் கண்ணாடிகளைக் கழட்டிவிட்டுப்ப்பார்ப்பது நலம்//

ஒன்று இடுகையை படித்துப் புரிந்து கொள்ளுங்கள். அல்லது கல்வெட்டு சாருக்கும், ப்ரூனோ சாருக்கும் நீங்கள் குறிப்பிட்ட பகுதிக்கு என் பதிலைப் படித்த பிறகு பின்னூட்டமிடுங்கள். வர்ணக்கண்ணாடி எப்படி தவறோ, இட ஒதுக்கீடு என்றாலே எதிர்ப்பான் இடுகை எனக் கருதுவதும் தவறு.

ஷங்கர் said...

்,//// ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட் ஆகியவை நடத்தும் எந்தப் பரீட்சையும். அதன் தளங்களில் பரீட்சைக்கான் தேதி இருக்கும்.தேங்கிய பணியிடங்களுக்கான தேர்வில் எந்த செண்டரில் போய் பார்த்தாலும் ஈ ஆடும். அப்படியே வருபவனும் பீகார்க்காரர்கள்தான். ஏன் என்பதுதான் கேள்வி./////

அண்ணே ,
சும்மா சொல்லாதீங்க ...என்னக்கு தெரிந்து நீங்க பார்திருகமடீங்க ... பீகார் ஆட்கள் எப்படி வந்தார்கள் ,வருகிறார்கள் என்பது எலோருக்கும் தெரியும்
தமிழ்நாட்ல எவ்ளவு பேர் ரயில்வே வேளைக்கு தவம் கிடைகிரர்கள் தெரியுமா ...,அதே போல் vacancy கரெக்டா fill up ஆயிடும் FC /OBC /SC /ST எல்லாம்......,

Sethu said...

இங்குள்ள பின்னூட்டங்களை எல்லாம் பார்க்கும் போது, ஒரு தனி மனிதன் தன் மன ஓட்டங்களை எல்லாம் சொல்வதற்கு எம்புட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது. ஜன நாயகத்திலே சொந்தமா யோசிக்க விடனும். என்னுடைய பின்னூட்டங்கள் எல்லாம் ஒரு பகிர்வே அன்றி, நான் சமீபமாக அறிந்த பெரிதும் மதிக்கும் வானம்பாடி ஐயாவை சிறுமைப் படுத்த அல்ல. என் பதிவு ஏதாவது விதத்திலே அப்பிடி contribute பண்ணியிருந்தா மன்னிக்கவும்.
இங்கு எல்லோரும் ஒரு கட்டம் கட்ற மாதிரி தோன்றுகிறது. அது சரியா வென்று தோன்றவில்லை.
நமது நாட்டிலே sensitive ஆன topic நிறைய இருக்கு போல. ஒரு வார்த்தை ப்ர்யோகிசாலே முண்ணுறு அம்புகள் வருகிறது. ஒரு ஆரோக்கியமான விவாத மாக இருப்பது நல்லது .
கதிருக்கு எதிர் வரும் என்று நினைச்சேன் sir.

புருனோ Bruno said...

//ஏன் டாக்டர் இப்படி. அரசுத் தேர்வு எழுத மறுக்கிறார்கள் என்பதில் என்ன பிரச்சனை.//

அவர்கள் தேர்வு எழுத மறுக்கவேயில்லை என்பது தான் உண்மை

அப்படி இருக்க நீங்கள் தேர்வு எழுத மறுக்கிறார்கள் என்று கூறியது தவறு

அது தவறு என்பது உங்கள் அடுத்தடுத்த கருத்துக்களில் வெளிப்படுகிறது

//எஞ்சினியரிங் படித்து விட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு வருகிறார்களே என்றேன்.//
அதே அதே
பிறகு அவர்கள் தேர்வு எழுத மறுக்கிறார்கள் என்று நீங்கள் கூறியது தவறன்றோ

// ஒரு வேளை பேங்கும் அரசு அலுவலகம் என்று நினைத்தீர்களானால் சாரி. அது பொதுத்துறை. //
சரி
தொடர்வண்டி அரசு அலுவலகமா, பொது துறையா

புரியல
தயவு செய்து விளக்கவும்

புருனோ Bruno said...

//முதல்ல உங்களுக்கு என் மேல் என்ன கோபம் சொல்லுங்கள். தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். //

இல்லை சார்

நீங்கள் கூறும் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன.

மீண்டும் ஒரு முறை சரிபார்க்கவும்

ஒரு இடத்தில் யாரும் வேலைக்கு வரவில்லை என்று கூறுகிறீர்கள்

அதற்கு அடுத்து யாரும் பதவி உயர்வு பெற வில்லை என்று கூறுகிறீர்கள்

வேலைக்கு வராமல் அவர் எப்படி அந்த பதவியில் இருக்க முடியும் :) :) :)

--

ஒரு இடத்தில் பொறியியல் படித்தவர் அரசு வேலைக்கு வரவில்லை என்கிறீர்கள்

அடுத்த இடத்தில் பொறியியல் படித்தவர் சாதா வேலைக்கே வருகிறார் என்கிறீர்கள்

--

அரசில் எழுத்தர் வேலைக்கே சேர விரும்பும் பொறியாளர் அதே அரசில் பொறியாளர் வேலை கிடைத்தால் சும்மா விடுவாரா

புருனோ Bruno said...

//இரண்டுமே. இரண்டும் வேறு வேறு அல்ல. தொடர்புடையது. எண்ட்ரி லெவலுக்கு மேற்பட்டு மூன்று முதல் ஐந்து நிலை வரை புரமோஷன் மட்டுமே. //

தொடர்புடையது

இங்கு எதில் காலியிடம் என்று தெளிவாக கூறுங்கள் என்பது தான் என் கேள்வி

//புரோமஷன் முறை பற்றி எழுதினால் யாருக்கு ஆர்வமிருக்கப் போகிறது என நினைத்தேன். தனியாக ஒரு இடுகையில் விளக்குவதே சரி. //

என்ன கொடுமை சார் இது
யாரும் பதவி உயர்வு பெறுவதில்லை என்பது தானே உங்கள் இந்த இடுகையின் குற்றச்சாட்டு

இல்லையா ...

யாரும் வேலைக்கு வருவதில்லை என்ற உங்களின் மற்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது, ஆதாரமற்றது என்று நீங்களே தெளிவாக கூறிவிட்டீர்கள் :) :)

புருனோ Bruno said...

//1. If a person is not ready to write exams and get promoted, the person who wishes to go up the ladder(in the same reservation category though) should be allowed to jump a level (may be the years of experience needed to appear for the exam increased by a few years). Now the person who rejected the promotion offer will have no right to oppose his junior to become his senior)
//

முகிலன் ஐயா.... ஏன் இந்த விதிமுறை வரவில்லை என்று உங்களுக்கு நிஜமாகவே புரியவில்லையா :) :) :) :)

புருனோ Bruno said...

//2. People who have professional degrees must be prohibited from applying for non-professional government or public sector jobs. If there are not enough applications then they may be considered.//

ஒரு வேலைக்கு கல்வி தகுதி BE என்றால் ME படித்தவர்கள் விண்ணபிக்க தடையா

புருனோ Bruno said...

//3. Doctors willing to do contract job as opposed to a permanent job - //

இல்லை

அப்படி இல்லை

DNB பற்றி வானம்பாடி அவர்களின் தவறான புரிதல் அது

யாரும் நிரந்திர வேலை வேண்டாம் என்று கூறுவதில்லை.

அனைவரும் நிரந்தர வேலை வேண்டும் என்று தான் கூறுகிறார்கள்

மேலும் விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்

//the reason may be that they can't practice on their own if they work in a permanent position. //

DNB குறித்த தவறான புரிதலின் ஏற்பட்ட குழப்பம் அது

//This may be eliminated by having Railways go for Campus placement to Medical colleges. //

தற்சமயம் தொடர்வண்டிதுறையில் காலியிடங்கள் உள்ளனவா ??

புருனோ Bruno said...

//well shot Dr.புருனோ! ஐ.ஐ.டிக்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இடஒதுக்கீடு தொடர்பான கொடூர முறைகேடுகள் இன்னும் வெளிவரவில்லை //

இல்லை சார்

இப்ப கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது

மாதிரிக்கு இந்த இடுகைகளின் மறுமொழிகளை படிக்கவும்

1. தகவல் அறியும் சட்டத்தினால் அம்பலமான ஐ.ஐ.டி தேர்வு மோசடி

2. இட ஒதுக்கீட்டில் மோசடி

புருனோ Bruno said...

//இங்குள்ள பின்னூட்டங்களை எல்லாம் பார்க்கும் போது, ஒரு தனி மனிதன் தன் மன ஓட்டங்களை எல்லாம் சொல்வதற்கு எம்புட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது.//

சேது சார்

கருத்து என்பது வேறு
தகவல் என்பது வேறு

--

யாரும் அவர்களின் கருத்தை சொல்வதற்கு தடையே கிடையாது.

ஆனால் தகவல் என்பது சரியான தகவலாக இருக்க வேண்டும்

--

நான் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்
. குடுகுடுப்பை எதிர்க்கிறார்கள்

எங்களிருவருக்கும் அதை உரக்க சொல்ல உரிமை உண்டு

--

ஆனால் வானம்பாடி சார் இங்கு தெரிவித்த சில தகவல்கள் மீது, (அந்த தகவல்கள் சரியில்லை என்று எங்களுக்கு தோன்றியதால்) எங்கள் கருத்தை கூறுகிறோம்

புருனோ Bruno said...

தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)

தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.

உதாரணம் :
சரியான தகவல் – பெட்ரோல் விலை 50 ரூபாய்
தவறான தகவல் – பெட்ரோல் விலை 25 ரூபாய்

கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்

ஒரு கருத்து – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்

வேறு ஒரு கருத்து – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.

அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது

ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம்.

அப்ப நம்பிக்கை -

உதாரணம்

நம்பிக்கை 1 – பெட்ரோல் விலை குறையும்
நம்பிக்கை 2 – பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
நம்பிக்கை 3 – பெட்ரோல் விலை கூடும்

நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது

படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது :) :) :)

புருனோ Bruno said...

அலுவலக விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளை இட ஒதுக்கீட்டின் குறைபாடுகளாக வானம்பாடி சார் தெரிவித்திருப்பதை தான் நாங்கள் விவாதிக்கிறோம்

மற்றப்படி அவர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கலாம். அல்லது எதிர்க்கலாம். நீங்களும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கலாம். அல்லது எதிர்க்கலாம்.

அது உங்கள் உரிமை

நீங்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள் அல்லது எதிர்க்கிறீர்கள் என்பதற்கு காரணம் சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது அது உங்கள் முழு உரிமை

ஆனால் ஏதாவது காரணம் சொன்னால் அது சரியான காரணமாக இருக்க வேண்டும்.

இல்லை என்றால் விவாதம் ஏற்படும்.

இது இடப்பங்கீடு என்றில்லை. எந்த விவாதத்திற்கும் பொருந்தும்.

--

உதாரணம் எனக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர் தான் பிடிக்கும் என்று நீங்கள் கூறலாம். அதை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். காரணம் கூற தேவையில்லை

அல்லது இந்தியன் எக்ஸ்பிரஸ் பிடிக்காது என்றும் கூறலாம்.அதையும் யாரும் விமர்சிக்க மாட்டர்கள். காரணம் கூற தேவையில்லை

ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸில் பயன்படுத்தும் தமிழ் எழுத்துரு நன்றாக இல்லையென்பதால் எனக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பிடிக்க வில்லை என்று எழுதினீர்கள் என்றால் பிரச்சனை

புரியவைக்க முயன்றுள்ளேன் :) :)

குடுகுடுப்பை said...

தகவல் அறியும் சட்டம் மூலம் இட ஒதுக்கீட்டில் பயன்பெறும் முதன் முறை பிற்படுத்தப்பட்ட /தாழ்த்தப்பட்ட பயனாளிகளை கண்டுபிடிக்க ஏதேனும் வழி உள்ளதா? ஐஐடி விதிமுறை மீறிய ஊழல், இங்கே இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட /தாழ்த்தப்பட்ட உயர்ஜாதியினருக்கு.

முகிலன் said...

////2. People who have professional degrees must be prohibited from applying for non-professional government or public sector jobs. If there are not enough applications then they may be considered.//

ஒரு வேலைக்கு கல்வி தகுதி BE என்றால் ME படித்தவர்கள் விண்ணபிக்க தடையா//

டாக்டர் ப்ரூனோ, மீண்டும் படியுங்கள். ப்ரொஃபஷனல் டிகிரி - BE, ME, MBBS, MCA, MBA, BTech etc - படித்தவர்களை பேங்க் வேலை போன்ற பணிகளுக்குத் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது. அதே சமயம் ஒரு எஞ்சினியருக்கான பணிக்கு பி.இ குறைந்த பட்ச தகுதியாக இருக்கும்போது எம்.இ படித்தவர் விண்ணப்பிக்க ஏன் தடை விதிக்க வேண்டும்?

வானம்பாடிகள் said...

செந்தழல் ரவி said...
///காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.
அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்///

அந்த மேல் லேயரில் உள்ள காலியிடத்தை நேரடியாக தேர்வு வைத்து எடுத்து நிரப்ப முடியாதா ?

இது நிர்வாக குறைபாடுதானே சார் ? இதுக்கும் இட ஒதுக்கீடுக்கும் என்ன சம்பந்தம் ?//

முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பும், சட்டவிதிமுறைகளும் அனுமதிப்பதில்லை.

வானம்பாடிகள் said...

redwithanger said...
Bala sir - the situation with regard to UPSC is very different when compared to govt. jobs within tamilnadu (i think bruno is talking about govt jobs in tn). The UPSC can post you anywhere within the country and transfer you anywhere as well. Also, if some one joins there immediately after his undergraduation, it takes a very long time of service for him before he can do his MD as post graduation. There are much better options available - like becoming a govt. doctor in their own state (tamilnadu in this case) or go for post graduation. After the housesurgeoncy, most of them want to do their post graduation immediately and finish the studies part (the entrance exam is very tough, so it is always better to do them immediately when they are fresh from studies rather than to do that after 5 years of service). Thats the reason why UPSC positions are not favored by many.//

Probably so. thanks for understanding and taking pains to clarify.

வானம்பாடிகள் said...

குடுகுடுப்பை said...
பயனடந்தவர்களே நாளடைவில் நவீன பார்ப்பனியளாரகா மாறி தங்களுக்கு கீழ் அடுத்த ஒரு தாழ்த்தப்பட்ட அடுக்கை தோற்றுவித்து இவர்கள் நவீன / புதிய எஜமானர்களா மாறிவிடுகிறார்கள்.//

இதுதான் உண்மை, இட ஒதுக்கீட்டில இந்தக்காலத்தில் பயனடைபவர்கள் வர்னாஸ்ரமம் போன்று முன்னமே பயனடைந்தவர்களே அதிகம். புருனோ ஆதாரம் கேட்பார், என்னிடம் இல்லை இது காமன் சென்ஸ் பதிலே, எல்லாவற்றிற்கும் ஆதாரம் தரும் இதற்கும் ஆதாரம் தரலாம்.இட ஒதுக்கீடு உரியவனை சென்று அடைவதில்லை என்பதே கசப்பான உண்மை.//

ஆமாங்க. அவங்களுக்கு சேர வேண்டியதை கொடுக்காம தேக்கி வச்சி யாருக்கும் கொடுக்காம வைக்கப் போறதில்லை. அப்படி யாருக்கும் கொடுக்காம வச்சிருந்து உத்தியோகத்துக்கு ஆப்பு வச்சிக்க யாரு விரும்புவாங்க. இந்த வாய்ப்பை பயன் படுத்தியிருந்தா தேக்கம் ஏன் வருது? அரசாங்கம் இவ்வளவு இடம்னு ஒதுக்கி அதற்கு தேர்வு நடத்துறதோட கடமை முடிஞ்சது. ஆளு தேர்வாகலைன்னா அவங்கதான் இடுகைல வந்த நியூஸ் மாதிரி பதில் சொல்லணும்.

வானம்பாடிகள் said...

Srinath said...
ஜாதி சார்ந்த சலுகைகளால் யாருக்கும் பலன் இல்லை ...உண்மை தான் ஒப்புகொள்கிறேன்...

மனிதனின் கைகள் ஏதேனும் எடுபதற்கோ, பரிபதற்கோ தவிர கொடுபதற்கு அல்ல. இந்நிலை மாறும் வரை எந்த சட்டமும் எதுவும் செய்ய இயலாது...//

தயவு செய்து இடுகையை இன்னோரு முறை அல்லது புரியும் வரை படிக்கவும். இடுகையின் நோக்கம் அதுவல்ல. நன்றி.

வானம்பாடிகள் said...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
இட ஒதுக்கீடு விழலிற்கு இரைத்த நீரா?

இல்லை. இட ஒதுக்கீடு சமூகத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்குத் தேவையான ஒன்று.

இட ஒதுக்கீடு சரியான வகையில் செல்லாததற்கு யார் காரணம்?

அரசாங்கத்தின் திட்டங்களும், பதவி உயர்வு வழிமுறைகளுமே காரணம்.

ஒரு இடம் நிரம்பவில்லை என்றால் என்ன செய்வது?

இடம் நிரம்பவில்லை என்றால் தகுதியுள்ளவர்களுக்குத் தர வேண்டும்.

அரசாங்க வேலையில் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லாதவர்களை என்ன செய்வது?

பொறுப்பை ஏற்கும் அளவிற்கு பயிற்சி வகுப்புகள் அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அப்படி அவர்கள் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்றால் மற்ற தரப்பினரை அமர்த்தலாம் என்ற விதிமுறை வர வேண்டும்.

நன்றிங்க பாலாண்ணே. உங்கள் கருத்தை எழுதியமைக்கு.//

இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற கருத்தல்ல இது. அதன் பலனை பெற மறுக்கையில் விழலுக்கிறைத்த நீராகிறது என்பதே நோக்கம். பயிற்சிகளுக்கும், தளர்ச்சி விதிகளுக்கும் விரிவான வழிமுறை இருக்கிறது. அப்படியும் பரீட்சை எழுதத் தயாரில்லை என்பதே இடுகையின் சாரம். வேறு யாருக்கும் இந்த காலியிடங்களைக் கொடுக்கக் கூடாது என்பது உச்சநீதி மன்ற ஆணை, மற்றும் அரசின் கொள்கை.

வானம்பாடிகள் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

//நம் தேசத்தில் ஒரு முறையான எதுவுமே கிடையாது ... நம்மை ஆள்பவர்களின் தரம் அப்படி ..//

சாரி செந்தில். இடுகை அது குறித்தல்ல.

வானம்பாடிகள் said...

ஷங்கர் said...
்,//// ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட் ஆகியவை நடத்தும் எந்தப் பரீட்சையும். அதன் தளங்களில் பரீட்சைக்கான் தேதி இருக்கும்.தேங்கிய பணியிடங்களுக்கான தேர்வில் எந்த செண்டரில் போய் பார்த்தாலும் ஈ ஆடும். அப்படியே வருபவனும் பீகார்க்காரர்கள்தான். ஏன் என்பதுதான் கேள்வி./////

அண்ணே ,
சும்மா சொல்லாதீங்க ...என்னக்கு தெரிந்து நீங்க பார்திருகமடீங்க ... பீகார் ஆட்கள் எப்படி வந்தார்கள் ,வருகிறார்கள் என்பது எலோருக்கும் தெரியும்
தமிழ்நாட்ல எவ்ளவு பேர் ரயில்வே வேளைக்கு தவம் கிடைகிரர்கள் தெரியுமா ...,அதே போல் vacancy கரெக்டா fill up ஆயிடும் FC /OBC /SC /ST எல்லாம்......,//

சாரிங்க. இங்க இருக்கிற ஆட்கள் முயற்சியெடுத்து எழுதினா பேக்லாக் ஏன் வருது. சரி அப்படி பேக்லாக் வந்த இடங்களுக்கு பரீட்சை நடத்தும்போது 100 பேர் இருக்கும் அறையில் 90 பேர் இந்திக்காரன் 10 பேர் தமிழன் இருந்தாலும் பரவாயில்லை.
10-15 இந்திக்காரனும் ஒரு தமிழனும். அவனும் கூட முழுதாக எழுதுவதில்லை என்பதே உண்மை.

வானம்பாடிகள் said...

Sethu said...
இங்குள்ள பின்னூட்டங்களை எல்லாம் பார்க்கும் போது, ஒரு தனி மனிதன் தன் மன ஓட்டங்களை எல்லாம் சொல்வதற்கு எம்புட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது. ஜன நாயகத்திலே சொந்தமா யோசிக்க விடனும். என்னுடைய பின்னூட்டங்கள் எல்லாம் ஒரு பகிர்வே அன்றி, நான் சமீபமாக அறிந்த பெரிதும் மதிக்கும் வானம்பாடி ஐயாவை சிறுமைப் படுத்த அல்ல. என் பதிவு ஏதாவது விதத்திலே அப்பிடி contribute பண்ணியிருந்தா மன்னிக்கவும்.
இங்கு எல்லோரும் ஒரு கட்டம் கட்ற மாதிரி தோன்றுகிறது. அது சரியா வென்று தோன்றவில்லை.
நமது நாட்டிலே sensitive ஆன topic நிறைய இருக்கு போல. ஒரு வார்த்தை ப்ர்யோகிசாலே முண்ணுறு அம்புகள் வருகிறது. ஒரு ஆரோக்கியமான விவாத மாக இருப்பது நல்லது .
கதிருக்கு எதிர் வரும் என்று நினைச்சேன் sir.//

இல்லைங்க சேது. ஓரளவு விவாதம் சார்ந்து அல்லது அதற்கு வலு சேர்க்கும் பின்னூட்டங்களாகவே கருதுகிறேன். நன்றி.

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...

//அவர்கள் தேர்வு எழுத மறுக்கவேயில்லை என்பது தான் உண்மை

அப்படி இருக்க நீங்கள் தேர்வு எழுத மறுக்கிறார்கள் என்று கூறியது தவறு//

அப்படியானால் பேக்லாக் வேகன்ஸி எப்படி வந்தது? பிரதமர் அலுவலகத்திலிருந்து சொன்ன தகவலும் பொய்யோ?

//அது தவறு என்பது உங்கள் அடுத்தடுத்த கருத்துக்களில் வெளிப்படுகிறது//

அது உங்கள் புரிதலில் குறைபாடு.

////எஞ்சினியரிங் படித்து விட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு வருகிறார்களே என்றேன்.//
அதே அதே
பிறகு அவர்கள் தேர்வு எழுத மறுக்கிறார்கள் என்று நீங்கள் கூறியது தவறன்றோ//

எஞ்சினியரிங் பரிட்சைக்கு தயாரில்லை. பேங்க் பரீட்சைக்கு தயாராயிருக்கிறார்கள் என்றேன். இது எப்படி மாறான கருத்து என்கிறீர்கள். அப்படியானால் எஞ்சினியரிங் சர்வீசில் அவர்களுக்கான இடத்தை யார் பயனடையக் கொடுப்பது. அந்த இடங்களையும் பயன்படுத்தாமல், இஞ்சினியரிங் வேலைக்கு தகுதியற்ற பிற பட்டதாரிகளுக்குச் சேரவேண்டிய பணியிடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வது சரியென்று எனக்குப் படவில்லை.

வானம்பாடிகள் said...

//அரசில் எழுத்தர் வேலைக்கே சேர விரும்பும் பொறியாளர் அதே அரசில் பொறியாளர் வேலை கிடைத்தால் சும்மா விடுவாரா//

திரும்பவும் சொல்கிறேன் பேங்கில் எழுத்தர் வேலைக்கு பொறியாளர் தயார். அரசில் எழுத்தர் வேலைக்கோ இன்ன பிற வேலைக்கோ, பொறியாளர் வேலைக்கோ அவர் தயாரில்லை. ஏன் என்பதுதான் கேள்வி.

வானம்பாடிகள் said...

Bruno said

சரி
தொடர்வண்டி அரசு அலுவலகமா, பொது துறையா

புரியல
தயவு செய்து விளக்கவும்//

தொடர்வண்டி அரசுத்துறை. வங்கி பொதுத் துறை. நீங்கள் சொன்ன ஐ.ஐ.டி, ஏ.ஐ.எம்.எஸ் என்பன அரசுத்துறை அல்ல. அரசு மானியம் பெறுபவை. அதில் ஊழல் என்றால் இந்த இடுகை அதைப்பற்றியல்ல. எந்த ஊழலுமின்றி சரியான ஒதுக்கீடு இருந்தும் பயனடைய மறுப்பது ஏன் என்பதற்கான விவாதம்.

வானம்பாடிகள் said...

Bruno said..
//ஒரு இடத்தில் யாரும் வேலைக்கு வரவில்லை என்று கூறுகிறீர்கள்

அதற்கு அடுத்து யாரும் பதவி உயர்வு பெற வில்லை என்று கூறுகிறீர்கள்

வேலைக்கு வராமல் அவர் எப்படி அந்த பதவியில் இருக்க முடியும் :) :) :)//

உங்களுக்கு புரியவில்லை என்றால் புரிய முயலுங்கள். இல்லையேல் விட்டு விடுங்கள். திரிக்க வேண்டாம் ப்ளீஸ்.

2000ம் ஆண்டில் ஒரு 50 பேர் வேலைக்கு சேருகிறார்கள். 2005 ல் ஒரு 25 பேர் வேலைக்கு சேருகிறார்கள் . 2010ல் யாரும் சேரவில்லை. 2000ல் சேர்ந்தவர்கள் ஒரு நிலக்கு மேல் ப்ரமோஷனுக்கு தயாரில்லை. அதனால் அந்த நிலைக்கு மேற்பட்ட இடங்கள் எக்காலத்திலும் நிரப்பப்பட முடியாது. இவர்கள் நகர மறுக்கும் காரணத்தால் 2005ல் சேர்ந்த சிலருக்கு பதவி உயர்வு தாமதப்படுகிறது. 2000 முதல் 2010 வரையிலான ரெக்ரூட்மெண்ட் லெவலில் நிரப்பப்படாத வேகன்ஸி பேக்லாக். இதற்குக் காரணம் போதுமான பேர் தேர்வெழுத வருவதில்லை. அல்லது தேர்ச்சி பெறுவதில்லை. இதெல்லம் இல்லை என்கிறேன் நான் என்றுதான் நிற்பேன் என்றால் மன்னிக்கவும். உங்களுக்கு புரியவேண்டுமெனில் நீங்கள்தான் முயலவேண்டும். பிரதமர் அலுவலகத்தின் தகவலே பொய் என்று சொல்பவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது?

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//2. People who have professional degrees must be prohibited from applying for non-professional government or public sector jobs. If there are not enough applications then they may be considered.//

ஒரு வேலைக்கு கல்வி தகுதி BE என்றால் ME படித்தவர்கள் விண்ணபிக்க தடையா//

இல்லையே. அது ஆரோக்கியமானது. ஆனால் 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்ற ஒரு பதவிக்கு அந்தப் பரிட்சை சுலபம், அந்தச் சம்பளம் போதும், அதிக உழைப்பில்லை, ரிஸ்க் இல்லை என்று ஒரு பி.ஈ அல்லது பட்டப்படிப்பு படித்தவர் வருவது ஆரோக்கியம் என்றா நினைக்கிறீர்கள். அப்படியானால் அந்த 10வது படித்தவனுக்கு என்ன வழி? இதைத்தான் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//இரண்டுமே. இரண்டும் வேறு வேறு அல்ல. தொடர்புடையது. எண்ட்ரி லெவலுக்கு மேற்பட்டு மூன்று முதல் ஐந்து நிலை வரை புரமோஷன் மட்டுமே. //

தொடர்புடையது

இங்கு எதில் காலியிடம் என்று தெளிவாக கூறுங்கள் என்பது தான் என் கேள்வி//

ஆர் யூ சீரியஸ் டாக்டர். இரண்டுமே என்று சொன்ன பிறகும் எதில் என்றால் என்ன சொல்ல?

//என்ன கொடுமை சார் இது
யாரும் பதவி உயர்வு பெறுவதில்லை என்பது தானே உங்கள் இந்த இடுகையின் குற்றச்சாட்டு

இல்லையா ...//

இல்லையே. பதவி உயர்வை விரும்புவதில்லை என்பதை பின்னூட்டத்திலும் பல முறை உங்களுக்கே சொல்லியாகிவிட்டது.

//யாரும் வேலைக்கு வருவதில்லை என்ற உங்களின் மற்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது, ஆதாரமற்றது என்று நீங்களே தெளிவாக கூறிவிட்டீர்கள் :) :)//

Thanks again. not only me. the PMO also stated meaningless and baseless figures. Just for fun.

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//1. If a person is not ready to write exams and get promoted, the person who wishes to go up the ladder(in the same reservation category though) should be allowed to jump a level (may be the years of experience needed to appear for the exam increased by a few years). Now the person who rejected the promotion offer will have no right to oppose his junior to become his senior)
//

முகிலன் ஐயா.... ஏன் இந்த விதிமுறை வரவில்லை என்று உங்களுக்கு நிஜமாகவே புரியவில்லையா :) :) :) :)//

I would have rather find out and understand what is the existing rules and then reply. Not mock at something irresponsibly without knowing or trying to understand the issue.

புருனோ Bruno said...

//2000ம் ஆண்டில் ஒரு 50 பேர் வேலைக்கு சேருகிறார்கள். 2005 ல் ஒரு 25 பேர் வேலைக்கு சேருகிறார்கள் . 2010ல் யாரும் சேரவில்லை. 2000ல் சேர்ந்தவர்கள் ஒரு நிலக்கு மேல் ப்ரமோஷனுக்கு தயாரில்லை. அதனால் அந்த நிலைக்கு மேற்பட்ட இடங்கள் எக்காலத்திலும் நிரப்பப்பட முடியாது. இவர்கள் நகர மறுக்கும் காரணத்தால் 2005ல் சேர்ந்த சிலருக்கு பதவி உயர்வு தாமதப்படுகிறது. //

ஐயா

தமிழக அரசில் என்ன செய்வார்கள் என்றால் 2000ல் வேலைக்கு வந்தவர்களை விட்டு விட்டு 2005ல் வந்தவர்களுக்கு அந்த பதவி உயர்வை தந்து விடுவார்கள்

உங்கள் தொடர்வண்டி துறையில் ஏன் அப்படி செய்வதில்லை

இங்கு பிரச்சனை உங்கள் துறையில் உள்ள விதிமுறைகள் தானே

அதற்கும் இடப்பங்கீட்டிற்கும் என்ன சம்மந்தம்

இது தான் என் கேள்வி

--

புருனோ Bruno said...

//இல்லையே. அது ஆரோக்கியமானது. ஆனால் 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்ற ஒரு பதவிக்கு அந்தப் பரிட்சை சுலபம், அந்தச் சம்பளம் போதும், அதிக உழைப்பில்லை, ரிஸ்க் இல்லை என்று ஒரு பி.ஈ அல்லது பட்டப்படிப்பு படித்தவர் வருவது ஆரோக்கியம் என்றா நினைக்கிறீர்கள். அப்படியானால் அந்த 10வது படித்தவனுக்கு என்ன வழி? இதைத்தான் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? //

BE படித்தவனுக்கு வழி இல்லை என்பதால் தான் அவன் 10வது படித்தால் போதும் என்ற வேலைக்கு வருகிறார்

BE படித்தவருக்கு அவரது கல்வி தகுதிக்கு உரிய வேலை இருந்தும், அவர் அதற்கு விண்ணப்பிக்காமல் பத்தாவது படித்தால் போதும் என்ற வேலைக்கு விண்ணப்பிக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்களா

அதாவது ஒரு BE படித்தவருக்கு பொறியாளர் வேலைக்கும் உத்த்ரவு கிடைக்கிறது. எழுத்தர் வேலைக்கும் உத்தரவு கிடைக்கிறது

அவர் எழுத்தர் வேலையை தேர்ந்தெடுக்கிறார் என்று கூறுகிறீர்களா

அப்படியா

புருனோ Bruno said...

//
ஆர் யூ சீரியஸ் டாக்டர். இரண்டுமே என்று சொன்ன பிறகும் எதில் என்றால் என்ன சொல்ல?/

ஐயா

எண்ட்ரி லெவல் - துவக்க வேலையில் - காலி பணியிடங்களுக்கு காரணம்

1. கடந்த 20 ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் (உலகமயமாக்கல், தாராளமயமாக்களின் விளைவான) ஆட்குறைப்பு, விருப்ப ஓய்வு போன்றவையா

அல்லது

2. வேலைகள் அபரீதமாக இருந்தும் யாரும் வருவதில்லையா

--

வேலை இல்லா திண்டாட்டம் கேள்விப்பட்டிருக்கிறேன்

நீங்கள் கூறுவது அரசு வேலைக்கு யாரும் விண்ணப்பிப்பதில்லை என்று

--

சரி

சவால் விடுகிறேன்

கடந்த 20 notificationகள் எந்த வேலைகளுக்கு என்று மட்டும் தெரியபடுத்துங்கள்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நானே விண்ணப்பிக்கிறேன்

அந்த 20 notificationகளுக்கும் காலியிடங்களை விட அதிகம் பேர் விண்ணப்பித்தார்களா, அல்லது நீங்கள் கூறுவது போல் குறைவானவர்கள் விண்ணப்பித்தார்களா என்று நானே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிந்து கொள்கிறேன்

--

கடந்த 20 notificationகள் என்ன வென்று மட்டும் நீங்கள் சொல்லுங்கள்

இது அரசு ரகசியம் கிடையாது. இதை பகிர எந்த தடையும் கிடையாது என்பது உலகறிந்த உண்மை

புருனோ Bruno said...

//Thanks again. not only me. the PMO also stated meaningless and baseless figures. Just for fun.//

ஐயா

பிரதமர் அலுவலகம் கூறியது இத்தனை காலியிடங்கள் என்று தான்

அதற்கு காரணம் யாரும் வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்று பிரதமர் அலுவலகத்தின் கூறினார்களா

அல்லது அது நீங்களாகவே எடுத்துக்கொண்டதா

--

காலியிடங்களுக்கு காரணம் கடந்த இரு பத்தாண்டுகளாக கடைபிடிக்கப்படும் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல்

--

அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் விருப்ப ஓய்வை கொண்டு வந்தால் காலியிடங்கள் வரத்தான் செய்யும்

banking recruitment board கலைத்தால் காலி யிடம் வரத்தான் செய்யும்

--

ஆனால் நீங்கள் காலியிடத்திற்கு நீங்கள் கூறும் காரணம் “யாரும் விண்ணப்பிக்க வில்லை”

இதை ஏற்றுக்கொள்ளும் முன், நானே தரவுகளை சரிபார்க்கிறேன்

உங்கள் துறையில் கடைசியாக வேலைக்கு விடப்பட்ட 20 notficationகளின் பட்டியலை தாருங்கள்

நான் சரி பார்த்துக்கொள்கிறேன்

புருனோ Bruno said...

/
I would have rather find out and understand what is the existing rules and then reply. Not mock at something irresponsibly without knowing or trying to understand the issue. //

ஐயா

ஐ.ஐ.டியில் என்ன நடந்தது என்று ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறேன்

அது போல் தான் இங்கும் நடக்கும் என்பது என் கருத்து

புருனோ Bruno said...

//டாக்டர் ப்ரூனோ, மீண்டும் படியுங்கள். ப்ரொஃபஷனல் டிகிரி - BE, ME, MBBS, MCA, MBA, BTech etc - படித்தவர்களை பேங்க் வேலை போன்ற பணிகளுக்குத் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது. அதே சமயம் ஒரு எஞ்சினியருக்கான பணிக்கு பி.இ குறைந்த பட்ச தகுதியாக இருக்கும்போது எம்.இ படித்தவர் விண்ணப்பிக்க ஏன் தடை விதிக்க வேண்டும்? //

ஒரு எழுத்தர் பணிக்கான குறைந்த பட்ச தகுதி பத்தாவது வகுப்பு என்ற போது பி.இ படித்தவர் விண்ணப்பிக்க ஏன் தடை விதிக்க வேண்டும்

புருனோ Bruno said...

வானம்பாடி சார்

நீங்கள் கூறிய கீழ்க்கண்ட கருத்துக்களை நான் கடுமையாக மறுக்கிறேன்

1. அரசு பணியில் காலியிடங்களுக்கு போதிய விண்ணப்பங்கள் வருவதில்லை

ஆதாரம் : BE படித்தவன் 10ஆம் வகுப்பு கல்வி தகுதியுள்ள வேலையை கூட செய்யும் அளவு இங்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது என்று நீங்களே எழுதியுள்ளீர்கள்

2. இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள்.

இது முழுக்க முழுக்க தவறான தகவல். பெரம்பூர் மருத்துவமனையை வைத்து மட்டும் கூறப்பட்டது என்று நினைக்கிறேன்

3. காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?

நீங்கள் 100 மருத்துவர்களிடம் சென்று

காண்டிராக்ட் முறையில் பணியில் சேர விருப்பமா

அல்லது

நிரந்திரமான முறையில் (வருடாந்திர ஊதிய உயர்வு, ஓய்வூதியம், விடுப்பு) சேர விருப்பமா என்று கேளுங்கள்

விடை என்ன கிடைக்கிறது என்று பார்ப்போம்

காண்டிராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்க மருத்துவர்கள் எத்துனை போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள் தெரியுமா

இதோ மாதிரிக்கும் ஒன்று. இணையத்தில் தேடினால் பல நூறு ஆதாரங்கள் கிடைக்கும்

புருனோ Bruno said...

//தொடர்வண்டி அரசுத்துறை. வங்கி பொதுத் துறை. நீங்கள் சொன்ன ஐ.ஐ.டி, ஏ.ஐ.எம்.எஸ் என்பன அரசுத்துறை அல்ல. அரசு மானியம் பெறுபவை. அதில் ஊழல் என்றால் இந்த இடுகை அதைப்பற்றியல்ல. எந்த ஊழலுமின்றி சரியான ஒதுக்கீடு இருந்தும் பயனடைய மறுப்பது ஏன் என்பதற்கான விவாதம். //

ஐயா

இந்த இடுகை

மத்திய அரசு பணியில் அதிகம் OBC / SC / ST காலியிடங்கள் உள்ளன என்பது பற்றி

அதற்கு நீங்கள் கூறும் காரணம் ; OBC / SC / ST யே காரணம்

அதை நான் மறுத்து நான் கூறும் காரணங்கள்

1. பணி நியமணம் தடை செய்யப்பட்டது

2. நிர்வாக முறைகேடுகள்

நிர்வாக முறைகேடுகள் மத்திய அரசு துறையில் திட்டமிட்டே நடக்கின்றன என்பது என் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் தான் ஐ.ஐ.டி முறை கேடுகள்

--

மற்றப்படி நீங்கள் கூறுவது போல் OBC / SC / ST தான் இந்த இடங்களுக்கு காரணம் என்றால் ஏன் தமிழக அரசில் இது போல் இல்லை என்பதே என் கேள்வி

புருனோ Bruno said...

//அப்படியானால் பேக்லாக் வேகன்ஸி எப்படி வந்தது? பிரதமர் அலுவலகத்திலிருந்து சொன்ன தகவலும் பொய்யோ?/

இல்லை
பிரதமர் அலுவலகத்தில் சொன்ன தகவல் உண்மை

நீங்கள் சொல்வது தான் பொய் !!


பிரதம்ர் அலுவலகத்தில் சொல்வது : காலியிடங்கள் உள்ளன்

1. அதற்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை

2. அடுத்து பொது இடங்களில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் சொல்லவில்லை

காலியிடங்களுக்கு காரணம் வேலைக்கு ஆள் எடுக்காததும், வேலை செய்தவர்களை விருப்ப ஓய்வில் அனுப்பியதும் தான் !!

ஆனால் நீங்கள் மட்டும் தான் என்னமோ அரசாங்கம் வேலை கொடுக்க தயாராக இருப்பது போலவும், ஆனால் OBC / SC / ST யாரும் விண்ணப்பிப்பதிலலை என்பது போலவும் ஒரு பொய் தோற்றத்தை ஒருவாக்கியுள்ளீர்கள்

அதைத்தான் நான் எதிர்க்கிறேன்

புருனோ Bruno said...

//திரும்பவும் சொல்கிறேன் பேங்கில் எழுத்தர் வேலைக்கு பொறியாளர் தயார். அரசில் எழுத்தர் வேலைக்கோ இன்ன பிற வேலைக்கோ, பொறியாளர் வேலைக்கோ அவர் தயாரில்லை. ஏன் என்பதுதான் கேள்வி.//

அப்படியென்றால் அரசு பொறியாளர் வேலைக்கு இந்தியாவின் யாருமே விண்ணப்பிக்கவில்லையா.

என்ன சார் இது

நீங்கள் நிஜமாகத்தான் சொல்கிறீர்களா

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//அப்படியானால் பேக்லாக் வேகன்ஸி எப்படி வந்தது? பிரதமர் அலுவலகத்திலிருந்து சொன்ன தகவலும் பொய்யோ?/

இல்லை
பிரதமர் அலுவலகத்தில் சொன்ன தகவல் உண்மை

நீங்கள் சொல்வது தான் பொய் !!//

Thank you so much doctor for all the pains you have taken to judge this. Please dont waste your time any more. I wont answer any of your silly arguements. You have no idea what is governement. Do you think i am blabbering here wasting my time trying to make you understand?
http://www.tnpsc.gov.in/Notifications/248_not_eng_vao2k10.pdf. See item two to satisfy yourself that there are backlog vacancies of VAO about a thousand and more. try to get the reasons. That is if you are not convinced that it is due to globalisation blah blah. once again thank you.

முகிலன் said...

//ஒரு எழுத்தர் பணிக்கான குறைந்த பட்ச தகுதி பத்தாவது வகுப்பு என்ற போது பி.இ படித்தவர் விண்ணப்பிக்க ஏன் தடை விதிக்க வேண்டும்//

டாக்டர், பேங்க் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தால் எதற்காக பி.ஈ படிக்க வேண்டும்? பிகாம் படித்திருக்கலாமே? அந்தாள் வேஸ்ட் செய்த அந்த பி.ஈ சீட்டில் இஞ்சினியர் ஆகவேண்டும் என்ற ஆசை கொண்ட இன்னொருவன் அந்த சீட்டில் படித்திருப்பானே?

புருனோ Bruno said...

//டாக்டர், பேங்க் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தால் எதற்காக பி.ஈ படிக்க வேண்டும்? பிகாம் படித்திருக்கலாமே? அந்தாள் வேஸ்ட் செய்த அந்த பி.ஈ சீட்டில் இஞ்சினியர் ஆகவேண்டும் என்ற ஆசை கொண்ட இன்னொருவன் அந்த சீட்டில் படித்திருப்பானே? //

முகிலன் சார்

வங்கி என்றே வைத்துக்கொள்ளுங்கள்

அலுவலக உதவியாளர் வேலைக்கு (பியூன்) வேலைக்கு கல்வி தகுதி 10ஆம் வகுப்பு.

பி.காம் படித்தவர் அந்த வேலைக்கு விண்ணப்பிக்க தடை விதிப்பது சரியா

இது தான் என் கேள்வி

-

அடுத்த கேள்வி

அதே வங்கியில் பி.காம் படித்தவர்களுக்கு மட்டும் தகுதியான வேலை மேனேஜர் என்றுள்ளது

இந்த நிலையில் பி.காம் படித்தவர் (மேனேஜர் வேலை கிடைக்காமல்) பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கிறார். அதை தடை செய்ய சொல்கிறீர்களா

மேனேஜர் வேலைக்கு இடம் காலி யில்லை என்ற நிலையின் வெட்டியாக வீட்டில் இருந்து பொழுதை போக்காமல் பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கும் பி.காம் பட்டதாரியை தடை செய்ய வேண்டும் என்கிறீர்களா

புருனோ Bruno said...

//Thank you so much doctor for all the pains you have taken to judge this. Please dont waste your time any more.//
மன்னிக்கவும் சார்

நீங்கல் ஒரு தவறான தகவலை (ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு காரணம் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவிலிருந்து யாரும் விண்ணப்பிப்பதில்லை) நிறுவ முயல்கிறீர்கள்

அதை எதிர்ப்பது என் கடமை என்பதால் இதில் நான் செலவழிக்கும் நேரம் வீணல்ல

புருனோ Bruno said...

// I wont answer any of your silly arguements.//

அது சில்லி இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம்

// You have no idea what is governement.//

நன்றி

நான் உங்களிடம் சில தகவல்களை கேட்டுள்ளேன்

அதை நீங்கள் தந்தீர்கள் என்றால் (இறுதியான 20 notificationகள்) யார் கூறுவது உண்மை, யார் கூறுவது பொய் என்று தெரியும்

சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா

// Do you think i am blabbering here wasting my time trying to make you understand? //

இல்லை. நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை

நீங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும் என்று உங்கள் நேரத்தை பயனுள்ளதாகவே செலவழிக்கிறீர்கள்

புருனோ Bruno said...

//http://www.tnpsc.gov.in/Notifications/248_not_eng_vao2k10.pdf. See item two to satisfy yourself that there are backlog vacancies of VAO about a thousand and more.//

ஆமாம் சார்

இது போல் உங்கள் துறையிலிருந்து இருபது நோட்டிபிகேஷன்களை நான் கேட்டேனே

ஏன் தரவில்லை


--

தமிழக அரசின் அந்த குறிப்பில்
The rule of reservation of appointment and the conditions mentioned against Para 3 above are applicable only for the 1576 post of Village Administrative Officers announced against Sl.No.1 only.

என்றுள்ளதே

அதாவது

மொத்த காலியிடங்களில் பேக்லாக் காலியிடங்களில் பிறர் போட்டியிட தகுதியில்லை என்று தெளிவாக உள்ளதே

நீங்கள் தரும் 20 தொடர்வண்டி துறையின் notificationகளில் அது போல் உள்ளதா என்று தெரிந்து கொள்ள ஆசை

அதனால் தான் 20 notification கேட்டேன்

தாருங்கள் பார்ப்போம்

புருனோ Bruno said...

// try to get the reasons.//

தமிழக அரசில் 1991ல் இருந்து 20 ஆண்டுகளாக காவல்துறை, மருத்துவதுறை, ஆசிரியர்கள் தவிர பிற இடங்களில் ஆட்களை பணியில் அமர்த்துவது மிகவும் குறைக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்

அதற்கு காரணம் நீங்கள் கூறும் அதே
That is if you are not convinced that it is due to globalisation blah blah. தான்

எனவே தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்த பலரும் அவர்கள் பி.ஏ, பி.காம் படித்திருந்தாலும், அரசில் ஆசிரியர், இளநிலை உதவியாளர் போன்ற வேலைகள் கிடைக்காமல், கிடைக்கும் வேலையில் சேர வேண்டுமே என்று இந்த பணியில் சேர்ந்தார்கள்

கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசில் சுமார் 3 லட்சம் பேர் time scale of payல் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்

அதில் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் போன்ற பணிகளிருந்த பலரும் தங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ற அரசு பணி கிடைத்தவுடன் சென்று விட்டார்கள்

அது தான் இந்த vacancyக்கு காரணம்

//once again thank you//

நான் கேட்ட 20 notificationகளை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நன்றி நன்றி

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said..

/இல்லை. நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை

நீங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும் என்று உங்கள் நேரத்தை பயனுள்ளதாகவே செலவழிக்கிறீர்கள்/

விழலுக்கு இறைத்த நீர் என்பது வீணாகப் போகிற நீர் என்ற பொருள் மட்டுமே கொண்டது. இந்த இடுகையிலும் மிகத் தெளிவாகவே ஒதுக்கீட்டுக்குட்பட்டவர்கள் அதனைப் பயன் படுத்திக் கொள்ளாமல் வீணடிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். மேலும், இந்த ஒதுக்கீடு தேவையில்லை என்று எங்கும் நான் குறிப்பிடாதபோது நீங்கள் வேண்டுமென்றே திசை திருப்பும் அவசியம் என்ன? உங்களுக்குப் புரிதல் இல்லாவிடில் விட்டு விடலாமே. வேறு யாருக்கும் தோன்றாத ஒரு குதர்க்கம் உங்களுக்கு ஏன் தோன்றுகிறது?

மீண்டும் சொல்கிறேன். இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தல்ல இது. இருக்கும் இட ஒதுக்கீட்டை சரிவரப் பயன்படுத்தாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதும், தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருந்தும் இத்தகைய ஸ்பெஷல் ட்ரைவ்களின் மூலம் வடநாட்டிலிருந்து வருபவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் போது இவர்கள் ஏன் எழுதுவதில்லை. தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்ற நியாயமான ஆதங்கம்.

புருனோ Bruno said...

பேக்லாக் வேகன்சிகளை வெளிப்படையாக குறிப்பிட்டு, அதற்கு ஏற்ற படி இடப்பங்கீட்டை செய்யும் முறை உங்கள் துறையில் உள்ளதா

உங்கள் துறையிலிருந்து இது போல் 20 notificationகளை அளித்தால் தெரிந்துகொள்வோம்

வானம்பாடிகள் said...

Bruno Said...
/நான் உங்களிடம் சில தகவல்களை கேட்டுள்ளேன்

அதை நீங்கள் தந்தீர்கள் என்றால் (இறுதியான 20 notificationகள்) யார் கூறுவது உண்மை, யார் கூறுவது பொய் என்று தெரியும்

சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா/

மிக சாமர்த்தியமாக கேட்டுவிட்டதாக நினைக்கிறீர்கள் போல் இருக்கிறது. ரயில்வேயை மட்டுமே குறி வைப்பதிலிருந்து இது புரிகிறது. எல்லா நிறுவனங்களிலும் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் தகவல் இருக்க வேண்டும் என்பது அரசு ஆணை என்பது உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை.உண்மையில் உங்களுக்கு ஆர்வமிருப்பின் அங்கு கேளுங்கள். உங்களுக்கு தகவலளிப்பது என் வேலையல்ல.

நீங்கள் மூளை சர்ஜரியில் கடந்த 2 வருடங்களில் இறந்து போன ஒரு 20 பேர்களின் பெயரை தாருங்களேன். இதர தகவல்களை நான் தகவலறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்கிறேன்.

புருனோ Bruno said...

தமிழக அரசில் நடப்பதை போல் மத்திய அரசில் மதிப்பெண்களும் சுழற்சி முறையும் வெளிப்படையாக நடக்கின்றனவா என்பது அடுத்த கேள்வி

அதை தெரிந்து கொள்ளத்தால், அனைவருக்கும் தெரியப்படுத்தத்தான் நான் உங்கள் துறையில் கடைசியாக வெளியிடப்பட்ட 20 notiicationகள் குறித்த விபரங்களை கேட்டேன்

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
// I wont answer any of your silly arguements.//

அது சில்லி இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம்//

ஆமாம். உங்களைத்தவிர. பிரதமர் அலுவலக நோட்டிஃபிகேஷன் தெளிவாக ஸ்பெஷல் ட்ரைவ் மூலம் பேக்லாக் வேகன்ஸிகளை நிரப்பப்பட்டிருக்கும் தகவலை பார்த்தால் தெரியுமே. 2008ல் சேர்ந்த 26565 எஸ்.ஸி வேகன்ஸிகளில் 12,045 மட்டுமே இரண்டாண்டுகளில் நிரப்ப முடிந்திருக்கிறதென்றால் ஒன்று பங்கேற்பில்லை அல்லது தேர்ச்சி பெறவில்லை என்பது தானே அர்த்தம். FC குறித்த தகவல் அதில் இல்லை என்பது என்ன அபத்த வாதம். அதில் பேக்லாக் இல்லை என்பதால்தான் தரவில்லை என்பது புரியாதா. அதனாலேயே பொய் என்ற முடிவுக்கு வருபவரை என்ன சொல்ல.

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//Thank you so much doctor for all the pains you have taken to judge this. Please dont waste your time any more.//
மன்னிக்கவும் சார்

நீங்கல் ஒரு தவறான தகவலை (ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு காரணம் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவிலிருந்து யாரும் விண்ணப்பிப்பதில்லை) நிறுவ முயல்கிறீர்கள்

அதை எதிர்ப்பது என் கடமை என்பதால் இதில் நான் செலவழிக்கும் நேரம் வீணல்ல//

விண்ணப்பிப்பதில்லை என்று மட்டுமே சொல்லவில்லை. கட்டணமில்லை அல்லது சலுகை என்பதால் விண்ணப்பித்து விட்டு பரிட்சைக்கு வராமல் இருப்பது, பரிட்சை சரியாக எழுதாமல் இருப்பது போன்ற அனைத்துமே. உங்கள் வசதிக்கு வளைக்க வேண்டாம்.

புருனோ Bruno said...

வி.ஏ.ஓ notification போல் தமிழக அரசில் மேலும் பல notificationகளும் உள்ளன

http://www.tnpsc.gov.in/Notifications/247_not_eng_ces_2010.pdf

அங்கு எவ்வளவு பேக்லாக் பார்த்தீர்களா

புருனோ Bruno said...

தென்னக தொடர்வண்டி துறையின் railway recruitment boardன் இணைய தளம் என்ன

வானம்பாடிகள் said...

/மொத்த காலியிடங்களில் பேக்லாக் காலியிடங்களில் பிறர் போட்டியிட தகுதியில்லை என்று தெளிவாக உள்ளதே

நீங்கள் தரும் 20 தொடர்வண்டி துறையின் notificationகளில் அது போல் உள்ளதா என்று தெரிந்து கொள்ள ஆசை

அதனால் தான் 20 notification கேட்டேன்

தாருங்கள் பார்ப்போம்//

மிக்க நன்றி டாக்டர். நீங்கள் அடிப்படையே புரியாமல் வெத்து விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என அனைவருக்கும் புரிய வைத்தமைக்கு. ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான எந்தத் தேர்வுக்கும் வேறு யாரும் பங்கேற்க முடியாது என்பது கூட தெரியாமலா ஸ்பெஷல் ட்ரைவில் அப்படி கேட்டிருக்கிறார்களா என்று சரி பார்க்கப் போகிறீர்கள்.

என்னமோ அரசியல்வாதி மாதிரி சவால் விட்டு என்ன செய்ய. முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். பிறகு சந்தேகமிருப்பின் திறந்த மனத்துடன் விளக்கம் கேளுங்கள்.

அவர்களுக்கான ஒதுக்கீட்டை சரிவரப் பயன் படுத்தாததால் பணியிடம் தேங்கிப் போகிறது என்பது பேக்லாக் வேகன்சியில் தெரியும் போது, இல்லாத உலகமயமாக்கல் இதர பிரச்சனைகளை ஏன் இழுக்கிறீர்கள்.

வாலண்டரி ரிடையர்மெண்ட் ஸ்கீம் கொண்டு வந்ததே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க. அதன் மூலம் பெருத்த பாதிப்பு எதுவும் இல்லை. வி.ஆர். எஸ்ஸில் போனவர்கள் வெகு குறைவு.

புருனோ Bruno said...

//மேலும், இந்த ஒதுக்கீடு தேவையில்லை என்று எங்கும் நான் குறிப்பிடாதபோது நீங்கள் வேண்டுமென்றே திசை திருப்பும் அவசியம் என்ன?//

மன்னிக்கவும் இட ஒதுக்கீடு தேவை என்று நீங்கள் எங்கும் குறிப்பிடாததால் வந்த குழப்பம் அது


நீங்கள் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாளர் என்று தெரியபடுத்தியதற்கு நன்றி சார்

// உங்களுக்குப் புரிதல் இல்லாவிடில் விட்டு விடலாமே.//
மன்னித்துக்கொள்ளுங்கள் சார்

என் புரிதல் குறைபாடு தான் அது

அதற்கு உங்களிடம் பொது மன்னிப்பு கேட்கிறேன்


// வேறு யாருக்கும் தோன்றாத ஒரு குதர்க்கம் உங்களுக்கு ஏன் தோன்றுகிறது?//

அது கூட என் தவறு தான்
மன்னித்துக்கொள்ளுங்கள்

புருனோ Bruno said...

//இத்தகைய ஸ்பெஷல் ட்ரைவ்களின் மூலம் வடநாட்டிலிருந்து வருபவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் போது இவர்கள் ஏன் எழுதுவதில்லை. தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்ற நியாயமான ஆதங்கம்.//

உங்கள் ஆதங்கம் நியாயமே

இது போல் ஸ்பெஷ்ல் டிரைவ்கள் எத்தனை தமிழ் நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றன, எத்தனை இந்தி நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றன என்று தகவல் தர முடியுமா

அடுத்தாக

இனி மேல் இது போல் ஏதாவது வெளியிட்டால் நீங்கள் அது குறித்து எங்களுக்கு தகவல் தந்தால் tedujobs.blogspot.com போன்ற தளங்களில் வெளியிடலாம். ஏன் தமிழ்மண நிர்வாகத்திடமும், தமிழ்வெளி நிர்வாகத்திடமும் இது குறித்து முகப்பில் தனியாக இடம் கோரலாம்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

சார், மிக அருமையான பதிவு. பல உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. சார் என்னோட சிற்றறிவுக்கு எட்டியவரை, ஒருவரின் கல்வித் தகுதியையும், அவர் பார்க்கக் கூடிய வேலையையும் அவரவரின் குடும்பச் சூழலும், பாரம்பரியமும் பெரும்பாலும் நிர்ணயிக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. s.c. இளைஞர்கள், இன்று சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள பெரிதும் முயற்சித்து வருகிறார்கள். அதற்கு அவர்களுடைய முதல் குறி, என்சினியரிங் படிப்பு. படித்த 5 வ வருடம் ஓரளவிற்கு உத்திரவாதமான நல்ல பதவி என்னும் கணிப்பு. ஆனால் காலம் கூடிய விரைவில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும் ஏதோ பொறி தட்டுகிறது.

புருனோ Bruno said...

//மிக சாமர்த்தியமாக கேட்டுவிட்டதாக நினைக்கிறீர்கள் போல் இருக்கிறது.//
பாராட்டிற்கு நன்றி சார்

// ரயில்வேயை மட்டுமே குறி வைப்பதிலிருந்து இது புரிகிறது. //
உங்களிடம் இருந்து அதை கேட்டேன் சார்

பிற்படுத்தப்பட்டவர்கள் பயன் படுத்துவதில்லை என்று ஆதங்கப்பட்டவர் நீங்களல்லவா

அது தான் உங்களிடம் உதவி கேட்டேன்

//எல்லா நிறுவனங்களிலும் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் தகவல் இருக்க வேண்டும் என்பது அரசு ஆணை என்பது உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை.//

தெரியும் சார்

நான் கேட்டது, கடைசியாக எந்த வேலைக்கு notification வந்தது என்று தான்

அந்த தகவலை நீங்கள் தந்தால் அது குறித்து மேலதிக விபரங்களை (காலிடங்கள், பேக்லாக் காலியிடங்கள், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை) நானே தகவலறியும் உரிமை சட்டத்தில் கேட்டு கொள்ள தயார்

ஆனால் எந்த வேலைக்கு ஆள் எடுத்தார்கள் என்று தெரியாமல் நான் ஆரம்பிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு விண்ணப்பம் போட வேண்டும்

ஒரு மாதம் கூடுதல் தாமதமாகும்

அது தான் உங்களிடம் கேட்டேன்

//உண்மையில் உங்களுக்கு ஆர்வமிருப்பின் அங்கு கேளுங்கள். உங்களுக்கு தகவலளிப்பது என் வேலையல்ல.//

இவர்கள் ஏன் எழுதுவதில்லை. தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்ற நியாயமான ஆதங்கம் உங்களுக்கு இருப்பது உண்மை தானே :) :)

அது தான் நீங்கள் உதவுவீர்கள் என்று நம்பினேன்

மன்னித்துக்கொள்ளுங்கள் சார் !!

கண்டிப்பாக நானே நேரடியாக கேட்கிறேன்.

புருனோ Bruno said...

//நீங்கள் மூளை சர்ஜரியில் கடந்த 2 வருடங்களில் இறந்து போன ஒரு 20 பேர்களின் பெயரை தாருங்களேன். இதர தகவல்களை நான் தகவலறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்கிறேன்.//

இந்த இடுகை இடப்பங்கீடு பற்றியது. உங்களது ஆதங்கத்தை பற்றியது

மூளை அறுவை சிகிச்சை பற்றியது அல்ல

!!!!

மூளை புற்றுநோயால் இறந்து போன நபர்களின் புற்றுநோய் விபரத்திற்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பிற்பட்டவர்களின் இடப்பங்கீடு மோசடி செய்யப்படுவதற்கு என்ன தொடர்பு என்று தெரியவில்லை

புருனோ Bruno said...

//
நீங்கள் மூளை சர்ஜரியில் கடந்த 2 வருடங்களில் இறந்து போன ஒரு 20 பேர்களின் பெயரை தாருங்களேன். இதர தகவல்களை நான் தகவலறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்கிறேன். //

மற்றப்படி நோயாளி குறித்து விபரங்கள் நான் பொதுவில் தரமுடியாது

உங்களுக்கு விருப்பமென்றால் முதல்வர், அரசு பொது மருத்துவமனை, சென்னை என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்

புருனோ Bruno said...

//ஆமாம். உங்களைத்தவிர. பிரதமர் அலுவலக நோட்டிஃபிகேஷன் தெளிவாக ஸ்பெஷல் ட்ரைவ் மூலம் பேக்லாக் வேகன்ஸிகளை நிரப்பப்பட்டிருக்கும் தகவலை பார்த்தால் தெரியுமே. 2008ல் சேர்ந்த 26565 எஸ்.ஸி வேகன்ஸிகளில் 12,045 மட்டுமே இரண்டாண்டுகளில் நிரப்ப முடிந்திருக்கிறதென்றால் ஒன்று பங்கேற்பில்லை அல்லது தேர்ச்சி பெறவில்லை என்பது தானே அர்த்தம்//

பிற காரண காரியங்களை நான் ஏற்கன்வே தெளிவாகவே விளக்கி விட்டேன்

புருனோ Bruno said...

//
விண்ணப்பிப்பதில்லை என்று மட்டுமே சொல்லவில்லை. கட்டணமில்லை அல்லது சலுகை என்பதால் விண்ணப்பித்து விட்டு பரிட்சைக்கு வராமல் இருப்பது, பரிட்சை சரியாக எழுதாமல் இருப்பது போன்ற அனைத்துமே. உங்கள் வசதிக்கு வளைக்க வேண்டாம். //

நன்றி சார்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் எத்தனை, தேர்வு அணுமதி சீட்டு அனுப்பபட்டது எத்தனை பேருக்கு, எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள் என்று தெளிவாகவே கேட்டு பெற்றுக்கொள்கிறேன்

புருனோ Bruno said...

//மிக்க நன்றி டாக்டர். நீங்கள் அடிப்படையே புரியாமல் வெத்து விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என அனைவருக்கும் புரிய வைத்தமைக்கு. ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான எந்தத் தேர்வுக்கும் வேறு யாரும் பங்கேற்க முடியாது என்பது கூட தெரியாமலா ஸ்பெஷல் ட்ரைவில் அப்படி கேட்டிருக்கிறார்களா என்று சரி பார்க்கப் போகிறீர்கள். //

அதை நான் சரி பார்த்துக்கொள்கிறேன்

உங்களிடம் எந்த தேர்வு என்று தான் கேட்டேன்

பிற விபரங்களை நானே விண்ணப்பித்து பெற்றுக்கொள்கிறேன்

புருனோ Bruno said...

//என்னமோ அரசியல்வாதி மாதிரி சவால் விட்டு என்ன செய்ய. முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். பிறகு சந்தேகமிருப்பின் திறந்த மனத்துடன் விளக்கம் கேளுங்கள்.

அவர்களுக்கான ஒதுக்கீட்டை சரிவரப் பயன் படுத்தாததால் பணியிடம் தேங்கிப் போகிறது என்பது பேக்லாக் வேகன்சியில் தெரியும் போது, இல்லாத உலகமயமாக்கல் இதர பிரச்சனைகளை ஏன் இழுக்கிறீர்கள்.
//

அதை தெளிவாக தெரிந்துகொள்ளத்தான் உங்களிடம் அடிப்படை விபரங்களை கேட்டேன்

மீதி முழு விபரங்களையும் நானே கேட்டு தெரிந்து கொள்கிறேன்

நீங்கள் தான் தர மறுக்கிறீர்கள்

புருனோ Bruno said...

//வாலண்டரி ரிடையர்மெண்ட் ஸ்கீம் கொண்டு வந்ததே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க.//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

// அதன் மூலம் பெருத்த பாதிப்பு எதுவும் இல்லை.//
சரி சரி சரி

// வி.ஆர். எஸ்ஸில் போனவர்கள் வெகு குறைவு. //
சரி சரி சரி

சே.குமார் said...

மிக அருமையான பதிவு சார். பல உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

வானம்பாடிகள் said...

மூளை புற்றுநோயால் இறந்து போன நபர்களின் புற்றுநோய் விபரத்திற்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பிற்பட்டவர்களின் இடப்பங்கீடு மோசடி செய்யப்படுவதற்கு என்ன தொடர்பு என்று தெரியவில்லை//

20 நொடிஃபிகேஷன் போன்றே இதுவும் ஒரு தகவல்தான் சார். அந்த ஒரே தொடர்புதான். நீங்கள் எப்படித் தரமுடியாதோ நானும் அப்படித் தரமுடியாது.காரணம் அது என் பணி சம்பந்தப்பட்டதல்ல. நான் தேடித்தரவேண்டும். அதாவது சட்டப்படி நான் உங்களுக்கு ஒரு ஏஜண்டாக. இதற்கான தனிப்பட்ட பிரிவிருக்கும்போது அந்த வேலையை நான் செய்வது எல்லைகடந்த ஊடுருவல். :).

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...

//தென்னக தொடர்வண்டி துறையின் railway recruitment boardன் இணைய தளம் என்ன//

ஸ்டாஃப் செலெக்‌ஷன் கமிஷன் வேண்டாமா? :)). கூகிளிட் சார்:o)).

வானம்பாடிகள் said...

//காண்டிராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்க மருத்துவர்கள் எத்துனை போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள் தெரியுமா//

இந்தக் காண்ட்ராக் டாக்டர்கள் வேறு. நீங்கள் சொல்வது வேறு. உங்கள் இடுகையில் பார்த்தபடி நாளுக்கு ரூ226 சம்பளம் என நினைக்கிறேன். இது அலவன்ஸ் உள்பட மாதம் 45-50ஆயிரம். ஒவ்வொரு ஆண்டும் அதிக பட்சம் 7 ஆண்டு வரை புதுப்பிக்கலாம்.

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
தமிழக அரசில் நடப்பதை போல் மத்திய அரசில் மதிப்பெண்களும் சுழற்சி முறையும் வெளிப்படையாக நடக்கின்றனவா என்பது அடுத்த கேள்வி

அதை தெரிந்து கொள்ளத்தால், அனைவருக்கும் தெரியப்படுத்தத்தான் நான் உங்கள் துறையில் கடைசியாக வெளியிடப்பட்ட 20 notiicationகள் குறித்த விபரங்களை கேட்டேன்//

சுழற்சியெல்லாம் பொய் வெகுகாலமாகிவிட்டதே. இப்போது பாயிண்ட் டு பாயிண்ட்தான். மேலும் இது பணியில் சேர்ந்த பிறகுதானே. அதாவது 100 பணியாளர்கள் கொண்ட ஒரு சர்வீஸ் எனில் அதில் 15 பேர் எஸ் சி, 8 பேர் எஸ்.டி. நேரடியாகவோ, ப்ரொமோஷன் மூலமோ நிரப்பிய பிறகு ஒரு எஸ்சி தன் பதவியை விட்டுப் போனால் அது இன்னோரு எஸ்சிக்கு மட்டுமே தரப்படும். இதில் ஊழலோ குல்மாலோ பண்ண முடியாது. சேஃப்டி கேட்டகரி, சயண்டிஃபிக் தவிர மதிப்பெண் சலுகையுடந்தான் தேர்ச்சி.

புருனோ Bruno said...

//20 நொடிஃபிகேஷன் போன்றே இதுவும் ஒரு தகவல்தான் சார்.//

ஐயா

நோயாளி குறித்த விபரங்களை இரகசியமாக காக்க வேண்டியது ஒரு மருத்துவரின் பணி. அது பொது தகவல் அல்ல

30 வருடம் தொடர்வண்டி துறையில் பணிபுரியும் உங்களுக்கு இது தெரியும் என்றே நினைக்கிறேன்

ஆனால் வேலைக்கான notification என்பது பொது அறிவிப்பு. அனைவருக்கும் பொது தகவல். நாளிதழ்களில் வெளியிடப்படுவது

அப்படித்தானே

உங்கள் துறையில் வேலைக்கான காலியிடங்கள் குறித்து விபரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருந்து தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரியப்படுத்தி தெரிந்தவர்களை மட்டும் வேலைக்கு எடுக்கும் நடைமுறை ஏதாவது உள்ளதா

நாளிதழிகளில் ஏற்கனவே வெளிவந்த விபரத்தை தானே நான் கேட்டேன்

அதை கூட தர முடியாதா

// அந்த ஒரே தொடர்புதான். நீங்கள் எப்படித் தரமுடியாதோ நானும் அப்படித் தரமுடியாது.//

ஐயா

மருத்துவ விபரம் என்பது வேறு

வேலைக்கான அறிவிப்பு என்பது வேறு

ஒரு வேளை தமிழக அரசில் வேலைக்கான அறிவிப்புகள் என்னவெல்லாம் வந்திருக்கிறது என்று நீங்கள் கேட்டால் அதை என்னால் தரமுடியும்

புருனோ Bruno said...

//20 நொடிஃபிகேஷன் போன்றே இதுவும் ஒரு தகவல்தான் சார். அந்த ஒரே தொடர்புதான். நீங்கள் எப்படித் தரமுடியாதோ நானும் அப்படித் தரமுடியாது.காரணம் அது என் பணி சம்பந்தப்பட்டதல்ல. நான் தேடித்தரவேண்டும். அதாவது சட்டப்படி நான் உங்களுக்கு ஒரு ஏஜண்டாக. இதற்கான தனிப்பட்ட பிரிவிருக்கும்போது அந்த வேலையை நான் செய்வது எல்லைகடந்த ஊடுருவல். :). //

ஐயா

நான் முழுவிபரமும் கேட்கவில்லை

எந்த எந்த அறிவிப்பு என்று மட்டும் தான் கேட்டேன்
அதுவும் பொதுவில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை மட்டும் தான் கேட்டேன்


நாளிதழ்களில் வந்த செய்தியை எனக்கு கூறுவது எப்படி சார் எல்லைகடந்த ஊடுருவல்.

புருனோ Bruno said...

//
ஸ்டாஃப் செலெக்‌ஷன் கமிஷன் வேண்டாமா? :)). கூகிளிட் சார்:o)).

//

தென்னக தொடர்வண்டி துறையில் பணி காலியிடங்கள் குறித்த தகவல்கள் உள்ள தளம் எது வென்று எனக்கு தெரியவில்லை

அது தான் கேட்டேன்

முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழித்துள்ள, பலருக்கும் இடப்பங்கீட்டின் நோக்கம் தெரியவில்லை ஆதங்கப்பட்ட நீங்கள் உதவக்கூடாதா

புருனோ Bruno said...

//சுழற்சியெல்லாம் பொய் வெகுகாலமாகிவிட்டதே. இப்போது பாயிண்ட் டு பாயிண்ட்தான். மேலும் இது பணியில் சேர்ந்த பிறகுதானே. அதாவது 100 பணியாளர்கள் கொண்ட ஒரு சர்வீஸ் எனில் அதில் 15 பேர் எஸ் சி, 8 பேர் எஸ்.டி. நேரடியாகவோ, ப்ரொமோஷன் மூலமோ நிரப்பிய பிறகு ஒரு எஸ்சி தன் பதவியை விட்டுப் போனால் அது இன்னோரு எஸ்சிக்கு மட்டுமே தரப்படும்.//
நன்றி சார்


// இதில் ஊழலோ குல்மாலோ பண்ண முடியாது.//
தென்னக தொடர்வண்டி துறையில் இறுதியாக எந்த வேலைகளுக்கு ஆள் எடுத்தார்கள் என்ற தகவல் தெரிந்தால் ஊழலோ குல்மாலோ உள்ளதா என்று நாங்களே தெரிந்து கொள்கிறோம்

// சேஃப்டி கேட்டகரி, சயண்டிஃபிக் தவிர மதிப்பெண் சலுகையுடந்தான் தேர்ச்சி.//
இந்த இரு கேட்டகரிகளுக்கு இடப்பங்கீடு கிடையாதா

வானம்பாடிகள் said...

// சேஃப்டி கேட்டகரி, சயண்டிஃபிக் தவிர மதிப்பெண் சலுகையுடந்தான் தேர்ச்சி.//
இந்த இரு கேட்டகரிகளுக்கு இடப்பங்கீடு கிடையாதா//

omg.நிதானமாக படியுங்கள் டாக்டர். சலுகை மதிப்பெண்ணில் தேர்ச்சி கிடையாது என்றுதானே சொல்லியிருக்கிறேன்.

வானம்பாடிகள் said...

நாளிதழிகளில் ஏற்கனவே வெளிவந்த விபரத்தை தானே நான் கேட்டேன்

அதை கூட தர முடியாதா//

சார்! ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் எப்போ கிளம்புகிறது என்றால் என்னால் சொல்ல முடியும். கடந்த 20 வருடத்தில் எப்போதெல்லாம் கிளம்பியது என்றால் அது தகவல். Dissemination of information. அதற்கு கமர்ஷியல் டிபார்ட்மெண்ட் பொறுப்பு. அங்குதான் கேட்க வேண்டும்.

புருனோ Bruno said...

//
omg.நிதானமாக படியுங்கள் டாக்டர். சலுகை மதிப்பெண்ணில் தேர்ச்சி கிடையாது என்றுதானே சொல்லியிருக்கிறேன். //

நன்றி சார்

இந்த மதிப்பெண்கள் எழுத்து தேர்வின் மதிப்பெண்களா

அல்லது

நேர்முக தேர்வின் மதிப்பெண்களா

வானம்பாடிகள் said...

தென்னக தொடர்வண்டி துறையில் பணி காலியிடங்கள் குறித்த தகவல்கள் உள்ள தளம் எது வென்று எனக்கு தெரியவில்லை

அது தான் கேட்டேன்

முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழித்துள்ள, பலருக்கும் இடப்பங்கீட்டின் நோக்கம் தெரியவில்லை ஆதங்கப்பட்ட நீங்கள் உதவக்கூடாதா//

இல்லையே. நீங்கள் கேட்டது ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட் தளம். தென்னக ரயில்வேயில் பணி காலியிடங்கள் குறித்து ஒரு தளத்திலும் இருக்காது. பணியிடங்களுக்கான தேர்வின் தகவலில் மட்டுமே எத்தனை பதவிகளுக்கு என்றிருக்கும். அதற்கான நோட்டிஃபிகேஷன்கள் காலாவதியானால் அது குறித்த தகவல் ஆர்.டி.ஐ. மூலமே பெறவியலும். என் சர்வீஸ் என் துறைக்கு சார். நீங்கள் நக்கலடிக்க அல்ல. ஹெல்மெட் அணியாமல் போய் விபத்துக்குள்ளாகிறார்களே என்று நீங்கள் ஆதங்கப் படலாம். எல்லாருக்கும் வாங்கி மாட்டி விடுங்கள் என்று நான் நக்கலடிக்க முடியுமா. Stop your mockery.

புருனோ Bruno said...

//
சார்! ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் எப்போ கிளம்புகிறது என்றால் என்னால் சொல்ல முடியும். கடந்த 20 வருடத்தில் எப்போதெல்லாம் கிளம்பியது என்றால் அது தகவல். Dissemination of information. அதற்கு கமர்ஷியல் டிபார்ட்மெண்ட் பொறுப்பு. அங்குதான் கேட்க வேண்டும். //

சரி சார்

முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழித்தவர் என்பதால உங்களிடம் விபரங்கள் இருக்கும் என்று நம்பிக்கையில் கேட்டேன்

கடைசியாக வந்த இருபது குறித்து நான் தகவல் அறியும் சட்டத்தில் பெற்றுக்கொள்கிறேன்

நீங்கள் இந்த இடுகையிலும் மறுமொழிகளிலும் எழுதியது எந்த(எந்த) பணிகளை அடிப்படையாக வைத்து என்ற விபரத்தையாவது தாருங்கள்

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//
omg.நிதானமாக படியுங்கள் டாக்டர். சலுகை மதிப்பெண்ணில் தேர்ச்சி கிடையாது என்றுதானே சொல்லியிருக்கிறேன். //

நன்றி சார்

இந்த மதிப்பெண்கள் எழுத்து தேர்வின் மதிப்பெண்களா

அல்லது

நேர்முக தேர்வின் மதிப்பெண்களா//

தனித்தனியாகவும் சேர்த்தும்.

புருனோ Bruno said...

//தனித்தனியாகவும் சேர்த்தும். //

அப்படியென்றால் எழுத்து தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற OBC / SC / ST சேர்ந்த ஒருவர் நேர்முகத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் அந்த இடம் காலியாக இருக்கும். அப்படியா

i criticize periyar said...

The number of unfilled posts on account of reservation could be due to many factors ranging from applicants from reserved category unable to clear exam/interview to lack of eligible candidates from SC/ST/OBC category.So unless details are available mere speculation wont help much.
Reservaation in promotions for OBCs were abolished by Supreme Courts.SCs continue to get reservation in promotions. The reservation system is faulty.It needs a revamp.I know a Central University which reserved a post under SC category but it is difficult to find even general category candidates with the requisite qualification.
Is it not a fact that many OBCs think 'less qualified' SCs get jobs easily while they find it difficult to get jobs in government.
Dr.Bruno's dream is that non-OBCs are kicked out of their jobs enmasse and all posts are reserved 100% for OBCs for all ages to come.

புருனோ Bruno said...

//என் முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழிந்துள்ளதன் அடிப்படையில் எழுதியது.//

//பதவி உயர்வு பெரும்பாலும் மூப்பு மற்றும் தகுதி என்ற அடிப்படையிலும், பல பதவிகளுக்கு தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலும் அமைந்துள்ளது. //

இந்த பதவிகளின் பட்டியலை தாருங்கள்

//காரணம் பொறுப்பை ஏற்கத் தயக்கமும், எதற்கு தேவையற்ற ரிஸ்க் என்ற மனோபாவமும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.//

இந்த பதவிகளின் பட்டியலை தாருங்கள்

//இரயில்வே போன்ற தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஏன் இஞ்சினியர்கள் பங்கெடுப்பதில்லை. //
இவை எந்த பதவிகள்

மேற்குறிய, நீங்கள் இந்த இடுகையில் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்தும்

தொடர்வண்டி துறையில் இறுதி 20 notification கள் குறித்தும் நீங்கள் கூறினால்

//4.தகவலில் சந்தேகமிருப்பின் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் எந்த அரசு அலுவலகத்திலும் இதில் சொல்லப்படும் தகவலை உறுதி செய்துக் கொள்ள இயலும்.//

அதனால் தான் நான் கேட்டேன்

நீங்கள் இங்கு எழுதியுள்ளதை சரிபார்க்க மற்றும் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால்

நாங்கள் கேள்வி கேட்க வேண்டிய அதிகாரி யார்

கலகலப்ரியா said...

whatz going on here... omg... 180 comments... wow... 150 of em belong to Dr.Bruno...

.. haven't read yer post... so.. can't make head or tail of it... but... it seems to be an endless argument...

bala sir... thr's a fine way to stop wasting yer time & energy... Just say sry... "I'm SORRY Dr. Bruno... I shouldn't have put this post... I've just realized... that there are 'wise' ppl like you.. who can spend 100's of days in 'useful' way... I really really am sorry... it's my fault... am not capable... you pls put a post in your blog and go ahead.."

||நாங்கள் கேள்வி கேட்க வேண்டிய அதிகாரி யார்||

பாலா சார்... இந்தக் கேள்விக்கு... சோனியா காந்தி அவர்கள்...
மன்மோகன் சிங் அவர்கள்...
ராகுல் காந்தி அவர்கள்...
கருணாநிதி அவர்கள்...
கனிமொழி அவர்கள்...
லல்லூ பிரசாத் அவர்கள்..
மம்தா பேனர்ஜி அவர்கள்..
........அவர்கள்...
..............அவர்கள்..

இப்டி எல்லாம் ஆப்ஷன் கொடுத்தா டாக்டர் புருனோ அவர்கள் இதில் விரயமாக்கும் நேரத்தை அவர்களைக் கேள்வி கேட்பதில் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்..

நன்றி.. வணக்கம்... (எனக்கு வேற வேலை இருக்கு..)

ஈரோடு கதிர் said...

புறாவுக்கு ஒரு போரா!!!?


மீ த 182

எப்போங்கண்ணே அடுத்த இடுகை

புருனோ Bruno said...

//இப்டி எல்லாம் ஆப்ஷன் கொடுத்தா டாக்டர் புருனோ அவர்கள் இதில் விரயமாக்கும் நேரத்தை அவர்களைக் கேள்வி கேட்பதில் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்..

நன்றி.. வணக்கம்... (எனக்கு வேற வேலை இருக்கு..) //

நன்றி மேடம்

மத்திய அரசில் இப்படித்தான் நடக்கிறது

ஏற்கனவே பதவியில் இருக்கும் அதிகாரிகள் பதவி உயர்வு குறித்த தகவல்கள் OBC / SC / ST ஆகியோருக்கு தெரிவிக்காமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு நிரப்புகிறார்கள் என்பது தான் என் குற்றச்சாட்டு

இப்படித்தான் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேட்பவர்களை திசைதிருப்ப பயன்படும் உத்தி ஒன்றை நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்

புருனோ Bruno said...

//
.. haven't read yer post... so.. can't make head or tail of it... but... it seems to be an endless argument... //

அப்புறம்

வானம்பாடிகளின் பதிவில் அவரது இடுகையை கூட படிக்காமல் என் மறுமொழியை படித்து quote பண்ணும் அளவு நான் பிரபலமடைந்து கண்டு மகிழ்ச்சி

புருனோ Bruno said...

//||நாங்கள் கேள்வி கேட்க வேண்டிய அதிகாரி யார்||//

அப்பாடா

நானே கண்டுபிடித்து விட்டேன்
திருவாளர்கள் எஸ்.ராமசுப்பு, ஜெகதீஷ்அழகர், எம்.ராமன்

முகவரி :
RAILWAY RECRUITMENT BOARD
5, Dr. P.V. Cherian Crescent Road, Egmore, CHENNAI - 600 008
INDIA.

http://www.rrbchennai.net/contact.htm

இந்த சிறிய தகவலை கூட நீங்கள் தராமல் எங்களை தேட வைத்தது ஏனோ

கலகலப்ரியா said...

|| புருனோ Bruno said...
//
.. haven't read yer post... so.. can't make head or tail of it... but... it seems to be an endless argument... //

அப்புறம்

வானம்பாடிகளின் பதிவில் அவரது இடுகையை கூட படிக்காமல் என் மறுமொழியை படித்து quote பண்ணும் அளவு நான் பிரபலமடைந்து கண்டு மகிழ்ச்சி||

உங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டதில் உங்களுக்கேற்பட்ட மகிழ்ச்சி கண்டு மிக்க மிக்க மகிழ்ச்சி மற்றும் வந்தனம்... (என்ன பண்றது டாக்டர்... நான் சினிமா பத்திரிகை படிக்கறதில்லைன்னாலும் செவத்தில பளிச்சு பளிச்சுன்னு கலர் கலரா ஒட்டி இருக்கிற சினேகா போட்டிருக்கிற காஸ்ட்யூம்... தமன்னா போட்டிருக்கிற காஸ்ட்யூம்ன்னு கண்ணைக் குத்துதே.. அவங்க என்னோட அட்டென்ஷனை சீக் பண்ணிதான் ஃபேமஸ் ஆனாங்கன்னு நான் பீத்திக்க முடியுமா... நீங்க ஃபேமஸ்தான்.. ஆனா... இங்க போஸ்டர் பார்த்துதான் நான் தலைல அடிச்சுக்கிட்டேன்..)

கலகலப்ரியா said...

||இப்படித்தான் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேட்பவர்களை திசைதிருப்ப பயன்படும் உத்தி ஒன்றை நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்||

உங்களுக்குத் தெரிந்த 109876 உத்திகளுக்கு மத்தியில் எனக்குத் தெரிந்த ஒரே உண்மையான உத்தி...

புருனோ Bruno said...

//உங்களுக்குத் தெரிந்த 109876 உத்திகளுக்கு மத்தியில் எனக்குத் தெரிந்த ஒரே உண்மையான உத்தி... //

உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி

-

இது போன்ற நயவஞ்சக உத்திகளாம் OBC / SC / ST ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்றுதான் வானம்பாடி போன்ற நல்ல உள்ளங்கள் ஆதங்கப்படுகிறார்கள்

அது சரி

--

இடுகையை படிக்காமல் நேரடியாக மறுமொழிகளை படிப்பது தான் உங்கள் வழக்கமா

நல்ல பழக்கம் !!!

Sethu said...

My sincere request is

PLEASE DON'T PLAY WITH WORDS.

Please move on. Forget and Forgive and PLEASE try to arrive at a STOP.

வானம்பாடிகள் said...

புருனோ Bruno has left a new comment on your post "இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா?":

//||நாங்கள் கேள்வி கேட்க வேண்டிய அதிகாரி யார்||//

அப்பாடா

நானே கண்டுபிடித்து விட்டேன்
திருவாளர்கள் எஸ்.ராமசுப்பு, ஜெகதீஷ்அழகர், எம்.ராமன்

முகவரி :
RAILWAY RECRUITMENT BOARD
5, Dr. P.V. Cherian Crescent Road, Egmore, CHENNAI - 600 008
INDIA.

http://www.rrbchennai.net/contact.htm

இந்த சிறிய தகவலை கூட நீங்கள் தராமல் எங்களை தேட வைத்தது ஏனோ


பப்ளிஷ் செய்தும் வெளியாகவில்லை.

அங்கேயே RIT என்று ஒரு சுட்டி இருக்கும். அங்கு பாருங்கள். இவர்களல்ல நீங்கள் அணுகவேண்டியது. சொல்லியும் அவசரம் ஏன் டாக்டர்.

புருனோ Bruno said...

//
பப்ளிஷ் செய்தும் வெளியாகவில்லை.

அங்கேயே RIT என்று ஒரு சுட்டி இருக்கும். அங்கு பாருங்கள். இவர்களல்ல நீங்கள் அணுகவேண்டியது. சொல்லியும் அவசரம் ஏன் டாக்டர். //

சரி

சரியான முகவரி என்னவென்று இப்பொழுதாவது சொல்லுங்கள்

கலகலப்ரியா said...

என்னுடைய முதலாவது பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தபடி... எனக்குப் புரியாத விடயத்தை மண்டையை உடைத்தேனும் புரிந்து கொண்டு மற்றவர்கள் மண்டையை உடைத்து டாக்டர்களுக்கு ஏதோ ஒரு வகையில் இலாபம் ஏற்படுத்துவது என் விருப்பமல்ல... அல்ல... அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

பாலா சார்... உங்க ஊர்ல கொசுவத்திச் சுருள் இருந்தா கொஞ்சம் வாங்கி அனுப்பங்க சார்... இங்க மாஸ்கிட்டோ ஸ்ப்ரே ஒர்க் பண்ண மாட்டேங்குது...

புருனோ Bruno said...

//My sincere request is

PLEASE DON'T PLAY WITH WORDS.

Please move on. Forget and Forgive and PLEASE try to arrive at a STOP. //

சேது சார்

வானம்பாடிகளும் OBC / SC / ST ஆகியோருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்

எனக்கும் அதே ஆதங்கம் தான்

எனவே இருவர் நோக்கமும் ஒன்றே. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்


இங்கு பிரச்சனை பதவி உயர்வு கிடைக்காததற்கு காரணம் என்ன என்பதில் தான். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் அந்த காரணமும் தெரிந்து விடப்போகிறது. அவ்வளவு தான்

வானம்பாடிகள் said...

வானம்பாடிகளும் OBC / SC / ST ஆகியோருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்

எனக்கும் அதே ஆதங்கம் தான்

எனவே இருவர் நோக்கமும் ஒன்றே. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்//

அய்யய்யோ. இவ்வளவுக்கு அப்புறமுமா. என் ஆதங்கம் பயன் படுத்திக்கறதில்லைன்னு. உங்க ஆதங்கம் நான் சொன்னது பொய்னு எப்பாடு பட்டாவது நிரூபிக்கணும்னு.

வானம்பாடிகள் said...

சரி

சரியான முகவரி என்னவென்று இப்பொழுதாவது சொல்லுங்கள்//

இணையதளம் தெரியும் தானே. அங்கே RTI என்ற தகவல் இருக்கும் பாருங்களேன்.

புருனோ Bruno said...

//என்னுடைய முதலாவது பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தபடி... எனக்குப் புரியாத விடயத்தை மண்டையை உடைத்தேனும் புரிந்து கொண்டு மற்றவர்கள் மண்டையை உடைத்து டாக்டர்களுக்கு ஏதோ ஒரு வகையில் இலாபம் ஏற்படுத்துவது என் விருப்பமல்ல... அல்ல... அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்...//

நன்றி

இடுகையை படிக்காமலேயே மறுமொழியை படிப்பவர் நீங்கள் என்று தெரியும் !!

புரியாத விஷயத்திற்கு கூட மறுமொழி எழுதும் நல்ல பழக்கம் கூட உங்களுக்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி !!

//பாலா சார்... உங்க ஊர்ல கொசுவத்திச் சுருள் இருந்தா கொஞ்சம் வாங்கி அனுப்பங்க சார்... இங்க மாஸ்கிட்டோ ஸ்ப்ரே ஒர்க் பண்ண மாட்டேங்குது...//

இதை பயன்படுத்திக்கொள்ளவும்

Sethu said...

Sir,

I understand everybody's feeling.

Again I request 'PLEASE MOVE ON'.

Don't play with words. PLEASE.

All of you PLEASE. PLEASE.

I am awaiting for Vaanambadi Aiya's next blog. PLEASE Move on.

புருனோ Bruno said...

//அய்யய்யோ. இவ்வளவுக்கு அப்புறமுமா. என் ஆதங்கம் பயன் படுத்திக்கறதில்லைன்னு. உங்க ஆதங்கம் நான் சொன்னது பொய்னு எப்பாடு பட்டாவது நிரூபிக்கணும்னு.//

மத்திய அரசு பணிகளில் OBC / SC / ST போதிய அளவு பதவி உயர்வு பெறுவதில்லை என்பதில் மாற்று கருத்து இல்லை

அதற்கு நீங்கள் சொன்ன காரணத்தினால் தான் விவாதம்

கலகலப்ரியா said...

பாலா சார்... தெலுங்கில ஒரு படம் வந்திச்சு சார்... கிக் அப்டின்னு... அந்த நாசமா போன புடலங்கா படத்த இப்போ தமிழ்ல்ல தில்லாலங்கடி அப்டின்னு டப்பிங் பண்ணாத குறையா ரீமேக் பண்ணி போட்டிருக்காங்க சார்... அதில என்ன மேட்டர்ன்னு கேட்டீங்கன்னா... பிரம்மானந்தம் பண்ண காமெடிய... இங்க வடிவேலு பண்ணி இருக்காரு...

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா... நீங்க ஏன் ஒரு வடிவேலு காமெடி போடக் கூடாது... இந்தக் காமெடி போஸ்ட் எல்லாம் எனக்குப் புரியலை... அதாவது புரியுதான்னு பார்க்கலாம்...

வானம்பாடிகள் said...

மத்திய அரசு பணிகளில் OBC / SC / ST போதிய அளவு பதவி உயர்வு பெறுவதில்லை என்பதில் மாற்று கருத்து இல்லை

அதற்கு நீங்கள் சொன்ன காரணத்தினால் தான் விவாதம்//

அப்படியா? அப்படியானால் எண்ட்ரி லெவல் சந்தேகம் போச்சா

«Oldest ‹Older   1 – 200 of 212   Newer› Newest»