Friday, August 13, 2010

இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா?

பொறுப்பி:

1.இந்த இடுகையிலிருக்கும் தகவல்கள் மேம்போக்காக எழுதப்பட்டவை அல்ல. என் முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழிந்துள்ளதன் அடிப்படையில் எழுதியது.

2.ஒரு புறம் இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச் சரிவர புரியவைக்க இயலுமா என்ற பயமிருந்த போதிலும் வேறெந்த வழியிலும் இந்த உண்மை தெரியவரப் போவதில்லை என்பதே எழுதியாக வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

3. எடுத்தோம் எழுதினோம் என்று எழுதியதில்லை இது. திரு காமராஜ் இடுகையில் அனேகமாக மூன்று மாதங்களுக்கு முன் இட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி இது.

4.தகவலில் சந்தேகமிருப்பின் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் எந்த அரசு அலுவலகத்திலும் இதில் சொல்லப்படும் தகவலை உறுதி செய்துக் கொள்ள இயலும்.
______

சாதிவாரிக் கணப்பெடுப்புக்கு கோரிக்கை வைத்திருக்கும் நேரமிது. அதன் பின்னான அரசியல் குறித்த விடயம் நமக்கு அக்கறையில்லை. இப்போதிருக்கும் சட்டத்தின் படி இட ஒதுக்கீடு என்பது முற்று முழுதாக அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒன்று. 

இதனைப் பெற எத்தனைப் போராட்டங்கள்? எத்தனை உயிர்த் தியாகங்கள்? அப்படிப் போராடிப் பெற்ற ஒரு சலுகை எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்தக் குறிக்கோளை அடைந்திருக்கிறதா? இல்லையெனில் காரணம் யார்?

இது குறித்தான அலசலுக்கு முன் இரண்டு நாட்களுக்கு முன்பான செய்தி இது. ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்.

New Delhi, Aug 11 (IANS) A total of 54,637 posts for Scheduled Caste, Scheduled Tribe and Other Backward Classes are vacant in central government ministries and departments.

Minister of State in the Prime Minister's Office Prithviraj Chavan told parliament Wednesday that the number of vacancies in the three categories were 26,565, 25,649 and 21,143 respectively.

Of these, 12,045, 2,799 and 3,876 posts had been filled, Chavan said in the Lok Sabha in reply to a question from P.L. Punia.

The minister said a special recruitment drive was launched Nov 19, 2008 to fill up the backlog of reserved vacancies

படித்தவுடன் மனதில் எழும் கேள்வி, இத்தனை காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணமென்ன? அரசா என்பது.

ஸ்பெஷல் ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் எனும் சொல் இது அரசின் தவறல்ல. வழக்கம்போல் நடைபெற்ற தேர்வுகளில் நிரப்பப்படாமல் சேர்ந்து போன இடங்கள் என்பதாலேயே, மீண்டும் இவர்களுக்கு மட்டுமே ஒரு சிறப்புத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதைச் சுட்டுகிறது.

அப்படியெனில், நாட்டில் வேலையின்மை என்பதே இல்லையா? அரசுத் துறையை புறந்தள்ளி தனியார்த் துறையில் சலுகைகளும் சம்பளமும் அதிகமாகவா இருக்கிறது? பின்னெப்படி இத்தனை காலியிடங்கள் சேர்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழும்புகிறதா இல்லையா?

மாநில வாரியாகப் பார்த்தோமானால், கேரளாவில் ஒரு இடம் கூட இப்படி காலியிருக்காது. தமிழகத்தில் மிக அதிகமாயிருக்கும் என்பது என் கணிப்பு. இதற்கு முன்பே ஒரு இடுகையில் கூறியிருந்தபடி ரயில்வே ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் நடத்தும் இத்தகைய ஸ்பெஷல் ட்ரைவ்களில் பங்கேற்போர் பெரும்பாலும் பீகார் மாநிலத்திலிருந்தும் இதர வட மானிலங்களிலிருந்து வந்தவர்களுமே. அப்படியும் பங்கேற்போர் சதவீதம் வெகு குறைவே.

இது பனிப்பாறையின் ஒரு விளிம்பே. ஆரம்பக்கட்ட வேலை வாய்ப்பில் நிரப்பப் படாத காலியிடங்களின் எண்ணிக்கை மட்டுமென்றே கொள்ளவேண்டி யிருக்கிறது.

இதையும் தாண்டி இச் சலுகையின் பின்னான முக்கியத்தை உணராமல் அரசு இயந்திரத்தை முடக்கிப் போடுபவர்கள் யார்? தன்னலம் என்று கூட சொல்லமாட்டேன் தன்சுகம் கருதி, தன்னையொத்தவன் வயிற்றில் மண்ணள்ளிப் போடுவது யார்? இட ஒதுக்கீட்டின் பயன் அனுபவிப்பவர்களே என்பது அதிர்ச்சியளிக்கக் கூடும்.

அரசுப் பணியானது வர்ணாஸ்ரமத்தைப் போன்றே நான்கு. க்ரூப் ‘A’, ‘B', 'c', மற்றும் ‘D' எனப்படும் கடை நிலை ஊழியர்கள். இதில் க்ரூப் 'A' என்பது ஐ.ஏ.எஸ் போன்ற நேரடி வேலை வாய்ப்பு. அதிலும் பின் தங்கல் இருக்கிறதென்றாலும் அது குறித்த விவாதமில்லை இது. B,C, மற்றும் D குறித்தான நிலைப்பாடு இது. 

க்ருப் ‘D' மற்றும் க்ருப் ‘c' பிரிவுகளில் பணி உயர்வுக்கு வாய்ப்பாக பல்வேறு நிலைகளில் பதவிகள் இருக்கும். ஒவ்வொரு பதவியிலும் மொத்த எண்ணிக்கையில் 15 சதம் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் 7.5 சதவீதம் மலைச் சாதியினருக்குமான ஒதுக்கீடாகும்.

பதவி உயர்வு பெரும்பாலும் மூப்பு மற்றும் தகுதி என்ற அடிப்படையிலும், பல பதவிகளுக்கு தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்தத் தேர்விலும் பொதுஜன பாதுகாப்பு தவிர இதரப் பதவிகளுக்கு குறைந்த மதிப்பெண்கள் போதுமானது. 

ஆனால் உண்மையில் நடப்பதென்ன? மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும் வரை இவர்களுக்குப் பிரச்சனையில்லை. தேர்வு என்ற கட்டம் வரும்போது பெரும்பாலோர் பங்கேற்க முன்வருவதில்லை. காரணம் பொறுப்பை ஏற்கத் தயக்கமும், எதற்கு தேவையற்ற ரிஸ்க் என்ற மனோபாவமும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

சரி இதனால் என்ன பாதிப்பு? அது அவர்கள் உரிமையல்லவா என்று கேட்கலாம். நிச்சயமாக அவர்கள் உரிமைதான். ஆனால் அவர்கள் உரிமைக்கு பலிகடா ஆவது யார் தெரியுமா? அவர்களேதான். காரணம், அவர்கள் தேர்வுக்கு தயாரில்லை எனும் பட்சத்தில் அவர்களுக்கு மேலான பதவிகளுக்கான காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.

அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் பாதிப்பாகும். இதற்குக் காரணமென்ன? சலுகையளிக்கிறோம் என்ற பெயரில் அரசும் ஒரு வகையில் காரணம்.

ஒரு பதவியில் குறித்த காலம் பணியாற்றி அனுபவம் பெறு முன்னரே அதற்கும் உயரிய பதவியில் காலியிடமிருக்கிறது என்ற காரணத்துக்காக, மடமடவென பதவி உயர்வளித்து ஒரு நிர்வாகப் பொறுப்புக்கு உரித்தாna பதவியில் அவர்களை அமர்த்துகையில் அப்பணி குறித்தான அனுபவ அறிவோ, தகவலறிவுக்கோ வழியின்மை அவர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக்குகிறது. 

இப்படித் தேங்கிப் போன பதவி உயர்வுகளுக்கான காலியிடங்களை நிரப்பவே முடியாது என்ற நிலையில், அடிப்படைப் பதவியிலும் சேர ஆட்களே இல்லாமல் பதவிகள் தேங்கியும் கிடக்கிறதென்றால் தவறு எங்கே?

பெரும்பாலான நிர்வாகப் பதவிகள், காலியிடங்களாகவே இருக்கும் பட்சத்தில் அரசு நிர்வாகம் எப்படி சீராக நடக்கும். அரசுக்கு இதனால் நஷ்டமா என்ன? துண்டு போட்டு வைத்திருக்கிறது, குந்த ஆட்கள் இல்லையெனச் சொல்லிவிட்டு சும்மாயிருக்கும். 

இஞ்சினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரி, பட்டப்படிப்புகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது அல்லவா. அவற்றிலும் காலியிடங்கள் இருந்தாலும் அது மிகக் குறைவே. அப்படிப் படித்து தேறி வருபவர்கள் அரசுத் தேர்வு எழுத மறுப்பது ஏன்? இரயில்வே போன்ற தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஏன் இஞ்சினியர்கள் பங்கெடுப்பதில்லை. 

எஞ்சினியரிங் படித்துவிட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு தேர்வாகி அட்டெஸ்டேஷன் என்று வருபவர்களிடம் ஏன் இப்படி என்றால் வரும் பதில் என்ன தெரியுமா? ஏதோ ஒரு வேலை வேணும்சார். இதுன்னா ரிஸ்க் இல்லையாம். ஒரு பட்டப் படிப்பு படித்து இந்த வேலைக்கு காத்திருப்பவன் வாயில் மண்ணள்ளிப் போடுவதில்லையா இது? 

இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?

இப்போது சொல்லுங்கள். இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா இல்லையா?
~~~~~

212 comments:

«Oldest   ‹Older   201 – 212 of 212
கலகலப்ரியா said...

மீ த 200

கலகலப்ரியா said...

th...

Unknown said...

Priya!

PLEASE. PLEASE.

கலகலப்ரியா said...

||Sethu said...
Priya!

PLEASE. PLEASE.||

என்னாச்சு சேது..? செரி செரி.. அழுவப்டாது... என்னாவிப்போச்சு இப்போ... தனியா ஒரு மனுஷன் மாட்டினான்னு பாய்ஞ்சு பாய்ஞ்சு பிங்க்பாங்க் ஆடினா... நமக்கு கடுப்பாய்டும் அம்புட்டுதேன்...

ச்ச்செரி... அரேபியன் ஆட்டம் காட்டி சாப்பாடும் போடறாய்ங்களாம்.. (காசுக்குதான்..).. நான் போய்ட்டு வர்றேன்...

(மக்கா பாலா சாருக்கு சோடா ஒடைச்சிக் கொடுக்கற பொறுப்பை யாராவது ஏத்துக்குங்கையா... என்னைக் கேட்டா... அப்டியே காலாற ஒரு வாக்கிங் போயிட்டு... ஃப்ரெஷ்ஷா திராட்சை ஜூஸ் சாப்ட்டு வந்து ஃப்ரெஷ்ஷா இன்னொரு போஸ்ட் போடறது பெட்டர்ன்னு தோணுது... அப்புறம் உங்க இஷ்டம்..)

(பார்த்து ஜோ அமலன் ஐயா வராம பார்த்துக்கிடுங்க...)

ஜூட்...

ஈரோடு கதிர் said...

||(பார்த்து ஜோ அமலன் ஐயா வராம பார்த்துக்கிடுங்க...)||

என்ன்ன்னாது....

யேய்... ஓடுங்கப்பா... ஓடுங்க...

THE UFO said...

விவாதிப்பவர்களுக்கு:

//முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பும், சட்டவிதிமுறைகளும் அனுமதிப்பதில்லை.//--இதுவல்லவா அனைத்து கேள்விகளுக்கும் பதில்...!
(பதிலை தெரிந்து கொண்டே கேள்வியா)

விவாதம் இதைப்பற்றி (இது அவசியமா/சட்டத்திருத்தம் தேவையா/'விதிமுறைகள் தளர்த்தல்' என்பன நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமா) அல்லவா இருந்திருக்க வேண்டும்...!

இது சரிசெய்யப்பட்டால் இறைத்த நீர் விழலுக்கு அல்லாமல் வயலுக்கு பாயுமே?

வானம்பாடிகளின் ஆதங்கத்துக்கும் முற்றுப்புள்ளியல்லவா?

vasu balaji said...

UFO said...
விவாதிப்பவர்களுக்கு:

//முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பும், சட்டவிதிமுறைகளும் அனுமதிப்பதில்லை.//--இதுவல்லவா அனைத்து கேள்விகளுக்கும் பதில்...!
(பதிலை தெரிந்து கொண்டே கேள்வியா)

விவாதம் இதைப்பற்றி (இது அவசியமா/சட்டத்திருத்தம் தேவையா/'விதிமுறைகள் தளர்த்தல்' என்பன நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமா) அல்லவா இருந்திருக்க வேண்டும்...!

இது சரிசெய்யப்பட்டால் இறைத்த நீர் விழலுக்கு அல்லாமல் வயலுக்கு பாயுமே?

வானம்பாடிகளின் ஆதங்கத்துக்கும் முற்றுப்புள்ளியல்லவா?//

சாமி. வாய்ப்பு இருக்கு. வழி முறை தெளிவா இருக்கு. அத பயன் படுத்திக்காம எனக்கு வேணாம் போய்யான்னு சொல்றவருக்கு என்ன விதி தளர்த்தச் சொல்றீங்க. இதுதான் மேட்டர். அப்புடி எவன் சொல்லுவான்னுதான் இருக்கும். நிஜத்துல அப்படித்தான். ஏன்னா பொறுப்பு கூடுதல். சம்பளத்துல பெரிய வித்தியாசமில்லை.

THE UFO said...

மீண்டும் கேள்விக்குள்ளேயே பதில்.

//சம்பளத்துல பெரிய வித்தியாசமில்லை.//--ஆங்..!

இதுதான் மேட்டர்...! இதை சரி செய்ய வேண்டும். தீர்ந்தது பிரச்சினை.

vasu balaji said...

UFO said...

மீண்டும் கேள்விக்குள்ளேயே பதில்.

//சம்பளத்துல பெரிய வித்தியாசமில்லை.//--ஆங்..!

இதுதான் மேட்டர்...! இதை சரி செய்ய வேண்டும். தீர்ந்தது பிரச்சினை.//

:)). அவ்ளோ சுளுவா இருந்தா பண்ண மாட்டாங்களா?

தணல் said...

//Probably so. thanks for understanding and taking pains to clarify//

most most probably so :) Actually, I myself got selected for UPSC. But, at the same time, I got my MD selection in a good college, so I didn't join UPSC.

We have to go to Delhi for the interview and preliminary screening. None of my batch mates who got selected by the UPSC examination opted for that. They did not even attend the interview (true for all sects). Everyone went for some post graduation course or state govt jobs within Tamilnadu.

In the interview I was asked by one of the officers - you are so young (I was an intern then), why do you want to join UPSC now and waste your precious years? Why don't you go for post graduation directly? It may take years before you could join an MD degree if you choose to work in UPSC. I said I needed it because of family situation.

I happened to meet very few tamilians during the interview. Most of them were North Indians.

தணல் said...

Bala sir - just read the post once again so that I don't misunderstand anything :)

I write this based on my knowledge and apart from any discrimination. And whatever I say is with regard to medical profession only. And all this is just for further clarification, and not to speak against the main content of the post.


//அப்படிப் படித்து தேறி வருபவர்கள் அரசுத் தேர்வு எழுத மறுப்பது ஏன்?//

Not true at all! With regard to state govt jobs - most of them write the exam and go for a service job.

With regard to UPSC, I have stated the reasons in the prior writings. These apply to many tamilians in particular, though the individual reasons may vary.

//இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?//

I do not know the status of central govt hospitals like railway hospitals, but this again does not hold true for state govt. hospitals. most of the fresh MBBS candidates would like to settle in a govt job (particularly when they don't get the desired post graduation in first attempt).

And obviously, all these govt jobs (state and central) require certain years of bonding (like 3 years of service for state govt hospitals). They have to serve for three years, before they can do an MD. The good thing is that, they give us special reservation if we complete these 3 years. But for some of us, we prefer to get our MD done first, so a contract job may be a better option as there won't be any bonding. It is because of bonding and unexpected places of posting that some don't prefer these.

Actually, the state govt jobs are quite competitive. I know a long list of friends who were in the waiting list and gradually got accepted.

Dr.ராம் said...

//ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன், ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட் ஆகியவை நடத்தும் எந்தப் பரீட்சையும். அதன் தளங்களில் பரீட்சைக்கான் தேதி இருக்கும்.தேங்கிய பணியிடங்களுக்கான தேர்வில் எந்த செண்டரில் போய் பார்த்தாலும் ஈ ஆடும். அப்படியே வருபவனும் பீகார்க்காரர்கள்தான். ஏன் என்பதுதான் கேள்வி. //

மருத்துவராக upsc பரிட்சை எழுதிய அனுபவம் எனக்கு உண்டு சார்.பாண்டிச்சேரிக்கான அந்த தேர்வில்,டெல்லியில் நேர்முகத்தேர்வில் பிராந்திய மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை என்று கூறப்பட்ட போதிலும் தமிழகத்தில் இருந்து சென்றவர்களை தவிர்த்து, பெரும்பாலும் வடமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர்.. அவர்களில் பெரும்பாலானோர் வேலையில் சேரவில்லை.. காத்திருப்பு பட்டியல் இல்லாததால் வேறு யாரும் சேர முடியவும் இல்லை.. இதனால் காலியிடங்கள் அப்படியே இருந்தன.. இதற்கும் இடஒதுக்கீடுக்கும் என்ன சம்பந்தம்?..

UPSC தேர்வை பொறுத்தவரை இந்தி பேசுபவர்களுக்கும், பேசாதவர்களுக்குமான பாகுபாடு நிறையவே உள்ளது..அதனால் எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்டாலும் நேர்முகத்தேர்வில் ஒதுக்கபடுகின்றனர்.. அதனால் பெரும்பான்மையோர் upsc தேர்வு எழுத விரும்புவதில்லை.. ஆகவே இங்கு குறைபாடு இட ஒதுக்கீடு அல்ல.. . மொழிவெறியே ...அதனால்தான் மாநிலதேர்வுகளில் அனைத்து இடங்களும் நிரப்பபடுகின்றன..

«Oldest ‹Older   201 – 212 of 212   Newer› Newest»