பாகம் : 6
துப்பாக்கியை பார்த்ததும் கயிறு மேல் நடப்பவன் கால் தவறியதை போல சங்கரப் பெருமாளின் கறுத்த முகம் மேலும் கறுத்து அவசரமாக சுருங்கி விரிந்தது. மூக்கழிந்து முடி உதிர்ந்து கண்கள் வெளித்தள்ளி நாக்கு நீண்ட பேயை நேரே பார்த்தவன் போல அவரது வாய் திறந்து வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டும் அங்கு விலாஸ் புகையிலையும் ஏறிக் கறுத்த அவரது பற்கள் வெளித் தெரிந்தன. இவன் செக்கா சிவலிங்கமா?
காக்கிச்சட்டையில் இருக்கும் இவன் யார்? எங்கோ தவறு! மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் போலிருக்கிறது. காமம் கொண்ட எருமை போல எண்ணங்கள் ஓட அவரது கைகள் அனிச்சையாக உயர்ந்தன. “லே! மயிராண்டி! பேசிட்ருக்கும் போது என்னலே இது? கோட்டிக்காரப் பயலா இருக்க. நாஞ் சொல்லுதேன், கீழ போடுல அத. பேசிக்கிடலாம். பொசக்கட்ட பய. பொசுக்குன்னு துப்பாக்கிய காட்டுதான். ஒனக்க எவன்ல போலீஸ் வேலைக்கு எடுத்தவன்?”
காற்றில் அதிரும் கொடியைப் போல பிரசன்னா வேகமாக தலையசைத்தான். அவன் கன்னத்து தசைகள் உயர்ந்து கண்கள் விரிந்து இரண்டு கைகளும் இணைந்து துப்பாக்கியை உறுதியாக பிடித்திருந்தன. “ஸாரி ஸார்! என்னை மன்னிச்சிருங்க. நானும் போலீஸ்காரன் தான சார். என்ன நடக்கும்னு எனக்கு தெரியும். ரகசியமா வச்சிக்கலாம்னு நீங்க அப்ரூவர் ஆக்குவீங்க. அதை எவனாவது லீக் பண்ணுவான். சென்னை அழகி பயங்கரவாதிகளின் தலைவியான்னு எவனாவது நியூஸ் போடுவான்.
ஊரு ஒலகத்துல எல்லாரும் யோக்யம் மாதிரி இதைப் பத்தியே பேசுவானுங்க. டேபிள்ல ஒக்காந்துக்கிட்டு துப்பறியும் நிருபர்னு ஸ்பெஷல் எடிஷன் கூட கொண்டு வருவானுங்க. ஒங்க பொண்டாட்டிக்கோ பொண்ணுக்கோ இப்படி ஆனா சும்மா இருப்பீங்களா சார்? மாட்டீங்க! ஆனா ஸ்ருஷ்டி உங்களுக்கு யாரோ ஒருத்தி தான். அதனால செய்வீங்க. அப்ரூவர் ஆக்குவீங்க. என்னால முடியாது சார். அவ எனக்கு பொண்டாட்டி இல்லாட்டியும் ஆகப் போறவ. உங்களுக்கு உங்க கேஸ் முக்கியம். எனக்கு என்னோட ஸ்ருஷ்டி முக்கியம். என் பொண்டாட்டிய காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலை” சொல்லிவிட்டு சங்கரப் பெருமாளைப் பார்த்துக் கொண்டே பிரசன்னா துப்பாக்கியின் விசையை அழுத்தினான்.
ஸ்ஸ்ஸ்ஷ்ஷிக்க்க்க்...நீர் கிழித்து எழும் பெருமீன் போல சைலன்ஸர் வழி வெளியேறிய முதல் குண்டு ஐ.ஜி சங்கரப் பெருமாளின் இடது தோள்பட்டையை துளைத்து வெளியேறியது. அடுத்த குண்டு அவரின் நெற்றியில் பட்டு தலையை ஊடுருவி பின்பக்கம் வெடித்து வெளியேறி சங்கரப் பெருமாள் சாய்ந்திருந்த சுவற்றின் சிமெண்ட்டை பெயர்க்க சங்கரப் பெருமாளின் கை தோள்பட்டையை இறுக்க பிடித்த நிலையில் கண்கள் திறந்திருக்க ஒரு புறமாக சரிந்தார். தலை வெட்டப்பட்ட ஆடு போல உயிரில்லாத அவரது கண்கள் துப்பாக்கியுடன் நின்ற பிரசன்னாவையே பார்த்துக் கொண்டிருக்க, சங்கரப் பெருமாளை சுற்றிலும் ரத்தம் பரவ ஆரம்பித்தது.
பிரசன்னா துப்பாக்கியை பின்பக்கம் சொருகிக் கொண்டு அதிர்ச்சியில் விழி விரித்து எழுந்து நின்றிருந்த ஸ்ருஷ்டியிடம் வந்தான். சன்னதம் வந்தவளைப் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருக்க கைகள் முகத்தை இறுக்கி தேய்த்துக் கொண்டிருந்தது. அவனது சூடான கைகள் அவளது கன்னங்களை அழுத்தி தடவியது... “ஸாரிடா...நீ இது பார்த்திருக்க வேண்டாம். சங்கரப் பெருமாளைப் பத்தி உனக்கு தெரியாது. உன்னை விட மாட்டார். ஆனா எனக்கு நீ வேணும். என்னோட ஸ்ருஷ்டி எனக்கு வேணும். அதான்! வேற வழி தெரியலை. நீ கெளம்பு, நான் பாத்துக்கிறேன்.” அவளது தோள்களுக்கிடையில் கை கொடுத்து பிரசன்னா இறுக்கிக் கொண்டான்.
எம்.பி.ஏ. லண்டன் பிஸினஸ் ஸ்கூல். இன்டியாவின் பவர்ஃபுல் சி.ஈ.ஓ. டாட்டா, அம்பானி வரிசையில் ஸ்ருஷ்டி. எத்தனை கனவுகள், பந்தயக்குதிரையின் காலில் கட்டிய கயிறு போல. ஒரே ஒரு சின்ன தவறுக்காக வலையில் மாட்டி, ஒரே இரவில் அத்தனையும் மாறி, பயங்கரவாதிகளின் சென்னை தலைவி! நோ! ஐயம் இன்னசன்ட். சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை.
கரை உடைத்த நதியில் மூழ்கும் போது கடைசியாய் சிக்கிய கிளையை இறுக்குவது போல ஸ்ருஷ்டி அவனை இறுக்கிக் கொண்டாள். எனக்காக எத்தனை பெரிய ரிஸ்க். பாவம் அந்த ஐஜி,அவரை சுட்டிருக்க வேண்டாம். அவளுக்கு ஒரே நேரத்தில் கரை உடைந்த நதி போல காதலும், நண்பனின் முதுகில் குத்தியவன் போல துக்கமும் எழுந்தது “எங்கே? எங்கே போறது? எப்படி பிரசன்னா?”
பிரசன்னா அவளை மேலும் இறுக்கிக் கொண்டான். ஸ்ருஷ்டியின் சூடு அவன் மேல் படர்ந்தது. “நீ உங்க அப்பாவை கூட்டிக்கிட்டு மெட்ராஸ் கெளம்பு. இன்னும் கொஞ்ச நேரத்துல என்னோட ஃப்ரண்ட்டை வரச் சொல்லிருக்கேன். பாண்டிச்சேரிக்காரன். அவனுக்கு விஷயம் எதுவும் தெரியாது. அவன் காரில ஏறி நீங்க மெட்ராஸ் போயிடுங்க. யாராவது கேட்டா கும்பகோணம் குல தெய்வம் கோவிலுக்கு ஒரு நேர்த்திக்கடனா போயிட்டு வந்தோம்னு சொல்லுங்க.”
ஸ்ருஷ்டி அவனுடன் அழுந்திக் கொண்டாள். அவளது மூச்சு திணறலுடன் வர மார்பகங்கள் கரை மீது மோதும் அலை போல வேகமாக ஏறி இறங்கியது.“எனக்கு பயமாருக்கு....நீ...நீ எப்படி சமாளிப்ப பிரஸன்னா?”
பிரஸன்னாவின் உதடுகள் அவளது கன்னம் தடவி மூக்கு காது மடலில் உரசியது. அவன் குரல் கடும் போதையான கஞ்சா போல வழுக்கியது. “நான் யோசிச்சிட்டேன். நீ இங்க இருந்தது ஐ.ஜி, எஸ்.ஐ ஜெயராமன் அப்புறம் உங்களை கடத்திய ஒரு இன்ஸ்பெக்டர் தவிர யாருக்கும் தெரியாது. உன்னோட கார் உன் வீட்லயே நிக்குது. உன்னையும் உங்க அப்பாவையும் சங்கரப் பெருமாள் கார்ல தான் கடத்திருக்காங்க. ஸோ, நீ இங்க இருந்ததுக்கு எந்த எவிடன்ஸும் இல்லை.
கேசு விஷயமா நாங்க பேசிட்டிருந்தப்ப குடிச்சிட்டு சண்டை வந்து எஸ்.ஐ. ஜெயராமன் எல்லாரையும் தாறுமாறா சுட்டுட்டு பயத்துல அவரும் சூய்ஸைட் பண்ணிக்கிட்டாருன்னு நான் ஐவிட்னஸ் கொடுத்துடறேன். ஐ.ஜி பார்த்துக்கிட்டிருந்த கேஸ் அடுத்து என்கிட்ட தான் வரும். அதை நான் ஹாண்டில் பண்ணிக்கிறேன். அதனால நீ பயப்படாம போ” பிரஸன்னாவின் விரல்கள் ஸ்ருஷ்டியின் கூந்தலில் அளைந்தன.
ஸ்ருஷ்டி அவனைத் தள்ளிவிட்டு பின்வாங்கினாள்.“அப்போ ஜெயராமன்?”
பிரஸன்னா அவளை பார்க்காது முகம் திருப்பிக் கொண்டான்.
“ஆமா! ஜெயராமனையும்! ஸாரி ஸ்ருஷ்டி, எனக்கு வேற வழியே இல்லை. இது அவர் ரிவால்வர் தான்.”
வீட்டின் வெளியே மெல்லிய இருளில் கரையில் ஏறும் முதலை போல அந்த கார் வந்து நின்றதை பார்த்ததும் பிரசன்னா வெளியே வந்தான். ட்ரைவர் சீட்டில் இருந்தவன் காரை விட்டிறங்கி ட்டட்ட்ப் என்ற மெல்லிய சத்தத்துடன் கார் கதவை மூடி விட்டு காரை சுற்றி வந்து பிரசன்னாவிடம் “ஸார்!” என்றான்.
தூக்கமும் குழப்பமும் ஏறிய முகத்துடன் கசங்கிய இலை போல ஸ்ரீதரன் வெளியில் வந்து காரில் ஏறிக் கொள்ள ஸ்ருஷ்டி தொடர்ந்து வந்து பிரசன்னாவை மெல்ல அணைத்துக் கொண்டாள். “எனக்கு பயமாருக்கு பிரசன்னா, எதும் பிரச்சினை வராதுல்ல?”
பிரசன்னா பதில் சொல்லாது இறுக்கிக் கொண்டான். ‘ஸ்ருஷ்டி, நிழல்... அல் கயால்... வெறும் நிழல்... இயக்கம் உன்னைப் போன்றவர்களை உபயோகப்படுத்தும். ஆனால் ஒரு போதும் நம்புவதில்லை. அதனால் தான் உன்னை சுற்றி எப்பொழுதும் நான். நிழலின் நிழல்! இரண்டாம் நிழல்! சங்கரப் பெருமாள் நிழலை பிடிப்பதில் கவனமாக இருந்தாரே தவிர இரண்டாவதாக ஒரு நிழல் இருக்கலாம் என்று அவருக்கு தோன்றவில்லை. சங்கரப் பெருமாளையும் ஜெயராமனையும் உனக்காக கொல்லவில்லை. நிழலை தொட்டு இரண்டாம் நிழலை நெருங்கலாம். நெருங்குபவர்களை அழிப்பது தவிர வேறு வழியில்லை.’
இருள் பிரியாத அந்த அதிகாலையில் மஞ்சளான விளக்கொளியில் ஸ்ருஷ்டியின் நிழல் தரையில் படர்ந்தது. அதை இறுக அணைத்து பிரசன்னாவின் நிழல், இரண்டாம் நிழல்.
ஸ்ருஷ்டியையும் ஸ்ரீதரனையும் ஏற்றிக் கொண்டு கார் போய்விட பிரசன்னா கதவை மூடி விட்டு உள்ளே வந்தான். ஸ்ருஷ்டிக்கு எதிரான ஆதாரங்களை மறைக்க வேண்டும். பாண்டிச்சேரிக்கு போயிருக்கும் திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் யாரென்று தெரியவில்லை.வரட்டும். அவனுக்கு பாண்டிச்சேரியில் பழைய காதலி. சைல் ஹுட் ஸ்வீட் ஹார்ட். ரொம்ப நல்லதாக போயிற்று. அவள் விவரம் வாங்கி விட்டு அவனது கதையையும் முடித்து விட வேண்டியதுதான். பழைய காதலியை தப்பாக பேசியதில் மூவருக்கும் சண்டை. குடி போதையில் அடித்துக் கொண்டு எஸ்.ஐ. ஜெயராமன் தாறுமாறாக சுட்டதில் ஐ.ஜியும் இன்ஸ்பெக்டரும் பலி. பயத்தில் எஸ்.ஐ. தற்கொலை. நம்ப மாட்டார்கள். பிரசன்னா இடது காலை தூக்கி தொடையைப் பார்த்தான். காலில் சுட்டுக் கொள்ள வேண்டியது தான்.
எழுதப் போகும் ஐ விட்னஸ் ரிப்போர்ட் பிரசன்னாவின் மனதில் வேகமாக ஒடியது. ஸ்ருஷ்டி முக்கியம். நிழல் இல்லாமல் இரண்டாம் நிழல் இல்லை. அவளை வைத்து இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.
ஆனால் வெளியே போன அந்த இன்ஸ்பெக்டர் வரும் வரை ஒன்றும் செய்ய முடியாது. காத்திருக்க வேண்டியது தான். யோசித்துக் கொண்டே பிரசன்னா ஃப்ளாஸ்க்கில் மீதி இருந்த காஃபியை ஊற்றிக் கொண்டு சிகரெட்டை பற்ற வைத்தான். ஐ.ஜி. சங்கரப் பெருமாளின் சிகரெட்.
வெளியே மெதுவாக விடிய ஆரம்பிக்க ஜன்னல் வழியே வந்த வெளிச்சத்தில் பிரசன்னாவின் நிழல் வளர்ந்து வளர்ந்து சிகரெட் புகை சூழ்ந்த அறை முழுவதும் படர ஆரம்பித்தது.

=====================

=======================================

===================== முற்றும்=================
இன்னைக்கும் கண்டு பிடிங்க மக்கா. நாளைக்கு யாருன்னு பார்ப்பம்.
1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்
38 comments:
அனைவருக்கும் நன்றி. கதை குறித்த உங்கள் கருத்தை தவறாமல் எதிர்பார்க்கிறோம்.:)
இன்னும் கொஞ்சம் நீடிச்சுருக்கலாமோ கதைய.. முடிவுதான் கொஞ்சம் சடார்னு வந்துட்ட மாதிரி இருக்கு..முடிவும் கொஞ்சம் நெருடல்தான் :)
ஆஹா, முடிச்சிட்டாருய்யா முடிச்சிட்டாரு! இருங்க படிச்சிட்டு வர்றேன்...
பிரபாகர்...
இன்னும் வளத்தியிருக்கலாம்! வாய்மையே வெல்லும்...இங்கு மாறுபட்டிருக்கிறது...
பிரபாகர்....
சூப்பரு.. அட அட... என்னமா எழுதுறாய்ங்கப்பு... இந்தாளு எதிர்காலத்தில ஒரு பிரபல எழுத்தாளராகும் தகுதி நிறைய இருக்கு சார்...
(இத நான் எழுதினேன்னு சொன்னா சாமி கண்ணைக் குத்திடும்.. :o))
ஜெட் வேகத்தில் முடிந்திருக்கிறது... யார் எழுதி இருந்தாலும் பாராட்டுக்கள்
முடிச்சிட்டீங்களா?!
முழுசும் படிக்கல சார்:( ஆனாலும் உங்க ப்ரொஃபைல் போட்டொ மாதிரியே எங்களைக் காய விட்டதற்கு நன்றி!
:))
முற்றும் போட்டாச்சு ???
இரண்டாம் நிழல் பற்றிய விவரங்கள் சரியாக இல்லை என்று நினைக்கிறேன்.. மற்றபடி கதை படு ஸ்பீட்..
கதை ரொம்ப விறுவிறுப்பாக செல்கிறது.. ரொம்ப நல்லாருக்கு பாலா சார்.
பாலா சார்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..
http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html
ஆஹா..மண்டபத்துக்கு ஆட்டோ அனுப்பலாம்னு பார்த்தா அதுக்குள்ள முடிச்சிட்டாய்ங்க போலருக்கே...இந்த தடவை எஸ்சாயிட்டாங்க...அடுத்த தடவை பாத்துக்கறேன்...
//
பிரபாகர் said...
இன்னும் வளத்தியிருக்கலாம்! வாய்மையே வெல்லும்...இங்கு மாறுபட்டிருக்கிறது...
பிரபாகர்....
//
எம்ஜியார் படம் மாதிரி இருக்கும்னு ஒரு சேஞ்சுக்கு பண்ணிருப்பாங்களோ? #சும்மா டவுட்டு.
சார் எப்புடி......எப்புடி....சார்..? இப்படி ஜெட் வேகத்துல ஊதித் தள்ளுரீங்க? வாய்ப்பே இல்ல, சூப்பர்.
ரொம்ப நல்லாருக்கு பாலா சார்
கடைசி அத்தியாயம் செமயா இருக்கு! தேர்ந்த எழுத்தாளர் எழுதின மாதிரி நல்லா முடிஞ்சிருக்கு.. என்ன, எட்டு பேரோட பேரு போட்டிருந்ததால இன்னும் ரெண்டு அத்தியாயம் வரும்ன்னு நினைச்சிருந்ததால, இப்போ திடீர்ன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு..
//வெளியே மெதுவாக விடிய ஆரம்பிக்க ஜன்னல் வழியே வந்த வெளிச்சத்தில் பிரசன்னாவின் நிழல் வளர்ந்து வளர்ந்து சிகரெட் புகை சூழ்ந்த அறை முழுவதும் படர ஆரம்பித்தது.//
சூப்பர்!!
நான் அதிகமா வாசிச்சிருக்காத ஒருத்தர்.. அதனால தெரியல :( மே பீ பலா பட்டரை ஷங்கர்???
//அது சரி said...
//
பிரபாகர் said...
இன்னும் வளத்தியிருக்கலாம்! வாய்மையே வெல்லும்...இங்கு மாறுபட்டிருக்கிறது...
பிரபாகர்....
//
எம்ஜியார் படம் மாதிரி இருக்கும்னு ஒரு சேஞ்சுக்கு பண்ணிருப்பாங்களோ? #சும்மா டவுட்டு.
//
எம்.ஜி.ஆர் படம்னா எல்லாம் தமிழ் பேரா இருக்கும், கவர்ச்சி நடிகை, வில்லன் தவிர. எந்த நாட்டுக்காரங்களும் தமிழ் பேசுவாங்க! எங்க தலைவர் ரொம்ப ரொம்ப நல்லவரா இருப்பாரு... ஹி..ஹி... எம்.ஜி.ஆர் படம்னு சொன்னதும் அதப்பத்தியே சொல்லிட்டேன்.
ஆரம்பம் முதல் கடைசி வரை யூகிக்கவே முடியாத மாதிரி இருந்தது முதல் வெற்றி.
நிழல் தான் பெரும்பாலும் வெற்றி பெறுகிறது நமக்குத்தெரியாமல் எனும் ஒரு உன்னத உண்மையை இத் தொடர் சுட்டி, யதார்த்தமாய் இருக்கிறது.
படித்தவர்களின் மனதில் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (ஏன் அதற்குள் முடிந்துவிட்டது? முடிவு வேறு மாதிரியாய் இருந்திருக்கலாமே? அதர்மம் வென்றிருக்கிறதே? அதன் பின் என்ன ஆயிற்று... குறிப்பாய் ஆழ்ந்து படித்த என்னை இவ்வாறு பின்னூட்டம் இட வைத்திருக்கிறது...)
எழுதிய என் அய்யா அன் கோவிற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
பிரபாகர்...
பிரபாகரண்ணே, நான் இன்னும் ரெண்டு பாகம் எழுதலாம்னு சொன்னதுக்கு முடிச்சுவுடு முடிச்சுவுடுன்னு அவசரப்படுத்திப்புட்டு இப்ப நீங்களே வந்து இன்னும் வளத்தியிருக்கலாம்னு பின்னூட்டலாமா? என்ன கொடுமை இது?
//முகிலன் has left a new comment on the post "இரண்டாம் நிழல் - 6":
பிரபாகரண்ணே, நான் இன்னும் ரெண்டு பாகம் எழுதலாம்னு சொன்னதுக்கு முடிச்சுவுடு முடிச்சுவுடுன்னு அவசரப்படுத்திப்புட்டு இப்ப நீங்களே வந்து இன்னும் வளத்தியிருக்கலாம்னு பின்னூட்டலாமா? என்ன கொடுமை இது?
//
முகிலன் புரியலையா?
மொத்த பார்ட்டையும் முழுசா படிச்சதுக்கு அலிபி க்ரியேட் பண்றாராமாம் எஸ்பி :)
நான் கிரியேட் பண்றதே அலிபி தான். இதுல பிரபா வேறயா?
நல்லாருக்கு
//முகிலன் said...
நான் கிரியேட் பண்றதே அலிபி தான். இதுல பிரபா வேறயா?
//
சேம் பிளட்!...
நான் முழுமையாப் படிக்கணும்... இனிமேல்தான்.....
கலகலப் ப்ரியா கமெண்ட்ஸ் சூப்பர்..:)))
தொடர்கிறேன், ஆரம்பத்திலிருந்து...
ஜெட் வேகத்தில் முடிந்திருக்கிறது... யார் எழுதி இருந்தாலும் பாராட்டுக்கள்
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றி பிரபா.
@@நன்றிங்க செந்தில்
கலகலப்ரியா said...
//சூப்பரு.. அட அட... என்னமா எழுதுறாய்ங்கப்பு... இந்தாளு எதிர்காலத்தில ஒரு பிரபல எழுத்தாளராகும் தகுதி நிறைய இருக்கு சார்...
(இத நான் எழுதினேன்னு சொன்னா சாமி கண்ணைக் குத்திடும்.. :o))//
ஆமாம்மா. இவர் கூட நாமளும் ஒரு கதை எழுதியிருக்கோம்னு சொல்லிக்க பெருமையா இருக்கு:)
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
முடிச்சிட்டீங்களா?!
முழுசும் படிக்கல சார்:( ஆனாலும் உங்க ப்ரொஃபைல் போட்டொ மாதிரியே எங்களைக் காய விட்டதற்கு நன்றி!
:))//
ஆஹா! மண்ட காஞ்சி போச்சாமா:))
@@நன்றிங்க எல்.கே
@@நன்றிங்க நாடோடி
@@நன்றிங்க ஸ்டார்ஜன்
அது சரி said...
//ஆஹா..மண்டபத்துக்கு ஆட்டோ அனுப்பலாம்னு பார்த்தா அதுக்குள்ள முடிச்சிட்டாய்ங்க போலருக்கே...இந்த தடவை எஸ்சாயிட்டாங்க...அடுத்த தடவை பாத்துக்கறேன்...//
ஏன்? போட்டு தள்ளினது போறாதா என்கவுண்டர் ஏகாம்பரம்:o)
அது சரி said...
/
எம்ஜியார் படம் மாதிரி இருக்கும்னு ஒரு சேஞ்சுக்கு பண்ணிருப்பாங்களோ? #சும்மா டவுட்டு.//
அய்யயோ. சொ.கா.சூ ஆச்சே. அண்ணன்கிட்ட போய் எம்.ஜி.ஆர்னு சொல்லலாமா:))
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
//சார் எப்புடி......எப்புடி....சார்..? இப்படி ஜெட் வேகத்துல ஊதித் தள்ளுரீங்க? வாய்ப்பே இல்ல, சூப்பர்.//
நானெங்க எழுதினேன். அதுவா எழுதிக்குது:))
நேசமித்ரன் said...
/ரொம்ப நல்லாருக்கு பாலா சார்/
ரொம்ப நன்றி நேசமித்திரன்.
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
கடைசி அத்தியாயம் செமயா இருக்கு! தேர்ந்த எழுத்தாளர் எழுதின மாதிரி நல்லா முடிஞ்சிருக்கு.. என்ன, எட்டு பேரோட பேரு போட்டிருந்ததால இன்னும் ரெண்டு அத்தியாயம் வரும்ன்னு நினைச்சிருந்ததால, இப்போ திடீர்ன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு..
//வெளியே மெதுவாக விடிய ஆரம்பிக்க ஜன்னல் வழியே வந்த வெளிச்சத்தில் பிரசன்னாவின் நிழல் வளர்ந்து வளர்ந்து சிகரெட் புகை சூழ்ந்த அறை முழுவதும் படர ஆரம்பித்தது.//
சூப்பர்!!
நான் அதிகமா வாசிச்சிருக்காத ஒருத்தர்.. அதனால தெரியல :( மே பீ பலா பட்டரை ஷங்கர்???//
ரொம்ப நன்றிங்க.
பிரபாகர் said...
எம்.ஜி.ஆர் படம்னா எல்லாம் தமிழ் பேரா இருக்கும், கவர்ச்சி நடிகை, வில்லன் தவிர. எந்த நாட்டுக்காரங்களும் தமிழ் பேசுவாங்க! எங்க தலைவர் ரொம்ப ரொம்ப நல்லவரா இருப்பாரு... ஹி..ஹி... எம்.ஜி.ஆர் படம்னு சொன்னதும் அதப்பத்தியே சொல்லிட்டேன்.
ஆரம்பம் முதல் கடைசி வரை யூகிக்கவே முடியாத மாதிரி இருந்தது முதல் வெற்றி.
நிழல் தான் பெரும்பாலும் வெற்றி பெறுகிறது நமக்குத்தெரியாமல் எனும் ஒரு உன்னத உண்மையை இத் தொடர் சுட்டி, யதார்த்தமாய் இருக்கிறது.
படித்தவர்களின் மனதில் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (ஏன் அதற்குள் முடிந்துவிட்டது? முடிவு வேறு மாதிரியாய் இருந்திருக்கலாமே? அதர்மம் வென்றிருக்கிறதே? அதன் பின் என்ன ஆயிற்று... குறிப்பாய் ஆழ்ந்து படித்த என்னை இவ்வாறு பின்னூட்டம் இட வைத்திருக்கிறது...)
எழுதிய என் அய்யா அன் கோவிற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
பிரபாகர்...//
நன்றி பிரபா. இது அய்யா அன் கோ இல்ல. அது சரி அன் கோ:))
@@முகிலன்
@@ஷங்கர்
ஸ்பிய கலாய்க்கிறீங்களா?:))
@@நன்றிங்க டி.வி.ஆர் சார்
@@நன்றிங்க பழமை. படிச்சிட்டு சொல்லுங்க
@@நன்றிங்க தேனம்மை. அதான் ப்ரியா:)
@@நன்றிங்க ஜெய்
@@நன்றிங்க சே. குமார்.
//
பிரபாகர் said...
எழுதிய என் அய்யா அன் கோவிற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
//
அய்யா அன் கோ? இதென்ன பருப்பு மண்டியா? :0))))
ஆனா, பேரு நல்லாருக்கு...இனிமே அப்படியே வச்சிக்கலாம்...அய்யா & கோ : ஓனர்: சென்னை பாலா.
Post a Comment