Thursday, August 5, 2010

இரண்டாம் நிழல்-3.


பாகம் 3:
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.....வெள்ளை, கறுப்பு, மஞ்சள், மாநிறம்...மேடு பள்ளம்....நகரம், கிராமம், காடு எல்லாம் மாறினாலும் விதம் விதமாக வண்ணம் காட்டினாலும் மாறாமல் இருப்பது....கடல்...குண்டான பெண் உடுத்திய நீல சேலை போல..... இந்தியப் பெருங்கடலும், ஆர்க்ட்டிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும், பசிஃபிக் பெருங்கடலும் ஒன்று தான்...மிகப்பெரிய உப்பு கரைசல்.... சென்னை கடற்கரையும் பாண்டிச்சேரி கடற்கரையும் ஒரே காற்று... உப்புக் காற்று...

ஃபோட்டோவுக்கு சிரிக்கும் புது மனைவி போல கொஞ்சமாய்த் திறந்திருந்த ஜன்னல் வழியே வந்த பாண்டிச்சேரியின் கடல் காற்றை ஆழமாய் உள்ளிழுத்ததில் பிரசன்னாவுக்கு உப்புக் கரித்தது....அவன் முகம் வண்ணான் துறையில் வெளுத்தெடுத்த வேட்டி போல ரத்தம் இழந்து கசங்கிப் போய் இருக்க‌....நீண்ட நேரமாய் உட்கார்ந்திருந்தில் கால்களில் ரத்த ஓட்டம் தடை பட்டு முழங்காலுக்கு கீழே லேசாய் அரிப்பெடுத்தது..

ஒரே நாளில்.....இல்லை....ஒரே மாலையில் எத்தனை நடந்திருக்கிறது...தவறு.....என்ன நடக்கிறது என்றே புரியவில்லை...நேற்று மாலை ஸ்ருஷ்டியை பார்க்க மல்டிப்ளக்ஸ் போனது ஞாபகம் இருக்கிறது.....அங்கு ஸ்ருஷ்டியை காணாமல் ஸ்ரீதரன் அங்கிள் போன் செய்தது, ஆபிஸுக்குப் போகும் வழியில் ஜெயராமனை பிக்கப் பண்ணியது ஞாபகம் இருக்கிறது. ஆஃபிஸ் போவதாக ட்ரைவ் பண்ண ஆரம்பித்தது... .திடீரென்று மூச்சு திணறல்...இப்பொழுது எங்கே இருக்கிறேன்....ஜெயராமன் எங்கே...ஸ்ருஷ்டி எங்கே...என்ன எழவு தான் நடக்கிறது....

எரிச்சலுடன் தூக்கமும் குழப்பமுமான கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் அறையை சுற்றிப் பார்த்தான்...

இன்னமும் விடியாத மெல்லிய இருட்டு...சின்ன அறை....மிக சாதாரணமான ஸோஃபா...டீ டேபிள்...அதன் மேல் நிரம்பியிருக்கும் ஆஷ் ட்ரே...பாதி விஸ்கியுடன் பீங்கான் மதுக் கோப்பைகள்.....அவனுக்கு எதிரே சிறிய ஃபிலிப்ஸ் ஃப்ளாட் ஸ்க்ரீன் டி.வி...இவன் முகத்தை பார்த்துக் கொண்டு நேர் எதிரே.....
கண்டிப்பாக இது கனவு...யாரையும் நம்ப முடியாத ஒரு போலீஸ்காரனின் வெளியில் சொல்ல முடியாத அந்தரங்க பயம்...பிரசன்னா கண்களை மீண்டும் கசக்கிக் கொண்டான்.

அவரை இரவு உடையில் பிரசன்னா இது வரை பார்த்ததில்லை...கை இல்லாத பழுப்பேறிய முண்டா பனியன்...கழுத்தில் தொங்கும் கறுப்பு கயிற்றில் ஏதோ ஒரு டாலர்....திருச்செந்தூர் முருகனாக இருக்கலாம்...கொஞ்சம் தொப்பை விழுந்த‌ வயிறு வரை ஏற்றி கட்டிய அழுக்கான கட்டம் போட்ட‌ லுங்கி....சுருளும் இல்லாது நேரும் இல்லாத அந்த இடைப்பட்ட கோரை முடி...ஒரு பக்கம் வழக்கம் போல சரியாக நறுக்கப்படாத மீசை...தென் கோடி தமிழகத்தின் மலையாளமும் தமிழும் கலந்த ஒரு மூக்கு...
இவன் முகத்தையே பார்த்துக் கொண்டு ஐஜி சங்கரப் பெருமாள்...
===============================
இவன் விழிப்பதை பார்த்ததும் சங்கரப் பெருமாள் கையிலிருந்த சிகரெட்டை ஆழமாக இழுத்து விட்டு, “ஸாரி பிரஸன்னா...ஜெயராமன் மயக்க மருந்து டோஸ் ரொம்ப அடிச்சிட்டான் போலருக்கு...அவனுக்கு இதுக்கு முன்னாடி பழக்கம் இல்ல என்றார்...”

பிரஸன்னாவுக்குள் பயம், குளிர்ந்த வாள் போல அறுத்தது.. ஒருவேளை...இல்லை..இருக்காது... “என்ன ஸார் இது...என்ன நடக்குது... என்னை எதுக்கு கடத்தணும்? இது எந்த ஊரு... நீங்க என்ன பண்றீங்க... ஸ்ரீதரன் எங்கே? ஸ்ருஷ்டி எங்கே?” வேகமாய் எழுந்த அவனை சங்கரப் பெருமாளின் வலுவான கைகள் கீழே அழுத்தியது.

ஒக்காரு ஒக்காரு...சொல்லுதேன்...அதுக்கில்லா ஒன்ன இங்க கொண்டு வந்தது...தப்புதான்...சொல்லாம அள்ளிப் போட்டுக்கிட்டு வந்தது தப்பு தான்...ஆனாக்க எனிக்கு வேற வழி ஒண்ணும் இல்லையாக்கும்...நாஞ் சொல்றத கேட்டா நீயும் சரின்னு சொல்லுவ பாரு.

பிரசன்னா வெட்டத் தயாராகும் ஆடு போல குறுக்காக தலையசைத்தான்.. “மொதல்ல நான் எங்க இருக்கேன்னு சொல்லுங்க ஸார்...இது எந்த ஊர்...இது யார் வீடு...”

சங்கரப் பெருமாள் ஆஷ் ட்ரேயில் இருந்த சிகரெட்டை எடுத்து இழுத்து விட்டு "எங்கருக்கோம்... யாரு வீடு...ம்ம்ம்.....குறிச்சிக் குப்பம்..பாண்டிச்சேரி...இங்க இருந்து அரை மைல்ல கடலு.......எனக்க ஃபெரண்டு வீடாக்கும்...அவன் அறதளி போய்ச் சேந்து அது கொள்ள நாளாச்சு.....எப்பிடி செத்தான்னு கேக்கியா...குடிகாரப்பயல்லா அவன்...குடிச்சி குடிச்சி கொடலு வெந்து பொறத்தால ரெத்தம் வந்து போய்ச் சேந்துட்டான்...இப்பத்தைக்கு இந்த வீடு எனக்க கண்ட்ரோல்ல உண்டு...."

கையூன்றி எழ முயன்ற பிரசன்னாவின் முன் சிகரெட் நீட்டப்பட்டது..."இந்தா....நீ தம்மடிப்பன்னு எனக்கு தெரியும்லா...இங்கின என்ன பண்ணுதோம்னு கேக்குதியாக்கும்..அதொண்ணுமில்லா...இந்தா இந்த வீடியோ போடுதேன்...பாரு...."
=========================
சங்கரப் பெருமாள் ரிமோட் கண்ட்ரோலை தட்ட ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவியில் தெளிவில்லாமல் காட்சிகள் விரிந்தன....

ஏதோ ஒரு கடற்கரை...தூரமாக நிற்கும் கப்பல்களில் கொரிய கொடிகள்....சென்னை துறைமுகத்தில் நிறைய கொரிய கப்பல்கள் ஞாபகம் இருக்கிறது...சென்னையாக இருக்கலாம்.....கேமராவின் ஃபோகஸ் குறுகிக் கொண்டே வந்து இப்பொழுது ஒரு படகு தெரிகிறது....சாதாரண உடை உடுத்திய மனிதர்கள்....நான்கைந்து பேர் இருக்கலாம்...குறுக்கும் நெடுக்குமாக நடப்பதில் சரியாக தெர்யவில்லை....மீன்பிடி படகு? ஏதோ பேசுகிறார்கள்...புரியாத மொழி...இல்லை....இது மீன்பிடி படகு இல்லை..த்தா பாடு....சென்னை மீனவர்களின் மொழி பிரசன்னாவுக்கு தெரியும்...

இது அவர்களின் மொழியில்லை.....என்ன மொழி இது...பிரசன்னா யோசிக்கும் போதே படகின் தரையில் உட்கார்ந்திருந்த ஒருவன் புரியாத மொழியில் என்னவோ சொல்ல நின்று கொண்டு இருந்த ஒருவன் என்னவோ சொல்லி அல் ஜிஹாத் என்றான்...அவன் முகம் தெரியவில்லை...திரும்பி நின்றதில் முதுகும், கால்களும், கலைந்த தலை முடியும் மட்டுமே தெரிகிறது.....கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் இருந்த அடுத்தவன் ஏதோ கேட்க முதலில் பேசியவன் அல் கயால் என்றான்...கேமரா நின்று கொண்டிருந்தவனின் முகத்தை படம் பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும்...படகு கடல் அலை பட்டு அலைந்ததில் கேமரா கோணம் தப்பி நீலமான‌ கடல் மட்டுமே திரையில் வந்தது....
=====================
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிரசன்னாவுக்கு அறையில் அடித்த மெல்லிய கடற்காற்றையும் மீறி வியர்த்திருந்தது... பயங்கரவாதிகள்... ஃப்ளாட் ஸ்க்ரீன் டி.வி. கடல் அலைகளில் உறைந்திருக்க, கண்களை விலக்கி “ஸார்....இவங்க....”

சங்கரப் பெருமாள் கறுப்பாய் இருந்த திரவத்தை கோப்பையில் முழுதுமாக கவிழ்த்து பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு “தாயோளிங்க... ஆமா...பிரஸன்னா... அவனுங்க தான்...அவனுங்க யாரு எப்படி பிடிக்கிறதுன்னு நீ கவலைப்பட வேண்டியதில்லை.....காலையில புழல் ஜெயில்ல பாத்துக்கலாம்...நேத்தி நைட்டே அவனுவளை அள்ளியாச்சி...எல்லாப் பயலுவளும் காஜா பீடி சரியில்லைன்னு அரபில கம்ப்ளைண்ட் பண்ணிட்டுருக்கானுவ....”

சொல்லிவிட்டு சங்கரப் பெருமாள் பிரசன்னாவை உற்றுப் பார்த்தார்....

“அப்போ...அப்போ...நான்...என்னை எதுக்காக சார் இங்க...."

அவனை பார்க்க விரும்பாதவர் போல சங்கரப் பெருமாளின் முகம் தூரமாக அந்த இருளில் வெறித்தது... “ப்ரஸன்னா....எங்க அப்பாரு ரொம்ப ஷோக்கான ஆளு.... போற எடம் பொண்டாட்டி...வாற எடம் வைப்பாட்டி....அதுல ஒன்னு கேரளாவுல தங்கிட்ட அரபிக் குடும்பம்..மூணாம் தலைமுறைதான்......ஆனா எனக்கு சித்தி மொறை. அவனுவ அல் கயால்னு சொல்றனுங்க... கவனிச்சியா? அதுக்கு அரபில நிழல்னு அர்த்தம்...எனக்கு அரபி தெரியாது...ஆனா, அவனுங்க தலைவனுக்கு ஈடா இங்க யாரோ இருக்காங்க. அது யாருன்னு அவனுங்களை முட்டிக்கு முட்டி தட்டியும் ஒண்ணும் தெரியலை ....அதான்...”

பிரஸன்னாவுக்கு கடல் காற்றை மீறி காது மடல்கள் வேர்த்தது....இவர் சொல்வது...ஸ்ருஷ்டியை காணவில்லை...அப்படியானால் ஸ்ருஷ்டி? என்ன சொல்ல வருகிறார்...இவருக்கு என்ன தெரியும்...எவ்வளவு தெரியும்...

சங்கரப் பெருமாள் கோப்பையில் இருந்த கறுப்பு திரவத்தை ஆழமாக குடித்தார்.....அந்த இருட்டில் சிரங்கு பிடித்தவன் நாட்டு மருந்து குடிப்பது போல அவர் முகம் கோணல்மாணலாகியது... “ஸாரிடே பிரசன்னா...அந்த அல் கயால்...அவனுவளோட‌ லோக்கல் பாஸ்...அந்த குட்டி...உன்னோட ஃபியான்ஸி... ஸ்ருஷ்டியா இருக்கலாம்னு எனக்கு ஒரு சம்சயம்... என்ன தான் இருந்தாலும் நீ கெட்டிக்க போறவள்லா...அவளை போலீசுக்காரனுவ விசாரிக்க மாதிரி விசாரிக்க எனக்கு பிரியமில்லா..ஒன்னை வரச்சொன்னா வருவியாக்கும்? அதான் ஜெயராமனை விட்டு மருந்தடிச்சி தூக்கி வரச் சொன்னேன்....”

சங்கரப் பெருமாள் முடிக்காமலே மீண்டும் குடிக்க ஆரம்பிக்க பிரஸன்னா அவரையே வெறித்து பார்த்தான்....எப்படி....இது போலீஸ் புத்தி...இந்த சங்கரப் பெருமாள் குறி வைக்கிறார்...வெறுமனே தூண்டில் வீசி மீன் சிக்குமா என்று பார்க்கிறார்....ஸ்ருஷ்டிக்கு எதிராக இவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்காது...இருக்க வாய்ப்பில்லை...என்னேரமும் நிழல் போல‌ அவள் கூட இருக்கும் எனக்கு தெரியாது எதுவும் நடக்க வாய்ப்பில்லை...

“இருக்காது ஸார்....கண்டிப்பா இருக்காது...உங்களுக்கு ஸ்ருஷ்டி பத்தி தெரியலை....ஒரு சின்ன பூனைக்கு அடிப்பட்டா கூட ரொம்ப கஷ்டப்படுவா... கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டா கூட ஒரு வாரம் என்கிட்ட பேச மாட்டா..அவ போய் எப்படி சார் இந்த மாதிரி தீவிரவாதின்னு...உங்களுக்கு என்ன பிரச்சினை சார்?அவங்க அப்பா கூட காசு பிரச்சினையா இல்லை என் கூட பிரச்சினையா...என்ன ஆதாரம் சார் வச்சிருக்கீங்க....”

பிரசன்னா சூடாக குரல் உயர்த்தி பேச ஆரம்பிக்க‌ சங்கரப் பெருமாள் மதுக் கோப்பையை குறுக்காக ஆட்டினார்...பாதியாக நிறைந்திருந்த கறுப்பு மது ஆடியது....

“அவ குத்தஞ் செஞ்சான்னு நான் எப்பலே சொன்னேன்? ஆனாக்க‌....அவளை யார்னா ப்ளாக் மெயில் பண்ணலாம்ல? அவங்க அப்பனுக்கு நான் ஒரு கால் பண்ணேன்...அனானிமஸா...நிழல்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன்.... அதுக்கே அவனுக்கு வேர்த்திருச்சு....சோ! என்னவோ தப்புடே....நீ தான் கேக்கணும்..நல்ல புள்ளையா எதமா பேசிக் கேக்கணும்...அதுக்கு தான் உன்னை வர வைச்சிருக்கேன்...”

இந்த கறுப்பு மனிதனுக்குள் எத்தனை கணக்குகள்....பிரசன்னா நம்ப முடியாமல் பார்த்து விட்டு எழுந்து கொண்டான்.... “ஒக்கே ஸார்....நான் பேசறேன்.. ஸ்ருஷ்டிக்கிட்ட நான் பேசிக் கேட்கிறேன்.... மொதல்ல இப்ப அவ எங்க இருக்கா? சொன்னீங்கன்னா உடனே கிளம்ப நான் ரெடி....”

சங்கரப் பெருமாள் அவனை ஏறிட்டுப் பார்த்தார்...."பேசுலே..நமக்கு உம்ம தெரியஞ்சாகணும்..அவனுவ‌ பிளான் என்ன?யாரெல்லாம் அவனுவ நெட்வொர்க்ல இருக்கானுவ‌...முக்கியமா லோக்கல் கமாண்டர் யாரு.... ஆனாடே...நீ ஒரு போலீஸ்காரனா போற...ஸ்ருஷ்டிய கெட்டிக்க போறவனா போகலை..ஞாபகம் வச்சிக்க.....”

பிரஸன்னாவின் உடம்பு நிமிர்ந்தது... “தெரியும் ஸார்....அவ எங்க இருக்கான்னு சொல்லுங்க...இப்பவே போறேன்...”

சங்கரப் பெருமாள் தேடி எடுத்து மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டார்... “நீ எங்கயும் போக வேணாம்டே பிரசன்னா...ஒனக்க‌ பியான்ஸி பக்கத்து ரூம்ல தான் இருக்கா....”

பிரசன்னா இதை எதிர்பார்க்கவில்லை...எழுந்த நிலையில் அப்படியே நின்றான்.....என்னையும் ஸ்ருஷ்டியையும் கடத்தி ஒரே வீட்டில் அடைத்து... என்ன நடக்கிறது......என்னைக் கடத்தியது எஸ்.ஐ. ஜெயராமன்...அப்படியானால் ஸ்ருஷ்டியை யார் கடத்தியது? ஐ.ஜியா இல்லை வேறு யாராவதா?

இந்த மனிதனின் கணக்கு என்ன?இதில் எத்தனைப் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்?
சுவர் கண்டு விழிக்கும் கன்று போல பிரசன்னா ஐ.ஜி. சங்கரப் பெருமாளையே பார்த்துக் கொண்டு அசையாது நின்றான்....
தொடரும்
=================
இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்

36 comments:

நசரேயன் said...

முத துண்டு ?

வானம்பாடிகள் said...

ஆமங்ணோவ்!

கலகலப்ரியா said...

||நசரேயன் said...

முத துண்டு ?||

இந்தத் துண்டு மேட்டர விடறதா இல்லையா...?

கலகலப்ரியா said...

இந்தப் பாகத்தை நான் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்... :0)))))

முகிலன் said...

கதை விறுவிறுப்பா போவுது. தீவிரவாதிகளை மடக்கிப் பிடிக்கப்போறீங்கன்னு பாத்தா இப்பிடி வேற மாதிரி கொண்டுவந்து நிறுத்திட்டீங்களே?

எழுதினது இந்த முறை ஒரே சாய்ஸ்தான் - அது சரி.

முகிலன் said...

@கலகலப்ரியா -

நீங்க எழுதியிருக்க முடியாது. வட்டார வழக்கு உங்களுக்கு இந்த அளவுக்கு பரிச்சயமாகியிருக்காது. :))))

Sethu said...
This comment has been removed by the author.
ஆரூரன் விசுவநாதன் said...

இரண்டு நாட்களாக சாதாரண, வெகுஜன, கிரைம் தொடராக இருந்தது கொஞ்சம்மாறத்தொடங்கியிருக்கிறது.

விரு விருப்பாகச் செல்கிறது கதை....

ம்ம்ம்ம்....சீக்கிரம் தொடருங்க.....

கலகலப்ரியா said...

||ஆரூரன் விசுவநாதன் said...

இரண்டு நாட்களாக சாதாரண, வெகுஜன, கிரைம் தொடராக இருந்தது கொஞ்சம்மாறத்தொடங்கியிருக்கிறது.

விரு விருப்பாகச் செல்கிறது கதை....

ம்ம்ம்ம்....சீக்கிரம் தொடருங்க..... ||

இதுக்கு எனக்குதான் நன்றி சொல்லணும் ஆரூர்... :)...

கலகலப்ரியா said...

||முகிலன் said...

@கலகலப்ரியா -

நீங்க எழுதியிருக்க முடியாது. வட்டார வழக்கு உங்களுக்கு இந்த அளவுக்கு பரிச்சயமாகியிருக்காது. :))))||

முகிலு.. டிடெக்டிவ் வேல விட்டுட்டு வேற ரூட்ல போற மாதிரி இருக்கே... உசிரோட இருக்கற எண்ணமில்லையா... அர்ர்... அதில்லை... நான் என்ன சொன்னேன்..? சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்னுதானே சொன்னேன்... நான் எழுதினேன்னா சொன்னேன்... மக்களுக்கு டமில் புரிய வைக்கறதுக்கு எவ்ளொ கஷ்ட்ட்டம்டா சாமீ...

பிரபாகர் said...

தொடர் டாப் கியர்ல போயிட்டிருக்கு. அற்புதம். எழுதினது யாருன்னுலாம் யோசிக்காம அடுத்து என்னான்னு பரபரப்பா இருக்கு. எழுதினவங்(உங்)களுக்கு பாராட்டுக்கள்...

சத்தியமா இன்னிக்கு நான் எழுதல!

பிரபாகர்...

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே யார் எழுதினா என்ன? கதை பிரமாதம்.. ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்... தொடருகள் ..

ரிஷபன் said...

சத்தியமா இன்னிக்கு நான் எழுதல!

பிரபாகர்...

அதைத்தான் நானும் சொல்ல நினைச்சேன்..

ஈரோடு கதிர் said...

திரும்பவும் கேக்குறேன்

வடிவேலு படத்துல அல்லக்கையா வர்ற காமடி பீசு ஒரு காஞ்சு போன கருவாடு மாதிரி அந்த 8 பேர்ல என்னோட பேர் எதுக்கு!!!!???

ஈரோடு கதிர் said...
This comment has been removed by the author.
இராமசாமி கண்ணண் said...

சூப்பரா போயிட்டு இருக்குது.. கலக்கல் :) யார் எழுதினா என்ன எங்களுக்கு ஒரு ராக்கெட்டுல போற மாதிரி இருக்கு இந்த கதை படிக்கறது :)

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...

திரும்பவும் கேக்குறேன்

வடிவேலு படத்துல அல்லக்கையா வர்ற காமடி பீசு ஒரு காஞ்சு போன கருவாடு மாதிரி அந்த 8 பேர்ல என்னோட பேர் எதுக்கு!!!!??? ||

ம்க்கும்... நம்ம பேரும்தான் இருக்கு... நாம இப்பூடியா பொலம்பறோம்....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இத நாந்தான் எழுதினேன்...ஐ மீன் இந்த கமெண்ட்.. ஹி ஹி!

நசரேயன் said...

//ஈரோடு கதிர் said...
திரும்பவும் கேக்குறேன்

வடிவேலு படத்துல அல்லக்கையா வர்ற காமடி பீசு ஒரு காஞ்சு போன கருவாடு மாதிரி அந்த 8 பேர்ல என்னோட பேர் எதுக்கு!!!!???

AUGUST 5, 2010 7:33 PM//

நானும் கேட்டுகிறேன் ..கதிர் பதில் கிடைச்சா சொல்லி அனுப்புங்க, ஆட்டோ விலே வாரேன்

அது சரி said...

//
கலகலப்ரியா said...
இந்தப் பாகத்தை நான் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்... :0)))))
//

எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிறா மாதிரி, இப்பிடி சொன்னா நீங்க இல்லைன்னு நினைச்சிடுவாங்களாக்கும்?

அது சரி said...

//
முகிலன் said...
கதை விறுவிறுப்பா போவுது. தீவிரவாதிகளை மடக்கிப் பிடிக்கப்போறீங்கன்னு பாத்தா இப்பிடி வேற மாதிரி கொண்டுவந்து நிறுத்திட்டீங்களே?

எழுதினது இந்த முறை ஒரே சாய்ஸ்தான் - அது சரி.

//

நான் ரெவுடி இல்லை இல்லைன்னு சொன்னாலும் ஏய்யா இப்பிடி கதற கதற அடிச்சி ஜீப்புல ஏத்தறீங்க?

ஒங்க ஜட்ஜுமெண்டு ரொம்ப தப்பு சார்....

அது சரி said...

//

கலகலப்ரியா said...
||ஆரூரன் விசுவநாதன் said...

இரண்டு நாட்களாக சாதாரண, வெகுஜன, கிரைம் தொடராக இருந்தது கொஞ்சம்மாறத்தொடங்கியிருக்கிறது.

விரு விருப்பாகச் செல்கிறது கதை....

ம்ம்ம்ம்....சீக்கிரம் தொடருங்க..... ||

இதுக்கு எனக்குதான் நன்றி சொல்லணும் ஆரூர்... :)...

//

ஸ்ஸப்பா...ஒருத்தங்க ஒத்துக்கிட்டாங்க...மீதி ஆளுங்க யாருப்பா? வரிசையா வந்து நின்னு ஒத்துக்கோங்க...

அது சரி said...

//

பிரபாகர் said...
தொடர் டாப் கியர்ல போயிட்டிருக்கு. அற்புதம். எழுதினது யாருன்னுலாம் யோசிக்காம அடுத்து என்னான்னு பரபரப்பா இருக்கு. எழுதினவங்(உங்)களுக்கு பாராட்டுக்கள்...

சத்தியமா இன்னிக்கு நான் எழுதல!

பிரபாகர்...

//

அப்போ மொத ரெண்டுல ஏதோ ஒண்ணு உங்கது...ஒரு பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சி :))

அது சரி said...

//
ரிஷபன் said...
சத்தியமா இன்னிக்கு நான் எழுதல!

பிரபாகர்...

அதைத்தான் நானும் சொல்ல நினைச்சேன்..

//

ரெண்டாவதும் ஒருத்தர் ஒத்துக்கிட்டார்...

அது சரி said...

//

நசரேயன் said...
//ஈரோடு கதிர் said...
திரும்பவும் கேக்குறேன்

வடிவேலு படத்துல அல்லக்கையா வர்ற காமடி பீசு ஒரு காஞ்சு போன கருவாடு மாதிரி அந்த 8 பேர்ல என்னோட பேர் எதுக்கு!!!!???

AUGUST 5, 2010 7:33 PM//

நானும் கேட்டுகிறேன் ..கதிர் பதில் கிடைச்சா சொல்லி அனுப்புங்க, ஆட்டோ விலே வாரேன்

//

அண்ணே...எனக்கு சொந்தமா ஆட்டோ அனுப்ப வசதி பத்தலை...போம்போது ஒரு கொரல் கொடுங்க...நானும் தொத்திக்கிறேன்...

ஸ்ரீராம். said...

நல்ல இடத்துல தொடரும் போட்டீங்க... படு சுவாரஸ்யமா நகருது கதை...

Mahi_Granny said...

எழுதினது அது சரி . சரிதானே பாலா சார்

Mahi_Granny said...

எழுதினது அது சரி . சரிதானே பாலா சார்

காமராஜ் said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன்.
இது நடுவா முதலா தெர்ல.
ஆனாலும் ருசிக்கிறது.

'ஒரே காத்து உப்புக் காத்து'.

ஆஹா அழகு அண்ணா.
சாவகாசமாப்படிச்சிட்டு வர்றேன்.

பிரியமுடன் பிரபு said...

குண்டான பெண் உடுத்திய நீல சேலை போல.....
////

எல்லா உவமைகளும் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Bala

நாடோடி said...

க‌தை ந‌ல்லா போகுது... தொட‌ருங்க‌ள்..

கலகலப்ரியா said...

||அது சரி said...

//
கலகலப்ரியா said...
இந்தப் பாகத்தை நான் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்... :0)))))
//

எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிறா மாதிரி, இப்பிடி சொன்னா நீங்க இல்லைன்னு நினைச்சிடுவாங்களாக்கும்? ||

இதெல்லாம் டூ மச்.. அப்டின்னு மக்களுக்குத் தெரியும்ல...

கலகலப்ரியா said...

|| Mahi_Granny said...

எழுதினது அது சரி . சரிதானே பாலா சார்||

அது சரி... நான் எதுக்கு வாயைக் கொடுத்து மாட்டிக்கறேன்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This comment has been removed by the author.
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இல்ல.. இது ப்ரியா இல்ல.. முழுசும் படிச்சுப் பாத்ததுல - இத எழுதினது அதுசரி.. க்ளூவச் சொல்ல விரும்பல :))