Monday, August 9, 2010

நிழலின் ஒளி

கடந்த ஆறு நாட்களாக வெளிவந்த இரண்டாம் நிழல் நெடுங்கதை நேற்றுடன் முடிவுற்றது. தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. 

முதலில் இந்தக் கதையை எழுதியவர் யார் என்பதில் ஒரு ஆர்வத்துக்காக திரு கதிர், திரு பிரபாகர், திரு பலாபட்டரை ஷங்கர், திரு நசரேயன் ஆகியோரின் அனுமதியின்றியே அவர்கள் பெயரைச் சேர்த்ததற்கு கோபப்படாமல் இருந்தமைக்கு நன்றி. 

இது வரை யாரும் முழுதாக கண்டுபிடிக்கவில்லை. அதனால் பரிசு (அப்புடி ஒன்னு இருந்துச்சான்னு அடிக்க வராதீங்க! ஹி ஹி) கம்பெனிக்கே. 

அது சரி மற்றும் கலகலப்ரியாவின் முயற்சியில் உருவான முயற்சி இது. இனி எழுதியவர்கள்:

முகிலன், அது சரி -----------------------------முன்னுரை


வானம்பாடிகள்---------------------முதல் பாகம்

முகிலன்------------------------------இரண்டாம் பாகம்

அது சரி--------------------------------மூன்று, ஐந்து மற்றும் ஆறு

கலகலப்ரியா, அது சரி-----------நான்கு 

முதல் பாகம் என்பதால் எனக்கு எந்த அழுத்தமும் இன்றி என்னால் எழுத முடிந்தது. திரு முகிலன் அவர்கள் கொண்டு வந்த ஒரு திருப்பத்தைக் கதைக் கருவாக்கி பரபரப்பாக கொண்டு சென்றதில் அது சரியின் பங்களிப்பும், கலகலப்ரியாவின் பங்களிப்பும் மிகச் சிறப்பானது என்பதில் ஐயமில்லை. இதில் எனக்கும் ஒரு பங்களித்தமைக்கு நன்றி.

பின்னூட்டத்தில் ஆர்வமாக பங்கேற்ற எல்போர்ட், மற்றும் பிரபா பதிவர்களுக்கு ஒரு பாடம் சொல்லியிருக்கிறார்கள்.

முகிலன்: ஸ்ரீதரனின் டேபிளை கிரிக்கட் மைதானம் என வர்ணித்ததை வைத்து பிரபா இரண்டாம் பாகம் உங்களுடையது எனக் கண்டு பிடித்து விட்டார்.    

அது சரி: வார்த்தைகளுக்கு நடுவே புள்ளிகளை கணக்கு வைத்து சரியாகக் கண்டு பிடித்து விட்டார் எல்போர்ட்.

கலகலப்ரியா: புள்ளிகளையும் தமிழையும் சொன்னாலும் ப்ரியா எந்தத் தமிழும் எழுதுவார் என்பதால் புள்ளிகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். 

க்ளூவை எல்போர்ட் சொல்லிவிட்டதால், புள்ளிகளை நீக்கியபின் 5,6 பாகங்களை எழுதியவர் யார் என அவரால் சரியாக ஊகிக்க முடியவில்லை. 

இதுவரை படிக்காதவர்கள், ஒரே கோப்பாக பெற இங்கே சுட்டவும்.

ஊக்குவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி.
~~~~~~~~~

53 comments:

ரிஷபன் said...

பதிவுலகில் இது ஒரு புது முயற்சி.. நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

வானம்பாடிகள் said...

நன்றிங்க ரிஷபன்

கலகலப்ரியா said...

||
அது சரி மற்றும் கலகலப்ரியாவின் முயற்சியில் உருவான முயற்சி இது. ||

என்னைய்யா கொடுமை இது... என்னோட முயற்சி எங்க வந்திச்சு இங்க... துப்பாக்கிய தலைல வச்சு அழுத்திக்கிட்டு எழுதப்போறியா இல்லையான்னா நானும் நடுங்கிட்டே ஏதோ எழுதிக் கொடுத்தேன்... அவ்வ்வ்வ்...

முகிலன் said...

மன்னித்துக்கொள்ளுங்கள் முன்னுரைக்கு எனக்கு கிரெடிட் வழங்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கான்செப்ட் மட்டுமே என்னுடையது. மற்றபடி இரவை வர்ணித்த எழுத்துக்கள் அது சரியினுடையவை (என்னால் அப்படி எல்லாம் எழுத முடியாது)

இந்த பாகத்தை எழுதும்போது இப்படி ஒரு போட்டி இருக்கும் என்பது தெரியாததால் க்ளூ விட்டுவிட்டேன். புட் பால் என்று மாற்றியிருக்கலாம் 

வானம்பாடிகள் said...

மன்னித்துக்கொள்ளுங்கள் முன்னுரைக்கு எனக்கு கிரெடிட் வழங்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கான்செப்ட் மட்டுமே என்னுடையது. மற்றபடி இரவை வர்ணித்த எழுத்துக்கள் அது சரியினுடையவை (என்னால் அப்படி எல்லாம் எழுத முடியாது)//

:D மாத்திட்டேன்.

பிரபாகர் said...

தேர்தல் முடிவுக்குக் கூட இவ்வளவு டென்ஷனாக இருந்ததில்லை சாமி! ஆனாலும் எல்லாம் மொத்தத்தில் அழகு... எல்லாம் என் ஆசானால், அன்பு சகோதரியினால், அன்பு நண்பர்களால்.

என் ஆசான் என்னிடம் கூட(அதிலென்ன கூட... என் பெயரும் இருக்கு சாமி...) சொல்லாமல் மர்மத்தை மை வைத்தார்போல்..(ம நாவுக்கு ம...)புன்னகையையே பதிலாய் கேட்டபோதெல்லாம் செய்து இறுதியில் படித்துத்தான் தெரிந்து கொள்ளும்படி செய்ததை நினைத்து மிகவும் பெருமையாய் இருக்கிறது...(காண்டாக இருக்கிறது என நிச்சயம் உள்ளுக்குள் எண்ணம் இல்லை).

இது பற்றி மூன்று வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் ‘அருமையானதொரு முயற்சி, அழகாய்!’.....

ஸ்னேக் பிரபா....(SP) (பின்னூட்டத்தில் இதுபோல் பெயர் இட்டதில்லை... இன்று இங்கு மட்டும்...)

Riyas said...

பதிவு நல்லாருக்கு சார்..

சிநேகிதன் அக்பர் said...

ந‌ல்லதொரு முயற்சி அண்ணா

புது டெம்ப்ளேட் நல்லாயிருக்கு.

இராமசாமி கண்ணண் said...

கல்க்கல் முயற்சி..

க.பாலாசி said...

நான்கூட எல்லாத்தையும் நீங்கதான் எழுதினீங்ளோன்னு நெனச்சேன்... இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா... ரொம்ப உன்னிப்பா கவனிச்சாதான் மேற்படி எழுதினவங்கள கண்டுபிடிக்கமுடியும் போலருக்கு... நாம குடிச்ச யானைப்பாலுக்கு இவ்ளோதாங்க முடிஞ்சது....

சூர்யா ௧ண்ணன் said...

புதிய முயற்சி! வெற்றி பெற்றதற்கு குழுவிற்கு வாழ்த்துக்கள்!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அட கடவுளே, நீங்களே எழுதினதாத் தான் நான் நினைத்தேன். புதிய முயற்சி. வாழ்த்துக்கள் சார்.

நாடோடி said...

ந‌ல்ல‌ முய‌ற்ச்சி சார்... அடுத்த‌ க‌தையை ரெடி ப‌ண்ணுங்க‌..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ellaarumaa sendhu nallaa balbu koduththirukkaanga nnu mattum puriyuthu.. :)) ippo muzusa padikka mudiyala.. appuram vaaren..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பென்ச்லயே உட்காரவைத்து ஐபிஎல் ல சம்பளம் கொடுக்கறமாதிரி என்னையும் இந்த உலகம் நம்புதுன்னு புரிய வெச்ச உங்களுக்கு நன்றி!

இதுக்காகவே முகிலனோட ஒரு மெகா பட்ஜட் பண்றேன்! :)


//ஸ்னேக் பிரபா....(SP) (//

ஸ்னேக் பிரபா சார் வெச்சது.

(SP) இது நான் வெச்சது!

பிரபா கபர்தார்! :))

பிரபாகர் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பென்ச்லயே உட்காரவைத்து ஐபிஎல் ல சம்பளம் கொடுக்கறமாதிரி என்னையும் இந்த உலகம் நம்புதுன்னு புரிய வெச்ச உங்களுக்கு நன்றி!

இதுக்காகவே முகிலனோட ஒரு மெகா பட்ஜட் பண்றேன்! :)


//ஸ்னேக் பிரபா....(SP) (//

ஸ்னேக் பிரபா சார் வெச்சது.

(SP) இது நான் வெச்சது!

பிரபா கபர்தார்! :))
//
அதானாலதான் ரெண்டையும் குறிப்பிட்டிருக்கிறேன்... சிங்கை சிங்கம்ங்கறத மறந்துட்டேன்...

பிரபாகர்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையாக ஒரு குறுந்தொடரை முடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

தொடர்ந்து வாசிப்பு இருந்தால் தான் அனைவரது எழுத்து நடையையும் கண்டுபிடிக்க முடியும்.

மேலும் பலரது எழுத்துகளையும் படித்துத் தெரிந்திருந்தால் தான் இது போல தொடரை ஒருங்கிணைக்க முடியும்.

வாழ்த்துகள்.

நசரேயன் said...

முகிலன் அளவுக்கு அதிகமா சொம்பு அடிக்கும் போதே நினைத்தேன்

நசரேயன் said...

//மன்னித்துக்கொள்ளுங்கள் முன்னுரைக்கு எனக்கு கிரெடிட் வழங்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.//

டெபிட் கொடுத்தா ஏத்துக்குவீங்களோ?

நசரேயன் said...

கதை சுருக்கமுன்னு ஒரு பாகம் போடுங்கண்ணே

முகிலன் said...

//ஸ்னேக் பிரபா....(SP) (பின்னூட்டத்தில் இதுபோல் பெயர் இட்டதில்லை... இன்று இங்கு மட்டும்...)//


Prabha, ini en idugaikalil Singai Singam endru pinnoottuveerkalaa?

கலகலப்ரியா said...

||சூர்யா ௧ண்ணன் said...
புதிய முயற்சி! வெற்றி பெற்றதற்கு குழுவிற்கு வாழ்த்துக்கள்!||

ஓ... வெற்றியா... தியேட்டர் ரிஸல்ட் தெரியாமலே இருந்தேன்... நன்றி சூர்யா... :)))))

கலகலப்ரியா said...

||
பிரபாகர் said...
தேர்தல் முடிவுக்குக் கூட இவ்வளவு டென்ஷனாக இருந்ததில்லை சாமி! ஆனாலும் எல்லாம் மொத்தத்தில் அழகு... எல்லாம் என் ஆசானால், அன்பு சகோதரியினால், அன்பு நண்பர்களால்.||

நன்றிண்ணா... நன்றிண்ணா...

கலகலப்ரியா said...

||நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
அட கடவுளே, நீங்களே எழுதினதாத் தான் நான் நினைத்தேன். புதிய முயற்சி. வாழ்த்துக்கள் சார்||

கடவுளா... ம்ம்.. அவரும்தான்.. ஏற்கனவே ஒருத்தரு நான் கடவுள்ன்னு சொல்லிட்டிருக்காரு...

கே.ஆர்.பி.செந்தில் said...

ஆச்சர்யம்தான்.. இத்தொடரில் எல்லோரும் விறுவிறுப்பாக கொண்டுபோயிருப்பது பாராட்டுக்குரியது...

செ.சரவணக்குமார் said...

பணிச்சுமை காரணமாக தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இன்று ஒரே மூச்சில் மொத்தத்தையும் படித்தேன்.

மிக நல்ல முயற்சி பாலா சார்.

நண்பர் முகிலன், அதுசரி, கலகலப்ரியா அனைவருக்கும் வாழ்த்துகள்.

Mahi_Granny said...

நானெல்லாம் முன்னுரை style கூட தங்களுடையதா என சந்தேகத்துடன் படித்தேன் . இடையில் ' அது சரி' யாக இருக்கும் என்று யூகித்தேன். பின்னர் .கதைமட்டும் வாசித்து ரிசல்ட் வரட்டும் என இருந்து விட்டேன். நல்ல முயற்சி . எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்

நேசமித்ரன் said...

கூட்டு முயற்சி என்ற போதும் தொனி பிசகாமல் நடை மாறினாலும் கரு பிறழாமல் எழுதப் பெற்ற கதை

அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்

அது சரி said...

//
அது சரி: வார்த்தைகளுக்கு நடுவே புள்ளிகளை கணக்கு வைத்து சரியாகக் கண்டு பிடித்து விட்டார் எல்போர்ட்.
//

ஆஹா....பாடி சோடா...கொண்டைய மறைக்க மறந்துட்டியேடா? :))

வானம்பாடிகள் said...

அது சரி said...
//
அது சரி: வார்த்தைகளுக்கு நடுவே புள்ளிகளை கணக்கு வைத்து சரியாகக் கண்டு பிடித்து விட்டார் எல்போர்ட்.
//

ஆஹா....பாடி சோடா...கொண்டைய மறைக்க மறந்துட்டியேடா? :))//

ம்கும். சொல்லிண்டே இதுலையும் இவ்ளோ புள்ளி:))

அது சரி said...

//

இது வரை யாரும் முழுதாக கண்டுபிடிக்கவில்லை. அதனால் பரிசு (அப்புடி ஒன்னு இருந்துச்சான்னு அடிக்க வராதீங்க! ஹி ஹி) கம்பெனிக்கே.
//

சார்...இது சரியில்லை. எல் போர்ட் சீரியஸா ஒரு பார்ட் கரெக்டா சொன்னாங்க. அதே மாதிரி மஹி க்ரான்னியும் ஒரு பார்ட் கரெக்டா சொல்லிருக்காங்க.

நூறு ரூவாய ஆறா பிரிச்சா ஒரு பார்ட்டுக்கு 15 ரூபாய் வரும். இவங்க ரெண்டு பேருக்கும் 15 ரூவா கொடுங்க. அதே மாதிரி அஞ்சி பார்ட் தப்பா சொன்னதுக்கு எழுவத்திஞ்சி ரூவா அய்யா அன் கோ அக்கவுண்ட்ல கட்ட சொல்லிருங்க. கணக்கு சரியாருக்கணும் பாருங்க.

அது சரி said...

நான் எழுதலை நான் எழுதலைன்னு சொல்லி என்னை மட்டும் பப்ளிக் தனியா கும்முறதுக்கா? எல்லா பார்ட்லயும் எல்லோரோட பங்களிப்பும் இருக்கு. அது தான் உண்மை.

எழுத வாய்ப்பளித்த நண்பர்களுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்தவர்களுக்கும் மிக்க நன்றி.

அது சரி said...

//
Mahi_Granny said...
நானெல்லாம் முன்னுரை style கூட தங்களுடையதா என சந்தேகத்துடன் படித்தேன் . இடையில் ' அது சரி' யாக இருக்கும் என்று யூகித்தேன். பின்னர் .கதைமட்டும் வாசித்து ரிசல்ட் வரட்டும் என இருந்து விட்டேன். நல்ல முயற்சி . எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்

//

நீங்க கெஸ் பண்ணது சரி தான் மஹி :))

பனங்காட்டு நரி said...

Great Great

Karthick Chidambaram said...

நல்ல முயற்சி. அப்புறம் - உங்க template ரசனையா இருக்கு .

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொருத்தர் எழுதியிருப்பாங்கன்னு முன்முடிவோட படிச்சதால ஆறுக்கு மூணு மார்க் தான் கிடைச்சது.. :))

முகிலன் எழுதினதயும் கெஸ் பண்ணிட்டேன்.. க்ரிக்கெட் பத்தி தெரியல.. ஆனா, வர்ணனைல நிறைய வாக்கியங்கள் பாசிவ் வாய்ஸ் ல முடிஞ்சது - வானம் வெளுத்திருந்தது, கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.. அவரோட த்ரில்லர் கதைகள் கொஞ்சம் படிச்சதுல யூகிச்சேன்..

ப்ரியாவோடது - ரொம்பவே ஈசி :)) //ப்ரியா எந்தத் தமிழும் எழுதுவார்// சரி தான், ஆனா அவங்களோட தமிழ்ல மத்தவங்களால எழுத முடியுமா? :)

ஆனா, தென் தமிழகத்து மொழி நடைல இருந்ததெல்லாம் ஒருத்தர் தான் எழுதியிருப்பார், இல்ல மத்தவங்க எழுதினதை திருத்தியிருப்பார்ன்னு நினைச்சேன்.. ஏன்னா - மத்தவங்க எல்லாரும் வேற வேற பகுதிகளச் சேர்ந்தவங்க.. அந்தளவுக்கு வந்திருக்குமான்னு தெரியல..

//புள்ளிகளை நீக்கியபின் 5,6 பாகங்களை எழுதியவர் யார் என அவரால் சரியாக ஊகிக்க முடியவில்லை//

இப்பிடி கூட சதி பண்ண முடியுமா என்ன? :))

பாகம் அஞ்சுல நாலஞ்சு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தது கூட சதி தானா? :))

எனக்கு என்னமோ கதைய விட, யாரு எழுதினாங்கன்னு கெஸ் பண்ணுனது தான் த்ரில்லிங்கா இருந்தது.. :)) இத்தன பேரு எழுதியும் கதை நல்லா சீரா போச்சு.. ஆனா ரொம்ப விறுவிறுப்பா இருந்ததுன்னு சொல்ல முடியல..

இன்னிக்கு முடிவு தெரிஞ்சவுடனே பரிட்சைல ஜஸ்ட் பாஸ் ஆன ரிலீஃப் :)) பரிட்சையும் நல்லாயிருந்தது.. வாழ்த்துக்கள் வானம்பாடிகள் சார்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//நூறு ரூவாய ஆறா பிரிச்சா ஒரு பார்ட்டுக்கு 15 ரூபாய் வரும். இவங்க ரெண்டு பேருக்கும் 15 ரூவா கொடுங்க. அதே மாதிரி அஞ்சி பார்ட் தப்பா சொன்னதுக்கு எழுவத்திஞ்சி ரூவா அய்யா அன் கோ அக்கவுண்ட்ல கட்ட சொல்லிருங்க. கணக்கு சரியாருக்கணும் பாருங்க//

உங்க கம்பெனி நல்லாவே பொழச்சுக்கும் போங்க..

நாய்க்குட்டி மனசு said...

பதிவுலகில் புது புது உத்திகளை நுழைக்கும் வானம்பாடி அவர்கள் வாழ்க! வாழ்க!

பிரபாகர் said...

//நாய்க்குட்டி மனசு said...
பதிவுலகில் புது புது உத்திகளை நுழைக்கும் வானம்பாடி அவர்கள் வாழ்க! வாழ்க!
//

நல்ல மனசுங்க!

பிரபாகர்...

முகிலன் said...

எல் போர்ட்..

//வானம் வெளுத்திருந்தது//

இது பேசிவ் வாய்ஸ்னு நீங்க சொல்லிதான் தெரிஞ்சிக்கிட்டேன்.. ;))

ஆனா இந்த ரெண்டு வரியையும் என்னோட பார்ட்ல நான் எழுதவே இல்லையே.. மேலும் நீங்க சொன்னதுக்காகவே நான் அந்த பாகத்தை இப்போ திருப்பிப் படிச்சிப் பாத்தேன். ஒரு வரி கூட பேஸிவ் வாய்ஸ்ல எழுதலையே?


அப்புறம், முன்னுரையில சங்கரப் பெருமாள் பேசியதா வர்ற ரெண்டு வசனமுமே நான் எழுதினதுதான். :))))

பிரபாகர் said...

//முகிலன் said...
எல் போர்ட்..

//வானம் வெளுத்திருந்தது//

இது பேசிவ் வாய்ஸ்னு நீங்க சொல்லிதான் தெரிஞ்சிக்கிட்டேன்.. ;))

ஆனா இந்த ரெண்டு வரியையும் என்னோட பார்ட்ல நான் எழுதவே இல்லையே.. மேலும் நீங்க சொன்னதுக்காகவே நான் அந்த பாகத்தை இப்போ திருப்பிப் படிச்சிப் பாத்தேன். ஒரு வரி கூட பேஸிவ் வாய்ஸ்ல எழுதலையே?


அப்புறம், முன்னுரையில சங்கரப் பெருமாள் பேசியதா வர்ற ரெண்டு வசனமுமே நான் எழுதினதுதான். :))))
//

கூடவே இருந்துகிட்டு எதுவும் சொல்லாதது சினேகத்துரோகம்...

உங்க பார்ட்-மட்டுமல்ல, எல்லாம் சேர்ந்து அழகாவே முழுசா செஞ்சிருக்கீங்க!

ஒரு சின்ன வேண்டுகோள், விளையாட்டினை மட்டும் வைத்து ஒரு சிறுகதை...வழக்கம்போல் கிரிக்கெட் தான் வேண்டும். போன தொடரில் அதுபோல் தானே ஆரம்பித்தீர்கள்?

பிரபாகர்...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சங்கரப் பெருமாள்//

இந்தப் பேரப் பார்த்ததுமே நான் தசாவதாரம் 2வது பார்டோன்னு டவுட் பட்டேன். :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அதாவது, வானத்த வெளுத்தார்கள் என்பது ஆக்டிவ் வாய்ஸ்.. வானம் வெளுத்திருந்தது என்பது பாசிவ் வாய்ஸ் அப்பிடின்னு சொல்ல வந்தேன்.. :))) ஒரு பேச்சுக்கு உதாரணத்துக்குன்னு சிம்பிளா ஒரு வாக்கியத்தச் சொன்னேன்.. தமிழ்ல இப்பிடி வர்றது ஆங்கிலத்துல வர்ற பாசிவ் வாய்ஸ் க்கு அப்படியே பொருந்துமான்னு தெரியல..

//மீன்களைக் கொட்டும் பெரிய பெரிய பெட்டிகள் அவர்களுக்கு முன்னால் திறந்து இருந்தன. மீன்களுக்குப் பதில் 8 கலாஷ்னிக்காவ்கள் அந்தப் பெட்டிகளை நிரப்பி இருந்தன. இன்னொரு பெட்டியில் அம்மோ க்ளிப் க்ளிப்பாகக் குவிக்கப்பட்டிருந்தன.//

இந்த மாதிரியான அஃறினை ல ஆரம்பிச்சு “இருந்தன” அப்படின்னு முடிக்கப்பட்ட வாக்கிய அமைப்பைத் தான் பாசிவ்ன்னு சொல்ல வந்தேன்.. எனக்கு இதுக்கான தமிழ்ப் பெயர் தெரியல :((

என்னோட யூகத்துக்கான காரணம் இது மட்டுந்தானான்னு சொல்லத் தெரியல.. ஆனா, கீழ போட்டிருந்த பேர்களோட மேட்ச் பண்ணிப் பார்க்கும் போது நீங்களாயிருக்கும்ன்னு உள்ள ஒரு பட்சி சொல்லுச்சு..

அப்படியா? அந்தத் தமிழ் எனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.. ம்ம்..

சே.குமார் said...

பதிவுலகில் இது ஒரு புது முயற்சி.. நல்வாழ்த்துகள்.

வானம்பாடிகள் said...

$$நன்றிங்க ரிஷபன்
$$நன்றி பிரபா
$$நன்றி ரியாஸ்
$$நன்றிங்க அக்பர்
$$நன்றிங்க இராமசாமி கண்ணன்
$$நன்றி பாலாசி
$$நன்றி சூர்யா
$$நன்றிங்க நித்திலம்
$$நன்றிங்க நாடோடி
$$நன்றிங்க சந்தனா

வானம்பாடிகள் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//பென்ச்லயே உட்காரவைத்து ஐபிஎல் ல சம்பளம் கொடுக்கறமாதிரி என்னையும் இந்த உலகம் நம்புதுன்னு புரிய வெச்ச உங்களுக்கு நன்றி!

இதுக்காகவே முகிலனோட ஒரு மெகா பட்ஜட் பண்றேன்! :)//

அப்ப நாந்தான் மேனேஜர்:))


//ஸ்னேக் பிரபா....(SP) (//

ஸ்னேக் பிரபா சார் வெச்சது.

(SP) இது நான் வெச்சது!

பிரபா கபர்தார்! :))

அஹா! எந்திரன் ஆடியோ ரிலீஸ் பார்த்த எஃபக்டா?

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||
அது சரி மற்றும் கலகலப்ரியாவின் முயற்சியில் உருவான முயற்சி இது. ||

என்னைய்யா கொடுமை இது... என்னோட முயற்சி எங்க வந்திச்சு இங்க... துப்பாக்கிய தலைல வச்சு அழுத்திக்கிட்டு எழுதப்போறியா இல்லையான்னா நானும் நடுங்கிட்டே ஏதோ எழுதிக் கொடுத்தேன்... அவ்வ்வ்வ்...//

அதான் அவ்ளோ ரியலிஸ்டிக்கா எழுத முடிஞ்சிருக்கு:))

வானம்பாடிகள் said...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
அருமையாக ஒரு குறுந்தொடரை முடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

தொடர்ந்து வாசிப்பு இருந்தால் தான் அனைவரது எழுத்து நடையையும் கண்டுபிடிக்க முடியும்.

மேலும் பலரது எழுத்துகளையும் படித்துத் தெரிந்திருந்தால் தான் இது போல தொடரை ஒருங்கிணைக்க முடியும்.

வாழ்த்துகள்.//

நன்றிங்க செந்தில்

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

/கதை சுருக்கமுன்னு ஒரு பாகம் போடுங்கண்ணே//

இந்த லொள்ளுதானே:))

வானம்பாடிகள் said...

$$நன்றிங்க செந்தில் சார்
$$நன்றி சரவணா
$$நன்றிங்க மஹி க்ரான்னி

வானம்பாடிகள் said...

நேசமித்ரன் said...
கூட்டு முயற்சி என்ற போதும் தொனி பிசகாமல் நடை மாறினாலும் கரு பிறழாமல் எழுதப் பெற்ற கதை

அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்//

ரொம்ப நன்றி நேசமித்திரன்

வானம்பாடிகள் said...

அது சரி said...

//ஆஹா....பாடி சோடா...கொண்டைய மறைக்க மறந்துட்டியேடா? :))//

=))))).

/நூறு ரூவாய ஆறா பிரிச்சா ஒரு பார்ட்டுக்கு 15 ரூபாய் வரும். இவங்க ரெண்டு பேருக்கும் 15 ரூவா கொடுங்க. அதே மாதிரி அஞ்சி பார்ட் தப்பா சொன்னதுக்கு எழுவத்திஞ்சி ரூவா அய்யா அன் கோ அக்கவுண்ட்ல கட்ட சொல்லிருங்க. கணக்கு சரியாருக்கணும் பாருங்க.
//

பின்னாடியே சந்தனா 3 கேள்வின்னு கணக்கு சொல்லிண்டு வராங்க ராசா:))

வானம்பாடிகள் said...

$$நன்றிங்க பனம்ஸ்
$$நன்றிங்க கார்த்திக் சிதம்பரம்