Saturday, August 21, 2010

எந்திரனும் ஏழையும் உச்சாணிக் கொம்புக் கிழபோல்டும்...


ஐயா! கூவிக்கூவிச் சொல்லியாகிவிட்டது. நான் புர்ச்சி எழுத்தாளனில்லை. மொக்கைப் பதிவர். பல வல்லுனர்களும் கூட சர்டிஃபிகேட் கொடுத்தாகிவிட்டது. கூகிளோ தமிழ்மணமோ நீ கிழபோல்டு. அதனால் பதிவு போடக்கூடாது எனச் சொல்லவும் இல்லை. அப்படிச் சொல்வதால் எனக்கு எந்த நட்டமும் இல்லை. பின் ஏன் இதை எழுதுகிறேன்? பொதுப் பிரச்சனைக்கு புர்ச்சி செய்யாதவன், காலை மிதித்தால் ஒதுங்கிப் போகலாம். தேடி வந்து மிதித்தால் ஏன் என்று கேட்கலாம். முகமூடியை விட்டு மிதித்தால் புர்ச்சி செய்யாமல் இருக்க முடியாது.

ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார் ஒருவர். (அதென்ன ஒருவர் என்கிறீர்களா? ஆள் மாறாட்டத்தில் காலை மிதித்த எழவை வேறெப்படி சொல்வது? அல்லது ஆத்திரம் அறிவை மறைத்ததோ தெரியவில்லை) பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. காசு கொடுக்காமல் போய்விட முடியுமா? கொடுத்துவிட்டு போனார். உப்புசமாக இருக்கிறதே என்று ஒரு டீக்கடையில் டீக்குடித்தார். நன்றாக இருந்தது. நல்லாயிருக்கு என்று சொல்வது தப்பா? சொல்லிவிட்டு காசு பார்த்தால் எட்டணா கம்மி. இருந்த காசைக் கொடுத்துவிட்டு வருவது தப்பா? 

கொடுமை என்னவென்றால் பிரியாணிக் கடைக்காரர் அதே டீக்கடையில் பஜ்ஜியும் டீயும் சாப்பிட்டு காசும் கொடுத்துவிட்டு, நன்றாயில்லை என்றும் திட்டிவிட்டு, என் கடையில் பிரியாணியும் சாப்பிட்டு, காசும் கொடுத்த நீ அவன் கடையிலும் டீ குடித்துவிட்டு, காசும் கொடுத்துவிட்டு நன்றாயிருக்கிறது என்று சொல்கிறாயே, இது என்ன புத்தி என்று கேட்டிருந்தால் உன் கடையில் பிரியாணி இருக்க இங்கு வந்து பஜ்ஜி தின்று, டீ குடித்து, திட்டிவிட்டும் வருகிறாயே! அதைவிட நல்ல புத்திதான் என்று சொல்லி இருக்கலாம். பிரியாணி சாப்பிட்டால் டீ குடிக்கக் கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா ஐயா?

இன்று முகமூடி மூலமாக கிழபோல்டு மொக்கைச்சாமியை இடித்துத் தள்ளிவிட்டு மகுடத்தைப் பிடிப்பேன் என்று பின்னூட்டம் விடுகிறார். மகுடம் போய்விட்டால் அடுத்த வேளைச் சோற்றுக்கு என்ன செய்வேன். அடையாறில் வாங்கிய பங்களாவுக்குத் தவணை எப்படிக் கட்டுவேன். இதற்கா பாடுபட்டு சுயமாக மொக்கை எழுதுகிறேன்? புர்ச்சிக் கையேடு வேறு படித்துத் தொலைத்துவிட்டேன். எந்திரனுக்கும் ரஜனிக்கும் ஆதரவாக எழுதியதைப் படித்தும் ஆகிவிட்டது. ஆக எந்திரனையும் சன் பிக்சர்சையும் எதிர்க்கிறார்கள் ஆதரிக்கிறார்களே தவிர ஏழைக்காக யாரும் புர்ச்சி செய்வதாய்க் காணோம்.

மொக்கை எழுத்தாளன் என்ற அவச்சொல் நீங்கவும், புர்ச்சி எழுத்தாளன் என்று பெயர் வாங்கவும் பீட்ரூட் போடாமலே புர்ச்சி செய்யப் போகிறேன். என் புர்ச்சி கோஷங்களுக்கு பதில் சொல்லட்டும். இப்போது ஏழையைப் பற்றி எழுதாவிட்டால், நாளை எழுத்தாளர் ஆகிவிட்டால் மேட்டுக் குடி எழுத்தாளர் என்று முத்திரை குத்திவிடலாம். இப்போதே என்னை முகிலன் நடுத்தர வர்க்கத்து சிந்தனையாளன் என்று சொல்லிவிட்டார்.

எந்திரன் ரிலீஸ் ஆன பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து யாரும் சிந்திப்பதாய்த் தெரியவில்லை. ஏழை ரசிகன் பாலபிஷேகம் செய்வான், அதனால் பசி போய் விடுமா என்றெல்லாம் கேட்கிறார்கள். இது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய சினிமாக் கலாச்சாரம். சிவாஜிக்கு, எம்.ஜி.ஆருக்கு ஏன் டி. ஆர். ராமசாமிக்குக் கூட இதெல்லாம் நடந்திருக்கிறது. கலாச்சாரத்தை கட்டிக் காப்பது தமிழன் கடமையல்லவா? அதன் பிறகு இத்தனை நடிகர்கள் வந்தும் எல்லாருக்கும் பாலாபிஷேகம் செய்ததால் ஏழை பசியில் அடியோடு அழிந்தா போய்விட்டான்?

இருந்த புர்ச்சியாளர்கள் மீண்டும் பிறந்தாலும் சரி, அல்லது புது புர்ச்சியாளர் தோன்றினாலும் சரி, ஏழைத் தொண்டன் 24ம் வட்டத்தின் சார்பாக துண்டு போடாமல் இருப்பானா? புர்ச்சிக்கு சந்தாவோ, நிதியோ தராமல் இருப்பானா? நீ ஏழை! துண்டு போட்டால், நிதி கொடுத்தால் உன் ஏழ்மை போய்விடுமா என்று கேட்பார்களா? இது சரி எனும்போது பாலபிஷேகம் செய்வது அவன் விருப்பமல்லவா? அதை எதிர்க்க நாம் யார்?

எந்திரனால் ஏழைக்கு என்ன பயன் என்று கேட்கிறார்கள். படம் பிடித்திருந்தால் அந்த இரண்டரை மணி நேரம் அவன் கவலை மறந்து இருக்கிறான். தண்டமானால் இதை விட என் கவலை எவ்வளவோ தேவலை என்று மன அமைதி அடைந்துவிட்டுப் போகிறான். அவன் கவலையோடே இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் ஆசைப் படுகிறார்கள்.

படம் ஹிட் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்? ரஜனி இன்னும் பெரிய சக்தி என்பது நிரூபணமாகிவிடும். தேர்தல் வேறு வரப்போகிறது. தனிக்கட்சி தொடங்க வேண்டும் தலைவா என்று ஏழை ரசிகன் டீக்குடிப்பான். கலைஞர் அழைத்து இது வரை மேடையில் ஜல்லியடித்தது போதும். இப்போது சொல். குஷ்புவுக்கு ஜோடியாக சை, சினிமா புத்தி போகமாட்டேன் என்கிறது. குஷ்பு போல் கட்சியில் இணைந்துவிடு. ஸ்டாலினுக்கு ஈடாக, அழகிரிக்குக் கூட தராத இணை முதல் அமைச்சர் பதவி தருகிறேன் என்பார். ரஜனிக்கு எவ்வளவு பெரிய சங்கடம்? ஏழை ரசிகர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஜெ. கர்நாடக ஆணிவேரைச் சுட்டிக் காட்டி, நீவு நாவு ஒப்பரே என்று அழைப்பு விடலாம். கேஸ் முடிந்தவுடன் நீங்கள்தான் தலைவர். இங்கு வாரிசுச் சண்டையில்லை என ஆசை காட்டலாம். மருத்துவர் ஐயா எந்த யோசனையும் இன்றி ரஜனிக்கு ஆதரவு என்று சொல்லிவிடுவார். அன்புமணிக்கு துணைப் பிரதமர் போஸ்ட் கொடுத்தால் போதும். சில்லரைக் கட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரஜனி என்ற சுனாமியை எதிர்த்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என்று தெரியும்.

இவற்றில் எது நடந்தாலும் பாதிக்கப் படப்போவது ஏழை ரசிகன் மட்டுமே. இனி எப்படி அவனால் ரஜனி படம் பார்க்க முடியும். பாலபிஷேகம் செய்ய எங்கே போவான். ஒரு கலாச்சாரத்தையே அடியோடு தொலைக்கும் அவலம் அல்லவா நடந்துவிடும். ஒரு வேளை ரஜனி அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்வாரேயானாலும் பாதிப்பு ஏழைத் தமிழனுக்கே. அதன் பிறகு எந்தப் படத்திலும் ரஜனி நடிக்க முடியாது. காரணம் சன் பிக்சர்ஸ் மட்டுமே தமிழ்த் திரைப்படம் தயாரிக்க முடியும் என்ற சூழலில் கட்சியில் சேர மறுத்த ரஜனி போன்ற பெரிய நடிகர்களுக்கு வாய்ப்பு ஏது?

இந்தத் தொல்லையே வேண்டாம் என்று இமயமலைக்கு ஓய்வெடுக்கச் செல்லலாம் என்றால், குளிர்காலம் வந்துவிடும். அவர் நினைத்தால் ஸ்விட்ஜர்லாந்து போய் அனுபவிக்க முடியாதா? இமய மலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலா இருக்கிறது? இல்லை குகைக்குள் ஹெலிகாப்டரில் போய் இறங்குகிறாரா? உங்களிடம் 10 ரூபாய் இருந்தால் எனக்கு ஐந்து ரூபாய் என்று பங்கு போட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு டீ குடிக்க காசு இல்லை என்றால், என்னிடம் குவார்ட்டர் அடிக்க காசிருந்தாலும், நானும் கம்மென்றிருப்பது கஷ்டத்தைப் பங்கு போடுவது இல்லையா?

ரஜனி ஏழைக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்குத் தெரியாதா? படம் தோல்வியடைந்தால் வினியோகஸ்தர்கள் ஏழையாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு பணம் திருப்பித் தரவில்லையா? ஏழை டெய்லர் என்ன செய்தான்? அவன் பிழைப்புக்கு வழி என்ன? ஏழைக்குக் கவலைப்படும் யாராவது இதை யோசித்தார்களா? 

ரூ 500க்கு குறையாத ரெடிமேட் சட்டையும், அமெரிக்க கம்பெனி ஜீன்சும் போட்டுக் கொண்டு ஏழை, அமெரிக்க அடிவருடி என்றெல்லாம் அமெரிக்க கூகிள் பிச்சை போட்ட வலைப்பூவில் இடுகை எழுதி ஏழை என்ன செய்வான் என்று கத்தினால் புர்ச்சியா?

அட 15ரூபாய்க்கு செல்ஃபோனில் எந்திரன் பாட்டு ரிகார்ட் செய்து கொண்டு (நல்ல காலம் ஏழை எதற்கு செல்ஃபோன் வைத்திருக்க வேண்டும் என்று இன்னும் கவலைப் படவில்லை) ராவுக்கு சோறோ சரக்கோ இல்லை என கவலைப்படாமல், பாட்டுகேட்டுக் கொண்டே தூங்கக் கூடாதா?

ஒன்று மட்டும் நிச்சயம். அது 150 கோடி தயாரிப்பு படமோ, ரஜனியோ, சூர மொக்கை எழுதி பரிந்துரையும், மகுடமும், பின்னூட்டமும் பெறும் கிழபோல்ட் பதிவனோ எனக்குக் கட்ட கோவணமில்லை உனக்கு சட்டை என்னடா கேடு என்று மறைமுகமாகவாவது அடுத்தவனைச் சீண்டுவதற்குப் பெயர் சமுதாயச் சிந்தனைப் புர்ச்சி.

இனிமேல் யாரும் என்னை மொக்கை எழுத்தாளன் என்று சொல்ல முடியாது. பாவம்! எனக்குத் தெரிந்த அளவில் ஏழைக்கு ஆதரவாய் புர்ச்சி இடுகை எழுதிவிட்டேன். ஏற்கனவே பரிந்துரையையும் தாண்டி மகுடம் என்று திட்டிவிட்டதால் அதற்காக இந்தப் புர்ச்சி இடுகை என்றும் சொல்ல முடியாது. இந்த இடுகை மகுடத்துக்குப் போனால் கிடைக்கும் லாபத்தை ரஜனிக்கு பாலாபிஷேகம் செய்ய விரும்பும் ஏழைக்குக் கொடுப்பதாய் உத்தேசம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

80 comments:

இராமசாமி கண்ணண் said...

புர்ச்சின்னா எந்தா ஸாரே...

இராமசாமி கண்ணண் said...

அது எவ்விட கிட்டும் :)

க.பாலாசி said...

அந்தப்பயலுக்கே முகமுடியில்லாம அத சொல்றதுக்கு தைரியமில்ல... ஒரு கோழையை குத்த உங்க நேரத்த செலவுப்பண்ணணுமான்னுதான் எனக்கு தோணுது...

வானம்பாடிகள் said...

இராமசாமி கண்ணண் said...

// புர்ச்சின்னா எந்தா ஸாரே...

அது எவ்விட கிட்டும் :)//

அது கிட்டுன்ன பதார்த்தமல்ல. ஸ்வயமாயிட்டு உண்டாக்கணம். ஏதும் கிட்டில்லங்கில் ச்சொறியாம்.

இராமசாமி கண்ணண் said...

இராமசாமி கண்ணண் said...

// புர்ச்சின்னா எந்தா ஸாரே...

அது எவ்விட கிட்டும் :)//

அது கிட்டுன்ன பதார்த்தமல்ல. ஸ்வயமாயிட்டு உண்டாக்கணம். ஏதும் கிட்டில்லங்கில் ச்சொறியாம்.
---
நன்னி ஸாரே.. இனி நான் நோக்கி கொள்ளாம் :)

நாஞ்சில் பிரதாப் said...

அய்யா...நீங்களுமா...??? :))

அய்யோ.. எந்திரன் பதிவர்கள் எல்லாரையும் புரட்சியாளராக ஆக்காம போகாதுன்னு நினைக்கிறேன்....

இப்படியே ஆளாளுக்கு முகமுடி போட்டு எழுதுனா...நாடுதாங்குமா...என்டே குருவாயுரப்பா...

நாஞ்சில் பிரதாப் said...

ராமசாமி...இங்கயும் முதல்லயா...???

புர்ச்சின்னா அன்டா புரச்சிமாதிரி ஒருவகையான புர்ச்சி...பஞ்சாபி தாபாவுல கிடைக்கம் ஓபாபா ஊர்ல அதெல்லர்ம் கிடைக்காது...

நசரேயன் said...

//ரூ 500க்கு குறையாத ரெடிமேட் சட்டையும், அமெரிக்க கம்பெனி ஜீன்சும் போட்டுக் கொண்டு ஏழை, அமெரிக்க அடிவருடி என்றெல்லாம் அமெரிக்க கூகிள் பிச்சை போட்ட வலைப்பூவில் இடுகை எழுதி ஏழை என்ன செய்வான் என்று கத்தினால் புர்ச்சியா?//

நியாயமான கேள்வி

இராமசாமி கண்ணண் said...

ராமசாமி...இங்கயும் முதல்லயா...???

புர்ச்சின்னா அன்டா புரச்சிமாதிரி ஒருவகையான புர்ச்சி...பஞ்சாபி தாபாவுல கிடைக்கம் ஓபாபா ஊர்ல அதெல்லர்ம் கிடைக்காது...
--
ஏய் எந்தா இ ஆளு பறஞ்சின்னு.. நினிக்கு ஒன்னும் கிட்டில்லா :)

அகல்விளக்கு said...

அட......

நீங்க எப்ப புர்ச்சிப் புயலானீங்க....

இரும்புத்திரை said...

புரட்சி என்று சொன்னதால் தான் அவர்களுக்கு கோபம் போல.புர்ச்சி என்று தான் வேண்டுமா. அய்யோ எனக்கு பசிக்குதே நான் போய் முட்டை புர்ஜி சாப்பிட்டு விட்டு வருகிறேன்.அதுவரை புர்ச்சியைப் பாஸில் வைக்கிறேன்.

நசரேயன் said...

//யாரும் என்னை மொக்கை எழுத்தாளன்
என்று சொல்ல முடியாது.//

புரட்சி எழுத்தாளன்

நசரேயன் said...

//பிரியாணி சாப்பிட்டால் டீ குடிக்கக் கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா ஐயா?//

குவட்டரே குடிக்கலாம்

நசரேயன் said...

//முகமூடி மூலமாக கிழபோல்டு மொக்கைச்சாமியை இடித்துத் தள்ளிவிட்டு மகுடத்தைப் பிடிப்பேன்
என்று பின்னூட்டம் விடுகிறார்//

யாரு ? யாரு ?

நாஞ்சில் பிரதாப் said...

//ஏய் எந்தா இ ஆளு பறஞ்சின்னு.. நினிக்கு ஒன்னும் கிட்டில்லா :)
//
கடவுளே மிஸ்டர்.ராமசாமி...பதிவுக்கு சம்பந்தமில்லாமல் மலையாளப்புரட்சியில் ஈடுபடுவதால் நீங்கள் ஆட்ட்த்தில் இருந்தில் விலக்ப்படுகிறீர்கள்...அங்...

நாஞ்சில் பிரதாப் said...

//நன்னி ஸாரே.. இனி நான் நோக்கி கொள்ளாம் :)//

மிஸ்டர் ராமசாமி... உங்களை அம்சாவியிடம் சில்மிஷம் செய்த குற்றத்துக்கு கைது செய்ய ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிரா ஒரு புரட்சி நடத்தலாம்னு இருக்கேன்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அட.. நீங்கதான் அந்த கிழ போல்டா..? அவ்ளோ வயசா ஸார் ஆயிருச்சு உங்களுக்கு..?

முகிலன் said...

நீங்க டீக்கடைக்காரனுக்கு அம்பது பைசா குடுக்கலைன்னாலும் அவன் குடுக்க நினைச்சா கூட இன்ட்லி விட மாட்டேங்குது

Jey said...

பாலாண்ணா ஏமி அய்ந்தி, எவருன்னு செப்பண்டி...ஏமி அர்த்தங்காட்லேது..., ஏதைனா மாட்லாடி தீர்ஸுகுட்டோம்...

Jey said...

அண்ணே நமக்கு இந்த புர்ச்சி வேணாம்ணே...அதுக்குனு கொல்லப்பேரு இருக்காங்க..., பாவம் அப்ப்றம் அவங்களுக்கு பதிவெழுத மேட்டர் கிடக்காது...நீங்க எப்பவும் போல எழுதுங்க வந்து படிக்கிறோம்...

dheva said...

என்னாச்சுன்னா?...பாலாசி கருத்துல இருந்து...ஏதோ அனானியோட வேலைன்னு புரியுதுன்னா....

எது எப்படி இருந்தாலும் எங்களீண் அபிமான படைப்பாளீ நீங்கள்!

ஜோதிஜி said...

ஏதோ ஒன்று பக்கவாட்டில் நடந்துள்ளது. எவர் எது என்று புரியவில்லை. ஆனால் இப்போது உள்ள இடுகை வடிவமைப்பில் உங்கள் எழுத்து நடை கோர்வையாக ஒரே மூச்சில் படிக்க உதவியது. ஒரு வரியைக்கூட தாண்டி வர முடியாத நடை.

பழமைபேசி said...

நேர விரயம்

Subankan said...

விடுமுறையில் ஊரிலிருந்து இந்தக்கூத்துகள் எல்லாத்தையும் பாத்து, சரிச்சுச் சிரிச்சிருக்கேன் சார். ஒரே ஒரு சின்னக் கவலை, எந்திரன் முதற்காட்சியை நல்ல தியேட்டரில் மிஸ் செய்யப்போகிறேன் :(
- ஏழை ரசிகன்

அஹமது இர்ஷாத் said...

என்ன சார் எப்பவும்போல லூஸ்ல விடுங்க. நல்ல வேலை எந்திரன் ரிலீசுக்கு நான் ஊரில் இருக்க மாட்டேன்.

செ.சரவணக்குமார் said...

என்ன சார் நடக்குது இங்க, ஒண்ணுமே புரியல.

பிரியமுடன் பிரபு said...

என்னமோ நடந்திருக்கு
ம்ம்ம்ம்ம்ம்ம்..........

கலகலப்ரியா said...

||இன்று முகமூடி மூலமாக கிழபோல்டு மொக்கைச்சாமியை இடித்துத் தள்ளிவிட்டு மகுடத்தைப் பிடிப்பேன் என்று பின்னூட்டம் விடுகிறார்||

???????... எவரு இந்த யூத்து..???

எனக்குதான் ஒரு எழவு நியூஸும் தெரியலையா...

பனங்காட்டு நரி said...

சார் ....,நீங்க இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீங்க ....,

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////அட 15ரூபாய்க்கு செல்ஃபோனில் எந்திரன் பாட்டு ரிகார்ட் செய்து கொண்டு (நல்ல காலம் ஏழை எதற்கு செல்ஃபோன் வைத்திருக்க வேண்டும் என்று இன்னும் கவலைப் படவில்லை) ராவுக்கு சோறோ சரக்கோ இல்லை என கவலைப்படாமல், பாட்டுகேட்டுக் கொண்டே தூங்கக் கூடாதா? ////


இந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அய்யா .
ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது . யாரோ முகவரி இல்லாதவன் உரசியதில் பற்றிக்கொண்ட தீ பொறிதான் இந்த பதிவு என்று .

நட்புடன் ஜமால் said...

பெரும் புர்ச்சியா இருக்கே மேட்டர் தான் விளங்கயில்லை ஸாரே

சிநேகிதன் அக்பர் said...

பாலாண்ணா உங்கள் வழக்கமான இடுகைகளை எதிர்பார்க்கிறோம்.

ரிஷபன் said...

வாழ்க புர்ச்சி!

யூர்கன் க்ருகியர் said...

என்னமோ நடந்திருக்கு அதான் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது

வெறும்பய said...

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது....

ஒரே ஒரு கவலை தான்.... இந்த பதிவும் தொடரா மறாதில்ல...

தியாவின் பேனா said...

வாழ்க
வானம்பாடிகள்

வெறும்பய said...

இராமசாமி கண்ணண் said...

அது எவ்விட கிட்டும் :)

//

சேட்டா நிங்ஙளு பரஞா சாதனம்.. கோட்டயத்தில விக்குந்து

நர்சிம் said...

SAD.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

வெரைட்டியாகவும் கொடுக்க முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள்!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இந்த எந்திரன் தொல்லை தாங்க முடியாமத் தான் புதிதாகத் திரைமணமே ஆரம்பித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ம்ம்..

இதையெல்லாம் நீங்க எதுக்குங்க கண்டுக்கனும்?

அடுத்த நறுக் அல்லது கேரக்டருக்கு வெயிட்டிங்

பின்னோக்கி said...

பதிவு முழுவதும் ஒரு வரி விடாம படிச்சேன். சத்தியமா என்னன்னு எனக்கு புரியலை. பழைய இடுகைகள், பின்னூட்டங்கள் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் :).

எது இருந்தாலும், கிழவன் என்ற வார்த்தை இருந்த இருந்துட்டு போகட்டுமே. எல்லாரும் 16 வயசாவேவா இருக்கப் போறோம். விட்டுத்தள்ளுங்க.

சேட்டைக்காரன் said...

புர்ச்சித்தலீவரு வானம்பாடிகள் ஐயா வால்க!
உடல் மண்ணுக்கு; குடல் பீருக்கு; உயிர் எனக்கே எனக்கு!

கே.ஆர்.பி.செந்தில் said...

எந்திரன் ரிலீசாகும் அப்புறம் இன்னொரு படம் வரும் ...

காசு வச்சிருக்கவன் படம் எடுத்திருக்கான் .. காசு இருந்தா பாருங்க.. இல்ல காத்திருந்தா முப்பது ரூவாய்க்கு dvd கிடைக்கும் ஒருத்தர் வாங்கினா நூறு பேர் பாக்கலாம்..

நான் ஏழை பங்காளன் என்றால்.. பாக்கவே பாக்காதீங்க....

ஐயன்மீர் இதெல்லாமே வியாபாரம் .... சரக்கை விற்க கூவத்தான் வேண்டும்...

VISA said...

intha pathivuku votepoadamala?

சத்ரியன் said...

புரட்சிவ் வலைஞரே,

நான் உங்க கட்சியில சேர்ரதா முடிவு பண்ணிட்டேன். செயலாளர் போஸ்ட்டிங்க எனக்கே எனக்கு குடுத்துருங்க.

அப்பிடியே பேருக்கு முன்னால போட்டுக்கறதுக்கு ரைமிங்கா ஒரு அடைமொழியும் குடுத்துருங்க.

யப்பா....! ஒன்னு கட்சி ஆரம்பிக்கனும். இல்லாட்டி கம்முனு ஒரு கட்சியில சேந்துக்கனும்.

Renga said...

communist (time waste parties) களை இடது கையால் புறந்தள்ளிவிட்டு மேலே செல்லுங்கள் பாஸ்..

முத்து said...

சார் நானும் ரொம்ப காலமாக உங்கள் பதிவை படித்து கொண்டு தான் வருகிறேன்.ஆனால் இது வரை கமெண்ட்ஸ் போட்டது இல்லை.இப்போ போடுவதற்கு காரணம் ஏதோ எதையோ பார்த்து கொலைக்குதுன்னு நீங்க கண்டுக்காம உங்க ஸ்டைலில் எழுதவும்.புரட்சி தேவையில்லை.நீங்க என்ன தான் கத்தினாலும் அந்த குரூப் திருந்த போவது இல்லை.படம் வந்ததும் முதல் ஆளாய் அவர்கள் தான் பார்பார்கள்.கேட்டால் விமர்சனம் செய்வதற்கு என்பார்கள்.விமர்சனம் செய்வதற்கு எதற்கு 500 ,1000 குடுத்து பார்கிறார்கள்.பதில் கிடையாது.ஆகவே நீங்கள் உங்கள் ஸ்டையிலில் எழுதவும்.நன்றி

ராஜ நடராஜன் said...

இடுகை ஒண்ணுமே புரியல!ரஜனி பாலிடிக்ஸ் இப்போதைக்கு வருவாருன்னு நினைக்கிறீங்க?எனக்கு நம்பிக்கையில்ல.ஒருவேளை பங்காளிச் சண்டை காலத்துல வேணுமின்னா சரியான நேரத்துல வந்துட்டேன் பார்த்தீங்களா டயலாக் மெய்யாகும்.

ராஜ நடராஜன் said...

//சேட்டா நிங்ஙளு பரஞா சாதனம்.. கோட்டயத்தில விக்குந்து//

க்கும்!நேத்து ஆசியாநெட் தொலைக்காட்சியில கோட்டயம் காட்டுனாங்களே!ரோட்டின் இரண்டு பக்கமும் குப்பையைக் கொட்டி வச்சிகிட்டு மூக்கைப் பொத்திகிட்டு போகும் மக்களை.சேட்டன்களின் உழைப்புத்திறன்,நர்ஸ்,டாக்டர்,கார்பரேட் கவர் அப் எல்லாம் வனாந்திரம் போனா மட்டுமே.ஊரென்னமோ குப்பைக்கூடம்.

வானம்பாடிகள் said...

@@நன்றி பாலாசி. இது கோழையக் குத்த இல்லை பாலாசி. வீரனுக்கு விளங்கவைக்க.

வானம்பாடிகள் said...

நாஞ்சில் பிரதாப் said...

//அய்யா...நீங்களுமா...??? :))

அய்யோ.. எந்திரன் பதிவர்கள் எல்லாரையும் புரட்சியாளராக ஆக்காம போகாதுன்னு நினைக்கிறேன்....

இப்படியே ஆளாளுக்கு முகமுடி போட்டு எழுதுனா...நாடுதாங்குமா...என்டே குருவாயுரப்பா...//

குருவாயூரப்பனே வந்நாலும் எந்திரன் நோக்கியால் ஏழையுட ஜீவனம் எந்தாகும்னு பரையேண்டே:))

வானம்பாடிகள் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அட.. நீங்கதான் அந்த கிழ போல்டா..? அவ்ளோ வயசா ஸார் ஆயிருச்சு உங்களுக்கு..?//

கிழபோல்டுன்னு சொல்லிட்டு புடிச்சி தள்ளுவேன்னு சொல்லுதே அந்த கூமுட்ட. கொலக்கேசாய் போய்ரும்னு தெரிய வாணாம்?

வானம்பாடிகள் said...

முகிலன் said...

//நீங்க டீக்கடைக்காரனுக்கு அம்பது பைசா குடுக்கலைன்னாலும் அவன் குடுக்க நினைச்சா கூட இன்ட்லி விட மாட்டேங்குது//

நேத்தும் இப்புடித்தான் என்னக் கடனாளியாக்கிச்சி.

வானம்பாடிகள் said...

@@நன்றி ஜே! இதும் காமெடிபீஸ்தான்.

வானம்பாடிகள் said...

dheva said...

//என்னாச்சுன்னா?...பாலாசி கருத்துல இருந்து...ஏதோ அனானியோட வேலைன்னு புரியுதுன்னா....

எது எப்படி இருந்தாலும் எங்களீண் அபிமான படைப்பாளீ நீங்கள்!//

அனானி என்ன தேவா பண்ணும். அது அது மாதிரி. நாமதான் வெளிய விடணுமா. இல்ல நடு வீட்டுல வைக்கணுமான்னு முடிவு பண்றது. இல்லையா?

வானம்பாடிகள் said...

ஜோதிஜி said...
//
ஏதோ ஒன்று பக்கவாட்டில் நடந்துள்ளது. எவர் எது என்று புரியவில்லை. ஆனால் இப்போது உள்ள இடுகை வடிவமைப்பில் உங்கள் எழுத்து நடை கோர்வையாக ஒரே மூச்சில் படிக்க உதவியது. ஒரு வரியைக்கூட தாண்டி வர முடியாத நடை.//

நன்றிங்க ஜோதிஜி. :))

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

//நேர விரயம்//

அப்படி நினைக்கலைங்க. அவங்க எண்ணம் தவறுன்னு புரிஞ்சிருக்கும். ஏழை பாலாபிஷேகம் பண்ணக்கூடாதுன்னா அது அவன்கிட்ட இல்ல போய் சொல்லணும். ஹைஸ்பீட் இண்டர்னெட் வெச்சிருக்கிறவன் கூட விவாதம் பண்ணிக்கிட்டு விவகாரத்த இழுத்து விடுற வேலை எதுக்கு?

வானம்பாடிகள் said...

Subankan said...

//விடுமுறையில் ஊரிலிருந்து இந்தக்கூத்துகள் எல்லாத்தையும் பாத்து, சரிச்சுச் சிரிச்சிருக்கேன் சார். ஒரே ஒரு சின்னக் கவலை, எந்திரன் முதற்காட்சியை நல்ல தியேட்டரில் மிஸ் செய்யப்போகிறேன் :(
- ஏழை ரசிகன்//

முதல் காட்சி கண்டு களிக்கக் கடவ.:)) நன்றி சுபாங்கன்

வானம்பாடிகள் said...

@@நன்றி இர்ஷாத். :))
@@நன்றி நசரேயண்ணே. என்னாது யாரு யாரா? அந்த எழவுக்கு நான் வேற விளம்பரம் குடுக்கணுமோ?
@@நன்றி சரவணக்குமார். இது லேட்டஸ்ட் இண்டர்னெட் புர்ச்சி.
@@நன்றி பிரபு

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||இன்று முகமூடி மூலமாக கிழபோல்டு மொக்கைச்சாமியை இடித்துத் தள்ளிவிட்டு மகுடத்தைப் பிடிப்பேன் என்று பின்னூட்டம் விடுகிறார்||

???????... எவரு இந்த யூத்து..???

எனக்குதான் ஒரு எழவு நியூஸும் தெரியலையா...//

அது ஏதோ பன்னாடை விடும்மா. இதெல்லாம் ஒரு நியூசு.

வானம்பாடிகள் said...

@@இல்லைங்க ஷங்கர். இது காமெடி பீசுதான்
@@நன்றிங்க பனித்துளி.இது மத்தாப்புதான் நம்புங்கப்பு..அவ்வ்வ்:))

வானம்பாடிகள் said...

நட்புடன் ஜமால் said...

//பெரும் புர்ச்சியா இருக்கே மேட்டர் தான் விளங்கயில்லை ஸாரே//

ச்ச்சும்மாங்க ஜமால். நன்றிங்க

வானம்பாடிகள் said...

சிநேகிதன் அக்பர் said...

//பாலாண்ணா உங்கள் வழக்கமான இடுகைகளை எதிர்பார்க்கிறோம்.//

நன்றி அக்பர். நிச்சயம்.:)

வானம்பாடிகள் said...

@@நன்றி ரிஷபன்
@@நன்றி யூர்கன். ஒன்னுமில்ல மரியாதைக்குரிய ஒரு நண்பர் கொடுத்த மரியாதைக்கு எதிர் மரியாதை அல்லது புர்ச்சி.:))

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க வெறும்பய. இது வொர்த்துங்கறீங்க. ஒரு இடுகையே
அதிகம்.
@@வாங்க தியா. நன்றி. எப்படி இருக்கீங்க.
@@நன்றி நர்சிம். ya, in a way:))
@@நன்றிங்க செந்தில்

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...
பதிவு முழுவதும் ஒரு வரி விடாம படிச்சேன். சத்தியமா என்னன்னு எனக்கு புரியலை. பழைய இடுகைகள், பின்னூட்டங்கள் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் :).

எது இருந்தாலும், கிழவன் என்ற வார்த்தை இருந்த இருந்துட்டு போகட்டுமே. எல்லாரும் 16 வயசாவேவா இருக்கப் போறோம். விட்டுத்தள்ளுங்க.//

அய்ய! இதுக்கு போய் யாரு கவலைப் படுறா. நான் டை கூட போடுறதில்லை:))இது பகடிதான்.

வானம்பாடிகள் said...

சேட்டைக்காரன் said...

//புர்ச்சித்தலீவரு வானம்பாடிகள் ஐயா வால்க!
உடல் மண்ணுக்கு; குடல் பீருக்கு; உயிர் எனக்கே எனக்கு!//

இதான் சேட்டை:))))

வானம்பாடிகள் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

//எந்திரன் ரிலீசாகும் அப்புறம் இன்னொரு படம் வரும் ...

காசு வச்சிருக்கவன் படம் எடுத்திருக்கான் .. காசு இருந்தா பாருங்க.. இல்ல காத்திருந்தா முப்பது ரூவாய்க்கு dvd கிடைக்கும் ஒருத்தர் வாங்கினா நூறு பேர் பாக்கலாம்..

நான் ஏழை பங்காளன் என்றால்.. பாக்கவே பாக்காதீங்க....

ஐயன்மீர் இதெல்லாமே வியாபாரம் .... சரக்கை விற்க கூவத்தான் வேண்டும்...//

எத எங்க விக்கணும்னு தெரியவேணாமா? அதுக்குதான்:))

வானம்பாடிகள் said...

VISA said...

//intha pathivuku votepoadamala?//

நன்றி விசா:))

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...

//புரட்சிவ் வலைஞரே,

நான் உங்க கட்சியில சேர்ரதா முடிவு பண்ணிட்டேன். செயலாளர் போஸ்ட்டிங்க எனக்கே எனக்கு குடுத்துருங்க.

அப்பிடியே பேருக்கு முன்னால போட்டுக்கறதுக்கு ரைமிங்கா ஒரு அடைமொழியும் குடுத்துருங்க.

யப்பா....! ஒன்னு கட்சி ஆரம்பிக்கனும். இல்லாட்டி கம்முனு ஒரு கட்சியில சேந்துக்கனும்.//

ம்கும். இது தனிப்புர்ச்சி. அல்லாரும் தலீவர். அல்லாரும் தொண்டர்.

வானம்பாடிகள் said...

Renga said...

//communist (time waste parties) களை இடது கையால் புறந்தள்ளிவிட்டு மேலே செல்லுங்கள் பாஸ்..//

நல்ல கம்யூனிஸ்ட் இந்த மாதிரி அக்கப்போரெல்லாம் பண்ணமாட்டாங்க. அவங்கள எதுக்கு பாவம்.

வானம்பாடிகள் said...

முத்து said...
சார் நானும் ரொம்ப காலமாக உங்கள் பதிவை படித்து கொண்டு தான் வருகிறேன்.ஆனால் இது வரை கமெண்ட்ஸ் போட்டது இல்லை.இப்போ போடுவதற்கு காரணம் ஏதோ எதையோ பார்த்து கொலைக்குதுன்னு நீங்க கண்டுக்காம உங்க ஸ்டைலில் எழுதவும்.புரட்சி தேவையில்லை.நீங்க என்ன தான் கத்தினாலும் அந்த குரூப் திருந்த போவது இல்லை.படம் வந்ததும் முதல் ஆளாய் அவர்கள் தான் பார்பார்கள்.கேட்டால் விமர்சனம் செய்வதற்கு என்பார்கள்.விமர்சனம் செய்வதற்கு எதற்கு 500 ,1000 குடுத்து பார்கிறார்கள்.பதில் கிடையாது.ஆகவே நீங்கள் உங்கள் ஸ்டையிலில் எழுதவும்.நன்றி//

முதல் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க முத்து.:)

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

//இடுகை ஒண்ணுமே புரியல!ரஜனி பாலிடிக்ஸ் இப்போதைக்கு வருவாருன்னு நினைக்கிறீங்க?எனக்கு நம்பிக்கையில்ல.ஒருவேளை பங்காளிச் சண்டை காலத்துல வேணுமின்னா சரியான நேரத்துல வந்துட்டேன் பார்த்தீங்களா டயலாக் மெய்யாகும்.//

அதெல்லாம் அவரு வரமாட்டாருங்க.

கோட்டயம்:)). நன்றிண்ணே.

வானம்பாடிகள் said...

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. இன்னும் ஒரு வாரத்துக்கு எஸ்ஸாகப்படாது சொல்லிட்டேன்:))

முத்து said...

வானம்பாடிகள் said...

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. இன்னும் ஒரு வாரத்துக்கு எஸ்ஸாகப்படாது சொல்லிட்டேன்:))

கவலைபடாதீங்க எஸ்ஸா ஆவர அத்தனை பேரையும் பட்டாப்பட்டி அவர்களை விட்டு கவனிக்க சொல்லுவோம்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

//ரூ 500க்கு குறையாத ரெடிமேட் சட்டையும், அமெரிக்க கம்பெனி ஜீன்சும் போட்டுக் கொண்டு ஏழை, அமெரிக்க அடிவருடி என்றெல்லாம் அமெரிக்க கூகிள் பிச்சை போட்ட வலைப்பூவில் இடுகை எழுதி ஏழை என்ன செய்வான் என்று கத்தினால் புர்ச்சியா?//

என்ன சொல்ல பாலா சார்..

முன்பும் இதுபோல் ஒரு இடுகை போட்டு இருந்தீர்கள்.. இடுகை போட்டு சம்பாதித்து வீடு கட்டி என்று..

உங்களை நோகப் பண்ணுபவர்கள் யாரென்று தெரியல.. விடுங்க சார்.. நீங்க எழுத வேறு நல்ல விஷயங்கள் இருக்கு.

சே.குமார் said...

//இந்த இடுகை மகுடத்துக்குப் போனால் கிடைக்கும் லாபத்தை ரஜனிக்கு பாலாபிஷேகம் செய்ய விரும்பும் ஏழைக்குக் கொடுப்பதாய் உத்தேசம்.//


athu sari...

என்ன சார் நடக்குது இங்க, ஒண்ணுமே புரியல.

LK said...

நெத்தியடி

R.Gopi said...

சார்....

படம் பிடித்திருந்தால் பார்க்கட்டும்... பிடிக்க வில்லையா, மூடிக்கொண்டு (கண்ணையும்!!) போகட்டுமே...

யாரும், தியேட்டர் பக்கம் போகிறவர்களின் பாக்கெட்டில் கை விட்டு, பணம் எடுத்து, கையில் டிக்கட்டை திணித்து தியேட்டருக்குள் தள்ளி விடுவதில்லையே....

என்னவோ, ரஜினியை மட்டுமே குறை சொல்லும், இந்த மனநோயாளிகளை என் செய்வது!!

இவர்கள் ஆதங்கங்கள் ஆளும் கட்சியின் மீது பாய்ந்து, வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதில் பாய்ந்தால், நாடும் உருப்பட்டும்...

கையில் காசை வாங்கிக்கொண்டு, ஓட்டு போட்டு விட்டு, வாங்கிய காசை அப்படியே டாஸ்மாக்கில் கொடுக்கும் இந்த எச்சைகள் எதைப்பற்றியும் பேச அருகதை அற்றவர்கள்...

Amudhavan said...

உங்கள் எழுத்துக்களில் இருக்கும் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. மற்றபடி நீங்கள் யாருக்கு ஆதரவாக எழுதியிருக்கிறீர்கள் என்பதுபற்றிக் கவலை இல்லை. தங்கள் இனிய ரசனைக்கு வாழ்த்துக்கள்.