Tuesday, August 24, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.1

புலிகள்- தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு: குமரன் பத்மநாதன் விளக்கமளிக்க வேண்டும்: கருணாநிதி

ம்கும். அவரு அரிச்சந்திரரு. அப்புடியே உண்மை உண்மையா வாந்தி எடுக்குறாரு. லிஸ்டக் குடுத்தா அப்புடியே சொல்லப்போறாரு. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் மாயம்?

அது கையெழுத்து போட்ட அன்னைக்கே காணோம்னு கரடியாக் கத்தினாலும் அதுதான் எல்லாத்துக்கும் தீர்வுன்னு கத்துனது ச்ச்சும்ம்வா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை

ஏன்? சாமியையும் வலையத்துக்குள்ள வச்சிட்டானுவளா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கைச் செல்லும் தூதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை: கலைஞர்.

அதாஞ்சரி. தேர்தல் நேரத்துல யார நம்புறது. ஏன்? இதுக்கு ஒரு கடுதாசு போடலாமே?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைப்புலி சிக்கியது

இதெல்லாம் புடிங்கடா! திருட்டுப் பூனைங்கதான் சிக்காது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமானி இல்லாமல் குண்டு வீசும் விமானம்

ரொம்ப வசதிடா! கோளாறாயி குண்டப் போட்டுடிச்சி. குருவி சுட அனுப்புனா குழந்தைங்கள போட்டு தள்ளிறுச்சின்னு சொல்லிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் வெற்றிக்கு பின்னால் எனது மனைவி இருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

தோல்வியான அரசியல்வாதி ஊட்டுங்கள்ள தகராருதான். பத்த வெச்சிட்டியே பரட்ட...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. ராமதாஸ்

யாருங்கைய்யா விளைக்கிறாங்க. அதான் வளைக்கிறாய்ங்களே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழர் இறையாண்மை மாநாடு: திருமா

இறைவன் இருக்குறானோ இல்லையோ. தமிழனுக்கு இறையாண்மை இல்லைன்னு தெரிஞ்சப்புறமும் மாநாடு வேறயா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போதை பொருள் விவகாரம்: என் பெயரை பயன்படுத்தினால் வழக்கு தொடருவேன்: திரிஷா

அடப்பாவிகளா! சுருட்டு, பீடி, பனியன் விளம்பரம் மாதிரி இதுக்கும் பயன்படுத்துறாங்களா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊழலைப் பற்றி பேச விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை: கலைஞர்

அதான தல! ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிரீன்பீல்டு விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் உள்நோக்கம்: கலைஞர் குற்றச்சாட்டு

ஆமாங்க தலைவரே! பச்சை அவங்க ராசி கலராச்சே. ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல. யெல்லோஃபீல்டுன்னு மாத்திடுங்க தலைவா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈ.வி.கே.எஸ்.க்கு காங். மேலிடம் கண்டிப்பு

சொல்லவேண்டியதெல்லாம் சொன்னப்புறம் இது கண்டிப்பா? கண் துடைப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செஸ் ஆனந்திடம் இந்திய குடியுரிமை இல்லை!

அப்ப சாம்பியன்னு நாம அலட்டிக்க முடியாதா? அவ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

25 comments:

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்குங்க.

நசரேயன் said...

//தோல்வியான அரசியல்வாதி
ஊட்டுங்கள்ள தகராருதான்.//

இருக்கலாம்

ஜோதிஜி said...

அதான தல! ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?

முத்தாய்ப்பு

ஜெரி ஈசானந்தன். said...

பாலாண்ணா....கலக்குங்க....இது உங்க வாரம்ல...கலக்குங்க

பிரபாகர் said...

எல்லாமே நறுக்... அய்யா!

சாமியும் வலையத்துல... சிறுத்தைப்புலி... விமானம்... என எல்லாம் சரியான நக்கலு!

பிரபாகர்...

சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு அண்ணே.

கே.ஆர்.பி.செந்தில் said...

தினசரி நம்மால எப்புடீல்லாம் எய்க்கிறாங்க பாருங்க... ஆனா என்னதான் நாக்க புடின்கிகர மாதிரி கேட்டாலும் திருந்தவே மாட்டாய்ங்க ...

பின்னோக்கி said...

ஆனந்த் போனா என்ன, அடுத்த நோபல் பரிசு வாங்குனவங்களோட சித்தப்பாவோட தாத்தாவோட மகளோட பேத்தி, இந்தியா ஒரு தடவ வந்துருந்தா, விழா எடுத்துட்டாப் போச்சு...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

திருந்தாத சென்மங்கள் !

வார்த்தை செலவுகள் வேண்டாமே ?

அது சரி said...

//
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் மாயம்?
//

எடைக்கு போட்டு கொய்யாப்பழம் வாங்கி தின்னுட்டானுங்களா? சரி, அதுக்காவது யூஸ் ஆகுதே.

அது சரி said...

//
தமிழர் இறையாண்மை மாநாடு: திருமா
//

தலைமை: ராஜபக்சே.

குருமாண்ணன் இதை சொல்லாம விட்டுட்டாரே.

Chitra said...

என் வெற்றிக்கு பின்னால் எனது மனைவி இருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

தோல்வியான அரசியல்வாதி ஊட்டுங்கள்ள தகராருதான். பத்த வெச்சிட்டியே பரட்ட...

...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமெடி கமென்ட், இது!

Balaji saravana said...

//ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?//
அதானே தல!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்குங்க....

cheena (சீனா) said...

அன்பின் பாலா

நறுக்குன்னு கேட்டிருக்கீங்க - சூப்பரு

ஆனந்திற்கு பட்டமளிப்பு மறுக்கப் பட்டது அரசின் தவறு

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

ஈரோடு கதிர் said...

||இதெல்லாம் புடிங்கடா! திருட்டுப் பூனைங்கதான் சிக்காது.||

திருட்டுப் பூனை இன்னொரு திருட்டுப் பூனைய புடிக்குமா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//ஊழலைப் பற்றி பேச விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை: கலைஞர்

அதான தல! ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~//

இது தான் டாப்பு :))

ராஜ நடராஜன் said...

நறுக் முதல் மகுடம் வரை!வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அன்பரே..

இப்படிக்கு நிஜாம் ..., said...

//இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை

ஏன்? சாமியையும் வலையத்துக்குள்ள வச்சிட்டானுவளா?//

அவரும் முள்வேளிக்குள்ள தான் இருக்காரோ?

இப்படிக்கு நிஜாம் ..., said...

//விமானி இல்லாமல் குண்டு வீசும் விமானம்

ரொம்ப வசதிடா! கோளாறாயி குண்டப் போட்டுடிச்சி. குருவி சுட அனுப்புனா குழந்தைங்கள போட்டு தள்ளிறுச்சின்னு சொல்லிக்கலாம்.//

இந்த யோசனை கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் பேர சத்தமில்லாம போட்டு இருக்கலாம்,.. எவன் கேக்குறது??

ஜாக்கி சேகர் said...

தலைவரே எல்லாத்தையும் ரசிச்சேன்..

sakthi said...

இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை
ஏன்? சாமியையும் வலையத்துக்குள்ள வச்சிட்டானுவளா

ஒன்னும் சொல்றதுக்கில்ல பாஸ்

முகிலன் said...

எல்லாமே கலக்கல்

//செஸ் ஆனந்திடம் இந்திய குடியுரிமை இல்லை!
//

இந்திய பாஸ்போர்ட் மட்டும் தான் இருக்காம்.

SENTHIL said...

very good. supar