Tuesday, July 27, 2010

வடை கொத்திப் பறவை!...

(டிஸ்கி: திரையுலக காமெடி பீசும், பதிவுலக காமெடி பீசும் [என்னையச் சொன்னேன் என்னையச் சொன்னேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.
டிஸ்கிக்குள்ளையே டிஸ்கி போட விட்டாய்ங்களே..]  சந்திச்சி ரொம்ப நாளாச்சா அதான்)

வடிவேலுவைப் பார்த்து ஆளத்தேளப் புடிச்சி, தொடர் எழுதணுமிங்கற நப்பாசை வந்தா படும் பாடு இது. அப்பாயிண்டு வாங்கி அண்ணன பார்க்க ஆட்டோ பிடிச்சி போய்ட்டிருக்க

( செல்லில் பெல்லடிக்கிறது)

கதிர்: வணக்கமண்ணே.

வா.பா: வணக்கம் கதிர். எங்க வெளிய இருக்கீங்களா. காலைல இருந்து காணோம்.

கதிர்: இஃகி இஃகி. உங்க ஊர்ல இருக்கமண்ணே. 

வா.பா. அப்படியா? எங்க?

கதிர்: அசோக்நகர்ல இறங்கி ஃபோன் பண்ணேன். நீங்க எங்க. 

வா.பா. ஹி ஹி. வடிவேலுவை பார்க்க கிளம்பிட்டிருக்கேன். ஒரு டீ சாப்டு நில்லுங்க பில்லர் கிட்ட. பிக்கப் பண்ணிக்கறேன்.

(அடையாளம் கண்டு ஆட்டோவில் ஏத்த, ஆரூரன்)

ஆரூரன்: தென்னுங் நாட்டாம. ஈரோட்டில இருந்து பின்னாடியே வரேன். என்றா யாரோ வர மாதர இருக்கேன்னு செத்த அக்கம் பக்கம் பாக்க மாட்டிங்களா? ஏனுங் பாலாண்ணா. இந்த நாயத்த கேளுங்க.

கதிர்: அட! நம்மள யாரு ஃபாலோ பண்ணப் போறாங்கன்னு தேமேனு நான் வந்து சேர்ந்தேன். நீங்க எங்க மொதலாளி?

ஆரூரன்: தான் சொன்னேன்ல. உங்க பின்னாடியே வந்துட்டேன். எங்க போறீங்க?

வா.பா: வடிவேலுவை பார்க்க.

ஆரூரன்: அட! நானும் வாரனுங்ணா. 

(போய் இறங்க, பின்னாடியே ஒரு கால் டாக்ஸியில் பழமை)

பழமை: அட என்னுங் மாப்பு. டீக்கடையில மாப்பு மாப்புன்னு கூப்பிட்டிட்டிருக்கேன் கண்டுக்காம மூணு பேரும் கிளம்பிட்டீங்க. எங்க வந்தீங்க மூணு பேரும்?

வா.பா. வாங்க வாங்க. நீங்க எங்க இந்த பக்கம். இது வடிவேலு வீடு பார்க்கலாம்னு வந்தா நீங்க இங்க எப்படி?

பழமை: சரியாஆஆப் போச்சி போங்க. நானு அப்துல்லா, ரம்யாக்காவல்லாம் பார்த்து அழைப்பு கொடுத்துட்டு அப்புடியே வடிவேலு அண்ணனையும் பார்க்கலாம்னு அப்துல்லாட்ட கேட்டுகிட்டிருக்க தானா வந்தாச்சி. சரி வாங்க போவம்.

வடிவேலு: ஆஆஆக்கா. வாங்க வாங்க. எம்புட்டு நாளாச்சி பார்த்து. எல்லாம் ஒன்னா வந்திருக்கீங்க. என்னா விசயம். வாங்க உள்ள உக்காந்து பேசுவம்.

வடிவேலு: உக்காருங்கப்பா. என்னா விசயமண்ணே. எல்லாம கூடி வந்திருக்கீங்க. அண்ணன் என்னமோ உதவின்னாரு. மொத்தமா வந்திருக்கறத பார்த்தா டொனேசனு அது இதுன்னு...

வா.பா: ஏண்ணே! சொன்னேன்ல துட்டு, சான்செல்லாம் இல்லைண்ணே.  நான் எனக்காக கேக்க வந்தேன். வழியில இவங்கள எல்லாம் பார்த்தேன். சரி அண்ணன பார்த்துட்டு போலாம்னு பாசமா கூட்டிட்டு வந்தேண்ணே.

வடிவேலு: ச்செரி ச்செரி சொல்லுங்க. நான் என்ன யெல்ப் பண்ணனும்.

வா.பா: ஒன்னுமில்லண்ணே. வடை கொத்திப் பறவைன்னு ஒரு தொடர் எழுதப் போறண்ணே. அது ஆவில வரதுக்கு வழி பண்ணனும்னே.

வடிவேலு: அட காக்கான்னு சொல்லிட்டு போவேண்டியதுதானே. அதென்ன வடை கொத்திப் பறவை. அது ஆவில வரதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும்.

வா.பா. இல்லண்ணே. நீங்க மனசு வெச்சா முடியும்ணே. எனக்கு பீலா பீலாவா வருதுண்ணே. அத இப்புடித்தாண்னே தீத்துக்க முடியும். 

வடிவேலு: யோவ். என்னமோ மாட்டத் தண்ணிக்குள்ள எறக்கி வெல பேசிட்டிருக்க? அது என்ன ஏதுன்னு சொன்னாத்தானே யெல்ப் பண்ண முடியுமா இல்லையான்னு சொல்ல முடியும்.

வா.பா.: இந்தாங்கண்ணே. மூணு வார ஆ.வி. இதப் படிங்கண்ணே. 

வடிவேலு: (படித்துவிட்டு) ஏப்பா? இப்புடியெல்லாமா எழுதுவாய்ங்க? எனக்கு ஒரு பத்து படத்துக்கு காமெடி சீன் கிடைச்சிடும் போலயே. ச்சரி நீ சொல்லு. நீ என்ன பீலா உடப்போற?

வா.பா. பீலால்லாம் இப்புடி உட்டாலக்கிடி பீலா இல்லண்ணே. கொஞ்சமாச்சும் ட்ரூத் வேணும்னே. மணிரத்னம் சார் கால்ஃப் ஆடுறப்ப என்னையும் அங்க கூட்டிப் போங்கண்ணே. நான் பந்து பொறுக்கி போட்டுட்டு மணியும் நானும் கால்ஃப் ஆடினோம். பெனால்டில ஜெயிச்சிட்டாருன்னு சொல்லிப்பேண்ணே. 

வடிவேலு: கால்ஃப்! நீய்யி!! அந்த மட்டை உயரமிருப்பியா. நீ ஆடினன்னா எவன் நம்புவான்.

வா.பா. தோ பாருண்ணே. எனக்கும் தொப்பையிருக்குண்ணே. அப்புறம் நான் கூட ஒரு இங்கிலீசு புக்கு படிச்சிட்டு அதுக்கு மொழி பெயர்ப்பு போட்டேண்ணே. அப்புறம் ஜெர்மன் மொழில டங்கே, உந்த், ஷோன், சண்டாக் எல்லாம் தெரியும்ணே. மதுராந்தகத்துக்கு போய்ட்டு மாண்டி நீக்ரோ போனேன்னு சொல்லிக்குவண்ணே. ப்ளீஸ்ணே.

வடிவேலு: இருய்யா இருய்யா. நீம்பாட்டுக்கு என்னமோ அடுக்கிக்கிட்டு போற. 

கதிர்: அல்லோ! அப்புறம் நாங்கல்லாம் எதுக்கு வந்திருக்கோம். சொல்லியாச்சில்ல. அப்புடி மவுனமா உக்காருங்க. நம்ம பிட்ட கேக்கட்டும். அண்ணே! சும்மா கால்ஃப வெச்சி படைப்பாளின்னு சொல்றதில்லண்ணா. தோற்றம் முக்கியம். இந்தாளு ஜீன்ஸ் போட்டிருக்காரா? டி.ஷர்ட் போட்டு இன் பண்ணியிருக்காரா?

அத விடுங்க. கார்த்தி கிட்ட கேட்டு கை கொள்ளாம ஒளகப் படம் ஆட்டையப் போட்டு சப்டைட்டில பார்த்து விமரிசனம் எழுதியிருக்காரா? இல்ல தண்ணியடிப்போர் நலவாழ்வுக்கு வழிகாட்டி இடுகை போட்டிருக்காரா? இந்தாளுக்கு தெரிஞ்சதெல்லாம் சீட்டுகட்டுல இருக்கிற க்ளப்பு. அந்தாளு மாதர யூத்தா இருக்காரா? வேணும்னா தலைப்புக்கு நன்றின்னு போட்டுக்குறேன். நான் எழுதறத போட சொல்லுங்கண்ணா.

வடிவேலு: அதும் நியாயமாத்தான் படுது. அப்ப எல்லாரும் இதுக்குதான் வந்திருக்கியளா? ஏந்தம்பி!என்னமோ கண்ண உருட்டிகிட்டு குறுகுறுனு பார்த்துட்டிருந்தா எப்புடி. நீங்க சொல்லுங்க.

ஆரூரன்: இல்லீங்ணா! இவங்க என்ன தகுதியிருக்குன்னு போட்டிக்கு வராங்கன்னு தெரியல. டி சர்ட்டு போட்டா சரியாப் போச்சா? மைனர் மாதிரி பட்டன தொறந்து விட்டுகிட்டு உள்ள போட்டிருக்கிற செயின் தெரிய வேணாமா? பாலாண்ணன் மூஞ்சப் பாருங்க! திருவிழால தொலைஞ்சா மாதர ஒரு லுக்கு. நாட்டாமைய கேக்கவே வேணாம். அவரு பாப்பாவ ஸ்கூல்ல விடப் போனா, ஒண்ணாப்பு டீச்சர் புடிச்சி க்ளாசுக்கு போவாம எங்க சுத்தறன்னு மெரட்டுச்சு. அந்தாளு மாதிரி ஒரு கரடு முரடான லுக்கு வேணாமா? என்னைய விட்டா வேற யாருக்கு சரி வரும் சொல்லுங்க?

அத விடுங்ணா. இவங்களுக்கு நாயைப் பத்தி தெரியுமா? நான் காலையில டீ குடிக்கலாம்னு இறங்கினா எந்த நாய் வாலாட்டும், எந்த நாய் தலைய தூக்கி பார்த்துட்டு அட சீ! நீதானான்னு படுக்கும், எந்த நாய் குலைச்சு குட்மார்னிங் சொல்லும், ஊட்டுக்குள்ள இருக்கிற நாய் அவசரப்பட்டு குலைச்சிட்டு கதவிடுக்கு வழியா பார்த்து சாரி சொல்லும்னு நாயோஃபோபியா தெரியுமா? 

வடிவேலு: ஒருத்தனுக்கு ஒருத்தன் வாங்கலில்லாம பாயிண்ட புடிக்கிறாய்ங்களே. நான் என்ன பண்ணுவேன். தம்பி! பழமை தம்பி நீங்க சொல்லுங்க.

பழமை: ஒரு மணித்துளி அண்ணே. அமெரிக்காவில இருந்து அழைப்புண்ணே. நம்ம தளபதிண்ணே. சொல்லுங்க தளபதி! என்ன விசயம்? என்னுங்? ஆமாங். வடிவேலு அண்ணன் குரல்தான். அவங்க கிட்ட பேசணுமா? இருங்! கொடுக்கிறேன். ‘அண்ணே! நம்ம நசரேயன் தளபதிண்ணே’

வடிவேலு: அல்லோ! சொல்லுங்கண்ணே. அமெரிக்கால்லாம் எப்புடியிருக்கு. ஹாலிவுட்ல ஒரு காமெடி சீனு வாங்கிக் கொடுங்கண்ணே. கழுத ஆஸ்கார் ஒன்ன வாங்கிப் போட்டா கெடக்கும். என்னண்ணே? நான் எல்ப் பண்ணனுமா? சொல்லுங்கண்ணே. மனுசன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவாம முடியுமா?

நசரேயன்: அண்ணே! வரலாறு முக்கியம்ணே. ஒரு பாண்டியனுக்கு இன்னோரு பாண்டியன் உதவாம, சேர, கொங்கு, பல்லவ பரதேசிக்களுக்கு உதவினான்னு ஆயிரும்ணே. அவிய்ங்களுக்கு என்ன தகுதியிருக்குண்ணே. அந்தாள மாதிரி தோழியிருக்கா? துண்டு போடத் தெரியுமா? மெக்ஸிகோகாரி  ‘ஓலா’ன்னு சொன்னா கெட்ட வார்த்தைன்னு சண்டைக்கு போவாய்ங்கண்ணே. 

ஒரு பயலுக்கும் நொங்கு தின்னத் தெரியாதுண்ணே. என் நண்பன் சொறிவுஜீவி என்னய ஜொள்ளோமேனியாக்குன்னு சொல்லுவாண்ணே. நொங்காலஜின்னு புதுசா ஒரு சப்ஜக்ட் சேர்க்குறோம். நீதான் தலைன்னு நியூயார்க் யூனிவர்சிடில கெஞ்சுறாய்ங்க. அதனால 'துண்டு தூக்கி நண்டு'ன்னு நான் எழுதறத போட சொல்லுங்கண்ணே.

வடிவேலு: அவ்வ்வ்வ்வ். ஏன்யா? ஏன்? 

பழமை : இஃகிக்கிக்கிக்கீ. என்னண்ணே கொழப்பிட்டாய்ங்களா? நானும் இவய்ங்க பழமைய கேட்டுகிட்டுதான் இருந்தேன். மாப்பு என்ன சொன்னாரு? ஜீன்ஸ்! அங்க பாருங்க. இவங்க சைசுக்கு ஜீன்ஸ் கிடைக்கலன்னு கிடைச்சத வாங்கி முட்டி வரைக்கும் வெட்டி ஆல்டரேசன் பண்ணி, மாவு மிசினுக்கு கட்டிவிட்ட துணி மாதர போட்டுகிட்டு நவீனம்னு சொல்லுறாய்ங்க. 

இந்த இடுகையப் பாருங்க. கோவைக்கு விமானமேறப் போனா காப்பிக் கடை தோழி கலியாணமாயிருச்சிங்களான்னு கேட்டுச்சி.சும்மா கால்ஃப் கால்ஃப்னு பேசினா ஆச்சா? என்னைய மாதிரி தொப்பி யாராச்சும் போட்டிருக்காங்களா. இவிங்கள்ளாம் கால்ஃப் குச்சிய இப்புடி புடிச்சா சுவத்துக்கு ஒட்டரை அடிக்கிறா மாதரயிருக்கும். 

கதிர்: ம்கும். காலையில நாலரை மணிக்கு தொப்பிய போட்டுகிட்டு திரிஞ்சா அய்யோ பாவம்னு கேட்டிருக்கும்.

வடிவேலு: அட இருங்க. வெள்ளையா இருக்கிறவரு பொய் சொல்ல மாட்டாரு. 

பழமை: இவிங்கள்ள யாரும் எழுத்தாளரில்ல. என்னோட புத்தகம் அமெரிக்கால ரிலீஸ் ஆகி, இப்ப இந்தியால ரிலீசாக போகுது. அதெல்லாம் உடுங்க. எங்கப்புச்சிகிட்டயே, கதவத் தொறந்து வச்சாலும் நீலமலைக் காத்து வரமாட்டிங்குதுன்னு சொன்னவன் நானு. இப்பச் சொல்லுங்க. ஒழுங்கு மரியாதைக்கு ‘பழமை பேசும் வழமைன்னு’ நான் எழுதறத போடச் சொல்லுங்கண்ணே. 

வடிவேலு: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. கண்ணகட்டுதே.  ச்சேரி! இருங்க பக்கிகளா. கேட்டுப் பார்க்கிறேன். நானே சிந்திச்சி யார ரெகமன்சன் பண்ணலாம்னு பார்க்கிறேன். அப்புறம் அண்ணன் மேல கோவிச்சிக்கக் கூடாது சரியா?

(எழுந்து போய் சிறிது நேரம் கழித்து)

வடிவேலு: சக்ஸஸ். சக்ஸஸ். தம்பிகளா! அண்ணன் நல்லா யோசனை பண்ணேன். உங்கள்ள ஒருத்தர ரெகமன்சன் பண்றத விட, நானும் பதிவர்தானே! 'மீ உருட்டி வண்டுன்னு’ நானே எழுதறேன்னு கேட்டேன். சரின்னுட்டாங்க.

வானம்பாடிகள், கதிர்,ஆரூரன்,பழமை,(ஃபோனில் நசரேயன்): ‘வட போச்சே’

வடிவேலு:  அத்த்த்த்த்த்து! பதிவரா லட்சணமா அதச் சொல்லிக்கிட்டே போய்க்கிருங்க.  போய் புள்ள குட்டிய படிக்கவைங்க போங்க. பேமஸ் பேமஸ்னு அலையாதீங்க. எனக்கு சூட்டிங்க் இருக்கு. வர்ட்டா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(இடுகையைப் படித்த பிறகு)
அது சரி: போற போக்கப் பார்த்தா நான் ‘அய்யாங்..டொய்ங் தொடர்ந்து எழுதணும்னு ஆ.வில இருந்து மெயில் வருமோ:O))

85 comments:

க.பாலாசி said...

ஸ்ட்டார்ட் மியூஜிக்......

ஸ்ரீராம். said...

கலக்கல்...

க.பாலாசி said...

//என்னையச் சொன்னேன் என்னையச் சொன்னேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.டிஸ்கிக்குள்ளையே டிஸ்கி போட விட்டாய்ங்களே..//

அப்பாடி நாங்கூட என்னையோன்னு நெனச்சேன்....

க.பாலாசி said...

//நீ யாரு அத்தச் சொல்லு முதல்ல.//

ஏ.... ய்ய்ய்ய்யாரப்பாத்து என்னா கேள்வி கேக்குற.. மொவனே அவ்ளோத்தான் தெரிஞ்சிக்க... தமிழ்நாடே பத்திக்கினு எரியும்... ஒரு பிரபலப்பதிவரப்பாத்து என்னாக்கேள்வி கேக்குறாய்ங்க....

VISA said...

கலாட்டா:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் :))

க.பாலாசி said...

//வடிவேலு: என்னா விசயமா ஃபோன் பண்ணீங்க?//

ம்ம்ம்... ஈரோட்டுல ஒரு எண்ணக்கெணரு தெறக்கணும் வர்ரீயலா.... ங்ங்ங்கொய்யால உனக்கு போன் பண்ணதே பெரிசு....

க.பாலாசி said...

//கதிர்: வணக்கமண்ணே.//

வந்துட்டாருப்பா எங்கண்ணன்... பொங்கப்பானைக்கு வெள்ளையடிச்சாப்ல...

க.பாலாசி said...

//கதிர்: இஃகி இஃகி. உங்க ஊர்ல இருக்கமண்ணே. //

க்க்கும்... பொழுதுக்கும் இரயில் ஸ்டேசன் பக்கத்தாலயே சுத்திக்கிட்டிருந்தா இப்டித்தான் கேப்பாய்ங்க...

இராமசாமி கண்ணண் said...

ஆரம்பிச்சுடீங்களா திரும்பி.. கலக்குங்கய்யா கலக்குங்க :)

க.பாலாசி said...

//ஆரூரன்: தென்னுங் நாட்டாம. ஈரோட்டில இருந்து பின்னாடியே வரேன். என்றா யாரோ வர மாதர இருக்கேன்னு செத்த அக்கம் பக்கம் பாக்க மாட்டிங்களா? ஏனுங் பாலாண்ணா. இந்த நாயத்த கேளுங்க.//

க்க்கும். .ரோட்ல நேரா வர்ரவங்கள பாக்குறதே பெரிய விசயம்... இதுல அக்கம் பக்கம் வேறயா...

க.பாலாசி said...

//வா.பா. வாங்க வாங்க. நீங்க எங்க இந்த பக்கம். இது வடிவேலு வீடு பார்க்கலாம்னு வந்தா நீங்க இங்க எப்படி?//

ஆகா... இந்த பெரிசுங்கள்லாம் ஒண்ணு கூடிட்டாங்களே......

Subankan said...

:)))

க.பாலாசி said...

//வா.பா: ஒன்னுமில்லண்ணே. வடை//

என்னதான் இருந்தாலும் வடைய உடமாட்டுங்கிறாங்களே....

க.பாலாசி said...

//வடிவேலு: கால்ஃப்! நீய்யி!! அந்த மட்டை உயரமிருப்பியா. நீ ஆடினன்னா எவன் நம்புவான்.//

மாப்பு... வச்சிட்டான்யா ஆப்பு.... அவ்வ்வ்வ்வ்வ்............

க.பாலாசி said...

//கதிர்:அந்தாளு மாதர யூத்தா இருக்காரா? வேணும்னா தலைப்புக்கு நன்றின்னு போட்டுக்குறேன். நான் எழுதறத போட சொல்லுங்கண்ணே.//

அதானே வரலாறு முக்கியமாச்சே....

க.பாலாசி said...

//ஆரூரன்: இல்லண்ணே. இவங்க என்ன தகுதியிருக்குன்னு போட்டிக்கு வராங்கன்னு தெரியல. டி சர்ட்டு போட்டா சரியாப் போச்சா? மைனர் மாதிரி பட்டன தொறந்து விட்டுகிட்டு உள்ள போட்டிருக்கிற செயின் தெரிய வேணாமா?//

ஆரூரன் சார்... என்னமா நோட் பண்ணியிருக்காரு பாருங்க... அப்டியே சொல்லிட்டாங்களே ....நெம்ப நாளா வாட்ச் பண்ணிருப்பாங்ளோ..

அக்பர் said...

எப்போ தொடரை எதிர்பார்ர்க்கலாம் அண்ணா?

கலக்கல்.

க.பாலாசி said...

//வடிவேலு: அட இருங்க. வெள்ளையா இருக்கிறவரு பொய் சொல்ல மாட்டாரு.//

ஙங்ங்ங்ங்ன்ன்ன்ன்ன்ன்..........

றமேஸ்-Ramesh said...

அவ்வ்வ்வஃஃஃஃஃ
///ஏப்பா? இப்புடியெல்லாமா எழுதுவாய்ங்க? எனக்கு ஒரு பத்து படத்துக்கு காமெடி சீன் கிடைச்சிடும் போலயே. ச்சரி நீ சொல்லு. நீ என்ன பீலா உடப்போற?////
ரிப்பீட்டு

பிரபாகர் said...

இடுகை போட்டு மூனு நிமிஷம்தானே ஆகுதுன்னு, வடைக் கொத்தி பறவை (வடை நமக்குத்தான்னு)ன்னு வ்ந்தா, 20 பின்னூட்டம்... அய்யா, வணக்கமய்யா!

பிரபாகர்...

டிஸ்கி: படிச்சிட்டும் பின்னூட்டம் போடுவோம்ல!

சி. கருணாகரசு said...

அய்யா வணக்கம்.

கலகலப்பா இருக்கு.....

dheva said...

பாலண்ணே...@ நீங்க.. கண்டிப்பா வைத்திய செலவுக்கு பணத்த மணியார்டர் பண்ணுங்கண்ணே....

தேவா
விவேகானந்தர் குருக்குத்தெரு
பஸ் ஸ்டாண்ட் பின்புறம்...(முட்டுச்சந்து ஓரம்)
துபாய்.


ஆமாண்ணே..சிரிச்சி சிரிசி.. வயித்தெலும்பு எல்லாம் நோவுதுண்ணே...டாக்டர் பீச கொடுதுருங்க...இப்புடியா காமெடி பண்ணுவீக....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

பின்னோக்கி said...

கொஞ்ச நாள் சும்மா இருந்த மாதிரி இருந்தது. ஆரம்பிச்சுட்டீங்க போல :)...

ஈரோடு கதிர் said...

அய்யோ அய்ய்ய்ய்யோ இந்த பாலாசி பய அத்தனை வடையையும் தின்னுடுச்சே!!!

ஈரோடு கதிர் said...

உள்ளூர்காரங்க ஆட்டோல.. மாப்பு மட்டும் கால் டாக்ஸியாக்கும்..
அதுனால தான் கோழிகூப்படக்கூட அந்த அம்மனி பிட்டு போட்டுச்சாக்கும்

ஈரோடு கதிர் said...

|| வெள்ளையா இருக்கிறவரு பொய் சொல்ல மாட்டாரு. ||

அப்போ மாப்பு சொன்னது நெசந்தானுங்ளா

பிரபாகர் said...

வலையுலக வடிவேலு என் அய்யாவில் அசத்தல் இடுகை இதைப் படித்து வயிற்றுவலியோடு கண்களில் நீர்! போதுமய்யா! போதும்... சிரிச்சி மாளல!

பிரபாகர்...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அப்ப அவரு அப்பரண்டிஸ் இல்லையா? நீங்களாத்தான் போய் பொறில சிக்கிட்டீங்க அவ்வ்வ்வ்..! :)

வானம்பாடிகள் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அப்ப அவரு அப்பரண்டிஸ் இல்லையா? நீங்களாத்தான் போய் பொறில சிக்கிட்டீங்க அவ்வ்வ்வ்..! :)//

தப்பு தப்பா இங்கிலீஸ் பேசப்படாது. அப்ரண்டிஸ் இல்ல அப்பரசண்டி:))

V.Radhakrishnan said...

வடை கொத்திப் பறவையா, காக்கானு சொல்லு. ஹா ஹா ஹா!

ஆங்காங்கே வைக்கப்பட்ட பொடிகளில் தும்மலுக்கு பதில் சிரிப்பலை எழுந்தது. நன்றி ஐயா.

இராகவன் நைஜிரியா said...

சென்னையில் இருக்கும் என்னை கூப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

பின்னூட்டம் போட மட்டும் இராகவன்... மீட்டிங்குக்கு எல்லாம் கிடையாதா...

இதை கேட்க யாருமே இல்லையா

இராகவன் நைஜிரியா said...

// பதிவுலக காமெடி பீசும் [என்னையச் சொன்னேன் என்னையச் சொன்னேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.டிஸ்கிக்குள்ளையே டிஸ்கி போட விட்டாய்ங்களே..] //

இப்படியெல்லாம் வேற பட்டம் கொடுக்கறாங்களா என்ன?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
// பதிவுலக காமெடி பீசும் [என்னையச் சொன்னேன் என்னையச் சொன்னேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.டிஸ்கிக்குள்ளையே டிஸ்கி போட விட்டாய்ங்களே..] //

இப்படியெல்லாம் வேற பட்டம் கொடுக்கறாங்களா என்ன?//

ஏண்ணே. இடுகையப் படிச்சுமா இப்படிக் கேக்கறீங்க. நமக்கு நாமே சொறிஞ்சிக்கணுணே.

வானம்பாடிகள் said...

பின்னூட்டம் போட மட்டும் இராகவன்... மீட்டிங்குக்கு எல்லாம் கிடையாதா...

இதை கேட்க யாருமே இல்லையா//

நீங்க அன்னைக்கு திருப்பூர்ணே.:)) எப்புடீ.

கே.ஆர்.பி.செந்தில் said...

எனக்கு மீன் கொத்திப் பறவை ( King Fisher) மட்டும்தான் தெரியும் ...

Chitra said...

வடிவேலு: அல்லோ! சொல்லுங்கண்ணே. அமெரிக்கால்லாம் எப்புடியிருக்கு. ஹாலிவுட்ல ஒரு காமெடி சீனு வாங்கிக் கொடுங்கண்ணே. கழுத ஆஸ்கார் ஒன்ன வாங்கிப் போட்டா கெடக்கும். என்னண்ணே? நான் எல்ப் பண்ணனுமா? சொல்லுங்கண்ணே. மனுசன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவாம முடியுமா?


....... அதானே, வாங்கி போட்டா அது பாட்டுக்கு ஒரு பக்கம் கிடந்துட்டு போகுது.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமெடி!

Mahi_Granny said...

ஏப்பா? இப்புடியெல்லாமா எழுதுவாய்ங்க?சான்சே இல்ல . சிரிச்சு மாளல

பழமைபேசி said...

முடியல...... அண்ணே....

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இவளவு சிரமம் எதற்கு ஐயா . ஒரு ஆட்டோ அனுப்பினா வடிவேலு இங்கு வந்துட்டு போறாரு !?

நசரேயன் said...

//ஆ.வில இருந்து மெயில் வருமோ//
ஆட்டோ விலே வரும்

கலகலப்ரியா said...

ஏன் சார் இந்த கொலை வெறி... ஸ்ஸ்ஸபா.. முடியல..

அது சரி said...

//

ஆரூரன்: தென்னுங் நாட்டாம. ஈரோட்டில இருந்து பின்னாடியே வரேன். என்றா யாரோ வர மாதர இருக்கேன்னு செத்த அக்கம் பக்கம் பாக்க மாட்டிங்களா? ஏனுங் பாலாண்ணா. இந்த நாயத்த கேளுங்க.
//

:-)))))))

அது சரி said...

//

வடிவேலு: அட காக்கான்னு சொல்லிட்டு போவேண்டியதுதானே. அதென்ன வடை கொத்திப் பறவை. அது ஆவில வரதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும்.
//

அதான? என்னா பெரிய வடை கொத்தி பறவை, இட்லி திங்கிற பறவைன்னு? காக்கான்னு வைங்க...இன்னும் அழுத்தமா, சீரியஸ் தொடர்னா அண்டங்காக்கான்னு வைங்க...

அது சரி said...

//

வடிவேலு: (படித்துவிட்டு) ஏப்பா? இப்புடியெல்லாமா எழுதுவாய்ங்க? எனக்கு ஒரு பத்து படத்துக்கு காமெடி சீன் கிடைச்சிடும் போலயே. ச்சரி நீ சொல்லு. நீ என்ன பீலா உடப்போற?
//

கோலா பூஃப்க்கு போட்டியா பின்லேடன் பெப்சி பூஃப் எறக்கிட்டாராம்...

அது சரி said...

//

வா.பா. தோ பாருண்ணே. எனக்கும் தொப்பையிருக்குண்ணே. அப்புறம் நான் கூட ஒரு இங்கிலீசு புக்கு படிச்சிட்டு அதுக்கு மொழி பெயர்ப்பு போட்டேண்ணே. அப்புறம் ஜெர்மன் மொழில டங்கே, உந்த், ஷோன், சண்டாக் எல்லாம் தெரியும்ணே. மதுராந்தகத்துக்கு போய்ட்டு மாண்டி நீக்ரோ போனேன்னு சொல்லிக்குவண்ணே. ப்ளீஸ்ணே.
//

ம்கும்...செல்லாது செல்லாது...ஒங்களுக்கு சிலேவுல என்ன மொழி பேசறாங்கன்னு தெரியுமா? அது கூட தெரியாம என்ன தைரியத்துல எழுத வர்றீங்க?

அது சரி said...

//

நசரேயன்: அண்ணே! வரலாறு முக்கியம்ணே. ஒரு பாண்டியனுக்கு இன்னோரு பாண்டியன் உதவாம, சேர, கொங்கு, பல்லவ பரதேசிக்களுக்கு உதவினான்னு ஆயிரும்ணே. அவிய்ங்களுக்கு என்ன தகுதியிருக்குண்ணே. அந்தாள மாதிரி தோழியிருக்கா? துண்டு போடத் தெரியுமா? மெக்ஸிகோகாரி ‘ஓலா’ன்னு சொன்னா கெட்ட வார்த்தைன்னு சண்டைக்கு போவாய்ங்கண்ணே.
//

ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கே இல்லியே...இது நெசமாவே தளபதி ஸ்டேட்மெண்டா இல்லை நீங்க அள்ளி விடறீங்களா?

அது சரி said...

//

கதிர்: ம்கும். காலையில நாலரை மணிக்கு தொப்பிய போட்டுகிட்டு திரிஞ்சா அய்யோ பாவம்னு கேட்டிருக்கும்.
//

இப்பிடில்லாம் புரளியை கெளப்பி விடாதீங்க கதிரு....கழட்டினால்ல போடறதுக்கு?

அது சரி said...

//

வடிவேலு: சக்ஸஸ். சக்ஸஸ். தம்பிகளா! அண்ணன் நல்லா யோசனை பண்ணேன். உங்கள்ள ஒருத்தர ரெகமன்சன் பண்றத விட, நானும் பதிவர்தானே! 'மீ உருட்டி வண்டுன்னு’ நானே எழுதறேன்னு கேட்டேன். சரின்னுட்டாங்க.
//

எனக்கு பீ உருட்டி வண்டு தான் தெரியும்...அதென்னா மீ உருட்டி வண்டு?

அது சரி said...

வானம்பாடிகள், கதிர்,ஆரூரன்,பழமை: வட போச்சே

நசரேயன் (ஃபோனில்) : வட பேச்சே

அது சரி said...

//

அது சரி: போற போக்கப் பார்த்தா நான் ‘அய்யாங்..டொய்ங்’ தொடர்ந்து எழுதணும்னு ஆ.வில இருந்து மெயில் வருமோ:O))
//

அது வேறயா? சீரியஸா பேசிட்டுருந்தவனை சிரிப்பு போலீசாக்கிட்டு அதை தொடர்ந்து வேறயா?

நீங்க பஸ்சுக்கு வாங்கப்பு...வச்சிக்குறோம் :))

நேசமித்ரன் said...

நல்லா சிரிக்க வச்சீங்க சார் :)))

பா.ராஜாராம் said...

பாலாண்ணா,

இயற்கையாய், சந்தோசமாய் இருப்பது எப்படி?

இப்படித்தான்! இல்லையா?

மணிநரேன் said...

:)

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்......கலக்கல்.....

சிரிச்சி மாளல.....ம்ம்ம்ம் நடத்துங்க...நடத்துங்க.....

ஜெட்லி... said...

காமெடி சரவெடி....

வெறும்பய said...

அய்யா வணக்கம்.

கலக்கல்..நல்லா சிரிக்க வச்சீங்க !!

முகிலன் said...

12 மணி நேரம் லேட்டா வந்து வடை வச்சிருந்த சட்டி கூட இல்லை.. ;(

நாடோடி said...

ஆஹா... சிரிப்பு தாங்க‌லை.... :)))))

திருஞானசம்பத்.மா. said...

எவ்ளோ நீளம்..!!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

எல்லாமே செம சிரிப்பு :)

sakthi said...

சரியான ரசனை அண்ணா உங்களுக்கு

அருமை

ஈரோடு கதிர் said...

அடடே..

400 இடுகைக்கு வாழ்த்துகள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-)))

க.பாலாசி said...

அட நானூறு ஆயிடுச்சா.... எழுதுங்க..எழுதுங்க...

சத்ரியன் said...

//ஜீன்ஸ்! . இவங்க சைசுக்கு ஜீன்ஸ் கிடைக்கலன்னு கிடைச்சத வாங்கி முட்டி வரைக்கும் வெட்டி ஆல்டரேசன் பண்ணி, மாவு மிசினுக்கு கட்டிவிட்ட துணி மாதர போட்டுகிட்டு நவீனம்னு சொல்லுறாய்ங்க//

பாலா அண்ணே,

என்கிட்டயும் ஜீன்ஸ் பேண்ட் இருக்குண்ணே..!

பத்மா said...

நீங்க பதிவுலகத்தில இருக்க வேண்டிய ஆளே இல்ல சார் ..
என்ன ஒரு கற்பனை ,காமெடி! சிரிச்சு மாளலை

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அய்யோ அய்யோ .....

தமிழ் நாடன் said...

ஒரு கமெண்ட் போடனுன்னா எத்தனை கிலோமீட்டர் கீழே போவறது? தயவு செஞ்சு போஸ்ட் கமெண்ட மேலேயே வைங்க என்னா???!!

அப்புறம் பதிவு கலக்கல்! ஆனா வடிவேலுவை இன்னும் கொஞ்சம் பேசவிட்டிருக்கலாம்.

கலாநேசன் said...

//அட காக்கான்னு சொல்லிட்டு போவேண்டியதுதானே. அதென்ன வடை கொத்திப் பறவை.//

கலக்கல்...

தாராபுரத்தான் said...

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும்.. போல இருக்குதுங்க..நெசமாலுமே வரப்போறமில்ல..அப்ப பாருங்க ..

பட்டாபட்டி.. said...

கலக்கல் சார்.. ஹா.ஹா

வானம்பாடிகள் said...

@@நன்றி பாலாசி. கும்மியாச்சா:))
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி விசா
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றி சுபாங்கன்
@@நன்றி றமேஸ்
@@நன்றி அக்பர்
@@நன்றி பிரபா
@@நன்றி கருணாகரசு
@@நன்றி தேவா

வானம்பாடிகள் said...

@@நன்றி கதிர்
@@நன்றி ஷங்கர்
@@நன்றி செந்தில்
@@நன்றி சித்ரா
@@நன்றிங்க மஹி_க்ரான்னி
@@நன்றிங் பழமை
@@நன்றிங்க ராதாகிருஷ்ணன்
@@நன்றிங்க பனித்துளி

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

//ஆ.வில இருந்து மெயில் வருமோ//
ஆட்டோ விலே வரும்//

நாம பார்க்காத ஆட்டோவா

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

ஏன் சார் இந்த கொலை வெறி... ஸ்ஸ்ஸபா.. முடியல..//

ஹி ஹி..ச்ச்ச்ச்சும்மா. வெளாட்டுக்கு

வானம்பாடிகள் said...

அது சரி said...
//
ம்கும்...செல்லாது செல்லாது...ஒங்களுக்கு சிலேவுல என்ன மொழி பேசறாங்கன்னு தெரியுமா? அது கூட தெரியாம என்ன தைரியத்துல எழுத வர்றீங்க?//

ப்ளாக்கர்ல பதியும்போது டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ல இது இல்லீங்ணா.:))

/ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கே இல்லியே...இது நெசமாவே தளபதி ஸ்டேட்மெண்டா இல்லை நீங்க அள்ளி விடறீங்களா?//

பேசறப்ப கூடவா ஸ்பெல்லிங் மிஸ்டேக் போடுவாரு:))

/இப்பிடில்லாம் புரளியை கெளப்பி விடாதீங்க கதிரு....கழட்டினால்ல போடறதுக்கு?//

அதான:))

//அது வேறயா? சீரியஸா பேசிட்டுருந்தவனை சிரிப்பு போலீசாக்கிட்டு அதை தொடர்ந்து வேறயா?

நீங்க பஸ்சுக்கு வாங்கப்பு...வச்சிக்குறோம் :))//

ஹி ஹி. எத்தன மணி பஸ்ஸுங்ணா:))

வானம்பாடிகள் said...

@@நன்றி நேசமித்திரன்
@@ஆமாங்க பா.ரா. இப்படியும்:))
@@நன்றி மணிநரேன்
@@நன்றி ஆரூரன்
@@நன்றி ஜெட்லி
@@நன்றிங்க வெறும்பய
@@நன்றி முகிலன்
@@நன்றி நாடோடி
@@நன்றிங்க ஜில்தண்ணி
@@நன்றிங்க திரு
@@நன்றிங்க சக்தி

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...
அடடே..

400 இடுகைக்கு வாழ்த்துகள்//

நன்றி கதிர்.

வானம்பாடிகள் said...

@@நன்றி ஆதி
@@நன்றி சத்திரியன்
@@நன்றிங்க தமிழ்நாடன்
@@நன்றிங்க பத்மா
@@மீண்டும் நன்றி பாலாசி
@@நன்றிங்க மணி
@@நன்றிங்க கலாநேசன்
@@அண்ணே வாங்க நேர பேசுவோம்:))
@@நன்றி பட்டா

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஆஹாஹா......அருமை......சிரித்து....சிரித்து வயிறு வலிதான் போங்கள் ஐயா........ என்னா....மொழி ஐயா இது?

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஆஹாஹா......அருமை......சிரித்து....சிரித்து வயிறு வலிதான் போங்கள் ஐயா........ என்னா....மொழி ஐயா இது?

இது நம்ம ஆளு said...

ந்திச்சி ரொம்ப நாளாச்சா அதான்)

:)

சிங்கை நாதன்/SingaiNathan said...

ஆஹா எவ்ளோ மிஸ் பண்ணியிருக்கிறேன் ;)) ஆமா அது யாருண்ணே கார்த்தி ? நம்ம சென்ஷிக்கு போட்டியா ? கொஞ்சம் அட்ரஸ் குடுங்க ஆட்டைய போடணும்

அன்புடன்
சிங்கை நாதன்