Monday, July 19, 2010

நறுக்னு நாலு வார்த்த V4.7


அவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்...ப.சிதம்பரம்.

ஹி ஹி. அவரு என்னா அரசியல்வியாதியா? இதுக்கு ராஜீவ் என்னா? ஜெயவர்த்தன சொன்னத கேட்டிருந்தா போறாது?
_________________________________________________________________
இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். ப.சிதம்பரம்.

அட மொத்த கணக்க உடுங்க. கடைசி நாள் எத்தனபேரு? யாரெல்லாம் காரணம்னு சொல்லலாம்லங்க. வரலாறு முக்கியம் அமைச்சரே:)
_________________________________________________________________
இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... அவரேதான்.

அண்ணோவ். வெவரம் ப்ளீஸ். ராடார் வச்ச கணக்கெல்லாமும் சேர்த்தா?
_________________________________________________________________
 ஆக்கிரமிக்கப்படவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய செயற்படுமாறும் அவர்கள் வடக்கு கிழக்கு அரச அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்... அண்ணனேதான்.

ங்கொய்யால. குந்த குடிசையில்ல. அத புடுங்கிட்டு துட்டு தருவாராம். கோவணத்துல சொருகி வச்சாலும் ஆமிக்காரன் புடுங்கிட்டு உட்டுடுவானே. அகுடியா குடுக்குறாரு.
_________________________________________________________________
அவர்களது சொந்த வங்கிக் கணக்குக்களுக்கு நேரடியாகவே பணத்தினை அனுப்ப முற்பட்ட வேளை அவ்வாறு அனுப்ப முடியாது என்றும் பணம் தமது அரசின் ஊடாகவே கையளிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. செய்தி.

அத்த்த்து! இவன் என்ன கேனையா. இவன் அடிச்சது போக மிச்சம் குடுப்பான். அத ஆமிக்காரனும், கோடாரிக்காம்பும் புடுங்கிட்டு உட்டுரும்.
_________________________________________________________________
இலங்கை தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையினால் இங்குள்ள நிலைமை தொடர்பில் ஆராய இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரை அனுப்பவேண்டிய அவசியம் தற்போது இல்லை ...டலஸ் அழகப்பெரும.

பருப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையால் யாரும் காசு தரவேணாம்னு சொல்லுவானுங்களா பரதேசிங்க?
_________________________________________________________________
ஆடைகளுக்காக நாட்டின் இறைமையை அடகு வைக்க முடியாது : அரசாங்கம்

இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியல. உங்களை எவனாவது அடமானம் கேட்டான். வாங்கிக்கங்கடான்னு எல்லாரும் கால நக்குற திமிரு பேசச் சொல்லுது.
_________________________________________________________________
ஜெ., வாயில் வந்ததையெல்லாம் பேச வேண்டாம் : கலைஞர் எச்சரிக்கை

ஏனுங்க? எழுதி வச்சி படிச்சா பரவால்லையா? இல்ல அதும் ஆளும்கட்சிதான் பேசலாமா?
_________________________________________________________________
மு.க.அழகிரியின் மொழி பிரச்சனைக்கு தீர்வு

இன்னாது? யாருக்கு மொழி பிரச்சன? நெனச்சா இட்டாலியன் சப்டைட்டிலோட டிவிடியே விடுவோம்டி.
_________________________________________________________________
புகாரை நிரூபிக்க ஜெ. தயாரா? கலைஞர் கேள்வி

அட ஏன் தலைவரே அவங்கள கேட்டுகிட்டு. பொய்ப்புகார்னு நாம நிரூபிச்சிட்டு போறது.
_________________________________________________________________
காங்., உறுப்பினர்கள் பேட்டி அளிக்கக் கூடாது: தங்கபாலு

வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தாலும் இவரு கொடுக்கமாட்டாரு போலயே! இந்தாளு பேசாம இருந்தாலே பாதி பிரச்சனை இருக்காது.
_________________________________________________________________
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி 

பதில் இருக்கும். அதில் நிஜமிருக்குமா?
_________________________________________________________________
மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சோனியா

சே போங்கப்பா ஜோக்கடிச்சிகிட்டு. அவுங்க இத்தாலிக்கே திரும்பி போனாலும் அவுங்கதான் காங்கிரசு. காங்கிரசுதான் அவுங்க. 
_________________________________________________________________
திருப்பதி நகைகள் மாயமாகவில்லை!

இத சொல்ல ஏம்பா இவ்வளவு நாள்? உட்டா சாமி சேட்டுகிட்ட அடமானம் வெச்சிட்டு சீட்டாடி தோத்துட்டாரு மீட்டுகிட்டு வந்தோம்னு சொல்லுவானுங்க.
_________________________________________________________________
எந்த மந்திரி ஓட்டலில் பேருந்தை நிறுத்துவது: அரசு டிரைவர்கள் கேள்வி?

அட இது ஒரு பிரச்சனையா? போகும்போது ஒருத்தரு ஓட்டல் , வரும்போது ஒருத்தரு ஓட்டல். உங்களுக்கு ஓசில கெடைக்குதா அதப்பாருங்கப்பு. 
****************************

108 comments:

பிரபாகர் said...

வழக்கம்போல் துண்ட போட்டுடறேன்... அப்புறமா பின்னூட்டம்...

பிரபாகர்...

அஹமது இர்ஷாத் said...

ரைட்டு... இருங்க படிச்சிட்டு வர்றேன்..

பிரபாகர் said...

//
அவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்...ப.சிதம்பரம்.//

ப.சிதம்பரம் எல்லாம் ஒரு மனுஷன்...வெக்கமா இருக்கய்யா!

பிரபாகர்...

அஹமது இர்ஷாத் said...

இந்தாளு பேசாம இருந்தாலே பாதி பிரச்சனை இருக்காது.//

அவரு என்னைக்கி பேசுனாரு.. போன பார்லிமெண்ட்'ல கேள்வியே கேட்காதவங்க லிஸ்ட்ல அண்ணாத்தே மொத பத்து பேர்'ல ஒருத்தரு தெரியும்'ல..

கலகலப்ரியா said...

||இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். ப.சிதம்பரம்.||

பேரிழப்புன்னா... பேர மாத்தி வச்சுக்கிட்டத கேக்குறாரா..?

உயிரிழந்து அப்புறம் எப்டி உள்ளனர்?

லாஜிக்கலா பேசவே மாட்டாய்ங்களா...

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் நறுக்குன்னு கேட்டுருக்கீங்க.

அசத்தல்.

கலகலப்ரியா said...

||ஜெ., வாயில் வந்ததையெல்லாம் பேச வேண்டாம் : கலைஞர் எச்சரிக்கை||

ஏன்.. “எச்ச”ன்னு சொல்லிட்டாய்ங்களா...

கலகலப்ரியா said...

||அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ||

அளிங்க... தப்பு சரி பார்த்து மார்க்ஸ் போட்டுக் கொடுப்பாய்ங்க...

கலகலப்ரியா said...

பாலா சார்... இப்டி அடிக்கடி நியூஸு போடுங்க சார்...

அப்டியே பின்குறிப்பில... ஜெ... கலைஞர்... காங்... நாராயண... சிதம்பரம் எல்லாம்... யாருன்னு... அடைப்புக்குறிக்குள்ள போடுங்க சார்... ஒரு எளவும் புரிய மாட்டேங்குது...

கலகலப்ரியா said...

||மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சோனியா||

இதாரு புதுசா..?

(நாந்தேன் அப்பவே சொன்னென்ல சார்... அடைப்புக்குறிக்குள்ள போடுங்கன்னு..)

கே.ஆர்.பி.செந்தில் said...

ராஜபக்சே அரசுக்கு சிதம்பரம் புள்ளிவிவரம் தர்றாரு.. நல்ல காமெடி சார்..

சோனியா தலைவர்.. ராகுல் பிரதமர்.. நமக்கு துண்டு... கூடிய சீக்கிரம் பிரிட்டிஷ் மாதிரி இத்தாலி நம்மை ஆளும்..

எந்த மந்திரி ஓட்டல்ல நிறுத்தினாலும் ரெண்டு ரூவா கொடுத்துதான் ஒன்னுக்கு அடிக்கணும்...
சுடுதண்ணிய டீன்னு குடிக்கணும்.. அங்கு போடும் நாட்டுப்புற பாடல்கள்? மாதிரி ஆயிட்டோம் நாம...

பிரபாகர் said...

//அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி//

ஒன்னாவது படிக்கிற யாராவது பசங்க பாடத்தில வர சந்தேகத்துக்கு...

பிரபாகர்...

ராஜவம்சம் said...

நக்கலும் உண்மையாக.

இராமசாமி கண்ணண் said...

ப.சி நீங்களும் இப்ப ஒரு காமெடி பீஸா :)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////புகாரை நிரூபிக்க ஜெ. தயாரா? கலைஞர் கேள்வி

அட ஏன் தலைவரே அவங்கள கேட்டுகிட்டு. பொய்ப்புகார்னு நாம நிரூபிச்சிட்டு போறது./////////சரியா கேட்டிங்க போங்க !

அய்யா இப்ப தலைவரோட மற்றொரு பஞ்ச் என்ன தெரியுமா ? நீங்க சொன்னது போல அறிக்கை கொடுப்போம் கேட்கலைனா நம்ம பயலுகட்ட சொல்லி அறுக்கக் கொடுப்போம் ! பாவம் தமிழ் நாட்டு மக்கள் . இவர்கள் நாடகத்தைப் பார்த்தாலும் பிரச்னை , பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை என்று பதறும் அளவிற்கு ஆகிபோச்சு இவர்களின் அரசியல் கூத்து . கேள்விகள் அனைத்தும் சாட்டை அடிகள்தான் என்ன பண்ணுவது உங்களின் ஆதங்கத்தை போல தினமும் செய்தித்தாள்களில் வரும் மக்களின் கஷ்டங்களை இவர்கள் தினமும் படித்திருந்தால் எதற்கு இந்த கேள்விகள் எல்லாம் வரப்போகிறது . பகிர்வுக்கு நன்றி ஐயா !

Srinath said...

வீடு கட்டும் செலவு 1௦௦௦. கோடி அது அடிச்சி நவுதுற செலவு 26௦௦ கோடி. இந்திய அரசாங்கத்தின் சொப்பு சாமான் விளையாட்டு ... கடவுளே !!! :D

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சும்மா நச்சுன்னு நறுக்கா இருக்கு..

கிருத்திகன் said...

வன்மையாய்க் கண்டிக்கிறேன். பதிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத தலைப்பு இது பாலா... அடைப்புக்குள் சிதம்பரம் ஸ்பெஷல் எண்டு போட்டா குறைஞ்சா போவியள்... அவ்வ்வ்வ் :))

நேசமித்ரன் said...

சுடச் சுட இருக்கு சார் கமெண்ட் ஒன்னொன்ணும்

நறுக் சுருக்ஸ்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//ஒருத்தரு ஓட்டல் வரும்போது ஒருத்தரு ஓட்டல்//
அருமை .
(:

தாராபுரத்தான் said...

இன்றைய செய்தி..நாளைய வரலாறு.

காமராஜ் said...

//திருப்பதி நகைகள் மாயமாகவில்லை!


இத சொல்ல ஏம்பா இவ்வளவு நாள்? உட்டா சாமி சேட்டுகிட்ட அடமானம் வெச்சிட்டு சீட்டாடி தோத்துட்டாரு மீட்டுகிட்டு வந்தோம்னு சொல்லுவானுங்க.
_________________________________________________________________
எந்த மந்திரி ஓட்டலில் பேருந்தை நிறுத்துவது: அரசு டிரைவர்கள் கேள்வி?


அட இது ஒரு பிரச்சனையா? போகும்போது ஒருத்தரு ஓட்டல் , வரும்போது ஒருத்தரு ஓட்டல். உங்களுக்கு ஓசில கெடைக்குதா அதப்பாருங்கப்பு. //


சீரியஸ்ஸா சிரிக்கவச்சுக்கிடே வந்து.
கடைசியில சத்தம்போட்டு சிரிக்கவச்சுட்டிங்கண்ணா.

இப்படிக்கு நிஜாம் ..., said...

ஆகா! அண்ணே மறுபடியும் ஆரம்பிச்சுட்டாருய்யா! இனிமே ராஜீவ் குடும்பத்திலிருந்து ராசபக்ச குடும்பம் வரை டர்ர்ர்ர்ர்ர் தான்..,

இப்படிக்கு நிஜாம் ..., said...

ஓட்டல் பிரச்சனைக்கு ஒரு தீருவு குடுத்திட்டீயண்ணே! நீங்க சொன்ன இந்த வாசகத்த அப்படியே பிரிண்ட் போட்டு டிரைவர் முன்னாடி ஒட்டியிருக்கும் "டீசல் சிக்கனம் தேவை இக்கனம்" ங்கிற ஸ்டிக்கருக்கு கீழ ஒட்டிட வேண்டியது தான்.

இப்படிக்கு நிஜாம் ..., said...

கொஞ்ச நாளைக்கு மெஹா டிவி பாக்காம இருங்க. தலைவர் தங்கபாலு உங்களப்பத்தியும் அறிக்கை விட்டு அத மெஹா செய்திகள்ள சொன்னாலும் சொல்லுவாங்க‌

இப்படிக்கு நிஜாம் ..., said...

கொஞ்சம் காங்கிரஸ் காரம் தூக்கலா இருக்கே அண்ணே! என்ன மேட்டரு??

யாசவி said...

welcome and after long time return with P.C.

go ahead :)

actually less chilly

யாசவி said...

:)

புலவன் புலிகேசி said...

//ஆடைகளுக்காக நாட்டின் இறைமையை அடகு வைக்க முடியாது : அரசாங்கம்
//

அப்பறம் இவிங்களுக்கு பணம் கம்மியாக் கெடச்சிருக்கும். அதனால இறையான்மை அது இதுன்னு சொல்லித் திரியிறானுங்க.

ஜோதிஜி said...

எதிர்பார்த்து காத்து இருந்த ஏக்கத்தை போக்கி விட்டீர்கள்.

தங்கபாலு,,,,,,,,,.......

சிரித்து வயிறு புண்ணாகிப்போனது.

முகிலன் said...

ரொம்ப நாளா நறுக்குனு நாலு வார்த்தை எழுதலையேன்னு கேட்கணும்னு இருந்தேன். நல்ல வேளை போட்டுட்டீங்க.

முகிலன் said...

//இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்//

முடிசூடா மன்னன் அப்பிடின்னா பாலா சார் மாதிரியா?

முகிலன் said...

//எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். ப.சிதம்பரம்//

இவ்வளவு நாளு கண்ணுக்கே தெரியாம இருந்திருக்கு. கண்ணாடியைத் தொடச்சிட்டே இருந்திருப்பாரு போல மனுசன்.

முகிலன் said...

//தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.//

50 ஆயிரம் தமிழர்கள்தான் இருக்காங்களா? சொச்சமெல்லாம்?

அது சரி, அந்த இடங்கள்ல சிங்களவர்களைக் குடியேத்திக்கிட்டு இருக்காங்களாமே? அவங்களுக்கு வீடு கட்டித்தர இலங்கை அரசுக்கிட்ட பணமிருக்காமா?

முகிலன் said...

//தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய செயற்படுமாறும் அவர்கள் வடக்கு கிழக்கு அரச அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்//

இவரு இந்திய உள்துறை அமைச்சர் இல்லையா?

முகிலன் said...

//தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையினால் இங்குள்ள நிலைமை தொடர்பில் ஆராய இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரை அனுப்பவேண்டிய அவசியம் தற்போது இல்லை//

இந்தியா தூதர் வந்துட்டா மட்டும்?

முகிலன் said...

//ஆடைகளுக்காக நாட்டின் இறைமையை அடகு வைக்க முடியாது : அரசாங்கம்//

இறையாண்மையை அடகு வச்சா உலக வங்கி கடன் குடுக்காதாம்ல.

முகிலன் said...

//சொந்த வங்கிக் கணக்குக்களுக்கு நேரடியாகவே பணத்தினை அனுப்ப முற்பட்ட வேளை அவ்வாறு அனுப்ப முடியாது என்றும் பணம் தமது அரசின் ஊடாகவே கையளிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. செய்தி//

யாரோ என்னோட பதிவுல இலங்கை அரசாங்கம் தன்கிட்ட பணம் குடுக்கச் சொல்லலைன்னு பின்னூட்டினாங்களே? இப்ப என்ன சொல்லப்போறீங்க?

முகிலன் said...

//வாயில் வந்ததையெல்லாம் பேச வேண்டாம் : கலைஞர் எச்சரிக்கை//

இவரு மகனுக்கு வாய் வராததுக்காக மத்த எல்லாரையும் வாய் திறக்கப்படாதுன்னெல்லாம் சொல்லக்கூடாது

முகிலன் said...

//மொழி பிரச்சனைக்கு தீர்வு//

அப்ப இனிமே எல்லாரும் இந்தி மட்டும்தான் படிக்கனுமா?

முகிலன் said...

//காங். உறுப்பினர்கள் பேட்டி அளிக்கக் கூடாது: தங்கபாலு//

காங். உறுப்பினர்கள் தானே. தலைவர்கள் குடுக்கலாமா?

பிரபாகர் said...

//முகிலன் said...
//மொழி பிரச்சனைக்கு தீர்வு//

அப்ப இனிமே எல்லாரும் இந்தி மட்டும்தான் படிக்கனுமா?
//
அவிங்க பேமிலியில எல்லாரும் இந்தி படிப்பாங்க! ஓடாத டிராக்கில தலைய வெச்சி போராட்டம் பண்ணினதால தமிழன் ஒவ்வொருத்தரும் படிக்கக்கூடாது!

பிரபாகர்...

முகிலன் said...

//காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சோனியா//

சோனியா காங்கிரஸ் எப்போது ஆகும்?

முகிலன் said...

தனியா டீ ஆத்திக்கிட்டு இருக்கேனே. யாரும் இல்லையா?

பிரபாகர் said...

//காங். உறுப்பினர்கள் பேட்டி அளிக்கக் கூடாது: தங்கபாலு//

மொதல்ல வேட்டியே அளிக்கக்கூடாது! ஒருத்தனோட வேட்டிய உருவறதுக்கு ஒம்போது கோஷ்டிங்க ரெடியா இருக்கு!

பிரபாகர்...

பிரபாகர் said...

//காங். உறுப்பினர்கள் பேட்டி அளிக்கக் கூடாது: தங்கபாலு//

உலகத்திலேயே சிறந்த காமெடி பீஸ் எது?

வடிவேலு?

நங்! தலையில ஒரு கொட்டு....

தங்கபாலு...(காங்கிரஸ் காரனுங்க எல்லாரும் போட்டிக்கு வந்தாலும், தூக்கியெறிஞ்சி முன்னால வரது...ஹி ஹி...)

முகிலன் said...

// கலகலப்ரியா said...
||மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சோனியா||

இதாரு புதுசா..? //

வெனீஸ்ல இருந்து புனைவு எழுதிட்டு சோனியா யாரா? ஹல்ல்ல்ல்ல்ல்லோ வெனிஸை விட்டு வெளியேற முடியாது தெரியும்ல..

பிரபாகர் said...

//முகிலன் said...
ரொம்ப நாளா நறுக்குனு நாலு வார்த்தை எழுதலையேன்னு கேட்கணும்னு இருந்தேன். நல்ல வேளை போட்டுட்டீங்க.
//
நறுக்னு நாலு வார்த்தையிலா?

பிரபாகர்...

முகிலன் said...

// பிரபாகர் said...
//முகிலன் said...
ரொம்ப நாளா நறுக்குனு நாலு வார்த்தை எழுதலையேன்னு கேட்கணும்னு இருந்தேன். நல்ல வேளை போட்டுட்டீங்க.
//
நறுக்னு நாலு வார்த்தையிலா?//

“நறுக்” அப்பிடிங்கிறது ஒரு வார்த்தை தானே? மிச்ச மூணு வார்த்தைகள் என்ன?

முகிலன் said...

மீ த 50

முகிலன் said...

பாலா சார் வழக்கம்போல ஆஃபீஸுக்கு லேட்.

நாடோடி said...

ரெம்ப‌ நாளைக்கு அப்புற‌ம் போட்டுருக்கீங்க‌.... தொட‌ருங்க‌ள்..

முகிலன் said...

// நாடோடி said...
ரெம்ப‌ நாளைக்கு அப்புற‌ம் போட்டுருக்கீங்க‌.... தொட‌ருங்க‌ள்.//

இப்பிடி சொல்லிட்டு எஸ்கேப் ஆனா எப்புடி. ரொம்பத் தொலைவுல இருந்து வந்திருக்கீங்க.

பிரபாகர் said...

//
முகிலன் said...
// பிரபாகர் said...
//முகிலன் said...
ரொம்ப நாளா நறுக்குனு நாலு வார்த்தை எழுதலையேன்னு கேட்கணும்னு இருந்தேன். நல்ல வேளை போட்டுட்டீங்க.
//
நறுக்னு நாலு வார்த்தையிலா?//

“நறுக்” அப்பிடிங்கிறது ஒரு வார்த்தை தானே? மிச்ச மூணு வார்த்தைகள் என்ன?
//
என்ன - ஒன்னு
அய்யா - ரெண்டு
நறுக் - மூனு
எழுதலயா? - நாலு!

பிரபாகர்...

முகிலன் said...

//என்ன - ஒன்னு
அய்யா - ரெண்டு
நறுக் - மூனு
எழுதலயா? - நாலு!//

நீங்க அய்யான்னு கூப்புடுவிங்க. நான் பாலா சார்னு தான கூப்புடுவேன். அப்போ எனக்கு 5 வார்த்தை வந்துடுதே?

பிரபாகர் said...

பாலா சார் நறுக் எழுதலயா?....

நாலுதானே?

பிரபாகர்...

Jey said...

இது மாதிரி அடிக்கடி நறுக்’ஸ் எழுதுங்க சார்.

முகிலன் said...

//பிரபாகர் said...
பாலா சார் நறுக் எழுதலயா?....

நாலுதானே?

பிரபாகர்..//

தோல்வியை ஒத்துக் கொள்கிறேன்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இவிங்க எல்லாத்தையும் போத்திவேலு பண்டாரத்துகிட்ட பிடிச்சி கொடுக்கணும் சார்!

தமிழ் நாடன் said...

எல்லாமே நறுக்! மனசுல நெனச்சிருந்தத எல்லாம் நீங்க எழுதிட்டீங்க!

க.பாலாசி said...

//ஹி ஹி. அவரு என்னா அரசியல்வியாதியா? இதுக்கு ராஜீவ் என்னா? ஜெயவர்த்தன சொன்னத கேட்டிருந்தா போறாது?//

ங்ங்ங்கொய்யால... வந்த வெனைய இவனுங்கதானே...

//அத்த்த்து! இவன் என்ன கேனையா. இவன் அடிச்சது போக மிச்சம் குடுப்பான். அத ஆமிக்காரனும், கோடாரிக்காம்பும் புடுங்கிட்டு உட்டுரும்.//

ம்கூம்.. என்ன கொடுமைய பாருங்க.. .எரியற வீட்ல புடுங்கினது லாபம்னு.. என்னன்னல்லாம் பண்றானுங்க...

எல்லாத்தையும் பிரிச்சி நாக்க புடுங்கறமாதிரி கேட்கத்தான் தோணுது... என்னத்த கேட்டு என்னத்த ஆவுது... நாறப்பொழப்புங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்

க‌ரிச‌ல்கார‌ன் said...

ஹலோ யாருப்பா என் ஓட்ட‌ போட்ட‌து

பின்னோக்கி said...

அழகிரியின் மொழி
கருணாவின் பொய்புகார்
கலக்கல் :)

சே.குமார் said...

//ங்கொய்யால. குந்த குடிசையில்ல. அத புடுங்கிட்டு துட்டு தருவாராம். கோவணத்துல சொருகி வச்சாலும் ஆமிக்காரன் புடுங்கிட்டு உட்டுடுவானே. அகுடியா குடுக்குறாரு.//

ங்கொய்யால.


ப.சிதம்பரம் எல்லாம் ஒரு மனுஷன்...


இது மாதிரி அடிக்கடி நறுக்’ஸ் எழுதுங்க சார்.

ஆடுமாடு said...

ஐயோ ஐயோ!

vasan said...

"ந‌றுக்குன்னு நாலு வார்த்தை"
ப‌திவுல‌கின், எம் ஆர் ராதா.

ஸ்ரீராம். said...

இத்தாலிக்கே திரும்பி போனாலும் அவுங்கதான் காங்கிரசு. காங்கிரசுதான் அவுங்க"//

ஹா... ஹா..

ஜெரி ஈசானந்தன். said...

ரசித்தேன்..

கலகலப்ரியா said...

||முகிலன் said...
// கலகலப்ரியா said...
||மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சோனியா||

இதாரு புதுசா..? //

வெனீஸ்ல இருந்து புனைவு எழுதிட்டு சோனியா யாரா? ஹல்ல்ல்ல்ல்ல்லோ வெனிஸை விட்டு வெளியேற முடியாது தெரியும்ல..||

என்னோட புனைவு படிச்சிட்டு இங்க வந்து பின்னூட்டறத வன்மையாகக் கண்டிக்கிறேன்....

வானம்பாடிகள் said...

வாங்க Dhala! என்னாடா நம்ம கடமை வீரர் தலாவைக் காணோமேன்னு ஏங்கி போய்ட்டேன். வந்து குத்திட்டீங்களா:)). ரொம்ப டாங்க்ஸ்.அதான் தவறாம வரீங்கன்னு தெரியுதில்ல ராசா. காக்க வைக்காம வந்து குத்தீட்டு போனா என்ன? இனிமே இடுகை போட்டதும் வந்து மைனஸ் குத்தணும் ச்செரியா?

வானம்பாடிகள் said...

சே! பாவம்யா நீரு. கஷ்டபட்டு தேடிவந்து மைனஸ் போட்டும் தமிழ்மணம் ஃப்ரீஸ் ஆகி எப்புடி காட்டுது பாருங்க:

//நறுக்னு நாலு வார்த்த V4.7 - 33/33 //

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//காங். உறுப்பினர்கள் பேட்டி அளிக்கக் கூடாது: தங்கபாலு//

ஆனா என்ன ஒண்ணு, எல்லாரும் தன்னைத் தலைவர்னே நினைச்சுகிட்டு இருக்காங்க, வெறும் உறுப்பினர்னு நினைக்கலை அதுதான் கொடுமை!

ஈரோடு கதிர் said...

நறுக்கு என்ன ப.சி ஸ்பெஷலோ

ஆதிமூலகிருஷ்ணன் said...

நச்' வார்த்தைகள்.

வானம்பாடிகள் said...

@@நன்றி பிரபா
@@நன்றி இர்ஷாத்
/அவரு என்னைக்கி பேசுனாரு.. போன பார்லிமெண்ட்'ல கேள்வியே கேட்காதவங்க லிஸ்ட்ல அண்ணாத்தே மொத பத்து பேர்'ல ஒருத்தரு தெரியும்'ல..
/. ஆமாம் யாரும் பேசலையின்னா இவரு பேசாதது தனியா தெரியாதில்லையா

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

//பேரிழப்புன்னா... பேர மாத்தி வச்சுக்கிட்டத கேக்குறாரா..?

உயிரிழந்து அப்புறம் எப்டி உள்ளனர்?

லாஜிக்கலா பேசவே மாட்டாய்ங்களா...//

அந்தாளு மேஜிக்கா பேசுவாரு. அரை நாள்ள போரை நிறுத்தினவரும்மா

/ஏன்.. “எச்ச”ன்னு சொல்லிட்டாய்ங்களா../

ஆஹா இது எனக்குதோணாம போச்சே

/அளிங்க... தப்பு சரி பார்த்து மார்க்ஸ் போட்டுக் கொடுப்பாய்ங்க.../

தோடா. அவங்களே நான் பாஸ்னு சொல்லிட்டு போயிடுவங்க. நாமதான் விடை போச்சேன்னு இருக்கணும்.

/அப்டியே பின்குறிப்பில... ஜெ... கலைஞர்... காங்... நாராயண... சிதம்பரம் எல்லாம்... யாருன்னு... அடைப்புக்குறிக்குள்ள போடுங்க சார்... ஒரு எளவும் புரிய மாட்டேங்குது.../

ஆஹா. இப்புடி ஒரு வரம் மட்டும் இருந்தா தமிழ்நாடு பொழச்சி போவுமே:))

/இதாரு புதுசா..?

(நாந்தேன் அப்பவே சொன்னென்ல சார்... அடைப்புக்குறிக்குள்ள போடுங்கன்னு..)//

:))

வானம்பாடிகள் said...

@@நன்றி சரவணா
@@ஆமாங்க செந்தில். நன்றி
@@நன்றிங்க ராஜவம்சம்
@@நன்றிங்க ராமசாமிகண்ணன்
@@நன்றி பனித்துளி சங்கர்
@@நன்றிங்க ஸ்ரீநாத்
@@நன்றிங்க ஸ்டார்ஜன்
@@நன்றி கிருத்திகன். :))

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க நேசமித்திரன்
@@நன்றிங்க நந்து
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றிங்க நிஜாம். உளறினது அதிகம். அதான் காரம் அதிகமோ:))
@@நன்றிங்க யாசவி
@@நன்றிங்க புலிகேசி
@@நன்றி முகிலன். ஆகா. காலையில (இங்க) கும்மியா:))
@@நன்றிங்க ஜோதிஜி
@@நன்றி ஷங்கர். இவனுங்க பண்டாரத்த வித்துறுவாய்ங்க

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க தமிழ்நாடன்
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க நாடோடி
@@நன்றி டி.வி.ஆர். சார்
@@நன்றிங்க கரிசல்காரன்
@@நன்றி பின்னோக்கி
@@நன்றி சே.குமார்
@@நன்றி ஆ.மா.
@@நன்றிங்க வாசன்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க ஜெரி
@@நன்றிங்க பெ.சொ.வி
@@நன்றிங் மாப்பு
@@நன்றிங்க ஆதி

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||முகிலன் said...
// கலகலப்ரியா said...
||மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சோனியா||

இதாரு புதுசா..? //

வெனீஸ்ல இருந்து புனைவு எழுதிட்டு சோனியா யாரா? ஹல்ல்ல்ல்ல்ல்லோ வெனிஸை விட்டு வெளியேற முடியாது தெரியும்ல..||

என்னோட புனைவு படிச்சிட்டு இங்க வந்து பின்னூட்டறத வன்மையாகக் கண்டிக்கிறேன்....//

அய்ய என்ன நீ. அவருதான் சரியா லேபில் படிக்காம புனைவுன்னா நீயுமா? ச்சேரி. நானும் கண்டிச்சிக்கிறேன்:))

அக்பர் said...

கடைசியா வந்தா இதுதான் பிரச்சனை. பஸ் ஃபுல்லாகிப்போச்சே.

நல்லாயிருக்கு அண்ணே.

வானம்பாடிகள் said...

நன்றி அக்பர்.

வானம்பாடிகள் said...

அய்யா மா. சிவகுமார் ஐய்யா. வாங்க வாங்க புதுசா முளைச்சிருக்கீங்களாக்கு?

ரோஸ்விக் said...

காங்கிரஸ்காரனுக பாவம். இதைப் படிச்சா வேட்டி தன்னால அவுந்துவிழும்.... :-)

இப்படிக்கு நிஜாம் ..., said...

//உளறினது அதிகம். அதான் காரம் அதிகமோ:))//

என்னமோ இப்பதான் புதுசா உளறின மாதிரி சொல்றீங்க. அவங்க எப்பவுமே அப்படித்தான் அண்ணே! புரியும் ஆனா புரியாது

ராஜ நடராஜன் said...

கோபங்களை இப்படியாவது வெளிப்படுத்த இயலுகிறதே என்று முன்பு உசுப்பேத்தி விட்டுகிட்டிருந்தேன்.எதைச் சொல்லியும் கேட்காத ஆதிக்க,அதிகார மனோபாவக்காரர்கள் மானம்,மரியாதை,கொள்கை,மனிதாபிமானங்கள் இன்னும் தேவையான நற்குணங்கள் அத்தனையையும் துடைத்தெறிந்து விட்டு நாற்காலிகளில் பவனி வருகிறார்கள்.யார் உட்கார்ந்தாலும் நாற்காலி சுகத்தில் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறார்கள்.இந்த நாற்காலி மனோதத்துவம் புரியவேயில்லை.உங்க நறுக் மருந்தெல்லாம் குணப்படுத்துமென்று தோன்றவில்லை.

ஏன் இந்தமாதிரி சொல்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாமல் அவர்கள் வாழும் அதிகார உலகம் தனி.இதை விடக் கொடுமை என்னன்னா கோவை மைதானத்தின் இரு கட்சிகளின் கூட்டங்களையும் பார்க்கும் போது யார் வந்தாலும் கொடி காட்டவும் கைதட்டவும் தயங்காத மக்களுக்கு மாற்றி மாற்றி ரீவிட் அடிப்பதற்கு இரு கட்சிகளும் தகுதியான்வைகளே.

ப.சிதம்பரத்தின் டாம்...டூமெல்லாம் தமிழ்நாட்டுக்குள் மட்டும்தான்.இவரோட Intellectual arrogance ப்ற்றி திக்விஜய் சிங் கிட்டத்தான் கேட்கணும்.இவருக்கு பூசவேண்டிய அடுப்புக்கரியை பாகிஸ்தானின் குரோஷி கிருஷ்ணாவுக்குப் பூசிவிட்டான்.அப்படியும் மூஞ்சியில கரியே ஒட்டாதமாதிரி டெல்லி வந்தவுடன் தரும் நிருபர் பேட்டிகளுக்கெல்லாம் குறைச்சலேயில்லை.அடுத்து "மேடம்!பாகிஸ்தான் அடிச்சுட்டான்"ன்னு ஹில்லரிகிட்ட பிராது சொல்ல மட்டும் தெரியுது.நிறைய வாயில வருது.வாயில வர்றதையெல்லாம் பேசக்கூடாதுன்னு தலவரோட அறிக்கையால இத்துடன் முடித்துக் கொள்கிறேன் எனது உரையை.சோடா உடைங்கப்பா:)

ராஜ நடராஜன் said...

உங்க கடைக்கு வந்தா லொள லொளன்னு வள வளக்கிறேன்னு மறுபடியும் கூகிளண்ணன்

Google
Error


Request-URI Too Large
The requested URL /comment.g... is too large to process.

புலம்பிட்டார்:)

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...
உங்க கடைக்கு வந்தா லொள லொளன்னு வள வளக்கிறேன்னு மறுபடியும் கூகிளண்ணன்

Google
Error


Request-URI Too Large
The requested URL /comment.g... is too large to process.

புலம்பிட்டார்:)//

கூகிளண்ணனும் நம்ம அரசியல் வாதி மாதிரித்தான். சொல்றது ஒண்ணு. ஆனா பாருங்க சின்சியரா வெளியிட்டுடுவார்:))

சி. கருணாகரசு said...

மெய்யாலும் நறுக்குன்னு இருக்குங்கைய்யா.... சம்மந்த பட்டவங்களுக்கு “சுருக்”ன்னு இருக்குமான்னு தெரியலையே?

ரிஷபன் said...

யப்பா.. சரவெடி.. ஒவ்வொண்ணும் இடி..

எறும்பு said...

அசத்தல்...

எறும்பு said...

93

எறும்பு said...

94

எறும்பு said...

95

எறும்பு said...

96

எறும்பு said...

97

எறும்பு said...

98

எறும்பு said...

99

எறும்பு said...

100

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மொய் (ie 101 )

dheva said...

//மு.க.அழகிரியின் மொழி பிரச்சனைக்கு தீர்வு


இன்னாது? யாருக்கு மொழி பிரச்சன? நெனச்சா இட்டாலியன் சப்டைட்டிலோட டிவிடியே விடுவோம்டி//

சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சுங்கண்ணா....! இந்த நறுக்... நான் ரொம்ப ரசித்த நறுக்..ண்ணா...!

dheva said...

பாலாண்ணே....உங்க மின்னஞ்சல் முகவரி வேண்டும்ணே....புரொபைல தேடித் தேடி களைச்சு போய்ட்டேன் அண்ணா...!

ராஜ நடராஜன் said...

93..94...95....96......97.......98........99..........100!


எறும்பு ஊறுது:)

butterfly Surya said...

101 To 200

thenammailakshmanan said...

மு.க.அழகிரியின் மொழி பிரச்சனைக்கு தீர்வு


இன்னாது? யாருக்கு மொழி பிரச்சன? நெனச்சா இட்டாலியன் சப்டைட்டிலோட டிவிடியே விடுவோம்டி../

செம்ம கலக்கல் பதில் பாஸ்.

thenammailakshmanan said...

நகைகள் மாயமாகவில்லை!
இத சொல்ல ஏம்பா இவ்வளவு நாள்? உட்டா சாமி சேட்டுகிட்ட அடமானம் வெச்சிட்டு சீட்டாடி தோத்துட்டாரு மீட்டுகிட்டு வந்தோம்னு சொல்லுவானுங்க.. //

ஹஹாஹா பெருமாளுக்கே லட்டா..??

கிரி said...

சார் ரொம்ப நாளைக்கு பிறகு .... அப்பப்ப இதை எழுதுங்க சார், பழசை என்னைக்கும் மறக்ககூடாது அல்லவா ;-)