போன பதிவின் follow up
//வானம்பாடிகள் said... sriram said... பாலாண்ணா.. பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும் சொல்லுங்களேன்.. அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க? என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
சொல்றேனே:)//
பாலாண்ணா..
மொதோ மேட்டர் (பதிவுலக ப்ரோட்டோகால்) எப்போ சொல்வ்றீங்க, ரெண்டாவது மேட்டர் (அரசாங்க கடிதப் போக்குவரத்து) எப்போ சொல்றீங்கன்னு என் கையில் அடித்து (கிள்ளி) சத்தியம் பண்ணி சொல்லுங்க, அப்போதான் நம்புவேன்.
என்றும் அன்புடன்பாஸ்டன் ஸ்ரீராம்//
ஹி ஹி. பதிவுலகில ப்ரோட்டகால்னு ஒன்னு கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். அதுமில்லாம நான் பதிவுலக கத்துகுட்டி. அதனால சும்மா இருப்பதே சுகம் அப்படிங்கற ப்ரோட்டகால்தான் சரி.
~~~~~~~~~~~~~~~
அரசு அலுவலக கடிதங்கள் பொதுவா ரெண்டு வகை. ஒன்னு அலுவலகங்களுக்கு இடையிலானது. மற்றது அலுவலகத்துக்கும் ஒரு தனிப்பட்ட ப்ரஜைக்கானது. முதலாவது அஃபிஷியல் கரஸ்பாண்டன்ஸ். இதுலயும் அஃபிஷியல், பெர்ஸனல்னு ரெண்டு வகை உண்டு.
முதலாவது ஒரு செக்ஷன், அல்லது அலுவலகத்துக்கு இடையிலானது. அடுத்தது ஒரு அதிகாரிக்கும் மற்ற அதிகாரிக்குமோ அல்லது ஒரு அதிகாரிக்கும் அவரின் ஊழியருக்குமோ இடையிலானது.
அலுவலகத்துக்கும் அலுவலகத்துக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து என்பதால், அட்ரஸ், சல்யூட்டேஷன் எல்லாம் இருக்காது. உதாரணத்துக்கு ஒரு செக்ஷன் மேனேஜர் இன்னோரு செக்ஷன் மேனேஜருக்கு எழுதும் கடிதத்தில், பதவி மட்டுமே குறிப்பிடப்படும். ஒரு அலுவலகம் இன்னோரு அலுவலகத்துக்கு எழுதும் கடிதத்தில் அலுவலக தலைமை அதிகாரியின் பதவி மட்டுமே குறிப்பிடப்படும். கையெழுத்துப் போடுபவர் for என்று போட்டு கையெழுத்துப் போடுவார்.
ஒரு அலுவலக அதிகாரிக்கும் மற்ற அலுவலக அதிகாரிக்கும் இடையேயான பெர்ஸனல் கரஸ்பாண்டன்ஸ் டெமி அஃபிஷியல் எனப்படும். இது பெரும்பாலும் முக்கியமான விடயத்தில் பொறுப்பாளியாக்க பயன்படுத்தப்படும். இதில் அதிகாரியின் பெயர் இருக்கும். கடிதம் பெயரிட்டு தொடங்கும். முடியும் போது க்ரீட்டிங்ஸ், யுவர்ஸ் சின்சியர்லி எல்லாம் இருக்கும். இதில் ப்ரோட்டோகால் கீழ்க்கண்டவை:
1. எழுதப்படும் கடிதம் எழுதுபவரை விட பதவியில் உயர்ந்தவருக்கோ, அல்லது அதே பதவியில் சீனியருக்கோ என்னும் பட்சத்தில் Dear Sri என ஆரம்பிக்கும். க்ரீடிங்க்ஸில் ஃபேர் காபியில் கையெழுத்திடுபவர் தன் கையெழுத்தில் with regards என்று எழுதுவார்.
2. ஒரே க்ரேடில் இருப்பவரோ அல்லது ஜூனியரோ எனில் My dear என ஆரம்பிக்கும். க்ரீடிங்கில் ' with best wishes' என எழுத வேண்டும்.
3. பெறுனர் பெண்களாயின் ‘Dear Ms/Mrs' என்றே அட்ரஸ் செய்ய வேண்டும்.
இதில் அடுத்ததாக பெர்ஸனல் கரஸ்பாண்டன்ஸ் என்பது ஒரு ஊழியரைக் கண்டிக்கவோ, தண்டனை தரவோ அல்லது பாராட்டவோ எழுதப்படுவது. இதுவும் பதவிக்கும், ஒரு ஊழியருக்கும் என்பதால் ஊழியரின் அலுவலக முகவரியும், ஆணையிடுபவரின் பதவியும் மட்டுமே இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரசு அலுவலக கடிதத்துக்கும் தனிப்பட்ட பொது ஜனத்துக்குமான கடிதப் போக்குவரத்து என்பது பொதுவாக ஒரு தகவலாகவோ, அல்லது விளக்கமாகவோ மட்டுமே இருக்கும். எனவே தனிப்பட்டவருக்கு ஒரு பதவி எழுதும் கடிதம் என்பதால் இதிலும் அட்ரஸ், கையொப்பமிடுபவர் பெயர் இருக்காது.
ஆனால், ஒரு தனிநபரின் சாதனைக்காகவோ, அல்லது அன்னாரின் குடும்பத்தில் இருந்த அரசு ஊழியரின் தியாகத்தைப் பாராட்டியோ (உ.ம். கலவரத்தில் இறந்த போலீஸ் ஊழியர், போரில் இறந்த ராணுவ வீரர், தன் சாதனைகளுக்காகப் பாராட்டப் படும் தனிப்பட்ட ஒருவர்) எழுதப்படும் கடிதங்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி, தனிப்பட்ட முறையில் விளித்து, வாழ்த்து அல்லது நன்றி பாராட்டி, தன் பதவியின் பெயரோடு தன் பெயரில் கையெழுத்திடுவார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவலறியும் சட்டம் வந்த பிறகு, தவறான தகவல் அளித்தமைக்கு, அல்லது தகவல் அளிக்க சட்டத்திற்கு விரோதமாக மறுத்தமைக்கு பொறுப்பு என்பதால், எல்லாத் தனிநபருக்கான அரசு கடிதத்திலும் பெயரும், பதவியும் போட்டாக வேண்டும் என்ற ரூல் வந்துவிட்டது. ஆனாலும் பெயர் குறித்து விளிக்கவேண்டிய அவசியமில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காமெடி பீஸ்:
1. டெமி அஃபிஷியல் லெட்டர்களில் பெண் அதிகாரிக்கு எழுத வேண்டுமெனில் சீனியரா ஜூனியரா கண்டுபிடி என்று உயிரெடுப்பார்கள். திருமணமாகிவிட்டதா இல்லையா என்று கேட்கச் சொல்லுவார்கள். கிருத்திருமம் பிடித்த ஸ்டெனோ டைவர்ஸ் ஆயிருக்கான்னு கேக்க முடியுமா சார் என்று டரியலாக்குவான்.
2. உதாரணமாக ஒரு அதிகாரியின் பெயர் உமா ராஜகோபால் என்றிருந்தால் ஜூனியர்தான் ஆனா தெரியாது அவங்கள, அதனால டியர் மிஸஸ் உமான்னு போடுங்க என்பார். ஸ்டெனோ மிஸஸ் போட்டா ராஜகோபால்தான் போடணும்னு க்ளாஸ் எடுப்பான்.
3. பிடிக்காத சீனியருக்கு எழுதும் கடிதத்தில் ‘நாசமா போக’ இவனுக்கு 'with regards' வேறன்னு திட்டிக் கொண்டே கையெழுத்து போடுவது ப்ரீச் ஆஃப் ப்ரோடாகாலில் வராது.
4. கிறித்துவ மத ஆஃபிஸருக்கு Sri/smt போடக்கூடாதுன்னு Mr./Ms/Mrs போட்டு டைப் செய்து வரும் ட்ராஃப்டில் சுழித்து Sri/smt போடும் அதிகாரிகள் உண்டு.
5. முஸ்லிம் மதத்தினருக்கு Sri/Mr/Smt/Mrs/Ms போடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை என்றால் கேட்காமல் போட்டாக வேண்டும் என பிடிவாதம் பிடித்து ஃபோனில் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அதிகாரிகள் உண்டு. ஹி ஹி.
50 comments:
ஹி ஹி. பதிவுலகில ப்ரோட்டகால்னு ஒன்னு கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். அதுமில்லாம நான் பதிவுலக கத்துகுட்டி. அதனால சும்மா இருப்பதே சுகம் அப்படிங்கற ப்ரோட்டகால்தான் சரி.
....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... சரிதான் !
டிஜ்கி தவுர மத்ததெல்லாம் ரொம்ப ஜீரியஜ் மேட்டராத் தெரியுது
மீ எஸ்கேப்பூ
//ஹி ஹி. பதிவுலகில ப்ரோட்டகால்னு ஒன்னு கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். அதுமில்லாம நான் பதிவுலக கத்துகுட்டி. அதனால சும்மா இருப்பதே சுகம் அப்படிங்கற ப்ரோட்டகால்தான் சரி//
நீங்களே இப்படி சொன்னா எப்படி சார்??
ஒரு கடுதாசிக்கு இவ்வளவு பிரச்சினையா ?
ப்ரோட்டகால் படிச்சதிலிருந்து புரோட்டா ஹால்ன்னு எதிர் பதிவு போடலாமுன்னு பார்த்தா மசாலா சரியா அரையமாட்டேங்குது:)
அரசு அலுவலகங்களில்
நடை பெரும் கடித பறிமாற்றங்கள்,அது சம்பந்தப்பட்ட விசயங்களை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.
பதிவுலக ப்ரோட்டோகால் ஒன்னு இருக்கு...
:))
கிருத்திருமம்...?
நீங்க ப்ரோட்டகால் சொல்லும்போது நினைவுக்கு வந்த ஒன்று பீரோக்கிராட்டிக் நடைமுறைகள் இந்தியாவில் தாமதம் ஆவதின் முக்கிய காரணங்கள் என்னவென்று ஒரு தனிப்பதிவு போட்டீர்களென்றால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இங்கே ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.வருடா வருடம் கார் சரியாக இயங்குகிறதா என்று நம் ஆர்.டி.ஓ அலுவலகம் மாதிரி இதனை உள்துறை பிரிவோடு இணைத்திருக்கிறார்கள்.முதலில் இன்சூரனஸ் நிறுவனத்திற்கு காசைக் கொடுத்தால் அவர் தயாராக உள்ள விண்ணப்பத்தில் பெயர்,கார் எண்,சிவில் ஐ.டி கார்டு போன்ற விபரங்களை அரபியில் தட்டச்சு செய்து கொடுத்து விடுகிறார்.அதை வாங்கிக் கொண்டு பரிசோதனை தளத்திற்கு போனால் கேட்டில் உள்ளவர் ஒரு முத்திரை போட்டு விட்டு கதவைத் திறந்து விடுகிறார்.அங்கேயிருந்து சில மீட்டர் தூரம் போனால் காரின் நிலை,பெயிண்டிங்க், புகை,லைட்,சிக்னல் போன்றவைகளை பரிசோதிக்க ஒருவர்.இவர்தான் மொத்த சுற்றிலும் முக்கியமானவர்.இவரது பரிசோதனை மற்றும் அவர் பெயரால் உள்ள முத்திரை விழுந்து விட்டால் அதனையடுத்து இன்னுமொருவர் முத்திரை,அதனைத் தொடர்ந்த உயர் அதிகாரியின் முத்திரை,அதற்கடுத்து கணினியில் சாலை தண்டனைக் குற்றங்கள் ஏதாவது இருக்கிறதா என்ற பரிசோதனை,இருந்தால் அதற்கென்று காசை அப்பொழுதே கட்டி ரசீது,பின் ஆட்டோ இயந்திரத்தில் ஒரு ஸ்டாம்ப்,இதனைத் தொடர்ந்து இன்னுமொரு அறையில் சமர்ப்பித்தால் அவரும் ஒரு முத்திரை போட்டு விட்டு கணினி தட்டாச்சளரிடம் கொடுத்து விடுவார்.கணினி வலையத்தில் எந்தவொரு பிரச்சினையிலுமில்லையென்றால் அவர் சில தகவல்களை சேகரித்து பிரிண்ட் கட்டளையிட்டால் அது இன்னுமொரு அதிகாரியின் கையெழுத்து மற்றும் முத்திரையுடன் 30 நிமிடங்களில் வந்து விடும்.இவற்றிற்கான நேரம் சுமார் 60 நிமிடம் முதல் அல்லது நமக்கு விருப்பமான கால்பந்தாட்ட நேரம் வரை.
இவ்வளவு நல்ல பசங்கன்னு சொல்லிட்டு நொட்டை சொல்லலைன்னா எனக்குப் பின்னூட்டம் போட்ட மாதிரியே இருக்காது.அதனால் இவ்வளவு துரிதமா மனுசங்களை விட கார் அதிகமா இருக்கும் ,செயல்படும் ஒரு பீரோகிராட்டிக் துறை இந்த ஊரு பசங்கள் எல்லாம் காலையிலேயே பரிசோதனை செய்து அப்பவே தப்தர் எனப்படும் கார் கார்டை வாங்கிட்டுப்போங்கன்னு சொல்லிடறாங்க.வெளியூர்க்காரனெல்லாம் மாலை வந்துடுங்கன்னு சொல்றாங்க.துவக்கத்துல என்னடா டிஸ்கிரிமினேசன் செய்றானுங்களேன்னு தோன்றினாலும் கொஞ்சம் யோசிச்சப்ப நாட்டுக்குடிமகன் ஜனத்தொகையை விட வெளிநாட்டுல இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கும் போது சுமார் 1000 பேர் இந்த நாட்டு குடிமகனுக்கு கார்டு தந்தா அதுவே எல்லா வெளிநாட்டு குடிமகனுக்கு 2000 கார்டு தரவேண்டியிருக்கும்.எனவே காலை,மாலை என்ற ஒரு நாளில் இரண்டு மணி நேரங்களை செலவிடுவதில் தவறில்லை என்ற அனுபவ அறிவு வந்திருக்கு.
நீ பின்னூட்டமிடுகிறாயா,வளவளத்தா கதை சொல்கிறீயான்னு கூகிளண்ணன் எச்சரிக்கிறார்.நல்லவேளை போனா போகட்டுமுன்னு இந்த முறை விட்டு விட்டார்:)
// பிடிக்காத சீனியருக்கு எழுதும் கடிதத்தில் ‘நாசமா போக’ இவனுக்கு 'with regards' வேறன்னு திட்டிக் கொண்டே கையெழுத்து போடுவது ப்ரீச் ஆஃப் ப்ரோடாகாலில் வராது. //
" With Regards " is a default expression in a business correspondence.
உலக மயமாக்கலுக்கு பின் இந்த ப்ரொடோகால் கள் எல்லாம் வேண்டாமே.
ஐம்பது ஆண்டு காலமாக இந்த அலுவலக ப்ரோடோகால்ல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தானே நாம் பின் தங்கி இருந்தோம்.
இணையங்களும், வெளி அலுவல் ஒப்படைப்பு BPO, KPO firms), மென்பொருள் உருவாக்கம், மென்பொருள் ஏற்றுமதி தொழில்கள் வந்த பிறகுதானே இந்த வித ப்ரோடோகால்களுக்கு விடை கொடுத்து விட்டு, நாம் முன்னேற்ற பாதையில் பயணிக்கிறோம். ஊழியர்களும் உரிமையாளர்களும் இப்போது தானே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
கற்பனை செய்து பாருங்கள்- பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு தொலை பேசி இணைப்பிற்கு நீங்கள் ஆறு அலுவலர்களிடம் (Junior asst, junior officer, JUnor engr , Exe engr) ஒப்புதல் பெற வேண்டும். இன்று ஆறு நிமிடத்தில் ஒரு தொலை பேசி இணைப்பு கிடைத்து விடுகிறது.
இவ்வளவு விசயம் இருக்கா. இதையெல்லாம் செய்றதுக்கே நேரம் பத்தாது. பின்னே எங்கே மக்கள் சேவை.
//கற்பனை செய்து பாருங்கள்- பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு தொலை பேசி இணைப்பிற்கு நீங்கள் ஆறு அலுவலர்களிடம் (Junior asst, junior officer, JUnor engr , Exe engr) ஒப்புதல் பெற வேண்டும். இன்று ஆறு நிமிடத்தில் ஒரு தொலை பேசி இணைப்பு கிடைத்து விடுகிறது.
//
:)
புரோட்டாகால் விளக்கம் குடுப்பீங்கன்னு பாத்தா இப்டி எஸ்கேப் ஆயிட்டீங்களே அண்ணே! இருந்தாலும் அரசு கடிதப் போக்குவரத்து பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்.
இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா!!!!...
கடைசியா சொன்ன காமெடி பீஸ் ரொம்ப கலக்கல் தலைவரே.
பாலாண்ணே...!
கடுதாசியில் இம்புட்டு விசயம் இருக்கா.....? சும்மா புட்டு புட்டு வச்சிட்டீங்கண்ணே...
இன்னும் சில கடித உறைகளின் மீது...."அவசரம் "னு போட்டு பியூன் ஆடி அசைஞ்சு கொண்டு போறதயும் பாத்திருக்கேண்ணே...(அப்பா யூனியன் ஆபிஸ் பி.டி.ஓ)
மொத்ததில் நறுக்!
ப்ரோட்டோகாலில் இம்புட்டு கிருத்திருமம் இருக்கா ..:)) பாலா சார் ஹாஸ்யமான பகிர்வுக்கு நன்றி
இன்றைக்கு ஒரு கடைகோடி புதிய ஊழியர் கூட நிறுவன உரிமையாளருக்கு நேரடியாக தகவலை மெயில், ட்விட்டேரில் பரிமாற்றம் செய்யும் அளவு ஒரு நல்ல மாறுதலை ஏற்படுத்திய இணையம் தான், உண்மையான புரட்சி நாயகன் (நாயகி)
வகுப்பு பேதங்கள் உடைந்தன
//ஈரோடு கதிர் said...
டிஜ்கி தவுர மத்ததெல்லாம் ரொம்ப ஜீரியஜ் மேட்டராத் தெரியுது
மீ எஸ்கேப்பூ
//
படிக்க நேரமில்லைனு உள்ளதைச் சொல்லலாமே?
பாலாண்ணா,
என் கோரிக்கையை ஏற்று இவ்வளவு விளக்கமா எழுதினதுக்கு நன்றி.
நான் ஒரு முறை சென்னை AG's ஆபிஸில் ஒருவருக்கு MR. X, Designation போட்டு ஒரு Quotation கொடுத்தேன், செக்ஷன் ஆபிசர் பேரை எடுத்துட்டு வெறும் பதவியின் பேரை மட்டும் குறிப்பிட்டு கொடுக்குமாறு சொன்னார்- அப்போலேருந்து இருந்த கேள்விக்கு இப்போ விடை கெடச்சிடுச்சு - மிக்க நன்றி..
அப்புறம் - பதிவுலகில் ப்ரோட்டோகால் இல்லைன்னு ஒரு பிரபல பதிவரா இருந்துகிட்டு நீங்களே சொன்னா எப்படி??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
தெரியாத எனக்கு தெளிவு செய்தமைக்கு நன்றிங்கையா.
அந்த் காமடி பீஸ்..... செம!
இதுல இவ்வளோ விஷயம் இருக்கா?
உங்க பாணியில சரளமா எழுதறீங்கய்யா...
பிரபாகர்...
ஒரு கடிதாசியிலே எத்தனை விஷயங்கள்
superb
பதவியும் பெயரும் அப்படியேதான் இருக்கும் ஆட்கள் மாறி மாறி வந்து போய்க்கொண்டு இருப்பார்கள் எனவே எப்போதும் பதவி என்னவோ / துறை என்னவோ அதை மட்டுமே குறிப்பிடுங்கள். என்பது எனக்கு போதிக்கப்பட்டது. :))
--
திடீர்னு பில்டிங் தீப்பிடிச்சா ப்ரோட்டா கால் என்னா ஆகும் சார்?? :))
//டிஜ்கி தவுர மத்ததெல்லாம் ரொம்ப ஜீரியஜ் மேட்டராத் தெரியுது
மீ எஸ்கேப்பூ
//
Me too
இப்படி எல்லாம் இருக்கிறதோ..
இதெல்லாம் ஸ்கூல்லயே தெரிஞ்சிக்கவேண்டிய மேட்டருகள். எதோ கொஞ்சம் கொஞ்சம் சொல்லித்தர்ராங்க. ஆனாலும் இவ்ளோ டீட்டெய்ல் சொல்றதில்ல. அப்டியே எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தாலும் ஃபிகருக்கு கொடுக்கிற லட்டர எப்டி ஆரம்பிக்கிறதுன்னுதான் நம்ம மூள யோசிக்குது... வாட் கேன் ஐ டூ...
முதல் உபதேசம் மதிரி இருக்கு.
ரெண்டாவது பெரிய பாடம்.
எனக்கு இன்னுங்கொஞ்சம் தெளிவுகிடச்சிருக்கு.
எங்காவாது கூட்டத்தில் எடுத்துப்
போட்டு காலரத்தூக்கிவிடுக்கலாம்.
nioce information. most of us dont know this as we dont write letters. In amil we generally put dear/ Hi according to clients/officials.
@@நன்றிங்க சித்ரா
ஈரோடு கதிர் said...
டிஜ்கி தவுர மத்ததெல்லாம் ரொம்ப ஜீரியஜ் மேட்டராத் தெரியுது
மீ எஸ்கேப்பூ//
ஏனுங்ணா! நீங்க எளுதறதெல்லாம் மட்டும் மொக்கையோ. லொல்லப்பாரு.
கரிசல்காரன் said...
//ஹி ஹி. பதிவுலகில ப்ரோட்டகால்னு ஒன்னு கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். அதுமில்லாம நான் பதிவுலக கத்துகுட்டி. அதனால சும்மா இருப்பதே சுகம் அப்படிங்கற ப்ரோட்டகால்தான் சரி//
நீங்களே இப்படி சொன்னா எப்படி சார்??//
நான் சொல்லாம யாரு சொல்றது. ஒரு வயசு கொய்ந்தயில்லையா?
@@நன்றிங்க பின்னோக்கி
@@நன்றிங்க அபுல் பஸர்
@@நன்றி அக்பர்
@@நன்றி நிஜாம்.
கும்க்கி said...
பதிவுலக ப்ரோட்டோகால் ஒன்னு இருக்கு...
:))//
பாருங்க கரிசல். இது கூட எனக்கு தெரியாம இருக்கேன். நான் கத்துகுட்டின்னு ஒத்துக்கறீங்களா?
சிப்பு புரியவைக்குது கும்க்கி:))
கும்க்கி said...
கிருத்திருமம்...?//
கிருத்திருமம்!!!:))
ராஜ நடராஜன் said...
//நீங்க ப்ரோட்டகால் சொல்லும்போது நினைவுக்கு வந்த ஒன்று பீரோக்கிராட்டிக் நடைமுறைகள் இந்தியாவில் தாமதம் ஆவதின் முக்கிய காரணங்கள் என்னவென்று ஒரு தனிப்பதிவு போட்டீர்களென்றால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.//
:) பார்க்கிறேன்.
//வருடா வருடம் கார் சரியாக இயங்குகிறதா என்று நம் ஆர்.டி.ஓ அலுவலகம் மாதிரி இதனை உள்துறை பிரிவோடு இணைத்திருக்கிறார்கள்......
இவற்றிற்கான நேரம் சுமார் 60 நிமிடம் முதல் அல்லது நமக்கு விருப்பமான கால்பந்தாட்ட நேரம் வரை.//
நல்லது. ஆனா இங்கேயும் எத்தனை முத்திரை?:))
ராம்ஜி_யாஹூ said...
//உலக மயமாக்கலுக்கு பின் இந்த ப்ரொடோகால் கள் எல்லாம் வேண்டாமே.//
இது கெவருமெண்டு விவகாரம் சாரே:)
//இன்றைக்கு ஒரு கடைகோடி புதிய ஊழியர் கூட நிறுவன உரிமையாளருக்கு நேரடியாக தகவலை மெயில், ட்விட்டேரில் பரிமாற்றம் செய்யும் அளவு ஒரு நல்ல மாறுதலை ஏற்படுத்திய இணையம் தான், உண்மையான புரட்சி நாயகன் (நாயகி)
வகுப்பு பேதங்கள் உடைந்தன//
இது தகவல் பற்றியதல்ல. இன்னமும் இமெயில் சட்ட அமைச்சகத்தால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமல்ல.
வகுப்பு பேதங்கள் உடைந்தன?
நல்ல கனவு சார் உங்களுக்கு.
@@நன்றிங்க நாடோடி
@@நன்றிங்க விசா
@@நன்றி சரவணக்குமார்
@@நன்றி தேவா
@@நன்றிங்க தேனம்மை
பழமைபேசி said...
//ஈரோடு கதிர் said...
டிஜ்கி தவுர மத்ததெல்லாம் ரொம்ப ஜீரியஜ் மேட்டராத் தெரியுது
மீ எஸ்கேப்பூ
//
படிக்க நேரமில்லைனு உள்ளதைச் சொல்லலாமே?//
ம்கும். சொல்லட்டும் பார்க்கலாம்.:))
sriram said...
பாலாண்ணா,
என் கோரிக்கையை ஏற்று இவ்வளவு விளக்கமா எழுதினதுக்கு நன்றி.//
நன்றி ஸ்ரீராம்.
//நான் ஒரு முறை சென்னை AG's ஆபிஸில் ஒருவருக்கு MR. X, Designation போட்டு ஒரு Quotation கொடுத்தேன், செக்ஷன் ஆபிசர் பேரை எடுத்துட்டு வெறும் பதவியின் பேரை மட்டும் குறிப்பிட்டு கொடுக்குமாறு சொன்னார்- அப்போலேருந்து இருந்த கேள்விக்கு இப்போ விடை கெடச்சிடுச்சு - மிக்க நன்றி..//
அடடா! இதுதானா. இது ப்ரோட்டோகால் சம்பந்தப்பட்டதில்லை. இது சட்டம் சம்பந்தப்பட்டதாச்சே. அவரோட பேருக்கு கொடுத்த கொட்டேஷன் ஆஃபீசுக்கு செல்லாது. இன்வேலிட் ஆஃபர்னு ஆயிடும். அதனால்தான். :))
//அப்புறம் - பதிவுலகில் ப்ரோட்டோகால் இல்லைன்னு ஒரு பிரபல பதிவரா இருந்துகிட்டு நீங்களே சொன்னா எப்படி??//
இது எப்ப?:))
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
@@நன்றி கருணாகரசு
@@நன்றி பிரபாகர்
@@நன்றிங்க வேலு
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பதவியும் பெயரும் அப்படியேதான் இருக்கும் ஆட்கள் மாறி மாறி வந்து போய்க்கொண்டு இருப்பார்கள் எனவே எப்போதும் பதவி என்னவோ / துறை என்னவோ அதை மட்டுமே குறிப்பிடுங்கள். என்பது எனக்கு போதிக்கப்பட்டது. :))//
பதவியெல்லாமும் மாறிண்டே இருக்குமே:)
--
//திடீர்னு பில்டிங் தீப்பிடிச்சா ப்ரோட்டா கால் என்னா ஆகும் சார்?? :))//
சாரி! அப்பவும், ப்யூன் அய்யாமார் தப்பிக்க வழிபண்ணுவார்:))
நசரேயன் said...
//டிஜ்கி தவுர மத்ததெல்லாம் ரொம்ப ஜீரியஜ் மேட்டராத் தெரியுது
மீ எஸ்கேப்பூ
//
Me too//
ஆமா ஆமா:))
@@நன்றிங்க சந்துரு
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க காமராஜ்:))
@@நன்றிங்க LK
அய்யா அய்யாதான் . வியப்பாகத்தான் இருக்கு கடிதத்தின் மேட்டர்ஸ் .
இப்போது ஒவ்வொரு ஆ ஃ பீசுக்கும் கம்ப்யூட்டர் வந்த பிறகு இந்த நடைமுறைகள் குறையும் என்று எதிர்பார்க்கலாம். சில அலுவலகங்களில் ஒரு வினோத நடைமுறை உண்டு. இரண்டு இடங்களில் டெபுடேஷன் காரணமாக ஒரே ஆளே பொறுப்பாக இருப்பதும், இந்த டியர் சார் மேட்டரை தனக்குத் தானே மாற்றி மாற்றி எழுதிக் கொள்வதும் ஒரு காமெடியான உண்மை நடைமுறை.
காமெடி பீஸ் நிஜமாகவே காமெடி
Post a Comment