Tuesday, July 13, 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

நண்பர் புலிகேசி அழைத்திருந்த தொடர்பதிவு இது. அழைப்புக்கு நன்றி புலிகேசி. இந்தத் தலைப்பு மற்றவர்கள் சொல்லியல்லவா நான் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற கேள்வியை எழுப்பினாலும். ஒரு வேளை வேறு மாதிரி புரிதலிருப்பினும் இது உதவக்கூடுமோ என்ற ஒரு நப்பாசையுடன்:

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

     வானம்பாடிகள். 

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

     இல்லை.  ஆரம்பத்தில் பாமரன் என்ற பெயரில் எழுதினேன். பிரபல எழுத்தாளர் பாமரனோ என்ற குழப்பம் பின்னூட்டத்தின் மூலம் தெரிய வந்ததும், பாலா என்ற பெயரில் மாற்றம் செய்தும், ஏற்கனவே இரண்டு பாலாக்கள் இருந்ததால் வானம்பாடிகள் என்று மாற்றம் செய்தேன். காரணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதுதான். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

     என் பதிவின் விளக்கமாக சொல்லியிருப்பதுதான். என் மன அழுத்தத்தை பாரத்தை, என்னை பாதித்த விடயத்தை நான் எழுதிவைக்கும் ஆவணமிது. என் டைரி. 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

    இது வரை எதுவும் செய்யவில்லை. நான் பதிவெழுத ஆரம்பித்தபோது வெகு நாட்கள் திரட்டியில் கூட இணைத்ததில்லை. பிறகு திரட்டியில் இணைத்த பின்னரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் வரும். பதிவுலகம், பிரபலம் என்றெல்லாம் தெரிந்திராததாலோ என்னவோ அது குறித்து எந்தத் தாக்கமும் இல்லை. நிறைய பதிவர்களைப் படிப்பதும் வாக்களிப்பதும் வழமையாகிப் போனது. ஒரு வேளை ’நறுக்குன்னு நாலு வார்த்தை’ என்ற ஒரே தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகளை ஒரே தீமில் அளித்தது எனக்கான வாசகர்களை உருவாக்கித் தந்திருக்கலாம். 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
    
    பதின்மவயது அனுபவங்கள் தொடர் இடுகை அழைப்பைத் தவிர்த்து, என் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். பல நகைச்சுவையுடனிருந்ததால் பெரிதும் ரசிக்கப்பட்டது. மற்றவை முக்கியமாக என் துறை சம்பந்தப்பட்டவை, பொது விஷயங்கள் பலராலும் புரிதலுக்கு உதவியதாகப் பாராட்டப்பட்டது. 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

     போக்க என்னிடம் பொழுதிருந்தாலும், சரக்கில்லையெனில் ஒரு வரியும் எழுதமுடியாது என்பது அனைவரும் அறிந்ததே. தோன்றும்போது அது எந்த மொக்கையோ, உருப்படாத எதிர் கவுஜயோ உடனே எழுதிவிடுவேன். இதுக்கெல்லாம் காசு கொடுப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா என்ன? 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

    டெம்ப்ளேட் டெஸ்ட் செய்வதற்காக ஒன்று, நான் படிக்கும் பதிவர்களின் பட்டியலுக்காக ஒன்று (அவர்கள் தளத்தில் வைரஸ் இருந்தால் என் பதிவு தப்பிக்கும் என்ற நல்ல எண்ணம்தான்), என் பதிவின் பேக்கப்புக்காக ஒன்று. இவையன்றி, நான் கிறுக்கும் கவிதைகளுக்காக பகிர்தலுக்கின்றி கிணற்றுத்தவளை என்ற ஒரு பதிவு. எல்லாமே தமிழ்ப் பதிவுகள்தான். ஆக கணக்கில் வருவது பாமரன் பக்கங்கள்... ஒன்று மட்டுமே.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

உண்டு. கோபமும் பொறாமையும் எந்த அர்த்தத்தில் கேட்கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம் அடிக்கடி எழுத மறுப்பது. பொறாமை மீண்டும் ப்ரியா மீது, அத்தகைய நல்ல தமிழ் எழுத முடியவில்லையே என்ற ஏக்கம், அதுசரியின் மிகத் தெளிவான வாதமும், கட்டிப் போடும் எழுத்துத்திறனும், மணிஜி ஒற்றை வரியில் புரட்டிப் போடும் திருப்பம், காமராஜின் மண்வாசனையுடனான எழுத்து, பா.ரா. போகிற போக்கில் தலைகோதிப் போகும் கவிதை, பாலாசியின் வானவில் எழுத்து, ரிஷபன்,நர்சிம்,அகநாழிகை வாசுதேவன்,  வாழ்க்கையில் கடந்து போகின்றவைகளைக் கவலையுடன் பகிரும் கதிர் இப்படிப் பலரும் தொடர்ந்து பிரமிக்க வைப்பதால். 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

திரு பழமைபேசி. இன்றைக்கு வலையுலகில் நல்ல தமிழில் எழுதுவது மட்டுமின்றி, மற்றவர்களையும் எழுத ஊக்குவிக்கும் மனிதர். வழக்கொழிந்து போன கிராமத்து விடயங்கள், சொற்கள், என்று எழுதாத விடயமில்லை. அமெரிக்காவில் எங்கு தமிழ் விழா நடந்தாலும், பங்கேற்று ‘நிற்க அதற்குத் தகவாக’ இருப்பவர். அவரின் முதல் பின்னூட்டம் ‘எழுத்து நடை கனகச்சிதம்’ . 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

அப்படி எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை. பல இடுகைகளில் சொல்லியிருப்பது போதுமென நினைக்கிறேன். இனிப் பகிர இருப்பின் பகிர்வேன். 

நண்பர் சிங்கை பிரபாகர் தொடர்வார் என்ற நம்பிக்கையுடன்.....

~~~~~~~~~~~~

164 comments:

நசரேயன் said...

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பேரு வாரதே பெரிய விஷயம், அது தோன்றி வந்தா என்ன தோன்றாம வந்தா என்ன ?

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
நிறைய பட்டபெயர்கள் இருக்கு, அதை எல்லாம் சேர்த்து எழுதினா வலையுலகம் தாங்காது

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
நான் காலை எல்லாம் எடுத்து வைக்கலை, கையை தான் எடுத்து தச்சி அடிப்பான் மேல வச்சேன்

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
நல்லா கும்மி அடிச்சேன்..

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஆமா கற்பனைன்னு போட்டுக்குவேன், வரலாறு முக்கியம் அல்லவா

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
எந்த கடையிலே காசு கொடுக்குறாங்கன்னு சொல்லுங்க,அங்கே எழுதலாம்

புலவன் புலிகேசி said...

என் அழைப்பை ஏற்று எழுதியமைக்கு மிக்க நன்றி ஐயா. நல்ல பதில்கள். நானும் அந்த நறுக்குன்னு நாலு வார்த்தையின் ரசிகனானவன் தான்.

நசரேயன் said...

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
கூகுளே ஆண்டவர் ஓசியிலே கொடுக்கிறதாலே ரெண்டு கடை வச்சி இருக்கேன், கடைக்கு வாடகை கேட்டா, இழுத்து மூடிட்டு பொழைப்பை பார்க்க
வேண்டியதான்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
என்னைய தவிர எல்லோர் மேலும், ஏன்னா நல்லா எழுதுறாங்கன்னு

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
அணிமா, இப்ப நைஜிரி யா விலே காணமா போயிட்டாரு

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
ஏன் ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்னா?
என் இடுகையைய புத்தகமா போடுங்க, பதில் சொல்லுறேன்

dheva said...

இயல்பா...ரொம்ப நேர்த்தியா...படிக்கும் போதே ரொம்ப சந்தோசமா இருந்துச்சுண்ணே..... பதில்கள்!

இன்னும் எனக்கு நினைவில் இருக்கு....இப்போ கூடா விழுந்து விழுந்து சிரிக்கும் நறுக்குன்னு நாலு வார்த்தையில ஒண்ணு....

" அமெரிக்காவுல பொருளாதர பின்னைடைவுல எத்தனையோ லட்சம் பேர் வேலை இழந்துட்டாங்களாமே...இது செய்தி.... நிங்க சொல்லியிருப்பீங்க...


"வெள்ளச்சாமி விழுந்தாலும் பிரமாண்டம்தென்....."

ஹா...ஹா..ஹா..சுவையா இத விட நறுக்குன்னு யாராலயும் சொல்ல முடியாதுண்ணே...! அதையும் கொஞ்சம் எங்களுக்காக தொடருந்து இடை இடையே கொடுங்க அண்ணே...!

நசரேயன் said...

// பல நகைச்சுவையுடனிருந்ததால் பெரிதும் ரசிக்கப்பட்டது.//

மறுக்க முடியாத உண்மை

நசரேயன் said...

//என் டைரி. //

அண்ணே நாங்க கடைப்பக்கம் வரணுமா வேண்டாமா ?

நசரேயன் said...

//எல்லாமே தமிழ்ப் பதிவுகள்தான். //

அப்ப நாங்க எல்லாம் எழுத்துப் பிழை இல்லமா "இந்தி"லையா எழுதிகிட்டு இருக்கோம்

நசரேயன் said...

// சரக்கில்லையெனில் ஒரு வரியும் எழுதமுடியாது என்பது அனைவரும்
அறிந்ததே.//

போன வார சரக்கு தீர்ந்து போச்சி, இனிமேல தான் வாங்கணும்

நசரேயன் said...

// கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம்
அடிக்கடி எழுத மறுப்பது//

ஆணி அதிகமா இருக்குமுண்ணே, இங்கிட்டு சொம்பு அடிச்சாலும் பொழைப்பு முக்கியமுல்ல

நசரேயன் said...

//அமெரிக்காவில் எங்கு தமிழ் விழா நடந்தாலும், பங்கேற்று ‘நிற்க அதற்குத்
தகவாக’ இருப்பவர்.//

அண்ணி வீட்டிலே இல்லை, அதான் இப்படி ஊரு ஊரா சுத்துறாரு

நசரேயன் said...

ஆள் இல்லா கடையிலே டீ ஆத்தி முடிச்சிட்டேன்

பனித்துளி சங்கர் said...

கேட்கப் பட்டக் கேள்விகளுக்கு உங்களின் பதில்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக உங்களின் வாசிப்பு மற்றும் எழுத்து அனுபவத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தி உள்ளது . அருமை பகிர்வுக்கு நன்றி ஐயா !

இனியா said...

nasareyan,

innaikku aani athigam illaiyo?

Unknown said...

// நசரேயன் said...

ஆள் இல்லா கடையிலே டீ ஆத்தி முடிச்சிட்டேன்
//
ஆள் இல்லாதக் கடையில ஆத்துனாலும் ஸ்ட்ராங்காத் தான்யா ஆத்தி இருக்கீங்க.

அது சரி(18185106603874041862) said...

//
டெம்ப்ளேட் டெஸ்ட் செய்வதற்காக ஒன்று,
//

இது நல்ல ஐடியாவா இருக்கே...நான் ஒவ்வொரு தடவை டெம்ப்ளேட் மாத்தும் போதும் எதுனா தப்பாயிடுது...

//
நான் கிறுக்கும் கவிதைகளுக்காக பகிர்தலுக்கின்றி கிணற்றுத்தவளை என்ற ஒரு பதிவு.
//

கிணற்றுத்தவளையை கிணத்துலயே போட்டுடறதா? ரீலீஸ் பண்ணுங்க சாரே...

Unknown said...

//அப்ப நாங்க எல்லாம் எழுத்துப் பிழை இல்லமா "இந்தி"லையா எழுதிகிட்டு இருக்கோம்//

இதுலயும் ஒரு எழுத்துப் பிழையை விட்டு தன முத்திரையை ஆழமாப் பதிச்சுட்டுப் போயிருக்காரு பாருங்க. அதுதான் தளபதி ஸ்பெஷல்.

Unknown said...

//காரணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதுதான்//

அந்தப் பிடிச்ச காரணத்தை சொல்லுங்களேன்?

அது சரி(18185106603874041862) said...

//
ஆனால் கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம் அடிக்கடி எழுத மறுப்பது.
//

மத்தவங்களை பத்தி சொல்ல முடியாது...பட், நான் அடிக்கடி எழுதலைன்னு நீங்க வருத்தப்படறீங்க...இவன் எதுக்கு எழுதறான்னு நிறைய பேரு கோவப்படறாங்க...அதனால ஒரு சேஃப்டிக்கு....:)))

//
அதுசரியின் மிகத் தெளிவான வாதமும்,
//

வதந்திகளை நம்பாதீர்கள்...

Unknown said...

//என் மன அழுத்தத்தை பாரத்தை, என்னை பாதித்த விடயத்தை நான் எழுதிவைக்கும் ஆவணமிது//

ஆணவம்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா படிச்சுட்டு பயந்துட்டேன்.

நசரேயன் said...

//ஆணவம்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா படிச்சுட்டு பயந்துட்டேன்.

//

எப்படி ஆணாதிக்கமுன்னா?

Unknown said...

//இதுக்கெல்லாம் காசு கொடுப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா என்ன? //

குழு சேர்த்து அரசியல் செஞ்சி ஓட்டு வாங்கி சொத்து சேக்குறதா சி.பி.ஐ செய்திக் குறிப்பு ஒன்னு சொல்லுதே? அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?

நசரேயன் said...

//innaikku aani athigam illaiyo?
//

ஆணி பிடிங்கி ரெம்ப களைப்பாய்டேன்

நசரேயன் said...

//குழு சேர்த்து அரசியல் செஞ்சி ஓட்டு வாங்கி சொத்து சேக்குறதா சி.பி.ஐ
செய்திக் குறிப்பு ஒன்னு சொல்லுதே?//

அயல் நாட்டு சதியோ ?

vasu balaji said...

முகிலன் said...
//என் மன அழுத்தத்தை பாரத்தை, என்னை பாதித்த விடயத்தை நான் எழுதிவைக்கும் ஆவணமிது//

ஆணவம்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா படிச்சுட்டு பயந்துட்டேன்.//

அய்யய்யோ. அதுசரி கோவணம்னு படிக்காம இருக்கணுமே:)) அப்புறம் என்னையும் நாட்டாமை லிஸ்ட்ல போட்டுடுவாரு:))

நசரேயன் said...

// நான் அடிக்கடி எழுதலைன்னு நீங்க
வருத்தப்படறீங்க//

உம்ம விலாசம் இல்லையாம் ஆட்டோ எடுத்திட்டு வர

Mahi_Granny said...

நீங்களே பலரைப் பிரமிக்க வைக்கும் ஆள் . உங்களையே பிரமிக்க வைக்கும் ஆட்களும் இருக்கிறார்கள் என்னும் போது மகிழ்ச்சி தான்

Unknown said...

//ஆனால் கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம் அடிக்கடி எழுத மறுப்பது.//

நானும் படறேன்.

//பொறாமை மீண்டும் ப்ரியா மீது, அத்தகைய நல்ல தமிழ் எழுத முடியவில்லையே என்ற ஏக்கம்//

அப்பிடி எழுதுறதையும் புரிஞ்சிக்க முடியலயேங்க்குற வருத்தம்..

vasu balaji said...

முகிலன் said...
//இதுக்கெல்லாம் காசு கொடுப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா என்ன? //

குழு சேர்த்து அரசியல் செஞ்சி ஓட்டு வாங்கி சொத்து சேக்குறதா சி.பி.ஐ செய்திக் குறிப்பு ஒன்னு சொல்லுதே? அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?//

ம்கும். அதை நான் இடுகையில சொன்னத டி.வி.ஆர். இடுகையில ஒருத்தர் மீள்பதிவு போடாத குறையா விளம்பரம் பண்ணாங்க. அம்புட்டு பேமஸ் நானு:))

vasu balaji said...

அதுசரியின் மிகத் தெளிவான வாதமும்,
//

வதந்திகளை நம்பாதீர்கள்...//

ஏன் ராசா:)) இன்னைக்கு கடிச்ச கடிக்கு எந்த தடுப்பூசியும் இல்லையான்னு அலைபாயணுமே போதாது:)). வதந்தியாம்ல

Unknown said...

//அதுசரியின் மிகத் தெளிவான வாதமும், கட்டிப் போடும் எழுத்துத்திறனும், மணிஜி ஒற்றை வரியில் புரட்டிப் போடும் திருப்பம், காமராஜின் மண்வாசனையுடனான எழுத்து, பா.ரா. போகிற போக்கில் தலைகோதிப் போகும் கவிதை, பாலாசியின் வானவில் எழுத்து, ரிஷபன்,நர்சிம்,அகநாழிகை வாசுதேவன், வாழ்க்கையில் கடந்து போகின்றவைகளைக் கவலையுடன் பகிரும் கதிர்//

இதுல என் பேரை சேக்காம விட்டதுக்கு உங்களுக்கு வக்கீல் நோட்டிஸ் விட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

(இதெல்லாம் ஓவர்டா தினேஷு இவங்க எழுத்துக்கும் உன் பிதற்றலுக்கும் ஏணி இல்ல எஸ்கலேட்டர் வச்சாலும் எட்டுமா?)

நசரேயன் said...

//அப்பிடி எழுதுறதையும் புரிஞ்சிக்க முடியலயேங்க்குற வருத்தம்..

//

நான் வேணா பயிற்சி கொடுக்கவா முகிலரு

vasu balaji said...

முகிலன் said...
//காரணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதுதான்//

அந்தப் பிடிச்ச காரணத்தை சொல்லுங்களேன்?//

குருவின்னா புடிக்காம எப்புடி:))

vasu balaji said...

தளபதி ஒரு மார்க்கமாத்தான் இருக்காரு இன்னிக்கு:)). அது சரில தலைவருக்கு ஆப்பு வெச்சிட்டாரு=))

நசரேயன் said...

//இதுல என் பேரை சேக்காம விட்டதுக்கு உங்களுக்கு வக்கீல் நோட்டிஸ் விட்டால் உங்கள் பதில்
என்னவாக இருக்கும்?//

யோவ் நானும் வருத்ததிலே தான் இருக்கேன்.. அண்ணாத்த பதில் சொல்லியே ஆகணும்

Unknown said...

//திரு பழமைபேசி. இன்றைக்கு வலையுலகில் நல்ல தமிழில் எழுதுவது மட்டுமின்றி, மற்றவர்களையும் எழுத ஊக்குவிக்கும் மனிதர். வழக்கொழிந்து போன கிராமத்து விடயங்கள், சொற்கள், என்று எழுதாத விடயமில்லை. அமெரிக்காவில் எங்கு தமிழ் விழா நடந்தாலும், பங்கேற்று ‘நிற்க அதற்குத் தகவாக’ இருப்பவர். அவரின் முதல் பின்னூட்டம் ‘எழுத்து நடை கனகச்சிதம்’ .//

உண்மையச் சொல்லுங்க தேடிப் பாத்துத் தான வெளியிட்டிங்க?

நசரேயன் said...

//அது சரில தலைவருக்கு ஆப்பு வெச்சிட்டாரு=))
//

யாரு .. யாரு

Unknown said...

//அப்படி எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை. பல இடுகைகளில் சொல்லியிருப்பது போதுமென நினைக்கிறேன். இனிப் பகிர இருப்பின் பகிர்வேன்.//

பகிருங்க பகிருங்க.

Unknown said...

கடும் பணிச்சுமைக்கு இடையிலும் இங்கே வந்து தன் பொன்னான நேரத்தை ஒதுக்கிக் கும்மி அடித்து விட்டுப் போன அண்ணன் முகிலன் வாழ்க வாழ்க.

நசரேயன் said...

//உண்மையச் சொல்லுங்க தேடிப் பாத்துத் தான வெளியிட்டிங்க?
//

ஒண்ணுமே புரியலையே

Unknown said...

// முகிலன் said...

கடும் பணிச்சுமைக்கு இடையிலும் இங்கே வந்து தன் பொன்னான நேரத்தை ஒதுக்கிக் கும்மி அடித்து விட்டுப் போன அண்ணன் முகிலன் வாழ்க வாழ்க.//

வேற பேர்ல கமென்ட் போடணும்னு நினைச்சிட்டு உன் பேர்லயே போட்டுட்டியேடா முகிலா. உனக்கு அனுபவம் பத்தாது.
:))

vasu balaji said...

முகிலன் said...
//அதுசரியின் மிகத் தெளிவான வாதமும், கட்டிப் போடும் எழுத்துத்திறனும், மணிஜி ஒற்றை வரியில் புரட்டிப் போடும் திருப்பம், காமராஜின் மண்வாசனையுடனான எழுத்து, பா.ரா. போகிற போக்கில் தலைகோதிப் போகும் கவிதை, பாலாசியின் வானவில் எழுத்து, ரிஷபன்,நர்சிம்,அகநாழிகை வாசுதேவன், வாழ்க்கையில் கடந்து போகின்றவைகளைக் கவலையுடன் பகிரும் கதிர்//

இதுல என் பேரை சேக்காம விட்டதுக்கு உங்களுக்கு வக்கீல் நோட்டிஸ் விட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

(இதெல்லாம் ஓவர்டா தினேஷு இவங்க எழுத்துக்கும் உன் பிதற்றலுக்கும் ஏணி இல்ல எஸ்கலேட்டர் வச்சாலும் எட்டுமா?)//


ஹி ஹி. பழமையை கூட சொல்லலை. நீங்கள்ளாம் பியாண்ட் ரீச்னு உட்டுட்டேன்னு பதில் சொல்லுவேனே:))

நசரேயன் said...

//கடும் பணிச்சுமைக்கு இடையிலும் இங்கே வந்து தன் பொன்னான நேரத்தை ஒதுக்கிக் கும்மி அடித்து விட்டுப் போன
அண்ணன் முகிலன் வாழ்க வாழ்க.//

உலக மகா ஆணி பிடிங்கின்னு கேள்விப்பட்டோம்

Unknown said...

ஒரு வழியா 43 க்குக் கொண்டு வந்துட்டேன். இன்னும் எழு தான். யாராவது இருக்கீங்களா?

நசரேயன் said...

// பழமையை கூட சொல்லலை. நீங்கள்ளாம் பியாண்ட் ரீச்னு உட்டுட்டேன்னு பதில்
சொல்லுவேனே:))//

என்ன ஒரு சமாளிப்பு !!!!

நசரேயன் said...

//ஒரு வழியா 43 க்குக் கொண்டு வந்துட்டேன். இன்னும் எழு தான்.
யாராவது இருக்கீங்களா?//

ஆமா .. ஆமா

Unknown said...

// நசரேயன் said...

//உண்மையச் சொல்லுங்க தேடிப் பாத்துத் தான வெளியிட்டிங்க?
//

ஒண்ணுமே புரியலையே//

யாரு முதல் கமென்ட் போட்டாங்கன்னு

நசரேயன் said...

//நப்பாசையுடன்//

ஆசை தெரியும் அது என்ன நப்பாசை (பழமைபேசி விளக்கம் கொடுப்பாரா ?)

நசரேயன் said...

//நப்பாசையுடன்//

ஆசை தெரியும் அது என்ன நப்பாசை (பழமைபேசி விளக்கம் கொடுப்பாரா ?)

vasu balaji said...

முகிலன் said...
//திரு பழமைபேசி. இன்றைக்கு வலையுலகில் நல்ல தமிழில் எழுதுவது மட்டுமின்றி, மற்றவர்களையும் எழுத ஊக்குவிக்கும் மனிதர். வழக்கொழிந்து போன கிராமத்து விடயங்கள், சொற்கள், என்று எழுதாத விடயமில்லை. அமெரிக்காவில் எங்கு தமிழ் விழா நடந்தாலும், பங்கேற்று ‘நிற்க அதற்குத் தகவாக’ இருப்பவர். அவரின் முதல் பின்னூட்டம் ‘எழுத்து நடை கனகச்சிதம்’ .//

உண்மையச் சொல்லுங்க தேடிப் பாத்துத் தான வெளியிட்டிங்க?//

ஹி ஹி. இல்லை. ஒன்னு நம்ம எழுத்துலையும் நடை இருக்கான்னு பெரிய ஆச்சரியமா போனதால பச்சுன்னு மனசுல நின்னுச்சு. அப்புறம், பழமை பின்னூட்டம் போடுறாரு, நீ ஏம்மா போடமாட்டன்னு மொத மொத ப்ரியாட்ட சண்ட போட்டு பின்னூட்டம் வாங்கினதும், அப்புறம் ரெண்டு பேருட்டயும் நிறைய கத்துக்க முடிஞ்சதும் காரணம்.

Unknown said...

நான் கருத்தா கமென்ட் மட்டும் போட்டுட்டு இருக்கேன். மக்கள் இருக்குறதைப் பாக்காம

vasu balaji said...

நசரேயன் said...
//நப்பாசையுடன்//

ஆசை தெரியும் அது என்ன நப்பாசை (பழமைபேசி விளக்கம் கொடுப்பாரா ?)//

நைப்பு+ஆசை. நமுத்துப் போனதுண்ணே.

நசரேயன் said...

//
நான் கருத்தா கமென்ட் மட்டும் போட்டுட்டு இருக்கேன். மக்கள் இருக்குறதைப் பாக்காம
//

எங்கிட்டு கருத்து சொல்லி இருக்கியா ?

Unknown said...

சமூகக் கடமை ஆற்றப் போயிருந்தேன்.

vasu balaji said...

நசரேயன் said...
//குழு சேர்த்து அரசியல் செஞ்சி ஓட்டு வாங்கி சொத்து சேக்குறதா சி.பி.ஐ
செய்திக் குறிப்பு ஒன்னு சொல்லுதே?//

அயல் நாட்டு சதியோ ?//

ம்கும். இருக்கும் இருக்கும். ஆமாண்ணாச்சி, என்னா பின்னூட்டத்துல இடுகை போடுறீங்க, கவுஜ எழுதுறீங்க. உங்க கடை காத்து வாங்குது:))

Unknown said...

//எழுத்து நடை கனகச்சிதம்//

எழுத்து நடக்குமா? என் ஸ்க்ரீன்ல நின்னுக்கிட்டே இருக்கே?

நசரேயன் said...

//இருக்கும் இருக்கும். ஆமாண்ணாச்சி, என்னா பின்னூட்டத்துல இடுகை போடுறீங்க, கவுஜ எழுதுறீங்க. உங்க
கடை காத்து வாங்குது:))//

எழுதி வச்சதை போட முடியாபடி ஆணி இருக்கு என்ன செய்ய ?

vasu balaji said...

முகிலன் said...
//எழுத்து நடை கனகச்சிதம்//

எழுத்து நடக்குமா? என் ஸ்க்ரீன்ல நின்னுக்கிட்டே இருக்கே?//

அது ஸ்க்ரால்ல நடக்கும்ல.:))

நசரேயன் said...

//சமூகக் கடமை ஆற்றப் போயிருந்தேன்.
//

தம் அடிக்கவா ?

Unknown said...

நசரேயன் உங்க போட்டோ சூப்பர். தமிழ்த் திரையுலகம் ஒரு கதாநாயகனை இழந்து விட்டது.

Unknown said...

// நசரேயன் said...

//சமூகக் கடமை ஆற்றப் போயிருந்தேன்.
//

தம் அடிக்கவா ?//

ஓட்டுப் போட பாஸ். நீங்க வேற அந்தக் கருமத்தை விட்டு ஆறு வருசமாச்சு.

நசரேயன் said...

//நைப்பு+ஆசை. நமுத்துப்
போனதுண்ணே//

பயன் படுத்திக்கிறேன் பிற் காலத்திலேயே

Unknown said...

//அது ஸ்க்ரால்ல நடக்கும்ல.:))//
கரெக்டு சார். ஸ்க்ரோல் பண்ணும் போது நடக்குரதென்ன ஓடவே செய்யுது.

நசரேயன் said...

//நசரேயன் உங்க போட்டோ சூப்பர். தமிழ்த் திரையுலகம் ஒரு கதாநாயகனை
இழந்து விட்டது.//

ஹாலிவுட் சரி வருமா ?

vasu balaji said...

முகிலன் said...


//நசரேயன் உங்க போட்டோ சூப்பர். தமிழ்த் திரையுலகம் ஒரு கதாநாயகனை இழந்து விட்டது.//

அதும் பிரியாமணி கூட எடுத்த ஃபோட்டோல வெக்கமா கோட் பட்டன திருகிட்டு குடுத்தாரே ஒரு போசு. ங்கொய்யால, காலையும் எடுத்திருந்தா கோலம் கூட தெரிஞ்சிருக்கும்.:))))

நசரேயன் said...

//அதும் பிரியாமணி கூட எடுத்த ஃபோட்டோல வெக்கமா கோட் பட்டன திருகிட்டு குடுத்தாரே ஒரு போசு. ங்கொய்யால, காலையும் எடுத்திருந்தா
கோலம் கூட தெரிஞ்சிருக்கும்.:))))//

கண்ணாடி போட மறந்திட்டேன்னு நானே வருத்ததிலே இருக்கேன்

Unknown said...

//ஹாலிவுட் சரி வருமா ?//

ஏற்கனவே வில் ஸ்மித், சாமுவேல் ஜாக்சன் எல்லாம் இடம் பிடிச்சிட்டாங்க.

Unknown said...

//ஹாலிவுட் சரி வருமா ?//
அதுக்கு இங்க்ளிபிஸ் பேசணுமாமே?

நசரேயன் said...

இரவு 1 மணிக்கு கும்மியிலே கலந்து கொண்டு இருக்கும் அண்ணன் வாழ்க

vasu balaji said...

முகிலன் said...
//ஹாலிவுட் சரி வருமா ?//
அதுக்கு இங்க்ளிபிஸ் பேசணுமாமே?


அட நீங்க வேற! நல்லா நொங்கு தின்னத்தெரியும்னு க்வாலிஃபிகேஷன வெச்சிட்டு கேக்கறாரு போல. நொங்கு தின்னும்போது வசனம் முடியாதில்ல:))

நசரேயன் said...

//அதுக்கு இங்க்ளிபிஸ் பேசணுமாமே?//

வடக்கூர் காரிகள் மாதிரி எனக்கு டப்பிங் கிடைக்குமா ?

Unknown said...

//கண்ணாடி போட மறந்திட்டேன்னு நானே வருத்ததிலே இருக்கேன்//

அந்தப் படத்துல டை எங்க? உங்க ஜொள்ளுல ஈரமாய் கழட்டி வச்சுட்டிங்க்களா?

நசரேயன் said...

//நொங்கு தின்னும்போது வசனம்
முடியாதில்ல//

நோகாம திங்கணும்

Unknown said...

//வடக்கூர் காரிகள் மாதிரி எனக்கு டப்பிங் கிடைக்குமா ?.//
அது பெண்களுக்கு மட்டும் தான். ஆண்கள் அப்பிடியே பேச வேண்டும்.

vasu balaji said...

முகிலன் said...
//கண்ணாடி போட மறந்திட்டேன்னு நானே வருத்ததிலே இருக்கேன்//

அந்தப் படத்துல டை எங்க? உங்க ஜொள்ளுல ஈரமாய் கழட்டி வச்சுட்டிங்க்களா?//

இல்லைன்னா வடிவேலு ஸ்டைலோ:)))

நசரேயன் said...

//அந்தப் படத்துல டை எங்க//

அதையும் மறந்து போனேன், அடுத்த நாளுக்கு தயாரா வச்சி இருந்தேன்

Unknown said...

//இரவு 1 மணிக்கு கும்மியிலே கலந்து கொண்டு இருக்கும் அண்ணன் வாழ்க//

ஒரு மணியெல்லாம் அவருக்கு சாயந்திரம் ஆறு மணி மாதிரி.

நசரேயன் said...

//ஒரு மணியெல்லாம் அவருக்கு
சாயந்திரம் ஆறு மணி மாதிரி//

அப்படித்தான் தோணுது முகிலா ?

vasu balaji said...

முகிலன் said...
//இரவு 1 மணிக்கு கும்மியிலே கலந்து கொண்டு இருக்கும் அண்ணன் வாழ்க//

ஒரு மணியெல்லாம் அவருக்கு சாயந்திரம் ஆறு மணி மாதிரி.//

இதெல்லாம் யாருக்கு தெரியுது=)).

Unknown said...

////ஒரு மணியெல்லாம் அவருக்கு
சாயந்திரம் ஆறு மணி மாதிரி//

அப்படித்தான் தோணுது முகிலா ?//

உங்களுக்கு வீட்டுக்கு கிளம்புற நேரம் ஆகலையா?

Unknown said...

Only 18 more

vasu balaji said...

சரிங்கப்பு. நான் தூங்கபோறேன். கண்ணு பட்டுடுச்சி. ஒரு 17 பின்னூட்டம் போட்டுட்டு ஊட்டுக்கு கிளம்புங்க:))

Unknown said...

//இதெல்லாம் யாருக்கு தெரியுது=)).//

சைடுல பஸ்சும் ஓடுதா சார்?

நசரேயன் said...

//
உங்களுக்கு வீட்டுக்கு கிளம்புற நேரம் ஆகலையா?
//

இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கும் சாமி..முடிஞ்சா நம்பர் மின் அஞ்சல் அனுப்புங்க

நசரேயன் said...

//சரிங்கப்பு. நான் தூங்கபோறேன். கண்ணு பட்டுடுச்சி. ஒரு 17 பின்னூட்டம் போட்டுட்டு ஊட்டுக்கு கிளம்புங்க:))//
100 வரும்

vasu balaji said...

முகிலன் said...
//இதெல்லாம் யாருக்கு தெரியுது=)).//

சைடுல பஸ்சும் ஓடுதா சார்?//

இல்லை. ஸ்விஸ் பஸ் ஸ்பெயின்ல ரெஸ்டு. லண்டன் பஸ்ஸு அப்போவே தூங்கப்போறேன்னு பின்னூட்டம் போட்டுட்டு எஸ்ஸாயிடிச்சி:))

Unknown said...

//இல்லை. ஸ்விஸ் பஸ் ஸ்பெயின்ல ரெஸ்டு. லண்டன் பஸ்ஸு அப்போவே தூங்கப்போறேன்னு பின்னூட்டம் போட்டுட்டு எஸ்ஸாயிடிச்சி:)//

ஸ்பெயினுக்குப் போயி நெதர்லாந்துக்கு சப்போர்ட் செய்யப் போறேன்னு சொல்லும்போதே நினைச்சேன். ஸ்பெயின் தான் ஜெவிக்கப் போவுதுன்னு.

Unknown said...

நசரேயன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

நசரேயன் said...

//கணக்கில் வருவது பாமரன்
பக்கங்கள்.//

அப்ப வரலாறு, புவியல்ல எல்லாம் யாரு வாரா ?

நசரேயன் said...

//என்ன சார் இப்பிடி சொல்லிட்டீங்க? பூமி என்றாவது சுழன்றது போதும் என்று ஓய்வு எடுத்திருக்கிறதா? சூரியன் என்றாவது எரித்தது போதும் என்று ஓய்வு எடுத்தது உண்டா?
//

ஆமா .. ஆமா

Unknown said...

//நறுக்குன்னு நாலு வார்த்தை’ என்ற ஒரே தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட//

இதைப் படிக்கும் போது தலைவருக்கு கணக்கு சரியா வராது போல இருக்கே?

vasu balaji said...

நசரேயன் said...
//கணக்கில் வருவது பாமரன்
பக்கங்கள்.//

அப்ப வரலாறு, புவியல்ல எல்லாம் யாரு வாரா ?//

ஒன்று மட்டும்தான சேர்த்துப் படிங்கண்ணாச்சி:))

நசரேயன் said...

//
இல்லை. ஸ்விஸ் பஸ் ஸ்பெயின்ல ரெஸ்டு. லண்டன் பஸ்ஸு அப்போவே தூங்கப்போறேன்னு பின்னூட்டம் போட்டுட்டு எஸ்ஸாயிடிச்சி:))//

நாங்க எல்லாம் ட்ரைன்ல வாரோம்

பா.ராஜாராம் said...

நன்றி பாலாண்ணா.

திருவிழா கோலமாவுல இருந்திருக்கு. மிஸ் பண்ணிட்டேனே. நசர், mugilan :-))

Unknown said...

//நறுக்குன்னு நாலு வார்த்தை’ என்ற ஒரே தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட//

நாலு வார்த்தைனா நாலுதான எழுதணும். எப்பிடி நூற்றுக்கும் மேற்பட்ட?

Unknown said...

99

Unknown said...

100

Unknown said...

me the 101

நசரேயன் said...

//ஒன்று மட்டும்தான சேர்த்துப் படிங்கண்ணாச்சி:))
//

அந்த காலத்து ஆள் மாதிரியே இருக்கு

Unknown said...

இத்துடன் நான் விடை பெற்றுக் கொள்கிறேன். ஆப்பீஸ் முடிஞ்சது.

நசரேயன் said...

// மிஸ் பண்ணிட்டேனே. நசர், mugilan :-))//

களைச்சி போய்ட்டோம்

Unknown said...

// பா.ராஜாராம் said...

நன்றி பாலாண்ணா.

திருவிழா கோலமாவுல இருந்திருக்கு. மிஸ் பண்ணிட்டேனே. நசர், mugilan :-))//

நீங்க லேட்டு பா.ரா சார்.

நசரேயன் said...

நானும் விடை பெறுகிறேன்

பா.ராஜாராம் said...

இன்னும் ஓடிட்டுதான் இருக்கா?

பாலாண்ணா, தூங்கலையா? :-))

ILA (a) இளா said...

நானும் விடை பெறுகிறேன்

பா.ராஜாராம் said...

//களைச்சி போய்ட்டோம்//

//நீங்க லேட்டு பா.ரா சார்.//

அடப்பாவிகளா? புள்ளை புடிக்கிறவன் வந்துட்டான், ஓடு ஓடு- வா?

பா.ராஜாராம் said...

இளாவும் out-டா? நல்லாருங்கப்பு! :-)

சரி, அப்ப நானும் கிளம்புறேன்.

miss u makkals.

பிரபாகர் said...

கும்மியில கலந்துக்காம விட்டுட்டேனே...!

தெளிவாய், குறும்பான பதில்கள்...

எதையும் நேர்த்தியாய், அது தான் என் ஆசான்.

பிரபாகர்...

நேசமித்ரன் said...

//ஆணி அதிகமா இருக்குமுண்ணே, இங்கிட்டு சொம்பு அடிச்சாலும் பொழைப்பு முக்கியமுல்ல//

:))

நேசமித்ரன் said...

ஆனால் கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம் அடிக்கடி எழுத மறுப்பது. பொறாமை மீண்டும் ப்ரியா மீது, அத்தகைய நல்ல தமிழ் எழுத முடியவில்லையே என்ற ஏக்கம், அதுசரியின் மிகத் தெளிவான வாதமும், கட்டிப் போடும் எழுத்துத்திறனும், மணிஜி ஒற்றை வரியில் புரட்டிப் போடும் திருப்பம், காமராஜின் மண்வாசனையுடனான எழுத்து, பா.ரா. போகிற போக்கில் தலைகோதிப் போகும் கவிதை, பாலாசியின் வானவில் எழுத்து, ரிஷபன்,நர்சிம்,அகநாழிகை வாசுதேவன், வாழ்க்கையில் கடந்து போகின்றவைகளைக் கவலையுடன் பகிரும் கதிர் இப்படிப் பலரும் தொடர்ந்து பிரமிக்க வைப்பதால். //

அனைவருக்கும் வாழ்த்துகளும் அன்பும் .பிரியமானவர்களிடமிருந்து பிரியமானவர்களுக்கு எனக் கொள்க !

உங்க லிஸ்ட்ல நாங்க எல்லாம் வர இன்னொரு நூற்றாண்டு ஆகும் போல

ம்ம் பெட்டர் லக் நெக்ஸ்ட் பிறவி

:)

ஆரூரன் விசுவநாதன் said...

அழகான பதில்கள்.....பகிர்வுக்கு நன்றி

காமராஜ் said...

கேள்விகள் படு இயல்பானதாகவும்.பதிலெனெச்சொல்லும் வார்த்தைகள் தயாரிக்கப்படாதவையாகவும் இருப்பதே இந்தப்பதிவின் வீர்யம்.
உள்ளத்தில் ஒளியுண்டாயின்.
எல்லாப்பதிலையும் ரசித்துப்படித்தேன் ஒரே ஒரு பதிலில் சங்கோஜப்பட்டுப்போனேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

குறும்பான பதில்கள் :)))

ஸ்ரீராம். said...

அருமை. கச்சிதம்.

'பரிவை' சே.குமார் said...

அழகான பதில்கள்.....பகிர்வுக்கு நன்றி.

ARV Loshan said...

எளிமையாக, இனிமையாக உங்களைப் பற்றி அறியத் தந்துள்ளீர்கள்.
உங்களைப் போலவே உங்கள் பதிவும் வெளிப்படையாகவே இருக்கிறது.

ARV Loshan said...

எளிமையாக, இனிமையாக உங்களைப் பற்றி அறியத் தந்துள்ளீர்கள்.
உங்களைப் போலவே உங்கள் பதிவும் வெளிப்படையாகவே இருக்கிறது.

Veliyoorkaran said...

மொதலாளி...எப்புடி இருக்கீக...? :)

ஈரோடு கதிர் said...

யோவ் போங்கய்யா!!!!

122வது பின்னூட்டமா நானு?

இனிமே நான் வரல

ஈரோடு கதிர் said...

||"பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?"||

நீங்கதான் பெரிய ரவுடியாயிட்டீங்களே

வாசகர் பரிந்துறைக்கு வந்ததுக்கெல்லாம் தமிழ்மணத்துல இருந்து செக் | அம்மி | உரல் ஏதாச்சும் வந்துச்சா?

எனக்கு வரலைங்ணா

நாடோடி said...

அருமையான‌ ப‌கிர்வு சார்..

எறும்பு said...

பதிவ விட பின்னூட்டம் படிக்க..... மூச்சு வாங்குது.
:)

சூர்யா ௧ண்ணன் said...

//இல்லை. ஆரம்பத்தில் பாமரன் என்ற பெயரில் எழுதினேன். பிரபல எழுத்தாளர் பாமரனோ என்ற குழப்பம் பின்னூட்டத்தின் மூலம் தெரிய வந்ததும்,//

தலைவா! நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்!..

நன்றாக நினைவிருக்கிறது உங்கள் இடுகையில் நான் இட்ட முதல் பின்னூட்டம்... "தலைவா! என்னை நினைவிருக்கா?' என்று..

எழுத்தாளர் பாமரனும், நானும் நண்பர்கள்.. தொடர்பு விட்டு போய் ஏழெட்டு வருடங்களாகின்றன.. அவரது ஃ பிடல் காஸ்ட்ரோ மொழி பெயர்ப்பிலும்.. வாலி + வைரமுத்து = ஆபாசம் ஆகிய படைப்புகளில் எனது ஒரு சிறு பங்கும் உண்டு... அதை அந்த புத்தகத்திலேயே குறிப்பிட்டிருப்பார்..

Paleo God said...

சார் அசத்திட்டீங்க!

ஆணி எல்லாம் இல்லீங்க நசர் புது வீடு மாறியதால் இணைய வசதி இன்னும் சரியாக கிடைக்கவில்லை. மேலும் எழுத தூண்டுவதை மட்டுமே எழுதுகிறேன் :)) (முகிலன் ஒரு விவரம் கொடுத்து அதற்காக நான் வலிய வரவழைத்து கதை எழுதிய கஷ்டம் எனக்குத்தான் தெரியும் ;) )

@நேசன் தலைவரே சார் சொன்னதுபோல நீங்கள், முகிலன் எல்லாரும் பியாண்ட் ரீச்தான்:)) என் பெயரை அவர் சேர்த்தது அவரின் பெருந்தன்மை. இன்னும் சிறப்பாக ஓரிரு இடுகையாவது என்னை எழுதத்தூண்டும் ஒரு வாஞ்சை. :))

Ramesh said...

அருமை. நான் கண்ட என்னைக்கண்ட ஒருவர் இப்போது காணக்கிடைக்காத சொந்தம். (உங்களுக்கு மட்டும் விளங்கும்)
என்றும் அன்புடன்

CS. Mohan Kumar said...

உண்மைக்கு எப்போதும் ஒரு அழகு உண்டு நீங்கள் உண்மையை அழகாய் எழுதி உள்ளீர்கள்

VELU.G said...

மிக நேர்த்தியான பதில்கள்

பகிர்வுக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

இங்க பெரிய கும்மி நடந்திருக்கு எனக்கு தெரியாம போச்சே.

நீங்க அளித்த பதில்களின் மூலம் ஜம்மென்று மனதில் உட்கார்ந்து விடுகிறீர்கள் அண்ணா.( இனி அப்படி கூப்பிடலாமுன்னு நினைக்கிறேன்)

ராஜ நடராஜன் said...

ஓ!இதற்குத்தானா பதிவர் ராதாகிருஷ்ணனின் எதிர்ப்பதிவு:)

ராஜ நடராஜன் said...

வளவளத்தார் நசரேயன் பின்னூட்டத்துல தூள் கிளப்பற மாதிரி தெரியுது:)

ஸ்பெல்லிங் கண்டு பிடிக்க முடியலையே?பின்னூட்டம் அவரே போடுகிறாரா இல்ல உதவியாளர் வச்சிகிட்டாரா:)

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

//வளவளத்தார் நசரேயன் பின்னூட்டத்துல தூள் கிளப்பற மாதிரி தெரியுது:)

ஸ்பெல்லிங் கண்டு பிடிக்க முடியலையே?பின்னூட்டம் அவரே போடுகிறாரா இல்ல உதவியாளர் வச்சிகிட்டாரா:)//

அதெப்புடி தளபதின்னா சும்மாவா:))


முகிலன் said...
//அப்ப நாங்க எல்லாம் எழுத்துப் பிழை இல்லமா "இந்தி"லையா எழுதிகிட்டு இருக்கோம்//

இதுலயும் ஒரு எழுத்துப் பிழையை விட்டு தன முத்திரையை ஆழமாப் பதிச்சுட்டுப் போயிருக்காரு பாருங்க. அதுதான் தளபதி ஸ்பெஷல்.

கலகலப்ரியா said...

//உண்டு. கோபமும் பொறாமையும் எந்த அர்த்தத்தில் கேட்கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம் அடிக்கடி எழுத மறுப்பது. பொறாமை மீண்டும் ப்ரியா மீது, //

enna kodumai sir ithu... en mela poraamaip paduravangalum irukkaangale... avvvv...

aanaa ithu evlo devalaam... daily eluhi irunthaa... kovaththirku kaaranam...daily eluthurathuthaan... apdi daily elutha mudiyalainnuthan poraamaiyumnnu solli iruppeenga.. hihi... appaalikkaa vanthu fullaa padichukkaren sir...

நிஜாம் கான் said...

சூப்பர்ணே! உங்கள் வலையுலகம் பத்தி ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. கேள்விபதில் அறிக்கை அருமையிலும் அருமையுடன் கூடிய சுவை

நிஜாம் கான் said...

இப்பதான் புரியுது உங்ககிட்ட இருக்கும் இதர பிளாக்குகளின் ரகசியம்

நிஜாம் கான் said...

கிணற்றுத்தவளையை நான் இதுவரை படிக்கவில்லை. இனிமே படிப்போம்ல..

Romeoboy said...

தமிழ்மணம் ஓட்டு அதிகமா இருக்கே.. கள்ள ஓட்டோ தல ..

ரிஷபன் said...

//தொடர்ந்து பிரமிக்க வைப்பதால்//
ஹி.. ஹி..
உண்மையா சொன்னா நீங்கதான் பிரமிக்க வைக்கிறீங்க.. பதிவுகள்.. பின்னூட்டங்கள்.. சலிக்காம..
எனிவே.. தேங்க்ஸ்..

க.பாலாசி said...

ஆஹா... டோட்டலா கும்மிய மிஸ் பண்ணிட்டனே.. நெம்ப பிஸி...

ஆமா ‘வானவில்’னா RAINBOW தானே?

Radhakrishnan said...

பிரமாதம்

vasu balaji said...

@@நன்றி jey
@@தளபதி. அதகளம். ரொம்ப ரசிச்சேன். நன்றி.
@@வாய்ப்புக்கு நன்றி மீண்டும் புலிகேசி.

vasu balaji said...

dheva said...
இயல்பா...ரொம்ப நேர்த்தியா...படிக்கும் போதே ரொம்ப சந்தோசமா இருந்துச்சுண்ணே..... பதில்கள்!

இன்னும் எனக்கு நினைவில் இருக்கு....இப்போ கூடா விழுந்து விழுந்து சிரிக்கும் நறுக்குன்னு நாலு வார்த்தையில ஒண்ணு....

" அமெரிக்காவுல பொருளாதர பின்னைடைவுல எத்தனையோ லட்சம் பேர் வேலை இழந்துட்டாங்களாமே...இது செய்தி.... நிங்க சொல்லியிருப்பீங்க...


"வெள்ளச்சாமி விழுந்தாலும் பிரமாண்டம்தென்....."

ஹா...ஹா..ஹா..சுவையா இத விட நறுக்குன்னு யாராலயும் சொல்ல முடியாதுண்ணே...! அதையும் கொஞ்சம் எங்களுக்காக தொடருந்து இடை இடையே கொடுங்க அண்ணே...!//

நிச்சயம் தேவா. மிக்க நன்றி.

vasu balaji said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கேட்கப் பட்டக் கேள்விகளுக்கு உங்களின் பதில்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக உங்களின் வாசிப்பு மற்றும் எழுத்து அனுபவத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தி உள்ளது . அருமை பகிர்வுக்கு நன்றி ஐயா !//

நன்றிங்க பனித்துளி சங்கர்.

vasu balaji said...

முகிலன் said...
கடும் பணிச்சுமைக்கு இடையிலும் இங்கே வந்து தன் பொன்னான நேரத்தை ஒதுக்கிக் கும்மி அடித்து விட்டுப் போன அண்ணன் முகிலன் வாழ்க வாழ்க.//

அதே அதே:))

vasu balaji said...

அது சரி said...
//
டெம்ப்ளேட் டெஸ்ட் செய்வதற்காக ஒன்று,
//

இது நல்ல ஐடியாவா இருக்கே...நான் ஒவ்வொரு தடவை டெம்ப்ளேட் மாத்தும் போதும் எதுனா தப்பாயிடுது...//

ஆமாம் பாஸ். அன்னைக்கே சொன்னேன். இந்த டெம்ப்ளேட்ல Bug இருக்கு. அலைன்மெண்ட் மட்டுமில்ல. ப்ளாக்கர்ஸ் லிஸ்ட்ல அப்டேட் ஆகறதில்லை.


//
நான் கிறுக்கும் கவிதைகளுக்காக பகிர்தலுக்கின்றி கிணற்றுத்தவளை என்ற ஒரு பதிவு.
//

கிணற்றுத்தவளையை கிணத்துலயே போட்டுடறதா? ரீலீஸ் பண்ணுங்க சாரே...//

கிணத்துல இருந்தாதான் கிணத்துத் தவளை:))

vasu balaji said...

அது சரி said...


//மத்தவங்களை பத்தி சொல்ல முடியாது...பட், நான் அடிக்கடி எழுதலைன்னு நீங்க வருத்தப்படறீங்க...இவன் எதுக்கு எழுதறான்னு நிறைய பேரு கோவப்படறாங்க...அதனால ஒரு சேஃப்டிக்கு....:)))//

இல்லை. இது நிஜமான் ரிக்வஸ்ட். டைம் கிடைக்கிறப்போ கொஞ்ச கொஞ்சமானாலும் எழுதி அடிக்கடி இடுகை வேணும். ப்ளீஸ்.


//வதந்திகளை நம்பாதீர்கள்...//

இன்னாது. நான் சொல்றது எனக்கே வதந்தியா. நல்லா இருக்கு பாஸ்:))

vasu balaji said...

Mahi_Granny said...
நீங்களே பலரைப் பிரமிக்க வைக்கும் ஆள் . உங்களையே பிரமிக்க வைக்கும் ஆட்களும் இருக்கிறார்கள் என்னும் போது மகிழ்ச்சி தான்//

நன்றிங்க. ஆமாம். இவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்க இருக்கு.

vasu balaji said...

பா.ராஜாராம் said...


//திருவிழா கோலமாவுல இருந்திருக்கு. மிஸ் பண்ணிட்டேனே. நசர், mugilan :-))//

ஆமாங்க பாரா. திருவிழாவேதான். தளபதி இப்படிக் கலாய்ச்சி இப்பதான் பார்க்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரெட்டைத்தவில் மாதிரி முகிலனும்:))

vasu balaji said...

ILA(@)இளா said...
நானும் விடை பெறுகிறேன்

நன்றி இளா:)

vasu balaji said...

பிரபாகர் said...
கும்மியில கலந்துக்காம விட்டுட்டேனே...!

தெளிவாய், குறும்பான பதில்கள்...

எதையும் நேர்த்தியாய், அது தான் என் ஆசான்.

பிரபாகர்...//

நன்றி பிரபா.

vasu balaji said...

@@நன்றி ஆரூரன்
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றி டி.வி.ஆர். சார்:)
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க சே.குமார்.
@@லோஷன். மிக்க நன்றி:)
@@நன்றி வெளியூர்க்காரன் aka பட்டா:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
||"பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?"||

நீங்கதான் பெரிய ரவுடியாயிட்டீங்களே

வாசகர் பரிந்துறைக்கு வந்ததுக்கெல்லாம் தமிழ்மணத்துல இருந்து செக் | அம்மி | உரல் ஏதாச்சும் வந்துச்சா?

எனக்கு வரலைங்ணா//

ம்கும். மசுரில்லாத மண்டையனுக்கு மகுடமாவது இருக்கேன்னு யாராச்சும் நினைக்கிறாங்களா:))

vasu balaji said...

@@நன்றிங்க நாடோடி
@@நன்றி ராஜகோபால்
@@ நல்லா கவனமிருக்கு சூர்யா. அஹா இம்புட்டு பெரிய ஆளா நீங்க. ரொம்ப சந்தோஷம்.
@@நன்றி ஷங்கர். வெண்ணெய் எங்கே:))
@@நன்றி றமேஸ். அடி வாங்கப்போறா:))
@@நன்றி மோகன் குமார்:)
@@நன்றி வேலு
@@நன்றி அக்பர். மகிழ்ச்சி:)

vasu balaji said...

கலகலப்ரியா said...
//உண்டு. கோபமும் பொறாமையும் எந்த அர்த்தத்தில் கேட்கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம் அடிக்கடி எழுத மறுப்பது. பொறாமை மீண்டும் ப்ரியா மீது, //

enna kodumai sir ithu... en mela poraamaip paduravangalum irukkaangale... avvvv...

aanaa ithu evlo devalaam... daily eluhi irunthaa... kovaththirku kaaranam...daily eluthurathuthaan... apdi daily elutha mudiyalainnuthan poraamaiyumnnu solli iruppeenga.. hihi... appaalikkaa vanthu fullaa padichukkaren sir...//

ங்கொய்யால. எழுதாததுக்கு கோவம்னும் சொல்லிட்டுதான், எழுத்தைப் பார்த்து பொறாமைன்னு சொன்னேன். நம்மகிட்டயேவா:)). எழுதுடாம்மா நிறைய ப்ளீஸ்.

vasu balaji said...

@@நன்றி நிஜாம்
@@நன்றி ரோமியோ. :))
@@நன்றி ரிஷபன்.
@@நன்றி பாலாசி
@@நன்றி வெ.இரா.

vasu balaji said...

நேசமித்ரன் said...


//அனைவருக்கும் வாழ்த்துகளும் அன்பும் .பிரியமானவர்களிடமிருந்து பிரியமானவர்களுக்கு எனக் கொள்க !

உங்க லிஸ்ட்ல நாங்க எல்லாம் வர இன்னொரு நூற்றாண்டு ஆகும் போல

ம்ம் பெட்டர் லக் நெக்ஸ்ட் பிறவி

:)//

ஓஹோ! இல்லையே. உள்ளங்கையை கரைத்த மாவில் தோய்த்து பாதம் ஒத்தி, விரல் நுனியால் சின்னச்சின்ன பதம் வைத்த சின்னி கிருஷ்ணனின் பாதம் படைத்த கவிதை நெஞ்சில் உதைக்கும் குழந்தையாய் நினைக்கும் போதெல்லாம் பிரமிக்கும் ஒன்று. அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒன்று இருக்கிறது எனச் சொல்லும் அடிச்சுவடு. :).நேசன் (இரண்டுமுறை):))

விக்னேஷ்வரி said...

போதுமான பதில்கள். நல்லாருக்கு.

Ravichandran Somu said...

நல்ல பகிர்வு....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

http://rkguru.blogspot.com/ said...

நம்ம நாம்தான் மேட்சிக்குனும்...

ராஜ நடராஜன் said...

//நீங்க அளித்த பதில்களின் மூலம் ஜம்மென்று மனதில் உட்கார்ந்து விடுகிறீர்கள் அண்ணா.( இனி அப்படி கூப்பிடலாமுன்னு நினைக்கிறேன்)//

தோ!நமக்குப் போட்டியா ஒரு ஆளு:)

vasu balaji said...

விக்னேஷ்வரி said...

போதுமான பதில்கள். நல்லாருக்கு.//

நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

ரவிச்சந்திரன் said...

நல்ல பகிர்வு....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்//

நன்றிங்க ரவிச்சந்திரன் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

rk guru said...

நம்ம நாம்தான் மேட்சிக்குனும்...//

சரியாச் சொன்னீங்க. நாமளே மெச்சிக்கலைன்னா மத்தவங்க சட்டைகூட பண்ணமாட்டாய்ங்க:))

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

//நீங்க அளித்த பதில்களின் மூலம் ஜம்மென்று மனதில் உட்கார்ந்து விடுகிறீர்கள் அண்ணா.( இனி அப்படி கூப்பிடலாமுன்னு நினைக்கிறேன்)//

தோ!நமக்குப் போட்டியா ஒரு ஆளு:)//

:))

பழமைபேசி said...

//எப்படிப் பட்டவன்??//

எப்படியெல்லாம் பட்டுகிட்டீங்கன்னு சொல்லவே இல்ல!!

நான், ஊசியில் வாயில் ஒரு ஓட்டைன்னு சொல்லி ஒரு இடுகையப் போட்டு, பட்டேன்... அந்த மாதிரி நீங்க எப்படியெல்லாம் பட்டீங்க?? அதான் இந்த இடுகையோட தலைப்பு!!!

vasu balaji said...

பழமைபேசி said...
//எப்படிப் பட்டவன்??//

எப்படியெல்லாம் பட்டுகிட்டீங்கன்னு சொல்லவே இல்ல!!

நான், ஊசியில் வாயில் ஒரு ஓட்டைன்னு சொல்லி ஒரு இடுகையப் போட்டு, பட்டேன்... அந்த மாதிரி நீங்க எப்படியெல்லாம் பட்டீங்க?? அதான் இந்த இடுகையோட தலைப்பு!!!//

தலைப்பு மட்டும் கொடுத்திருந்தா ஒரு பாட்டம் பொலம்பியிருக்கலாம். கேள்வியுமில்ல கொடுத்தாங்க.