Sunday, July 4, 2010

கெரடி கற்றவன் இடறி விழுந்தால்...
டோனி! டோனி! டோண்ட் ப்லே இன் த வெயில்!
நோமா! ஐம் ப்லேயின் இன் புள்யா மரம் நெழல் மா!

வாட் அண்ணாச்சி! ஆஃப் கிலோ கத்ரிக்கா டென் ருப்பீஸ் சொல்து. எட் ரூபாதான். வெங்காயம் ஆஃப் கிலோ போடு. ஓ மை காட்! இட்ஸ் எய்ட் ஓ க்லாக் ஆல்ரெடி. தொர கத்தும்.

ஏங்க சிரிக்கிறீங்க? இதென்னா மொழின்னா?

ஆப்பக்காரங்கன்னு நாம நக்கலா பேரு வச்சிருக்கோமே ஆங்கிலோ இந்தியர்கள், அவங்க பேசுறதுதான். 

ஹேய்! வாட்டாபன் டூ யூயா! நோ கால், நோ மெசேஜ், நோ மெயில்? எங்க தொலஞ்ச? ஹான்?

அட போ மச்சி! உனக்கு எல்லாம் ஃபந்தான். இஃப்யூ வெர் இன் மை பொசிஷன் இன்னேரம் மெண்டல் ஹாஸ்பிடலோ இல்ல சங்கோதான் யூ நோ!

அட ஏங்க சிரிக்க மாட்டேங்குறீங்க. இது என்ன மொழின்னு கேக்க மாட்டீங்குறீங்க. இது டமில்னு சுலபமா கண்டு பிடிச்சிட்டீங்கல்ல.

ஆங்கிலோ இந்தியர், தாய் மொழி ஆங்கிலம்னாலும் நம்ம மொழி கலந்து பேசினா சிரிக்கிறமே, நாம இப்புடி ஆங்கிலம், இந்தின்னு கலந்து பேசினா அவுங்க சிரிப்பாங்களேன்னு நமக்கு ஏங்க தோண மாட்டங்குது?

இப்படி பேசலைன்னா நம்மள மதிக்க மாட்டங்குறாங்களே, அந்தக் கொடுமைய எங்க போய் சொல்றது. ஒரு வாக்கியத்துல குறைந்தது ரெண்டு ஆங்கில வார்த்தை கலந்தோ அல்லது ஆங்கிலத்துல ஒரு வாட்டி தமிழ்லையும் சொல்லாமலோ பேசிப் பாருங்க. நீங்க டமில் மீடியமான்னு கேட்டுடுவாங்க. அது என்னமோ கொலக்குத்தம் மாதிரி.இப்ப பாருங்க நீங்கல்லாம் ஏதேதோ நாட்டில் இருந்தாலும், ஒரு தமிழ்ப்பள்ளி ஆரம்பிச்சி, புள்ளைங்களுக்கு தமிழ் கத்துக் குடுக்கிறீங்களா இல்லையா? அதும் ஸ்விஸ் நாட்டுல பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முன்னாடி என்ன பண்ணனும்னு ஒரு கையேடு பார்த்தனுங்க. உங்க தாய் மொழி எதுவானாலும் குழந்தைகிட்ட அதில பேசுங்க. நிறைய தாய்மொழி வார்த்தை தெரிஞ்சாதான் அன்னிய மொழி கத்துக்க முடியும்னு போட்டிருந்துச்சு.

இங்க குழந்தை பிறந்ததும் இயல்பா வர ம்மா, ப்பா வந்தாலும் அதோட மல்லுக்கட்டி மம்மி சொல்லு, டாடி சொல்லுன்னு அதுங்கள கெடுக்கறமே. இயல்பா வராம, தமிழ்ல யோசிச்சி ஆங்கிலத்துல மொழிமாற்றம் செஞ்சு திக்கித் திக்கின்னாலும் ஆங்கிலத்துல பேசுறமே. இதுல வேற புள்ள அப்பதான் சுலுவா ஆங்கிலத்துல பேசும்னு வேற ஒரு மாயை எப்படிங்க வந்துச்சு?

ஆங்கிலோ இந்தியர்னு சொன்னேனே, அவங்கள்ள இளைய தலைமுறையெல்லாம் அதென்ன இந்தக் கூட்டத்துல நாங்க சிறுபான்மையா இருக்கிறதுன்னு அவங்க வேரைத் தேடி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துன்னு போய்ட்டாங்க. வயசாளிங்க, அங்க போக வழியில்லாதவங்க இந்தியாவை விட்டு போக மனசில்லாதவங்கன்னு ரொம்பக் கொஞ்சப் பேரு இருக்காங்க இன்னும்.

இரயில்வேயில் மிகத்திறமையான டிரைவர்கள், கார்டுகள்(தொழிற்பெயருங்க) இவர்கள். அலுவல் நிமித்தம் அவர்களுக்குள்ளே, அலுவலகத்திலோ, தேவாலயங்களிலோ ஒரே ஒரு வார்த்தை தமிழ் கலப்பின்றி பேசுபவர்கள் இவர்கள். சாமானிய மக்களூடன், அங்காடிகளில் பேசும்போது மட்டுமே கூடிய வரை இப்படித் தமிழ் கலந்து பேசுவார்கள். ஆங்கிலம் இரண்டாவது மொழியானதால் இவர்கள் பிள்ளைகளுக்குத் தமிழையே முதல் மொழியாகப் படிப்பித்தவர்கள்.

இவர்களுக்காகத் தனியே ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் அங்கீகாரத்துடன் இருந்தாலும், ஃப்ரெஞ்ச், இலத்தீன், இந்தி இவற்றோடு தமிழும் ஒரு விருப்ப மொழியாக வைத்ததோடன்றி பெரும்பாலான மாணவர்கள் தமிழ் மொழியை விரும்பிக் கற்கவும் வழி வகை செய்தார்கள்.

ஆனால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்தாலும், பதினொன்றாம் வகுப்பில் சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஃப்ரெஞ்ச் என்று மாணவர்கள் இன்று தமிழ்நாட்டில் மாறும் நிலை இருக்கிறதே! அடிப்படையில் எழுத்துக்களில் இருந்து ஆரம்பித்து வேற்று மொழியை இரண்டே வருடத்தில் கற்று அதிலும் அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்களால் முடிகிறதென்றால் அவர்கள் திறமையில் குறையொன்றுமில்லை அல்லவா?

பின் ஏன், பத்து வருடம் படித்த தமிழைத் தொடராமல், வேற்று மொழியை நாடுகிறார்கள்? தமிழ் மொழியில் மதிப்பெண்கள் பெறுவது கடினம். மொத்த மதிப்பெண் குறைந்துவிடும் எனப் பயப்படுகிறார்கள்? தமிழ் தனக்கு நன்றாகத் தெரியும் என்ற மனத்திடம் இருக்குமானால் என் மதிப்பெண் ஏன் குறையப் போகிறது என்றல்லவா இருப்பார்கள்?

தகுந்த அடிப்படிக் கல்வியளிக்காமல், விடைத்தாள்களைத் திருத்துகையில் மதிப்பெண்களைக் குறைத்தே போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் புறந்தள்ளினாலும், மாணவர்களுக்கு தன் தாய் மொழியில், பத்து வருடங்கள் கற்ற மொழியில் ஒரு தேர்வை எதிர்கொண்டு, சிறந்த மதிப்பெண் பெற முடியுமென்ற தன்னம்பிக்கையை விட, இரண்டே வருடத்தில் வேற்று மொழியைக் கற்று தாய் மொழியை விட அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இந்திப் ப்ரசார் சபா மூலம் தேசிய அளவில் சிறுவயதில் இருந்தே பள்ளிக் கல்வி தவிர்த்து பல நிலைகளில் இந்தி கற்க வாய்ப்பிருக்கிறதே. பல தனியார் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. வெளி நாடுகளில் இன்னும் சிறப்பாக தமிழ்ப் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. தமிழ் நாட்டில் இருக்கிறதா?

இங்கு இந்தி கற்பிக்கப்படும். ஃப்ரெஞ்ச் கற்பிக்கப்படுமென வீதிக்கு ஒரு பெயர்ப்பலகை தொங்குகிறதே. தமிழ் கற்பிக்கப்படும் என்று ஒரு பலகையாவது பார்த்திருக்க முடியுமா? அடிப்படைக் கல்வி கற்காவிடினும், திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் படிக்க எழுதத் தெரிந்தவர்கள் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு படிக்கலாம் என்ற வழி வகை இருக்கிறது. 

இவர்களுக்குக் கூட எத்தனை ஆர்வமிருப்பினும், தனியாகத் தமிழ் பயில வாய்ப்பில்லை என்றுதான் கூற வேண்டும். செந்தமிழ் மாநாடு நடக்கப் போகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் பல அறிஞர்கள் அங்கும் பங்கேற்கக் கூடும். விழா மலரில் கட்டுரைகள் எழுதக் கூடும்.

இந்தி ப்ரசார் சபா போல் குறைந்த பட்சம், தமிழ்நாட்டில் மட்டுமாவது எல்லா ஊர்களிலும் தமிழ் கற்க மானியம் கொடுத்தாவது ஒரு மத்தியப் பயிற்சி நிலையத்தின் கீழ் சிறு பயிற்சி நிலையங்கள் அமைத்திட வேண்டிய அவசியத்தை உணர்த்துவீர்களா? எளிமையான ஆர்வமூட்டும் பாடத்திட்டம், திறமையான ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் ஆகியோரின் உதவியுடன், ஊக்கத் தொகை கொடுத்தாவது தமிழின்பால் ஆர்வத்தை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

இல்லையேல் டாடி மம்மி வீட்டிலில்ல, தட போட யாருமில்லன்னு குத்தாட்டம் போடும் குழந்தையை ஸோ க்யூட் யார்? எப்புடி ஆடுறா பாரேன்னு கொஞ்சிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான். நல்லா படிச்சி அது தொழில் முறையாகவோ மேற்படிப்புக்கோ வெளிநாடு வரும்போது இப்படி விழாவில் பங்கேற்று தமிழ் ஆர்வம் கொள்ளும் வரை காத்திருக்க வேண்டியதுதான். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 23வதுஆண்டு விழா மலரில் வெளியான என் கட்டுரை. தலைப்புக்கு உதவிய கலகலப்ரியாவுக்கும்,  விழா மலருக்கும், ஊக்குவித்த சகோதரி திருமதி தேவகி செல்வம் அவர்களுக்கும் நன்றி. நண்பர்கள் பழமைபேசி, கதிர், பாலாசி ஆகியோரின் கட்டுரைகளும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. பாராட்டுகள்.)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விழா நிகழ்ச்சிகள் தமிழ்மணம் முகப்பிலும், www.fetna.org தளத்திலும் நேரடி ஒளிபரப்பு நடைபெறுகிறது. 
-----::-----

56 comments:

க ரா said...

அருமையான பகிர்வுங்க. முன்னாடியெல்லாம் நகர்புறங்கள நடந்த இந்த கொடுமை இப்ப கிராமப்புறங்களயும் கொஞ்சம் கொஞ்சமா கெடுத்துகிட்டு வருது. விழா மலரில் உங்கள் கட்டுரை வெளி வந்தற்கு வாழ்த்துகள்.

மஞ்சள் நிலா said...

//இந்தி ப்ரசார் சபா போல் குறைந்த பட்சம், தமிழ்நாட்டில் மட்டுமாவது எல்லா ஊர்களிலும் தமிழ் கற்க மானியம் கொடுத்தாவது ஒரு மத்தியப் பயிற்சி நிலையத்தின் கீழ் சிறு பயிற்சி நிலையங்கள் அமைத்திட வேண்டிய அவசியத்தை உணர்த்துவீர்களா? //

நல்ல சிந்தனை.

செயல்படுத்துவார்களா?

ஆரூரன் விசுவநாதன் said...

அழகான பதிவு...வழக்கமான உங்கள் அசத்தல் நடையில்.......மிகவும் ரசித்தேன்.......கட்டுரை மிக அருமை...வாழ்த்துகள்

அன்புடன்.
ஆரூரன்

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் சார்!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கட்டுரை பாலா சார். நல்ல பகிர்வு. ஏன் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார்கள் என்றே தெரியவில்லை?..

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் பாலா சார்.

மாதேவி said...

வாழ்த்துகள்.

Paleo God said...

//இந்தி ப்ரசார் சபா போல் குறைந்த பட்சம், தமிழ்நாட்டில் மட்டுமாவது எல்லா ஊர்களிலும் தமிழ் கற்க மானியம் கொடுத்தாவது ஒரு மத்தியப் பயிற்சி நிலையத்தின் கீழ் சிறு பயிற்சி நிலையங்கள் அமைத்திட வேண்டிய அவசியத்தை உணர்த்துவீர்களா?//

அருமை. மொத்த மாநாட்டையும் இதுக்குள்ளயே அடங்கிட்டீங்களே!!

Ashok D said...

:)

Ramesh said...

மிச்சம் நல்லதொரு பதிவு. அவசிமானது. எங்க கிராமத்துலையும் இந்த தங்கிளிஸ் வந்து தொலைக்குது.
இருந்தாலும் பாலா அங்கிள்(டாடி) யூ ரொம்ப பிசி நோ உங்களைப் பிடிக்க முடியல. ஹாட் பெயின்.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் பாலண்ணா


|| இரண்டே வருடத்தில் வேற்று மொழியைக் கற்று தாய் மொழியை விட அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறோம். ||

ம்ம்ம்ம்... இதுக்கு யார வச்சு யாருக்கு பாராட்டுவிழா எடுக்கலாம்..

sriram said...

பாலாண்ணா..
தமிழ் நாட்டில் இருக்கறவங்க ஏன் இந்த ஆங்கில மோகம் பிடிச்சு அலையறாங்கன்னுத் தெரியல.
ஆங்கிலமாவது ஒழுங்கா பேசறாங்களான்னுப் பாத்தா அதுவுமில்லை.
போன வார நீயா நானாவில் கிராமப்புறத்தை ஆதரித்துப் பேசியவர் சொன்னது “City ல இருக்கறவங்க Money Earn பண்றதுக்காக Selfish ஆகிடறாங்க” - கேட்டுத் தலையிலடித்துக் கொண்டேன்.
அப்புறம் தேவையில்லாமல் அமெரிக்கன் மாதிரி பேச முயல்வது இன்னும் கொடுமை (Ex : Birday (Bithday), Cool, wanna, gonna etc)

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு (பெரும்பாலும்) தமிழில் பேச வேண்டுமென்ற ஆவல் அதிகம் இருக்கிறது.

நான் ஆங்கிலத்துக்கு எதிரியல்ல, ஆனால் நீங்களும் நானும் (தமிழ் தெரிந்த இருவர்) பேசும் போது ஆங்கிலம் தேவையில்லை என்பது என் கருத்து

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பனித்துளி சங்கர் said...

//////இங்க குழந்தை பிறந்ததும் இயல்பா வர ம்மா, ப்பா வந்தாலும் அதோட மல்லுக்கட்டி மம்மி சொல்லு, டாடி சொல்லுன்னு அதுங்கள கெடுக்கறமே. இயல்பா வராம, தமிழ்ல யோசிச்சி ஆங்கிலத்துல மொழிமாற்றம் செஞ்சு திக்கித் திக்கின்னாலும் ஆங்கிலத்துல பேசுறமே. இதுல வேற புள்ள அப்பதான் சுலுவா ஆங்கிலத்துல பேசும்னு வேற ஒரு மாயை எப்படிங்க வந்துச்சு?////////

இவர்கள் வேண்டா வெறுப்பாக திணிக்கும் மம்மி போன்ற வார்த்தைகளின் முழு அர்த்தம் இவர்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி அய்யா !

அது சரி(18185106603874041862) said...

//

இங்க குழந்தை பிறந்ததும் இயல்பா வர ம்மா, ப்பா வந்தாலும் அதோட மல்லுக்கட்டி மம்மி சொல்லு, டாடி சொல்லுன்னு அதுங்கள கெடுக்கறமே. இயல்பா வராம, தமிழ்ல யோசிச்சி ஆங்கிலத்துல மொழிமாற்றம் செஞ்சு திக்கித் திக்கின்னாலும் ஆங்கிலத்துல பேசுறமே. இதுல வேற புள்ள அப்பதான் சுலுவா ஆங்கிலத்துல பேசும்னு வேற ஒரு மாயை எப்படிங்க வந்துச்சு?
//

அதை மாயை என்று ஏன் நினைக்கிறீர்கள்? எந்த ஒரு மொழியும் பழக்கத்தின் அடிப்படையில் தான் பேச முடியும். சிறு வயதிலிருந்தே பழக்குகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆமாம், திக்கி திக்கி தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்...ஆனால், காலப் போக்கில் அந்த திக்கல் இல்லாமல் போகக்கூடும்..

அது சரி(18185106603874041862) said...

//

ஆனால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்தாலும், பதினொன்றாம் வகுப்பில் சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஃப்ரெஞ்ச் என்று மாணவர்கள் இன்று தமிழ்நாட்டில் மாறும் நிலை இருக்கிறதே! அடிப்படையில் எழுத்துக்களில் இருந்து ஆரம்பித்து வேற்று மொழியை இரண்டே வருடத்தில் கற்று அதிலும் அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்களால் முடிகிறதென்றால் அவர்கள் திறமையில் குறையொன்றுமில்லை அல்லவா?
//

பத்தாம் வகுப்பு வரையில் தமிழில் படித்தவர்கள், இரண்டு வருடங்கள் வேற்று மொழியையும் கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை...

ஃப்ரஞ்ச், ஸன்ஸ்க்ரிட் போன்றவற்றில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு காரணம் குறைந்த பட்ச தகுதியை சோதிக்கு வகையிலான கேள்வித் தாள்கள் காரணம் என்று சொல்லக் கேள்வி.

அது சரி(18185106603874041862) said...

//
தமிழ்நாட்டில் இந்திப் ப்ரசார் சபா மூலம் தேசிய அளவில் சிறுவயதில் இருந்தே பள்ளிக் கல்வி தவிர்த்து பல நிலைகளில் இந்தி கற்க வாய்ப்பிருக்கிறதே. பல தனியார் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. வெளி நாடுகளில் இன்னும் சிறப்பாக தமிழ்ப் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. தமிழ் நாட்டில் இருக்கிறதா?
//
வெளிநாடுகளில் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதற்கான காரணம் வேறு. அந்த நாடுகளில் இயல்பான மொழி தமிழ் இல்லை என்பதால், சூழலில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாத ஒன்றை சிறப்பு பள்ளிகள் வைத்து கற்று தருகிறார்கள்.

இந்திப் பள்ளிகளின் அடிப்படை நேருவின் ஒற்றை மொழிக் கொள்கையிலிருந்து வந்தது....

ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக் கொள்ள முடியாத சூழல் இருப்பதாக தெரியவில்ல்லை. ஆனாலும், மக்கள் வேற்று மொழிகளை தேர்ந்தெடுக்க காரணம் என்ன??

அது சரி(18185106603874041862) said...

//

இங்கு இந்தி கற்பிக்கப்படும். ஃப்ரெஞ்ச் கற்பிக்கப்படுமென வீதிக்கு ஒரு பெயர்ப்பலகை தொங்குகிறதே. தமிழ் கற்பிக்கப்படும் என்று ஒரு பலகையாவது பார்த்திருக்க முடியுமா? அடிப்படைக் கல்வி கற்காவிடினும், திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் படிக்க எழுதத் தெரிந்தவர்கள் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு படிக்கலாம் என்ற வழி வகை இருக்கிறது.

இவர்களுக்குக் கூட எத்தனை ஆர்வமிருப்பினும், தனியாகத் தமிழ் பயில வாய்ப்பில்லை என்றுதான் கூற வேண்டும். செந்தமிழ் மாநாடு நடக்கப் போகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் பல அறிஞர்கள் அங்கும் பங்கேற்கக் கூடும். விழா மலரில் கட்டுரைகள் எழுதக் கூடும்.
//

இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அதற்கு இருக்கிறதே, இதற்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்புவது மிக நல்ல கோஷமாக இருக்கலாம், ஆனால் நடைமுறை உண்மைகள் வேறு...

தமிழ்நாட்டில் ஃப்ரஞ்ச் தெரியாதவர்கள் எண்ணிக்கை எவ்வளவு, தமிழில் அடிப்படை கூட தெரியாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவு??

மொழி கற்பிப்பதும் ஒரு தொழில் தான்..அப்படியிருக்கையில், எதற்கு தேவை அதிகமோ அதற்கு தான் தொழில் நிறுவனங்களும் அதிகம் இருக்கும். Simple supply Vs Demand.

அது சரி(18185106603874041862) said...

//
இந்தி ப்ரசார் சபா போல் குறைந்த பட்சம், தமிழ்நாட்டில் மட்டுமாவது எல்லா ஊர்களிலும் தமிழ் கற்க மானியம் கொடுத்தாவது ஒரு மத்தியப் பயிற்சி நிலையத்தின் கீழ் சிறு பயிற்சி நிலையங்கள் அமைத்திட வேண்டிய அவசியத்தை உணர்த்துவீர்களா? எளிமையான ஆர்வமூட்டும் பாடத்திட்டம், திறமையான ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் ஆகியோரின் உதவியுடன், ஊக்கத் தொகை கொடுத்தாவது தமிழின்பால் ஆர்வத்தை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
//

ஊக்கத் தொகை கொடுத்தெல்லாம் மொழி வளர்க்க முடியாது...பிரச்சினையின் ஆணி வேர் வேறிடம்...சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது மனித இனத்தின் அடிப்படை...வேறு மொழிகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், அதற்கான சூழல்...The fittest will survive என்பதன் அடிப்படையில் எல்லோரும் ஃபிட் ஆக முயற்சிக்கிறார்கள்.

அது சரி(18185106603874041862) said...

Having said all those things, I still don't understand the purpose of submitting this article in FETNA.

I agree with your take on ground situation, but you are not really saying anything about the reasons behind it. It is not that people just want to learn English (or any other language) for the sake of pride, but there are very strong economic reasons for it.

Trying to find solutions without understanding the reason will deliver no results.

அது சரி(18185106603874041862) said...

//
இராமசாமி கண்ணண் said...
அருமையான பகிர்வுங்க. முன்னாடியெல்லாம் நகர்புறங்கள நடந்த இந்த கொடுமை இப்ப கிராமப்புறங்களயும் கொஞ்சம் கொஞ்சமா கெடுத்துகிட்டு வருது. விழா மலரில் உங்கள் கட்டுரை வெளி வந்தற்கு வாழ்த்துகள்.
//

எதைக் கொடுமை என்று சொல்கிறீர்கள் கண்ணன்?

நகர்ப்புற மக்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேச வேண்டும், கிராமப்புற மக்களும் அங்கிருந்து வரும் மாணவர்களும் மட்டும் தலையை சொறிந்து கொண்டே நிற்க வேண்டுமா??

Chitra said...

அட போ மச்சி! உனக்கு எல்லாம் ஃபந்தான். இஃப்யூ வெர் இன் மை பொசிஷன் இன்னேரம் மெண்டல் ஹாஸ்பிடலோ இல்ல சங்கோதான் யூ நோ!

அட ஏங்க சிரிக்க மாட்டேங்குறீங்க. இது என்ன மொழின்னு கேக்க மாட்டீங்குறீங்க. இது டமில்னு சுலபமா கண்டு பிடிச்சிட்டீங்கல்ல.

ஆங்கிலோ இந்தியர், தாய் மொழி ஆங்கிலம்னாலும் நம்ம மொழி கலந்து பேசினா சிரிக்கிறமே, நாம இப்புடி ஆங்கிலம், இந்தின்னு கலந்து பேசினா அவுங்க சிரிப்பாங்களேன்னு நமக்கு ஏங்க தோண மாட்டங்குது?
...... ம்ம்ம்ம்...... யோசிக்க வேண்டிய விஷயம் தான்...... ம்ம்ம்ம்.....

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் பாலா சார்..

dheva said...

//தமிழ்நாட்டில் இந்திப் ப்ரசார் சபா மூலம் தேசிய அளவில் சிறுவயதில் இருந்தே பள்ளிக் கல்வி தவிர்த்து பல நிலைகளில் இந்தி கற்க வாய்ப்பிருக்கிறதே. பல தனியார் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. வெளி நாடுகளில் இன்னும் சிறப்பாக தமிழ்ப் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. தமிழ் நாட்டில் இருக்கிறதா?//

நியாயமான கேள்விதான் பாலண்ணே.... !

//ஆங்கிலோ இந்தியர், தாய் மொழி ஆங்கிலம்னாலும் நம்ம மொழி கலந்து பேசினா சிரிக்கிறமே, நாம இப்புடி ஆங்கிலம், இந்தின்னு கலந்து பேசினா அவுங்க சிரிப்பாங்களேன்னு நமக்கு ஏங்க தோண மாட்டங்குது?//

அது தோணம்த்தாண்ணே...பெருமைன்னு நினைச்சு பேசுறாங்க... நம்ம மக்கள்!

அர்த்தம் நிறைந்த சிந்திக்க வைக்கும் கட்டுரைண்ணே...!

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு.....வாழ்த்துகள்

Unknown said...

பகிர்வுக்கு நன்றி.

க.பாலாசி said...

//டாடி மம்மி வீட்டிலில்ல, தட போட யாருமில்லன்னு குத்தாட்டம் போடும் குழந்தையை ஸோ க்யூட் யார்? எப்புடி ஆடுறா பாரேன்னு கொஞ்சிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்//

அதேதான்... இனிமேலும் மொழியின்பால் உள்ள பற்று குறையுமானால் வாட் அ டான்ஸ் யா? அப்டிங்கற வார்த்தைகளத்தான் கேட்கமுடியும்...

புளியங்காய்க்கு புளிப்பேற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழன் என்ற உணர்வு மிகைந்தால் தமிழும் தழையும்...

நல்ல கட்டுரை... வணக்கம்...

செ.சரவணக்குமார் said...

அருமையான கருத்துகளை முன்வைத்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி.

Mahi_Granny said...

''ஊக்கத் தொகை கொடுத்தாவது தமிழின்பால் ஆர்வத்தை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது''. நூற்றுக்கு நூறு உண்மை. நல்ல பகிர்வு பாலா சார்

VELU.G said...

மிக அருமையான பகிர்வு

தமிழ் வளர்ச்சியின் நிலை வருத்தமளிக்கக்கூடியதாகவே இருக்கிறது

காமராஜ் said...

பாலாண்ணா...
இப்படியான செய்திகள்
தரும் விக்கிபீடியா.ஒவ்வொரு பதிவிலும் ஒரு வாசல் திறக்கிறது. ஆயிரம் வாசல்கள் திறக்கும் தலம்.வாழ்த்துக்கள், நன்றிண்ணா.

Thamira said...

நல்லதொரு பகிர்வு.

(இப்பிடி உருப்படியாகவும் நீங்க எழுதுவீங்களா என்ன? ஹிஹி.. சும்மனாச்சுக்கும்)

கலகலப்ரியா said...

||ஹேய்! வாட்டாபன் டூ யூயா! நோ கால், நோ மெசேஜ், நோ மெயில்? எங்க தொலஞ்ச? ஹான்?||

ஆ.. உங்க அஸிஸ்டண்ட் இன்னும் உசிரோட இருக்காங்களா... ஐய்யோ அந்த இன்லீஸ்பீஸ் ஓக்கே... ஆனா அந்தக் ஹாஆஆஆன்.. பார்த்தா கொலை வெறி வருதுடா சாமீ... arghhhhhh..

கலகலப்ரியா said...

||அது சரி said...

பத்தாம் வகுப்பு வரையில் தமிழில் படித்தவர்கள், இரண்டு வருடங்கள் வேற்று மொழியையும் கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை...||

ம்ம்.. வேற்று மொழியைக் கற்றுக்கொள்றதில தப்பில்ல... அது எத்தனை மொழி வேணும்னாலும் கற்றுக் கொள்ளலாம்... ஆனா... வேற்று மொழி"யில்" கற்றுக் கொள்வதுதான் உவப்பாக இல்லை...

vasu balaji said...

@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றிங்க மஞ்சள் நிலா முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
@@நன்றி ஆரூரன்
@@நன்றிங்க மேனகா
@@நன்றிங்க ஸ்டார்ஜன்
@@நன்றிங்க மாதேவி

vasu balaji said...

@@நன்றி ஷங்கர்
@@நன்றி அஷோக்
@@நன்றி றமேஸ்

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
வாழ்த்துகள் பாலண்ணா


|| இரண்டே வருடத்தில் வேற்று மொழியைக் கற்று தாய் மொழியை விட அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறோம். ||

ம்ம்ம்ம்... இதுக்கு யார வச்சு யாருக்கு பாராட்டுவிழா எடுக்கலாம்..//

ம்கும். இப்புடியெல்லாம் ஏத்தி விடுங்க

vasu balaji said...

sriram said...
பாலாண்ணா..
தமிழ் நாட்டில் இருக்கறவங்க ஏன் இந்த ஆங்கில மோகம் பிடிச்சு அலையறாங்கன்னுத் தெரியல.
ஆங்கிலமாவது ஒழுங்கா பேசறாங்களான்னுப் பாத்தா அதுவுமில்லை.
போன வார நீயா நானாவில் கிராமப்புறத்தை ஆதரித்துப் பேசியவர் சொன்னது “City ல இருக்கறவங்க Money Earn பண்றதுக்காக Selfish ஆகிடறாங்க” - கேட்டுத் தலையிலடித்துக் கொண்டேன்.
அப்புறம் தேவையில்லாமல் அமெரிக்கன் மாதிரி பேச முயல்வது இன்னும் கொடுமை (Ex : Birday (Bithday), Cool, wanna, gonna etc)

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு (பெரும்பாலும்) தமிழில் பேச வேண்டுமென்ற ஆவல் அதிகம் இருக்கிறது.

நான் ஆங்கிலத்துக்கு எதிரியல்ல, ஆனால் நீங்களும் நானும் (தமிழ் தெரிந்த இருவர்) பேசும் போது ஆங்கிலம் தேவையில்லை என்பது என் கருத்து

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

அதே! நன்றி ஸ்ரீராம்.

vasu balaji said...

@@நன்றி பனித்துளி சங்கர்.

சிநேகிதன் அக்பர் said...

வாழைப்பழத்துல ஊசி ஏத்துன மாதிரி சொல்லியிருக்கிங்க.

அருமை ஐயா.

பழகப் பழக கை கூடும்.

vasu balaji said...

@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க நாடோடி
@@நன்றி தேவா
@@நன்றிங்க குரு
@@நன்றி ஆறுமுகம் முருகேசன்
@@நன்றி பாலாசி
@@நன்றி சரவணா

vasu balaji said...

காமராஜ் said...

பாலாண்ணா...
இப்படியான செய்திகள்
தரும் விக்கிபீடியா.ஒவ்வொரு பதிவிலும் ஒரு வாசல் திறக்கிறது. ஆயிரம் வாசல்கள் திறக்கும் தலம்.வாழ்த்துக்கள், நன்றிண்ணா.//

நன்றிங்க காமராஜ்

vasu balaji said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்லதொரு பகிர்வு.

(இப்பிடி உருப்படியாகவும் நீங்க எழுதுவீங்களா என்ன? ஹிஹி.. சும்மனாச்சுக்கும்)//

ஐ. நிஜம்மாதானே சும்மனாச்சுக்கும் சொன்னீங்க:))

vasu balaji said...

கலகலப்ரியா said...
||ஹேய்! வாட்டாபன் டூ யூயா! நோ கால், நோ மெசேஜ், நோ மெயில்? எங்க தொலஞ்ச? ஹான்?||

ஆ.. உங்க அஸிஸ்டண்ட் இன்னும் உசிரோட இருக்காங்களா... ஐய்யோ அந்த இன்லீஸ்பீஸ் ஓக்கே... ஆனா அந்தக் ஹாஆஆஆன்.. பார்த்தா கொலை வெறி வருதுடா சாமீ... arghhhhhh..//

யோவ். என்னா லொல்லு இது. அவ்ளோ பெரிய இடுகையில இதானா கமெண்ட்பண்ண அவ்வ்வ்

vasu balaji said...

கலகலப்ரியா said...
||அது சரி said...

பத்தாம் வகுப்பு வரையில் தமிழில் படித்தவர்கள், இரண்டு வருடங்கள் வேற்று மொழியையும் கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை...||

ம்ம்.. வேற்று மொழியைக் கற்றுக்கொள்றதில தப்பில்ல... அது எத்தனை மொழி வேணும்னாலும் கற்றுக் கொள்ளலாம்... ஆனா... வேற்று மொழி"யில்" கற்றுக் கொள்வதுதான் உவப்பாக இல்லை...//

ஆக்கா ஆக்கா. சரி இது

கலகலப்ரியா said...

||யோவ். என்னா லொல்லு இது. அவ்ளோ பெரிய இடுகையில இதானா கமெண்ட்பண்ண அவ்வ்வ் ||

நமக்கு வசதியானது தேடிப் புடிச்சுப் போடுவோம்ல..

vasu balaji said...

கலகலப்ரியா said...
||யோவ். என்னா லொல்லு இது. அவ்ளோ பெரிய இடுகையில இதானா கமெண்ட்பண்ண அவ்வ்வ் ||

நமக்கு வசதியானது தேடிப் புடிச்சுப் போடுவோம்ல..//

ம்கும். எம்புட்டு அகிடியா குடுத்திருக்கேன். ஒரு கிழி கிழிக்க வேணாமா?

vasu balaji said...

அது சரி said...


//அதை மாயை என்று ஏன் நினைக்கிறீர்கள்? எந்த ஒரு மொழியும் பழக்கத்தின் அடிப்படையில் தான் பேச முடியும். சிறு வயதிலிருந்தே பழக்குகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.//

ஆமாம், திக்கி திக்கி தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்...ஆனால், காலப் போக்கில் அந்த திக்கல் இல்லாமல் போகக்கூடும்..//

பாஸ்! இது பேரண்ட்ஸ் திக்கறது பாஸ். டேய். கோ டெல் மம்மி டாடி வாண்ட் சட்னி:))

vasu balaji said...

அது சரி said...

//பத்தாம் வகுப்பு வரையில் தமிழில் படித்தவர்கள், இரண்டு வருடங்கள் வேற்று மொழியையும் கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை...//

தவறில்லை பாஸ். மொழி கத்துக்கன்னு படிச்சா தப்பில்லை. தமிழில் கொஞ்சம் இலக்கணத்துக்கு முக்கியமே 10ம் வகுப்பிலிருந்துதான். 11ம் வகுப்பில் வேற மொழிக்கு போறதுக்கு காரணம், தமிழில் மார்க் கம்மியா வரும். டோட்டல் பெர்செண்டேஜ் அடி விழும்.

//ஃப்ரஞ்ச், ஸன்ஸ்க்ரிட் போன்றவற்றில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு காரணம் குறைந்த பட்ச தகுதியை சோதிக்கு வகையிலான கேள்வித் தாள்கள் காரணம் என்று சொல்லக் கேள்வி.//

நிச்சயம் இல்லை. மிகக் கடுமையான பாடத்திட்டம்தான். காளிதாசனின் மேகசந்தேசம், இலக்கணம்னு பிழிஞ்செடுக்கும். ஆனா ஆசிரியர்களின் உழைப்பும், ஊக்கமும் அபாரம். மதிப்பெண் அதிகம் வரக் காரணம் இந்த பரீட்சை பேப்பர் வேற யாரும் திருத்த முடியாது.

போன வருடம்தான் அந்த அந்த சப்ஜக்ட் பேப்பர் அந்த டீச்சர்தான் திருத்தணும்னு வழிகாட்டல் கொடுத்தது கல்வித்துறை. இது வரைக்கும் கீ பார்த்து தமிழ் டீச்சர் கெமிஸ்ட்ரி திருத்துவாங்க, பயாலஜி டீச்சர் கணக்கு, கணக்கு டீச்சர் தமிழ்னு திருத்துவாங்க. கீல இருக்கா மாதிரி இல்லைன்னா வெறும் கோடுதான். ரீ வேல்யூவேஷன் போனாதான் மார்க் வரும். ஹி ஹி. இந்த வருஷம் ஒருத்தருக்கு ஷீட்ல வந்த மார்க் 90. ரீ டோட்டலிங்க்ல 190. 1000+ கு ரீ வேல்யூவேஷன்ல மினிமம் 20 டு 100 மார்க் வந்திருக்கு. இதுல மீடியம் குழப்பம் வேற.

vasu balaji said...

அது சரி said...

//வெளிநாடுகளில் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதற்கான காரணம் வேறு. அந்த நாடுகளில் இயல்பான மொழி தமிழ் இல்லை என்பதால், சூழலில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாத ஒன்றை சிறப்பு பள்ளிகள் வைத்து கற்று தருகிறார்கள்.//

இங்கயும் அப்படித்தான் பாஸ். எட்டாவது வரைக்கும் தமிழ்ல இலக்கணம்னு கேட்டு பாருங்க. சாய்ஸ்ல விடலாம்னு அளவிலதான் இருக்கும்.//

//இந்திப் பள்ளிகளின் அடிப்படை நேருவின் ஒற்றை மொழிக் கொள்கையிலிருந்து வந்தது....

ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக் கொள்ள முடியாத சூழல் இருப்பதாக தெரியவில்ல்லை. ஆனாலும், மக்கள் வேற்று மொழிகளை தேர்ந்தெடுக்க காரணம் என்ன??//

1970ல் நான் பள்ளியிறுதி முடித்தேன். தமிழ் மீடியம். பியூசி இங்க்லீஷ் மீடியம். நாங்க 3 பேரு சிக்கினோம். வருஷம் முழுக்க நாங்க 3 பேர்தான் ஃப்ரண்ட்ஸ். ஓரம் கட்டப்பட்டோம். இப்போ 2010லயும் தமிழ் மீடியம் பசங்களுக்கு இதுதான் கதி. நிச்சயம் பள்ளிகளில் தமிழ் கோனார் நோட்சை நம்பித்தான் சொல்லித் தரப்படுகிறது. முன்னாடி சொன்னாற்போல், தமிழ் மொழி படிப்பவர்கள் அதிகம். பேப்பர் அதிகம். திருத்துறது யாரோ! அதனால் மதிப்பெண் கம்மி. ரொம்ப நல்லா படிக்கிறவங்க கண்டிப்பா தமிழ் எடுப்பாங்க. ஏன்னா தமிழ் மொழிப்பாடமா இருந்தாதான் ரேங்க். தினத்தந்தில ஃபோட்டோ எல்லாம். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், ஆங்கில மீடியம் படிப்பவர்கள், வேற்று மொழியை எடுப்பதற்குக் காரணம் இது.

vasu balaji said...

//ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக் கொள்ள முடியாத சூழல் இருப்பதாக தெரியவில்ல்லை. ஆனாலும், மக்கள் வேற்று மொழிகளை தேர்ந்தெடுக்க காரணம் என்ன??//

நிதர்சனம் இது இல்லை பாஸ். என் மகளுக்கு 11ல் தமிழ் எடுத்தேன். ட்யூஷனுக்கு பள்ளி டீச்சர் கூட தயாரில்லை. நோட்ஸ் மனப்பாடம் பண்ணி கக்கினால் போதும் என்ற அட்வைஸ்தான் கிடைத்தது.

vasu balaji said...

அது சரி said...


//இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அதற்கு இருக்கிறதே, இதற்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்புவது மிக நல்ல கோஷமாக இருக்கலாம், ஆனால் நடைமுறை உண்மைகள் வேறு...//

ஆமாம். வேறுதான். தமிழுக்கு ட்யூஷன் எடுத்து மெனக்கெட்டு இலக்கணம் சொல்லித்தர ஆளில்லை சாமி. அனுபவப்பாடம் இது. பட்டப்படிப்புக்கு முதல் பாடம் நீராரும் கடலுடுத்த தமிழ்த்தாய் வாழ்த்துன்னா நீங்களே பார்த்துக்குங்க.

தமிழ்நாட்டில் ஃப்ரஞ்ச் தெரியாதவர்கள் எண்ணிக்கை எவ்வளவு, தமிழில் அடிப்படை கூட தெரியாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவு??

மொழி கற்பிப்பதும் ஒரு தொழில் தான்..அப்படியிருக்கையில், எதற்கு தேவை அதிகமோ அதற்கு தான் தொழில் நிறுவனங்களும் அதிகம் இருக்கும். Simple supply Vs Demand.

vasu balaji said...

//தமிழ்நாட்டில் ஃப்ரஞ்ச் தெரியாதவர்கள் எண்ணிக்கை எவ்வளவு, தமிழில் அடிப்படை கூட தெரியாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவு??//

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனால் ஃப்ரெஞ்ச் எடுத்த மாணவன் இலக்கணம் அறிவான். தமிழ் மாணவன் 80சதம் இலக்கணம் அறியான்.

//மொழி கற்பிப்பதும் ஒரு தொழில் தான்..அப்படியிருக்கையில், எதற்கு தேவை அதிகமோ அதற்கு தான் தொழில் நிறுவனங்களும் அதிகம் இருக்கும். Simple supply Vs Demand.//

அதுதான் என் கருத்தும். இங்கே தமிழ் படிக்க டிமாண்ட் இல்லை. நோட்ஸ் போதும் என்ற மனப்பான்மை. அடுத்தது லேங்க்வேஜஸ் விடு. சப்ஜக்ட்ல 95க்கு மேல எடுக்கப் பார். அதை வைத்துதான் மேல் படிப்புக்கு சீட் என பெற்றோர்களே சொல்லும் நிலைதான்.

vasu balaji said...

//ஊக்கத் தொகை கொடுத்தெல்லாம் மொழி வளர்க்க முடியாது...//

இல்லை பாஸ். ஹிந்திக்கு வேலைக்கு போன பிறகும், ஹிந்தி சம்பந்தமான வேலைகள் செய்பவருக்கு அலவன்ஸ். அதிகம் ஹிந்தி வார்த்தைகளை எழுதுபவருக்கு பரிசுன்னு நல்லாவே வளர்க்கிறாங்க. தமிழுக்கு, தமிழ் படிச்சா ஒரு இன்கிரிமெண்ட்னு வெச்சும் படிக்காம, கண்டிப்பா படிச்சாதான் இன்கிரிமெண்ட்னு வைக்கிற நிலமை இருந்தது.

//பிரச்சினையின் ஆணி வேர் வேறிடம்...சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது மனித இனத்தின் அடிப்படை...வேறு மொழிகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், அதற்கான சூழல்...The fittest will survive என்பதன் அடிப்படையில் எல்லோரும் ஃபிட் ஆக முயற்சிக்கிறார்கள்.//

ப்ளஸ் டூ முடித்ததும் வேற்று மொழி பயில்வதில்லை. அதோட போச்சு. இளங்கலை வகுப்புக்களில் மொழிப்பாடம் தமிழ்தான் அதிகம். இதுல ஃபிட்டெஸ்ட் எல்லாம் இல்லை பாஸ். பெர்செண்டேஜ். எல்லாத்துலயும் 200 வாங்குறவன் ஆங்கிலத்தில் 180 வாங்கி தமிழில் 160 வாங்கினா ஒரு மாதிரியா இருக்கில்ல. இதே சான்ஸ்க்ரிட், ஃப்ரென்ச்னா 195 க்யாரண்டி.

vasu balaji said...

அது சரி said...

//Having said all those things, I still don't understand the purpose of submitting this article in FETNA.//

True. There was a notice in fetna.org. And this is my first article i wrote. hi hi. And i still believe that somebody should realise the necessity to teach tamil sincerely and people who opt to learn tamil sincerely should have a place to learn. As of now, if you get a really good teacher who loves to teach you tamil, you are lucky.

//I agree with your take on ground situation, but you are not really saying anything about the reasons behind it.//

There appear to be no real reason except that, you need to speak and write in english to get a job. OK! but i don't think in any other part of the world english teachers encourage students to buy the key to Wren and Martin grammar.

//It is not that people just want to learn English (or any other language) for the sake of pride, but there are very strong economic reasons for it. //

For english what you say is correct. for other languages, its only to get top percentage. Even in english medium schools, there is no training to speak and write correctly. Thats why, there are special tution centres making money for training in english conversation.

You would be surprised to know that, there are reputed concerns from which we get letter in this manner.

" with reference to your enquiry our rate below..blah blah. rate available for one month only. " in the end there is ofcourse e&oe:))

//Trying to find solutions without understanding the reason will deliver no results.//

I totally agree. but i have made only suggestions to encourage learning tamil, with true interest to learn tamil.

vasu balaji said...

//எதைக் கொடுமை என்று சொல்கிறீர்கள் கண்ணன்?

நகர்ப்புற மக்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேச வேண்டும், கிராமப்புற மக்களும் அங்கிருந்து வரும் மாணவர்களும் மட்டும் தலையை சொறிந்து கொண்டே நிற்க வேண்டுமா??//

ம்கும். நகர்ப்புரம் கிழிக்குது. கிராமப்புற பசங்க ஓரளவு பரவால்லாம பேசுறாய்ங்க. பீட்டர் இங்கிலீஷ் வேலை வாங்கித் தரதில்லை பாஸ்.

நசரேயன் said...

விழா மலரிலே படித்தேன்