Friday, October 8, 2010

ங்கொய்யா டிவியில் ‘போட்டிக்கு பேட்டி’...



(இந்த படம் காட்டதான் முடியும்..ஓட்ட முடியாது. ஹி ஹி)

வலையுலக வரலாற்றில் முதல் முறையாக, ங்கொய்யா டிவியில் கிரகணம் பிக்சர்ஸ் வழங்கும், சமூக ஆர்வலர் கதிர் (வலிக்காத மாதிரியே) நடிக்கும் ‘போட்டிக்கு பேட்டி’ நிகழ்ச்சி!! தூண்டுகோல்: தளபதி நசரேயன் ..உலகெங்கும்  ஒரே நேரத்தில் எல்லா கணினியிலும் ரிலீசாகும் முதல் தமிழ் பேட்டி!! காணத்தவராதீர்கள்..

வா.பா. வணக்கம் வலையுலக நண்பர்களே. முந்தா நாள் ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் அட்டகாசமான பேட்டியளித்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய திரு.கதிர், ஈரோடு கதிர், சமூக ஆர்வலர், மாப்பு என்று பலருக்கும் அறிமுகமான பி.ப. திரு கதிர் அவர்கள் தனது பேட்டி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம். வணக்கம் கதிர் அவர்களே.

கதிர்: வணக்கம்.

வா.பா. வணக்கம்னு சொன்னா போதும். எலக்‌ஷன்ல நிக்கிறவரு மாதிரி கூப்புன கை கூப்புன படியே இருந்தா எப்புடி. முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு வயசு கூடி இருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க.

கதிர்: இப்படியெல்லாம் அலும்பு பண்ணுவீங்கன்னுதானே உசாரா பென்சமின் பட்டன் படம் பார்த்தேன்னு போட்டேன். ஒரு வயசு இளைஞனா ஆனா மாதிரிதான் ஃபீல் பண்றேன். ஆமாம். நீங்க மட்டும்தான் பேட்டி எடுப்பீங்களா?

வா.பா. இல்லைங்க பரவை முனியம்மாவும் பங்கேற்கிற மாதிரி இருந்தது. அவசரமா ஒரு ஷூட்டிங்னு போய்ட்டாங்க. தேவைன்னா டெலிகான்ஃபரன்ஸிங்ல கேப்பாங்க. சரியா.

கதிர்:ரொம்பத் தேவை. கேளுங்க

வா.பா: செந்தமிழ் மாநாட்டுலயே உங்க பேச்சைக் கேக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தது வலையுலகம். அங்க ஏற்பாடு சொதப்பி பேச முடியாம போயிருச்சி. அந்த கடுப்பிலதான் நீங்க அம்மா கட்சிக்கு மாறி ஜெயா டி.வில பேட்டி குடுத்தீங்களா?

கதிர்:இப்புடியெல்லாம் கெளப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஊட்டுல சோனி டிவி இருந்தாலும் ஆஃபீசுல கலைஞர் டி.வில என் பேட்டி பார்த்தேன். யார்ட்ட. ஹெ.

வா.பா: ஆமாம். ஈரோட்டில கரண்ட் இருக்காது 8-10னு சொன்னீங்க. அப்புறம் எப்படி சரியாச்சி.

கதிர்:அது ரொம்ப சுவாரசியங்க. ஒரு நாள் ‘மனுசன் கண்டு புடிச்ச கரண்ட மனுசன் ஆசையா தொட்டு பார்க்க முடியல, ஆனா கரண்டுல காக்கா ஊஞ்சலாடுதேன்னு’ ஒரு பஸ் போட்டேன். கண்ணு பட்டு ஒரு காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம். அதோட சாபம்னு அந்தியூர் சந்தையில சோசியம் சொன்னுச்சு. அவங்க சொன்னா மாதிரியே போன ஞாயித்துகிழமை சைலண்டா எஸ்ஸாயி, காக்காத்தா கோவில்ல காக்கா பிரியாணி போட்டேன். கரண்ட் வந்துடுச்சி. அதான் பஸ்ஸே தூக்கிட்டேன் இப்போ.

வா.பா.: ரொம்ப சிலிர்ப்பான அனுபவங்க. அப்புறம் அந்த பேட்டில ஒரு ஆச்சரியமான விஷயம், உங்க ஷூ மினு மினுன்னு மின்னிச்சே. சென்னை தூசுல ஒரு ஷூ பாலிஷ் போட்டு மறு ஷூ போடுறதுக்குள்ள ஒரு இஞ்சுக்கு மூடிக்குமே. நீங்க கூட அடிக்கடி தூசு வந்துடுச்சோன்னு பார்த்துகிட்டே இருந்தீங்க. ஷூட்டிங் ரூம்ல இன்ஸ்டா ஷைன் போட்டீங்களா?

கதிர்: (யோவ்! மூக்குதான் காக்கா மாதிரி இருக்குன்னு பார்த்தா முழி கழுகால்லயா இருக்கு. ஆத்தாடி) ஹி ஹி. ஆமாங்க. முடி கலைஞ்சுடுச்சான்னு பார்த்துகிட்டேங்க அப்பப்ப. லுக்கு முக்கியமில்லையா?

வா.பா.
:யப்பா! தாங்கல சாமி! அந்த பேட்டில நாற்பது நிமிஷம் அந்த சோஃபால முகம் சிரிச்சா மாதிரி இருந்தாலும், சலூன்ல முடி வெட்ட சேர் மேல பலகை போட்டு உக்கார வச்ச பையன் மாதிரி கவட்டிக்குள்ள கைய இடுக்கிக்கிட்டு வெறச்சா மாதிரி இருந்தீங்களே, ஏன் அப்படி?

கதிர்: அது ஃபேசு ஸ்ட்ராங்கு. போஸ்ச்சரு வீக்கு. ஹி ஹி.

வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்?

கதிர்:
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு விட்டுட்டாங்களோ?

வா.பா:பேட்டில உங்க படிப்பு எல்லாம் கிராமப்புறத்துல, அரசு பள்ளிலன்னு சொல்லியிருந்தீங்க. அது எங்கன்னாலும் ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், சமூகப்பாடம்னு அஞ்சு பாடம் இருந்தாலும் அதெப்படி சமூகத்துல மட்டும் ஆர்வம் அதிகமாகி சமூக ஆர்வலர்னு பட்டம் வாங்கினீங்க?

கதிர்: (அடப்பாவிங்களா! இப்படியெல்லாமா புரிஞ்சுக்குவீங்க. சமாளிடா கதிரு). அது வந்துங்க நான் ஒன்னாப்பு படிக்கும்போதே கற்பனை கசிய ஆரம்பிச்சிடுச்சி. மத்த சப்ஜெக்ட்ல கதை விட முடியாது. சமூகப்பாடத்துல சொந்த சரக்கும் சேர்த்து அடிப்பேன். ஒன்னாப்புல இருந்து 12ம்பு வரைக்கும் சமூகப் பாடத்துல முதல் மாணவனானதால அந்தப் பட்டம். ஹி ஹி.

வா.பா: ஆமா! நீங்க ரெண்டாயிரத்து எட்டில இருந்து பதிவுலகுக்கு பரிச்சியம்னு சொல்லியும் பேட்டி எடுத்தவர் திரும்ப எத்தன வருஷமா எழுதுறீங்கன்னு கேட்டாரே. அப்ப என்ன நினைச்சீங்க.

கதிர்: எங்காளுங்க படிக்காமலே பின்னூட்டம் போடுவானுங்க. பதிவுலகம்னு சொன்ன தோஷமா. என்ன சொல்றேன்னு உள் வாங்காமலே இப்புடி கேக்கறாங்களே இவங்கன்னு தோணிச்சி.

வா.பா. ஆமாங்க. இன்னோரு ஆச்சரியம். முதல் பகுதி முடிஞ்சதும் வந்த விளம்பரத்துல ‘கும்மியடி பெண்ணே கும்மியடின்னு’ பாடிக்கிட்டு அனிதா குப்புசாமி எண்ணெய் வித்தாங்க. நான் கூட நினைச்சேன் பதிவர்னதும் கும்மி பொருத்தமா போட்டாங்களான்னு.

வா.பா. திரு ஈரோடு கதிர் அவர்கள் தன்னோட பேட்டி பத்தி மேலதிக விளக்கம் ரொம்ப சுவையா சொல்லிட்டிருக்காரு. ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே.

(ஆரோக்கியமான பல்லுக்கு மெஸ்வாக் டூத் பேஸ்ட்..ஆலங்குச்சி சாற்றில்......)

வா.பா.:நேயர்களே. இடைவேளிக்கு முன்பு திரு கதிர் அவர்கள் தன்னுடைய பேட்டி அனுபவங்களை சொல்லிட்டிருந்தாரு. தொடர்வோம். கதிர்! அந்த பேட்டியில கண் தானம் பத்தி வெகு சிறப்பா சொல்லியிருந்தீங்க. இந்த கண்ணுல பூ விழாட்டி தானம் பண்ணலாம்னு ஏதோ சொன்னீங்க. அப்ப நீங்க சந்திக்கிறவங்கள எல்லாம் முதல்ல இது நல்ல கண்ணா இல்ல நொள்ளைக் கண்ணான்னுதான் பார்ப்பீங்களா?

கதிர்:ஹி ஹி. பேட்டி எடுத்த ரெண்டு பேத்தையுமே அப்படி பார்த்தேன். அந்த வெளிச்சத்துல கண்ண சுருக்கிட்டாங்க. சரியாத் தெரியல.

வா.பா: அப்புறம் கதிர், ரத்த தானம் பத்தி சொல்லும்போது, நிறைய பேரு தயங்குவாங்க. சேராதும்பாங்க. அதனால, அரசு மருத்துவமனைல போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தாதான் நாங்க அரேஞ்ச் பண்ணுவோம்னு சொன்னீங்க. இந்த ஐடியா எப்படி வந்தது.

கதிர்: ஆரம்பத்துல நாங்களும் யார் கேட்டாலும் ரத்தம் ஏற்பாடு பண்ணமுங்க. அப்புறம் பதிவுலகம் வந்தப்புறம்தான், இந்த நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி. இத பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி, விசேசத்துக்கு மொய் எல்லாம் கணக்கு எழுதி வச்சி திரும்ப செய்யறதுங்கறது டமிலன் பண்பாடு. அது ரத்தத்துல ஊறின விஷயமாச்சே. அதனாலதான் ரத்ததானத்துக்கும் ஒர்கவுட் ஆகுதுன்னு கண்டு புடிச்சனுங்க.

வா.பா: அபாரங்க. முக்கியமா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சதுங்க. பேட்டி முழுசும், 97 ஜோடி கண் தானம், 37 வாட்டி ரத்த தானம், 4000 மரம், 11 ஆயிரம் மரம், 2 லட்சம் டன்னுன்னு ஒரே புள்ளி விபரமா கொட்டுனீங்க. யூத்து யூத்துன்னு வேற அலப்பறை தாங்கல. ஒரு வேளை டி.வி.க்கு வந்தாச்சி. அடுத்தது வெள்ளித் திரையில விஜயகாந்த் விட்ட இடத்த புடிக்கிற அகுடியா இருக்கா?

கதிர்:ஹி ஹி. கண்டு புடிச்சிட்டீங்களா?

வா.பா.
அப்புறம் அந்த ப்ளாஸ்டிக் கேரி பேக் பத்தி சொன்னீங்க. அது மேல உங்களுக்கு வெறுப்பு எப்படி ஏற்பட்டது? அங்க நீங்க என்னதான் கதை விட்டாலும், மொத நாள் சொல்லி சக்கரை வாங்க மறந்துட்டு, காலைல தூங்க விடாம விரட்டின வெறுப்புல தூங்கிட்டிருந்த நாயை ச்சூன்னு எழுப்பி விட்டு (அதை ஒரு இடுகையா தேத்தினதும் தெரியும்டி) அது தொறத்தினதுல ஓடி பை அறுந்து கொட்டி ஊட்டுல வாங்கிக் கட்டிக்கிட்டதுதானே உண்மையான காரணம்?

கதிர்:ஹி ஹி. அது மட்டுமில்லைங்க. ஒரு வாட்டி சோப்பு, ஷேவிங் ஐட்டமெல்லாம் வாங்கி பாத்ரூம்ல வச்சிட்டு கைமறதியா கேரி பேக்கை ஃப்ளஷ்ல போட்டுட்டேன். அது ஃப்ளஷ் பண்ணும்போதெல்லாம் உப்பி அடைச்சிகிட்டு 500 ரூபாய்க்கு ஆப்பு வச்சிடுச்சி. எடுத்த ஆளு, எந்த கூமுட்ட இத ஃப்ளஷ்ல போட்டுச்சின்னு திட்டிட்டான். அதான்.

வா.பா.
இந்த ப்ளாஸ்டிக் டம்ப்ளர் பத்தி சொல்றப்ப ரீ சைக்கிள் பண்ணமுடியாதுன்னீங்க. எவர்சில்வர் டம்ப்ளர் வச்சா ஆட்டய போட்டுட்டு போறாங்கன்னு தானே இது வந்துச்சு. பின்ன என்ன பண்ணலாங்கறீங்க.

கதிர்:
பேப்பர் கப் உபயோகிக்கலாமே.

வா.பா. அதுக்கு மரக்கூழ் வேணுமே. மரமும் வெட்ட கூடாதுங்கறீங்களே.

கதிர்: அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க! வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க.

வா.பா: சரிங்க. இந்த வலைப்பூ பத்தி சொல்லும்போது தமிழ்ல எழுதறதப் பத்தி சொன்னீங்க. என்னமோ கருப்புன்னு உள்வாங்கி ப்ளாக்னு வெளிய துப்பின்னு வலை நண்பர்களுக்கு புரியறா மாதிரி சொல்லுங்களேன்.

கதிர்: ஒரு நாள் ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பிட்டேங்க. அரை மணில தங்க்ஸ் ஃபோன் பண்ணி ஏங்க டிஃபன் ஆறிப்போகுது எங்க தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. ஏம்மா ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டுதானம்மா வந்தேன்னேன். ஏங்க புரியறா மாதிரி ஆணி புடுங்க போறேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்லங்கன்னு சொன்னாங்க.

இன்னோரு நாள் மக கூட லேப்டாப்ல விளையாண்டுக்கிட்டிருந்தேன். காலிங் பெல் அடிக்கவும் போய் பார்த்தா யாரோ அட்ரஸ் மாத்தி வந்துட்டாங்க. வந்ததும் மக கேட்டாங்க யாருப்பான்னு. யாருன்னு தெரியலைம்மான்னு சொன்னதும் டக்னு ஓ!  ‘அனானி’ யான்னுச்சு. இப்படி நாம சொல்ற விஷயத்த அவங்களுக்கு ஏத்தா மாதிரி புரிஞ்சிக்க வைக்கிறததான் அப்படி விளக்கினேன்.

வா.பா: அருமையா விம் போட்டு விளக்கிட்டீங்க. இந்த வலைப்பூ அறிமுகம்னு ஒன்னு பத்தி சொன்னீங்க. நிறைய பேர் வலைப்பூ ஆரம்பிக்கணும். வலையில பதிவேத்தணும்னு சொன்னீங்க. இந்தக் கொலை வெறிக்கு என்ன காரணம். அங்க நீங்க என்ன காரணம் சொன்னாலும் எனக்கென்னமோ ‘தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்துச்சாம்னு’ ஒரு சொலவடை கவனம் வருது. சரிதானா?

கதிர்:
ஏனுங்க ரெண்டாவது வெளம்பர இடைவேளை விடலையே.

வா.பா. என்னாங்க பதிவர் நீங்க. தமிழ் பதிவில கூகிள் அட் கூட வராது. ஒன்னு விட்டதே பெரிய காரியம். உங்க பேட்டி பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்துகிட்டதுக்கு ங்கொய்யா டீவி சார்பிலும், வலைப்பூ நண்பர்கள் சார்பிலும் மிக்க நன்றி வணக்கம்.

கதிர்: யோவ். நானா பகிர்ந்துகிட்டேன். பாதிக்கு மேல நீங்களே சொல்லிட்டு என்னைய மாட்டி விடுறீங்களா. நாட்டாமைக்கே சொம்பா? நல்ல்ல்ல்லா இருங்கடி. வணக்கம்.  
~~~~~~~~~~~

64 comments:

கலகலப்ரியா said...

|| காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம்||

ஐ... நெசம்மாவா... நான் அந்தக் காக்காவ கேக்கலை...

நசரேயன் said...

//வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்//

நானும் இதையேதான் நினைச்சேன்

நசரேயன் said...

//வா.பா: ஆமா! நீங்க ரெண்டாயிரத்து எட்டில இருந்து பதிவுலகுக்கு பரிச்சியம்னு சொல்லியும் பேட்டி எடுத்தவர் திரும்ப எத்தன வருஷமா எழுதுறீங்கன்னு கேட்டாரே. அப்ப என்ன நினைச்சீங்க.//

கணக்கு எல்லாம் சரியாவே கண்டு பிடிக்கிறீங்க

கலகலப்ரியா said...

||நசரேயன் said...
//வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்//

நானும் இதையேதான் நினைச்சேன்||

அவங்க கேள்வியே கேக்க விடலைன்னு நினைக்கிறேன்...

இவங்க பதில் சொல்லியே கேள்வி கேக்க வச்சாங்க...

(ஜூட்டு... மீதி அப்பால படிச்சுக்கறேன்..)

vasu balaji said...

தளபதி பேரு எங்க போய்ட்டீரு:))

பழமைபேசி said...

அஃகஃகா.....

யாரோ, மழைக்காய்தக் கொங்காடியத் தரலையாம்....

Unknown said...

97 இல்ல 94. சும்மா கண் தானம்னு சொன்னாப் போதாது. உட்கார்ந்து கையோட கழட்டிகினு போய்டுவோம். நாங்க யாரு கொக்க மக்காவா.

தாராபுரத்தான் said...

கலாய்ப்பு திலகர்வானம்பாடியார்..வாயை திறக்க முடியலையே..ஆட்டோ அனுப்பறதை தவிர வேறுவழியில்லை போல இருக்கு..

Unknown said...

கலாய்ப்பு பேட்டி நல்லா இருக்குங்க ..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

sir , super, enjoyed the most

பத்மா said...

விரைவில் இங்கு வானம்பாடிகள் ரசிகர் சங்கம் துவங்கப்படும்

Chitra said...

செம காமெடி.... கலக்கல்.....

அடுத்து "அசத்தப் போவது யாரு?" நிகழ்ச்சியில் பாலா சார், சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//

எடுத்த ஆளு, எந்த கூமுட்ட இத ஃப்ளஷ்ல போட்டுச்சின்னு திட்டிட்டான். அதான்.//

சக்க லொள்ளு

//அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க! வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க.//

இது ஏற்கனவே இருக்குங்க ஐரோப்பிய நாடுகள்ல

லகலகலக ன்னு கலக்கல் பேட்டி..

தாராபுரத்தான் ஐயா சொன்ன மாதிரி உங்களுக்கு ஒரு சிறப்புப் பட்டம் கொடுத்தே தீரனும்.

நர்சிம் said...

;)

க.பாலாசி said...

//ஆமாங்க. முடி கலைஞ்சுடுச்சான்னு பார்த்துகிட்டேங்க அப்பப்ப.//

எது இந்த பச்சப்புள்ளைக்கு எண்ணை தேச்சு விட்டாமாதிரி பளபள தலையோட உட்காந்திருந்துட்டு அலம்பல பாருங்க...

ஒன்னாப்புலேயே கசிய ஆரம்பிச்சிடுச்சா....(அடடடா...)

அப்பறம் அந்த கேரிபேக் வவ்வா மாதிரி கேனல்ல தொங்குமாமில்ல அது என்னான்னு கேட்டீங்களா?

க.பாலாசி said...

//அந்த சோஃபால முகம் சிரிச்சா மாதிரி இருந்தாலும், சலூன்ல முடி வெட்ட சேர் மேல பலகை போட்டு உக்கார வச்ச பையன் மாதிரி கவட்டிக்குள்ள கைய இடுக்கிக்கிட்டு வெறச்சா மாதிரி இருந்தீங்களே, ஏன் அப்படி?//

உண்மையிலேயே முடியலைங்க... செம நக்கலு... இனிமே இந்த மனுஷன் எங்கயாச்சும் பேட்டிக்கு போவாரு...

பிரபாகர் said...

கதிர் பேட்டியை இன்னும் பார்க்கல... அய்யாவோட பேட்டியப் படிக்கிறப்பவே எல்லாம் புரிஞ்சிடுச்சி!...

அய்யா புள்ளிவிவரப் புலிங்கறது எனக்கு எல்லாத்தவிடவும் நல்லாவே தெரியும்....

கலக்கலா இருக்குங்கய்யா!

பிரபாகர்...

பவள சங்கரி said...

பக்கத்து விட்டுல திடீர்ன்னு இந்தம்மாவுக்கு என்னாச்சுன்னு தெரியலியே, தானா ரொம்ப நேரமா சிரிச்சிக்கிட்டு இருந்திச்சு, இப்போ என்னமோ வயித்து வலின்னு கத்துது.....கூப்பிடுங்க.....108ன்னு ஒரே கலாட்டாங்க.....

Mahi_Granny said...

தாரபுரத்தான் சார் சரியான பட்டம் தான் கொடுத்திருக்கிறார். கலக்கல் திலகம் . கதிரும் போட்டி பேட்டியை நல்லாவே ரசித்து இருப்பார் .

மங்குனி அமைச்சர் said...

அப்பாடா பேட்டி முடிஞ்ச்சு , இன் புனைவுதான் , நடக்கட்டும் , நடக்கட்டும்

Thamira said...

பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்.

/ நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி./ இது டாப்பு. :-))))

அகல்விளக்கு said...

ஆஹா...

நல்லவேள வீடியோவ எடிட் பண்ணி ரீமிக்ஸ் பண்ணல...

:-)

sakthi said...

அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க! வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க

நல்ல இயக்கமா இருக்கே

ஈரோடு கதிர் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


நல்ல்ல்ல்லா இருங்கடி. வணக்கம்.

sakthi said...

அப்புறம் பதிவுலகம் வந்தப்புறம்தான், இந்த நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி. இத பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி, விசேசத்துக்கு மொய் எல்லாம் கணக்கு எழுதி வச்சி திரும்ப செய்யறதுங்கறது டமிலன் பண்பாடு. அது ரத்தத்துல ஊறின விஷயமாச்சே. அதனாலதான் ரத்ததானத்துக்கும் ஒர்கவுட் ஆகுதுன்னு கண்டு புடிச்சனுங்க.


என்ன ஒரு கண்டு பிடிப்பு!!!

sakthi said...

பாலாண்ணா முடியலை !!!!

சிரித்து சிரித்து

Unknown said...

பேட்டிக்கி மறுபேட்டி போட்டதும் நர்சிம் சிரிக்கிறதைப் பாருங்க.. :))))))


வாழ்த்துகள் கதிர்.

வாத்துகள் பாலா சார்..(நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்)

Unknown said...

//|| காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம்||

ஐ... நெசம்மாவா... நான் அந்தக் காக்காவ கேக்கலை..//

:)))))

மணிஜி said...

முத கமெண்ட்..என்னோடது..(ப்ரியா....டீச்சர் சொல்லி...ஷேரிங்....)

பனித்துளி சங்கர் said...

//////கதிர்:இப்புடியெல்லாம் கெளப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஊட்டுல சோனி டிவி இருந்தாலும் ஆஃபீசுல கலைஞர் டி.வில என் பேட்டி பார்த்தேன். யார்ட்ட. ஹெ./////////

அதுதானே . அய்யா இது என்ன புது முயற்சியா நல்ல இருக்கு

MANO நாஞ்சில் மனோ said...

ங்கொய்யால, இருக்குற டிவிகாரணுவ பத்தாதுன்னு,

நீங்க வேற தலைவலிய கொடுத்து, பாமரனும் முடியை பிச்சிகிட்டு, எங்களையும் பிய்க்க வைக்கிறீங்களே............முடியல......

வால்பையன் said...

//மனுசன் கண்டு புடிச்ச கரண்ட மனுசன் ஆசையா தொட்டு பார்க்க முடியல,//

மூக்கு புடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணும்னு சொல்லியிருக்காங்க, சரியா தான் இருக்கும் போல!

சத்ரியன் said...

//கதிர்: ஏனுங்க ரெண்டாவது வெளம்பர இடைவேளை விடலையே.//

அந்த அளவுக்கா பேட்டி எடுப்பாக! பாவம்ணே.. இடைவேளை விட்ருங்க.

vasu balaji said...

@கலகலப்ரியா

:)).செரி செரி.

vasu balaji said...

@நசரேயன்

ஓஹொ

vasu balaji said...

@நசரேயன்

சேது தப்புன்னு சொல்லிட்டாரு அவ்வ்.

vasu balaji said...

@கலகலப்ரியா
ஆமாம். மீதி இன்னும் படிக்கலையா

vasu balaji said...

@பழமைபேசி

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு:))

vasu balaji said...

@Sethu

அதானே:))

vasu balaji said...

@தாராபுரத்தான்

அண்ணே ஆஃபிசில எறக்கி உட்ற சொல்லுங்ணே. 90ரூ மிச்சம்

vasu balaji said...

@மணிநரேன்

:)

vasu balaji said...

@ஜிஜி

நன்றிங்க

vasu balaji said...

@நாய்க்குட்டி மனசு

நன்றிங்க

vasu balaji said...

@பத்மா

இது வேறையா:) நன்றிங்க

vasu balaji said...

@Chitra

பதிலுக்கு கதிர் கலாய்க்காவா:)

vasu balaji said...

@ச.செந்தில்வேலன் / S.Senthilvelan

சும்மாவே முடி பறக்குது. பட்டம் வேறயா:))

vasu balaji said...

@க.பாலாசி

கேட்டுட்டாலும்

vasu balaji said...

@பிரபாகர்

நன்றி பிரபா

vasu balaji said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றிங்க

vasu balaji said...

@Mahi_Granny

ஆமாங்க சொன்னாரு. நன்றிங்க

vasu balaji said...

@மங்குனி அமைசர்

ஹி ஹி

vasu balaji said...

@ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி ஆதி

vasu balaji said...

@அகல்விளக்கு

வாய்சுக்கு எங்க போறது. அதான்:))

vasu balaji said...

@sakthi

ஆஹா.

vasu balaji said...

@ஈரோடு கதிர்

நன்றிங்கடி.வணக்கம்:))

vasu balaji said...

@sakthi
இல்லையா பின்ன/ நன்றிங்கம்மா

vasu balaji said...

@முகிலன்

வாத்தா:)) மேட்ச் சீசனா:))

vasu balaji said...

@மணிஜீ......

ரைட்டு

vasu balaji said...

@!♫ ♪
..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫


நன்றிங்க

vasu balaji said...

@நாஞ்சில் மனோ

வாங்கண்ணா. முதல் வாட்டி வரும்போதே சலிப்பா:))

vasu balaji said...

@வால்பையன்

ஆமாங்க வால். கொஞ்சம் வெட்டி உட்றுங்க. என்னா அலும்பு பண்றாரு மனுசன்

vasu balaji said...

@சத்ரியன்

அதான் பேட்டியே முடிச்சாச்சே

'பரிவை' சே.குமார் said...

வேலைப்பளூவின் காரணமாக உங்கள் சில பகிர்வுகளை இன்றுதான் பார்த்தேன், அனைத்தும் அருமை.
கதிர் அண்ணாவுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் கேள்விகளும்... கதிர் அண்ணா (சார்பான உங்கள்) பதில்களும் அருமையோ அருமை.

vasu balaji said...

@சே.குமா
ர்


நன்றிங்க குமார்.