Wednesday, October 27, 2010

கேரக்டர் - ஜனா..

ஜனாவை எனக்கு நேரடியாகப் பரிச்சயமாகுமுன் ஜனாவின் புகழ் அலுவலகமெங்கும் கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்தது. மூத்த அதிகாரியின் ப்யூன் என்ற பந்தாவில் எமர்ஜன்ஸி பிரியடில் அடையாள அட்டையில்லாமல் அய்யாவை காரிலேற்றி அனுப்பிவிட்டு வர, கை மறித்தது செக்யூரிட்டி. சேதுபதி I.P.S. ரேஞ்சுக்கு இந்த அதிகாரியின் ப்யூன் என்று தெனாவட்டாக பதில் வர அடையாள அட்டை கேட்டாராம் செக்யூரிட்டி. வீர பாண்டியக் கட்டபொம்மன் மாதிரி யாரிடம் கேட்கிறாய் ஐ.டி.கார்ட் என்று எகிறிய மறு நொடி பொளிச்சென்று ஒன்று போட்டு செக்யூரிட்டி ரூமில் முழங்கால் கட்டி உட்கார வைத்துவிட்டார்களாம். பிறகு யார் மூலமோ ஐ.டி. கார்ட் கொண்டு வரச்சொல்லி மீண்டு வந்த கதை ஒரு காவியம்.


பின்பொரு நாள் கேட்டேன் என்ன நடந்ததென்று. 'உதார் உட்டு பார்த்தேன். பளிச்சுன்னு கை நீட்டிட்டான். திருப்பி குடுத்திருந்தேன்னா மூணு நாளைக்கு மயக்கமாயிருப்பான். யூனிபார்மாச்சே. வேலைக்கு ஒலையாயிடும்னு பொத்திக்கினு உக்காந்துட்டேன்' என்று சிரித்தார்


ஜனா! எனக்கு ஜனாவை நினைக்கும்போதெல்லாம் ஏனோ காண்டாமிருகம் கவனம் வரும். குள்ள உருவம். வளைந்த குட்டைக் கால்களும் தடித்த உடல்வாகும், கைகளும். அகலமான மிகவும் முற்றிய முகம். அடர்ந்த கோரைத் தலைமுடி எண்ணை மினுக்க வகிடெடுத்து வாரியிருப்பார். உணர்ச்சியை சற்றும் வெளிக்காட்டா முகம்.  இப்படி ஒரு முரட்டு உருவத்துக்குள் அமைதியான ஒரு மனிதன்.


உதட்டோரம் ஒரு ஏளன வளைவு. மார்லன் ப்ராண்டோ மாதிரி பல்லைக் கடித்தபடி உதடசையும் பேச்சு. சிரிப்போ, கோபமோ, சாதாரணமாய் பேசுவதோ ஒரே த்வனியில் இருக்கும். ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரு குரல். ஆறாவது படித்திருந்தாலும் ஆங்கிலம் படிக்க எழுதக் கடினம். எப்படியோ எழுத்தராகிவிட்டாலும், சீனியர்களுக்கு உதவியாக எடு பிடி வேலை செய்து ஒப்பேத்தி விடுவார்.

தருமன் இவரை வைத்துவிட்டுத்தான் செத்துப் போனான் என்று நினைக்கிறேன். அசராமல் பந்தயம் கட்டித் தோற்றாலும், 'ஜூதுல இன்னிக்கு உட்டா நாளைக்கு புடிச்சுதான் ஆவணும்' என்ற முது மொழியை கடைப் பிடிப்பவர்.

'யோவ்! அனியாயத்துக்கு தோத்துப் போறல்ல? விட்டு ஒழிய்யா' என்றால் 'தலைவரே! எங்க தொலைச்சமோ அங்க தேடணும் தலைவரே! என்று தத்துவத்தில் அடிப்பார். தருமன் என்றது சூதுக்கு மட்டுமல்ல. கடன் வாங்குவதிலும் கொடுப்பதிலும் அப்படி ஒரு நேர்மை. மூணாம் தேதி தந்துவிடுகிறேன் என்று மூணு பைசா வட்டிக்கு ஒருவரிடம் வாங்கினால், கறாராக தேதி தவறாமல் இன்னொருவரிடம் மூணு பைசா வட்டிக்கு வாங்கி இவர் கடனை பைசல் செய்து விடுவார். அடுத்த மாதம் இவரிடம் வாங்கி அவரிடம் கொடுத்து விடுவார்.

ஆடி மாசம் வந்துவிட்டதே என்று புது மாப்பிள்ளைகளை விட அதிகம் நொந்து போவார். பின்னே! ஒரு கலியாணமும் நடக்காவிடில் ஓட்டலில் ரூம் எடுத்தல்லவா சீட்டு ஆட முடியும். தெரிந்தவர் தெரியாதவர் என்ற பட்சபாதமே கிடையாது. யாராவது ஒருவர் 'ஜனா! சாயந்திரம் செங்கல்பட்டுல ஒரு ஃப்ரண்டு கல்யாணம்' என்றால் போதும்.  'போலாம் தலைவரே 'என்று கிளம்பி விடுவார். வேண்டுமென்றே உனக்கு அவரைத் தெரியுமா என்றால் வரும் பதிலில் இருக்கும் உண்மை அசரவைக்கும்.

'எவம்பா கல்யாணத்துக்கு போறான்? யார்னா ஒர்த்தருக்கு தெர்ஞ்சா போறாது. நாம இன்னா அங்க போய் உக்காந்து சோறா துன்னுட்டு வரபோறோம். ஒரு ரூம் புட்சமா, கட்டை போட்டோமா, சத்திரம் காலி பண்ண சொல்ல போங்கப்பான்னு சொல்ற வரைக்கும் ஒரு ஜாலி. கல்யாணத்துக்குப் போய் சீட்டுல உக்காந்தவன் எவனாவது முகூர்த்த நேரத்துலயாவது நிறுத்தியிருக்கானா சொல்லு' எனச் சிரிப்பார்.

உள்ளூர் கலியாணத்தில் காசு தோத்துவிட்டால், கடைய மூடாத. தோ வரேன் என்று ஆட்டோ எடுத்துக் கொண்டு அதி்காலை ரெண்டானாலும் மூன்றானாலும் கடன் கொடுப்பவனை எழுப்பி வாங்கிக் கொண்டு வருவார். வந்து உதிர்க்கும் தத்துவம் ஆளைப் புரட்டிப் போடும்.

'அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும், இல்ல ரேசன் வாங்க கடைசி நாள்னு கேட்டா அம்பது ரூபா குடுக்கமாட்டானுவ. இதே ஜூதுக்குன்னு போய் நூறு ரூபாய் கேட்டா சில்லற இல்ல ஜனா! ஐன்னூறா வச்சிக்கன்னு குடுப்பானுங்க...நுப்பது உள்ளோ..நுப்பது..அம்பது உள்ளோ' என்று அசராமல் பந்தயம் பிடிப்பார். எப்போதாவது அதிர்ஷ்டம் ஜனா மேல் காதல் கொள்ளும். அதீதக் காதல். எதிராளிகள் எவனுக்கும் டீக் குடிக்க கூட ஒரு ரூபாய் விட்டு வைக்காது.

கலைச்சிடலாமாப்பா. அப்புறம் ஜனா கெல்ச்சினு ஓடிட்டான்னு பேசக் கூடாது என்று முறையாகக் கேட்டு அங்கே இங்கே ஒளித்து வைத்திருந்த அத்தனை காசையும் எடுத்துப் போட்டு அடுக்கி, எண்ணி, என் முதல் இவ்வளவு. கெல்ப்பு இவ்வளவு என்று கணக்குச் சொல்லி, தோற்றவர் விட்ட தொகைக்கேற்ப, ஐம்பது, நூறு என்று கொடுத்துவிடுவார்.

'ஊட்டுக்கு போனா எப்புடி இருக்குமோ என்னமோ? சாப்பாட்டுக்கு கொழம்புக்குன்னு எதிர்பார்த்துருப்பாங்க. அந்த பாவம் நமக்கு ஏன்'  என்று எளிதாய்ச் சொல்லிவிட்டு போவார். நேற்று அப்படி ஐம்பது ரூபாய் வாங்கிப் போனவன் அடுத்த நாள் ஐந்நூறு ரூபாய்க்கு இவர் வீட்டுடிவியை அடமானமாகக்  கொண்டு போவான். அடுத்த நாள் ஆட்டத்தில் அவன் வீட்டு கேஸ் ஸ்டவ்வை இவரிடம் தோத்திருப்பான்.  'அவன் செஞ்சதுக்கு எடுத்துனு வந்திருக்கலாம். சாப்பாடாச்சேப்பா. பட்டினி போட்ட பாவம் என்னாத்துக்கு நமக்கு. நாளைக்கு கண்டிசனா குடுத்துடணும்னு சொல்லிட்டு விட்டுட்டு வந்துட்டேன்' என்பார்.

இப்படி சூதே கதியென்றிருப்பவன் வேலை யார் செய்வது என்கிறீர்களா. பெண்டிங்கே இருக்காது. ஒரு நண்பனிடம் மாதம் ஐந்நூறு ரூபாய் என்று பேசி வேலையை பக்காவாக முடித்து வைத்திருப்பார். புதியதாக எந்த சூப்பிரண்டண்ட் வந்தாலும் தனக்கு எழுதப் படிக்க கஷ்டம் என்பதைக் கூறி வேலையில் குறையில்லாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் கூறிவிடுவார்.

போதாத காலம், ரிட்டையர் ஆக 3 வருடங்கள் இருக்க ரேட் செக்கிங் செக்‌ஷனில் மாற்றப்பட்டார். அங்கேயும் பழைய ஏற்பாட்டில் ஒரு நண்பன் வேலையை முடித்து கொடுப்பார். இவர் கையெழுத்து மட்டும் போடுவதாக ஓடியது. புதிதாக வந்த ஒரு சூப்பிரண்டண்ட் பிடிவாதமாக இவரே செய்தாக வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கியதாக கேள்வி.

இது நடந்து சில வாரங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. வழக்கமான குசல விசாரிப்போடு இப்போது எந்த செக்‌ஷனில் வேலை என்ற கேள்விக்கு மேற்சொன்ன விளக்கத்துடன் வாய் கொள்ளாச் சிரிப்புடன் ஜனா சொன்னார்:

'எவ்ளோ தன்மையா சொன்னேன் தலைவரே. எனக்கு இங்கிலீசெல்லாம் வராது. கணக்கு கூட கூட்ட கழிக்க தெரியும். பெருக்கல் எல்லாம் கஷ்டம்னா அத்தினி பேரு முன்னாடி கேவலமா பேசிட்டான். பார்த்தேன். முன்னூறு ரூபாய் கட்டி யூனியன்ல ஆஃபீஸ் பேரர் ஆய்ட்டேன். மாசம் ரெண்டு நாள் ஸ்பெஷல் கேசுவல் லீவு. அதில்லாம தர்ணா போராட்டம்னு எதுனா இருக்கும். வருவேன், கையெழுத்து போட்டு யூனியன் ஆஃபீஸ் போய்டுவேன். இப்போ என் வேலைய அந்தாளு செஞ்சினிருக்கான். எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் மிச்சம்' எனச் சிரித்தார்.

இப்படியே எதையும் தாங்கி கவலையில்லாமல் ஒருவன் வாழ்ந்துவிட முடியுமா என்ன? கை மீறிய கடன், பிஸினஸ் செய்யப் போகிறேன் என்று முரண்டு பிடித்த மகன் என்று எவ்வளவோ சொல்லியும் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டார். வந்த தொகையை கடன் போக மகனிடம் கொடுத்து விட்டார். வேறென்ன நடக்கும்? வழமை போல் பெற்றோர் மடிவற்றிய மாடானார்கள்.

கடைசியாகப் பார்த்த போது 'எவ்ளோ சொன்ன தலைவரே. கொஞ்சம் உனக்குன்னு வச்சிக்கடான்னு. கேக்காத போய்ட்டேன் தலைவரே. மொத்தம் உருவிக்கினு வெரட்டிட்டான் என்று அழுதார். பின்சின் (Pension) வருது. சின்னதா ஒரு வீடு வாடகைக்கு புடிச்சிகினு வந்துட்டேன். கடன் இல்ல...' என்று முதன்முறையாக தளர்ந்து போய் அழுதது அந்த காண்டாமிருகம்.

__/\__

51 comments:

Balaji saravana said...

யாரும் இன்னும் வரலை?!..

ராஜ நடராஜன் said...

வடை எனக்கா?

ராஜ நடராஜன் said...

அடிச்சது லாட்டரி!நம்ப முடியவில்லை:)

ராஜ நடராஜன் said...

அதானே பார்த்தேன்!இந்த கடைல வடை திருடறதுக்குன்னே சுத்தறாங்கப்பா:)

கலகலப்ரியா said...

|| கறாராக தேதி தவறாமல் இன்னொருவரிடம் மூணு பைசா வட்டிக்கு வாங்கி இவர் கடனை பைசல் செய்து விடுவார். அடுத்த மாதம் இவரிடம் வாங்கி அவரிடம் கொடுத்து விடுவார்.||

வாவ்.. இந்த ஐடியா நல்லாருக்கே...

கலகலப்ரியா said...

@ Balaji & நடராஜன்... =)))))))) தலீவரு போஸ்ட் படிக்கறதுக்கு இம்பூட்டு போட்டியா.. தெரிஞ்சிருந்தா நானும் கலந்துக்கிட்டிருப்பேன்ல...

கலகலப்ரியா said...

ம்ம்... நகைச்சுவை இழையோட.. ரொம்ப நல்லாருக்கு சார்...

||என்று முதன்முறையாக தளர்ந்து போய் அழுதது அந்த காண்டாமிருகம்.||

இப்டி முடிச்சிருக்க வேணாமோன்னு தோணுது...

ஸ்ரீராம். said...

அருமை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரொம்ப நல்லாருக்கு

Sethu said...

எங்கே பழமையாரை இன்னும் காணோம்.

பழமைபேசி said...

வணக்கங்க சேது!

அண்ணா, மாலையில்தான் வாசிக்கணும்... நன்றி!

KALYANARAMAN RAGHAVAN said...

கேரக்டர் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். அத்தனையும் அருமை. எழுதும் (கணினியில் தட்டச்சும்)உங்கள் கைகளை இங்கிருந்தே பிடித்து குளுக்கிக் கொள்கிறேன்.

ரேகா ராகவன்.

பழமைபேசி said...

@ராஜ நடராஜன்

பந்திக்கு முந்தணும்... அது முந்திகிட்டு எடுக்குறதுங்க, திருடுறது அல்ல; இஃகிஃகி!!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஆமாம் பென்சனாவது இருந்ததே.. பாலா சார்..
நல்ல சித்திரம் போல் இருக்கு வரும் முன் காவாதவன் வாழ்க்கை..

ராஜ நடராஜன் said...

//@ Balaji & நடராஜன்... =)))))))) தலீவரு போஸ்ட் படிக்கறதுக்கு இம்பூட்டு போட்டியா.. தெரிஞ்சிருந்தா நானும் கலந்துக்கிட்டிருப்பேன்ல...//


//பந்திக்கு முந்தணும்... அது முந்திகிட்டு எடுக்குறதுங்க, திருடுறது அல்ல; இஃகிஃகி!!! //

மறுபடியும் வருவோமில்ல:)

ஈரோடு கதிர் said...

||கறாராக தேதி தவறாமல் இன்னொருவரிடம் மூணு பைசா வட்டிக்கு வாங்கி இவர் கடனை பைசல் செய்து விடுவார். அடுத்த மாதம் இவரிடம் வாங்கி அவரிடம் கொடுத்து விடுவார்||

கைமாத்துக்கு நாங்களும் இந்த டெக்னிக்த்தான் யூஸ் பண்ணுவம்ல


கடைசியாச் சொன்ன ”கடன் இல்ல” கொஞ்ச நிறைவா இருந்துச்சு

சூர்யா ௧ண்ணன் said...

அருமை தலைவா!

LK said...

முடிவு :)

sriram said...

வழக்கம் போல அருமை பாலாண்ணா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வெறும்பய said...

ரொம்ப நல்லாருக்கு

Chitra said...

ம்ம்ம்... இப்படி எத்தனையோ பேர்கள்!!! பாவம்ங்க.

நசரேயன் said...

//மாலையில்தான் வாசிக்கணும்..//

எந்த மாலை ?

ரிஷபன் said...

முதன்முறையாக தளர்ந்து போய் அழுதது அந்த காண்டாமிருகம்

கலக்கிட்டீங்க..

இராமசாமி கண்ணண் said...

அருமை :)

VISA said...

Nice one

பிரபாகர் said...

சூதாட்டம் எந்த ஒரு மனிதனையும் புரட்டிப்போட்டுவிடும். ஜனா... நல்ல ஒர் படிப்பினை. வழக்கம்போல் அய்யாவின் கேரக்டர் நெகிழ்ச்சியாயும் பாடமாயும் இருக்கிறது...

பிரபாகர்...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

இப்படியும் கேரக்டர்கள் இருப்பார்களா? முடிவுதான்......நல்ல கேரக்டர் சார்.

அன்பரசன் said...

Nice..

Mahi_Granny said...

வழக்கம் போல் அருமை. தோற்றத்தைக் கூட சரியாக வருணிக்க முடிகிறது ஆச்சரியம்

முகிலன் said...

கண்டிப்பா இதை எல்லாம் புக்கா போடணும் சார் 

பழமைபேசி said...

@நசரேயன்

ம்ம்ம்

பழமைபேசி said...

பலவிதத்துல இதுவும் ஒருவிதம்... விவரணை வழமைபோலவே வாசிப்பின்பம்... ஆமா, முதலாளி எங்கங்கண்ணே??

வானம்பாடிகள் said...

@பழமைபேசி

அவரு ரெம்ப பிஸி:)

bandhu said...

//பெற்றோர் மடிவற்றிய மாடானார்கள்//
கண்ணில் நீர் நிறைகிறது. எழுதும் திறமை உங்களுக்கு கடவுள் கிருபையில் அபாரமாக வாய்த்துள்ளது. வாழ்த்துக்கள்

மணிநரேன் said...

நன்றாக உள்ளது.

தாராபுரத்தான் said...

படித்திட்டேன்ங்கண்ணா..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

@முகிலன்

கண்டிப்பா புஸ்தகமா போடனும் சார்!

க.பாலாசி said...

பொதுவா சூதாட்டக்காரங்க சோம்பேறியா இருப்பாங்க..நான் பாத்திருக்கேன். இவர் நேர்மாறா இருக்கார்... இவரையும் கண்முன்னாடி காட்டின பெருமை உங்களுக்கு... கடைசியில சுல்லுன்னு இருக்கு...

ரோஸ்விக் said...

இன்ட்ரஸ்டிங் கேரக்டர். சூதாட்டம் மட்டுமில்ல வகைதொகையில்லாம செலவு பண்ணினாலும் வாழ்கை கஷ்டம்தான்.

அன்புடன்-மணிகண்டன் said...

பிரமாதம்ம்ம்ம்ம்ம்ம் சார்..

வானம்பாடிகள் said...

@@நன்றி பாலாஜி சரவணா
@@நன்றிங்ணா

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

//வாவ்.. இந்த ஐடியா நல்லாருக்கே...//

:))

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
@ Balaji & நடராஜன்... =)))))))) தலீவரு போஸ்ட் படிக்கறதுக்கு இம்பூட்டு போட்டியா.. தெரிஞ்சிருந்தா நானும் கலந்துக்கிட்டிருப்பேன்ல...//

வாலு:))

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
ம்ம்... நகைச்சுவை இழையோட.. ரொம்ப நல்லாருக்கு சார்...

||என்று முதன்முறையாக தளர்ந்து போய் அழுதது அந்த காண்டாமிருகம்.||

இப்டி முடிச்சிருக்க வேணாமோன்னு தோணுது...//

ம்ம். சரிதான். ஆனா அவரை நேர்லயே அப்படி சொல்லுவேன். அந்த வாஞ்சை.

வானம்பாடிகள் said...

@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றி ராகவன் சார்
@@நன்றிங்க தேனம்மை
@@நன்றி சேது
@@நன்றி பழமை
@@நன்றி கதிர்
@@நன்றி சூர்யா
@@நன்றி எல்.கே
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி வெறும்பய
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி தளபதி

வானம்பாடிகள் said...

@@நன்றி ரிஷபன்
@@நன்றி இராமசாமி
@@நன்றி விசா
@@நன்றி பந்து
@@நன்றி முகிலன்
@@நன்றிங்கண்ணே
@@நன்றி மணிநரேன்
@@நன்றி ஷங்கர்@முகிலன்:))
@@நன்றி பாலாசி

வானம்பாடிகள் said...

@@நன்றி பிரபா
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றிங்க அன்பரசன்
@@நன்றிங்க மஹி_க்ரான்னி
@@நன்றிங்க தாராபுரத்தண்ணே
@@நன்றி ரோஸ்விக்.:)
@@நன்றி மணிகண்டன்.

சே.குமார் said...

நகைச்சுவை இழையோட எழுதியிருந்தாலும் கடைசி பத்தியில் வாழ்க்கையில் எதார்த்தம் புரிகிறது. ஜனா... மனசைக் கனக்கச் செய்த காரெக்டர்.

ஈ ரா said...

மற்றுமொரு வித்தியாசமான கேரக்டர்.

சீட்டுக் கட்டு அடுக்கும்போது
வீட்டுக் கட்டு குலைந்து போகும் என்பதற்கு இவர் உதாரணம்.

வானம்பாடிகள் said...

@சே.குமார்

நன்றி குமார்

வானம்பாடிகள் said...

@ஈ ரா

நன்றிங்க ஈ.ரா.