Monday, October 25, 2010

‘அசி’ - ஓர் ஆத்மானுபவம்.

ஒரு கவிதை என்பது படிப்பவர்களால் அவர்கள் நோக்கில் உணரப்படுவது என்பது உண்மை. பல நேரங்களில் சமர்த்துக் குழந்தையாய் மனதில் சம்மணமிட்டு அமரும் கவிதைகள். சில நேரம் குழந்தைபோல் அழகாய்ப் போக்குக் காட்டும். பிடிபட்ட நொடியில் மனம் முழுதும் நிரம்பும் அதன் சுகம் ஒரு சிறு புன்னகையாய் விகசிக்கும். கலகலப்ரியாவின் கவிதைகள் பல நேரம் எனக்கு பிடிபட்டுவிடும். சில நேரங்களில் வார்த்தைப் பயன்பாடு அல்லது உருவகம் குறித்த விளக்கம் கேட்க வைத்திருக்கிறது. 

அவரின் சமீபத்திய ‘அசி’ என்ற கவிதையில் வார்த்தையழகு தாண்டி பொதிந்திருக்கும் கரு ஒரு வரியில் அல்லது வார்த்தையில் ஒளிந்துகொண்டு ஆட்டம் காட்டியபடியே இருந்தது. இதைப் புரிந்துகொண்டேயாகவேண்டும் என்ற தவிப்பில் அவரிடம் விளக்கம் கேட்டுப் பெற்றபோது, ஒளிந்திருந்த கரு சிரித்தது..காதலைப் போலவே..குருடன் நீயென்று..புரிந்த பிறகு எனக்கு அஷ்டபதியின் ராதை, ப்ரேமையின் சொரூபமான கண்ணன் இந்தக் கவிதைக்குள்ளிருந்து சிரிக்கிறான். நான் அடைந்த இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசை..

 ப்ரியாவின் கவிதை இங்கே.

 கவிதை தரும் உணர்ச்சி இது:

விடாமல் மனக்கதவைத்தட்டி உட்புகப் பார்க்கிற ப்ரேமை நிராகரிக்கப் படுகிறது. ஏதோ ஒரு வழியில் (சாளரம்)  புகப் பார்க்கிறது. அதன் குரலுக்கு செவிசாய்க்காமல் தலையணையடைத்திருக்க, அறிவிப்பின்றி தடாலடியாக மனதிற்குள் புகுந்து அசைக்கப் பார்க்கிறது..விதிர்த்துத் தவித்து என்னவிது என அறிதலில் நீளும் கை நோக்கி எள்ளிச் சிரிக்கிறது..கனவில் வெண்கொக்கின் நிறம் கூட அறியமாட்டாதவள் நீ! என்னை உணர்வாயோவென்கிறது. உணர்ந்தவள் எள்ளுகிறாள்..ஆம்! நான் குருடியெனில் உனக்கும் குருடென்றல்லவா பெயர்.. குருடு குருடறியுமாதலால் நீ நானாகிறாய்..அன்பே கடவுள்..நானே கடவுள்..

இந்தப் புரிதலோடு மீண்டும் படிக்கையில் ‘குருடு குருடறியாதோ தத் த்வம் அஸி’யில் மூழ்கித் திளைக்கிறது மனசு. கண்ணன் மீதான ப்ரேமையே ராதை. ராதையே கண்ணன் என்று கொண்டாடும் ஜெயதேவரின் அஷ்டபதி சொன்ன பெரிய விஷயத்தை இரண்டு வரியில் அடக்கி அகத்தியனாய் நிற்கிறது இது.  ஒரு நொடியில் ஆட்கொண்டு உடல் சிலிர்க்கப் பரவசப்படுத்தும் உணர்வல்லவா ப்ரேமை, காதல், அன்பு. புதிதாக வந்ததெனத் தோன்றுமா எவர்க்கும். தன்னுள்ளிருந்ததைக் கண்டு கொண்ட பரவசானுபவமல்லவா அது. ‘தத் த்வம் அஸி’

அத்தகையதோர் உணர்வைத் தரும் கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றியம்மா.

__/\__

44 comments:

Unknown said...

Asi means 'Me'?

vasu balaji said...

@Sethu
no sethu. its 'being'

Unknown said...

சார்,
'அசி' என்றால் சமஸ்க்ரிதத்தில் 'இருக்கிறது' என்று பொருளா?
இங்கே 'பிரேமத்தை' குறிப்பிடப்பட்டுள்ளதா?

Unknown said...

'தத் த்வம் அஸி' - 'அது நீயாக இருக்கிறாய்' என்ற அர்த்தத்தில் சொல்லப் பட்டுள்ளதா?

நசரேயன் said...

எதிர் கவுஜ போட ஆள் இல்லையா ?

vasu balaji said...

@நசரேயன்

தலைவர் எப்பவோ போட்டுட்டாரே. படிச்சாதானே:))

vasu balaji said...

@Sethu

அது நேர் அர்த்தம். ஆன்மீகமாக. ப்ரியா விளக்கினா மாதிரி இருப்பு இப்படியாக என்பதே சரி.

குடுகுடுப்பை said...

என் கவிதைக்கு லிங்கு எங்கே?

vasu balaji said...

@குடுகுடுப்பை

நீங்களே கொடுக்கலையே:))

எல் கே said...

படிக்கிறேன்

நசரேயன் said...

@வானம்பா
டிகள்


இப்ப எல்லாம் மனுஷன் எதையும் சொல்லுறதில்லை

நசரேயன் said...

@LK

உம்ம கடைக்கு நீர் தான் விளம்பரம் கொடுக்கணும்

'பரிவை' சே.குமார் said...

கவிதை படிக்கும் போது அறியமுடியா விளக்கம் உங்கள் பார்வையில் அழகாய்...

வாழ்த்துக்கள் ஐயா.

vasu balaji said...

@நசரேயன்

ம்கும். எல்கே ரிப்ளை பட்டன அழுத்திட்டு தலைவருக்கு அட்வைசு:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

பிரபாகர் said...

அனுபவித்து படித்ததை அழகாய் சொல்றீரு... படிக்கிற எங்களுக்கு டபுள் குஷி...

பிரபாகர்...

Unknown said...

"ஜெயதேவரின் அஷ்பதி"

சார். மன்னிக்கவும். ஒரு சின்ன திருத்தம். 'அஷ்டபதி'.

-சின்ன வயசில நிறைய கேட்டிருக்கிறேன், அர்த்தம் புரியாமல். இப்பவும் அப்பிடித்தான்.

vasu balaji said...

Sethu said...
சார். மன்னிக்கவும். ஒரு சின்ன திருத்தம். 'அஷ்டபதி'. //

நன்றி சேது

கலகலப்ரியா said...

ம்ம்... நன்றி சார்...

ட்விட்டர் அப்டேட் பார்த்துக்கோங்க... கெக்கேபிக்கேன்னு இளிச்சிட்டிருப்பாங்க...

சொன்னா யார் கேக்கறா..

vasu balaji said...

@கலகலப்ரியா

ம்கும். என் மனசுக்கு பட்டது நிறைவா பண்ணனும். ட்விட்டினா என்ன பஸ்ஸினா எனக்கென்ன போச்சு.

அது சரி(18185106603874041862) said...

நீயே அது. கண்ணாடியில் பார்ப்பவன் தன்னை பார்ப்பது போல‌ எழுத்தின் வீச்சையும் ஒற்றை வரியில் கடந்து சொல்லும் தூரங்களையும் உணர்ந்தவன் அதுவாகவே ஆகிறான். தத் வம் அசி.

அது சரி(18185106603874041862) said...

உரைநடை போலன்றி கவிதை ஒரு மாரீச மான். மரத்தை மறைக்கும் மாமத யானை. மரத்தில் மறைந்த மாமத யானை. ஆற்று நீரில் குனிந்து என்னையும் பார்க்கலாம். ஆற்றையும் பார்க்கலாம். அடியில் தேங்கியிருக்கும் மணலையும் பார்க்கலாம். அதிர்ஷ்டமிருந்தால் ஏதேனும் மீனையும் பார்க்கலாம். ஆற்றில் தன்னை பார்ப்பவன் தானே ஆறாக ஆகிறான். எல்லை எதுவுமின்றி தன் போக்கில் போகும் காட்டாறு.

அது சரி(18185106603874041862) said...

என்னால் எதைப் பார்க்கமுடியும் என்று தெரியவில்லை. ஆனால் விடாது முயற்சிக்கிறேன்.

vasu balaji said...

@அது சரி(18185106603874041862)

/உரைநடை போலன்றி கவிதை ஒரு மாரீச மான். மரத்தை மறைக்கும் மாமத யானை. மரத்தில் மறைந்த மாமத யானை. ஆற்று நீரில் குனிந்து என்னையும் பார்க்கலாம். ஆற்றையும் பார்க்கலாம். அடியில் தேங்கியிருக்கும் மணலையும் பார்க்கலாம். அதிர்ஷ்டமிருந்தால் ஏதேனும் மீனையும் பார்க்கலாம். ஆற்றில் தன்னை பார்ப்பவன் தானே ஆறாக ஆகிறான். எல்லை எதுவுமின்றி தன் போக்கில் போகும் காட்டாறு./

வாவ்! beauty.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கவிதையில் வந்த 'அது'வை, உள்மனம் (அப்பிடின்னா என்ன?) என்று வைத்து புரிந்து கொண்டேன்.. எனக்கும் பிடித்திருந்தது..

Anonymous said...

அந்த கவிதைய முன்ன படிச்ச போது பாதிதான் புரிஞ்சது, உங்க தயவுல இப்போ முழுவதும்..
நன்றி தல!

காமராஜ் said...

அண்ணா இது புதுசு.ரொம்ப இழுக்குது. சிலபேர் கவிதைபத்திப்பேசனும்,சிலபேர் அதை எழுதனும் அப்போது இன்னும் கூடுதல் ருசி கிடைக்கும்.கலாப்ரியாவை படிக்கல, படிக்கணும்.நன்றி அண்ணா.

ஸ்ரீராம். said...

நல்லதொரு கவிதைக்கு லிங்க். நன்றி.

வருணன் said...

நண்பரே மிக அழகான விமர்சனப் பார்வையும், அபரிவிதமான ரசிப்புத் தன்மையும் தங்களுக்கு ஒருங்கே வாய்த்திருக்கிறது. நானும் கவிதைகள் எழுதுகிறேன் எனது வலைப்பூவில். அதனை நீங்கள் வாசித்து விமர்சிக்க வேண்டுகிறேன். நேரமிருப்பின் அவசியம் வாருங்கள். எனது எழுத்துக்கள் உங்கள் விழிகளுக்காய் காத்திருக்கின்றன...

பவள சங்கரி said...

உண்மையிலேயே விளக்கம் மிக அருமை சார்......கவிதைக்கு கவிதை..........தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.....ஒவ்வொருவர் பார்வையில் ஒரு அர்த்தம்.....ஒரு வியாக்கியானம்......அந்த நேர மனநிலையின் பிரதிபலிப்பு.......படிப்பவரும் படைப்பாளியாகும் நிதர்சனம்...

Unknown said...

தத்துவம் ...

ஈரோடு கதிர் said...

||நசரேயன்
எதிர் கவுஜ போட ஆள் இல்லையா ?||


ம்ம்... அப்புறம் அதுக்கு நேர் விளக்கம் கொடுப்பது யாரு!!!!?

vasu balaji said...

@சே.குமார்

நன்றி சே.குமார்

vasu balaji said...

@T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி சார்.

vasu balaji said...

@பிரபாகர்

நன்றி பிரபா

vasu balaji said...

@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

நன்றிங்கம்மா.

vasu balaji said...

@Balaji saravana

ஆஹா. நன்றி பாலாஜி சரவணா

vasu balaji said...

@காமராஜ்

நன்றி காமராஜ்

vasu balaji said...

@ஸ்ரீராம்.

நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

@வருணன்

நன்றிங்க வருணன். பார்க்கிறேன்.

vasu balaji said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றிங்கம்மா

vasu balaji said...

@கே.ஆர்.பி.செந்தில்

நன்றிங்க செந்தில்

vasu balaji said...

@ஈரோடு கதிர்

அதானே:))

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.