Tuesday, October 5, 2010

நாமார்க்கும் குடியல்லோம்...

"செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்”
அந்த மார்கழிமாத ஒடுக்கும் குளிரிலும் பிசிறின்றி வெள்ளி மணியாய் ஒலிக்கிறது கோப்பெருந்தேவியின் குரல். அவளுக்கேயான பிரத்தியேக நேரம் அது. கண்ணனோடு மனதால் குறை சொல்லி, வாயால் பாடி ஆரத்தி எடுத்து சேவித்து எழுந்தாளானால், திரும்ப மாலை விளக்கேற்றும் வரை அவள் கடமைகளே அவளுக்கு ஆராதனை. ஒரு விரல் நுனி வெண்ணையும், பாலும் நைவேத்தியம் காட்டி, ஹாரத்தி எடுத்து, வணங்கி முடித்த பின் பூஜை மண்டபத்தில் எல்லாவற்றையும் சீராக்கி அடுக்களை புகுந்தாள்.

காஃபிக்கு வெந்நீர் வைத்தபடி, சன்னக் குரலில் ‘ஜகத்தோத்தாரண ஆடிசிதள யசோதா’ தவழத் துவங்கியது. மெல்லிய மயிலிறகால் வருடினாற்போல் சேஷனுக்கு உறக்கம் கலைந்தது. காதுக்குள் ரம்மியமாக வந்து கண்ணன் மனசை நிரப்பினான். உள்ளங்கையால் கண்களை வருடி, உள்ளங்கையில் பார்த்து க்ருஷ்ண க்ருஷ்ண என்று மெதுவே எழுந்து பாயைச் சுருட்டி வைத்தார். துண்டோடு, பாத்ரூமில் நுழைந்தாரென்றால் பல் விளக்கி, காலைக் கடன் முடித்து, குளித்து வெளியே வந்து, மடியுடுத்தி, திருமண் சாத்தி,  சந்தியாவந்தனம் முடிக்கவும், கோப்பு எனும் கோப்பெருந்தேவியின் கைப்பாகத்தில் மணக்க மணக்க  காஃபி தயாராயிருக்கும்.

கோப்புக்கு என்னமோ மனதில் குறை இன்னைக்கு என்று அநிச்சையாக உணர்ந்தார் சேஷன். இன்று ரொம்பவும் குழைந்து கண்ணனைச் சீராட்டிக் கொண்டிருக்கிறாள் பாட்டில் என்ற நினைப்பு தோன்றியது. அடுக்கடுக்காய் குழைவாய் வகை வகையாய் கண்ணனைப் பாடப் பாட, ஜபம் செய்ய விடாமல் மனது கொஞ்சம் அலைக்கழிந்தது. பாட்டென்றால் கொள்ளைப் பிரியம் கோப்புவுக்கு. மாமனாரிடம், மெட்ராஸில் அவளுக்குப் பாட்டுச் சொல்லித்தர ஏற்பாடு செய்வதாய் கொடுத்த வாக்குறுதியும், இரண்டாவது மாதமே கோப்பு பிள்ளையுண்டானதில் அது குறித்து மறந்தே போனதும் நினைவுக்கு வந்து தொலைத்தது.

வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், எப்போதாவது ஓய்ந்திருக்கையில், ‘கோப்பு! ஜயதி ஜயதி பாரதமாதா பாடுடீ’ என்று கேட்டு, சிலிர்த்து, கண்ணோரம் கசியவிருக்கும் நீரை அடக்கி,  ‘மாமாக்கு உனக்கு பாட்டு கத்து குடுக்கறேன்னு வாக்கு குடுத்தேனேடி. பண்ண முடியலையே. குறையோடயே போய் சேர்ந்திருப்பார். இப்போ கத்துக்கறயா சொல்லு, விசாரிக்கட்டுமா?’ என்பார்.

‘நன்னாருக்குன்னா! கெடக்கறதெல்லம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மணையில வைன்னு இப்போ போய் பாட்டு கத்துக்கறதாம். ஆச்சு, நப்பின்னைக்கு ஆறு வயசாயிடும் இந்த அப்பசிக்கு. விஜய தசமிக்கு அவள சேர்த்துவிட்டு ஒங்க ஆசைப்படி அவளுக்கு சொல்லிக் கொடுங்கோ’ என்று எழுந்து போவாள். ஏனோ இன்று இவையெல்லாம் கவனம் வந்து ஜபம் செய்யவிடாமல் கோப்புவின் பாடல் மனதைப் புரட்டிப் போட்டது.

சந்தியாவந்தனம் முடித்து, பஞ்சபாத்திர தண்ணீரை துளசிக்கு வார்த்து, ஸூக்தம் சொல்லி, மந்த்ர புஷ்பம் சொல்லி முடித்து சேவித்து எழுந்தார். பொத்தென்று பேப்பர்க்காரன் வீசிய ஹிந்து ஹாலுக்குள் விழுந்தது.


‘கட்டேல போறவன்! எத்தனவாட்டி சொன்னாலும், க்ரில்லுல சொருக மாட்டான்’ என்றபடி பேப்பரை குனிந்து எடுத்தார். பித்தளை டபரா டம்ப்ளரில் மணக்க மணக்க காஃபியைக் கொண்டு வந்தாள் கோப்பு.

‘மொழக்க மொழக்க ஸ்லோகம் சொல்லி முடிச்சி, இப்படிச் சபிக்கணுமா அந்தப் பையனை. என்ன மனுஷனோ’ என்று நொடித்துக் கொண்டு நப்பின்னைக்கு குரல் கொடுத்தாள்.

மணி ஆறு. ஏழுக்கு கிளம்பினால்தான் ஆஃபீசுக்கு நேரத்துக்கு போகமுடியும். அவள் குளித்த பிறகு அவள் தம்பி ஸ்ரீதரன் ரெடியாக வேண்டும் காலேஜுக்கு. ஒரு கையில் காஃபியும் தரையில் விரித்த பேப்பருமாய் அடுத்த கட்ட தவத்திலிருந்தார் சேஷன். 


‘சனியனே! குளிக்காம தளிகையுள்ளில வராதேன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன். புக்காத்தில, பொண்ண வளர்த்திருக்கா பாருன்னு நான்னா சீப்படப் போறேன்’ என்று சலித்துக் கொண்டால் கோப்பு. அதை சட்டை செய்யாமல் கிசு கிசு குரலில்  ‘அப்பாவை கேட்டியாம்மா?’ என்றாள் நப்பின்னை.

‘நீ சித்த ஹாலுக்கு போறியா? காஃபி கொண்டு தரேன். குடிச்சிட்டு குளிக்கிற வழியப்பாரு. நன்னா மாட்டிண்டு முழிக்கிறேன் உங்க ரெண்டு பேருட்டயும்’ என்று சலித்தபடி விரட்டினாள். உர்ரென்று ஹாலுக்கு வந்து உட்கார்ந்த மகளை ஒரு கண்ணால் பார்த்தபடி, ‘என்ன அவகிட்ட குசுகுசு? என்ன வேணும் நோக்கு?’ என்றார்.

ஒரு கண்ணால் பூஜை மண்டப கண்ணனுக்கு இறைஞ்சி, ‘ஏன்னா!கத்தாதேங்கோ. கோந்த ரொம்ப சிரமப் படறான்னா. வேற என்னன்னாலும் பரவால்லன்னா. பஸ்ல கண்ட காலியும் கயவாளித்தனம் பண்றாம்மா, கூசிப்போறதும்மான்னு அழற குழந்தைகிட்ட, பொறுத்துகோடின்னு அம்மாவா எப்படிச் சொல்றது? அவ ஆஃபீஸ்ல லோன் கிடைக்குமாம்னா. ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கறேம்மான்னு கெஞ்சறது குழந்தை. சரின்னு சொல்லுங்கோன்னா’ என்று தயங்கித் தயங்கிச் சொல்லி, மகளைப் பார்த்த பார்வையில், என்னால் முடிந்தது இவ்வளவுதான் என்ற கழிவிரக்கம் தெரிந்தது.
 

‘இங்க பாரு கோப்பு, நோக்குதான் லோகம் தெரியாது. இவள் எப்படித்தான் வேலைக்குப் போறாளோ தெரியலை. வண்டி இருந்தா மட்டும், கயவாளிக சும்மா இருக்காங்கறயா. விரட்டிண்டு போறதும், நாய் கத்தறா மாதிரி ஹாரன் வச்சிண்டு பக்கதுல வந்து பயமுறுத்தறதும், எத்தன குழந்தைகள் கீழ விழுந்து அடி பட்டுண்டு, நாராயணா! என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியலைடி.’

‘தோ! எழுந்து விறு விறுன்னு ரெடியாகி, அஞ்சு நிமிஷம் முன்னாடி கிளம்பினா டெர்மினஸ்க்கு போய்ட்டு உக்காந்துண்டு போலாமேடி. பகவானேன்னு வரன் குதிர்ந்து இவள ஒருத்தன் கையில புடிச்சி குடுத்தாச்சுன்னா அவன் பாடு அவள் பாடுன்னு, இன்னும் சித்த ஸ்லோகம் சொல்லிப்பேன், எங்கொழந்தைக்கு ஒன்னும் ஆகப்படாதுன்னு.’

‘அவளை மடமடன்னு குளிச்சிட்டு சாட்டு கெளம்பற வழியப்பார்க்கச் சொல்லு’ என்றார்.

சப்தம் கேட்டு விழித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதரன்.

‘சார் வாளுக்கு, பைக் வேணுமோ? இப்போ அதானே ஃபேஷன். காலேஜ் சேர்ந்த கையோட புக் வாங்கியாறதோ இல்லையோ பைக் வாங்கியாகணுமே ’ என்றார். 

‘ம்க்கும்! கம்ப்யூட்டர் சயின்ஸில சேர்த்துட்டு லேப்டாப் வேணும்னு கேட்டா, மெடிகல் காலேஜ்ல சேர்ந்திருந்தா படிக்கிறதுக்கு தினம் ஒரு பிணம் வேணும்னு கேப்பியான்னு கேட்ட மனுஷன்கிட்ட பைக் வேணும்னு கேக்கற அளவுக்கு நானொண்ணும் லூசு இல்லை’, என்று பாத்ரூமுக்குள் நுழைந்தான் ஸ்ரீதர்.

ஹிந்துவை மனது ஒட்டாமல் புரட்டியபடி இருந்தவர், ‘தளிகையாயிடுத்துன்னா! சாப்பிட வரேளா என்றவளிடம் பதில் சொல்லாது, பேப்பரை மடித்து வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார். ஆஃபீஸில் இன்று டெண்டர் ஓப்பனிங். பெரிய டெண்டர். இன்னைக்குள் முடிச்சி அனுப்பிடணும். கையில் வைத்திருந்தால், காண்ட்ராக்டர் தொல்லை தாளாது. புதுசா வந்திருக்கிற அதிகாரி வேறு அவ்வளவு சரியில்லை என்று கேள்வி என்று மனதுக்குள் ஆஃபீஸ் வந்து உட்கார்ந்து கொண்டது.
 

ஆஃபீஸ் போய் சேர்ந்து, எல்லாம் தயார் படுத்திக் கொண்டு டெண்டர் பாக்ஸ் அருகே போனார். காத்திருந்த டெண்டரர்களிடம் சீல் உடைபடாமல் இருக்கிறது என்று சாட்சிக் கையெழுத்து வாங்கி, பெட்டியைத் திறந்து, வந்திருந்த டெண்டர்களை அள்ளிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்து, முறைப்படி ஒவ்வொன்றாகப் பிரிக்கத் தொடங்கினார். 

முதல் டெண்டரைப் பார்த்ததுமே சலிப்பு வந்தது. நாசமாப் போறவன். இந்த கோபால் ரெட்டிக்கு என்ன தெரியும்னு இந்த டெண்டரை கேக்கறான். ஜல்லி சப்ளை பண்ற கடங்காரனுக்கு ஆப்டிக் ஃபைபர் காண்ட்ராக்ட் எழவு எப்படி முடியும், என்று நினைத்தபடியே, ரேட்டைச் சுழித்து கையொப்பமிட்டபடி வந்தவரின் கண்ணில் அந்தப் பக்கத்தின் அடியில் கையொப்பமிடாதது கண்ணில் பட்டது.

அப்பாடா! தப்பிச்சேன். இல்லைன்னா எக்ஸ்பீரியன்ஸ் இல்லை, க்ரெடென்ஷியல் சரியில்லைன்னு எழுதப் போய், பணத்தால் அடிக்கப் பார்ப்பான். மேல இருக்கிறவன் ஒரு வேளை மடிஞ்சிட்டான்னா என் பாடுன்னா திண்டாட்டமாப் போகும். ஆச்சு! இன்னும் ரெண்டு வருஷம் தள்ளியாச்சின்னா, போதுண்டா சாமின்னு ரிடையராயிடலாம் என்ற நிம்மதிப் பெருமூச்சு நிலைக்கவில்லை.

சுருட்டு நாத்தமும், வியர்வை நாத்தமுமாய் ஒருத்தன் வந்து, ரெட்டிகாரு கார்ல இருக்குது சார். சார்னு கொஞ்சம் ரம்மன்னாரு சார் என்றான். கண்கள் சிவக்க அடித்தொண்டையில், ரெட்டியில்லை, என்னப்பன் நாராயணனே டெண்டர் போட்டிருந்தாலும், எனக்கு அவன்கிட்ட போக வேண்டிய அவசியமில்லைன்னு போய்ச் சொல்லு என்றார். சற்று நேரத்தில் ரெட்டியே இளித்துக் கொண்டு வந்தான். 


‘பாகுன்னாரா ஸாமி? ஏமண்டி பாப்பக்கு ஒக பண்டி கொனீய குடுது? பஸ்ஸுக்கு ஓடி போய் அந்த கும்பல்ல ஏறி அவஸ்தை பட்டதை பார்த்தேன் காலைல. அல்லாரும் பொறுக்கி பசங்க சாமி. ’

'இண்ட்லோ கம்ப்யூட்டர் கூட லேதுனு கேள்வி பட்டேன். '

'பையன் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் சதுவுத்துன்னாடண்டா. மவுண்ட்ரோடுல ரெட்டி மோட்டார்ஸ் நம்மளதுதான் சாமி.'
'பாப்பாக்கு கூட்டினு போய் ஏ பண்டி காவாலோ செலக்ட் மட்டும் பண்ண சொல்லு.'
'நாளைக்கே டெலிவரி பண்ணிடலாம்.’
‘லேப்டாப் சாயந்திரம் நம்ம மேனேஜர் ஊட்டாண்ட கொண்டு வந்துடுவான்.’

'நீ ஒன்னும் செய்யொத்து சாமி. '

'ஆ, லஞ்சா கொடுக்கு மேனேஜர் சேசின பனி.'
'சரியா பார்க்காம டெண்டர் போட்டுட்டான்.'
'நேத்தே பார்ட்டில உங்க பாஸ் கிட்ட பேசியாச்சி. ஒன் அவர்ல அவர் ரூம்ல இருப்பேன்.'
'நீ ஒன்னும் எழுதாத டெண்டர் ஃபாரம் உள்ள அனுப்பினா போதும் 'என்றான். 

ரெட்டியை கண்ணுக்குள் பார்த்தபடி, ரெட்டி நோக்கு காண்ட்ராக்டும் தெரியலை. காண்டக்டும் சரியில்லை. மரியாதையா எழுந்து போறியா? விஜிலன்ஸுக்கு ஃபோன் பண்ணவா என்றபடி ஃபோனை அருகில் இழுத்தார்.
 

'புத்திலேனி வெதவா!  சம்பளம் தீஸ்கோனி ஏம் பதுகுதாவைய்யா. ச்ச்சாவு போ!'
'ரெட்டி எவரனி நீக்கு சூபிஸ்தானு'
என்று கருவியபடி வெளியே போனான் ரெட்டி. எதற்கும் இருக்கட்டும் என்று அவன் டெண்டர் ஃபார்மை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்தார். ஆவணங்களைத் தயார் செய்து, ப்ரோஸீடிங் எழுதி, அதிகாரியின் ரூமுக்கு கொண்டு செல்லும்போது மணி ஒன்றாகி விட்டிருந்தது.  சாரி சார்! லஞ்ச் டைம். லாக் பண்ணி வச்சிட்டு போங்கோ என்று கொடுத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார்.

சேஷனை ஒரு கேலியான பார்வையோடு கடந்தான் ரெட்டி. சற்று நேரத்தில் அதிகாரியும் அவனும் வெளியே கிளம்பினர். ரெண்டரை மணியளவில் இரைதின்ற பாம்புபோல் வீங்கிய வயிற்றைத் தூக்க முடியாமல் சுமந்து கொண்டு அதிகாரியும் ரெட்டியும் மீண்டும் வந்தனர்.

அடுத்த கட்ட வேலையில் மும்முரமாயிருந்த சேஷனை, அதிகாரி அழைப்பதாகப் ப்யூன் வந்து சொன்னான். என்ன எழவெல்லாம் வந்து சேருமோ தெரியலையே க்ருஷ்ணா, என்றபடி அதிகாரியின் அறைக்குச் சென்றார் சேஷன். 

‘என்ன சேஷன் சார்? என்னமோ நீங்க ரொம்ப சின்சியர்னு கேள்வி பட்டிருந்தேன். சார் உங்க மேல ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்காரு.'

'ரிடையர் ஆகப் போற நேரத்துல உங்க புத்தி இப்படி கெட்டு போகணுமா சார்?’ ‘நீ ஜல்லி சப்ளை பண்ற ஆளு, உனக்கும் இந்த டெண்டருக்கும் என்ன சம்மந்தம்?’

‘எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு எழுதுவேன், க்ரெடென்ஷியல் இல்லைன்னு எழுதுவேன்.’
‘நான் எழுதறதுதான்.’
‘மேல இருக்கற மடப்பயலுக்கு எங்க என்ன பார்க்கணும்னு கூட தெரியாது. பணம் வாங்க மாட்டேன்.’
‘ஒரு ஸ்கூட்டியும் ஒரு லேப்டாப்பும் வாங்கி வீட்டுக்கு அனுப்புன்னு கேட்டிங்களாமே!’  
‘சேஷனாவது அப்படியெல்லாம் கேக்கறதாவதுன்னு திட்டிட்டேன். ’
‘சாப்பிட்டு வந்து, நீங்க குடுத்த பேப்பரை பார்த்தப்போதான் தெரிஞ்சது. எவ்வளவு கேவலமா நடந்துட்டிருக்கீங்கன்னு.’
‘மொட்டைக் கையெழுத்து போடுவேன்னு நினைச்சீங்களா?’
‘அதெப்புடி சார், கையெழுத்து போட்ட ஒரு டாகுமெண்ட்ல கையெழுத்து இல்லை, செல்லாதுன்னு எழுதி சார் டெண்டரை விட்டுட்டு மத்ததை ரெகமண்ட் பண்ணுவீங்க? ’
‘நான் உங்கள நம்பி கையெழுத்து போட்டிருந்தா என் வேலை போயிருக்குமா இல்லையா?’
‘இங்க பாருங்க, கையெழுத்து இருக்கா இல்லையா?’
‘ஏன் சுழிக்காம விட்டு, கையெழுத்து இல்லைன்னு நோட் எழுதுனீங்க?’

திகைத்துப் போனார் சேஷன். அவர் சர்வீஸில் இப்படி ஒரு ஆளைக் கண்டதில்லை. 

‘புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.'
'போங்க சார். கொண்டு போய் வேற மாத்தி எழுதி கொண்டு வாங்க.'
'இங்க பாருங்க கம்ப்ளெயிண்ட். '
'நீங்க அது சரியில்லை, இது சரியில்லைன்னு எழுதினா, எனக்கு வேற ப்ரூஃபே வேணாம். இந்த கம்ப்ளெயிண்ட்டே போதும். ஆக்‌ஷன் எடுக்க வேண்டி வரும் என்றார். '

நிற்க முடியாமல் உதறியது சேஷனுக்கு. 

'சார்! அதிகாரியாச்சேன்னு பார்க்கிறேன். என் லீவ் சர்வீஸ் இருக்காது உங்களுக்கு.'
'என்னையா மிரட்றீங்க? '
'ஏதோ ஒரு டவுட் வந்துதான், நான் இந்தாளு ஃபார்மை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கேன். இப்போவே விஜிலன்சுக்கு கொடுக்கிறேன். ஆனதைப் பார்த்துக்குங்க' என்றார் சேஷன்.

'சாரி மிஸ்டர் சேஷன். இவ்வளவு மோசமா பிஹேவ் பண்ணுவீங்கன்னு நினைக்கலை.'

'ஐ ஹேவ் நோ அதர் கோ!'
'ஐ ஹேவ் டு ஸஸ்பெண்ட் யூ.'
'நீங்க இப்படியே வீட்டுக்கு போலாம். '
'உங்க டேபிள்ள உங்க பெர்சனல் திங்ஸ் இருந்தாச் சொல்லுங்க, ஐ வில் விட்னஸ் அண்ட் ஹேண்ட் ஓவர் டு யூ.'
'யூ ஷுட் நாட் டச் எனி அஃபிஷியல் டாகுமெண்ட்ஸ். '
'இந்தாங்க உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். '


'உட்கார்ந்து  நிதானமா சார்ஜ் ஷீட் படிச்சி பார்த்து அக்னாலட்ஜ் பண்ணுங்க.' 

'மீன் வைல் ஐல் கெட் யுவர் திங்ஸ்'
என்று வெளியே சென்றவன் ஜெராக்ஸ் காபி ஃபார்மை மட்டும் கொண்டு வந்தான். படிக்கப் படிக்க மயக்கம் வரும் போலிருந்தது சேஷனுக்கு. இத்தனை வருட சர்வீஸில் இப்படி ஒரு பேச்சு வாங்கியதில்லை. அதுவும் நேர்மையாய் இருந்தும் எவ்வளவு கேவலமாக பேசிவிட்டான். லஞ்சப் பேர்வழி என்ற பேர் போதாமல், ப்ளாக் மெயில் செய்ததாக வேறு ஜோடித்தால் என்ன செய்வது?

'ஓக்கே ரெட்டி. ஹியரீஸ் த ஜெராக்ஸ்.'

'உங்க கம்ப்ளெயிண்ட் மட்டும் இருக்கட்டும்.' 
'சாலா தேங்க்ஸண்டி. ஈவினிங் பார்ட்டில மீட் பண்ணுவோம் 'என்றான். ரெட்டி, 


'அய்காரு! இப்புடு சூச்சுகுன்னாவா?'
'செப்பின மாட்ட கேக்க மாட்டய்யா மீரு.'
'ஒக சின்ன தப்பு நடந்து போச்சின்னு வந்து கேட்டா சரினி சொல்லாம இப்புடி அசிங்கப்பட்டு நிக்கறியேய்யா. '
'உன்ன மாதிரி எவ்வளவு பேரை பார்த்திருப்பேன். பொழைக்க தெரிஞ்சிக்க ஸாமி' என்று கிளம்பினான்.


'அட, குடு சார் அந்த சார்ஜ் ஷீட்டை. என்னமோ மினிஸ்டர் கிட்ட இருந்து அப்ரிஸியேஷன் பண்ணி வந்தா மாதிரி இந்த டென்ஷன்லையும் அத படிச்சிக்கிட்டு' என்று வெடுக்கென பறித்துக் கொண்டு நடந்தான்.  

அதிகாரி, 'நீங்க அரை நாள் லீவ் போட்டுட்டு போங்க சேஷன். நான் வேலையை முடிச்சிடுறேன்'என்றார். 

சர்வமும் தளர்ந்து குறுகிப் போய் அமர்ந்திருந்தார் சேஷன். சுற்றி நடப்பதும் இருப்பதும் ஏதுமறியாமல் ஒரு வெறுமை. சம்மந்தமின்றி எங்கிருந்தோ மென்மையாக கோப்புவின் குரலில்  ‘ஜயதி ஜயதி பாரதமாதா’ கேட்டது.
~~~~~~~~~~~~~~~~~~

76 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பஸ்ல கண்ட காலியும் கயவாளித்தனம் பண்றாம்மா, கூசிப்போறதும்மான்னு அழற குழந்தைகிட்ட, பொறுத்துகோடின்னு அம்மாவா எப்படிச் சொல்றது?//

உண்மை, உண்மை

எல் கே said...

ஒரு நேர்மையான அதிகாரி எவ்வளவு சோதனைகளை சந்திக்க வேண்டி உள்ளது ??

காமராஜ் said...

//சுருட்டு நாத்தமும், வியர்வை நாத்தமுமாய் ஒருத்தன் வந்து, ரெட்டிகாரு கார்ல இருக்குது சார். சார்னு கொஞ்சம் ரம்மன்னாரு சார் என்றான். கண்கள் சிவக்க அடித்தொண்டையில், ரெட்டியில்லை, என்னப்பன் நாராயணனே டெண்டர் போட்டிருந்தாலும், எனக்கு அவன்கிட்ட போக வேண்டிய அவசியமில்லைன்னு போய்ச் சொல்லு என்றார். //

அதேதான் நாமார்க்கும் குடியல்லோம்.நேர்மைத்திறன்.
it is the perfect eligibility. செவ்வணக்கம் சேஷனுக்கும்,
கொடுத்த அண்ணாவுக்கும்.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

அருமையான கதை - ஒரு வைணவக் குடும்பத்தினைக் கண் முன்னே நடமாட விட்டீர்களே ! பலே பலே ! ஒவ்வொரு சொல்லினையும் மெதுவாக ரசித்துப் படித்தேன். மகிழ்ந்தேன். சேஷன், கோப்பு என்கிற கோப்பெருந்தேவி, நப்பின்னை, ஸ்ரீதரன் கண் முன்னால் நடமாடுகிறார்கள்.

அவர்களின் தினசரி நடவடிக்கைகளை விவரிப்பது அடடா - என்ன கற்பனை வளம். படித்து படித்து மகிழ்ந்தேன். ஆறு வயது நப்பின்னை வளர்ந்து ஸ்கூட்டி ஓட்டும் வரை - கதையினை அழகாக தொடர்பில் வைத்திருப்பது நன்று.

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

பிரபாகர் said...

அலுவலகம் கிளம்பிகிட்டிருக்கேன் அய்யா!... அப்புறம் படிக்கிறேன்.

பிரபாகர்...

ஆரூரன் விசுவநாதன் said...

வாவ்.....சொல்லறதுக்கு வார்த்தையே இல்லைங்ணா....

ம்ம்ம்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க .

வல்லிசிம்ஹன் said...

ஆலயம் என்று பிந்நாட்களில் வந்த ஒரு திரைப் படம் நினைவுக்கு வந்தது. அதில் ராவ் என்பவர் நேர்மை தவறாமல் இருந்து வேலையை விட்டுவிடுவார். இன்னும் காலம் மாறவில்லையே.

நர்சிம் said...

no words

வல்லிசிம்ஹன் said...

நடுவில் தொலைபேசி வந்ததால் எழுதவந்தது பாதியில் விட்டுவிட்டேன்.
எனக்குக் கோப்பெருந்தேவி பெரியம்மா, பெரியகுளத்தில் இருந்தார்.
சஸ்பெண்ட் ஆனாலும் தளராத கதைநாயகருக்கு என் வாழ்த்துகள். வைஷ்ணவ சம்ப்ரதாய வார்த்தைகளை அப்படியே கையாண்டிருக்கிறீர்கள். பிரமிப்பாக இருக்கிறது.
பஞ்சபாத்திரம் ஒண்ணுதான், குளபாத்திரமாக இருக்கணும்:)))

Ahamed irshad said...

ரொம்ப நல்லாயிருக்கு பாலா சார்..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

முடிவு சற்றுக் குழப்பமாக இருக்கிறதோ?

என்ன ஆகிறது?

மற்றபடி நல்ல விவரணை..
எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்..

பவள சங்கரி said...

ஒரு வைணவக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்ட பாலா சார் , உங்களாலதான் முடியும்.......என்ன நளினமான எழுத்துக்கள்.!! அருமை சார்.

Unknown said...

உணர்வுகள் எப்போதும் உயர்வானவை ...

பிரபாகர் said...

நேக்கு போக்கா இருக்கிறவங்கதான் நல்லாருக்காங்கய்யா!....

இன்றைய காலகட்டத்தில் ரொம்பவும் கஷ்டமான விஷயம் நேர்மையாய் இருப்பது, அல்லது இருக்க முயற்சிப்பது...

ரொம்ப நல்லாருக்குங்கய்யா!

பிரபாகர்...

கலகலப்ரியா said...

ஆரூர் சொன்ன மாதிரி... வார்த்தை இல்ல சார்... மிக அருமை...

ராஜ நடராஜன் said...

நிறைய பேர் பாராட்டுவதால் நான் விசயத்துக்கு நேரா வந்திடறேன்.

இருக்கிற ஒன்று ரெண்டு சேஷன்களுக்கும் இந்த நிலைமைன்னா வேற என்ன செய்றது?

ஜனநாயகத்தையும் விட முடியாது.சர்வாதிகாரமும் நமக்குப் பிடிக்காது.எமர்ஜென்சி போட இந்திரா காந்தியும் இல்லை.ஹோட்டல்ல சர்விஸ் சார்ஜ் மாதிரி ஏதாவது புதுசா சட்டம் கொண்டு வந்திடலாமா?

(காலையில காப்பிக்கும்,ஹிந்து பேப்பருக்கும் அப்படி என்ன ஒட்டு:))

கலகலப்ரியா said...

@ராஜ நடராஜன்

ஊஹூம்... வர வர உங்க போக்குச் செரியில்ல.... ஒரு கதை எழுதினா அத எல்லாரும் பாராட்டினா... நீங்க பாராட்டின குறைஞ்சா போயிடுவீங்க...

உடன சர்வாதிகாரம்... ஜனநாயகம்னுட்டு...

(உஷ்... காதக் கொடுங்க ஒரு கேள்வி கேக்கனும்... உங்கள ஏதாவது பக்கத்தில கட்டுரை எழுதக் கேட்டிருக்காங்களா..)

மவளே.. போதும்.. ஓடிப்போயிடு.. அப்பீட்டு....

பிரபாகர் said...

//அறிவன்#11802717200764379909 said...
முடிவு சற்றுக் குழப்பமாக இருக்கிறதோ?

என்ன ஆகிறது?

மற்றபடி நல்ல விவரணை..
எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்..

October 5, 2010 10:57 AM
//

எழுத்துப்பிழை இல்லைங்கோ... ஆசான் பேச்சுத் தெலுங்கில அப்படியே எழுதியிருக்காரு....

பிரபாகர்...

க.பாலாசி said...

எல்லாரும் எப்பவும் சொல்லுவாங்க இந்த தடவ நாஞ்சொல்றேன்....

சார்...

பழமைபேசி said...

நல்லா இருக்குன்னு பின்னூட்டத்துல தெரிஞ்சிகிட்டேன்..... மகிழ்ச்சி!

உ.த இடுகை போல ஆயிட்டு இருக்கு வர, வர.... மாலையிலதான் வந்து வாசிக்கணுங்ணே!

நல்ல நாள்லயே, தளபதி வாசிக்க மாட்டாரு... இன்னைக்கு?அவ்வ்வ்.....

Unknown said...

Good Pazamai is already there.

"‘ம்க்கும்! கம்ப்யூட்டர் சயின்ஸில சேர்த்துட்டு லேப்டாப் வேணும்னு கேட்டா, மெடிகல் காலேஜ்ல சேர்ந்திருந்தா படிக்கிறதுக்கு தினம் ஒரு பிணம் வேணும்னு கேப்பியான்னு கேட்ட மனுஷன்கிட்ட பைக் வேணும்னு கேக்கற அளவுக்கு நானொண்ணும் லூசு இல்லை,"

Super dialogue Sir.

Sir, How come no one has approached you from Kodambaakkam?

ரிஷபன் said...

தவிப்பை அப்படியே காட்டியிருக்கிறீர்கள்

பழமைபேசி said...

Anna,

Excellent! Classical touch.....

On the same token, please reconsider on formatting too... have conversation dialogs in order rather having paras by paras....

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர் தலைவா! கலக்கல்! ..

Unknown said...

என்ன அற்புதமான எழுத்து சார் இது. அத்தனையும் உண்மையா நடக்கிற மாதிரி இருக்கு. அருமை சார். அருமை. கைய கொடுங்க சார்.

கலகலப்ரியா said...

@பழமைபேசி

அப்பாடா எனக்குதான் கஷ்டமா இருக்கோ படிக்கறதுக்குன்னு நினைச்சேன்... பழமை சார் கூடச் சொல்லிட்டாங்க...

(அவங்க எப்பவும்தான் சொல்லுவாய்ங்க... ஆனா இது ஓக்கே... ஹிஹி.. ஜூட்டு)

Unknown said...
This comment has been removed by the author.
கலகலப்ரியா said...

@Sethu

தோடா சேது.. நீங்க பின்னூட்டத்த எடுத்துட்டா எனக்குத் தெரியாதாக்கும்... எதுக்கு இவ்ளோ பயத்த வச்சுக்கிட்டு வம்புக்கிழுக்கனும்னேன்... :))))))

Unknown said...

பிரியா. வம்பு இல்ல. மத்தவங்க பிரச்சனை பண்ணிடுவாங்கன்க்ரா பயம் தான்.

கலகலப்ரியா said...

@Sethu

ஓ... சாரி சேது.. அது அப்டி இல்ல... நண்பர்கள் ஆரோக்கியமா எடுத்துச் சொல்றதுதான்... அத ப்ரச்சனைன்னு எடுத்தாதான் ப்ரச்சன...

ஃப்ரீயா விடுங்க...

ஈரோடு கதிர் said...

சொல்ல வார்த்தை இல்லை

வாசித்து முடிக்கும் போது ’திக்’ என ஆகிவிட்டது

பனித்துளி சங்கர் said...

வைணவம் வார்த்தைகளில் விளையாடுகிறது . உங்களின் ஒவ்வொரு பதிவிலும் வார்த்தைகளின் புதுமைக்கு பஞ்சமே இல்லைதான் அதிலும் இந்தப் பதிவு என்னை வெகு நேரமாக முற்றுகையிட்டு வார்த்தை உணவிட்டு எனது அறிதல் பசி தீர்த்து சென்றது . பகிர்வுக்கு நன்றி

vinthaimanithan said...

எக்ஸலண்ட் போஸ்ட்! ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல சிறுகதைய படிச்சிருக்கேன். நிறைவா இருக்கு சார். வார்த்தைகளைக் கோர்த்து நெய்த அழகான பூமாலை.

(ஆமா... இது ரயில்வே டிபார்ட்மெண்ட் அனுபவம்தானே?!)

vasu balaji said...

@விந்தைமனிதன்

=)). இல்லைங்க. பூராவும் புனைவு. அந்த டெண்டர்னு எல்லாம் வந்தத வச்சி அப்படி நினைச்சிட்டீங்க போல.

நசரேயன் said...

ஷங்கர் படம் மாதிரியே இருக்கு

vasu balaji said...

@நசரேயன்

போட்டு தாக்கிட்டீரே தளபதி. தேறும்ங்கிறீரா.புட்டுகிச்சா:))

vasu balaji said...

@நாய்க்குட்டி மனசு

நன்றிங்க.

vasu balaji said...

@denim
நன்றிங்க

vasu balaji said...

@காமராஜ்

ம்ம்:) நன்றி காமராஜ்.

vasu balaji said...

@cheena (சீனா)

ரொம்ப நன்றிங்க சீனாசார்.

vasu balaji said...

@ஆரூரன் விசுவநாதன்

ஆஹா! சந்தோஷம் ஆருரன்.

vasu balaji said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு

நன்றிங்க

vasu balaji said...

@வல்லிசிம்ஹன்

அது மாறாது சார்:)

vasu balaji said...

@நர்சிம்

நன்றி நர்சிம்

vasu balaji said...

@நர்சிம்

நன்றி நர்சிம்

vasu balaji said...

@வல்லிசிம்ஹன்

நன்றி சார்.

vasu balaji said...

@அஹமது இர்ஷாத்

நன்றி இர்ஷாத்

vasu balaji said...

@கலகலப்ரியா

ரொம்ப ரொம்ப நன்றிம்மா

vasu balaji said...

@பிரபாகர்

நன்றி பிரபா.

வல்லிசிம்ஹன் said...

காலம் மாறாது''. உண்மைதான்.

இந்தச் சம்பவம் எத்தனையோ நல்ல மனிதர்களை நினைவில் கொண்டு வைத்தது பாலா சார்.
மேலதிகாரிகளுக்குக் கூழைக்கும்புடு போடத்தெரியாத ஒருவர் என்னைப் பெற்றவர். இன்னொருவர் என்னை மணந்தவர்.

Thenammai Lakshmanan said...

ரொம்ப அருமை சார்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை .

vasu balaji said...

@ராஜ நடராஜன்

/(காலையில காப்பிக்கும்,ஹிந்து பேப்பருக்கும் அப்படி என்ன ஒட்டு:))//

’எளக்கி’ யம்தான்:))

vasu balaji said...

@க.பாலாசி

நன்றி பாலாசி

vasu balaji said...

@Sethu

/Sir, How come no one has approached you from Kodambaakkam?/

அதானே. எ.கொ.சே?

vasu balaji said...

@ரிஷபன்

நன்றி ரிஷபன்

vasu balaji said...

@T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி சார்.

vasu balaji said...

@பழமைபேசி

நன்றிங்க. ப்ரியாவும் சொன்னாங்க. மாத்திக்கிறேன்.

vasu balaji said...

@சூர்யா ௧ண்ணன்

நன்றி சூர்யா

vasu balaji said...

@Sethu

நன்றி சேது.

vasu balaji said...

@ஈரோடு கதிர்

ம்ம். நன்றி கதிர்.

vasu balaji said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

நன்றிங்க சங்கர்.

vasu balaji said...

@வல்லிசிம்ஹன்

சந்தோஷங்கம்மா. நன்றி:)

vasu balaji said...

@தேனம்மை லெக்ஷ்மணன்

நன்றிங்க தேனம்மை.

vasu balaji said...

@ஸ்ரீ

நன்றி ஸ்ரீ

Unknown said...

Sir,

What is 'அதானே. எ.கொ.சே?'?

I am pretty sure someone will steal this story and publish it in local magazine.

It is classic sir. Excellent.

vasu balaji said...

@Sethu

எ.கொ.சே?

என்ன கொடுமை சேது:)) ஹி ஹி.

Unknown said...

Ha Ha Ha.

It is amazing how you frame acronyms. Nice.

Chitra said...

அற்புதமான பகிர்வு.

தினேஷ்குமார் said...

வணக்கம் ஐயா
நான் உங்கள் உலகுக்கு புதியவன்


நடுத்தர வர்கம்
என்றிருந்தால்
நாயும்
நகைக்குமாம்...........


http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_05.html

Mahi_Granny said...

உபன்யாசம் கேட்டு கடந்து போனேன். இப்போ இத்தனை அழகாக பக்தியோடு சேவிக்கும் கோப்பு அம்மாள் . முடிவு தான் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள சிரமமாய். . அருமையான எழுத்து சார் எப்போவும் போல.

thiyaa said...

என்ன ஒரு எழுத்து...நல்லாயிருக்கு

ஸ்ரீராம். said...

மனம் கனக்க வைத்த கதை. கதையிலாவது நியாயம் கிடைக்காதா என்று எப்போதும் ஏங்கும் மனம்.

ரோஸ்விக் said...

அருமைண்ணே!!!

இந்த எழுத்து நடையை எந்த வண்டில அண்ணே பழகுனீங்க?

R. Gopi said...

கதை மிக நன்றாக உள்ளது.

கஜேந்திர மோக்ஷம் விட்டுப் போய்விட்டது என்று நினைக்கிறேன்.