Thursday, October 14, 2010

ராஜி -1


ஹாலில் நட்டநடுவில் சாய்மானமின்றி ஒரு கால் மேல் மற்றொரு காலிட்டு அமர்ந்திருந்தாள் ராஜி அத்தை. பெண்களுக்கு மாத்திரமேயான வரமது. நழுவும் முக்காட்டை முன்னுக்கு இழுத்துவிட்டபடி, ஒரு பெரிய தாம்பாளம் நிறைய மல்லி மொட்டுக்களைத் தொடுத்து சரமாக்கிக் கொண்டிருந்தாள். இரண்டிரண்டாக தலையும் வாலுமாய் மொட்டடுக்கி சுற்றிச் சுற்றி நாலு ஜோடி வைத்து, பொட்டல நூலால் ரெண்டு எட்டு போட்டிழுத்தால் ஒரு மொட்டு உதிராது. அதெப்படி கணக்குத் தெரியுமோ, சீராக முக்காலடிக்கு ஒன்று என்று பதினைந்துக்கும் மேல் கட்டி அடுக்கியிருந்தாள்.

கலகலவென்றிருந்தது வீடு. ராஜியின் தம்பி விசுவின் பேரனுக்கு கலியாணம். பக்கத்தில் சோஃபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த விசு


‘பூக்காரனண்ட சொல்லி வாங்கியிருக்கலாமேக்கா. இடுப்பொடிய எதுக்கு நீ உட்கார்ந்து பண்ணிண்டிருக்க? போதும்! இத்தன பொம்மநாட்டிக இருக்கா. ஆரானா வராளா ஒத்தாசைக்கு. கோமுவை கூப்பிட்டு மிச்சத்தைக் கட்டச் சொல்லு’ என்றார்.

‘அசடு மாதிரி பேசாதே கோந்தை.ஆசை ஆசையா வச்சிண்டு, அழகாருக்கா அத்தை? தாங்க்ஸ்னு சந்தோஷமா காமிச்சிட்டு போற சந்தோஷத்துக்கு முன்னாடி, இதெல்லாம் கஷ்டமாடா? மாத்ரையெல்லாம் எடுத்து வச்சிண்டியோ? சலவக்காரனண்ட குடுத்து விசிறி மடிப்பா அங்கவஸ்த்ரம் இஸ்திரி பண்ணி வச்சிருந்தேன். மறக்காம எடுத்துக்கோ. நாளைக்கு சபையில ஜம்முன்னு ராஜா மாதிரி அதப் போட்டுண்டு உக்காந்திருக்கறப்போ நேக்கு அப்பா தெரியணும்’ என்றபடி தொடர்ந்தாள்.

வாஞ்சையாய்ச் சிரித்த விசுவின் மனது ஒரு கணம் பிரமித்தது. எப்படி முடிகிறது இவளால், இத்தனை காலம் சென்றும் அப்பாவை நேசிக்க? வீம்பைத் தவிர அந்த மனிதரிடம் என்ன இருந்தது? ஒரு வேளை அந்த மனிதர் மற்றவர்களைப் போலிருந்தால் அக்கா இப்படி இருந்திருக்க வேண்டாமோ? தொடர்ச்சியாக வந்து விழுந்த எண்ணங்கள் அயர்ச்சியைத் தர, ரிமோட்டை எடுத்து டி.வி.யை அணைத்து நினைவில் முழுகிப் போனார்.

ராஜிக்கு பத்து வயசு. விசுவுக்கு ஏழு. உலகமே அக்காதான். மற்ற பிள்ளைகள் கோலி, கிட்டிப் புள்,பம்பரம் என்று விளையாட விசு அக்கா மற்றும் தோழிகளோடு பாண்டியும், பல்லாங்குழியும் ஆடுவான். அதிகாலையில், அப்பா சந்தியாவந்தனம் முடித்து, கணேரென்ற குரலில் ருத்ரம் சமகம என்று பூஜையறையில் சொல்லிக் கொண்டிருக்க, ஹாலில், சுருதிப்பெட்டி அடித்தபடி, அக்கா கீதம் வர்ணம் என்று சாதகம் செய்வதை பார்த்தபடியிருப்பான்.

‘ஆம்பளைப் பிள்ளையா லட்சணமா, அப்பாவோட ஸ்லோகம் சொல்லத் தோண்றதா பாரு. அக்கா அக்கான்னு அவ பாவாடையை பிடிச்சுண்டு அலையறது. மூணு நாலு வருஷத்தில அவ புக்காம் போனாத்தான் இது உருப்படும்’ என்று பெருமையாய் சலித்தபடி போகும் அம்மாவின் வார்த்தைக்கு அர்த்தம் சீக்கிரமே புரிந்தது.

‘மாசிப் பூணூல் பாசிப் படரும்பாளே,  விசுவுக்கும் ஏழு வயசு.
ஆச்சு ராஜி கல்யாணத்தோட பூணூல் போட்டுட்டா என் கடமை முடிஞ்சது’ என்று ஒரு நாள் மதிய தூக்கம் முடிந்து எழுந்து, பூணூல் திரித்தபடி திண்ணையில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டதும் பகீரென்றானது விசுவுக்கு.

கொல்லையில், பசுமாட்டுக்கு புல் போட்டு, தொழுவத்தைக் கூட்டிக் கொண்டிருந்த ராஜியிடம் ஓடி வந்தான்.

‘ராஜி! நோக்கு கல்யாணமா? நேக்கு பூணூலா? அப்பா சொல்லிண்டிருக்காளே. அப்போ ஸ்கூல் போமுடியாதாடி? நீ அத்திம்பேராத்துக்கு போய்டுவியாம். நான் வேத பாடசாலைக்குப் போணுமாம். அம்பி சொல்றான். நீ போகாதே ராஜி. நாம படிக்கலாம் ராஜி’ என்று உதடு விம்ம நின்றதை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லி இப்போதும் சிரிப்பாள் ராஜி.

கனவு போல் இருக்கும் விசுவுக்கு இப்போதும். திப்பிராஜபுரத்திலிருந்து யார் யாரோ வருவதும் போவதுமாய் இருந்து ஒரு நாள் ராஜி துளசி மாடத்தின் பின் ரகசியமாய் விசுவின் கை பிடித்து அழுதாள்.

‘விசு! நேக்கு கலியாணமாம். நீ என் கூட வந்துடுவியோன்னோ. நான் அம்மாட்ட கேக்கறேன். அப்பா அம்மாவோடதான் இருப்பேன்னா உன்னோட டூ’ என்று அழுதாள்.

கிராமமாதலால் சுற்றி சுற்றி அக்ரஹாரத்தில் உறவுகள் வீட்டில் தினமும் பொங்கியிடுவதிலும், விருந்து கேளிக்கையிலும் திருமணநாளும் பூணூலும் வந்தேவிட்டது. கலியாணம் முடிந்து, 13 வயது அனந்தராமன் ‘டீ ராஜி! நான் எங்காத்துக்கு போய்ட்டு வரேன். விசு! தீர்த்தம் கொண்டு வாடா என்றபோது கோவம் வந்தது. வேண்டா வெறுப்பாய் கொண்டு வந்தபோது, வருஷப் பிறப்புக்கு வந்துவிடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அக்கா வெட்கப்பட்டுக் கொண்டு ம்... ம்... என்று தலையாட்டிக் கொண்டு ரொம்ப அழகாய் இருந்தாள்.

எல்லாரும் கிளம்பிப் போய் வீடு சகஜ நிலைக்குத் திரும்பியது. அடுத்த நாள் பள்ளிக்குக் கிளம்பியபோது விழுந்தது இடி. ராஜி! நீ ஸ்கூலுக்கு போவேண்டாம். விசு நீ கிளம்பு என்றாள் அம்மா!

‘அக்கா வரலைன்னா நானும் போமாட்டேன்’ என்றவனின் முதுகில் பளாரென அறை விழுந்தது.

’அவளுக்கு கலியாணமாயிடுத்து. நீ அடுத்த வருஷம் வேத பாடசாலைக்கு போகணும். அதுக்குள்ள ரெண்டு அட்சரம் கத்துக்கோ’ என்று தரதரவென இழுத்துப் போய், சுப்ரமணியம் வாத்தியாரிடம் ஒப்படைத்தாள் அம்மா.

வாழ்க்கை சுவாரசியமற்றுப் போனது விசுவுக்கு. திடீரென ஒரு நாள் பள்ளியிலிருந்து வரும்போது வீட்டில் கூட்டமும், பெண்டுகள் அழுதுகொண்டே போவதுமாய் இருந்தது. ஓடிப்போய் பார்த்தான். அப்பா திண்ணையில் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். பையை திண்ணையில் எறிந்துவிட்டு ஓடினான் விசு. 



‘ஒன்ன மோசம் பண்ணிட்டு போய்ட்டானேடி, அல்பாயுசுல. பொண்ணாறதுக்குள்ள வைதவ்யம் வாய்க்குமாடி நோக்கு’ என்று ஆளாளுக்கு கட்டிப் பிடித்து அழுகையில் மலங்க மலங்க உட்கார்ந்திருந்த ராஜி மனசுக்குள் உறைந்து போனாள்.

‘அம்மா! வேண்டாம்மா, என் ஜடைம்மா’ என்று அழுதவளை கட்டிக் கொண்டு கதறக் கதற மொட்டையும், காவியுமாய் மூலையில் முடக்கியபோது அப்பா பிடிக்காமல் போனார். ஆவணிஅவிட்டத்துக்கு வேத பாட சாலைக்குப் போவதாக அப்பா சொன்னதைச் சொல்லி ராஜியிடம் அழுதான் விசு.

‘நீ படிடா! நன்னாப் படி. நான் இருக்கேன் நோக்கு. டாக்டருக்குப் படிடா’ என்றாள் ராஜி

அப்பாவிடம் போனாள். கோந்தைய வேத பாடசாலைக்கு அனுப்ப வேணாம். அவன் டாக்டருக்குப் படிக்கப் போறான் என்றாள். ராஜியில்லை அவள். ராஜியின் குரலல்ல அது. அப்பாவிடம் தொண்டையே வராது அவளுக்கு. வெண்கலக் குரலில் அவள் சொன்ன உறுதியில் உறைந்து போனார் அப்பா. அன்று இரவு ராஜியைக் கட்டிக் கொண்டு அழுதாள் அம்மா.

அப்பாவுடனான பேச்சு என்பதே குறைந்து போனது ராஜிக்கு. அக்காவின் வாக்கைச் சிரமேற்கொண்டு படித்து டாக்டரானான் விசு. என்னவானால் என்ன? ராஜிக்கு கோந்தை அவந்தான். படிப்பு முடிந்து வீடு திரும்பி,

‘ராஜி! நீதான் ஹெல்ப் பண்ணனும் ராஜி. மேல் படிப்புக்கு லண்டன்ல இடம் கிடைச்சிருக்கு ராஜி. அப்பா ஒத்துக்க மாட்டார். எப்படியாவது ஒத்துக்க வைக்கணும் ராஜி. உன்னைத்தான் நம்பியிருக்கேன்’ என்றான்.

‘நீ ஆகவேண்டியதைப் பார். நான் பேசறேன் அப்பாவிடம்’ என்றவள் மீண்டும் வென்றாள்.

‘நாசமாப் போச்சு குடும்பம். கால காலமா வேத சம்ரக்ஷணை பண்ண குடும்பம் என்னோட போயுடுத்து. பண்ண பாவம் போறாதுன்னு கடல் தாண்டி வேற போயாகணுமாம். நான்னாருக்கு பொம்மனாட்டி ராஜ்ய பாரம்’ என்று எகிறினார் அப்பா.

’அவன் படிச்சிட்டு வரட்டும். ஒங்க வேதத்துல அதுக்கும் பரிகாரம் இருக்கு பார்த்து வைங்கோ’ என்று நிறுத்தி நிதானமாக உறுதியாய்ச் சொன்னாள்.

‘நேக்கு அவன் கொள்ளி போடப்பிடாது. எக்கேடு கெட்டுப் போகட்டும்’ என்றார். அம்மா முந்தானையால் முகத்தை மூடியபடி அழுதாள்.

‘நேக்கு? நேக்கு யாருப்பா போடுவா? நோக்கு பிள்ளை கொள்ளிப் போடப்படாதுன்னு  பிடிவாதமா சொல்ல முடியறது. நேக்கு யாரு கொள்ளி போடணும்னு நீ சொல்ல முடியுமாப்பா? தோ! சந்தியாவந்தனம் பண்ண ஆத்துக்கு போனான் என் ஆம்படையான். வெள்ளம் கொண்டு போயிடுத்து. யாரு போட்டா கொள்ளி. தேகம் கூட கிடைக்கல. இத்தன வருஷம் வேத சம்ரக்ஷணைல த்வேஷம்தான் கத்துண்டதுன்னா, அந்த வேதம் நாசமா போகட்டும்.  ஆம்பளப் பையனா பொறந்துட்டான். இல்லைன்னா என்ன மாதிரி ஒரு மொட்டச்சியா வீட்டோட இருக்கலாம்பா. விதிச்ச வரைக்கும் வீடு, இல்லைன்னா வீதின்னு. அவன் படிக்கப் போறான் அவ்வளவுதான்’ என்றாள்.

அன்றோடு பேச்சு அறுந்ததோடன்றி ஆசைப்படியே விசு கொள்ளி வைக்க முடியாத படிக்கு, அவன் படிப்பு முடியுமுன்னரே போய்ச் சேர்ந்தார். படிப்பு முடிந்து திரும்பி, சென்னையில் ப்ராக்டிஸ் ஆரம்பித்தான் விசு. அன்று வந்தவள்தான் ராஜி. இன்று வரை அவளின் ராஜ்ஜியம்தான். அவளைச் சுற்றியேதான் இந்தக் குடும்பம். என்றைக்காவது அவள் கொஞ்ச நேரம் சுணங்கியிருந்தால் வீடு சகிக்காது. அன்பால் கட்டியிருந்தாள் அனைவரையும். இதோ, விசுவின் பேரன் க்ருஷ்ணாவுக்கு கலியாணமும் அவள் டைரக்‌ஷனில்தான்.

தொடரும்...

78 comments:

பிரபாகர் said...

அட்டண்டன்ஸ் போட்டுடறேன்... இதோ படிக்கிறேன் அய்யா!

பிரபாகர்...

பழமைபேசி said...

வீட்டுக்குப் போயித்தான் படிக்கணும்... சேது அய்யாவுக்கு வழி விட்டுக்குறேன்...

vasu balaji said...

ஆஹா. எல்லாரும் எஸ்ஸாயிட்டே போறாய்ங்களே.

Subankan said...

நான் படிச்சுட்டேன் சார் ;)

அருமை. கதை நகரும் களம் நான் திரைப்படங்களிலும், கதைகளிலும் மட்டுமே அறிந்தது. அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்

Unknown said...

சார். அருமை சார்.

உணரக்கூடிய வலி. இது மாதிரி சொல்லி அழுததைப் பார்த்திருக்கிறேன்.

25 வருஷத்துக்கு முன்னாடி அனுராதா ரமணன், இதே மாதிரி எழுதியிருப்பாங்க.

நல்ல இருக்கு சார். மேலும் தொடுருங்க.

Unknown said...

பழமையாரின் பெருந்தன்மைக்கு மனம்கனிந்த நன்றி.

கலகலப்ரியா said...

செம ஃப்ளோ சார்...

ரொம்ப அருமையா இருக்கு...

பிரபாகர் said...

ஆஹா... என்ன அழகாய் விவரித்து எழுதியிருக்கிறீர்கள்! அருமை அய்யா. பூக்கட்டுதலில் ஆரம்பித்து அந்த குடும்பத்தையே கட்டியாளும் ராஜி... ஆர்வமாய் அடுத்த பாகத்திற்கு.

பிரபாகர்...

பிரபாகர் said...

படிச்சிட்டு நிறைவாய் சந்தோஷமாய் ஓட்டுக்களைப் போட்டிருக்கிறேன். உங்களிடமிருந்து எழுதுவது எப்படி என சிறிது சிறிதாய் கற்றுக்கொண்டிருக்கிறேன்..

பிரபாகர்...

R. Jagannathan said...

50 வருஷத்துக்கு முந்தைய கதையானாலும், ப்ராஹ்மணன் என்பதாலும், எனக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாலும் என்னால் உணர்ந்து படிக்கமுடிகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலைக்கு இந்த கதை ஒத்துவருமா என்பது சந்தேகமே. நடைக்கும், பாஷைக்கும் பாராட்டுக்கள். - ஜெகன்னாதன்

Mahi_Granny said...

கேரக்ட்டர் வகையோ என்று நினைத்தேன். தொடருங்கள்.ராஜி நல்ல பாத்திரபடைப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல இருக்கு Bala

Radhakrishnan said...

முதல் அத்தியாயத்திலேயே முழு கதையும் வந்துவிட்டதே. இனி கதையின் போக்கு எப்படி இருக்கும், என்னவாகும் என்பது மிகவும் சுவாரஸ்யமான விசயம். மொழி விளையாடி இருக்கிறது. பாத்திரங்கள் மனதுக்குள் அமர்ந்து கொள்கிறார்கள். அருமை ஐயா.

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Very Nice beginning Bala Sir.

Waiting for the next chapter soon.

Thanks

நசரேயன் said...

வீட்டுக்குப் போயித்தான் படிக்கணும்

Chitra said...

முதல் பாகத்திலேயே எத்தனை சம்பவங்கள்..... விறுவிறுப்பாக போகுதுங்க...

பழமைபேசி said...

@வானம்பாடிகள்

அண்ணனின் புதிய அட்டகாசம், அட்டகாசம்!!!

பவள சங்கரி said...

மிகப் பழமையான சம்பவங்களாக இருந்தாலும்......ராஜியின் எங்கும் நீக்கமற நிறைந்தவளாய் நிற்கும் பாங்கு, அன்பால் கட்டி வைக்கும் அழகு...நல்ல குணசித்திரம்.........

ரோஸ்விக் said...

கலக்கல்.. நிறைய புது வார்த்தைகள் கத்துக்க முடிஞ்சது... வேகமாப் படிக்கும்போது அந்த பிராமண வார்த்தைகள் கொஞ்சம் இடறத்தான் செய்தது...
but nice :-)

cheena (சீனா) said...

அன்பின் பாலா

பன்முகம் காட்டுகிறீர்கள் - கேரக்டர் என நினைத்துப் படித்தேன் - கதை மனதில் அப்படியே நிற்கிறது. விசு - ராஜி . பூ கட்டும் அழகு - அக்கா அருமைத் தம்பியினை அரவணைத்துச் செல்லும் பாங்கு. அவளின் விதி - அப்பாவினையே எதிர்க்கும் உறுதி - அழகான வாதம் - வீம்பு பிடித்த அப்பா என்றும் அப்பாதான் என இன்றும் நினைக்கும் பாசம் - விசு பழைய நினைவுகளை அசை போடும் அழகு - இனிய மொழி - அதனையும் பாலாவின் பேனாவில் இயல்பாய் நயாகரா அருவி போல கொட்டுகிறதே ! பாலா இவ்வளவு திறமையும் ஏன் வெளிப்படுத்த வில்லை பாலா ....

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே...ம்ம்ம்...

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு சார்!
அடுத்த பதிவுக்கு வெய்டிங்..

Unknown said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

எல் கே said...

ஒரு கணம் என் கண் முன் சில உறவுகள் வந்து போக வைத்து விட்டீர்கள் அய்யா

எல் கே said...

//எனக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாலும் என்னால் உணர்ந்து படிக்கமுடிகிற///

உங்களில் பாதிதான் எனக்கு வயது . இன்றைய சூழ்நிலைக்கு ஒத்து வராது என்றாலும், அவரது நடை கட்டி போடுகிறது

சைவகொத்துப்பரோட்டா said...

தொடருங்கள்,காத்திருக்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையா இருக்கு...

சூர்யா ௧ண்ணன் said...

தலைவா! அருமை தலைவா! நடை சொப்பரா வந்திருக்கு,, கலக்கல் தலைவா!..

Unknown said...

அருமையா இருக்கு சார்.. ஒரே மூச்சில படிச்சேன். தொடருங்க..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ராஜியை அப்படியே கண் முன்னே நிறுத்தியிருக்கீங்க..

அக்ரஹாரத்து பாசையும் நல்லா இருக்குங்க.

மணிஜி said...

சொல்றதுக்கு இல்லண்ணா..நேர்ல பார்க்கும்போது..கை கொடுக்கிறேன்

ஸ்ரீராம். said...

அருமையான ஆரம்பம்.. தொடருங்கள். வர்ணனைகளும் சம்பாஷணைகளும் கலக்கலாக எழுதுகிறீர்கள்.,

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஐயா, தற்செயலாக ராஜி-1 ஐச் சந்தித்துப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவள் போல அந்தக் காலத்தில், அந்த குறிப்பிட்ட சமூகத்தில், எவ்வளவு பெண்கள், மலரும் முன்பே கருகிப் போனார்களோ, இனிய இல் வாழ்க்கையை அனுபவிக்காமல், ஒதிக்கி வைத்து அலங்கோலம் செய்யப்பட்டார்களோ! நினைக்கவே மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
இருப்பினும் இந்தக் கதையில் வரும் ராஜி, துணிச்சலாக தன் தந்தையுடன் பேசி, தன் தம்பி மேல் அன்பு செலுத்தி, அவனை சமுதாயத்திற்கு சேவை செய்யும் டாக்டர் ஆக்கியுள்ளது பாராட்டும் படியான செயலாகவே உள்ளது. தொடர்ந்து படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

சுபத்ரா said...

அழகான நடை.. எதார்த்தமான flow. தொடரை எதிர்பார்த்து..

Anisha Yunus said...

great start sir, get going :))

ராஜ நடராஜன் said...

எப்படி உங்களால் மட்டும் இத்தனை கேரக்டர்களை சொல்ல இயல முடிகிறது!!வரம்தான்.

ராஜ நடராஜன் said...

//வீட்டுக்குப் போயித்தான் படிக்கணும்//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

பின்னூட்ட உரிமையாளர் பழமையா?நசரா?

இந்த காபி,டூத் பேஸ்ட் வேலையெல்லாம் வேண்டாம் நசரு.அதுக்கு உங்க ம்ம்ம்மே பரவாயில்லை:)

vasu balaji said...

@Subankan

நன்றி சுபாங்கன்

vasu balaji said...

@Sethu
நன்றி சேது

vasu balaji said...

@கலகலப்ரியா

சந்தோஷமா இருக்கும்மா::D

vasu balaji said...

@பிரபாகர்

நன்றி பிரபா

vasu balaji said...

@Jagannathan

நன்றி சார்.

vasu balaji said...

@Mahi_Granny

நன்றிங்க

vasu balaji said...

@T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி சார்.

vasu balaji said...

@V.Radhakrishnan

நன்றிங்க ராதாகிருஷ்ணன்

vasu balaji said...

@Arul Senapathi

Thanks Arul

vasu balaji said...

@நசரேயன்

ம்கும். கப்பல் புடிச்சி இன்னும் வீடு போய் சேரலையாக்கு

vasu balaji said...

@Chitra

நன்றிங்க சித்ரா

vasu balaji said...

@பழமைபேசி

நன்றிங்க பழமை

vasu balaji said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றிங்கம்மா

vasu balaji said...

@ரோஸ்விக்

நன்றி ரோஸ்விக்

vasu balaji said...

@cheena (சீனா)

நன்றிங்க சீனா

vasu balaji said...

@ஆரூரன் விசுவநாதன்

நன்றிங்ணா.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

vasu balaji said...

@Balaji saravana

நன்றிங்க பாலாஜி சரவணன்

vasu balaji said...

@sweatha

நன்றிங்க

vasu balaji said...

@LK

நன்றி LK

vasu balaji said...

@சைவகொத்துப்பரோட்டா

நன்றிங்க

vasu balaji said...

@வெறும்பய

நன்றிங்க

vasu balaji said...

@சூர்யா ௧ண்ணன்

நன்றி தலைவா

vasu balaji said...

@முகிலன்

நன்றி முகிலன்

vasu balaji said...

@ச.செந்தில்வேலன் / S.Senthilvelan

நன்றிங்க செந்தில்

vasu balaji said...

@மணிஜீ......

அண்ணா தாங்ஸ்

vasu balaji said...

@ஸ்ரீராம்.

நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

@VAI. GOPALAKRISHNAN

வாங்க சார்.

vasu balaji said...

@சுபத்ரா

நன்றிங்கம்மா

vasu balaji said...

@அன்னு

Thank you

vasu balaji said...

@ராஜ நடராஜன்

நன்றிண்ணோவ்:))

vasu balaji said...

@ராஜ நடராஜன்

அப்புடிச் சொல்லுங்க. ஆனா அதுக்கும் காபிரைட் ஆரூரன்:))

காமராஜ் said...

பந்தங்கள் சேத்து நெய்த உறவு. தன்னை மெழுகாக்கிக்கொண்ட இன்னொரு தாய்.வந்து வீடு முழுக்க குறுக்கும் நெடுக்குமாக அலைகிற காட்சி மிஞ்சுகிறது. அவ்வப்போது விம்மி விழும் ஒரு சொட்டு உப்புக்கரைசல்.இந்த எழுத்துக்கும் ராஜிக்கும்.

தாராபுரத்தான் said...

அணண் வணக்கம்

ராஜ நடராஜன் said...

தமிழ்மண பின்னூட்ட பகுதியில் குண்டா தெரியறேங்களேன்னு மீண்டும் திரும்ப வந்தேன்:)

vasu balaji said...

@காமராஜ்

நன்றி காமராஜ்

vasu balaji said...

@தாராபுரத்தான்

நன்றிண்ணே.

vasu balaji said...

@ராஜ நடராஜன்

hi hi. 40 பின்னூட்டத்துக்கு நன்றி சொல்ல வேணாமா:))

மாதேவி said...

அருமை.
பழைய நாவல்கள் படிக்கும் உணர்வு மேலோங்கி நிற்கிறது.
வாழ்த்துகள்.

vinthaimanithan said...

ராஜி கட்டும் மல்லிகைச்சரம் போலவே வார்த்தைகளை அடுக்கி அழகான மாலையாய்.... இரண்டாம் பாகம் படிச்சிட்டு பரக்க பரக்க ஓடியாந்து படிச்சேன்!

வல்லிசிம்ஹன் said...

தொடுக்க ஆரம்பித்த மல்லிகை மாலை ...வேணி...போலக் கதையும் மணக்கிறது.மிகவும் நன்றாக இருக்கிறது நடையும், வசனமும்.வாழ்த்துகள்
பாலா ஜி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடேங்கப்பா..அந்த காலத்தில ‘மிதிலா விலாஸ்’, ‘ நாயக்கர் மக்கள்’ படிச்சா போல இருக்கு..

திப்பிராஜபுரத்து ராஜி மாமியை
அந்த காலத்து விகடன்ல, கோபுலு படத்தில பார்த்தா மாதிரி இருக்கு!!