Thursday, October 28, 2010

ஃபாரின் ரிட்டன் பதிவரின் பரபரப்பு பேட்டி


(பதிவர் சிங்கம், சமூக ஆர்வலர், தில்லு தொர எங்கள் அண்ணன் கதிர் வெற்றிகரமாக கொழும்பு சென்று வந்திருக்கிறார். இது பற்றி அவருக்கே தெரியாமல் நடந்த உரையாடலைப் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். உரையாடலில் பங்கேற்பவர்கள் பழமை, ஆரூரன், பாலாசி அப்புறம்.. அப்புறம்..நானில்லாமலா?)

வா.பா.:வணக்கம் மேயர் சார் 

கதிர்: ‘ஆய் போவான்’


ஆருரன்: அட! அதுக்கென்னங் சொல்லிகிட்டு. போய்ட்டு வாங்க.


வா. பா: அட இது அது இல்லீங்க மொதலாளீ. சிங்களத்துல வணக்கம் சொல்றாராமா. 

ஆருரன்: அட கண்றாவியே.

வா.பா. சரிங் சார். உங்களுக்கு ரெண்டு நாட்டுக்கு போக வாய்ப்பு கிடைச்சது. அந்த இன்னோரு நாட்டுக்கு ஏன் போக விருப்பமில்லைன்னு தெரியும். இதுதான் உங்க முதல் வெளிநாட்டு பயணமா?

கதிர்: இந்த வில்லங்கம்தானே வேணாங்கறது. ஆமாங்க! இதான் முதல் பயணம்.

வா.பா.:ச்சும்மா தில்லா சிங்கம் மாதிரி போய்ட்டு வந்திருகீங்க. பாராட்டுகள்.

பாலாசி: இங்காருங்க. நீங்க திரும்ப திரும்ப ஏன் சிங்கம் சிங்கம்னு சொல்றீங்கன்னு புரியுது. பின்பக்கம் மட்டும் முடியிருக்குன்னு எங்க மேயரை கிண்டல் பண்றது நல்லால்ல.

பழமை: சரிங் மாப்பு! மீனம்பாக்கம் விமான நிலையத்துல காபி சாப்பிட்டீங்களா?

கதிர்: அட இல்லைங்களே ஏன்?

பாலாசி: அந்த காபிக் கடை பொண்ணு உங்களுக்கும் கலியாணமாயிருச்சான்னு பழமை பேசிச்சான்னு ஒரு பொறாமைதான் வேற என்ன?

பழமை: இஃகி இஃகி.

கதிர்: இல்லைங்க. அந்த விடியகாத்தால அம்பது வயசிருக்கும் ஒரு அம்முணி, தரைய தொடைச்சிகிட்டிருந்தது வந்து ‘அண்ணே! கொஞ்சம் நவுந்து நில்லுன்னிச்சி’ அவ்வ்வ்

ஆரூரன்: ஏன்? நான் அண்ணனா? யூத்துன்னு சண்டைக்கு போலாம்ல. எங்கள மட்டும் கலாய்க்கிறீங்க

வா.பா: நல்லா குடுக்குறாருப்பா அகுடியா. அது காதுல ‘ஊத்து’ன்னு விழப்போய் பினாயில் தண்ணிய ஊத்தவா?

பாலாசி: அத விடுங்க! விமானத்துல பறந்த முதல் அனுபவம் எப்படி இருந்திச்சி.

கதிர்: அட! அந்த கண்றாவிய ஏன் கேக்குற. நம்ம ஊர் பொருட்காட்சில ஜயண்ட்வீல்ல சுத்தினாலே கொஞ்ச நேரம் வானத்தில இருந்திருக்கலாம். இங்க புறப்படப் போகுது பெல்ட கட்டுன்னாங்க. அதுங்கூட மல்லுக் கட்றப்பவே எறங்கப் போறோம் திரும்பக் கட்டுங்கறாங்க.

பாலாசி: அய்ய! அப்படின்னா உண்டிவில்ல கல்ல வச்சி எறிஞ்சாமாதிரின்னு சொல்லுங்க. அந்த சித்த நேரத்துல டீ வேணும், தண்ணி வேணும்னு கஸ்ஸ்ஸ்ஸிஞ்சீங்களா?

கதிர்: அதெல்லாம் உன்ன மாதிரி சில்லுவண்டு பண்றவேல. நான் பெல்ட் எப்படி கட்றதுன்னு மல்லுக்கட்றதுக்குள்ள ஊரு வந்திருச்சிங்கறேன்.

ஆரூரன்: நாட்டாமை! எனக்கு கம்ப ராமாயணத்துல
'முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை;  இந்த பாட்டு கவனம் வருதுங்க.


கதிர்: அடியே! காலைல நாலு மணிக்கு முழிப்பு வந்து டீ குடிக்க போனா நாய் தொறத்தும்னு பயந்து அஞ்சரை வரைக்கும், கண்டதையும் படிச்சி இடுகை தேத்தினா இதுவும் கவனம் வரும். இன்னும் என்னல்லாமோ வரும். அடிங்..

பாலாசி:அட! இதானா விஷயம். நாங்கூட மொதலாளி செந்தமிழ் மாநாட்டுக்கப்புறம் தமிழ்க்கடல்ல முங்கி முத்தெடுக்குறாருன்னுல்ல நினைச்சிட்டேன்.

வா.பா. அட சிங்கத்த பேச விடுங்கப்பா. நீங்க சொல்லுங்கண்ணே. கொழும்புல வரவேற்க யாரு வந்திருந்தாங்க.

கதிர்: ராஜபக்ஸே

வா.பா: என்னாது? இதெல்லாம் ஓவர் பீலா.

கதிர்: அட வெளிய வந்ததில இருந்து எங்க போனாலும் கையை கூப்பிக்கிட்டு அந்தாளு ஃப்ளெக்ஸ் பேனர்னு சொல்ல வந்தங்க. ஹி ஹி..

பழமை: அங்க உங்க அனுபவத்த சொல்லுங் மாப்பு.

கதிர்: ஹி ஹி. என்ன பாத்தா எப்புடி தெரியுது. அத வச்சி நாலு இடுகை தேத்தமாட்டமா.

பழமை: அடங்கொன்னியா!ச்சேரி ச்சேரி. அங்கால சனங்களோட கதைக்கிறதில உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லைதானே.

கதிர்: அதெல்லாம் ஒன்னுமில்லீங்.

வா.பா. தோடா! யாரோ  ‘கதிரை’ ரெண்டு போடுங்கோன்னா அய்யாங் நானில்லைன்னு கட்டில் கீழ போய் ஒளிஞ்சிகிட்டு, அப்புறம் கதிரைன்னா நாற்காலின்னு சமாதானப் படுத்தி வெளிய கொண்டு வரதுக்குள்ள மூச்சு முட்டிப்போச்சுன்னு கேள்வி. பந்தாவப் பாரு.

பழமை: ஊரெல்லாம் வடிவாப்பார்த்து கெனக்க படமெல்லாம் புடிச்சீங்களா?

கதிர்: அட நீங்க வேற. வானம்பாடி பஞ்சாப்ல படம் புடிச்சி மாட்டினா மாதிரி நான் மாட்டவா? மரம் மட்டைய புடிக்கிறதுன்னாலும் காக்கா குருவி இல்லாத மாதர பார்த்துதான் புடிச்சேன். அப்புறம் சிங்களக் காக்காவ புடிச்சான்னு வில்லங்கம் வந்தா?

ஆரூரன்: அது சரிதாங் மாப்பு. அப்புறம் நாட்டாமையவே கைய புடிச்சி இளுத்தியான்னு ஒரு நாட்டாமை வந்தா வில்லங்கம்தானுங்களே. சரி! எந்தெந்த ஊருக்கெல்லாம் போனீங்க.

பாலாசி: என்னது? ஊருக்கெல்லாம் வேற போனாரா? ரயில்ல போகலையே?

கதிர்: ஏன் ராசா?


பாலாசி: இல்லீங். ரயில்ல ஏறினமா, படுத்தமா, இறங்கி போனமான்னு இல்லாம வடக்கால படுத்தேன், கிழக்கால போச்சுது, மேக்கால இறங்கினாலும் மனசு குபேர மூலைன்னு நினைக்குதுன்னு வாஸ்து கவிதை எழுதுனீங்கன்னா பின்னூட்டம் போடணும்ல. அதான். 


ஆரூரன்: நீங்க சொல்லுங்க. அந்தூருல யாரும் நாட்டாமைக்கு கூப்புட்டாங்களா?

கதிர்: அட ஆமாங். சொம்பு எங்கீங்னு கேட்டனுங். சொம்பெல்லாம் கெடயாதாமா. யாழ்ப்பாணம் தேங்கா குடுவைதான்னாங்க. நாட்டாமையே இல்லாம வேணும்னாலும் தீர்ப்பு சொல்லலாம் நசுங்குன சொம்பில்லாம சொல்லுற தீர்ப்பு செல்லாதுன்னு சொல்லிபோட்டனுங் கறாரா.

ஆரூரன்: அப்புடி போடு. அதான் நாட்டாம. அது சரிங் மாப்பு! ஃபேஸ் ஃப்ரெஸ்ஸா இருந்தாலும் கண்ணுல ஒரு பீதி தெரியுதே ஏன்?

வா.பா.: அதொண்ணுமில்லீங் மொதலாளி. புரட்டாசி முச்சூடும் கறி திங்காம காயப் போட்டதுல அவுங்கூட்டு கோழிக்கெல்லாம் கொண்டாட்டமா போயிடுச்சாம். ஐப்பசி வரட்டும்டி இருக்குன்னு இருந்தாரு. அது இந்த பயணத்தால தப்பிச்சிருச்சி. இப்புடி முழிச்சா வேப்பிலை அடிச்சி கெடாவே வெட்டுவாங்கன்னு சீன் போடுது பயபுள்ள.

கதிர்: ஏண்டி பேசமாட்டீங்க. ஊட்டுக்கு வந்ததும் வராததுமா பாப்பா வந்து அப்பா தமிழ் சொல்லிக் குடுங்கப்பான்னு அதிசயமா கேட்டதும் ஆடிப்போனது எனக்குல்ல தெரியும். ச்செரி ச்செரி. எனக்கு ஒரே ஜெட்லாக்கா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன். (நாள பின்ன அந்த மாப்புக்கு மட்டும் ஜெட்லாக் வருது. இந்த மாப்புக்கு வரலைன்னு மட்டமா நினைச்சிறப்படாதில்ல)

வா.பா: சரிங். நீங்க ரெஸ்ட் எடுங்க. ஆனா ஒரு விஷயம். இன்னும் எத்தன நாட்டுக்கு போனாலும் சரி. சூட்கேசுல ஒட்டின ஒரு ஸ்டிக்கர் கூட பிய்க்காம சூட்கேசே மறையற வரைக்கும் அப்படியே வச்சிருந்து டமிலர் பண்பாட்டைக் காப்பாத்தணும் சரியா?

பாலாசி: அண்ணா! ‘நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் இப்போது நாடு கடந்தும்’னு மாத்தணுங்ணா.

வா.பா: கூடிய சீக்கிரம் கோபால் பல்பொடியாக வாழ்த்துகள்

பழமை: அதென்னங் பாலாண்ணே.

வா.பா.:ஒன்னுமில்லிங்க. சிங்கப்பூர் மலேசியா போய்ட்டு வந்தார்னா, கோபால் பல்பொடி மாதிரியே இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரசித்தி பெற்றன்னு சொல்லலாம்ல.

பழமை: அஃகக்ஃகா


ஆரூரன்: ச்சேரி. அப்ப நீங்கள்ளாம் கெளம்புங்கண்ணா. நானு இப்புடியே இவர ஒரு வாக்கிங் கூட்டிட்டு போய்ட்டு ஈரோடு கதிரை ‘பீரோடு கதிர்’ ஆக்கி ஊட்ல உட்டுட்டு போறேன்.

பழமை, வா.பா. பாலாசி: வாரமுங். வணக்கம்.

கதிர்: ‘ஆய் போவான்’!!!!!!
~~~~/\~~~~

32 comments:

ஈரோடு கதிர் said...

மூனு நாளா ஒன்னும் பிரச்சனையில்லை...

ங்கொய்யாலே, ஞாயித்துக்கெழம காத்தால 4 மணிக்கு வண்டியேற வந்தா பெல்ட், ஷூ எல்லாம் கழட்டி ஸ்கேன் பண்ணனும்ட்டான்...

ஒரு வழியா அதையெல்லாம் பாத்து பகுமானமா வாங்கிட்டு வந்தா டிக்கெட்ட வாங்கி பாதி கிழிச்சுப்போட்டு, ஜீரியசா சிரிச்சிக்கிட்டே ”ஆயு போவான்” - ங்குது படுபாவிப் பய....

vasu balaji said...

@ஈரோடு கதிர்

அட! ஸ்பைஸ்ஜெட்ல ரூ 999* கொழும்புக்குன்னு போட்டிருக்கானே. கிட்னி ஸ்கேன் எடுக்க ரூ 8000 ஆவுமே. இங்க போய்ட்டு ஒரு காபி வாங்கிட்டு வந்துடலாம் போலயே.

ஈரோடு கதிர் said...

@@ வானம்பாடி

அண்ணே அந்த *-அ நல்லா கண்ணாடிய தொடைச்சுப்போட்டு பாருங்கண்ணே...

vasu balaji said...

ஹி ஹி. அங்க மட்டும் என்னாவாம். ஸ்கேனுக்குதான் அந்தகாசு. அப்புறம் அதுக்கு குடுக்குற சூசு, ஆட்டோ லொட்டு லொசுக்கு எல்லாம் சேர்த்தாலும் லாபந்தேன்:))

vasu balaji said...

@ஈரோடு கதிர்

மாப்பு ஒரு டவுட்டு! மொத மொத ஏரோப்ளேன் விட்டப்ப அது மேல ஏறுறத பார்த்து ஏரோப்ளேன்னு பேரு வச்சிருக்கலாம். அது இறங்குன ஊருல இறங்கோப்ளேன்னு ஏன் வைக்கல?

ஈரோடு கதிர் said...

அடச்சே

கடை காத்து வாங்குது

நாமலே மாத்தி எம்புட்டு நேரம்தான் போணி பண்றது

நாளைக்கு வாரேன்

பெட்டர் லக் நெக்ஸ்ட் ”ட்ரிப்”

Radhakrishnan said...

ஹா ஹா!

விஜி said...

வாய் விட்டு சிரிச்சுட்டேன் :))) ஆய் போயோன், வாஸ்து கவிதை, கேப்ஷன் :))))))))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல் .. ஹா.. ஹா..

Unknown said...

அட்டகாசம் சார்.

"(நாள பின்ன அந்த மாப்புக்கு மட்டும் ஜெட்லாக் வருது. இந்த மாப்புக்கு வரலைன்னு மட்டமா நினைச்சிறப்படாதில்ல)"
அதானே!

Paleo God said...

எனக்கு ஒரே ஜெட்லாக்கா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன். //

இது சூப்பர்! :)

// ஜீரியசா சிரிச்சிக்கிட்டே ”ஆயு போவான்” - ங்குது படுபாவிப் பய..//

போனானா இல்லையான்னு சீக்கிறம் இடுகை போட்டு சொல்லுங்க! :))

Unknown said...

அடுத்த தடவ கதிர் அந்த ஊர்க்குப் போனா, ஆட்டோ வுல உக்காத்தி வைச்சு நேரா கதிர்காமர காமிச்சுட்டு, இனி துடுப்பு போட்டு ஊர் போய்ச்சேருநு அனுப்பி வைக்கப் போறாங்க.

Unknown said...

கதிர்காமர் - முருகன் கோவில் இருக்கா?

Thamira said...

ஹிஹி.. என்னாங்க இப்பிடி கலாய்க்கிறீங்க. கதிர் டோட்டல் டேமேஜ்.!

Mahi_Granny said...

சூட்கேசுல ஒட்டின ஒரு ஸ்டிக்கர் கூட பிய்க்காம சூட்கேசே மறையற வரைக்கும் அப்படியே வச்சிருந்து டமிலர் பண்பாட்டைக் காப்பாத்தணும் சரியா?. கோபால் பல்பொடி மேட்டரும் சூப்பர். சுவையான பேட்டி

பழமைபேசி said...

@Sethu

மெய்க்குணகம்

http://maniyinpakkam.blogspot.com/2010/07/19.html

பழமைபேசி said...

மாப்பு,

ஓமந்தையில கிடுகு விக்கிற சிங்களப் பெட்டை உங்களைத் துரத்திக் கொண்டு வந்த கதையச் சொல்லலியே நீங்கள்? ஏன்??

கொழும்புல எத்தனை நாள் நிண்ட நீங்கள்? அங்கனைக்குள்ள மரம் ந்டுறாங்களா, இல்லையாண்டெல்லாம் அவதானிக்கலையே? இந்த நெகிழி கெனக்கப் பாவிக்கிறாய்ங்களென்ன?? அவிகளுக்கு எதும் சொல்லலையே??

Unknown said...

"மெய்க்குணகம்"

பழமை! இப்பிடி கலக்கிறீங்க. நான் கூட ஏதோ பானகம் கொடுக்க கூப்படரீங்கனு போய்ப் பார்த்தா இம்புட்டு விளக்கமா. அப்பிடி போடுங்க.

க ரா said...

கடுமையான வயித்து வலிக்கு என்ன மருந்து சார்.. இத கூகுள் ரீடர்ல படிச்சதுலேந்து சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிகிடக்கு.. எப்படிதான் இப்படி யோசிக்கிறீங்க சார்...ஆய் போவோன் சான்ஸே இல்ல.. கதிர் அண்ணா இனிமே பிளைட்ன்னு கூட எழுதி வாசிக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:))))))))))))

ஈரோடு கதிர் said...

ஆனாலும்

||புனைவு, பேட்டி||
.......ன்னு லேபிள் போட ஒரு தில்லு வேணும்முங்க

Anonymous said...

Kathir Anne,Pakura idamellam illa witta poraka pora kolandaum modalla rajapakshe mogathula wilikanumnu waithukulaye cutout waipanga. apadi iruku nelama...........
Analum nega nalapadiya nadu poi sendaduku walthukkal

பிரபாகர் said...

இதப் படிச்ச எனக்கு பேஸ் லாக் ஆயிடுச்சி... (சிரிச்சி சுளுக்கிடுச்சின்னு சொல்ல்றோமுங்க!...)

பாஸ்போர்ட் வந்துடுச்சாங்கய்யா? சிங்கை ட்ரிப் ஒன்னு ஏற்பாடு பண்ணிடுவோம்...

பிரபாகர்...

க.பாலாசி said...

//பதிவரின் பரபரப்பு பேட்டி"//

மறுபடியுமா?????!!!!!!!!!!!!!

க.பாலாசி said...

//பின்பக்கம் மட்டும் முடியிருக்குன்னு எங்க மேயரை கிண்டல் பண்றது நல்லால்ல.//

இது முற்றிலும் புனைவுதானே... (பின்பக்கம் முடியிருக்கா?)

க.பாலாசி said...

//ஆரூரன்: ஏன்? நான் அண்ணனா? யூத்துன்னு சண்டைக்கு போலாம்ல. எங்கள மட்டும் கலாய்க்கிறீங்க//

இந்த லொள்ளுதானே வேணாங்கிறது...அந்தம்மாவுக்கு அவர பார்க்க எப்டி தோணுச்சோ...

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு கதிர்- பீரோடு கதிர் அட நீங்க கவிஞர் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

சார்,கதிர் சார்,பரபரப்பு பேட்டின்னா ஏதாவது பிரச்சனை பண்ணனும்,யாரையாவது திட்டனும்,போங்க ஸார்,சப்புன்னு இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

ஜெட்லாக் அப்படின்னு அடிக்கடி சொன்னா ஃபாரீன் போன ஆளுன்னு நினைப்பாங்களா?நான் எங்க ஆஃபீஸ்ல போய் ட்ரை பண்றேன்

a said...

பாலா சார் : சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிது...........

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி

தமிழ்நதி said...

”கதிரை ரெண்டு போடுங்கோ” வாசிச்சு சிரிப்பாக் கிடந்துது. போட்டிருக்கலாம் அதுக்குள்ள தப்பி ஓடீட்டார்:)

கொஞ்ச நாட்களுக்கு முதல் எண்டா அவன் எங்களைப் பாத்து ”ஆய்”போனான். இப்ப நாங்கள் அவனைப் பாத்து ”ஆய்”போறம். எல்லாம் தலைகீழாப் போச்சுது. ஆய் போனா என்ன... இனி பேய்தான் போனா என்ன? சும்மா அங்கலாய்க்கிறன். ஒண்டும் feel பண்ணவேண்டாம்.