Sunday, October 10, 2010

மத்தாப் பூ...


ஒரு ஜோக் உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். கார்ப்பரேஷன்ல இருந்து ஒருத்தரு நெடுஞ்சாலையில் ஒரு ஒரு குழியா ஓரமா தோண்டிட்டு போய்ட்டிருந்தாராம். பின்னாடியே ஒருத்தரு அந்த மண்ணைத் தள்ளி மூடிட்டு போய்ட்டேயிருந்தாராம். கேள்வி கேக்கன்னே பொறந்த நம்மள மாதிரி ஒரு கேசு கேட்டுச்சாம். ஏன்யா? அந்தாளு அவ்ளோ கஷ்டப்பட்டு தோண்டுறாரு. நீ மூடிட்டே போய்க்கிருக்கியேன்னு. இவரு சொன்னாராம். நானும் கார்ப்பரேஷன் ஆளுதாங்க. அவருக்கு தோண்டற வேலை. எனக்கு மூடுற வேலை. நடுவுல மரக்கன்னு நடுறவரு இன்னைக்கு லீவுன்னு. 

இந்த படத்தைப் பாருங்க. பார்க்க படிக்க சிரிப்பா இருக்கலாம். ஆனா, அதுதான் டூட்டின்னு ஆனப்புறம் சரி மழை பெய்யுது இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோன்னா சொல்ல முடியும்? ஆனாலும் தண்ணீர் சேமிப்புன்னு கெடந்து அடிச்சிகிட்டு இப்படி வேஸ்ட் பண்றது நியாயமேயில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அக்டோபர் வந்தாச்சு. மத்திய, மாநில அரசு, கம்பெனிகள் இன்ன பிற நிறுவனங்களில் போனஸ் வரும் நேரம். ஆட்டயப் போட தயாராகிவிட்டார்கள் வியாபாரிகள். பூண்டு கிலோ 200ரூ. அரிசி, பருப்பு கதை கேட்கவே வேண்டாம். சர்க்கரை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் விளம்பரங்கள் பிரமிப்பாயிருக்கின்றன. 3 வைர வளையல் ஒன்று ரூ 42,000 மட்ட்ட்ட்டுமே என்று வாங்கினால் ஒரு வளையல் ஃப்ரீ. எலக்ட்ரானிக் பொருட்கள் கூறு கட்டி விற்பனைக்குத் தயாராயிருக்கிறது. பண்டிகை காலத்தையொட்டி சேதாரம் 8% மட்டுமாம். மற்ற நாட்களில் 11-13% சேதாரம் பண்டிகையில் மட்டும் எப்படி 8 சதவீதமாக குறைகிறது. பொழைச்சிப் போகட்டும் என்று தர்மம் செய்கிறார்களா என்ன?
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அமெரிக்காவில் மிசோரியைச் சேர்ந்த எர்னஸ்ட் புல்லன் என்ற 57 வயதானவருக்கு சுரண்டல் லாட்டரிப் பைத்தியமாம். ஆக்ஸ்ட் மாதம் ரூ5 கோடியும் செப்டம்பர் மாதம் ரூ10 கோடியும் பரிசாகக் கிடைத்ததாம். எட்டு வருடம் முன்பும் இப்படி கிடைத்ததாம். இதனாலெல்லாம் என் கனவு நனவாகிவிட்டதாகச் சொல்லமாட்டேன். தொடர்ந்து லாட்டரிச் சீட்டு வாங்குவேன் என்ற்கிறாராம். ஏன் சொல்லமாட்டாரு. ஒரு நம்பருல வடை போனவனக் கேட்டா தெரியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இயற்கையின் கணக்கே தனி. பிறக்கும்போதே முன்னிரு கால்கள் மட்டுமே இருந்த பன்றிக்குட்டி தானே முன்னிரு கால்களால் மட்டுமே தலைகீழாக நடக்கப் பழகிக் கொண்டதாம். இதை வித்தைக் காட்டி மனுசப் பய காசு தேத்துறானாம். இனிமே யாரையும் பன்னின்னெல்லாம் பட்டுன்னு வஞ்சிரப்படாது. வேணும்னா மனுசான்னு கெட்ட வார்த்தையில திட்டிக்கலாம். ~~~~~~~~~~~~~~~~~~~~
திருச்சூரின் வறுமைப் பகுதியிலிருந்து வந்த பெருந்தனக்காரன் இவன். பார்வையாளர்கள், ஜட்ஜஸ் அத்தனைப் பேரையும் தன் சுட்டித்தனத்தால் கவர்ந்தவன். பேசும்போது ஒரு குரலும் பாடுகையில் எங்கிருந்தோ தேவகானமாக்கும் குரலுமாய் கலக்குகிறான் பொடியன். பெரிய பாடகர்களே பாடலின் இடையே வரும் கமகத்தை கரோக்கில் விட்டு பாட இந்த விசுக்கான் அநாயாசமாகப் பாடிப் போகிறது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதற்கோ தேடப்போய் இந்தியன் காஃபி ஹவுசைத் தேடி கொடுத்தது கூகிள். எழுபதுகளில் இந்தியன் காஃபி ஹவுசை விட்டால் காஃபிக் கொட்டைக்கு கதியில்லை. ரேஷன் கார்டு மாதிரி கார்ட் வாங்க வேண்டும். ப்ளாண்டேஷன் ஏ, பி, ரொபஸ்டா, அராபிக்கா, பீபெரின்னு இருக்கும். பீபெரி டிகாக்‌ஷன் காஃபி அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்காதுன்னு ரொபஸ்டா மிக்ஸ் பண்ணுவாங்க. பீபரிக்கு ஏக டிமாண்ட். தினமும் மதியம் பள்ளி விட்டு வரும்போது கேட்டுட்டு வரணும்.

அப்பாக்கு காஃபி பௌடர்லாம் வாங்கினா பிடிக்காது. பச்சைக் காஃபிக் கொட்டையை காலையில வாணலியில் வறுக்கணும். அருமையா ஒரு வாசனை வரும். சரியா அப்போ இறக்கிடணும். இல்லைன்னா ஹூம்ம்ம்னு ஒரு சவுண்ட் வரும் அப்பாகிட்ட இருந்து. 

அதை  ஆற வைத்து, கையால் பொடி பண்ணும் மிஷின் இருந்தது. அதில் ஃபில்டர் பதமா அரைத்துக் கொடுத்தப்புறம் கள்ளிச் சொட்டாய் டிகாக்‌ஷன். எருமைப்பால் காஃபி. பித்தளை டபரா செட்டில். சர்...சர்னு நாலு ஆத்து ஆத்தி, டம்ப்ளரைப் பிடிக்க முடியாமல் டவலால் பிடித்து தூக்கி ஒரு வாயாக சாப்பிடுவதே ஒரு அனுபவம். 

அந்த அரைக்கிற மிஷின் ப்ளேட் மொக்கையாகி மூர்மார்க்கட்டெல்லாம் அலைஞ்சும் கிடைக்காம அப்புறம் விதியேடான்னு பொடிக்கு மாறினது.இப்ப என்னடான்னா 40% காஃபி 60% சிக்கரின்னு விக்கிறானுவ. அப்புறம் அதுக்கு காஃபின்னு எப்படி பேரு.?
~~~~~~~~~~~~~~~~~~~~~~

63 comments:

பழமைபேசி said...

Sehu Sir,carry on...

பழமைபேசி said...

@பழமைபேசிTypo...sorry

Sethu said...

பாருங்க சார். ஏர்போர்ட் லே உர்காந்துகிட்டு எனக்கு பெஞ்சில இடம் விடறார் சார். நியாயமா?

Sethu said...

என்னா சார் corporation அண்ணாச்சி கடமை தவறாம வேலை செய்யறார். contract ஆளுங்களுக்கு வேலை செய்ஞ்சா தான் சம்பளம்னு சொல்லியிருப்பாங்க. அதான் எல்லாம் கண்ணியமா நடக்குது.

நம்மாளுங்க நல்லா ரூல்ஸ் சொல்வாங்க இல்ல. இல்லாத ரூல்ஸ்க்கு கூட வழி தெரியனும் இல்ல.

முகிலன் said...

ரைட்டு

நேசமித்ரன் said...

நல்ல தொகுப்பு !

நான் அரைத்துதான் பொடி எடுத்து வந்திருக்கிறேன்.கசப்பில்லாத காப்பியா ?!

சிக்கரி .சீனிக் கரி :)

பழமைபேசி said...

அண்ணா, அந்த பையன்... அருமை...

பழமைபேசி said...

ப்ஓ சைனபா... அழகுள்ள சைனபா...

சேது சார், பாட்டு நன்னாயிட்டு இருக்கு... நிங்கள் பாட்டு கேழ்க்கணும்... மனசுல ஆயோ??

ப்ஓ...சைனபா....அழகுள்ள சைனபா... இளமான்கிடாவு போல வந்ன்னெனன... போ...சைனபா...சைய்ய்ய்னபா....

LK said...

எங்கள் வீட்டில் அந்த சிறிய காபி கோட்டை அரைக்கும் மிஷின் இருந்தது,,. இப்ப காபியே குடிக்கறது இல்லை

Sethu said...

பழமை சார்,
மனசுலாயிட்டு. ஆனா
அ பிஞ்சு தும்ப பழ்த்துப் போயி.
பாட்டுத் திறமையைப் புகழவா, அல்லது அப்பெண்ணிடம் பேசியது பாடியது, அச்சின்ன குட்டியின் சுட்டிதத் தனத்தை என்ன செய்ய? கலி முத்தி போச்சு.

ஸ்ரீராம். said...

எல்லாமே சுவாரஸ்யத் தகவல்கள் ...பன்றி பாவம் என்று எண்ணும்போதே காஃபியைச் சொல்லி பழைய நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டீர்கள். எங்கள் வீட்டில் கூட அபபடி ஒஎஉ மெஷின் இருந்தது. பாட்டிக்கு மட்டுமே சேயான பதம் வரும்! புல்லரிக்க வைக்கும் கார்ப்பரேஷன் காரர்!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஆகா அருமை சார். தகவல் பெட்டகம்தான். பன்றி பெயர் சொல்லி திட்டாமல் மனுசப்பயல சொல்லறதுதான் ஹைலைட்டே! சூப்பருங்க.....விடியோ பார்த்துட்டு வரேங்க.....பகிர்வுக்கு நன்றிங்க.

விந்தைமனிதன் said...

கடேசியா ஃபில்டர் காப்பிய சீப்பிக் குடிக்கிறத சொல்லி ஏங்க வெச்சிட்டீங்களே!

Chitra said...

நல்ல தொகுப்புங்க.... இங்கே electric coffee grinding machine கிடைக்குதே.... 100 % காபி பொடி வீட்டிலேயே ரெடி.... அமெரிக்கா வாங்க. போட்டு தரேன். :-)

VISA said...

Super

க.பாலாசி said...

அடாத மழையிலையும் செடிக்கு தண்ணி விடுறாரே.... அப்டியே புல்லரிச்சுப்போச்சுங்க...

காபி மேட்டர் வெரி இன்ட்ரஸ்டிங்... நல்லவேள எங்கவீட்ல யாரும் காபிக்கு அடிமையில்ல...

Mahi_Granny said...

ஆஹா, பிரமாதம்

Mahi_Granny said...

ஆஹா, பிரமாதம்

பின்னோக்கி said...

மத்தாப்பூ..சூப்பர்...

அரிசி விலை எலக்ட்ரானிக்ஸ் விலை மேட்டர் நச்.

ஈரோடு கதிர் said...

காபி.. அதுவும் எருமைப்பாலுல
ம்ம்ம்ம்ம்..


பையன் பட்டாசு கிளப்புறான்

ராஜ நடராஜன் said...

//சர்...சர்னு நாலு ஆத்து ஆத்தி, டம்ப்ளரைப் பிடிக்க முடியாமல் டவலால் பிடித்து தூக்கி ஒரு வாயாக சாப்பிடுவதே ஒரு அனுபவம். //

இந்த சர்...சர்ன்னுல ஒரு சூட்சுமம் இருப்பது நிறைய பேருக்கு தெரியுமோன்னு தெரியல.அதாவது
சேட்டன் கடை பால் சாயாவாகட்டும்,நீங்க சொல்ற சர்ங்கிற Froth நுரையிலதான் ருசி கூடுது.

ஆத்தி சூடி மறந்துட்டோம்.
ஆத்தி குடிக்கவாவது கற்போம்:)

கே.ஆர்.பி.செந்தில் said...

கடமை உணர்ச்சி சென்னை மாநகராட்சி ஊழியரும்.. இரண்டு கால் பன்றியும் வியப்பு ...

ஆதிமூலகிருஷ்ணன் said...

மொதல் படத்துல இருப்பவர் நம்பள மாதிரி கடமை வீரர்னு நினைக்கிறேன். ஹிஹி..-

தாராபுரத்தான் said...

காபி..அருமை..செய்திகளும்.

நாஞ்சில் மனோ said...

பொடியனின் பாட்டு அருமை.....!!!

சே.குமார் said...

தீபாவளி அருகில் வருவதால் இந்த மத்தாப்பு நல்ல பூத்திருக்குன்னு நினைக்கிறேன்... அனைத்தும் அருமை ஐயா.

சி.பி.செந்தில்குமார் said...

வித்தியாசமான பதிவு, ரசித்தேன்

ரிஷபன் said...

சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மாதிரி.. பல்சுவை.. அந்தப் பொடியனின் தேவ கானம் இன்னமும் மனசை விட்டு நீங்காமல்.

வானம்பாடிகள் said...

@Sethu
அதான் சொன்னேனே. குடுக்குற கூலிக்கு வேலை பண்ணாம முடியுமா?:))

வானம்பாடிகள் said...

@முகிலன்
லெஃப்டு:))

வானம்பாடிகள் said...

@நேசமித்ரன்

ஆஹா:)

வானம்பாடிகள் said...

@பழமைபேசி

ஆமாங்க பழமை

வானம்பாடிகள் said...

@பழமைபேசி

அய்யோ ஏட்டா அது போ சைனபாயில்ல கேட்டோ. ஓ சைனபாயாணு.

வானம்பாடிகள் said...

@LK

ஆஹா. அது இல்லாத வீடு உண்டுமா ஒருகாலத்தில.

வானம்பாடிகள் said...

@Sethu

சேது ஏட்டா. அதெந்தினா தும்ப. அது கன்னடமல்லே. கொழப்பியடிச்சி ஒரு பாடு தேற்றிட்டுண்டல்லே. ச்செரியாவும்.

வானம்பாடிகள் said...

@ஸ்ரீராம்.

நன்றி ஸ்ரீராம்

வானம்பாடிகள் said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றிங்க

வானம்பாடிகள் said...

@விந்தைமனிதன்

சீப்பிக் குடிக்கறதாவது. தூக்கி புகையப் புகைய ஊத்துவாங்க:))

வானம்பாடிகள் said...

@Chitra

இதெல்லாம் சரி வராது. வறுக்கும்போதே மூக்கு சொல்லும். இங்கன நிப்பாட்டுன்னு. அப்புடியே தூக்கிக் கொட்டி பரத்தணும். ஹி ஹி. நன்றிங்க.

வானம்பாடிகள் said...

@VISA

நன்றி விசா

வானம்பாடிகள் said...

@க.பாலாசி

காபிக்கு அடிமையில்லாதவன் மனுசனா:)). மாத்தரக் காப்பிய சொம்புலயில்லப்பா வச்சி குடிப்பாக. கி.ரா. படி.

வானம்பாடிகள் said...

@Mahi_Granny

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

@பின்னோக்கி

நன்றிங்க பின்னோக்கி

வானம்பாடிகள் said...

@ஈரோடு கதிர்

ம்கும். நாங்க காசு குடுத்து வாங்கோணும். உங்கள மாதிரியா.

வானம்பாடிகள் said...

@ராஜ நடராஜன்

அதுண்ணா அது. அந்த நுறை பதமா ஊதி ஓரம்கட்டி..ஹூம்ம்ம்

வானம்பாடிகள் said...

@கே.ஆர்.பி.செந்தில்

நன்றி செந்தில்

வானம்பாடிகள் said...

@ஆதிமூலகிருஷ்ணன்

ஹி ஹி. நன்றி ஆதி. பின்ன

வானம்பாடிகள் said...

@தாராபுரத்தான்

நன்றிண்ணே.

வானம்பாடிகள் said...

@தாராபுரத்தான்

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

@சே.குமார்

நன்றி சே.குமார்

வானம்பாடிகள் said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றிங்க முதல் வரவுன்னு நினைக்கிறேன்.

வானம்பாடிகள் said...

@ரிஷபன்

ஆமாம் ரிஷபன். தினமும் கேக்காம இருக்க முடியலை.

பழமைபேசி said...

@வானம்பாடிகள்

வரவு வேறு; வருகை வேறு!!!

வானம்பாடிகள் said...

@பழமைபேசி

எனக்கு பின்னூட்டம் வரவுதானுங்களே:))

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

அன்னு said...

சிக்கரி கலக்காத காஃபி இன்றும் பெஸ்ட்தான். உடுமலையில் வசித்த காலத்தில் பஸ் ஸ்டாண்டு அருகில் நரசூஸ் காஃபி நிலையம் இருக்கும். பள்ளிக்கூடம் கடந்து போகும் ஒவ்வொரு முறையும் மணம் வீடு வரை வந்து சேரும். அதே வீதியில் டாக்டரும் இருந்ததால் அந்த கிளினிக்கை தாண்டும்போதெல்லாம் இனம் புரியாத ஒரு பயமும் காஃபியின் வாசனையும் கிடைத்தது மறக்க முடியாத அனுபவங்கள். இன்னமும் நானும் எனக்கு தெரிந்த நிறைய சகோதர சகோதரிகளும் அமெரிக்கன் காஃபியை விட இந்திய காஃபியை விரும்புவதில் தவறே இல்லை. அதில் உள்ள நன்மையும் டேஸ்ட்டும் அப்படி. ஹ்ம்ம்...

ரோஸ்விக் said...

கடமையே கண்ணாயிரம்....
இதுல எத்தனை முட்டாள்கள்-னு பாருங்க... ஒன்னு தண்ணி ஊத்துறவன், இன்னொருத்தன் அந்த லாரி ஓட்டுறவன், பெரிய மடையன் இவனுகளுக்கெல்லாம் இருக்கிற சூப்ரவைசர்...

ரோஸ்விக் said...

இப்பவெல்லாம் வியாபாரம்னா வருஷம் முழுவதும் ஏமாற்றுவது... பண்டிகை காலங்களில் வித்தியாசமாக ஏமாற்றுவது...

ரோஸ்விக் said...

அப்பா பெரிய ரசனைக்காரரா இருப்பாரு போல... அந்த எந்திரத்தைப் பார்க்கும்போது படம் ஓட்டுறது மாதிரியே இருக்கு... :-)

தியாவின் பேனா said...

அருமையான தொகுப்பு

ஜிஜி said...

சுவாரஸ்யத் தகவல்கள்..தொகுப்பு அருமை சார்!

கிரி said...

//பேசும்போது ஒரு குரலும் பாடுகையில் எங்கிருந்தோ தேவகானமாக்கும் குரலுமாய் கலக்குகிறான் பொடியன்.//

ஆமாம் சார் :-)

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

பல்சுவை அருமை..அதிலும் அந்த காஃபிப் பொடி கொஞ்சம் தூக்கல்.
எமன் வந்து நின்னாக் கூட, ’இருடா அம்பி ஒரு சொட்டுக் காஃபி குடிச்சுட்டு வந்துடறேன்’னு சொல்வேன்.. வீட்டில அந்த காஃபி அறைக்கிற மெஷின்ல குடிக்கிற காஃபியே தனி! இப்ப எல்லாமே போச்..எல்லாருமே டீக்கு மாறிட்டோம்!