Wednesday, September 30, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.8

பிரபாகரன் இறக்கவில்லை தமிழகத்தில் உள்ள அகதிகள் நம்பிக்கை: அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

அட மனசுக்குள்ள புகுந்து கூட உளவு பார்க்குறாங்கப்பா. நம்பிக்கை வச்சாலும் குத்தமாங்க?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஐ.நா 5 மில்லியன் நிதி உதவி

காசு குடுக்க களவாணித்தனம். எல்லாப் பக்கமும் சுத்தி ராணுவத்தான் வந்தப்போ வெடிக்கல, அவன் அடிச்ச அடிக்கு ஓட இடமில்லாம ஜனங்க ஓடினப்ப வெடிக்கல. அப்புறம் ஆவி வந்து வச்சதோடா கண்ணிவெடி?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய கடல் எல்லையில் மேலும் பல இலங்கை மீனவர்கள் கைது

நல்லா விளையாடுறாங்கப்பா பிடிக்கிற விளையாட்டு. பிழைக்க விடுங்கப்பா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக தமிழர்களையும் கொல்வதற்கு ராஜபக்ச திட்டம்: வைகோ

அய்ய். அப்போ பெரியாறில் அணை கட்டி கழியும். காவேரி நீள்ளு நம்மகே. மதராஸ் மனதே!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வோரை, சட்டத் திருத்தங்களின் மூலம் கட்டுப்படுத்த முடியும்: கெஹலிய

இவனுங்க மட்டும் எந்த சட்டத்துக்கும் கட்டுப் பட மாட்டானுங்க. சட்ட பூர்வமான முறையில் வெளிநாட்டில் இருந்தாலும் சட்டவிரோதமா கடத்திக் கொண்டுவரவும் முடியும் நாய்ங்களுக்கு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவது குறித்து வோல்டர் கெலின் கவலை தெரிவிப்பு

நொந்த கதியில் இருக்கிறவங்களுக்கு நடவடிக்கை மந்த கதியில்னு புளுவறானே இவன் எந்த கதிக்கு போவானோ?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பான் கீ மூன் தெரிவிப்பு

உன்னிப்பா அவதானிச்சிதான் உன் கண்ணு சுருங்கி உள்ளுக்குப் போச்சின்னே சொல்லேன். நம்பிட்டு போறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடும் நிபந்தனைகளுடன் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நீடிக்கப்படும் சாத்தியம்

இனிமே அச்சாப்புள்ளையா இருக்கணும்னு கண்டிப்பா சொல்லிட்டு குடுங்க மக்கா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: சு.சாமி எதிர்ப்பு

இவனகூட சி.ஐ.ஏ ஏஜண்டுன்னெல்லாம் சொன்னாங்க. வாய்ல வார்த்தை இருக்கவே பாய்ஞ்சி விழுந்து தடுக்குது குடிகேடி நாயி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

இவரு பங்கு பிட்டும் போட்டாச்சி. வானம்பாடி! எலக்சன் முடிந்தது, எடுத்து வை ஈழத்தை எப்பொழுதாவது உதவும்னு எப்புடிடா எழுதின?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜபக்சேவை பழிவாங்க 100 பிரபாகரன்கள் வருவார்கள்: மங்கள சமரவீர

ம்கும். எந்த நூறு பேருன்னு தேட. எல்லாரையும் போட்டுத் தள்ளுன்னு போடவா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களுக்கு நடமாட்ட சுதந்திரத்தை உடனே வழங்க முடியாது: இலங்கை

அப்போ ஐ.நா.கு சொன்ன ஆறு மாசம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவீன கால ராவணனாக ராஜபக்சே இருக்கிறார்: விஜயகாந்த்

அவன் ராவணனா இருக்கட்டும். நீங்க ரமணாவா போய் வன்னில செத்தது இத்தனை, துப்பாக்கி இத்தனைன்னு புள்ளி விவரம் பேசினா பைத்தியம் புடிச்சி ஓடிடுவாண்ணே. அதாவது செய்ங்கண்ணே.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக எம்.பி.க்களை அகதி முகாமுக்கு செல்ல அனுமதிக்கலாமா?இலங்கை ஆலோசனை

அருமையா இருக்கு. எங்களுக்கு அங்கயே தங்கணும் போல இருந்திச்சி. பாதுகாப்புன்னு ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல அடஞ்சிட்டாங்கன்னு புளுகற ஆளுங்களா அனுப்புவாங்கப்பு. எதுக்கு சீனு?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாரூர் பல்கலைக்கு முழு சுதந்திரம்: கபில் சிபல்

அப்ப மத்த பல்கலைக் கழகமெல்லாம் அடிமையாத்தான் இருக்கோ?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாலை மறியல் என்ன என்பதை உலகத்திற்கு எடுத்து காட்டியவாகள் பா.ம.க.வினர்தான்: ராமதாஸ்

உங்கள மாதிரி உலகத்தில எவனாவது மரத்தை வெட்டிப் போட்டு மறியல பண்றானா?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குவாடரோச்சி மீது வழக்கு வாபஸ்.

அவனென்ன தமிழனா?  நாளன்னைக்கு காந்தி ஜயந்தி. கதர் சட்ட போட்டுகிட்டு, மூஞ்சிய சோகமா வெச்சிகிட்டு அஞ்சலி செலுத்துவோம்ல. சத்யமேவ ஜயதே!

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

35 comments:

ராஜ நடராஜன் said...

இடுகைக்கு ஆவலுடன் எதிர்பார்ப்பு.முன் சீட்டைப் பிடிச்சேட்டேன் போல:)

ராஜ நடராஜன் said...

அத்தனையும் நச்!எதுக்கு ஓட்டுப் போடறது?முத்தான முத்தல்லவோ!

ராஜ நடராஜன் said...

//பிரபாகரன் இறக்கவில்லை தமிழகத்தில் உள்ள அகதிகள் நம்பிக்கை: அரசுக்கு உளவுத்துறை அறிக்கை//

இதெல்லாம் நல்லா உளவு பாருங்க!பாகிஸ்தான்காரன் கிட்ட மட்டும் கோட்டை விட்டுறுங்க!

ராஜ நடராஜன் said...

//நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஐ.நா 5 மில்லியன் நிதி உதவி//

சொல் ஒன்று.செயல் ஒன்று.

ராஜ நடராஜன் said...

//இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பான் கீ மூன் தெரிவிப்பு

உன்னிப்பா அவதானிச்சிதான் உன் கண்ணு சுருங்கி உள்ளுக்குப் போச்சின்னே சொல்லேன். நம்பிட்டு போறோம். //

இது கொஞ்சம் தூக்கலா இருக்குதே:)எனது ஓட்டு.

கதிர் - ஈரோடு said...

//உங்கள மாதிரி உலகத்தில எவனாவது மரத்தை வெட்டிப் போட்டு மறியல பண்றானா?//

இஃகிஃகி

//தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: சு.சாமி எதிர்ப்பு//
இது அடங்காதுங்க

ஜீவன் said...

எல்லாமே நறுக் ..!

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்..3

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

இராகவன் நைஜிரியா said...

சரி ஷார்ப் கமெண்ட்ஸ்..

ம்.. என்னச் சொல்லி என்னச் செய்ய... அவனுங்க செய்வதை செய்து கொண்டுதான் இருக்காங்க...

பிரியமுடன்...வசந்த் said...

//
அய்ய். அப்போ பெரியாறில் அணை கட்டி கழியும். காவேரி நீள்ளு நம்மகே. மதராஸ் மனதே!//

ஹி ஹி ஹி.... பின்றீங்க பாலாசார்

பழமைபேசி said...

வாசித்தேன்...
யோசித்தேன்...

ஆரூரன் விசுவநாதன் said...

இருங்க.....இருங்க.....ஆட்டோ அனுப்பறன் வீட்டுக்கு.....ஹி....ஹி.....

தமிழ் நாடன் said...

எல்லாமே அருமை! ஆனால் ஒருத்தனுக்கும் உறைக்காது!

சூர்யா ௧ண்ணன் said...

//நீங்க ரமணாவா போய் வன்னில செத்தது இத்தனை, துப்பாக்கி இத்தனைன்னு புள்ளி விவரம் பேசினா பைத்தியம் புடிச்சி ஓடிடுவாண்ணே. அதாவது செய்ங்கண்ணே.//

அடுத்த படத்துக்கு ஐடியா கொடுத்துட்டிங்களே தலைவா!

Suresh Kumar said...

கடும் நிபந்தனைகளுடன் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நீடிக்கப்படும் சாத்தியம் //////////
இப்படி ஏதாவது சொல்லி நம்ம ஆறுதல் பட வேண்டியது தான்

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன்
/அத்தனையும் நச்!எதுக்கு ஓட்டுப் போடறது?முத்தான முத்தல்லவோ!/
/இது கொஞ்சம் தூக்கலா இருக்குதே:)எனது ஓட்டு./

நன்றிங்க நடராஜன்.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/இது அடங்காதுங்க/

பக்கத்தூரு அழுகின சரக்குக்கு கொஞ்சம் அடங்கிச்சி. திரும்ப வாசனை கேக்குது போல பன்னாடை.

வானம்பாடிகள் said...

ஜீவன்
/எல்லாமே நறுக் ..!/

நன்றிங்க ஜீவன்.

வானம்பாடிகள் said...

தமிழ் முல்லை

பார்த்தேனுங்க. நல்ல பகிர்வுங்க. நன்றி.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/ம்.. என்னச் சொல்லி என்னச் செய்ய... அவனுங்க செய்வதை செய்து கொண்டுதான் இருக்காங்க.../

வாஸ்தவம் சார். புலம்பி தீத்துக்கிறதுதான்.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்

/ஹி ஹி ஹி.... பின்றீங்க பாலாசார்/

ஹி ஹி. எந்தலையே வார வழியில்லை. இதுல பின்றது எங்க:))

வானம்பாடிகள் said...

பழமைபேசி
/வாசித்தேன்...
யோசித்தேன்.../

நன்றி பழமை.

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன்

/இருங்க.....இருங்க.....ஆட்டோ அனுப்பறன் வீட்டுக்கு.....

ஹி....ஹி...../

கெரஸின் ஆட்டோ இல்லை தானே. :))

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன்
/எல்லாமே அருமை! ஆனால் ஒருத்தனுக்கும் உறைக்காது!/

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

சூர்யா ௧ண்ணன்
/அடுத்த படத்துக்கு ஐடியா கொடுத்துட்டிங்களே தலைவா!/

இப்பொ இருக்கிற நிலமையில பாதி வசனத்தில தூங்கிடுவாரு தலைவா:))

வானம்பாடிகள் said...

Suresh Kumar
/இப்படி ஏதாவது சொல்லி நம்ம ஆறுதல் பட வேண்டியது தான்/

முதல்ல குடுக்கமாட்டம்னாங்க. இவன் தேவையில்லை போன்னு சொன்ன பிறகு இப்படி ஒரு செய்தி. இதில ஆறுதல் எங்க வரும். வாந்திதான் வருது ஏண்டா இப்புடின்னு

Anonymous said...

//தமிழக எம்.பி.க்களை அகதி முகாமுக்கு செல்ல அனுமதிக்கலாமா?இலங்கை ஆலோசனை
அருமையா இருக்கு. எங்களுக்கு அங்கயே தங்கணும் போல இருந்திச்சி. பாதுகாப்புன்னு ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல அடஞ்சிட்டாங்கன்னு புளுகற ஆளுங்களா அனுப்புவாங்கப்பு. எதுக்கு சீனு?//

தமிழக அரசியல்வாதிகளின் இன்றைய முகத்தில் கரியை பூசும் வரிகள்...

க.பாலாஜி said...

//தமிழர்களுக்கு நடமாட்ட சுதந்திரத்தை உடனே வழங்க முடியாது: இலங்கை
அப்போ ஐ.நா.கு சொன்ன ஆறு மாசம்? //

அவலம் மிகு வார்த்தைகள்...இவனுங்க என்னைக்கு சுதந்திரமா நடமாட விடடாடுங்க...இப்ப விடப்போறானுங்க...

எல்லாமே நறுக்கென்ற வார்த்தைகள்...

வானம்பாடிகள் said...

க.பாலாஜி

/அவலம் மிகு வார்த்தைகள்...இவனுங்க என்னைக்கு சுதந்திரமா நடமாட விடடாடுங்க...இப்ப விடப்போறானுங்க...

எல்லாமே நறுக்கென்ற வார்த்தைகள்.../

நன்றிங்க

கலகலப்ரியா said...

:)

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா
/:)/

அவ்வ்வ்வ். :((

Kiruthikan Kumarasamy said...

வழமை போலவே கலக்கல்.... ஒரு மொக்கைப் பதிவாவது போடக்கூடாதா பாலா. :))

வானம்பாடிகள் said...

Kiruthikan Kumarasamy

/வழமை போலவே கலக்கல்.... ஒரு மொக்கைப் பதிவாவது போடக்கூடாதா பாலா. :))/

:)) நன்றி கிருத்திகன்.

கிரி said...

//இந்திய கடல் எல்லையில் மேலும் பல இலங்கை மீனவர்கள் கைது//

கடுப்படிக்கறானுக... இப்படியே காலத்தை ஓட்டிட்டு இருக்கானுக எந்த முடிவும் எடுக்காமல்

//இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பான் கீ மூன் தெரிவிப்பு//

சரியான காமெடி பீசா இருப்பாரு போல இருக்கு

//அப்போ ஐ.நா.கு சொன்ன ஆறு மாசம்? //

அது போன மாசம் இது இந்த மாசம் :-)))

வானம்பாடிகள் said...

கிரி

வாங்க கிரி. நன்றி:))