பாலசந்தரோட மரோ சரித்ரான்னு ஒரு படம் ஸஃபைர் தியேட்டர்ல அந்த ஓட்டம் ஓடிச்சு. அப்போ ஆஹான்னு பார்த்து, அப்புறம் என்னடா லூசுத்தனமா லாஜிக் இதுன்னு நினைச்ச விஷயம் ஒன்னு. உண்மையான காதலான்னு கண்டு பிடிக்கிறாங்களாம். கதா நாயகனும் கதா நாயகியும் ஒரு வருடம் ஒருத்தர ஒருத்தர் பாராம, பேசாம, கடுதாசு. ஃபோனு ஒண்ணும் இல்லாம இருக்கணும். அப்படியானா கலியாணம் பண்ணி வைக்கலாம்னு. ஹிஹி . நம்ம வாழ்க்கைலையும் இப்படி லூசுத்தனமா ஒரு விவகாரம் பண்ணாங்க.
எப்போ எப்புடி இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சின்னு இப்போ கூட புரியல எனக்கு. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே அப்படி ஒரு கிறுக்கு அதும்மேல. நாலு வீடு தள்ளி அது இருந்தாலும் எனக்கு இங்க நிலை கொள்ளாம தவிப்பேன். நின்ன இடத்துல நிக்காம எப்போ எப்போன்னு தவிப்பா இருக்கும். வீட்டுல பெருசுங்க கண்டிசனா இதெல்லாம் இங்க வேலைக்காவது பய புள்ள. ஒழுங்கா எந்த மட்டுக்கோ அந்த மட்டுக்கு இருடின்னா , தல எழுத்துடான்னு எத்தனையோ விடயம் விட்டுத் தொலைஞ்ச மாதிரி இருந்திருக்கலாம். கொஞ்ச நேரத்துல பய கிறுக்கு புடிச்சி அலையப் போறாம் பாருன்னு பெருசுங்க நம்ம காது படவே சொல்லி உசுப்பேத்தினா நம்மளுக்கு குளிர் விட்டு போய்டுமா இல்லையா? அப்புறம் எதுக்கு கவலைப் படப்போறம்?
இப்படி நல்லா போய்க்கிருந்த நாள்ல பி.யூ.சி முடிச்ச கையோட ஒரு பிரச்சினை வந்து போச்சி. பிரச்சினை முடிஞ்சதுன்னு விட்டா பெருசுங்களுக்கு எங்க மதிப்பு? காலங்காலமா அவங்க அடக்கு முறைய பிள்ளைங்க கிட்ட காட்டித்தானே பழக்கம். வெச்சாங்க வேட்டு நமக்கு. இனிமே கொஞ்ச நாளைக்கு கண்ணுலையும் காணப்படாது. எந்த ஓட்டும் உறவும் இல்லன்னு. பிரச்சினை தான் முடிஞ்சதே; அப்புறம் ஏன்னு போராடினதில கெட ஒரு ஆறு மாசம், அப்புறம் பார்க்கலாம்னு ஒரே போடு. எது எப்படி கேட்டாலும் ஒரே பதில். அது ஒத்து வராது. இவ்வளவு நாள் இல்லாதது இப்போ என்னான்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் பெரியவங்க சொன்னா எதிர்த்துப் பேசறதுஎன்னா பழக்கம்? உனக்கு நல்லது எது கெட்டது எதுன்னு எங்களுக்கு தான் தெரியும்னு அராஜகம் பண்ணாங்க.
அக்காட்ட மெதுவா கெஞ்சி நீயாவது சொல்லுன்னா அது எட்டப்பனா மாறிடுச்சி. வெண்ணைய, அதான் என் தம்பி, அவன கெஞ்சி, மிரட்டி என்னல்லாம் பண்ணாலும் அவனும் எட்டப்பன் ஆனதோட எதிரணிக்கு மாறிட்டான். உண்ணா விரதம், சீன போடுறது எதுவும் ஒர்க் அவுட் ஆகல. மனுஷனுக்கு எப்பவுமேவா கஷ்டம் இருக்கும்? ஒரு நாள் விடியாம போய்டுமா? மாமா குடும்பத்தோட வந்தாங்க. இவரு மூலமாவாவது இந்த அநியாயத்துக்கு ஒரு விடிவு வராதான்னு மனசு தவிச்சாலும், பயம் அவர்கிட்ட. அவருக்கும் அத ரொம்ப பிடிக்கும். ரெண்டு நாளு போக அம்மாவ கேட்டாங்க. எங்க அத கண்ணுலயே காணோம்னு. இல்லண்ணா இந்தப் பயபுள்ளயால பிரச்சன. ஒரு ஆறு மாசம் போகட்டும்னு விட்டிருக்குன்னாங்க. பாவி மனுஷன் சின்ன பையன் அவன் ஆசைய கெடுக்காதன்னு சொல்ல வேணாமா? நம்மள மீறி என்ன நடந்துடும்மா? அதுக்காக இப்படியான்னு இன்னைக்கு கண்டே ஆகணும்னு சொல்லிட்டாங்க.
ச்சீன்னு ஆகிப்போச்சு. ஒருத்தனுக்கு கூடவா சின்னப்பசங்க தவிப்பு புரியாதுன்னு. ஆனாலும் ஒரு சந்தோசம். இன்னைக்கு நம்ம வீட்ல பார்க்கவாவது முடியும்னு. பாராம பார்த்ததும் பரவசம் ஒரு பக்கம், இயலாமை ஒரு பக்கம்னு நான் பட்ட பாடு இருக்கே. கமல் மாதிரி மண்டைல கொம்பு முளைச்சுடுத்து. இன்னைக்கு அத்தனை பேருக்கும் வைக்கிறேண்டா ஆப்புன்னு. யாரையும் மதிக்கறதில்ல. என் மனசும் தவிப்பும் உங்களுக்கு புரியாதப்போ உங்க பேச்சுக்கு நான் ஏன் மதிப்புத் தரணும்னு ஒரு புரட்சியே உண்டாச்சு. சாப்பாடு முடிச்சி மேட்னி ஷோக்கு போறதா ஏற்பாடு. எனக்கு டெஸ்ட் இருக்கு நான் படிக்கணும்னு ரொம்ப சாமர்த்தியமா பிட்ட போட்டேன்.
அதுங்க என்னிய மாதிரி எத்தன பார்த்திருக்கும். அப்படியாடி, சரி படிச்சிக்கோன்னு சொல்லிட்டு மாமா பையன காவலுக்கு விட்டாங்க. ஆஹான்னு இருக்க, யக்கா நானும் வரலைன்னு குண்ட போட்டுச்சி. பார்க்கலாம் அதயும்னு கருவிக்கிட்டு காத்து கிடந்தேன். உண்ட மயக்கத்துல அக்கா கொர்ர ஆரம்பிச்சது. மாமா பையன தள்ளிக்கிட்டு போய் மவனே மாடிப்படி கீழ சந்து இருக்கு பாரு. அங்க நிப்பேன். 10 நிமிஷத்துல யாருக்கும் தெரியாம அதோட அங்க வர. இலைன்னாலோ இல்ல போட்டு குடுத்தியோ சங்க அறுத்துடுவேன் ஓடுன்னு மிரட்டி சத்தம் போடாம படி கீழ நின்னு தவிச்ச தவிப்பிருக்கே. எந்த டைரக்டர்ரும் அந்த பீலிங் சொல்ல முடியாது.
பய புள்ள பம்மி பம்மி கூட்டியாந்து கைல ஒப்படைச்சிட்டு ஓடியே போய்ட்டான். உடம்பெல்லாம் பர பரக்க, உதடு துடிக்க, கையெல்லாம் வெட வெடன்னு நடுங்க, யாரும் பார்த்து போட்டு குடுத்துடுவாங்களோன்னு பதைக்க , டப்பாவ தொறந்து தயிர் சாதத்த பிசைஞ்சி, உருட்டி எடுத்து கட்டை விரலால ஒரு குழிய பண்ணி அது நிறைய வெங்காய வத்தக்குழம்பை நிரப்பி முதக்கவளம் உள்ள போகவும் அழுவாச்சியா வந்துச்சி. நாசமாப் போற டாக்டர் டைஃபாயிட் திரும்ப வந்தா கஷ்டம், அதனால ஆறு மாசம் காரம், எண்ணெய் எல்லாம் தவிர்க்கணும்னு சொன்னான்னு உன்ன என்கிட்டே இருந்து பிரிச்சி எப்படி தவிக்க விட்டாங்கன்னு சாப்பிட்டது இருக்கே.,அதுக்கப்புறம் எத்தனையோ நாள் சாப்பிட்டாலும் அந்த குழம்பு ருசிய அடிச்சிக்க முடியல.

________________
42 comments:
என்னமோ வரப்போகுது இதுமாதிரின்னு தோணிறிச்சி ... ஆனாலும் நல்லாவே இருந்திச்சி ..
தருமி
/ஆனாலும் நல்லாவே இருந்திச்சி ../
ஹி ஹி. ஆமாங்க ரொம்ப நல்லா இருக்குமுங்க அந்த காம்பினேசன். சும்மா டமாசு. நன்றிங்க
திருட்டுச் சோறு...இஃகி!
பழமைபேசி
/திருட்டுச் சோறு...இஃகி!/
ஆமாம் பின்ன. சிறு வெங்காயம் வத்தக்குழம்புன்னா டைஃபாய்டாவது டாக்டராவது.
வேணாம்
இனிமேல் வாழ்க்கைல தயிர் சோறேஏஏஏஏஏஏஎ
சாப்பிட மாட்டேன்
(நாளைக்கு மட்டும்)
இஃகிஃகி
என்ன 09-09-09 எல்லோரும் பின்நவீனத்துவம் போல பில்டப் கொடுத்து கடைசியா புசுக்குனு நசுக்றீங்க
நல்ல சஸ்பென்ஸ்.ரொமாண்டிக்கா கொண்டுபோய் ருசியா முடிச்சிட்டிங்க..... :))
கதிர் - ஈரோடு
/இனிமேல் வாழ்க்கைல தயிர் சோறேஏஏஏஏஏஏஎ
சாப்பிட மாட்டேன்/
அவ்வ்வ்வ். தயிர் சோறுன்னா தாராளமா சாப்பிடுன்னு விட்டுருப்பாய்ங்களே. வத்தக்குழம்புதானே விவகாரம்.
/என்ன 09-09-09 எல்லோரும் பின்நவீனத்துவம் போல பில்டப் கொடுத்து கடைசியா புசுக்குனு நசுக்றீங்க/
அது பழமை ஏன்னே தெரியாம அந்த தலைப்ப குடுத்த எஃபெக்டு. மண்ட காஞ்சி போகுதுல்ல. தேடுனா ஒருத்தன் ஒன்னுமில்லங்கறான். ஒத்தன் சனிப்பெயர்ச்சிங்குறான். ஒத்தன் பிதாகரஸ்ங்கரான். இவரு பின்னூட்டம் கண்டுக்காம பித்து பிடிக்க வைக்கிறாரு.
துபாய் ராஜா
/நல்ல சஸ்பென்ஸ்.ரொமாண்டிக்கா கொண்டுபோய் ருசியா முடிச்சிட்டிங்க..... :))/
வாங்க ராஜா. ஹெஹெ. அதான் வேணும். வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
எதோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே....
காய்ச்சல் வந்தவன் கருவாட்டுக்கு குழம்புக்கு ஆசப்பட்ட கதையால்ல இருக்கு...
நல்ல சுவாரசியமான பதிவு....நல்ல எழுத்துநடை அருமை...
க.பாலாஜி
/காய்ச்சல் வந்தவன் கருவாட்டுக்கு குழம்புக்கு ஆசப்பட்ட கதையால்ல இருக்கு...
நல்ல சுவாரசியமான பதிவு....நல்ல எழுத்துநடை அருமை.../
அது என்னமோ அப்பத்தானே நாக்கு கெடந்து ஏங்கும். நன்றி பாலாஜி ஊக்கத்துக்கு.
சூப்பர் தலைவா!
சுவாரசியமான பதிவு
சூர்யா ௧ண்ணன்
/சூப்பர் தலைவா!
சுவாரசியமான பதிவு/
நன்றி தலைவா!
அண்ணே பாலாண்ணே ... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... கடைசியில ஒரு ட்விஸ்ட் எதிர்பார்த்தேன். ஆனால் இதை எதிர் பார்க்கவில்லை. ஆபிசில் ஆப்பு அதிகமா இருப்பதால் இப்ப கும்மி அடிக்க முடியலை. சாயங்காலம் வந்து கும்மி அடிச்சுகிறேன். இப்போதைக்கு ஒரு ப்ரசண்ட் மட்டும் போட்டுகிட்டு, ஓட்டும் போட்டுட்டுப் போயிட்டு அப்பாலிக்கா வரேன்.
யோவ்.... குசும்பனய்யா நீர். நல்லாயிருந்துச்சு பாலா :)))
ஹி ஹி. வாங்க இராகவன் சார். வாங்க வாங்க வெயிட் பண்றேன்.
Kiruthikan Kumarasamy
/யோவ்.... குசும்பனய்யா நீர். நல்லாயிருந்துச்சு பாலா :)))/
:)). வாங்க கிருத்திகன்.
சிறு வெங்காயம் வத்தக்குழம்புக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னா, கல்யாணத்துக்கு எவ்வ்ளோ பண்ணியிருப்பீங்க.
உங்க கிட்ட இருந்து இன்னும் நிறையா எதிர் பார்க்கிறோம்.
அப்பாவி முரு
/சிறு வெங்காயம் வத்தக்குழம்புக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னா, கல்யாணத்துக்கு எவ்வ்ளோ பண்ணியிருப்பீங்க.
உங்க கிட்ட இருந்து இன்னும் நிறையா எதிர் பார்க்கிறோம்./
இஃகி இஃகி வாங்க முரு. நன்றி.
அவிங்களுக்கு தயிர்சாதம்னே பேரு வச்சிட்டிங்களா சாரே...
//
/சிறு வெங்காயம் வத்தக்குழம்புக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னா, கல்யாணத்துக்கு எவ்வ்ளோ பண்ணியிருப்பீங்க.//
ஆமாங்கோ.. அந்த கலாட்டா கல்யாணம் பத்தியும் ஒரு இடுகை போடுங்கோ... மெகா சீரியல் ஆய்டும்..
ஆஹா திருட்டுச்சோறு சாப்ட்றதையும் சுவரஸ்யமா சொல்லிட்டீங்களே சார் சூப்பர்..
பிரியமுடன்...வசந்த்
/ஆஹா திருட்டுச்சோறு சாப்ட்றதையும் சுவரஸ்யமா சொல்லிட்டீங்களே சார் சூப்பர்../
ஆஹா. இதுக்கு இப்படி ஒரு பேரு இருக்கோ. நன்றி வசந்த்.
கலகலப்ரியா
/அவிங்களுக்கு தயிர்சாதம்னே பேரு வச்சிட்டிங்களா சாரே... /
என்னாது? யம்மாடி அது நிஜம்மா தயிர்சாதம்தான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்.
/ஆமாங்கோ.. அந்த கலாட்டா கல்யாணம் பத்தியும் ஒரு இடுகை போடுங்கோ... மெகா சீரியல் ஆய்டும்../
ஒரு இடுகைல மெகா சீரியலா. இது உனக்கே நல்லா இருக்காம்மா. பதிவர் ஒரு பக்கம், டிவி காரன் ஒரு பக்கம்னு ரவுண்டு கட்டி அனுப்பவா. என்ன பார்த்தா ரொம்ப நல்லவனாவா தெரியுது?
சுவராசியமான பதிவு! இரசித்தேன்!
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
/சுவராசியமான பதிவு! இரசித்தேன்!/
நன்றி சரவணக்குமார்.
// பாலசந்தரோட மரோ சரித்ரான்னு ஒரு படம் ஸஃபைர் தியேட்டர்ல அந்த ஓட்டம் ஓடிச்சு. //
ஓடிச்சா ... நிறைய பேர் துரத்தினாங்களா என்ன?
// அப்போ ஆஹான்னு பார்த்து, அப்புறம் என்னடா லூசுத்தனமா லாஜிக் இதுன்னு நினைச்ச விஷயம் ஒன்னு. உண்மையான காதலான்னு கண்டு பிடிக்கிறாங்களாம். //
நிறைய விசயங்கள் இப்படித்தாங்க, பின்னாடித்தான் புரியது எவ்வளவு லூசுத்தனமான விசயங்களை கொண்டாடி இருக்கோம் என்று?
// ஹிஹி . நம்ம வாழ்க்கைலையும் இப்படி லூசுத்தனமா ஒரு விவகாரம் பண்ணாங்க. //
உங்க வாழ்க்கையுலுமா?
// எப்போ எப்புடி இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சின்னு இப்போ கூட புரியல எனக்கு. //
மானாட, மயிலாட நடத்துரவங்களை கேளுங்க .. கெமிஸ்டிரி, ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாம் சொல்லுவாங்க
// நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே அப்படி ஒரு கிறுக்கு அதும்மேல. //
அப்பவே பிடிச்சுடுச்சா??? :-)
இராகவன் நைஜிரியா
/ஓடிச்சா ... நிறைய பேர் துரத்தினாங்களா என்ன?/
ஆமாங்க. அதும் காலைக் காட்சி மட்டுமே. ஒரு வருடத்துக்கு கிட்ட ஓடின கவனம்.
/நிறைய விசயங்கள் இப்படித்தாங்க, பின்னாடித்தான் புரியது எவ்வளவு லூசுத்தனமான விசயங்களை கொண்டாடி இருக்கோம் என்று?/
ஹி ஹி ஆமாங்க சார்.
/உங்க வாழ்க்கையுலுமா?/
மெய்யாலுமாத்தான்.
/மானாட, மயிலாட நடத்துரவங்களை கேளுங்க .. கெமிஸ்டிரி, ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாம் சொல்லுவாங்க/
ஒரு சேனலுக்கே இப்படி. ஹூம் நடக்கட்டு
// காலங்காலமா அவங்க அடக்கு முறைய பிள்ளைங்க கிட்ட காட்டித்தானே பழக்கம். வெச்சாங்க வேட்டு நமக்கு. இனிமே கொஞ்ச நாளைக்கு கண்ணுலையும் காணப்படாது. எந்த ஓட்டும் உறவும் இல்லன்னு. //
சர்வாதிகாரம் ஒழிக என்று அப்ப எல்லாம் கொடி பிடிக்க முடியாது வேற ... அய்யோ பாவம்..
/அப்பவே பிடிச்சுடுச்சா??? :-)/
:)). ஃபோடோ பார்த்தும் சந்தேகமா?
// இவ்வளவு நாள் இல்லாதது இப்போ என்னான்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் பெரியவங்க சொன்னா எதிர்த்துப் பேசறதுஎன்னா பழக்கம்? உனக்கு நல்லது எது கெட்டது எதுன்னு எங்களுக்கு தான் தெரியும்னு அராஜகம் பண்ணாங்க. //
அய்யோ பாவம்... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் கிடையாதுன்னா கிடையாதுதான்.
இராகவன் நைஜிரியா
/சர்வாதிகாரம் ஒழிக என்று அப்ப எல்லாம் கொடி பிடிக்க முடியாது வேற ... அய்யோ பாவம்../
அடுத்த வேள சோத்துக்கு கொடியத்தான் திங்கணும்.
இராகவன் நைஜிரியா
/அய்யோ பாவம்... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் கிடையாதுன்னா கிடையாதுதான்./
:((. அழுது கொஞ்சம் ஓய்ஞ்சி கெக்கெ கெக்கேனு விசும்புறப்போ நக்கல் வேற அடிப்பாங்க.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//மாமா பையன தள்ளிக்கிட்டு போய் மவனே மாடிப்படி கீழ சந்து இருக்கு பாரு. அங்க நிப்பேன். 10 நிமிஷத்துல யாருக்கும் தெரியாம அதோட அங்க வர. இலைன்னாலோ இல்ல போட்டு குடுத்தியோ சங்க அறுத்துடுவேன் ஓடுன்னு மிரட்டி சத்தம் போடாம படி கீழ நின்னு தவிச்ச தவிப்பிருக்கே. எந்த டைரக்டர்ரும் அந்த பீலிங் சொல்ல முடியாது.//
ஆஹா..... என்ன டயலாக்கு.....அருமை
அன்புடன்
ஆரூரன்
ஆரூரன் விசுவநாதன்
/ஆஹா..... என்ன டயலாக்கு.....அருமை
அன்புடன்
ஆரூரன்/
ஹெ ஹெ. நன்றிங்க ஆரூரன்.
என்னமோனு நெனைச்சா கடைசியில இப்பிடி காரசாரமா முடிச்சிபுட்டீகளே!
blogpaandi
/என்னமோனு நெனைச்சா கடைசியில இப்பிடி காரசாரமா முடிச்சிபுட்டீகளே!/
:)) நன்றிங்க பாண்டி வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்.
Post a Comment