பெருசு, பெர்ஸேய் என்றெல்லாம் அன்பாய் அவமானிக்கப்படும் முதியவர்கள் நிகழ்காலத்தில் உறுத்தலாய் உணரப்படினும் அவர்களைப் புறக்கணிப்பதால் நட்டம் நமக்குத்தான். நான் படித்துக் கிழித்தவன், எனக்குத் தெரியாதா என்ற கர்வம், படிக்காத அவர்களால் தவிடு பொடியாவதை எத்தனை முறை அனுபவித்தாலும் ஏனோ உறுத்தல் மட்டுமே வென்று விடுகிறது. நம்ம பெருசுங்க எவ்வளவு விவரமான வில்லங்கமான ஆளுங்க என்பதற்கு சில உதாரணங்கள் இவை.
ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு பெரியவர் பகலுணவு உண்டுவிட்டு வரப்போர மர நிழலில் உட்கார்ந்திருந்தாராம். ஒரு வாலிபன் அந்த வழியாக போனவன் ஒரு ஊரின் பெயர் சொல்லி எப்படிப் போகவேண்டும் எனக் கேட்டானாம். வழி சொல்லிய பெரியவரிடம் எவ்வளவு தூரம் எனக் கேட்டானாம். பெரியவர் பதில் சொல்லாமல் இல்லாத பல்லைக் குத்திக் கொண்டிருக்கவே நடக்கத் தொடங்கினானாம். கொஞ்ச தூரம் போனவனை பெரியவர் கூப்பிட்டாராம். அங்கிருந்த படியே என்ன என்று கேட்டவனை, இங்கு வா என்றழைக்கவும், அவன் திரும்ப வந்தானாம். எவ்வளவு தூரமுன்னு கேட்டியேப்பா, 25 நிமிசமாகும் போக என்றாராம். இளசுக்கு வந்திச்சி கோவம். ஏம் பெருசு. அப்போ கேட்டா பல்லு குத்திட்டிருந்த. அவ்வளவு தூரம் போகவிட்டு திரும்ப கூப்பிட்டு சொல்றீரேன்னு பாய்ஞ்சதாம். அட போடா நீ எப்படி நடக்கிற, தெம்பா இருக்கியா, களைச்சிருக்கியான்னு தெரியாம எப்படி சொல்றது. போவைல குழப்பமா களைப்பான்னு தெரியாம தொய்ஞ்சி போய் இருந்திச்சி நடை, நாங்கூப்புடவும் வெரசா வந்த. அதனால தான் சொல்றேன் 25 நிமிசமாகும்னு சொல்லிட்டு களத்துமோட்டுக்குள்ள வேலைய பார்க்க போச்சாம். இளசுக்கு உச்சி மண்டைல உளிய வெச்சி போட்டா மாதிரி ஆகிப்போச்சாம்.
நம்ம ஹீரோ டு ஜீரோல சொல்லி இருந்தேன், நம்ம தம்பியான் வெண்ணெய் தின்ன லீலை. மாசத்துல முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறுக்காகத் தவமிருப்பேன். நெய்க்காரத் தாத்தா வருவாரான்னு. கால் கிலோ வெண்ணெய் வாங்குவாங்க. நெய் காய்ச்சின வாணலியில இருக்கிற நெய் வீணாகாம கேசரி கிண்டுவாங்க. அது பின்னூட்டம் மாதிரி. ஆனா ஒரு சின்ன கப் வெச்சிட்டு கவர்ச்சியா ஒரு இளி இளிச்சி தாத்தாக்கு ஒரு சொம்பு பான தண்ணி நீட்டுனா அரை கப் நெய் குடுப்பாங்க. அப்புடியெ ஒரு பெரிய தேக்கரண்டி சக்கரைய போட்டு விரல் எரிய எரிய குழைக்க சக்கரை கரைஞ்சி நுரை மாதிரி வரும் . லோகத்துல அத மிஞ்சி ஒரு இனிப்பு எவனும் கண்டு பிடிக்கலைன்னு சொல்லுவேன். சீத பேதி, சூட்டினால வயித்துவலி இருந்தா இதுக்கு மிஞ்சின வைத்தியமில்ல. இது அவரு சொல்லிக் கொடுத்தது.
இப்புடி ஒரு ஞாயிறு வாங்கி வெச்சிட்டு பக்கத்து வீட்டம்மாமார் கூட அரட்டைல இருக்கதான் இவன் கால்கிலோ வெண்ணெய லவட்டிட்டான். ஒளிஞ்சிட்டதால நேரம் கடந்து போய் கண்டு பிடிச்சப்ப கண்ணு முழியெல்லாம் மேல சொருகி பயமா போச்சி. அரக்க பறக்க அள்ளி எடுத்து அம்மா கதறுது. அன்னைக்குன்னு வீட்டு சொந்தக்காரங்க பேரனுக்கு தொட்டில்ல போட்டு பேரு வைக்கிற விசேஷம். வந்துச்சு அந்தம்மா. தோபாரு. ஒப்பாரி வைக்காத. டாக்டர்கிட்ட தூக்கிட்டு போ. ஒரு வேள ஏதாவது ஆய்ட்டா 8 மணிக்கு மேல வா ங்குது. துள்ளத்துடிக்க தூக்கி போட்டுகிட்டு வெளிய வந்தா எதிரூட்டுல ஒரு பெருசு. மழை நாள் போக திண்ணைலதான் வாசம். அது கூப்பிட்டு என்னாடி புள்ளைக்குங்குது.
அழுதுகிட்டே இப்படின்னா, அட சீ கொண்டாடி புள்ளையன்னு வாங்கி, கால்ல போட்டு போய் வென்னித்தண்ணி, பாலோடை கொண்டுவான்னாங்க. வெது வெதுன்னு முதல் பாலோடை தண்ணி போட்டு வயத்தை நீவிக் கொடுக்கவே ப்ளக்கு புடிங்கிடிச்சி அய்யாக்கு. நெய்யா போகுது. 10 நிமிசத்துல வயிரு ஒட்டிபோக ஞேனு சிரிக்கிறான். தூக்கி கொஞ்சி, ஒரு அறை போட்டு அவன் அலற திரும்ப கொஞ்சின்னு பைத்தியமாயிடுச்சி அம்மா. கிழவி கூலா சொல்லுது. இன்னும் வென்னீர் கொண்டு வந்து இந்த இடமெல்லாம் அரப்பு பொடி போட்டு அலம்பி விடு. ராத்திரி எறும்பு என்ன தூக்கிட்டு போய்டும்னு.
அம்மம்மா சொல்லும். கலியாணமாகி, மறுவீடு வந்தப்ப தன்னோட மாமியாருக்கு மாமியார் கிழவி கால்ல விழுந்துச்சாம். அந்தம்மா சீக்கிரமே உன் பொட்டு அழிய. தாலி அறுகன்னு வாழ்த்தவும் அலண்டு போயி அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். கூட வந்த ஒரு அம்முணி போயி இன்னோரு பெருசு கிட்ட கேட்டுச்சாம். என்னங்க முத முதல்ல கலியாணபொண்டு கால்ல விழுந்தா இப்படியா சொல்றது? விவஸ்தை வேணாம்னு. அந்த லொள்ளு புடிச்ச பெருசு, என்னாடியம்மா தப்பு கண்டுட்ட? இப்ப என்னா சொல்லிட்டாங்க? சீக்கிரமே புள்ள பொறக்கட்டும்னு வாழ்த்துச்சி. அவ்வளவுதான்னா இந்தம்மா இதென்னாடா லூசுப்பய குடும்பத்துல வாக்க பட்டுட்டமோன்னு ஆகிப்போச்சாம்.
அப்புறம் சொல்றாங்களாம் விளக்கம். துறுதுறுன்னு இருக்கிற புள்ளைங்க பாலூட்டும்போது தாலிக்கயித்த புடிச்சி இழுக்குமாம். எண்ணெய் வியர்வைன்னு ஊறி தாலிக்கயிறு இத்துப்போய் இருக்க அத்துக்குமாம். கிட்ட போய் கொஞ்சுறப்ப, தூக்கி வெச்சி கொஞ்சுறப்ப பொட்டை விரலால அழிச்சி விடும்ல அதத்தான் அப்புடி சொல்றது. புடிக்காத ஆளுங்க இருந்தா நேரடியா வாழ்த்துவான்னு நினைச்சி நடக்காதுன்னு நினைப்பாங்களாம். இப்படி சொன்னா நடக்காதுன்னு நினைச்சதும் ஆசீர்வாதம் மாதிரியாயிடும்னு அப்புடி சொல்றது வழமைன்னாங்களாம்.
ஒரு தபா ஒரு மனை ரிஜிஸ்டர் பண்ண போனேன். அங்க ஒரு பெருசு. நீர்க்காவி வேட்டி, காலர் பிஞ்சி போன சட்டைன்னு குத்துக்காலு போட்டு உக்காந்திருந்திச்சி. பக்கத்துல ஒரு பெரிய அலுமினிய தூக்கு. சொட்டைன்னா அப்படி ஒரு சொட்டை. கொஞ்ச நேரத்துல வக்கீல் வந்தாரு. ஸ்டைலா ஒரு பய புள்ள வந்தான். பத்திரத்த ப்ரீஃப் கேஸ்ல இருந்து எடுத்து படிக்க ஆரம்பிச்சாங்க. இரு இருன்னு அமர்த்தி, தம்பி இத வாங்கி படி நைனான்னாங்க. வாங்கி படிச்சேன். நல்லா இரு தம்பின்னு வாழ்த்தினாங்க. வக்கீலுக்கு ஒரு பக்கம் கடுப்பு ஒரு பக்கம் மலைப்பு.
காசெல்லாம் கொண்டாந்திருக்கீங்களான்னாரு. அதெல்லாமிருக்குது நீ ஐயாட்ட குடுப்பான்னு பெருசு டிஸ்மிஸ் பண்ணிடிச்சி. ரிஜிஸ்ட்ரார் வாங்கி பார்த்துட்டு, என்னா பெரியவரே எல்லாம் பேசியாச்சா. பதிஞ்சிறலாமான்னா, ஆமாங்க நீங்க பதிங்க நான் காசு செட்டில் பண்ணிட்டு வரேன்னு கெளம்பி வெளிய போனாங்க. கண்ணு மறைவா கூட்டி போகவும் நமக்கு சொறியுது. இடுப்புல கட்ற அளவிருக்காதே பணம். என்னாங்கடான்னு. வக்கீலுக்கும் விக்கிற ஆளுக்கும் அதே குழப்பம். தூக்க தொறந்து கட்டு கட்டா எடுக்குறாரு. தல சுத்திப் போச்சு. குடுத்துட்டு அந்த புள்ளைக்கு அட்வைசு. பத்திரமா கொண்டு போ தம்பி. அதுக்குதான் தூக்குல போட்டு கொண்டாந்தேன். ஒரு பயலுக்கும் சந்தேகம் வராது பாரு. காலம் கெட்டு கெடக்குன்னு. யப்பா. இந்த வெவரம் புரியாம , அலட்டலா பேங்க்ல காச எடுத்து பொட்டில வெச்சிகிட்டு தண்டோரா போடாத குறையா விளம்பரம் பண்ணி எத்தன பேரு பறி குடுக்குறாங்க? பதிவு கட்டணம் கட்டிட்டு வரேன் தம்பின்னு சொல்லிட்டு போன ஆள பார்த்த அந்த ஆளு, வக்கீலு ஏன் நானுந்தான் கண்ணுல உங்களயெல்லாம் பட்டிக்காட்டான்னு சொல்லிட்டு திரியிறமேன்னு இருந்திச்சி.

35 comments:
//அலட்டலா பேங்க்ல காச எடுத்து பொட்டில வெச்சிகிட்டு தண்டோரா போடாத குறையா விளம்பரம் பண்ணி எத்தன பேரு பறி குடுக்குறாங்க?//
உண்மைதான் தலைவா!
(எப்படியோ இன்னைக்காவது முதல் பின்னூட்டம் என்னுடையது)
வாங்க வாங்க சூர்யா. எப்பவும் முதல் வோட் உங்களோடதுதான். இன்னைக்கு பின்னூட்டமும். நன்றி.
நல்ல பதிவு.
மூத்தோர் வாக்கும் முழு நெல்லிக்கனியும்
முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
வாழ்த்துக்கள்
ஆஹா எல்லாப் பெருசுகளும்
கலந்து கட்டி விளையாடிருக்குங்க
ஆனா உங்க தம்பி மேட்ரல நீங்க பண்ற காமெடி கொஞ்சம் நஞ்ச இல்லீங்க.
தம்பி படிக்கிறாருங்களா
ஆரூரன் விசுவநாதன்
/நல்ல பதிவு.
மூத்தோர் வாக்கும் முழு நெல்லிக்கனியும்
முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
வாழ்த்துக்கள்/
நன்றிங்க. அருமையான வாசகமுங்க.
கதிர் - ஈரோடு
/ஆனா உங்க தம்பி மேட்ரல நீங்க பண்ற காமெடி கொஞ்சம் நஞ்ச இல்லீங்க.
தம்பி படிக்கிறாருங்களா/
:)) இல்லைங்க. அவனுக்கு 44 வயசாச்சு. நம்ம கூடதான் வேலை பார்க்குறாரு.
//வானம்பாடிகள் Says:
அவனுக்கு 44 வயசாச்சு. நம்ம கூடதான் வேலை பார்க்குறாரு.//
அய்யோ அய்ய்ய்ய்ய்யோ
அவரு உங்க இடுகைகளை படிக்கிறாரானு கேட்டேன்
கதிர் - ஈரோடு
/அய்யோ அய்ய்ய்ய்ய்யோ
அவரு உங்க இடுகைகளை படிக்கிறாரானு கேட்டேன்//
இது சூப்பரு.:)). என் மகள் போன் பண்ணி சொன்னாள். படிச்சானா தெரியலை.
அண்ணே எல்லாத்தையும் விட சூப்பர் அண்ணன் கதிர்- ஈரோடு அவர்கள் பின்னூட்டமும், உங்க பதிலுதாங்க. சிரிச்சு சிரிச்சு வயத்து வலி வந்துடுச்சண்ணே.
அனுபவம் முதுமை - எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுங்க. வேங்கை வாசலில் என்னோட நிலத்திற்கு போர் போடணும் அப்படின்னு சொன்ன உடனே, கூட இருந்த நண்பர் இங்கு ஒரு பெரியவர் இருக்காரு அவரு சரியா கண்டுபிடிச்சு கொடுப்பாரு, அவரை வச்சு முதல்ல இடத்தை மார்க் பண்ணிட்டு, அப்புறம் போர் போடலாம் அப்படின்னு சொன்னாரு. அவர் சொல்கின்றாரே என்று வரச் சொல்லுங்க அப்படின்னு சொன்னேன். ஒரு வயசானவர் வந்தாரு. பூ, பழம் வச்சு பூஜைப் பண்ணாரு. ஒரு குச்சிய வச்சுகிட்டு சுத்தி வந்தாரு. ஒரு இடத்தில் மார்க் பண்ணிட்டு 20 அடிக்குள்ள இங்கு தண்ணி கிடைக்கும் அப்படின்னு சொன்னாரு. நான் போர் போட்டது மே மாசம். அக்னி நட்சத்திரம் போட்டு தள்ளிகிட்டு இருந்துச்சு. நம்ப மாட்டீங்க சரியா 18 அடில தண்ணி பீச்சுகிட்டு கொட்டுச்சுங்க. எனக்கு பக்கத்து ப்ளாட்டில் எல்லாம் 40 அடிக்கு மேல்தாங்க தண்ணி கிடைக்குது. அது கூட உவர் தண்ணிங்க. பெரியவங்க அனுபவம் அனுபவம்தாங்க.
அப்பாடா.. ஒரு குட்டி பதிவு அளவுக்கு, பின்னூட்டம் போட்டாச்சு..
இப்பத்தான் சந்தோஷமா இருக்கு
//வயத்தை நீவிக் கொடுக்கவே ப்ளக்கு புடிங்கிடிச்சி அய்யாக்கு. நெய்யா போகுது.//
ஒரு தம்பி இப்படி செத்துபொழைக்க கெடந்த விஷயத்த என்னமா காமடி ஆக்கிட்டாருய்யா...
ஆனாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்னு நினைக்கிறேன்...
// க.பாலாஜி Says:
September 3, 2009 6:54 PM
//வயத்தை நீவிக் கொடுக்கவே ப்ளக்கு புடிங்கிடிச்சி அய்யாக்கு. நெய்யா போகுது.//
ஒரு தம்பி இப்படி செத்துபொழைக்க கெடந்த விஷயத்த என்னமா காமடி ஆக்கிட்டாருய்யா...
ஆனாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்னு நினைக்கிறேன்...//
அதுல சந்தோகம் வேறயா...
ஏந்தம்பி
என்னைப்பத்தி எழுதப்போறேன்னு சொல்லியிருந்த்தா
இன்னும் சொருகி வெச்சிருக்க சமாசாரத்தை எல்லாம் எடுத்து குடுத்துருப்பனல்லோ.
செரி செரி நல்லாயிருங்க.
வீட்ல பெருசுங்க இருக்கறது எவ்வளவு முக்கியம்ன்னு அழகா பாடம் எடுத்திருக்கீங்க... . ரொம்ப நல்லா இருக்கு ...
இராகவன் நைஜிரியா
/ஒரு வயசானவர் வந்தாரு. பூ, பழம் வச்சு பூஜைப் பண்ணாரு. ஒரு குச்சிய வச்சுகிட்டு சுத்தி வந்தாரு. /
ஆமாங்கண்ணே. இதில இவங்கள அடிச்சிக்க ஆளு கிடையாது. நம்ம தாத்தன் நுரை தள்ள பாம்பு கடி பட்டு கொண்டு வந்தா வேட்டி கரைய கிழிச்சி கிணத்துக்குள்ள நின்னு மந்திரம் ஜபம் பண்ணி முடி போட போட விஷமிரங்க அப்புறம் போய் அவன் கைல கட்டுவாரு அந்த துணிய. இப்பவும் விளங்காத புதிர் அது.
இராகவன் நைஜிரியா
/அப்பாடா.. ஒரு குட்டி பதிவு அளவுக்கு, பின்னூட்டம் போட்டாச்சு..
இப்பத்தான் சந்தோஷமா இருக்கு/
ஆமாங்க. நன்றி.
க.பாலாஜி
/ஒரு தம்பி இப்படி செத்துபொழைக்க கெடந்த விஷயத்த என்னமா காமடி ஆக்கிட்டாருய்யா...
ஆனாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்னு நினைக்கிறேன்.../
:)). பின்ன
இராகவன் நைஜிரியா
/அதுல சந்தோகம் வேறயா.../
பாம்பின் கால் பாம்பறியும் இல்லிங்களா:))
பெருசு Says:
/ஏந்தம்பி
என்னைப்பத்தி எழுதப்போறேன்னு சொல்லியிருந்த்தா
இன்னும் சொருகி வெச்சிருக்க சமாசாரத்தை எல்லாம் எடுத்து குடுத்துருப்பனல்லோ.
செரி செரி நல்லாயிருங்க.//
வாங்க வாங்க. பெருசுக்கு அழகே அழைப்பெல்லாம் எதிர் பார்க்காம பழம சொல்றது தானுங்களே. வருகைக்கு நன்றிங்க.
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
/வீட்ல பெருசுங்க இருக்கறது எவ்வளவு முக்கியம்ன்னு அழகா பாடம் எடுத்திருக்கீங்க... . ரொம்ப நல்லா இருக்கு ...//
நன்றிங்க சரவணக்குமார்.
//இப்புடியாவது எழுத வராதான்னுதான் போசு//
ஏனுங்க.. பென் சட்ட பாக்கெட்ல வச்சுக்கிட்டு.. தலைக்கு முட்டுக் கொடுத்து எழுத வருமான்னு பர்க்கறேன்னா ஓவரா தெரியலீங்களா..? (சந்திரமுகி வேற ஓடிக்கிட்டிருக்கு.. கொலைக்கேசாகி போகும் சொல்லிட்டேன்..)
கலகலப்ரியா
/ஏனுங்க.. பென் சட்ட பாக்கெட்ல வச்சுக்கிட்டு.. தலைக்கு முட்டுக் கொடுத்து எழுத வருமான்னு பர்க்கறேன்னா ஓவரா தெரியலீங்களா..? (சந்திரமுகி வேற ஓடிக்கிட்டிருக்கு.. கொலைக்கேசாகி போகும் சொல்லிட்டேன்..)/
:)).இல்லீங்க. சின்னதா ஒரு பந்தாதான். நாய் படம் தூக்கிட்டு நம்ம படம் போட்டாலும் யாரும் கண்டுக்கல. (வித்யாசம் தெரியலையோ). இப்போ பாருங்க ஒரு சின்ன பிட்ட போட்டு விட்டேன் கண்டுக்கிட்டீங்க. மத்தபடி சந்த்ரமுக்யெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு ஓவரு. சொன்னா மாதிரி கொலக்கேசாகி போகும். அப்புறம் இடுகைய யாரு போடுறது. அதனால கலகலாவே பெஸ்டு
//(வித்யாசம் தெரியலையோ)//
அது எப்டி தெரியாம போகும்..? நாய்க்குட்டி மண்டைல நிறைய முடி இருந்திச்சே.. it's sooooo obvious man..
கலகலப்ரியா
/அது எப்டி தெரியாம போகும்..? நாய்க்குட்டி மண்டைல நிறைய முடி இருந்திச்சே.. it's sooooo obvious man../
தோ. கொலக்கேசெல்லாம் வாணாம். கலகலா பெஸ்டுங்கறேன்ல. அப்புறமும் ஏன் இப்புடி..அவ்வ்வ்வ்வ்
//தோ. கொலக்கேசெல்லாம் வாணாம். கலகலா பெஸ்டுங்கறேன்ல//
இப்போ உங்க கிட்ட சந்திரமுகி பேசிட்டிருக்குன்னு நினைப்போ..? தி சேம் கலகல தானுங்க.. இதுக்கே இப்டியா...
போற போக்க பார்த்தா, அனுபவம் ஒரு நூறு இடுகைகள் போகும் போல இருக்கே.. சூப்பர்... ஆமா ..நறுக்குன்னு நாலு வார்த்தை என்ன ஆச்சு...கிடப்புல போட்டுராதீங்க !!!!
Maheswaran Nallasamy
/போற போக்க பார்த்தா, அனுபவம் ஒரு நூறு இடுகைகள் போகும் போல இருக்கே.. சூப்பர்... /
நன்றி.
/நறுக்குன்னு நாலு வார்த்தை என்ன ஆச்சு...கிடப்புல போட்டுராதீங்க !!!!/
அது தொடரும். இப்போ வர கோவத்துக்கு எழுதினா அடக்க முடியாதுன்னு இருக்கேன்.
நல்லா இருக்கு... மாப்புக்கு செம ஆப்பு போல இருக்கே? இஃகிஃகி!
பழமைபேசி Says:
/நல்லா இருக்கு... மாப்புக்கு செம ஆப்பு போல இருக்கே? இஃகிஃகி!/
இஃகிஃகி!. வாங்க பழமை
அருமையான பதிவு ஐயா. இது எல்லாம் எங்கள மாதிரி பசங்களுக்குப் புரியுது.
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரிதான்
நல்ல இடுகை சார்
அருமை,நல்லா இருக்கு
ச.செந்தில்வேலன்(09021262991581433028)
/அருமையான பதிவு ஐயா. இது எல்லாம் எங்கள மாதிரி பசங்களுக்குப் புரியுது./
நன்றி செந்தில்வேலன்.
பிரியமுடன்...வசந்த்
/பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரிதான்
நல்ல இடுகை சார்/
நன்றி வசந்த். என்ன லேட். நேத்து காணோம்.
இது நம்ம ஆளு Says:
/அருமை,நல்லா இருக்கு/
நன்றிங்க.
Post a Comment