Tuesday, September 22, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.7

இலங்கையின் யுத்தம் தொடர்பான அறிக்கை அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது

செனட் நூலகத்துக்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு போகாம உருப்படியா நியாயம் கிடைக்க ஏதாவது பண்ணுங்கடா.
________________________________________________________________________________________________

எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த முடியாது: அரசாங்கம்

இதுக்கும் மேல கோரிக்கை வெங்காயம்னு பேசுறானுங்க பாரு. இத வெச்சே இவன் திருடந்தான்னு ஆவறத பாருங்கப்பு.
________________________________________________________________________________________________
அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கை வேண்டாம்னு சொல்ல முடியாதில்ல கிழவனுக்கு.
________________________________________________________________________________________________
பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்படையினரின் கடமைகள் முடிவடையவில்லை: கடற்படைத் தளபதி

ஆமாம். தமிழக மீனவர்ல ஆரம்பிச்சி தமிழ்நாட்டையும் ஒரு கை பார்க்குற வரைக்கும் முடியாதுடா உங்களுக்கு.
________________________________________________________________________________________________

ஐ.நா. பணியாளர்களை விடுவிக்கக் கோரி அதிகாரி லின் பாஸ்கோவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

இதுக்காவது ஐ.நா. படைய அனுப்புங்களேன் பரதேசிகளா. உயிரெல்லாம் உங்களுக்கு மயிருக்கு சமமா?
________________________________________________________________________________________________
ஜீ.எஸ்.பி. சலுகையை நீடிக்குமாறு கிறிஸ்தவ பேராயர் மூலம் ஜனாதிபதி கோரிக்கை

குதிரை கொள்ளுக்கு மட்டும் வாய பொளக்குமாம். கடிவாளம் கண்டா கடிச்சிக்குமாம். பேராயரை எப்படியெல்லாம் பயன் படுத்துறான் பரதேசி.
________________________________________________________________________________________________
இலங்கை அரசு மீது ஐ.நா. அதிகாரிகள் எந்தக் குற்றமும் சுமத்தவில்லை: பாலித கோஹன

அதாண்டா புரியல. என்னா வசியம் வெச்சிங்களோ?
________________________________________________________________________________________________
சனல்-4 வீடியோ விசாரணை திருப்தியில்லை, பக்கச்சார்பானது: ஜ.நா.சபை மீண்டும் விசனம்

இது விசனமில்லை. வசனம். கிளிப்பிள்ளை கூட ஒரு சேஞ்சுக்கு மாத்தி சொல்லும் எழுதி வெச்சி படிப்பிங்களாடா?
________________________________________________________________________________________________
படைகளின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தயார்

அப்ரூவரா மாறலாமுன்னா? செய்வடா எச்ச நீ. அவன விட்டா கக்கிடுவான்ல.
________________________________________________________________________________________________
ஈழப்பிரச்சனை: தமிழக எம்பிக்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்

ஏன்னா இவங்களுக்கு தெரியாது பாரு. இனிமேதான் பரிசீலிக்கப் போறாரு.
________________________________________________________________________________________________
தமிழர்களை கௌரவமாக நடத்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்: ஜெயலலிதா

வாங்களேன். உண்ணாவிரதம் இருக்கலாம். போராடலாம். இது நீங்க சொல்லலைன்னு தான் இருக்காங்களோ?
________________________________________________________________________________________________
இலங்கையில் தொழில் முதலீடு செய்யமாட்டோம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

ஆமாம் பின்ன. சன் டிவி தான் டிவியா?
________________________________________________________________________________________________
திமுகவில் இணையப்போகிறேன்: எஸ்.வி.சேகர்

அய்யோ சேகரு சேகரு. நீ இணையலாம். நீ சொத்தைன்னு தெரியும். சேர்ப்பாங்கன்னு நினைக்கிற?
________________________________________________________________________________________________
முல்லைப் பெரியார்.:மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும்:கலைஞர்

தோ. யாருப்பா அங்க. இன்லேன்ட் லெட்டர் கொண்டா. அப்புடியே சொக்குக்கு ஒரு ஃபோன் போடு. மன்னிப்பு கேட்டுகிட்டு ச்ச்ச்ச்சும்மா டமாசுன்னு சொல்லிட்டு எழுத ஆரம்பிக்கணும்.
________________________________________________________________________________________________
தொழிற்சாலை கழிவுநீரை குடித்த 160 ஆடுகள் பலி

அதுங்க என்ன மனுசங்களா? மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எத்தன குடுத்தான்னு கேக்க மாட்டானுங்களே.
________________________________________________________________________________________________
ஹபீப் சயீது மீதான வழக்குப்பதிவு கண்துடைப்பே: பாக். மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

ங்கொய்யாலே. கண்ண கட்டி சுட்டுட்டு பொய்ன்னானே. அதுக்கு வாய் தொறக்க முடியல. இதுமட்டும் என்ன? போர் நிறுத்தம் துடைச்ச வாய்க்கு பேச்ச பாரு.
 ________________________________________________________________________________________________

ரம்ஜானில் சகோதரத்துவம் பெருகட்டும்: தங்கபாலு

குடிச்ச கஞ்சிக்கு கூவிட்டான். அத்தன சகோதரர்களை அழிக்கத் துணை போன பாவி.
 ________________________________________________________________________________________________

தமிழகத்துடனான உறவு பலப்பட்டிருக்கிறது: எடியூரப்பா

வாயேன் ஒப்பந்தம் போட்டுக்கலாம் காவேரி தண்ணிக்கு தகராறே பண்ணமாட்டன்னு. ________________________________________________________________________________________________

39 comments:

கலகலப்ரியா said...

//தொழிற்சாலை கழிவுநீரை குடித்த 160 ஆடுகள் பலி

அதுங்க என்ன மனுசங்களா?//

மனுஷங்க கேப்பாய்ங்களோ..? ஹெஹே

//மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எத்தன குடுத்தான்னு கேக்க மாட்டானுங்களே.//

கேட்டா மட்டும்.. (ஆடு பேசுதுடான்னு.. துண்டை விரிச்சிடுவாய்ங்கப்பு..)

கலகலப்ரியா said...

//இலங்கை அரசு மீது ஐ.நா. அதிகாரிகள் எந்தக் குற்றமும் சுமத்தவில்லை: பாலித கோஹன//

தாராள மனசுப்பா ஐ-நா-வுக்கு .. அவங்களேதான் சுமப்பானுவ குற்றத்த..!

vasu balaji said...

கலகலப்ரியா

/மனுஷங்க கேப்பாய்ங்களோ..? ஹெஹே /

இல்ல. மனுஷனா சாவாம இருக்கறதுக்கு.

/கேட்டா மட்டும்.. (ஆடு பேசுதுடான்னு.. துண்டை விரிச்சிடுவாய்ங்கப்பு..)/
:)). அதானே.

vasu balaji said...

கலகலப்ரியா
/தாராள மனசுப்பா ஐ-நா-வுக்கு .. அவங்களேதான் சுமப்பானுவ குற்றத்த..!/

என்னா சுத்து மாத்தோ. இவன் பாட்டுக்கு ஏய்க்கிறான் ப்ளீஸ் ப்ளீஸ்டான்னு கெஞ்சுறானுவ.

ஈரோடு கதிர் said...

//சேர்ப்பாங்கன்னு நினைக்கிற?//

அட சேத்துக்குவாங்க... அவரோட பையன வச்சு சோகம் னு ஒரு படம் எடுத்து டிவில படம் போடனுமில்ல

//மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும்:கலைஞர்//

போஸ்ட் ஆபிஸ்ல ரெடியாயிருக்கச் சொல்லுங்க தந்தி அனுப்பனும்

உன்னைப்போல் ஒருவன் படம் பார்க்கச் சொல்லுங்க... மோகன்லால் ஃபேக்ஸை விட ஈமெயில் தான் வேகம், ஈஸி னு சொல்லியிருக்காரு

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/அட சேத்துக்குவாங்க... அவரோட பையன வச்சு சோகம் னு ஒரு படம் எடுத்து டிவில படம் போடனுமில்ல/

அது எடுத்து ஓடி ஆவுற கதையா. தொகுதி மேம்பாட்டு துட்டுக்கு அலையுது பன்னாட.
/போஸ்ட் ஆபிஸ்ல ரெடியாயிருக்கச் சொல்லுங்க தந்தி அனுப்பனும்

உன்னைப்போல் ஒருவன் படம் பார்க்கச் சொல்லுங்க... மோகன்லால் ஃபேக்ஸை விட ஈமெயில் தான் வேகம், ஈஸி னு சொல்லியிருக்காரு/

அட இன்லண்ட விட மெதுவா எதுவுமில்லையேன்னு சொல்றேன். வேகமா அனுப்பறதா. அது சாரி சொல்லிக்கதான் தேவை. அது செல்லுல செப்பிக்குவாரு.

க.பாலாசி said...

//பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்படையினரின் கடமைகள் முடிவடையவில்லை: கடற்படைத் தளபதி
ஆமாம். தமிழக மீனவர்ல ஆரம்பிச்சி தமிழ்நாட்டையும் ஒரு கை பார்க்குற வரைக்கும் முடியாதுடா உங்களுக்கு.//

அவர்களின் பயங்கரவாதம் என்ற சொல்லே தமிழக மீனவர்களையே குறிக்கும் என்று நினைக்கிறேன்.

//திமுகவில் இணையப்போகிறேன்: எஸ்.வி.சேகர்
அய்யோ சேகரு சேகரு. நீ இணையலாம். நீ சொத்தைன்னு தெரியும். சேர்ப்பாங்கன்னு நினைக்கிற?//

அட நீங்க வேற சார்....எல்லாருமே பிணந்தின்னி கழுகுகள்தான். சொத்தையாவது பொத்தையாவது...ஹி....ஹின்னு பல்ல இளிச்சிகிட்டு சேத்துப்பானுங்க...

//ரம்ஜானில் சகோதரத்துவம் பெருகட்டும்: தங்கபாலு
குடிச்ச கஞ்சிக்கு கூவிட்டான். அத்தன சகோதரர்களை அழிக்கத் துணை போன பாவி.//

இப்படிபட்ட அப்பட்டமான வார்த்தைகளை ஒரு பெயரை குறித்து சொல்லியிருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்...

நல்ல குமுறல்கள்...

vasu balaji said...

க.பாலாஜி
/அவர்களின் பயங்கரவாதம் என்ற சொல்லே தமிழக மீனவர்களையே குறிக்கும் என்று நினைக்கிறேன். /

அப்படித்தான் தோணுது

/அட நீங்க வேற சார்....எல்லாருமே பிணந்தின்னி கழுகுகள்தான். சொத்தையாவது பொத்தையாவது...ஹி....ஹின்னு பல்ல இளிச்சிகிட்டு சேத்துப்பானுங்க.../

இந்தாளு வீட்டுலயே மொத்த ஓட்டும் விழுமா தெரியாது. அவ்வளவு கேனைங்களா?

/இப்படிபட்ட அப்பட்டமான வார்த்தைகளை ஒரு பெயரை குறித்து சொல்லியிருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.../

அட போங்க சார். எரிச்சலா வருது.

பழமைபேசி said...

உ ஐ

vasu balaji said...

க.பாலாஜி
//இப்படிபட்ட அப்பட்டமான வார்த்தைகளை ஒரு பெயரை குறித்து சொல்லியிருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.../

நீங்கள் சொல்லுவது நியாயம்தான். என் எரிச்சலுக்கு காரணம், தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்தக் காங்கிரஸ்காரராவது ராஜீவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு மக்களைப் பழிவாங்குதல் நியாயம் என்று பேசுகிறார்களா? ஒரு கீறல் விழாமல் கிடந்து இப்பொழுது நாந்தான் எல்லாம்னு குதிச்சா வேற என்ன பண்ண. உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ளுகிறேன்.

vasu balaji said...

பழமைபேசி
/உ ஐ/

:)) உள்ளேன் ஐயாவா. உதைவிழும் ஐயாவா.

Unknown said...

வழமை போலவே... :))

vasu balaji said...

Kiruthikan Kumarasamy
/வழமை போலவே... :))/

:)). நன்றி

ராஜ நடராஜன் said...

//ஹபீப் சயீது மீதான வழக்குப்பதிவு கண்துடைப்பே: பாக். மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு//

பாலாண்ணே!முன்னாடி பிரணப்பு கூட சேர்ந்து கூவிகிட்டு இருந்தாரு.நைசா நழுவிட்டு ப.சிய ஜோரா குரல் கொடுன்னு சொல்லிட்டு கல்லாக் கணக்கை பார்க்கப் போயிட்டாரு.அமெரிக்கா கொய்தாவுக்கு செலவு பண்ண கொடுத்த காசையே இந்தியாவுக்கு ஆப்பு வைக்கிறதுக்கு செலவு செய்தோம்ன்னு சொல்ற தெகிரியசாலிகிட்ட போய் குற்றச்சாட்டு,அறிக்கைன்னு போன வருசம் நவம்பர் மாதம் 11ம் தேதி துவங்குன கூப்பாடு இன்னும் தீர்ந்த பாடாக் காணோம்.

உள்துறை மந்திரி பேரு சொல்றதுக்கு ஒரே ஆள் சர்தார் வல்லபாய் பட்டேல்.

vasu balaji said...

ராஜ நடராஜன்
/பாலாண்ணே!முன்னாடி பிரணப்பு கூட சேர்ந்து கூவிகிட்டு இருந்தாரு.நைசா நழுவிட்டு ப.சிய ஜோரா குரல் கொடுன்னு சொல்லிட்டு கல்லாக் கணக்கை பார்க்கப் போயிட்டாரு.அமெரிக்கா கொய்தாவுக்கு செலவு பண்ண கொடுத்த காசையே இந்தியாவுக்கு ஆப்பு வைக்கிறதுக்கு செலவு செய்தோம்ன்னு சொல்ற தெகிரியசாலிகிட்ட போய் குற்றச்சாட்டு,அறிக்கைன்னு போன வருசம் நவம்பர் மாதம் 11ம் தேதி துவங்குன கூப்பாடு இன்னும் தீர்ந்த பாடாக் காணோம்.

உள்துறை மந்திரி பேரு சொல்றதுக்கு ஒரே ஆள் சர்தார் வல்லபாய் பட்டேல்./

நூத்துக்கு நூறு சரி. அந்த மாதிரி ஒரு மனுஷன் இருந்திருந்தா இந்தியா எங்கயோ இருந்திருக்கும். நன்றி சார்.

ப்ரியமுடன் வசந்த் said...

//திமுகவில் இணையப்போகிறேன்: எஸ்.வி.சேகர்

அய்யோ சேகரு சேகரு. நீ இணையலாம். நீ சொத்தைன்னு தெரியும். சேர்ப்பாங்கன்னு நினைக்கிற?//

ஹ ஹ ஹா...

//தமிழகத்துடனான உறவு பலப்பட்டிருக்கிறது: எடியூரப்பா

வாயேன் ஒப்பந்தம் போட்டுக்கலாம் காவேரி தண்ணிக்கு தகராறே பண்ணமாட்டன்னு. _//

இது சூப்பரப்பு....

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/இது சூப்பரப்பு..../

ஹி ஹி. நன்றி வசந்த்

Unknown said...

// ஈழப்பிரச்சனை: தமிழக எம்பிக்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் //

ஏற்கனவே கும்பலா பல தடவ குடுத்த கோரிக்கை மனுலாம் என்னாச்சு!!.. அடடா.. குடுத்தது கோரிக்கை மனு தான !.. வேற என்ன ஆயிருக்கும்..

Unknown said...

// ஈழப்பிரச்சனை: தமிழக எம்பிக்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் //

பிரதமர்: இன்னுமா இந்த ஊரு என்ன நம்புது..

தமிழக எம்.பீக்கள்: அது அவங்க தல விதி..

கிரி said...

//அதாண்டா புரியல. என்னா வசியம் வெச்சிங்களோ?//

:-))

//வாங்களேன். உண்ணாவிரதம் இருக்கலாம். போராடலாம். இது நீங்க சொல்லலைன்னு தான் இருக்காங்களோ?//

அம்மாவிற்கு என்ன திடீர் பாசம் :-)

vasu balaji said...

rajesh
/ஏற்கனவே கும்பலா பல தடவ குடுத்த கோரிக்கை மனுலாம் என்னாச்சு!!.. அடடா.. குடுத்தது கோரிக்கை மனு தான !.. வேற என்ன ஆயிருக்கும்../

அதேதான்.
/பிரதமர்: இன்னுமா இந்த ஊரு என்ன நம்புது..

தமிழக எம்.பீக்கள்: அது அவங்க தல விதி../

இதாஞ்செரி. நன்றி ராஜேஷ்

vasu balaji said...

கிரி

/அம்மாவிற்கு என்ன திடீர் பாசம் :-)/

காத்து கொஞ்சம் மாத்தி அடிக்குதில்லையா. இப்போ இந்த பிட்ட முதல்ல போட்டா நாந்தான் போட்டேன்னு அலட்டிக்கத்தான்.

புலவன் புலிகேசி said...

//பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்படையினரின் கடமைகள் முடிவடையவில்லை: கடற்படைத் தளபதி

ஆமாம். தமிழக மீனவர்ல ஆரம்பிச்சி தமிழ்நாட்டையும் ஒரு கை பார்க்குற வரைக்கும் முடியாதுடா உங்களுக்கு.//

நல்ல சவுக்கடியான கருத்து...

புலவன் புலிகேசி said...
This comment has been removed by the author.
புலவன் புலிகேசி said...
This comment has been removed by the author.
யூர்கன் க்ருகியர் said...

//இலங்கையின் யுத்தம் தொடர்பான அறிக்கை அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது//

இந்திய காங்கிரஸ் இன் பாவத்தை அமெரிக்க காங்கிரஸ் கொஞ்சமாவது கழுவுமான்னு பாக்கலாம் !!

யூர்கன் க்ருகியர் said...

//பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்படையினரின் கடமைகள் முடிவடையவில்லை: கடற்படைத் தளபதி//

அப்பாவி தமிழர்களை கொல்றது உங்க கடமையாடா?
தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் அல்லக்"கை"கள் "இறையாண்மை பத்தி பேசறத நிறுத்தறவரை உங்க "கடமைகள்" தொடரும்னு தெரியும்டா...

யூர்கன் க்ருகியர் said...

//ஐ.நா. பணியாளர்களை விடுவிக்கக் கோரி அதிகாரி லின் பாஸ்கோவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது//

ஐ.நா சபை இவ்வளவு பெரிய டம்மி பீசா ?
மாணவ கண்மணிகளே ...ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பில் வரலாறு பாட பரிட்சையில் "ஐ.நா சபை பற்றி குறிப்பு வரைக :- " அப்படின்னு கேள்வி வந்தா லூசுல வுடுங்க..... ந்ங்கோன்னியா நம்மூரு போலீஸ் ஸ்டேஷன் ஐ விட பவர் கம்மி ஐ.நா சபை க்கு!

யூர்கன் க்ருகியர் said...

//ஈழப்பிரச்சனை: தமிழக எம்பிக்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்//

மண்ணு மொக்க சிங்கு ..... ஆக இன்னும் பரிசீலனையே ஆரம்பிக்கல!
மக்களே ... இன்னுமா நம்புறீங்க .. ?:(

யூர்கன் க்ருகியர் said...

//முல்லைப் பெரியார்.:மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும்:கலைஞர்///

"கெக்கே கிக்கே கெக்கே குக்கீ சிக்கே ஹோக்க்கே ஹ்ஹோஒ !!!"

யார்ரா அவன் சிரிக்கிறது ... தலைவர் சீரியஸ் ஆ பேசிட்டு இருக்காருல்ல?

யூர்கன் க்ருகியர் said...

//ரம்ஜானில் சகோதரத்துவம் பெருகட்டும்: தங்கபாலு ///

ஹ்ம்ம்... என்னனதயோ நறுக்குறோம்.... இந்த டங்குவாலை யாரும் நறுக்க மாட்டேங்குறாங்களே ? ஹ்ம்ம்..!

யூர்கன் க்ருகியர் said...

//தமிழகத்துடனான உறவு பலப்பட்டிருக்கிறது: எடியூரப்பா//

இனிமே அடிக்கிற கொள்ளையில் எனக்கு.பாதி ...உனக்கு மீதி .. !!

Suresh Kumar said...

முல்லைப் பெரியார்.:மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும்:கலைஞர்

தோ. யாருப்பா அங்க. இன்லேன்ட் லெட்டர் கொண்டா. அப்புடியே சொக்குக்கு ஒரு ஃபோன் போடு. மன்னிப்பு கேட்டுகிட்டு ச்ச்ச்ச்சும்மா டமாசுன்னு சொல்லிட்டு எழுத ஆரம்பிக்கணும்.//////////////


ஆய்வுக்கு அனுமதி கொடுத்து விட்டதாக செய்தி வந்து ஐந்து நாட்களுக்கு பின்னர் எதிர்ப்பை தெரிவிப்போம் என்கிறார் . இவரு பதவிக்காக எதையும் விற்க தயங்க மாட்டார் என நினைக்கிறேன்

vasu balaji said...

புலவன் புலிகேசி
/நல்ல சவுக்கடியான கருத்து.../
நன்றிங்க.

vasu balaji said...

யூர்கன் க்ருகியர்

/இந்திய காங்கிரஸ் இன் பாவத்தை அமெரிக்க காங்கிரஸ் கொஞ்சமாவது கழுவுமான்னு பாக்கலாம் !!/

அதாவது நடக்கட்டும்.

/அப்பாவி தமிழர்களை கொல்றது உங்க கடமையாடா?
தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் அல்லக்"கை"கள் "இறையாண்மை பத்தி பேசறத நிறுத்தறவரை உங்க "கடமைகள்" தொடரும்னு தெரியும்டா.../

நமக்கு மட்டும் இறையாண்மை இல்லைன்னு சொல்லிட்டமா தெரியலை.

/ஐ.நா சபை இவ்வளவு பெரிய டம்மி பீசா ?
மாணவ கண்மணிகளே ...ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பில் வரலாறு பாட பரிட்சையில் "ஐ.நா சபை பற்றி குறிப்பு வரைக :- " அப்படின்னு கேள்வி வந்தா லூசுல வுடுங்க..... ந்ங்கோன்னியா நம்மூரு போலீஸ் ஸ்டேஷன் ஐ விட பவர் கம்மி ஐ.நா சபை க்கு!/

:)). அப்புடித் தாக்கு.

/மண்ணு மொக்க சிங்கு ..... ஆக இன்னும் பரிசீலனையே ஆரம்பிக்கல!
மக்களே ... இன்னுமா நம்புறீங்க .. ?:(/

பாவம் மனுசனுக்கு சமாளிக்கக் கூடத் தெரியல. சிதம்பரம்னா, சொல்லிட்டாங்க இனிமே நாளைக்கு வரைக்கும் அடிக்க மாட்டாங்கன்னாவது சொல்லி இருப்பாரு.

/யார்ரா அவன் சிரிக்கிறது ... தலைவர் சீரியஸ் ஆ பேசிட்டு இருக்காருல்ல?/

சைலேன்ஸ்:))

/ஹ்ம்ம்... என்னனதயோ நறுக்குறோம்.... இந்த டங்குவாலை யாரும் நறுக்க மாட்டேங்குறாங்களே ? ஹ்ம்ம்..!/
:))

vasu balaji said...

Suresh Kumar

/ஆய்வுக்கு அனுமதி கொடுத்து விட்டதாக செய்தி வந்து ஐந்து நாட்களுக்கு பின்னர் எதிர்ப்பை தெரிவிப்போம் என்கிறார் . இவரு பதவிக்காக எதையும் விற்க தயங்க மாட்டார் என நினைக்கிறேன்/

தெரிஞ்ச கதை தானே.

யூர்கன் க்ருகியர் said...

//நமக்கு மட்டும் இறையாண்மை இல்லைன்னு சொல்லிட்டமா தெரியலை.//

மறுப்பதற்கில்லை

Unknown said...

// தமிழகத்துடனான உறவு பலப்பட்டிருக்கிறது: எடியூரப்பா

வாயேன் ஒப்பந்தம் போட்டுக்கலாம் காவேரி தண்ணிக்கு தகராறே பண்ணமாட்டன்னு. //


செம பன்ச் .......

vasu balaji said...

லவ்டேல் மேடி
/செம பன்ச் ......./

வாங்க மேடி. :) நன்றி