Saturday, September 26, 2009

அம்மா..

குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி கண் மூடி நின்றாள் உமா. சொல்லொணா துக்கம் தொண்டைய அடைக்க மனதுக்குள் வேண்டினாள். "உனக்குத் தெரியும்தானே? எத்தனைத் தவித்திருப்பேன் இந்தக் குழந்தைக்கு. எத்தனை அழுதிருப்பேன்? என்னை சோதிக்கிறாயா? இவனைப் பிரித்து விடுவாயா என்னிடமிருந்து? ப்ளீஸ். எனக்கு என் குழந்தை வேண்டும். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. எனக்கு இப்படி ஒரு சாபம் வேண்டாம்" என்று விம்மி வெடிக்கும் போதே மம்மி என்று வந்து காலைக் கட்டிக் கொண்டான் பிரசாத்.

மார்போடு சேர்த்து அணைத்து பைத்தியம் பிடித்தவள் போல் முத்தமிட்டவாறு அழுத அம்மாவை புரியாமல் கட்டிக் கொண்டது குழந்தை. உமா, எட்டரைக்கெல்லாம் அங்கிருக்கணும், ரெடியா என்று பெட்ரூமிலிருந்து குரல் கொடுத்த கணவனுக்கு பதில் சொல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள் உமா.

உமா. தஞ்சாவூரின் மிகப் பெரிய விவசாயக் குடும்பத்தில் ஒற்றைப் பெண் வாரிசு. பெரிய வீட்டில் பாட்டி, தாத்தா, சித்தப்பாக்கள், அத்தை என்று பெரிய குடும்பம். தாத்தா நிஜமாகவே மனுஷன். தன் வீட்டில் வேலை செய்பவனும் ஒரு சொந்தம் போல் நடத்துபவர். அத்தனைப் பேர் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவள். படிப்பிலும் சுட்டி. வேளாண்துறையில் எஞ்சினீரிங் முடித்தவள்.

ரங்கநாத். இந்தியாவின் பெரிய பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. அவர்களின் முதலீடில்லாத துறை என்று ஏதாவது இருக்கிறதா என்பதே பெரிய பட்டிமன்றத்துக்கு தலைப்பாகும். சவால்களை எதிர் கொள்வதில் எதிரிகளையும் அசத்துபவன் ரங்கநாத். உமாவின், பட்டமளிப்பு விழாவில் தலைமையேற்ற போது முதல் பார்வையிலேயே இவள் என் மனைவி என்று முடிவெடுத்து விட்டான். தாத்தா மட்டும் கொஞ்சம் தயங்கினாலும், நல்ல குடும்பம், மிக ஒழுக்கமான பையன் என்பதே தூக்கலாக, அவரும் சம்மதித்து விட திருமணம் நடந்தது.

தனிமையின் தாக்கம் மிகக் கொடுமையாயிருந்தது உமாவுக்கு. குழந்தைக்காக ஏங்கித் தவித்தவளுக்கு வருடங்கள் ஓடியதே தவிர, தாய் என்ற வரம் தள்ளிப் போனது. பிஸினஸ் என்று பறந்த கணவனை கடிவாளமிட்டு மருத்துவரிடம் அழைத்துப் போக மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சின்ன பிரச்சினைதான். மருந்து சாப்பிட்டால் போதும் என்ற மருத்துவரின் வார்த்தை ஆறுதலில் மேலும் இரண்டு வருடங்கள் போக பூஜை, விரதமென்று தவமிருந்தாள் உமா.

அதன் பிறகு பிறந்தான் பிரசாத். வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் பூரிப்பும் கொண்டாள் உமா.  திடீரென்று அவனைப் பிரிய நேருமென நினைக்கவே இல்லை. குழந்தை மிகவும் சோர்ந்திருந்தான். இன்றைக்கு டெஸ்ட். முடிவு நெகடிவ் ஆக இருக்க வேண்டுமே என்ற பதைப்பே மேலோங்கியது. தயாராகி, கிளம்புகையில், உமா ஏன் இப்படி இருக்கிறாய்?  குழந்தைக்கு தைரியம் சொல், பயந்து போயிருக்கிறான் என்ற கணவனைப் பார்த்த பார்வையில் இயலாமை வெடித்தது.

அவசரம் அவசரமாக போய்ச் சேர,  ஒரு தாதி வந்து குழந்தையை அழைத்துப் போனாள். பலிக்கு போகும் ஆடுபோல் உதடு பிதுங்க போன பிரசாத்தைக் காண அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது உமாவுக்கு. ஒரு சிஸ்டர் நீங்கள் ஒரு மணி நேரம் கழித்து வரலாம். விசிடர்ஸ் ரூமில் போய் இருங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். வா, காரில் இருக்கலாம் என்று பார்கிங் செய்த மரத்தடிக்குப் போனபோது இவர்களைப் போலவே கொஞ்சம் பெற்றோர்கள் நின்றிருந்தனர்.

பிரபலம் என்பதால், ரங்கநாத்தின் அறிமுகம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்க,  காரில் உட்கார்ந்து கண் மூடி பிரார்த்தித்தாள் உமா. கடவுளே ரிஸல்ட் நெகடிவாக வரவேண்டும், என்னைக் கைவிடாதே என்று. ஒரு மணி நேரம் ஒரு யுகமாய்க் கழிய,  தளர்ந்து போய் வெளியே வந்த பிரசாத்தை ஓடிச் சென்று அள்ளியெடுத்து கட்டிக் கொண்டாள். அழுதிருப்பான் போலும். அதிக நேரம் காக்க விடாமல், இவர்களை அழைத்தார்கள்.

நான் காரிலிருக்கிறேன் குழந்தையோடு. நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்றபடி தவிப்போடு காரில் இருந்தாள்.  சற்று நேரத்தில் வேக வேகமாக ரங்கநாத் வருவதைக் கண்டு பதறிப் போனாள். விருட்டென காரில் ஏறியவன், பிரசாத் ஏமாற்றிவிட்டான். அட்மிஷன் கிடைக்கவில்லை என்றான். 

இந்தியாவிலேயே பெரிய இன்டர்நேஷனல் ரெஸிடென்ஷியல் ஸ்கூல். தன் ஸ்டேடசிற்கு இங்குதான் சேர்க்க வேண்டும் என்ற கணவனின் பிடிவாதம் நொறுங்கிப் போனதில், குழந்தையைப் பிரிய வேண்டாம் என்ற மகிழ்ச்சியில் கடவுளே கடவுளே, தேங்க்ஸ் என்று மனதில் திரும்பத் திரும்பச் சொல்லியபடி குழந்தையை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள் உமா.  விடு உமா அழாதே என்ற ரங்கநாத்தை மனதுக்குள் "போடாங்கொய்யாலே"  என்று ரகசியமாய்த் திட்டிச் சிரித்தாள்.

பொறுப்பி(லி):கண்ட தமிழ் சினிமா பார்த்துட்டு குழந்தைக்கு அம்மாவ அழவச்சோபீலியா நோய்னு நினைச்சா நானா பொறுப்பு. த்தோ. நான் சுத்த சைவம். அழுகின முட்டைல அடிக்காதிங்க. தக்காளி ஓ.கே.

22 comments:

ஈரோடு கதிர் said...

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஊஊஊஊஊஊ

யோசிச்சேன் முதல் பத்தி படிக்கும்போதே இப்படித்தான் ஏதாவது இருக்கும்னு...

காலையில் வசந்த் பிளாக்கில் அறுக்கும் குழந்தையைப் பார்த்ததிலிருந்தே ஒரு பயம் குழந்தைகளின்மேல்

//"போடாங்கொய்யாலே" என்று ரகசியமாய்த் திட்டிச் சிரித்தாள்.//
இது ரிலாக்ஸ்

க.பாலாசி said...

அடப்பாவி மக்கா? அட்மிஸனுக்குதான் இவ்ளோ கதையா?

அதுக்காக டீச்சர், ஆயாவையெல்லாம் சிஸ்டர்னு சொல்லி சூடு ஏத்துரது கொஞ்சம் அதிகமா தெரியல...

குழந்தையின்மையும், தவிப்பும்....முதல் முதலாக அந்த குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் போது தாய்க்கு ஏற்படுகிற பிரிவின் பரிவு எல்லாமே நல்லாருக்கு...ரசனையான கதை....

//கண்ட தமிழ் சினிமா பார்த்துட்டு குழந்தைக்கு அம்மாவ அழவச்சோபீலியா நோய்னு நினைச்சா நானா பொறுப்பு. த்தோ. நான் சுத்த சைவம். அழுகின முட்டைல அடிக்காதிங்க. தக்காளி ஓ.கே.//

நீங்களே தக்காளி ஓ.கே.ன்னு சொன்னதால...............

க.பாலாசி said...

இப்ப என்னோட ஓட்டு மிஷின்னு கொஞ்சம் கோளாரு...அதனால அப்பால போட்டுக்கிறேன்...

இராகவன் நைஜிரியா said...

ச்சே... என்னவோ எதோ என்று நினைச்சுட்டேன்.

அருமையா சொல்லியிருக்கிங்க அண்ணா...

ஒரு தாயி பாசத்தை என்ன அருமையா சொல்லியிருக்கீங்க.

அம்மாவாகவே இந்த கதையில் வாழ்ந்து இருக்கீங்க..

ஹாட்ஸ் ஆஃப்...

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சுங்க..

பழமைபேசி said...

இப்போத்சிக்கு பின்னூட்ட்ம் ம்ச்ட்டும் ப்ச்டிச்சிருக்கேன்.... வெளியூர் போற முசுவு...அதானுங்...

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/யோசிச்சேன் முதல் பத்தி படிக்கும்போதே இப்படித்தான் ஏதாவது இருக்கும்னு...

காலையில் வசந்த் பிளாக்கில் அறுக்கும் குழந்தையைப் பார்த்ததிலிருந்தே ஒரு பயம் குழந்தைகளின்மேல்/

கதை படிக்கிறப்போ யாரு யோசிக்கச் சொன்னா? நீங்க சொன்னப்புறம் தான் வசந்த் ப்ளாக்ல அந்த படம் பார்த்தேன். யப்பே..
/இது ரிலாக்ஸ்/
ஹெ ஹெ.நன்றி. கதிர்.

vasu balaji said...

க.பாலாஜி
/அதுக்காக டீச்சர், ஆயாவையெல்லாம் சிஸ்டர்னு சொல்லி சூடு ஏத்துரது கொஞ்சம் அதிகமா தெரியல.../

என்னாது? டீச்சர் ஆயாவையெல்லாம் சிஸ்டர்னா சூடு ஏறுதாம்ல.அதெல்லாம் ஆயாவ தாதின்னு தான் சொல்லி இருக்கு. இல்லாம இப்போல்லாம் டீச்சர சிஸ்டருன்னுதான் சொல்றாய்ங்க.

/குழந்தையின்மையும், தவிப்பும்....முதல் முதலாக அந்த குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் போது தாய்க்கு ஏற்படுகிற பிரிவின் பரிவு எல்லாமே நல்லாருக்கு...ரசனையான கதை..../

நிஜம்மாவா. நன்றி.

/நீங்களே தக்காளி ஓ.கே.ன்னு சொன்னதால.............../

மார்கெட் பக்கம் போறதில்லை போல. ஹி ஹி

vasu balaji said...

க.பாலாஜி
/இப்ப என்னோட ஓட்டு மிஷின்னு கொஞ்சம் கோளாரு...அதனால அப்பால போட்டுக்கிறேன்.../
பார்த்துண்ணே. நேத்து தான் நவீன் சாவ்லா ஓட்டு மிசின்ல பிரச்சனையே வராதுன்னாரு. எல்லா எதிர்கட்சியும் சாட்சியா போட்ருவாய்ங்க.:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/ச்சே... என்னவோ எதோ என்று நினைச்சுட்டேன்.

அருமையா சொல்லியிருக்கிங்க அண்ணா...

ஒரு தாயி பாசத்தை என்ன அருமையா சொல்லியிருக்கீங்க.

அம்மாவாகவே இந்த கதையில் வாழ்ந்து இருக்கீங்க..

ஹாட்ஸ் ஆஃப்.../

நன்றி இராகவன் சார்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சுங்க../

:))

vasu balaji said...

பழமைபேசி

/இப்போத்சிக்கு பின்னூட்ட்ம் ம்ச்ட்டும் ப்ச்டிச்சிருக்கேன்.... வெளியூர் போற முசுவு...அதானுங்.../

மறக்காம படிச்சிட்டு சொல்லுங்க சித்த.

thiyaa said...

அருமையாக இருக்கு வாழ்த்துகள்

vasu balaji said...

தியாவின் பேனா

/அருமையாக இருக்கு வாழ்த்துகள்/

நன்றி தியா.

ப்ரியமுடன் வசந்த் said...

அம்மாவோட பாசம்... அழுகையா வருது....ஹேய் பிப்ரவரி சீக்கிரம் வா நான் ஊருக்கு போகணும்....

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் Says:
/அம்மாவோட பாசம்... அழுகையா வருது....ஹேய் பிப்ரவரி சீக்கிரம் வா நான் ஊருக்கு போகணும்..../

:>. அது சரி.

Unknown said...

கதை .. மிகவும் அருமை தல.........!!

vasu balaji said...

லவ்டேல் மேடி
/கதை .. மிகவும் அருமை தல.........!!

நன்றி மேடி.

ஆரூரன் விசுவநாதன் said...

//போடாங்கொய்யாலே///


சூப்பர்.....

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்

//போடாங்கொய்யாலே///
சூப்பர்....

ஹி ஹி. நன்றி ஆரூரன்.

துபாய் ராஜா said...

நல்லா டென்சன் ஏத்தி கடைசியில நல்லா கூல் பண்ணிட்டிங்க.... :))

vasu balaji said...

துபாய் ராஜா
/நல்லா டென்சன் ஏத்தி கடைசியில நல்லா கூல் பண்ணிட்டிங்க.... :))/

நன்றிங்க ராஜா.